விழி கொல்லும் விஷமா நீ EPI 07
விழி கொல்லும் விஷமா நீ..
EPISODE 07

Advertisement
சித்தார்த்தின் கரங்கள் ஆதிராவின் இடையில் பதிந்திருக்க, இருவரின் விழிகளும் இமை வெட்டாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருந்தனர்.
Advertisement
அவளுடைய முகம் செந்தாமரையாய் சிவந்திருக்க, இருவருக்கிடையிலும் ஏனென்று தெரியாத ஒரு அமைதி நிலவியது.
Advertisement
அந்த மோன நிலை ஒருசில கணங்கள் மட்டுமே.
Advertisement
“ஆதிரா…” என்ற வருணின் குரலில் சித்தார்த் தன் கரத்தை பட்டென்று இழுத்துக்கொள்ள, விழிகள் பதற்றத்தில் தடுமாறின அவளுக்கு.
அவளை விழிகளை கூர்மையாக்கிப் பார்த்த வண்ணம் அவளருகில் வந்த வருண், “எவ்ரிதிங் இஸ் ஓகே?” என்று கேட்க, “ம்ம்… சார் நல்லாவே சொல்லி கொடுக்குறாரு” என்றவள் சித்தார்த்தை ஒரு பார்வைப் பார்த்தாள்.
அவனோ அலட்சியமாக தோளைக் குலுக்கியவன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து அலைப்பேசியை நோண்ட ஆரம்பிக்க, தன் பையை எடுத்துக்கொண்டு நகரப் போனவளின் எதிரே வந்து நின்றான் வருண்.
“ஆதிரா, ஐ ஹேவ் டு டெல் யூ வன்திங். அது… அது என்னன்னா… இஃப் யூ டோன்ட் மைன்ட் லெட்ஸ் கேட்ச் அப் டூநைட்?” என்று அவன் சிறு தயக்கத்தோடு கேட்க, ஆதிராவோ அதிர்ந்து விழித்தாள்.
“அது வந்து நான்… எது.. எதுக்கு வருண்?” அவளுடைய வார்த்தைகள் தடுமாற, “இல்ல, உன் கூட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணலாம்னு நினைச்சேன். நீ ஒன்னும் தப்பா நினைச்சுக்காத! புதுசா கம்பனிக்கு வந்திருக்க, சில விஷயங்கள் பத்தி ஃப்ரீயா பேசலாம்னு…” என்றான் வருண் சமாளிப்பது போல.
இவர்கள் பேசிக்கொள்வது சித்தார்த்தின் காதில் தெளிவாகவே விழுந்தது. அவனுடைய புருவங்கள் கேள்வியாக முடிச்சிட்டிருந்தன. ஆனால் நிமிர்ந்தும் பார்க்கவில்லை அவன்.
“சாரி வருண், டோன்ட் மிஸ்டேக் மீ! நாம கம்பனிலயே பேசிக்கலாம்” எப்படியோ தைரியத்தை வரவழைத்து சொன்னவள், அங்கிருந்து சென்றிருக்க வருணின் முகமோ அதிருப்தியில் சுருங்கியது.
அதை சித்தார்த்தும் கவனிக்காமலில்லை.
அன்று சூரியன் அஸ்தமிக்கும் நேரம் ஹோட்டலிலிருந்து வெளியேறிய நிஹாரிகா பஸ் ஸ்டாப்பில் பேரூந்துக்காக காத்திருக்க, சரியாக அவளெதிரே வந்து நின்றது அந்த கருப்பு நிற கார்.
அதைப் பார்த்ததுமே அவளுக்கு அது யாருடையது என்று புரிந்து போக, ‘ஆரவ்…’ என்று அவன் பெயரை முணுமுணுத்தவளோ பயத்தில் நடுங்கத் தொடங்கினாள்.
அவனோ காரிலிருந்து இறங்கியவன் அவளருகே வந்து நின்று, “ரொம்ப நாளைக்கப்பறம் உன்ன பக்கத்துல பார்க்கும் போது ஹேப்பியா ஃபீல் ஆகுது. கார்ல வந்து ஏறு, வீட்டுல ட்ரோப் பண்றேன்” என்றான் சாதாரணமாக.
அவனுடைய வார்த்தைகளில் உரிமை அளவுக்கதிகமாகவே இருந்தது. ஆனால் அதை நிஹாரிகாவினால் சற்றும் ஜீரணிக்க முடியவில்லை.
“ஆரவ், ப்ளீஸ்! இங்கயிருந்து போயிரு..” அவள் சுற்றிமுற்றி பார்த்துக்கொண்டே சொல்ல, “நீஹா, நீ எனக்கு அப்படியொரு துரோகத்த பண்ணியும் நான் உனக்காகதான் இத்தனை வருஷம் இருக்கேன். வை டோன்ட் யூ அன்டர்ஸ்டேன்ட் தட்?” என்றவனின் குரலில் ஏக்கம் மிதந்தது.
ஆனால், பெண்ணவளுக்கு அவனிடத்தில் வெறும் பயம் மட்டுமே மிஞ்சியிருக்க, தன் உடல் நடுக்கத்தை மறைக்க படாதபாடு பட்டாள் அவள்.
“நா.. நான் கெஞ்சி கேக்குறேன் ஆரவ், என்னை விட்டுரு! இதுக்கும் மேல நான் என்ன அனுபவிக்கணும்னு நினைக்குற?” அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே அவள் செல்ல வேண்டிய பேரூந்து வந்து நிற்க, வேகமாக அதிலேறிக்கொண்டாள் நிஹாரிகா.
“விட முடியாது நீஹா!” அவனுடைய இதழ்கள் போகும் அவளைப் பார்த்து அழுத்தமாக சொல்லிக்கொள்ள, தூரத்தே காரிலிருந்து நடப்பதை பார்த்துக்கொண்டிருந்த யாதவ்வின் விழிகள் தீப்பிழம்பைக் கக்கின.
அவனுடைய கை முஷ்டி இறுகிப் போய் நெற்றி நரம்புகள் புடைத்திருக்க, அதே கோபத்தோடு மின்னல் வேகத்தில் காரை செலுத்தினான் அவன்.
இரண்டு நாட்களில் அவனுடைய அணிக்கான முதல் ஐபீஎல் மேட்ச் மும்பையில் நடக்கவிருக்க, அன்றிரவே தன் அணி வீரர்களோடு மும்பைக்கு சென்றுவிட்டான் யாதவ்.
அத்தனையையும் மறந்து முழு மூச்சாக பயிற்சியில் இருந்தவனுக்கு தன்னை மீறி ஆரவ்வோடு நிஹாரிகாவை பார்த்த காட்சி மீண்டும் மீண்டும் மனக்கண் முன் வந்துக்கொண்டே சென்றது.
வியர்வை சொட்ட வேக மூச்சுகள் வாங்க தீவிர பயிற்சியில் இருந்தவனின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியே!
அடுத்தநாள் இரு அணிகளுக்கிடையிலான விளையாட்டு ஆரம்பமாக, எதிரியணியினரே டோஸில் வெற்றி பெற்று பேட்டிங்கை எடுத்துக்கொண்டனர்.
விளையாட்டும் தீவிரமாக செல்ல, எதிரியணி நூற்று அறுபது புள்ளிகளோடு முடிய, சிறு இடைவேளைக்கு பின் மீண்டும் யாதவ் அணியினரின் துடுப்பாட்டத்தோடு ஆரம்பித்தது விளையாட்டு.
சில மணிநேரங்கள் கடந்த கிரிக்கெட் மேட்ச்சில் இறுதி நூற்று இருபது புள்ளிகள் மாத்திரமே இருக்க, அணியின் கடைசி நம்பிக்கையோடு மைதானத்திற்குள் இறங்கினான் யாதவ்.
“வாவ் யாதவ் அர்ஜூனா க்ரௌன்டுக்கு இறங்கிட்டாரு, இவர நம்பிதான் இப்போ டீமே இருக்கு. பார்க்கலாம்”
என்ற கமென்ட்டரி மைதானத்தில் ஒலிக்க, அதை கேட்டுக்கொண்டே தன் கையுறையை அணிந்த வண்ணம் தனக்கான மையத்திற்கு சென்றான் அவன்.
துடுப்பை தனக்கேற்றார் போல வைத்து விட்டு ஒரு பெருமூச்சை அவன் இழுத்துவிடவும் பந்தை வீசவும் சரியாக இருக்க, முதல் பந்திலேயே நான்கு புள்ளிகளை கைப்பற்றிக்கொண்டான் யாதவ்.
அடுத்தடுத்து நான்கைந்து ஆறுகள் சிறு புள்ளிகள் என அவனும் அவனின் அணியை சேர்ந்த மற்ற கிரிக்கெட் வீரரும் அந்த விளையாட்டையே கலக்க, இறுதி ஒரே பந்து ஆனால் ஐந்து புள்ளிகள் அடிக்க வேண்டிய நிலை.
பந்தும் வீசப்பட, யாதவ்வும் பந்தை முழு விசையோடு அடித்தான். ஆனால் அவனின் துரதிஷ்டம் எதிரியணியின் கரங்களுக்குள் பந்து சென்று விழ, அந்தோ பரிதாபம்!
அவனின் அணிக்கு சார்பான மொத்த விசிறிகளும் அவனின் அணியை சேர்ந்த மற்ற கிரிக்கெட் வீரர்களும் சோர்ந்துப் போய் அமர்ந்துவிட்டனர்.
ஏமாற்றத்தை தாங்க முடியவில்லை எவருக்கும்.
யாதவ்வுக்கும் அதே நிலைதான். ஒற்றைக் காலை மடக்கி தலை குனிந்தபடி அவன் அப்படியே தரையில் அமர்ந்துவிட, திடீரென மைதானமே பரபரப்பானது.
ரெஃப்ரி ‘நோ போல்’ குறியை சைகை செய்ய, அப்போதுதான் எல்லாருக்கும் தெரியும்படி திரையில் காட்டப்பட்டது காட்சி.
பந்தை போடும் வீரர் பிரதான கோட்டைத் தாண்டி தவறுதலாக காலை வைத்திருக்க, மொத்த மைதானமும் கரகோஷத்திலும் கத்தலிலும் நிரம்பியது.
“யாதவ்… யாதவ்…” என்ற கூக்குரல் எங்கும் ஒலிக்க, மூச்சு வாங்கியபடி மெல்ல தலையை நிமிர்த்தினான் யாதவ் அர்ஜூனா.
கையிலிருந்த பேட்டின் பிடியை இறுக்கிப் பிடித்திருந்தவனின் விழிகளில் ஒரு தீர்க்கம் தெரிய, எழுந்து நின்றான் தயாராக.
எதிரியணிக்கு இது பெரும் சவால்தான். ஆனால், வேறு வழியில்லையே!
மீண்டும் அந்த இறுதிப் பந்து வீசப்பட, இப்போது யாதவ்வின் துடுப்பு அந்த பந்தை அடித்த அடியில் பவ்லியனுக்கு நடுவே சென்று விழுந்தது அது.
ரெஃப்ரி இரு கரங்களின் ஆட்காட்டி விரலை ஒருசேர மேலே உயர்த்திக் காட்டினார்.
“சிக்ஸ்…” கமென்டேடர் சொன்னதுமே மக்கள் துள்ளிக் குதித்து கரகோஷம் எழுப்ப, மைதானத்திற்குள் ஓடி வந்தனர் யாதவ்வின் அணியினர்.
மீடியாகாரர்கள் வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துக்கொள்ள, ஹெல்மெட்டை கழற்றி கையிலிருந்த பேட்டை தூக்கிக் காட்டி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினான் அவன்.
இதை தொலைக்காட்சி திரை வழியே புன்னகையோடு பார்த்துக்கொண்டிருந்த நிஹாரிகாவை எரிச்சலோடு பார்த்துக்கொண்டிருந்தாள் ஆதிரா.
“அதான் ஜெயிச்சிட்டான்ல, இப்போவும் உம்முணா மூஞ்சாட்டம் இருக்கான் உன் ஆளு! கொஞ்சோண்டு சிரிக்கலாம்ல நீஹா?”
அவளுடைய வார்த்தைகள் சலிப்பாக வர, தோழியை புன்னகையோடு பார்த்தள் நிஹாரிகா.
“அர்ஜூ சிரிக்கும் போது எவ்வளவு அழகா இருப்பான் தெரியுமா ஆதி, கண்ணு பட்டுருமோன்னு சிரிக்க மாட்டேங்குறான். அவ்வளவுதான்” அவன் தன்னவனுக்காக வக்காலத்து வாங்க, இவளுக்கு எங்கேயாவது போய் முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது.
“க்கும்! ரொம்பதான்…” என்று நொடிந்துக்கொண்ட ஆதிரா, “சரி எனக்கு வேலைக்கு டைம் ஆச்சு, நான் கெளம்புறேன்” என்றுவிட்டு வெளியேறியிருக்க, நிஹாரிகாவும் தயாராகி ஹோட்டலுக்கு சென்றாள்.
அன்று முழுக்க அவன் சொன்னது போல அத்தனை வேலைகளையும் செய்து முடித்தவளுக்கு மூச்சு முட்டியது.
வேர்த்து விறுவிறுத்து களைத்துப் போய் வீட்டிற்கு வந்து அவள் படுக்கையில் விழ, தன் அணியினரோடு சென்னையை நோக்கி மும்பைக்கு வந்துக்கொண்டிருந்த யாதவ்வின் பார்வை தன் பக்கத்திலிருந்த ஒருவனின் மீது நிலைக்குத்தி இருந்தது.
அந்த ஒருவனும் அவனின் அணியை சேர்ந்தவன்தான்.
அலைப்பேசியிலிருந்த தன் காதலியின் புகைப்படத்தை விழிகளில் காதலோடு அவன் பார்த்துக்கொண்டிருக்க, யாதவ்வும் அவனையே கவனித்துக்கொண்டிருந்தான்.
அதை கண்டுகொண்டவனோ, “என்ன அண்ணா, என்னையே பார்த்துக்கிட்டு இருக்கீங்க. ஷீ இஸ் மை லவ், இன்னைக்கு அவளோட பர்த்டே. பட்… அவளோட இருக்க முடியல, ரொம்ப மிஸ் பண்றேன். கோபமாதான் இருக்கா, பட் வாட் டு டூ?” என்று சொல்லிவிட்டு திரும்பிக்கொள்ள, அமைதியாய் கேட்டுக்கொண்டிருந்தான் மற்றவன்.
ஆனால், மனதில் பாரம் ஏறிய உணர்வு.
அவனுடைய பார்வை ஜன்னல் வழியே தெரியும் காட்சிகளின் மீது பதிய, அதேநேரம் படுக்கையில் கிடந்த நிஹாரிகாவின் நினைவுகள் மீண்டும் கடந்த காலத்தை மீட்டன.
முதல் சந்திப்பிற்கு பிறகு,
“ஹேய் ஆதி, எவ்வளவு நேரம்டீ இந்த ரெஸ்டாரென்ட்ல வெயிட் பண்றது? எப்போதான்டீ வருவ, ஆரவ்க்கு தெரிஞ்சா அவ்வளவுதான். அவன் கால் பண்றதுக்கு முன்னாடி நான் வீட்டுக்கு போயிடணும்”
நிஹாரிகா கெஞ்சாத குறையாக சொல்ல, மறுமுனையிலிருந்த ஆதிராவோ அவளுக்கு மேல் கெஞ்ச ஆரம்பித்தாள்.
“சாரி நீஹா, என்னால வர முடியல. அப்பா வேற சொல்லாம கொல்லாம வர்றாராம். ஹோஸ்டல்ல மட்டும் இல்லன்னா அவ்வளவுதான், தூக்கி போட்டு மிதிச்சிருவாரு. என் ஃபேமிலி பத்தி உனக்கு தெரியாதா?”
அவள் பாவமாக சொல்ல, அதற்குமேல் நிஹாரிகாவுக்கும் அவளை திட்ட தோன்றவில்லை.
ஆதிராவின் கிராமத்து மிலிட்டரி குடும்பத்தை பற்றி அவள் அறியாததா!
“சரி ஆதி, அப்பறம் பார்க்கலாம்…” அதற்குமேல் எதுவும் பேசாமல் அவள் அழைப்பைத் துண்டித்துவிட, சரியாக யுகனோடு பேசியபடி அந்த ரெஸ்டாரென்டுக்குள் நுழைந்தான் யாதவ் அர்ஜூனா.
“இன்னைக்கு ப்ராக்டிஸ் செம்மயா இருந்துச்சுல்ல, ஐயாவோட ஆட்டத்த பத்தி இன்னைக்கு அந்த பார்கவ்வுக்கு புரிஞ்சிருக்கும்” யாதவ் சொல்லிக்கொண்டே உள்ளே வர, எதேர்ச்சையாக அவனுடைய பார்வை நிஹாரிகாவின் மீது பதிந்தது.
“டேய் யுகா, அங்க பாருடா! அது அந்த பொண்ணுதானே…” அவன் அவசரமாகக் கேட்க, “ஆமா அந்த பொண்ணுதான், அதுக்கென்ன இப்போ? நாம சீக்கிரம் சாப்பிட்டுட்டு கெளம்பலாம் மச்சி” என்றான் மற்றவன்.
ஆனால், யாதவ்வுக்கு தன்னை மீறி அவளோடு பேச வேண்டுமென்ற ஆர்வம் உள்ளுக்குள் பெருக்கெடுத்தது.
அதுவும் அலைப்பேசியை நோண்டியபடி தனியாக நிஹாரிகா அமர்ந்திருக்க, இதுதான் சந்தர்ப்பமென நினைத்தவன் எப்படியோ நண்பனை கழற்றிவிட்டு அவளெதிரே சென்று நின்றுக்கொண்டான்.
‘அவ செருப்பால அடிச்சதுக்கப்பறம் தான் இவனுக்கு புத்தி வரும் போல’ உள்ளுக்குள் நினைத்தபடி யுகன் ஓரமாக இருந்த மேசையொன்றில் அமர்ந்துக்கொள்ள, தன் முன் நிழலாடுவதை உணர்ந்து நிமிர்ந்துப் பார்த்தாள் நிஹாரிகா.
“ஹாய்… அது.. நான்… அன்னைக்கு…” அவள் பார்வை பதிந்ததுமே யாதவ் எப்படி ஆரம்பிப்பதென்று தெரியாமல் தடுமாற ஆரம்பிக்க, விழிகளை சுருக்கி அவனை யோசனையோடு பார்த்தவளுக்கு அப்போதுதான் அவன் யாரென்று மூளைக்கு உரைத்தது.
“ஆமா தெரியும், நீங்க…” அவளுக்கும் இப்போது என்ன பேசுவதென்றே தெரியவில்லை. கூடவே, தன் காதலனை நினைத்து சிறு பயம் வேறு உள்ளுக்குள்.
அவள் நினைவு கூர்ந்ததும்தான் யாதவ்விற்கு ‘அப்பாடா’ என்றிருந்தது.
“ஊஃப்ப்… நியாபகம் இருக்கா, நல்லதா போச்சு” என்று அவன் சொல்லிக்கொண்டே அவளெதிரே இருந்த இருக்கையில் அமர்ந்துக்கொள்ள, மெல்ல புன்னகைத்தவளோ தயக்கத்தோடு கைகளைப் பிசைய ஆரம்பித்தாள்.
“என் பேரு யாதவ், யூ…” அவன் கேள்வியாக இழுக்க, “நிஹாரிகா, நீங்க நீஹான்னு கூப்பிட்டுக்கலாம்” என்றாள் மெல்லிய குரலில்.
“அன்னைக்கு நான் அப்படி பேசியிருக்க கூடாது. சாரி கூட சொல்லாம போயிட்டேன். சாரி நீஹா, எல்லா என் ஃப்ரென்ட் சித்துக்காகதான். என்ட் அந்த பொண்ணு… அவதான் எல்லாத்துக்கும் காரணம்” என்றவனின் இறுதி வார்த்தைகளில் கோபம் மிதக்க, அவளோ புரியாமல் பார்த்தாள்.
அவளின் பார்வையை வைத்தே கேள்வியை புரிந்துக்கொண்டவன், “அது என்னாச்சுன்னா… அவ லவ் பண்ணி ஏமாத்திட்டான்னு இவன் சூசைட் அட்டென்ட் பண்ணிட்டான். அவனுக்கு ஒன்னுன்னா ஐ கான்ட் டோலரேட். அதான், உன்கிட்ட அப்படி நடந்துக்கிட்டேன் சாரி அகைன்” என்று விழிகளை சுருக்கி கெஞ்சியபடி சொன்னான்.
ஏனோ நிஹாரிகாவின் இதழ்கள் அவனின் பேச்சில் புன்னகைத்தன.
அவளின் சிரிக்கும் விழிகளையும் புன்னகையில் விரிந்திருந்த இதழையும் உள்ளுக்குள் ரசித்தபடி பார்த்தவன், “யூ நோ வாட்? இன்னைக்குதான் கண்ணால பேசுற பொண்ண பார்க்குறேன். க்யூட்!” என்று ரசனையோடு சொல்ல, அவளுக்கு வெட்கம் கலந்த சங்கடமாகிப் போனது.
அவள் ஏதோ சொல்ல வர அதைக் குறிக்கிடுவது போல அலறியது யாதவ்வின் அலைப்பேசி.
உடனே அழைப்பையேற்றவன், “ஹேய் சித்து, நான் அன்னைக்கு சொன்னேன்ல, அந்த பொண்ண மீட் பண்ணேன். அவ கூடதான்…” என்று சொல்லி முடிக்கவில்லை, மறுமுனையில் சித்தார்த்தோ, “டேய் அதை விடுடா! இந்த ரேஷ்மா இருக்கால்ல, அவ என்கிட்ட சொல்லாம அந்த வருண் கூட படத்துக்கு போயிருக்காடா, கேட்டா கசின் பிசின்னு சொல்றா. ஹவ் டேர் இஷ் ஷீ?” என்றான் கோபமாக.
யாதவ்வின் முகம் சட்டென இறுகியது.
“சித்து, எல்லா நேரமும் நீயே கரெக்டா இருப்பேன்னு இல்ல. இப்போ நீ பண்றது.. தட் இஸ் ரோங். நீ லவ் பண்ற அப்படிங்குறதுக்காக நீ சொல்றதை எல்லா அவ கேக்கணும்னு கெடையாது, ஷீ ஹேஸ் அ லைஃப். அவளோட வாழ்க்கைய அவள வாழ விடு! யூ டோன்ட் ஹேவ் எனி ரைட்ஸ் டூ குவஷன் ஹெர். கொட் இட்!”
அவன் சொல்லி முடிக்க, மறுமுனையில் சித்தார்த்திடம் வெறும் அமைதி மட்டுமே.
ஆனால், இங்கு அவனின் முகபாவனைகளையும் அவன் பேசுவதையும் கவனித்துக்கொண்டிருந்த நிஹாரிகாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
‘இப்படியும் ஆண்கள் இருக்கிறார்களா?’ அவள் உள்ளுக்குள் குறையாத ஆச்சரியத்தோடு நினைத்துக்கொண்டாள்.
*********
உங்க கமென்ட்ஸ்காக வெயிட் பண்ணிக்கிட்டே இருப்பேன் டியர்ஸ்… 😍😍
-Sheha zaki
