Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

29. ஷேஹா ஸகி - விழி கொல்லும் விஷமா நீ

விழி கொல்லும் விஷமா நீ epi 14

 

விழி கொல்லும் விஷமா நீ..

EPISODE 12 



Advertisement

 

அந்த பெரிய கிரிக்கெட் மைதானத்தை சுற்றி மக்கள் கத்தி கூச்சலிட்டுக்கொண்டிருக்க, எதிரணி அடிக்கும் பந்தை பிடிப்பதெற்கென்று இரைக்காக காத்திருக்கும் கழுகு போல் காத்துக்கொண்டிருந்தான் யாதவ்.

 

Advertisement

அவனுடைய அணியை சேர்ந்த மற்றவர்களும் மைதானத்திற்குள் சிதறியபடி நின்றுக்கொண்டிருக்க, எதிரணியின் இறுதிப் பந்து அது..

Advertisement

 

அத்தனை பேரின் முகத்திலும் பதற்றம் தெரிய, நெற்றியில் பூத்த வியர்வைத் துளிகளை புறங்கையால் துடைத்தவாறு கூர்ந்து கவனித்தான் யாதவ்.

 

Advertisement

பாலர் பந்தை எறிந்ததுமே துடுப்பை வைத்திருந்த வீரரோ பந்தை ஓங்கி அடித்தார்.

 

அத்தனை பேரின் தலைக்கு மேல் பறந்த பந்தை நோக்கி சிதறியிருந்த அத்தனை விளையாட்டு வீரர்களும் ஓடி வர, அதுவோ சரியாக யாதவ்வை தாண்டி பவிலியன் பகுதிக்குள் விழ தயாரானது.

 

அவன் நினைத்தால் பந்தை பாய்ந்து பிடிக்கலாம், ஆனால் பிடித்த மறுகணம் பிரதான கோட்டைத் தாண்டி அவன் பவிலியன் பகுதிக்குள்ளே விழவும் வாய்ப்புண்டு. எதிரணி வெற்றியை ஈட்டவும் வாய்ப்புண்டு.

 

அந்த கணங்களில் யோசித்தவன் கால்களை ஊன்றி பாய்ந்து தன் தலைக்கு மேலாக செல்லப் போன பந்தை மேலே தட்டி விட்டான்.

 

அவன் எதிர்பார்த்தது போல கோட்டைத் தாண்டி விழப் போனவன் ஒற்றைக் காலை வைத்து ஊன்றி மீண்டும் மைதானத்திற்குள் பாய்ந்து பந்தைப் பிடித்துக்கொள்ள, அந்தோ ஒலித்தது கரகோஷம்.

 

“வாவ்… வாட் அ கேட்ச்! அஞ்சே பாய்ன்ட்ஸ்ல வின்னிங் கப்ப தட்டிட்டு போயிட்டாங்க…”

 

என்ற கம்மென்ட்டரி ஒலிக்க, கரங்களில் இருந்த இறுதிப் பந்தைப் பார்த்தான் யாதவ்.

 

அவன் அணியினரோ பாய்ந்து ஓடி வந்து  அவனை அணைத்துக்கொள்ள, எதிர்பாராத வெற்றி கொடுத்த ஆனந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை அவனால்.

 

இறுதிச் சுற்றுக்கான முக்கியமான விளையாட்டல்லவா இது!

 

இப்போது யாதவ்வின் அணி இறுதிச் சுற்றுக்காக தெரிவு செய்யப்பட்டிருக்க, அவனின் விசிறிகளோ அவன் புகைப்பட பேனரை தூக்கிப் பிடித்து கரகோஷம் எழுப்பினர்.

 

மொத்த அணியும் தங்களின் இறுதி விளையாட்டுக்காக காத்திருக்க, மேட்ச் முடிந்த மூன்றே நாட்களில் ஹோட்டலுக்கு வந்திருந்தான் யாதவ்.

 

“கங்கிராட்ஸ் சார், ஃபைனலுக்கு செலக்ட் ஆகிட்டீங்களாமே! சூப்பர் சூப்பர்” என்று நிஹாரிகா மனதார அவனைப் பாராட்ட, அவனோ அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

 

“என் பிஸ்னஸோட முக்கியமான இன்வெஸ்டர் இன்னைக்கு வரதா சொல்லியிருந்தாங்க. நான் சொல்ற ஃபைல்ஸ்ஸ டென் மினிட்ஸ்ல ரெடி பண்ணி வை கொட் இட்?”

 

அவன் சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியேறிச் செல்ல, அவனின் முக்கியமான கோப்புகளை வைத்திருக்கும் அறையை நோக்கி ஓடினாள் அவள்.

 

அவன் சொன்ன ஃபைல்களை தேடி எடுப்பதற்கே அவளுக்கு நேரம் சரியாக இருக்க, நேரத்தைப் பார்த்துவிட்டு பதறியடித்துக்கொண்டு அவனின் ஆஃபீஸ் அறையை நோக்கி ஓடியவள் சரியாக தன்னெதிரே வந்தவளின் மீதே மோதி நின்றாள்.

 

அவள் கையிலிருந்த கோப்புகளும் உள்ளிருந்த தாள்களும் தரையில் சிதறின.

 

“ஓ ஷீட்!” என்று கத்தியவள், தன் வழிக்கு தடையாக வந்தவளை நிமிர்ந்துப் பார்க்க, அவள் முன்னே சுட்டெரிக்கும் பார்வையோடு நின்றிருந்தாள் மேக்னா.

 

அவளைப் பார்த்ததுமே நிஹாரிகாவுக்கு சர்வமும் அடங்கிப் போனது.

 

அவளுக்கும் தன்னவனுக்கும் இடையில் இருக்கும் உறவைப் பற்றி அவள் அறியாததா!

 

‘இவ எதுக்கு இங்க வந்திருக்கா, மறுபடியும்…’ அவளுக்குள் சிந்தனை தறிக்கெட்டு ஓட, அவளுக்குள் நடக்கும் உணர்ச்சிப் போராட்டங்களைப் பற்றி மேக்னா அறியவில்லை போலும்.

 

“ஆர் யூ ப்ளைன்ட்! இப்படிதான் என்மேல வந்து மோதுவியா? இடியட்… அறிவில்லையா உனக்கு? ச்சே! மொதல்ல யாதவ்கிட்ட சொல்லி உன்னை மாதிரி கெயார்லெஸ்ஸான ஸ்டாஃப்ஸ்ஸ வேலைய விட்டே தூக்க சொல்லணும்”

 

அவள் கத்திக்கொண்டே போக, நிஹாரிகா பதிலெதுவும் பேசவில்லை. அவளுக்கு அழுகை தொண்டையை அடைத்தது.

 

“நான் என்ன எக்ஸிபிஷன் பீஸ்ஸா? இப்படி என்னையே வெறிக்க வெறிக்க பார்த்துட்டு இருக்க. மொதல்ல பேப்பர்ஸ எடு” என்று மேக்னா எரிச்சலோடு கத்திவிட்டு யாதவ்வின் ஆஃபீஸ் அறையை நோக்கிச் செல்ல, கீழுதட்டை கடித்து உணர்வுகளை கட்டுப்படுத்தியவள் தரையில் சிதறியிருந்த காகிதங்களை கையிலெடுத்துக்கொண்டாள்.

 

போகும் அவளை பார்த்துக்கொண்டு நின்றிருந்தவளுக்கு அவளின் அரைகுறை ஆடம்பரமான ஆடையும் உடலின் வளைவு நெளிவும் சற்று உள்ளுக்குள் பொறாமையை தூண்டியது என்னவோ உண்மைதான்.

 

குனிந்து தன்னை ஒருதரம் பார்த்துக்கொண்டவள் உதட்டைப் பிதுக்கியபடி அவள் பின்னாலேயே செல்ல, யாதவ்வின் அறைக் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள் மேக்னா.

 

அவள் பின்னாலேயே சென்ற நிஹாரிகாவின் கால்கள் உள்ளே பார்த்த காட்சியில் சட்டென்று நிற்க, அதேநேரம் ஆதிராவின் நிலையோ பரிதாபம்.

 

“இப்போவே வாங்க, ஆஃபர தட்டிட்டு போங்க.. ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ..”

 

என்ற வசனத்தை திரும்பத் திரும்ப சொல்லியே அவளுக்கு நாக்கு வரண்டுவிட்டது.

 

“கட்! இப்போ பர்ஃபெக்ட்டா இருக்கு” என்ற வருண், விட்டால் போதுமென்று ஓடப் போன ஆதிராவை மீண்டும் அழைத்து நிறுத்தினான்.

 

“அது… ரொம்ப நாளா நானும் உன்ன டின்னர்க்கு கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன். நீ வர மாதிரி தெரியல. இன்னைக்கு நீ எனக்கு நோ சொல்ல கூடாது, ஈவினிங் ஷூட் முடிஞ்சதும் ரெடியா இரு, நாம வெளியில எங்கேயாச்சும் போகலாம்”

 

அவன் சொல்ல, ‘இருக்கும் பிரச்சனையில் இவன் வேறு!’ என்றுதான் நினைக்கத் தோன்றியது அவளுக்கு.

 

“அது வருண், இன்னைக்கு நான் அர்ஜென்ட்டா போகணும். சோ…” என்று ஆதிரா சொல்லி முடிக்கவில்லை, “நோ மோர் எக்ஸ்கியூஸஸ் ஆதி, ஷார்ப் சிக்ஸ்க்கு ரெடியா இரு, அவ்வளவுதான்” என்றவன் அவளின் மறுப்பை எல்லாம் கண்டுகொள்ளாது அவன் பாட்டிற்கு சென்றுவிட்டான்.

 

கோபத்தில் காலை தரையில் உதைத்தவள், “கடவுளே, இவன்கிட்ட இருந்து மொதல்ல விடுதலை வேணும். ச்சே! இப்போ எப்படி இவன்கிட்டயிருந்து தப்பிக்கிறது?” என்று எரிச்சலோடு புலம்பியபடி அப்படியே அமர்ந்துக்கொள்ள, திடீரென ஒரு சிரிப்பு சத்தம் அவள் பின்னால் கேட்டது.

 

வேகமாகத் திரும்பிப் பார்த்தவள், “நீங்களா… என் பொலம்பல் உங்களுக்கு சிரிப்பா இருக்கா?” என்று கடுப்பாகக் கேட்க, அவளெதிரே வந்து நின்றான் சித்தார்த்.

 

“ஆமா… நீ புலம்புறத பார்க்கும் போது ஐ ஃபீல் சோ ஹேப்பீ மை ஸ்வீட்ஹார்ட். சரி சரி சீக்கிரம் ரெடியாகு, உன் பாஸ் பேபி வந்துர போறான்”

 

அவன் கேலியாகச் சொல்ல, ஒற்றைப் புருவத்தை உயர்த்தி அவனைப் பார்த்தவளுக்கு கோபம் எக்குத்தப்பாக எகிறியது.

 

ஒரு பெருமூச்சுவிட்டு கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டாள் ஆதிரா.

 

“இந்த வருண நான் பார்த்துக்குறேன், அதை விடுங்க. உங்க ஃப்ரென்டயும் என் ஃப்ரென்டையும் சேர்த்து வைக்குறதுக்கு ஏதாச்சும் ஐடியா யோசிச்சீங்களா?”

 

என்று ஆதிரா தீவிர முகபாவனையோடுக் கேட்க, அலட்சியமாக தோளைக் குலுக்கியபடி அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்துக்கொண்டான் அவன்.

 

“நத்திங் டு டூ, நடக்க வேண்டியது தானா நடக்கும். இதுல நாம எஃபோர்ட் போடுறதுக்கு ஒன்னுமே இல்ல. ஜஸ்ட் லீவ் தட்”

 

என்று சித்தார்த் அலட்சியமாக சொல்ல, அவனை புரியாமல் பார்த்தாள் அவள்.

 

“வாட்? அது.. அது எப்படி? நிஹாரிகா விஷயத்துல எதுவும் பண்ண தேவையில்லதான். ஆனா யாதவ்க்கு அவளோட காதல புரிய வைக்கணும்ல சித்தார்த்” அவள் அவனுக்கு புரிய வைக்க முயல, சில கணங்கள் யோசித்தான் அவன்.

 

“ரெண்டு பேருல யாராவது ஒருத்தர் தெளிவா இருந்தா பத்தாது? அதெல்லா உன் ஃப்ரென்டே பார்த்துப்பா. லீவ் தட்”

 

அவன் சொல்லிவிட்டு செல்லப் போக, வேகமாக அவனை நோக்கிச் சென்றவள் அவனின் முழங்கையைய பற்றியிழுத்து அவனை நெருங்கி நின்றாள்.

 

“என்ன நீ, உன் பாட்டுக்கு அவ பாத்துக்குவான்னு சொல்ற. அவளால முடியும்னா எதுக்கு நாலு வருஷம் வேஸ்டா போச்சு. அவ கண்டிப்பா அவனுக்கு புரிய வைக்க ட்ரை பண்ண மாட்டா, நாமதான் ஏதாச்சும் பண்ணணும்”

 

அவள் படபடவென பேசிக்கொண்டே போக, ஆடவனோ இமை வெட்டாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

 

விழிகளை சுருக்கி அவனின் பார்வையை புரியாமல்  பார்த்தவளுக்கு அப்போதே தான் செய்யும் காரியம் உணர, பட்டென்று விலகப் போனாள்.

 

ஆனால் இப்போது அவன் அவளை விட்டால்தானே!

 

அவளை இழுத்து அவன் தன்னோடு நெருக்கிக்கொள்ள, “என்ன பண்றீங்க சித்தார்த்?” என்று அதிர்ந்துப்போய் வந்தது அவளுடைய குரல்.

 

” ஐ ஹேவ் அன் ஐடியா” என்று வேகமாகச் சொன்னவன் தன் யோசனையை சொன்னான்.

 

அதைக் கேட்டவளின் விழிகள் மின்ன, மறுகணம் கொடுப்புக்குள் சிரித்தவள், “இதை இப்படிதான் சொல்வீங்களா?” என்று குறும்பாக சொல்ல, இப்போது அதிர்வது அவனின் முறையாயிற்று.

 

ஆனால் இருவரும் விலகவில்லை. ஒருவரையொருவர் விழி மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.

 

சரியாக வருணிடமிருந்து அழைப்பு வந்தது.

 

“ஓ ஷீட்! இவன் வேற கௌஷிக் மாதிரி குறுக்க குறுக்க வர்றான்” என்று முணங்கியவள், அவனின் பிடியிலிருந்து விலகி வேகமாக அங்கிருந்து வெளியேற, போகும் அவளை பார்த்திருந்தவனின் முகமோ இப்போது பாறைப் போல் இறுகிப் போயிருந்தது.

 

 

********

 

 

“ஹாய் யாதவ், ஆஃப்டர் லாங் டைம்.. ஹவ் ஆர் யூ?” அவள் உற்சாகமாக கேட்டபடி அவனருகே சென்றவள், அவனை இறுக அணைத்துக்கொள்ள, அவனும் அவளை தன்னோடு அணைத்துக்கொண்டான்.

 

வாசலில் நின்றபடி இருவரும் அணைத்திருப்பதை பார்த்துக்கொண்டு நின்றிருந்தவளுக்கு இதயத்தை ஈட்டியால் குத்திக் கிழிப்பது போல வலித்தது.

 

“சா.. சார்” திக்கித்திணறி சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்து அவன் மேசை மீது கோப்புகளை வைக்க,  மேக்னாவின் அணைப்புக்குள் இருந்தவாறு நிஹாரிகாவின் முகபாவனைகளை தான் கவனித்துக்கொண்டிருந்தான் ஆடவன்.

 

ஏனோ அவளின் சோர்ந்த முகம் அவனுக்கு ஒரு ஆர்வத்தையும் திருப்தியையும் கொடுத்தது.

 

விஷமப் புன்னகையோடு மேலும் மேக்னாவை நெருங்கி நின்றுக்கொண்ட யாதவ், அவளிடையைப் பற்றி அழைத்து வந்து அவளுக்கான இருக்கையில் அமர வைத்தான்.

 

“வாவ்… நொட் பேட்! இவ்வளவு சேன்ஞ் ஆகிட்டியா? நான் கூட மீட்டிங்க ஏதாச்சும் ஹோட்டல்ல தனியா வச்சுக்கலாம்னு நினைச்சேன். பட்…” அவள் அதிருப்தியோடு முகத்தை சுழிக்க, “சோ வாட்? வீ வில் கேட்சப் டூநைட் ஸ்வீட்ஹார்ட்” என்றான் அவன் பதிலுக்கு.

 

நிஹாரிகாவுக்கு இவர்களின் சம்பாஷனைகளை காது கொடுத்து கேட்கவே முடியவில்லை. ஆத்திரம் ஒரு பக்கம் அழுகை ஒரு பக்கம் என கை முஷ்டியை இறுக்கி உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியபடி நின்றிருந்தாள் அவள்.

 

“நமக்குள்ள ப்ரேக்கப் ஆகிருச்சு பேபி, ஸ்டில் யூ மிஸ் மீ ரைட்?” அவனையே கூர்ந்து பார்த்தபடி கொஞ்சும் குரலில் கேட்டாள் மேக்னா.

 

‘சிணுங்குறாளே இந்த மேனாமினிக்கி, ப்ரேக்கப் ஆன மாதிரியா ரெண்டும் பேசிக்கிதுங்க. கேக்கவே நாராசமா இருக்கு. குத்துக்கல்லாட்டம் ஒருத்தி நிக்கிறேன்னு கூட கண்டுக்குதுங்களா! கடவுளே…’

 

உள்ளுக்குள் புலம்பியபடி எரிச்சல் மண்டிய முகமாக நிஹாரிகா நின்றிருக்க, அவனோ ஓரக்கண்ணால் அவளையேதான் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

“லெட் மீ ஸ்டார்ட் அவர் டிஷ்கஷன்” என்றவன் ஹோட்டலின் தற்போதைய ஏற்ற இறக்கம் பற்றிக் கூறி விளக்கிவிட்டு இலாபம் பற்றியும் தெளிவாக விளக்க, புருவ முடிச்சுகளோடு நிஹாரிகாவைப் பார்த்தவள் தன் பக்கத்திலிருந்த தண்ணீர் க்ளாஸை அவளை நோக்கி தள்ளினாள்.

 

அதை புரிந்துக்கொண்டவளாய் அவள் க்ளாஸில் தண்ணீரை ஊற்ற, அதுவோ கொஞ்சம் மேசையிலும் கொட்டிக்கொண்டது.

 

“ஊப்ஸ்… ஐ திங், நீ நல்ல ஸ்டாஃப்ஸ்ஸ வேலைக்கு வைக்கணும்னு நினைக்கிறேன் யாதவ். வெர்ரி கெயார்லெஸ்” என்று மேக்னா வேண்டுமென்று சொல்ல, நிஹாரிகாவை அழுத்தமாக ஒரு பார்வைப் பார்த்தான் அவன்.

 

அவளோ முகம் கறுத்துப்போய் தரையை வெறித்தவாறு நின்றிருக்க, ஆடவன் என்ன நினைத்தானோ!

 

விழிகளை அழுந்த மூடித் திறந்து, “வீ ஆர் நொட் பர்ஃபெக்ட் ஆஸ் வெல், சீக்கிரம் கத்துக்குவா” என்று அவளை விட்டுக்கொடுக்காது பேசியவன், “மிஸ் நிஹாரிகா, கெட் மீ டூ காஃபி ரைட் நவ்” என்றான் அவளை வெளியேற்றும் பொருட்டு.

 

அப்போதுதான் மேக்னாவின் காதில் அந்த பழக்கப்பட்ட பெயர் விழுந்தது.

 

“ஹேய் வெயிட், வாட்ஸ் ஹெர் நேம்?” அவள் மீண்டும் யாதவ்விடம் கேட்க, “நிஹாரிகா” என்றான் அவன் அழுத்தமாக.

 

மேக்னாவுக்கு அனைத்தும் புரிந்து போனது.

 

“இஷ் ஷீ ரைட்?” என்ற கேள்வியோடு  தன்னெதிரே இருந்தவனை அர்த்தம் பொதிந்த பார்வைப் பார்த்தாள் அவள்.

 

அவனும் அவளுக்கு சளைத்தவன் இல்லை போல அவளின் பார்வையை கண்டுகொள்ளாமல் தன் பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க, அடுத்த பதினைந்து நிமிடங்களில் அறையிலிருந்து வெளியே வந்தாள் மேக்னா.

 

அவளுடைய விழிகள் முதலில் தேடியது என்னவோ நிஹாரிகாவைதான்.

 

இருவரின் நெருக்கத்தை பார்க்க நேரிடுமோ என்று பயந்தே ஹோட்டலில் வேலைப் பார்க்கும் மற்ற வேலையாட்களோடு வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தாள் அவள்.

 

“ஐ ஜஸ்ட் வோன்ட் டூ க்ளெரிஃபை வன்திங்” மேக்னாவின் குரலில் சட்டெனத் திரும்பியவள், அவளை கேள்வியாகப் பார்க்க, “நீதான் நீஹாவா?” என்று கேட்டு வைத்தாள் மற்றவள்.

 

நிஹாரிகாவுக்கு ஒருகணம் ஒன்றுமே புரியவில்லை.

 

இருந்தும் காரணம் புரியாமல் அவள் தலையாட்டி வைக்க, அவளை மேலிருந்து கீழ் ஒரு பார்வைப் பார்த்தாள் மேக்னா.

 

“அப்போ அவன் உன் பேரதான் சொன்னானா, இடியட்! உன்னை விட நான் ஒன்னும் குறைச்சலா இல்லயே, தென் வை?” என்று கடுகடுத்தபடி அவள் செல்லப் போக, இங்கு மற்றவளுக்கோ தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை.

 

“மேடம் நில்லுங்க, என்ன சொல்றீங்க. என் பேர யார் சொன்னது?” தன் சந்தேகத்தை கேட்டுவிட்டாள் அவள்.

 

இருந்தும் முறைப்பையே பதிலாகக் கொடுத்தவள் ஒரு அடி முன்னே வைத்து பின் என்ன நினைத்தாளோ!

 

அவளின் காதருகே குனிந்து ரகசியம் பேச, விழி பிதுங்க நின்றுவிட்டாள் நிஹாரிகா.

 

மேக்னாவின் விழிகளில் இனம்புரியாத ஒரு உணர்வு. அது பொறாமையா இல்லை தாழ்வு மனப்பாண்மையா.. அவளுக்கே தெரியவில்லை.

 

அதற்குமேல் எதுவும் பேசாமல் அவ ள் சென்றுவிட, போகும் அவளை  குறையாத அதிர்ச்சியோடு பார்த்திருந்த நிஹாரிகா மேக்னாவின் வார்த்தைகளை ஆழமாக யோசிக்காமல் விட்டது அவளின் துரதிஷ்டவசமாகிப் போனது.

 

 

***********

 

-Sheha zaki

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!