விழி கொல்லும் விஷமா நீ Epi 17

விழி கொல்லும் விஷமா நீ.
EPISODE 17
Advertisement
காட்டன் சேலையில் தலையில் சிறு மல்லிகை சரம் சூடி நெற்றியில் விபூதி மற்றும் சந்தனக் கீற்றோடு தேவதைப் போல யாதவ்வின் முன்னே நின்றிருந்தாள் நிஹாரிகா.
Advertisement
இப்படியொரு கோலத்தில் அவளை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவன்.
Advertisement
முயன்று தன் அதிர்ச்சியை விழிகளில் மறைத்து முகத்தில் கடுமையை கொண்டு வந்தவன், “ஏன் லேட்?” என்று கேட்க, “அது… சாரி சார், இன்னைக்கு ஆயுத பூஜைல்ல அதான் கோயிலுக்கு போயிட்டு வந்தேன். நீங்.. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க சார், இப்போவே வேலையை ஆரம்பிச்சிடுறேன்” என்றவள் வேகமாக அவனின் இன்றைக்கானை செட்யூலைப் பார்த்தாள்.
Advertisement
“சார் இன்னைக்கு உங்களுக்கு மதியத்துக்கு அப்பறம் ஒரு ஆட் ஷூட் இருக்கு. அந்த ஆட் கம்பனிகாரங்க நேத்தே கால் பண்ணி ரிமைன்ட் பண்ணாங்க” என்று அவள் அடுத்தடுத்தென்று சொல்லிக்கொண்டு போய் சட்டென விழிகளை மட்டும் உயர்த்தி அவனைப் பார்க்க, அவளின் பார்வையை எதிர்பார்க்காதவன் போல உடனே பார்வையை திருப்பிக்கொண்டான் யாதவ்.
ஏனென்று தெரியாமல் அவனிடத்தில் ஒரு பதற்றம் சூழ்ந்திருந்தது. அவன் பார்வை அடிக்கடி அவள் மீது பதிய, அதை பெண்ணவளும் உணராமலில்லை.
யாதவ்விற்கு அவனுடைய கோபத்தை தாண்டி மனம் அவளை ரசிக்க, ‘மானங்கெட்ட மனசு’ என்று தனைத்தானே திட்டியவன் அதை கடிவாளமிட்டு அடக்க முயன்றான் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால், சேலையினூடே தெரியும் அவளின் வளைவு நெளிவுகள் அவனை விட்டால்தானே!
மதியத்திற்கு பிறகு செல்ல வேண்டிய விளம்பர கம்பனிக்கு நேரத்திற்கு முன்னதாகவே சென்றவன், அவளை வர மறுத்திருக்க, காரணத்தை அறியாதவளா அவள்!
“சேலையில வந்து என்னை கொல்லுற நீஹா!”
அன்று அவன் சொன்ன வார்த்தைகள் இன்று அவன் விழிகள் சொல்வது போல அவளுக்குத் தோன்ற, கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டாள் நிஹாரிகா.
கிட்டத்தட்ட யாதவ் சென்று நீண்ட நேரம் கழிந்திருந்தது. அப்போதே பாதி வேலையை முடித்துவிட்டு ஹோட்டலின் கீழ்தளத்திலுள்ள ரெஸ்டாரென்ட்டிற்கு மதிய உணவுக்காக சென்றிருந்தாள் நிஹாரிகா.
உணவை வாங்கிவிட்டு தனக்கான மேசையை நோக்கி அவள் செல்ல, “அம்மாடி யாதவ் தம்பியோட ஆஃபீஸ் ரூம் எங்கம்மா இருக்கு?” என்ற ஒரு வயதானவரின் குரல் காதில் கேட்டது.
உடனே திரும்பிப் பார்த்தவள் தன்னெதிரே நிற்பவர் யாரென்று தெரியாததில் புருவ முடிச்சுகளோடு நோக்கினாள்.
“நீங்க…” என்று கேள்வியாக இழுத்தவளுக்கு, “என் பேரு வசுந்தரா, யாதவ்வோட சித்தி” என்று அவர் சொன்னதுமே மூளையில் பொறி தட்டியது.
அதிர்ந்து விழித்தவள் உடனே முகபாவனையை மாற்றி, “அய்யோ நீங்களா அம்மா, சா.. சார் வெளியில போயிருக்காரு. நீங்க வாங்க நான் உங்கள சாரோட ரூமுக்கு கூட்டிட்டு போறேன்” என்றாள் பதற்றமாக.
நிஹாரிகா முன்னே செல்ல, அவரும் அவள் பின்னாலேயே சென்றவர் ஆஃபீஸ் அறையிலிருந்த சோஃபாவில் அமர்ந்துக்கொண்டார்.
“சார் ஆட் ஷூட்காக போயிருக்காரு, ரொம்ப நேரமாகுது. மே பீ இப்போ வரலாம்” அவள் சொல்லி முடிக்கவில்லை, “அப்.. அப்போ நான் இப்போவே கெளம்புறேன்ம்மா. மேட்ச்னு வீட்டு பக்கமே அவன் வரல, பார்த்து ரொம்ப நாளாச்சு. அதான் பார்த்துட்டு அவனுக்காக சமைச்சத கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன். ஆனா…” என்று நிறுத்தினார் தழுதழுத்த குரலில்.
அவனின் கடந்தகாலத்தைதப் பற்றி ஏற்கனவே அறிந்து வைத்திருந்தவளுக்கு அவரின் நிலை புரியாமல் இல்லை.
ஆனால் எதுவும் பேச முடியாமல் சில கணங்கள் அமைதியாக இருந்தவள், “அது அம்மா… நீங்க கொடுங்க, அவர் கண்டிப்பா சாப்பிடுவாரு. என்ட், பாசத்த அவருக்கு வெளியில காட்டத் தெரியாது, அவ்வளவுதான். மத்தபடி ரொம்ப நல்லவரு” என்று அவரை தேற்றவென சொல்ல, அவருடைய இதழ்கள் விரக்தியாகப் புன்னகைத்தன.
“உன் பேரரென்னம்மா?” வசுந்தரா கேட்டதும், “நிஹாரிகா…” என்று அவள் சொன்னதும்தான் தாமதம், ஏதோ பழக்கப்பட்ட பெயரைக் கேட்டது போல தோன்றியது அவருக்கு.
யோசனையோடு அவர் எதையோ கேட்க வர, அதிரடியாக கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தான் யாதவ் அர்ஜூனா.
தன் அறையில் நின்றிருந்த வசுந்தராவைக் கண்டதும் அவனுக்குள் கோபம் கொழுந்துவிட்டு எரிய, நெற்றி நரம்புகள் புடைத்தெழுந்தன.
அதை வசுந்தராவும் உணராமல் இல்லை.
“சார், உங்க சித்தி உங்கள பார்க்க
தான் வந்திருக்காங்க. நான்தான் ஆஃபீஸ் ரூமுக்கு அழைச்சுட்டு வந்தேன்” என்று நிஹாரிகா அவனின் கோபத்தின் அளவு புரியாமல் சாதாரணமாக சொல்ல, கொஞ்சமும் யோசிக்கவில்லை யாதவ்.
தன் பக்கத்திலிருந்தவளின் கன்னத்தில் அவன் ஓங்கியறைந்திருக்க, கன்னத்தைப் பொத்திக்கொண்டவளோ இந்த அடியை எதிர்பார்க்காததில் விக்கித்துப்போய் நின்றுவிட்டாள்.
“யாதவ் என்னப்பா நீ, நான்தான் வந்தேன். அந்த பொண்ணுக்கு..” வசுந்தரா பதற்றமாகி அவளுக்காகப் பேச வர, “வாய மூடுங்க, உங்ககிட்ட பேசுற அளவுக்கு நீங்க எனக்கு ஒன்னுமே இல்ல. புரியுதா… ஷீ இஸ் மை ஸ்டாஃப், அதுவும் என்னை பத்தி தெரிஞ்சே இந்த வேலைய பார்த்திருக்கா. ஷீ டிசெர்வ் திஸ்” என்றவனின் வார்த்தைகள் அனல் போல் தெறித்தன.
வசுந்தராவுக்கு மனமே சுக்கு நூறாக உடைந்துவிட்டது. கண்ணீரைத் துடைத்துக்கொண்டவர் அவனுக்காக கொண்டு வந்ததை மட்டும் ஒரு ஓரமாக வைத்துவிட்டு அந்த இடத்திலிருந்து தளர்ந்த நடையாக வெளியேறினார்.
அவர் சென்ற மறுநொடி அதிர்ச்சியில் உறைந்துப் போய் நின்றிருந்தவளின் கரத்தைப் பற்றி தன்னருகே யாதவ் இழுக்க, பயத்தில் எச்சிலை விழுங்கிக்கொண்டாள் நிஹாரிகா.
“ஹவ் டேர் யூ! அவங்க யாருன்னு உனக்கு நல்லாவே தெரியும். தெரிஞ்சே ஏன்டீ இப்படி பண்ண? ஓஹோ.. ஒருவேள நீயும் இரண்டாந்தாரத்து பொண்ணுல்ல அதனாலயா மேடமுக்கு அவங்கமேல பாசம் பொங்குது?”
யாதவ் நாக்கில் விஷத்தை தடவியது போல கேட்ட கேள்வியில் அவளுக்கு மனம் சுக்கு நூறாக உடைந்தது.
விழிகளில் கண்ணீரையும் வலியையும் தேக்கிக்கொண்டு உதடு துடிக்க அவனை ஒரு பார்வைப் பார்த்தாள் நிஹாரிகா.
அந்த பார்வை ஆடவனை குத்திக் கிழிக்க, அவளை உதறிவிட்டவன் கண்மண் தெரியாத கோபத்தை கட்டுப்படுத்த வழி அறியாது கண்ணாடி மேசை மீது கையை ஓங்கி அடித்தான்.
அந்த கண்ணாடி சில்லு சில்லாக அறை முழுக்க சிதறிக் கிடக்க, அவன் கரத்திலிருந்து இரத்தம் பீறிட்டு ஓடியது.
தரையில் இரத்தம் சொட்ட அப்படியே நின்றிருந்தவன் சோஃபாவில் தளர்ந்துப் போய் அமர்ந்து தரையை வெறித்துப் பார்த்திருந்தான்.
மனதில் காயத்தோடு பேதை ஒரு பக்கம் கரத்தில் காயத்தோடு இவன் ஒரு பக்கம் என சில நிமிடங்கள் கடக்க, அப்போதுதான் சுயநினைவுக்கு வந்தவள் போல மெல்ல நகர்ந்து அறைக்குள்ளிருந்த முதலுதவி பெட்டியை எடுத்துக்கொண்டாள் நிஹாரிகா.
அவன் பக்கத்தில் வந்தமர்ந்தவள் அவனின் கரத்தை தொடப் போக, “டோன்ட்.. டோன்ட் டச்!” என்று அழுத்தமாகச் சொல்லி கரத்தை இழுத்துக்கொண்டான் யாதவ்.
ஆனால், நிஹாரிகா விடுவதாக இல்லை.
அவனுக்கும் மேல் பிடிவாதக்காரியாகி அவன் முழங்கையை இறுக்கிப் பிடித்தவள் அவனின் கரத்திலிருந்த காயத்திற்கு மருந்திட, விழிகளை மட்டும் உயர்த்தி அவளை அழுத்தமாகப் பார்த்தான் யாதவ்.
“எனக்கு இது தேவையில்ல, ஏற்கனவே நிறைய காயப்பட்டுட்டேன். இதுவும் பழகிப் போச்சு” அவன் விட்டேற்றியாக பதில் சொல்ல, ஒருகணம் தன் செயலை நிறுத்தியவள் அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் மீண்டும் மருந்திடுவதை தொடர்ந்தாள்.
தன் பேச்சை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அவள் இருப்பதில் அவனுக்கு பிபி எகிறியது.
“எதுக்குடீ இப்படி பொய்யா நடிச்சிக்கிட்டு இருக்க, இன்ஃபேக்ட் உனக்கும் அந்த பொம்பளைக்கும் எந்த வித்தியாசமும் இல்ல” ஒருவித ஏளனத்தோடு அவன் சொல்ல, விரக்தியாகப் புன்னகைத்தவள், “ஆமா நானும் அவங்களும் ஒன்னுதான். புரிஞ்சுக்க மாட்டன்னு தெரிஞ்சும் ரெண்டு பேரும் உன்கிட்ட எங்க பாசத்த புரிய வைக்க ட்ரை பண்றோம் அர்ஜூ” என்றாள் வார்த்தைகளில் வலியோடு.
யாதவ் எந்த பதிலும் சொல்லவில்லை. அவளை இறுகிய முகமாக வெறித்துப் பார்த்தான்.
“எங்கம்மா இரண்டாந்தாரம் தான். சொல்லப்போனா தாரமே இல்ல. அவங்க இறக்குற வரைக்கும் என் அப்பாகிட்ட அவங்களுக்கான ஒரு இடம் கிடைக்கவே இல்ல. இப்போ… இவங்கள பார்க்கும் போதும் எனக்கு அப்படிதான் தோனுது.
இதுவரைக்கும் அவங்க உன்கிட்ட வன்மத்த காட்டினது இல்ல. உன்னை கஷ்டப்படுத்தினது இல்ல. ஒரு நல்ல அம்மாவா இருக்க ரொம்பவே முயற்சி பண்றாங்க அர்ஜூ அது ஏன் உனக்கு புரியல?”
அவள் அழுத்தமான பார்வையோடுக் கேட்க, தரையை வெறித்திருந்தவளிடத்தில் அப்போதும் எந்த பதிலும் இல்லை.
“எல்லாருக்கும் இந்த மாதிரி அமையுறது கிடையாது அர்ஜூ, மூத்த தாரத்து பையனோட பாசத்த எதிர்பார்க்குறவங்க ரொம்ப கம்மி. ஒரு வாய்ப்பு… அவங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பாரு!”
தான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு அவனிடமிருந்து விலகியவள் அந்த அறையிலிருந்து வேகமாக வெளியேறியிருந்தாள்.
வாஷ்ரூமுக்குள் நுழைந்துக்கொண்டவள் அவன் வார்த்தைகளில் உண்டான காயத்தை ஒருமூச்சு அழுது தீர்க்க, இறுகிப் போய் அமர்ந்திருந்தவனின் விழியோரம் அவனையும் மீறி கண்ணீர் கசிந்தது.
அதேநேரம்,
“ஆதி, பார்ட்டீ அப்போ நீதான் என் கூட டான்ஸ் பண்ண போற, சோ நான் சொல்ற மாதிரி பண்ணு…” வருண் சொல்லிக்கொண்டே அவளின் ஒரு கரத்தைப் பற்றி மற்ற கரத்தால் இடையை வளைக்க, ஆதிராவுக்கு அத்தனை சங்கடமாக இருந்தது.
“வருண், அதான் சொல்றேன்ல எனக்.. எனக்கு டான்ஸ் பண்ண தெரியாது. நீங்க வேற யாரையாச்சும் பார்ட்னரா சூஸ் பண்ணிக்கோங்க ப்ளீஸ்”
அவள் கெஞ்சாத குறையாக சொன்னாள். ஆனால் வருணோ கேட்பதாக இல்லை.
“நோ ஆதி, ஜஸ்ட் ட்ரை” அவன் வேண்டுமென்று அவளை நெருங்கி ஒட்டி உரசிக்கொண்டு ஆட, ஆதிராவின் விழிகள் தனக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல காலுக்கு மேல் கால் போட்டு அலைப்பேசியை நோண்டியவாறு அமர்ந்திருந்த சித்தார்த்தின் மீது பதிந்தது.
இதில் அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த மாடல் ஒருத்தியோ அவனோடு ஒட்டி கொஞ்சிக் குலாவிக்கொண்டிருக்க, ஏனென்று தெரியாமல் அடி வயிறு பற்றியெறிந்தது அவளுக்கு.
சட்டென “அவுச்…” என்ற வருணின் சத்தத்தில் தன்னோடு இருந்தவனை கவனித்தவள் அப்போதுதான் அவனுடைய காலை மிதித்ததை உணர்ந்து, “சா.. சாரி சாரி வருண்!” என்றாள் பதற்றமாக.
“இட்ஸ் ஓகே, டான்ஸ்ல எல்லாமே சகஜம்தானே!” அலைப்பேசியில் பார்வையை பதித்தபடி சொன்ன சித்தார்த், “பேபி, நாம வேணா ஒரு ரிஹேர்சல் போலாமா?” என்று கேட்டு எழுந்து நிற்க, அந்த மாடல் பெண்ணோ வேண்டாமென்றா சொல்வாள்!
எதிர்பார்த்த வாய்ப்பு கிடைத்தது போல அவள் சித்தார்த்தோடு நெருங்கி நிற்க, இருவரும் ஆதிராவுக்கு நடனத்தை ஆடிக் காண்பித்தனர்.
“வாவ் சித்து! லால்ட் இயர் பார்ட்டீல கூட நீ ரேஷ்மாவோட ஆடின டான்ஸ்ஸ பத்திதான் எல்லாரும் பேசினாங்க. ஆதி, இந்த மாதிரிதான் நாம டான்ஸ் பண்ணணும். நோட் பண்ணிக்கோ!”
வருண் சொல்ல, காதில் புகை வராத குறையாக இருவரும் நெருங்கி நடனமாடுவதை பார்த்துக்கொண்டிருந்தாள் ஆதிரா.
காரணமே இல்லாமல் அவளுக்கு கோபம் கொப்பளித்தது. பற்களைக் கடித்துக்கொண்டு நின்றிருந்தவள் விட்டால் அவனை எரித்தே விடுவாள் போல!
“நா.. நான் கெளம்புறேன் வருண், ஃப்ரென்ட பிக்கப் பண்ணணும், என்ட் ஆல்சோ ஐ அம் சோ டயர்ட்” அவள் சொல்லிவிட்டு நகரப் போக, அவள் கரத்தைப் பற்றி தன்னை நோக்கி இழுத்தான் வருண்.
அவனின் மேல் மோதாத குறையாக அவள் நெருங்கி நிற்க, நடனமாடிக்கொண்டிருந்த சித்தார்த்தின் பார்வையும் இப்போது இவர்களின் மீதுதான் பதிந்தது.
“பார்ட்டீல உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு ஆதி, வெயிட் ஃபார் தட்” என்று வருண் விழிகளில் காதலோடு சொல்ல, அவனை புரியாமல் பார்த்தவள் அத்தருணம் எதையும் உணரவில்லை.
அவனின் பிடியிலிருந்து கரத்தை உறுவி விட்டு விட்டால் போதுமென்று அவள் ஓடிவிட, போகும் அவளை வெறித்துப் பார்த்தான் சித்தார்த்.
அடுத்தநாள் யாதவ் சொன்னதை மும்முரமாக லேப்டாப்பில் டைப் செய்துக்கொண்டிருந்தாள் நிஹாரிகா.
“எந்த டீடெயில்ஸும் மிஸ் ஆகக் கூடாது, எல்லா டீடெயில்ஸையும் கரெக்டா டைப் பண்ணி அந்த க்ளைன்ட்டுக்கு மெயில் பண்ணிரு” அவனும் ஏதோ ஒரு ஃபைலில் பார்வையைப் பதித்தபடி சொல்ல, எதேர்ச்சையாக அவன் விழிகள் அவள்புறம் திரும்பின.
அவளின் வேலைக்கு தடைப்போடுவது போல அவள் முன்னெற்றி முடிக்கற்றை முகத்தில் விழ, அதை காதோரம் ஒதுக்கி விட்டபடி இருந்தாள் நிஹாரிகா.
‘தான் ஏன் அந்த முடிக்கற்றையாக இருந்திருக்க கூடாது!’ என்ற கேள்வி வேறு கவிதையாய் அவன் மனதில் உதிக்க, தலையை உலுக்கி சிந்தனையை கலைத்தவன், ‘மானங்கெட்ட மனசு’ என்று வழக்கம் போல் தன்னைத்தானே திட்டிக்கொண்டான்.
இருந்தும் அவனுடைய பார்வையை மட்டும் அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.
இருக்கையில் அடித்தபடி எழுந்தவன் அவளை நோக்கி வந்து அமர்ந்திருந்தவள் புறம் சற்று குனிந்து நூலிடைவெளிக்கு அவளை நெருங்கி நின்றான்.
வேலையில் தீவிரமாய் இருந்தவளுக்கு இத்தனை நேரம் அவனுக்குள் நடந்த உணர்ச்சிப் போராட்டங்கள் தெரியுமா என்ன!
அவளோ அவனின் நெருக்கத்தில் மூச்சு விடக் கூட பயந்து உறைந்துப் போய் அமர்ந்திருக்க, அவள் முகத்தில் தவழ்ந்துக்கொண்டிருந்த முடிக்கற்றையை காதோரம் ஒதுக்கிவிட்டான் யாதவ்.
நிஹாரிகாவுக்கு அவனின் ஸ்பரிசத்தால் அந்த ஏசி குளிரிலும் வியர்க்கத் தொடங்க, அவளை ஆழ்ந்த பார்வைப் பார்த்தான் அவன்.
“என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணாத! ஐ கான்ட் ரெஸிஸ்ட் மை செல்ஃப் ” அவனுடைய வார்த்தைகள் அழுத்தமாக அதேசமயம் நிதானமாக வர, தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியாமல் சிலையாக அமர்ந்திருந்தாள் நிஹாரிகா.
*********
-Sheha zaki..
