Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

29. ஷேஹா ஸகி - விழி கொல்லும் விஷமா நீ

விழி கொல்லும் விஷமா நீ Final Epi

 

விழி கொல்லும் விஷமா நீ..

Final Episode



Advertisement

 

ஆதிரா கேட்ட கேள்வியில் திகைத்தவன், “அது.. ஆதி அப்படியெல்லா இல்ல. நான் நெஜமாவே உன்ன லவ் பண்றேன். ட்ரஸ்ட் மீ!” என்று அவளை நோக்கி ஒரு அடி முன்னே வைக்க, “அங்கேயே இரு!” என்று தடுத்தாள் அவள்.

 

Advertisement

“காதல் கல்யாணம்னு எந்த கமிட்மென்ட்டும் பிடிக்காதுன்னுதானே என்கிட்ட சொன்ன, என்ட் இந்த முத்தம்லாம் உனக்கு வெறும் சகஜமான ஒன்னுதானே… அப்பறம் எப்படி சித்தார்த், மறுபடியும் என்னை ஏமாத்த முயற்சி பண்ணாத..”

Advertisement

 

அவளின் வார்த்தைகள் காட்டமாக வர, விழிகளை அழுந்த மூடித் திறந்தான் சித்தார்த்.

 

Advertisement

அவள் வார்த்தையை மீறி அவள் பக்கத்தில் நெருங்கியவன், “ஆதி.. நீ சொன்னல்ல காதலிக்கும் போது மட்டும்தான் வயித்துக்குள்ள பட்டாம்பூச்சி பறக்குற மாதிரி ஒரு ஃபீலிங் இருக்கும்னு. அதை.. அதை நான் உன்ன பார்க்கும் போதுதான் ஃபீல் பண்ணேன். மே பீ சென்னையில வச்சே உன்ன நான் காதலிச்சிருக்கலாம், இப்போ உன் ஃபேமிலிய பார்த்ததும் முடிவு பண்ணிட்டேன்” என்று விழிகளில் காதலோடு சொன்னான்.

 

ஆதிராவோ அப்போதும் அவனை முறைத்துப் பார்த்தவள், “இதையெல்லாம் என்னை நம்ப சொல்றீங்களா?” என்று கடுப்பாகக் கேட்க, ‘ஊஃப்ப்..’ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டான் ஆடவன்.

 

“நான் ஒரு பெரிய முட்டாள் ஸ்வீட்ஹார்ட், காதல் கல்யாணம்னாலே ஒரு பயம். ஆல்ரெடி ரெண்டு தடவை காதல்ல ஏமாந்து சாகுற வரைக்கும் போயிருக்கேன். அதனால கூட இருக்கலாம். அதான் உன் விஷயத்துல காதலிக்கிறேன்னு தெரிஞ்சாலும் என்னை நானே ஏமாத்திட்டு இருந்திருக்கேன். என்ட்….”

 

அவன் ஏதோ ஒன்றை சொல்ல வருவது போல நீட்டி முழக்க, ஆதிராவோ கேள்வியாக புருவத்தை நெறித்தாள்.

 

“என்ன?” என்று அவள் கேட்டதும், “அது… பத்தோட பதினொன்னுனு நான் உன்ன சொன்னேன், ஆனா உண்மை என்னன்னா… இதுவரைக்கும் எந்த பொண்ணு கூடயும் நான் பெட் ஷெயார் பண்ணதே கிடையாது ஆதி, நான் காதலிச்ச அந்த ரெண்டு பேர தவிர எவ கூடயும் லிப் கிஸ் பண்ணது கூட இல்லடீ, ஏதோ ஒரு தயக்கம், எல்லை மீறும் போதே விலகிருவேன். ஃப்ரேன்கா சொல்லணும்னா நான் எல்லா வர்த்தே இல்லம்மா.. ஏதோ மன்மதன் ரேஞ்சுக்கு சுத்திக்கிட்டு இருக்குறத பார்த்து நீயா தப்பா நினைச்சுக்கிட்ட, அத்தனையும் நடிப்பு.. ஹிஹிஹி…” என்று பின்னந்தலையை சொரிந்தவாறு அசடுவழிந்தான் சித்தார்த்.

 

பெண்ணவளோ அதிர்ச்சியில் வாயைப் பிளந்த வண்ணம் அவனை மேலிருந்து கீழ் பார்த்தவள், “எதே!” என்று அதிர்ந்த குரலில் கேட்டாள்.

 

பின்ன, அவள் முன்னே அவன் பாடாத பெருமைகளா!

 

அவனின் முகபாவனையில் அவளுக்கு அதிர்ச்சி மறைந்து இப்போது முட்டிக்கொண்டு சிரிப்பு வர, அவள் வாய்விட்டு சிரித்ததும்தான் இவனுக்கு ‘அப்பாடா!’ என்றிருந்தது.

 

அவளிடையை வளைத்து தன்னோடு அணைத்துக்கொண்டவன், மற்ற கரத்தால் அவள் கன்னத்தைப் பற்றி “லவ் யூ ஆதி…” என்று சொல்லி அவளிதழை நோக்கி குனிய, அவனிதழ் மேல் விரலை வைத்து தடுத்தவள் அவனைத் தள்ளிவிட்டு ஓடப் போனாள்.

 

ஆனால் ஆடவன் விடுவானா என்ன!

 

ஒரே பாய்தலில் அவளைப் பிடித்து தன்னோடு நெருக்கிக்கொண்டவன் அவளிதழை ஆசைத்தீர சுவைத்துவிட்டே விலகிக்கொண்டான்.

 

இவ்வாறு ஒரு காதல் ஜோடி சேர்ந்துவிட, நிஹாரிகா மற்றும் யாதவ்வின் காதல்தான் காற்றில் ஊசலாடிக்கொண்டிருந்தது.

 

நிஹாரிகாவின் முன்னே வந்த மார்த்தாண்டமோ, “நீ என்னம்மா சொல்ற, நீயாச்சும் எங்க ஊர் பையன கட்டிக்கிறியா?” என்று கேட்க, “அது…” என்று நீட்டி முழக்கியவளின் பார்வையோ மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டி தூணில் சாய்ந்து நின்றிருந்த யாதவ்வின் மீதுதான் பதிந்தது.

 

அவனோ தன்னவளையே காதலோடு சேர்ந்த ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருக்க, அவள் பார்வை சென்ற திசையை கவனித்த மார்த்தாண்டத்திற்கு அவளின் மனம் புரிந்து போனது.

 

“எல்லா திட்டம் போட்டுதான் வந்திருக்கீங்க போல, கவனிச்சிக்குறேன்” என்று போலியாக மிரட்டிவிட்டு சென்றார் அந்த பெரியவர்.

 

அதன்பின் நடந்த பேச்சு வார்த்தையில் ஒரே மாதத்தில் திருமணத்தை நடத்த வேண்டுமென்று மார்த்தாண்டம் சொல்ல, இப்போது வேண்டாமென  பதிலுக்கு பிடிவாதமாக நின்றனர் ஆதிராவும் சித்தார்த்தும்.

 

காதலர்களாக சில நாட்களை கடத்த ஆசைப்பட்டார்கள் போல!

 

பெரியவரும் வேறுவழியில்லாமல் சம்மதிக்க, அடுத்தநாளே நால்வரும் மீண்டும் சென்னைக்குத் திரும்பினர்.

 

பயணத்தில் நிஹாரிகாவின் பார்வை அடிக்கடி தன்னவன் மீது படிய, சென்னை வந்து சேரும் வரை அவளையே பார்த்துக்கொண்டு வந்தான் அவன்.

 

ஆனால், என்ன காரணமோ! இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

 

யாதவ்விற்கு இதற்குமேல் எப்படி நிஹாரிகாவை சமாதானம் செய்வதென்று கூட தெரியவில்லை.

 

சில மணித்தியாலங்கள் கடந்து நால்வரும் சென்னை வந்து சேர, நால்வரும் வழக்கம் போல தத்தமது வேலைகளில் மூழ்கத் தொடங்கினர்.

 

அன்று…

 

“டூ டேய்ஸ்ல இங்லேன்ட் டூருக்கு போறோம். வர்றதுக்கு டூ டு த்ரீ மன்த்ஸ் ஆகலாம். டெஸ்ட் மேட்ச் ஓடீஐ அப்படி இப்படின்னு மேட்ச்ல பிஸியா இருப்பேன். என்ட்…”

 

அலைப்பேசியில் யாருடனோ பேசிக்கொண்டிருந்த யாதவ் திடீரென கதவு தட்டப்படும் சத்தத்தில், “கம் இன்!” என்றான் சற்று குரலை உயர்த்தி.

 

கதவைத் திறந்து நிஹாரிகா உள்ளே வர, அவளைப் பார்த்ததும், “ஐ வில் கால் யூ பேக்” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவன் அமைதியாக அவளையே பார்த்துக்கொண்டு நின்றான்.

 

பெண்ணவளோ தன்னவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

 

“அது.. அது வந்து.. நான் வேலைய ரிஸைன் பண்றேன். அதை சொல்லிட்டு போகத்தான் வந்தேன்” என்று அவள் சொன்னதும், அவனுடைய விழிகளோ சுருங்கின.

 

சில கணங்கள் அவளை ஆழ்ந்த பார்வைப் பார்த்த யாதவ், “ஹ்ர்ம் ஹ்ர்ம்..  ஓகே, நாளைக்கே உன் ரிஸைனிங் லெட்டர மெயில் பண்ணிரு” என்றுவிட்டு அமைதியாக, கைகளைப் பிசைந்தவாறு நின்றிருந்தவள் அவனை அழுத்தமாக ஒரு பார்வைப் பார்த்துவிட்டு வாசலை நோக்கி விறுவிறுவென்று சென்றாள்.

 

அவள் மனமோ, ‘என்னை போக வேணாம்னு சொல்லு அர்ஜூ..’ என்று உள்ளுக்குள் கூச்சலிட, சட்டென, “நீஹா…” என்று அழைத்து நிறுத்தினான் யாதவ்.

 

அவள் வேகமாகத் திரும்பி கேள்வியாகப் பார்க்க, அவளருகே வந்து நெருங்கி நின்றவன் அவள் முகத்தில் தவழ்ந்துக்கொண்டிருந்த முடிக்கற்றையை காதோரம் ஒதுக்கிவிட்டான்.

 

அவனுடைய விழிகளில் காதல் பொங்கி வழிந்தது.

 

“என்மேல நீ ரொம்ப கோபமா இருக்கேன்னு புரியுது, உன்ன நான் ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன். என்னை பார்க்க கூட உனக்கு பிடிக்கலல்ல நீஹா.. பட் பரவாயில்ல, நானும் பண்ண தப்புக்கு தண்டனைய அனுபவிக்க வேண்டாமா! இப்படி தள்ளி நின்னு உன்ன பார்க்குற இந்த ஃபீலிங்கும் நல்லாதான் இருக்கு”

 

யாதவ்வின் வார்த்தைகளில் அத்தனை வலி..

 

அவன் சொல்லிவிட்டு விலகி நின்றுக்கொள்ள, கலங்கிய விழிகளை மறைக்க முயற்சித்தவாறு செல்லப் போனவளின் கரத்தைப் பற்றி மீண்டும் தன்னருகே இழுத்தான் யாதவ்.

 

அவள் கன்னத்தைப் பற்றி அவளிதழில் அவன் அழுந்த முத்தம் பதிக்க, இந்த எதிர்பாரா முத்தத்தை நிஹாரிகாவும் தடுக்கவில்லை.

 

சில கணங்கள்தான்.

 

அவன் அவளிதழிலிருந்து தன்னிதழை பிரித்ததுமே அந்த அறையிலிருந்து வேகமாக வெளியேறியவள், அந்த வராண்டாவிலிருந்த வாஷ்ரூமிற்குள் நுழைந்து ஒரு மூச்சு அழுதுத் தீர்த்தாள்.

 

பெண்ணவளின் மனமோ வேதனையில் துடித்தது.

 

கனத்த மனதோடு அவள் அங்கிருந்து செல்ல, அடுத்தநாள் குறுக்கும் நெடுக்கும் நடந்தவாறு தாம்தூமென்று கத்திக்கொண்டிருந்தாள் ஆதிரா.

 

சித்தார்த்தோ தலையில் கை வைத்தவாறு அமர்ந்திருக்க, அவளின் கத்தல்களை காதில் வாங்கிக்கொள்ளாதது போல ஜன்னல் வழியாக வெளியே வெறித்துக்கொண்டிருந்தாள் நிஹாரிகா.

 

“இது கொஞ்சம் கூட நல்லா இல்ல நீஹா, அப்போ யாதவ் பண்ணததான் இப்போ நீயும் பண்ணிக்கிட்டு இருக்க. பண்ண தப்புக்குதான் அத்தனை மன்னிப்பு கேட்டுட்டானே, நீ கொஞ்சம் மனசு வச்சு அவன ஏத்துக்கிட்டா எல்லாமே சரியாகிடும். உன் பிடிவாதத்தால அவன் மட்டுமில்ல நீயும்தான் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்க, அவனுக்கு தண்டனை கொடுக்குறதா நினைச்சு உன்னை நீயே தண்டிச்சுக்கிட்டு இருக்கடீ புரியுதா உனக்கு?”

 

அவள் தன் தோழிக்கு புரிய வைக்க முயல, இறுகிய முகமாக வெளியே வெறித்திருந்தாளே தவிர பதிலே பேசவில்லை நிஹாரிகா.

 

“விடு ஆதி.. அவனும் இவள பாடா படுத்தியிருக்கான், அவளுக்குள்ளயும் கோபம் இருக்கும்ல..” என்ற சித்தார்த், “நிஹாரிகா, இப்படி சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத! நீயும் காயப்பட்டிருக்க புரியுது. ஆனா யாதவ்வோட கோபத்தால ரெண்டு பேரும் அஞ்சு வருஷத்த இழந்துட்டீங்க, இப்போ உன் கோபத்தால மறுபடியும் எல்லாத்தையும் இழக்க போறீயா? என்ட்… யாதவ் நாளைக்கு இங்க்லேன்ட் கெளம்புறான்” என்றான் அவள் முகத்தையே கூர்ந்து பார்த்தபடி.

 

நிஹாரிகாவுக்கு அழுகையில் தொண்டை அடைத்தது.

 

இரவு முழுக்க கால்களைக் கட்டிக்கொண்டு முகத்தைப் புதைத்து அழுகையிலேயே அவள் கரைய, அவளுக்கு சளைத்தவன் இல்லை என்பது போல தன்னவளின் நினைவுகளால் அன்றிரவை தூங்கா இரவாக கழித்தான் யாதவ்.

 

அடுத்தநாள் ஏர்போர்ட் வாசலில் யாதவ்வின் கார் நின்றதும், அவனுடைய இரு பாதுகாவலர்கள் அவனை சூழ்ந்துக்கொள்ள, சுற்றியிருந்த அவனின் விசிறிகளோ கத்தி ஆரவாரம் செய்தனர்.

 

அவனும் பாதுகாப்பிற்கு மத்தியில் வேக நடையிட்டு உள்ளே செல்ல, திடீரென்று என்ன நினைத்தானோ!

 

அப்படியே நின்று மனம் சொன்ன திசைக்கு திரும்பிப் பார்த்தான்.

 

ஆனால், அவனுக்கு நெருக்கமான ஒன்றைக் காணாது ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டவன், எதேர்ச்சையாகத் திரும்ப அங்கு இவனுடைய விசிறிகள் கூட்டத்திற்கு நடுவே விழிகளில் ஏக்கத்தோடு நின்றிருந்தாள் நிஹாரிகா.

 

“நீஹா…” அவனுடைய இதழ்கள் மெல்ல முணுமுணுத்தன.

 

அவள் விழிகள் கலங்கி கண்ணீர் கன்னத்தின் வழியே ஓட, அதற்குமேல் அங்கு நிற்காமல் கூட்டத்தை விலக்கிக்கொண்டு சென்றவளைப் பார்த்தவனுக்கு நிலைக்கொள்ளவே முடியவில்லை.

 

தன்னை சுற்றியிருக்கும் மக்கள் கூட்டம் காவலாளிகள் யாரையும் கண்டுகொள்ளாமல் அனைவரையும் விலக்கிக்கொண்டு அவளைத் தேடி ஓடினான் யாதவ்.

 

“நீஹா… நீஹா…” என்ற அவனின் குரலில் சட்டென்று நின்றவள், தன்னவன் தன்னை நோக்கி ஓடி வருவதைப் பார்த்து உடனே சுற்றிமுற்றி பார்த்தாள்.

 

ஏர்போர்டிலிருந்த அத்தனை பேரின் பார்வையும் அவர்கள் மீதே இருக்க, அதைப் பார்த்து விதிர்த்துப்போய் நின்றிருந்தவளின் எதிரே வந்து இடுப்பில் கைக்குற்றி மூச்சு வாங்கியபடி நின்றான் யாதவ்.

 

“என்ன பண்ற நீ, எல்லாரும் பார்க்குறாங்க..” அவன் பதறினானோ இல்லையோ, நிஹாரிகா பதற்றமானாள்.

 

“லீவ் தட்! மொதல்ல நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு.. அதான் நான் வேணாம் என் லவ்வே வேணாம்னு சொன்னல்ல, இப்போ எதுக்கு இங்க வந்த?” என்று யாதவ் கூரிய பார்வையோடுக் கேட்க, அவளிடம் பதில் இருந்தால்தானே!

 

“அது.. அது வந்து.. ஏர்போர்ட் என்ன உங்க வீட்டு சொத்தா, யார் வேணா வரலாம்” என்று அப்பட்டமாக நிஹாரிகா சமாளிக்க, முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு தன்னவளைப் பார்த்தான் ஆடவன்.

 

நிஹாரிகாவிற்கு அவன் பார்வையை எதிர்கொள்ளவே முடியவில்லை.

 

தன்னை சுற்றியிருந்தவர்களை ஒரு பார்வைப் பார்த்தான் யாதவ்.

 

“நான் பண்ண தப்புக்கு சாரி கேட்டுட்டேன், இதுக்குமேல என்ன பண்றதுன்னு தெரியல நீஹா…” என்றுக்கொண்டே அவள் முன்னே ஒற்றைக்காலை மடக்கி முட்டி போட்டு அமர்ந்தவன், “உன்ன ரொம்ப படுத்திட்டேன், எல்லாத்தையும் மறந்துட்டு புதுசா ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டான் காதலோடு.

 

அவனின் அதிரடியான செயலை எதிர்பார்க்காதவளாய் ஸ்தம்பித்துப் போய்விட்டாள் அவள்

 

“சாரி அர்ஜூ…” அழுத வண்ணமாய் அவன் முன்னே அமர்ந்து நிஹாரிகா யாதவ்வை இறுக அணைத்துக்கொள்ள, ‘ஊஃப்ப்…’ என்று பெருமூச்சுவிட்டவாறு அவளை தன்னோடு இறுக்கிக்கொண்டவனுக்கு சந்தோஷத்தில் விழிகள் கலங்கின.

 

“லவ் யூ அர்ஜூ! இதுக்கப்பறம் என்னை விட்டு போக மாட்டல்ல” என்று அவனின் இரு கன்னங்களைத் தாங்கிக் கேட்டவள், அவன் விழிகளில் விழிநீரும் இதழில் புன்னகையுமாக இல்லையென்று தலையாட்டி அவள் நெற்றியில் முத்தமிட்டதும் அவன் சட்டையைப் பிடித்திழுத்து அவனிதழில் இதழைப் பதித்தாள்.

 

சுற்றியிருந்தவர்களோ அலைப்பேசியில் புகைப்படம் காணொளி என எடுக்க ஆரம்பிக்க, எதையும் கண்டுகொள்ளவில்லை அந்த காதல் ஜோடிகள்.

 

பல வருடங்கள் கழித்து காதலோடு கொடுத்துக்கொள்ளும் இதழ் முத்தம் அது..

 

யாதவ் கூட அவளின் திடீர் முத்தத்தை எதிர்பார்க்காமல் ஆனந்த அதிர்ச்சியடைய, சட்டென ஏதோ ஞாபகம் வந்தவளாய் அவனை விட்டு விலகியவள் அவனை முறைத்துப் பார்த்தாள்.

 

ஆடவனோ ‘இப்போ என்னடீ?’ என்ற ரீதியில் புரியாது விழிக்க, “அந்த மேக்னா கூட நீ…” என்று ஆரம்பித்து வார்த்தைகளை நிறுத்தியவள், “அதை கூட போனா போகுதுன்னு விடலாம், அவ கூட இருந்துக்கிட்டு எதுக்கு என் பேர சொன்ன அர்ஜூ?” என்று கேட்டாள் கோபமாக.

 

அந்த கேள்வியை எதிர்பார்க்காது அதிர்ந்தவன் எச்சிலை விழுங்கிக்கொண்டு பெக்கபெக்கவென விழித்தான்.

 

“அது.. அது வந்து..” என என்ன சொல்லி சமாளிப்பதென்று தெரியாமல் தடுமாறியவன் அவளிடமிருந்து விலகி ஓடப் போக, போலி கோபத்தோடு அவன் காதைத் திருகினாள் நிஹாரிகா.

 

“இதுக்கப்பறம் எந்த பொண்ணு பக்கமாச்சும் உன் பார்வை போச்சு கொன்னுடுவேன்டா உன்ன…” செல்லமாக திட்டி நான்கைந்து அடிகளை மார்பில் அடித்தவள் அவன் சட்டையைப் பிடித் திழுத்து அவன் மார்பிலேயே சாய்ந்துக்கொள்ள, அவளுடைய அடிகளை விரும்பியே ஏற்று அவளுடைய அணைப்புக்குள் அடங்கிப் போனான் யாதவ் அர்ஜூனா.

 

 

****சுபம்****

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!