Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வெண்ணிலவை விழியில் பிடித்தாய்

வெண்ணிலவை விழியில் பிடித்தாய் – 11

“புண் பட்ட சேதியைக் கேட்டவுடன், இந்த பெண் பட்டப்பாட்டை யாரறிவார்?”

டிவியில் தில்லானா மோகனாம்பாள் படப் பாடல் – நலந்தானா பாடல் ஓடிக் கொண்டிருந்தது!

ஹாலில் அமர்ந்து கொண்டு ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் கனகுவும் ஜகதுவும்!



Advertisement

உடன் ஜான்வியும் அருகே அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தாள்.

உள்ளே இருந்து வந்தான் பரத்.

நேற்றே டிஸ்சார்ஜ் ஆகியிருந்தான். ஆனால் கையில் இன்னும் கட்டு பிரிக்கப்படவில்லை.

Advertisement

பாட்டிகள் அருகே வந்தவன், அவன் இடக்கையால் வேகமாக ரிமோட்டை எடுத்து, சானலை மாற்றினான்.

Advertisement

“போ கிழவிங்களா, இன்னும் பழையப் பாட்டையே பார்த்துட்டு,” என்றபடி!

“டேய், பழையப் பாட்டா இருந்தாலும் ரொம்ப சரியான சிச்சுவேசன் சாங் டா இது” என்றார் அருகில் இருந்த ஜான்வியை அர்த்தமாக பார்த்துக் கொண்டு!

இப்போது டிவியில் வேறு பாடல், இதுவும் கொஞ்சம் பழைய பாடல் தான்!

Advertisement

“ஆரிய உதடுகள் உன்னுது, திராவிட உதடுகள் என்னது, ஆரியம், திராவிடம் இரண்டும் கலக்கட்டுமே!” விஷால் பாடல்!

“இது மட்டும் என்ன புதுசா?” என்றாள் இவர்களுடன் டிவி பார்த்துக் கொண்டிருந்த பாரதி!

அப்போது சரியாக அங்கு வந்த பரணி, “ஆமா இல்ல, இதுவும் பழைய பாட்டு தான், ஆனா இதுவும் ரொம்ப ஆப்டான சிச்சுவேஷன் சாங் தான்!” என்றான் ஜான்வியின் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படி!

ஆனால் பரத்தின் காதுகளையும் அது எட்டி விட்டது.

ஜான்விக்கு குடித்துக் கொண்டிருந்த காபி புரைக்கேறியது!

ஜகது அவள் தலையைத் தட்டி, “மெல்லம்மா, ஏன் அவசரம், இன்னிக்கு உனக்கு லீவு தானே, நீ இங்கேயே தான் இருக்கணும், காபி குடிச்சுட்டு ஓடுற வேலையெல்லாம் ஆகாது!” என்றார் மேலும்!

ஜான்விக்கோ பரணியின் கமெண்டால் முகம் வெட்கத்தால் சூடாகி சிவந்து போய் விட்டது! அவள் மெல்ல தலையை குனிந்து கொண்டாள்.

பரணியோ அவளை மேலும் அவஸ்தைக்குள்ளாக்கவென்றே வேண்டுமென்றே அவள் அருகில் இருந்த சிங்கிள் சீட்டர் சோபாவில் உட்கார்ந்து கொண்டான்.

வேற வேற சோபா என்றாலும் அவளுக்கு மிக அருகில் இருந்தது அவன் உட்கார்ந்திருந்த சோபா!

பரத்தோ , கனகு, பரணி, ஜான்வி இவர்களுக்குள் ஏதோ ஒன்று ஓடிக் கொண்டிருப்பதை ஊகித்து விட்டான்.

இதற்குள் பாரதிக்கு போன் வந்து அவள் வெளியே எழுந்து போய் விட்டாள்.

“ஆத்தா.. ஆத்தா” என்ற மணியின் வெளியே இருந்து கேட்க, யார் என்று பார்க்க ஜகதுவும் வாசலுக்குப் போய் விட்டார்.

பரத், தன் ஒரு கையால், கனகுவை புறவாசல் திண்ணைக்கு வெளியே தள்ளிக் கொண்டு போனான்.

இப்போது ஹாலில் பரணியும் ஜான்வியும் மட்டுமே!

ஜான்வி மெல்ல நழுவப் பார்க்க, அவள் கைகளைப் பிடித்து நிறுத்தினான் அவன்.

“இருங்க டாக்டர், உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்!”

“என்ன..? என்ன பேசணும், எதுவா இருந்தாலும் அம்மாச்சி வரட்டும்” என்றாள் கொஞ்சம் பதட்டத்துடன்!

எல்லோரும் இருக்கும் போதே வம்பிழுத்தான், நல்ல வேளையாக யாருக்கும் புரியவில்லை, இப்போது இவன் கிட்ட தனியா மாட்டினால்! அய்யோ ஜான்வி எஸ்கேப்! என்று மனம் சொல்லிக் கொண்டிருந்தது.

“ஏன் உங்க திருவாய் மலர்ந்து எங்ககிட்ட எல்லாம் பேச மாட்டீங்களோ!

பேச மாட்டீங்க, ஆனா மத்த வேலையெல்லாம் இதே வாயை வச்சு செய்வீங்க இல்ல?” அவன் குறும்புடன் சிரித்தபடி கேட்க,

“அய்யோ, அத விடுங்களேன், ஏதோ அன்னிக்கு உங்களுக்கு அடிப்பட்டுடுச்சு தப்பா நினைச்சுட்டு, ஒரு மாதிரி டென்ஷன்ல.. அய்யோ இந்த டாபிக்கை விடுங்களேன்”! அவள் வெட்கத்துடன் கெஞ்சிக் கொண்டிருக்க, வாசலில் யாரோ வரும் அரவம் கேட்கவும் அவன் அவள் கைகளை விட்டான்.

உள்ளே நுழைந்து கொண்டிருந்தார் பரணி ஹாஸ்பிட்டலின் சீப் டாக்டர்! கூடவே விக்கி, ஜகது பின்னால் மணியும்!

“ஹாய் பரணி, ஹாய் ஜான்வி! நீங்களும் இங்க தான் இருக்கீங்களா, ரொம்ப நல்லதா போச்சு, வாங்க தினகரன் சாருக்கு ரிவியூ பார்க்கணும்!”

என்றார் அவர்.

எல்லோரும் தினகரன் அறைக்கு சென்றார்கள். அங்கு ஏற்கனவே இருந்த பாஸ்கர் இவர்கள் எல்லோரும் வருவதைப் பார்த்து விட்டு, தினகரனை எழுப்பினார்.

தினகரனை செக் செய்த டாக்டர், ஜான்வியிடமும், விக்கியிடமும் மருத்துவம் சம்பந்தமான சில கேள்விகள் கேட்டு விட்டு, அவர்களுக்கு மேலும் சில மருத்துவ குறிப்புகள் கொடுத்தார்.

இப்போது தினகரனிடம் நல்ல முன்னேற்றம்! கொஞ்சம் முயற்சித்தால் வாக்கர் உதவியுடன் குறைந்த பட்சம் வீட்டுக்குள் நடமாடவாவது முடியும்!

பேச்சும் கூட  பழைய மாதிரியே இல்லாவிட்டாலும் ஊன்றி கவனித்தால் புரிந்து கொள்ளும் அளவுக்கு வந்து விட்டது!

இதெற்கெல்லாம் காரணம், ஜான்வியின் பர்சனல் கேர், விக்கியின் தனித்துவமான பொறுமையுடன் கூடிய  பிசியோதெரபி, வலி பொறுத்துக் கொண்டு தினகரன் பிசியோவிற்கு கொடுத்த ஒத்துழைப்பு, பாஸ்கரின் சலித்துக் கொள்ளாத சேவைகள்!

எல்லாம் சேர்ந்து அவரை நன்றாகவே குணப்படுத்தி விட்டது.

சீப் டாக்டர், ஜான்வியையும் விக்கியையும் ரொம்பவே பாராட்டினார்!

அதைக் கேட்ட வீட்டினர் எல்லோருக்கும் சந்தோசம்!

ஜகதுவுக்கு முகம் கொள்ளா பெருமை!

“பார்த்தீங்களா, இதுக்கு தான் என் பேத்தி வேணும்கிறது” என்பது போல மருமகள்களையும் மகன்களையும் பார்த்தார்!

“அவர்களோ நீங்கள் சொன்னா சரி தான்” என்பது போலவே பார்த்துக் கொண்டிருந்தனர்!

டாக்டரும் விக்கியும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு விடைப் பெற்று சென்று விட, ஜகது “பார்த்தீங்களாடா, என் பேத்தியோட கைராசியை! இத்தனை வருஷமா எத்தனை டாக்டருங்க வந்து பார்த்துருப்பாங்க உன்னை! இப்ப என் பேத்தி வந்து தான் உனக்கு குணமாகி இருக்கு பாரு” என்று பீற்றிக் கொண்டார்!

அனைவரும் சிரித்து கொண்டே அங்கிருந்து கிளம்பினார்கள். பரணியும் தான்!

ஜகது பேத்தியின் கைராசியைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் போது, நைசாக பரணி, தன் கைகளோடு, அருகில் நின்றுக் கொண்டிருந்த ஜான்வியின் கைகளைப் பிணைத்துக் கொண்டான்!

அதில், அவனின் காதலையும் மகிழ்ச்சியையும் நன்றாகவே உணர முடிந்தது ஜான்வியால்!

இதை யாரும் கவனிக்க வில்லை! தினகரனைத் தவிர!

அவருக்குள் கொஞ்சம் ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி!

இந்த பெண், பரணிக்கு ரொம்ப பொருத்தமானவள் தான்! இல்லைன்னா, நம்ம அம்மா இவ்வளவு தூரம் தூக்கி வச்சு பேசாது!

சந்தோசத்துடனே கண்களை மூடிக் கொண்டார் அவர்.

எல்லோரும் கிளம்பியிருக்க,

ஜான்வி மட்டும் சீப் டாக்டர் கொடுத்து விட்டுப் போயிருந்த பிரிஸ்கிரிப்சனை பார்த்து விட்டு, பாஸ்கரிடம் விவரம் சொல்லிக் கொண்டு கடைசியாக கிளம்பினாள்.

பரணியின் அறையை கடக்கும் போது, அவள் கைகளைப் பிடித்து அவளை உள்ளே இழுத்துக் கொண்டான் பரணி!

ஜான்வி அதிர்ந்து போய், “சார்! என்ன இது?” என்று கேட்க,

“இல்ல, இந்த கை ராசி டாக்டருக்கு ஏதாச்சும் கிப்ட் கொடுக்கணும்னு தோணுச்சு அதான்!”

  “அதெல்லாம் ஒண்ணும் தேவையில்ல, நான் கிளம்புறேன்!” அவள் கிளம்ப முயற்சிக்க, அவளை விட வில்லை அவன்!

“என்ன டாக்டர் இதெல்லாம்? எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சே ஆகணும்! ஆமா, ஏன் இப்படியெல்லாம் பண்றீங்க?”

“என்ன பண்ணினேன்?” அவள் தெரியாத மாதிரி கேட்க,

“ம்ம். நீங்க  பண்ணினதை நான் பண்ணி காட்டி சொல்லட்டுமா”, அவன் நெருங்க,

“அய்யோ வேணாம், அது.. வந்து.. வந்து.. அதான் அப்பவே சொன்னேனே..  அன்னிக்கு ஒரு பதட்டத்தில் அந்த மாதிரி ..”  அவள் பேச முடியாமல் திணற,

“இல்ல.. எனக்குப் புரியல! அன்னிக்கு ஒரு நாள் என்னன்னா, திடீர்னு எங்கிருந்தோ ஓடி வந்து என்னை ஹக் பண்ணினீங்க,

அப்புறம் நேத்து திரும்பவும் ஹக் பண்ணி, என்னை பேச முடியாத அளவுக்கு கிஸ் பண்றீங்க,

இன்னிக்கு என்னென்னா, என் கையை அப்படியே இறுக்கி பிடிச்சுட்டு நிக்கிறீங்க! அதுவும் எல்லோரும் இருக்கும் போதே!” அவன் சொல்லிக் கொண்டே போனான்!

“அய்யோ பொய்! இன்னிக்கு நீங்க தான் என் கையைப் பிடிச்சுக்கிட்டீங்க, நான் இல்லை!”

“ம்ம். சரி அத விடுங்க, ஏதோ ஒரு ப்ளோவில் சொல்லிட்டேன், ஆனா மத்தது எல்லாம் உண்மைதானே?”

“அன்னிக்கு பாம்பை அவ்வளவு கிட்ட பார்த்த பயம்,  அதான் உங்கள் ஒரு பயத்தில தான் ஹக் பண்ணிட்டேன்!

அப்புறம் நேத்து, உங்களுக்கு ஆக்சிடென்ட்ஆகிடுச்சுன்னு நினைச்சு ரொம்ப பயந்து போய் இருந்தேன்.

உங்களை நல்ல படியா பார்த்தவுடனே அந்த டென்சனும் சந்தோசமும் ஒண்ணா ஒரு மாதிரி என்னை எமொசனலாக்கிடுச்சு!

ப்ளீஸ் அதை விடுங்களேன்! ஏன் திரும்ப திரும்ப அதையே இழுக்கறீங்க?”

“ஓ! உங்களுக்கு பயமா இருந்தா, டென்சன் ஆனா இப்படி தான் செய்வீங்களா?”

“அய்யோ, அப்படியெல்லாம் இல்ல, அது என்னமோ நான் உங்ககிட்ட ஏன் அப்படி நடந்துட்டேன்னு எனக்கே தெரியல! ப்ளீஸ் விடுங்களேன் அதை!”

“அது எப்படி விட முடியும்? எனக்கு அதுக்கப்புறம் எப்படி இருந்திருக்கும்னு கொஞ்சமாச்சும் நினைச்சு பார்த்தியா?”

“சாரி.  ப்ளீஸ் கையை விடுங்க நான் போகணும்!”

“என்ன நீ சந்தைக்குப் போகணும் ஆத்தா வையும்ன்ற மாதிரி இதையே சொல்லிட்டு இருக்க? எனக்கு பதில் சொல்லிட்டு போ!”

“அதான் எனக்கே தெரியலன்னு சொன்னேனே!” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான் பரணி!

“எனக்கும் இப்ப ரொம்ப பயமா இருக்கு, இந்த கருப்பனை, இந்த சிவப்பிக்கு பிடிக்குமோ, பிடிக்காதோன்னு. ரொம்ப பயமா இருக்கு, ப்ளீஸ் உன்னைக் கொஞ்சம் கட்டிக்கிறேனே” என்றபடி!

“ஏய்.. இதெல்லாம் நல்லா இல்ல ஆமா!” வெட்கத்துடன் சொன்னாளே தவிர அவளும் விலக்க வில்லை அவனை!

“ம்ம். அய்யோ என்னை இந்த டாக்டருக்கு ரொம்ப பிடிச்சுட்டது, அய்யோ எனக்கும் ரொம்ப பதட்டமா இருக்கே! என்னை இந்த டாக்டருக்கும் பிடிக்கும்னு நான் நினைக்கவே இல்லையே, இப்ப நானும் ரொம்ப இமொசனலாகிட்டேனே, என்ன பண்ணுவேன்..” என்றபடி, நேற்று அவள் செய்ததை, இன்று இவனும் செய்தான்!

Emotional Reciprocity!

“அடப்பாவி!” என்றாள் ஜான்வி அவன் அவளை விட்டவுடன்!

“என்ன அடப்பாவி! உனக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா?.. முறைக்காத, சரி..சரி, ஒண்ணு பண்ணலாம், நமக்குள்ள ஒரு மியூகசுவல் அக்ரிமென்ட்!

எப்பெல்லாம் நான் டென்சன் ஆறேனோ அப்பெல்லாம், நானும் உன்கிட்ட நீ நடந்துட்ட மாதிரி நடந்துப்பேன்! நீயும் வேணுமின்னா அப்படியே நடந்துக்கோ! டீல் ஓகேயா?”

ஜான்வி திகைத்தாள்!

“அட என்ன இவன் இப்படி மாறிவிட்டான்! எல்லாம் நீ ஆரம்பிச்சு வச்சது!” உள்ளுக்குள் திட்டிக் கொண்டாள்!

“அதுக்கெல்லாம் ஒண்ணும் நெசசிட்டி வராது, நான் போறேன்”, அவள் வேகமாக அவன் கைகளில் இருந்து விடுபட்டு வெளியே ஓடி விட்டாள்.

அவள் வெட்கத்துடன் சிரித்தபடி பரணியின் அறையில் இருந்து வெளியே வருவதை தாமரைப் பார்த்து விட்டாள்!

அவளுள் சின்ன ஆச்சரியம்! கூடவே புன்னகையும்!

அப்போது ஜான்வி ஓடிவிட்டாலும், அதன் பிறகு, பரணிக்கு அடிக்கடி “பயம்” வந்தது!, அப்புறம் “டென்சனும்” அடிக்கடி வந்துக் கொண்டே இருந்தது!

அப்போதெல்லாம் டாக்டர் ஜான்வி தான் “தனிப்பட்ட ட்ரீட்மென்ட்” கொடுக்க வேண்டியும் இருந்தது என்பது தனிக்கதை!

—-

இங்கே கனகுவை புறவாசலுக்குத் தள்ளிக் கொண்டு வந்த பரத், செல்லமாக கனகுவின் குரல்வளையில் கை வைத்து, “ஏய் கிரிமினல் கிழவி! உண்மைய சொல்லு, இங்க என்ன நடக்குது! உங்க மூணு பேருக்குள்ள ஏதோ சீக்ரெட் டீல் ஓடிட்டு இருக்கு!

நானும் தான் உன் கூட்டணியில இருக்கேன்! இப்ப இப்படி எனக்கு தெரியாம ஒண்ணு நடந்தாம் அது கூட்டணி தர்மம் ஆகுமா? இப்ப சொல்லப் போறியா இல்லையா?”

“சொல்றேன்டா விடு என்னை! இந்த ஜானு ஊருக்கு போனவ, பரணிக்கு தான் அடிப்பட்டுடுச்சுன்னு நினைச்சு தான் பாதியில திரும்பி வந்திருக்கா!

எல்லாம் இந்த மணிப்பய செஞ்சது! அவன் அரைகுறையாக ஏதோ போனில் உளறி இருக்கான் போல!

ஆனா ஜானுவுக்கு அங்க நிலை கொள்ளல, பாவம் புள்ளை பதறி அடிச்சுட்டு அடுத்த ப்ளைட்ல ஊருக்கு வந்திட்டா!”

“ஓ அது தான் தில்லானா மோகனாம்பாள் பாட்டை சிச்சுவேசன் பாட்டுன்னு சொன்னியா?

அப்ப நீ தான் என்னை வேணுமின்னே வண்டியில இருந்து கீழே தள்ளி விட்டியா?”

பரத் பைக்கில் இருந்து கீழே விழுந்த போது, பின்னால் உட்கார்ந்து கொண்டிருந்தது சாட்சாத் கனகுவே தான்!

நாய் ஒன்று குறுக்கே வந்த போது, பரத்தே அதை சமாளித்து இருப்பான், கனகு தான் பதறி வண்டியை ஒரு ஆட்டு ஆட்டி விட்டு அவனை பாலன்ஸ் தப்ப வைத்து கீழே விழக் காரணமே!

ஆனால் இந்த கிழவிக்கு ஒன்றுமே ஆக வில்லை! அது தான் பக்கத்தில் இருந்த புல்லுக் கட்டு ஒன்றின்மேல் சேபா லான்ட் ஆகி விட்டதே!

அடிப்பட்டது என்னவோ பரத்திற்கு தான்! அதனால் தான் இப்படி கேட்டான் அவன்!

“டேய்.. தில்லாலங்கடி பண்ணினாலும் அதிலும் ஒரு நியாய தர்மத்தைக் கடைப் பிடிப்பா இந்த கனகு!

அவன் லவுக்கு உன்னை ஏண்டா தள்ளி விடப் போறேன்! தள்ளி விடறதா இருந்தா அவனைத் தான் தள்ளி விட்டிருப்பேன்! அதுவும் ரொம்ப அடிப் படாத மாதிரி தான்!” சிரித்தார் கனகு!

“அது சரி. அண்ணன் என்னவோ அந்த விஷால் பாட்டையும் சிச்சுவேசன் சாங்க்னு சொல்லுச்சு, அதைக் கேட்டு ஜான்வி வெக்கப்படறாங்க, அது என்ன விசயம்?”

“அது என்னமோ எனக்கு தெரியாதுடா”

“ஏய் கிழவி, அதைப் பத்தி உனக்கும் தெரியும்னு எனக்கும் தெரியும், இப்ப உண்மைய சொல்லல, நீ தான் என்னை வண்டியில இருந்து கீழே தள்ளி விட்டேன்னு எங்கம்மா கிட்டயோ. இல்ல பெரியம்மா கிட்டயோ சொன்னேன்னு வையு, அப்புறம் உனக்கு தினமும் உப்பு காபி தான் போட்டு தருவாங்க!”

“ம்ம். தருவாங்க, தருவாங்க, மாமியாருன்னு மரியாதை இல்லாம, பிச்சிபுடுவேன் பிச்சி!

இப்ப என்னடா உனக்கு அது என்னன்னு தெரியணும் அவ்வளவு தானே! தெரிஞ்சிகிட்ட அப்புறம் அவங்க கிட்ட காமிச்சுக்கக் கூடாது, சங்கடப் படுவாங்க! சரியா?”

“ம்ம். சொல்லு”

கனகு அவன் காதில் தான் பார்த்ததை சொல்லி விட்டார்!

“ஓ அவ்வளவு தூரம் போயாச்சா விசயம், கிழவி, இனிமே நாம ஜான்வி அப்பாவுக்காக எல்லாம் வெயிட் பண்ண வேணாம், சீக்கிரம் எதாச்சும் பண்ணி, அவங்கள சேர்த்து வைச்சுடனும்!”

“ஆமாண்டா பரத்” என்றார், அடுத்த பிளானை பற்றி யோசித்து கொண்டே!

அடுத்த மாதம், ஜக்தீஷ் ஜான்வி திடீரென்று கிளம்பி போய் விட்டதால் போஸ்ட்போன் செய்திருந்த அந்த AGM மீட்டிங்கை நடத்த டேட் பிக்ஸ் பண்ணி, ஜான்வியையும் அழைத்து விட்டார்.

அவளும் இந்தூர் சென்றாள்.

ஆனால் இம்முறை ஏர்போர்ட்டில் கொண்டு  போய் விட்டது பரணி தான்!

அங்கு இருந்த ஒரு வாரமும் தினமும் பரணியிடம் போனில் பேச்சு! பேச்சு! அத்தனையும் ஸ்வீட் நத்திங் பேச்சுக்கள் தாம்!

ஊர்மிளா கூட இவள் போனில் பேசுவதைக் கேள்வியுடன் பார்த்தாள்! பேசும் மொழி புரியவில்லை என்றாலும் உடல் மொழி புரியும் தானே!

அவளுக்கு ஜான்வியின் செயல்கள் சந்தேகத்தைக் கொடுத்தன!

ஆனால் காட்டிக் கொள்ள வில்லை!

இதோ, ஒரு வாரம் கழித்து அன்று ஜான்வி திரும்பி வரும் நாள்!

வீட்டின் வாசலில் பரணியின் கார் வந்து நின்றது!

பரத் எட்டிப் பார்த்தவன் அதிர்ந்தான்!

“அய்யோ ஆத்தா” என்று கத்தியபடி பாட்டிமார்களிடம் ஓடி சென்றான்!

“ஏண்டா இப்படி கத்திட்டு ஓடி வர? என்னாச்சு?” இருவரும் ஒரு சேர கேட்டார்கள்.

“அய்யோ ஆத்தா, அண்ணனோட லவ் ஸ்டோரில வில்லி என்ரி!” என்றான் பரத்!

“டேய் உளறாத, வில்லியா இருக்காது ஒரு வேளை வில்லன் வேண்டுமின்னா வரலாம், அதான் ஜானுவோட அப்பன் ஜக்தீஷ்!”

“அய்யோ இல்ல ஆத்தா, இது வில்லி தான்” என்றான் பரத்!

மூவரும் வாசலுக்கு வந்து பார்க்க, அங்கே பரணியுடன் பேசி சிரித்தபடி காரில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தாள் ஜனனி தீபிகா!

பரணியின் எக்ஸ் லவர்!

பாட்டிஸ் & கோ என்ன செய்ய போகிறார்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!