Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வெண்ணிலவை விழியில் பிடித்தாய்

வெண்ணிலவை விழியில் பிடித்தாய் – 4

ஜான்விக்கு முதல் நாள்  நைட் டுயூட்டி.

டியூட்டி முடிந்து அடுத்த நாள் வீட்டிற்கு கிளம்பிக் கொண்டு இருந்த போது, ஜகது  பாட்டியிடமிருந்து போன்.

“யம்மாடி ஜானகி, எம் பேரனுக்கு வயத்தால போகுதும்மா, ராத்திரியில் இருந்து! ஒரே வாந்தியா வேற எடுத்துட்டே இருக்கான், கொஞ்சம் என்னன்னு வந்து பாக்கிறியா?” ஜகது பேசிக் கொண்டிருக்கும் போதே,

“அய்யோ ஆத்தா, அண்ணனுக்கு தெரிஞ்சா சங்கடப்படாதா? நீ என் இத ஜான்வி டாக்டர்கிட்ட போய் சொல்லிட்டு இருக்க? போனைக் கொண்டா முதல்ல” என்று போனைப் பிடுங்கி விட்டான் பரத்!



Advertisement

“ஹலோ, ஹலோ.. யாருக்கு உடம்பு சரியில்லா அம்மாச்சி?” என்று போனில் கேட்டுக் கொண்டே இருக்க, பரத் லைனில் வந்தான்.

“ஜான்வி மேம், அண்ணாக்கு தான் முடியல. ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டா, நான் அங்க வந்தா, என்னைப் பார்க்க வரேன்னு எல்லோரும் வருவாங்க, அது எனக்கு கொஞ்சம் அன் ஈசியா இருக்கும்னு வரவே மாட்டேங்கிறார்! ஆனா அவரால சுத்தமா முடியல. ஓ.ஆர்.எஸ் கொடுத்தா கூட வாமிட் பண்றார்” என்று சொல்லி முடித்தான் பரத்.

அவனிடமிருந்து போனை வாங்கிய  ஜகது, “நீ சீக்கிரம் வா ஜானகி, வந்து அவனுக்கு என்னன்னு பாரு” என்றார்.

Advertisement

“சரி அம்மாச்சி உடனே வரேன்” என்று போனை வைத்து விட்ட ஜான்வி, நேரே சீப் டாக்டரிடம் போய் விவரம் சொன்னாள்.

Advertisement

அவர் உடனே பரணியின் மொபைல் நம்பரில் அவனை அழைத்து, பேசினார்.

“என்னாச்சு பரணி, எங்கியாவது வெளில, ஹோட்டல்ல, இல்ல ஸ்ட்ரீட் புட் மாதிரி, எதாச்சும் சாப்பிட்டீங்களா?” என்று கேட்டார்.

“ஆமாம், மதுரையில பிரண்ட்ஸ் கூப்பிட்டாங்கன்னு போய் மிட் நைட் பிரியாணி சாப்பிட்டேன்”.

Advertisement

மி”ட் நைட்ல போய் யாராச்சும் பிரியாணி அதுவும் நான் வெஜ் பிரியாணி சாப்பிடுவாங்களா? அது தான் புட் பாய்சன் ஆகிடுச்சு! படிச்ச நீங்களே இப்படி செய்யலாமா?”

“என் பிரண்ட் அடிக்கடி அப்படி தான் சாப்பிடுறான் அவனுக்கு இதுவரைக்கும் ஒண்ணுமே ஆனதில்லையே” மெல்லிய குரலில் சொன்னான் பரணி.

“அவங்க வயிறு அதுக்கு அடாப்ட் ஆகியிருக்கும், ஆனா பழக்கம் இல்லாத நீங்க போய் ஏன் அதெல்லாம் ட்ரை பண்ணினீங்க?  சரி, நான் டாக்டர் ஜான்விய அனுப்புறேன், உங்க பாட்டி கூட அவங்கள தான் அனுப்ப சொன்னாங்க, ஜான்வி வில் டேக் கேர். நீங்க இங்க கூட வர வேணாம்” என்று பேசிவிட்டு போனை வைத்து விட்டார் அவர்

ஜான்விக்கு இன்ஸ்ட்ரக்ஸன்கள் கொடுத்தவர், தேவையான மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் எடுத்துப் போக சொன்னார்

ஜான்வி அவற்றை வாங்கிக் கொண்டு, விரைந்து வீடு வந்து சேர்ந்தாள்.

அவன் அறைக்கு வந்து, அவனை செக் செய்து பார்த்து விட்டு, சீப் டாக்டரை தொடர்பு கொண்டு அவரின் அட்வைஸ் படி அவனுக்கு ட்ரீட்மெண்ட் தொடங்கினாள்

இவளை ஏன் கூட்டி வந்து என் மானத்தை வாங்குகிறார்கள்? என்று மனதிற்குள் அவன் ஜகதுவை திட்டினான் பரணி!

அவன் அம்மா தமிழரசியிடம் மற்ற விபரங்கள் கேட்டுக் கொண்டே அவனுக்கு வீட்டில் வைத்தே ட்ரிப்ஸ் போட்டு விட்டாள் ஜான்வி.

“நீங்க பார்த்துக்கங்க ஆண்ட்டி, நான் போட்டு வரேன். இது முடியிற ஸ்டேஜ்ல என்னைக் கூப்பிட்டு விடுங்க, நான் வரேன்” என்று தமிழரசியிடம்  சொல்லி விட்டு அவள் வீட்டிற்கு போய் விட்டாள் ஜான்வி.

ஒரு மணி நேரம் சென்று, சீப் டாக்டரிடம் இருந்து ஜகது பாட்டிக்கு போன் வந்தது.

“இப்ப எப்படி இருக்கார் பரணி சார்? நான் வேணுமின்னா, உதவிக்கு ஒரு சிஸ்டர் இல்லன்னா ஒரு ஜென்ஸ் ஸ்டாப் அனுப்பி வைக்கட்டுமா?”

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம் டாக்டர், ஜானகியே போதும். அவ தானே என் மகனையும் இங்க வந்த நாளிலிருந்து கவனிச்சுகிட்டு இருக்கா, அவளே போதும் பரணிக்கும்”

என்று வேறு எவரும் வர வேண்டாம் என்றே சொல்லி விட்டார் ஜகது!

பரணிக்கு இப்படி உடம்பு சரியில்லாம போனது அவருக்கு வருத்தம் தான் என்றாலும், இதையே, ஜான்வி பரணிக்கு ஒரு நெருக்கம் ஏற்படுத்தவும் பயன்படுத்திக் கொண்டார்!

இந்த ஐடியா கொடுத்தது வேறே யார்?

தி கிரேட் கனகுப் பாட்டி தான்!

ஏற்கனவே ஜான்வியை, டாக்டர்ஸ் தங்கிக் கொள்ளவென்று பரணி புதிதாய் கட்டிக் கொடுத்திருக்கும் குவாட்டர்ஸ்க்கு கூட அனுப்பாமல், தங்கள் அருகிலேயே இன்னமும் வைத்துக்கொண்டு தானே இருக்கிறார்!

பரணியின் அப்பா ஸ்ட்ரோக் வந்து படுத்து இருப்பதால், வீட்டில் அருகில் ஒரு டாக்டரின் கண்காணிப்பு அவசியம் என்று சொல்லி எல்லோர் வாயையும் அடைத்து விட்டார்.

ஆனால், அதற்கு தேவை ஏற்பட்டதும் உண்மைதான்!

படுத்தே இருப்பதால், பரணியின் அப்பா, தினகரனுக்கு சரியாக பசி எடுக்காது. அவர் சரியாக சாப்பிடாவிட்டால், சுகர் லோ ஆகி விடும்.!

ஆனால் அவருக்கு டயாபட்டிஸ் இருப்பதால், அவருக்கு தினமும் சுகர் டாப்லட் கொடுப்பார்கள்!

ஏற்கனவே சரியாக சாப்பிடாத காரணத்தால் சுகர் இறங்கி இருக்க, இவர்கள் வேறு அவருக்கு மாத்திரைகளோடு சுகர் டாப்லட்டும் சேர்த்து கொடுத்து விடுவார்கள்.

சுகர் லெவல் மேலும் இறங்கி, அது அவரை மயக்க நிலைக்கே கொண்டு போய் விடும்.

அவரை செக் பண்ணிய டாக்டர், அடிக்கடி சுகர் டெஸ்ட் பண்ணிட்டு பிறகு, தேவைப் பட்டால் மட்டும் சுகர் டாப்லட் கொடுக்க சொல்லி விட்டார்.

அப்படி ஒரு முறை அவர் மயங்கிய போது, ஜான்வி தான், அவருக்கு பர்ஸ்ட்  எய்ட் செய்து, காப்பாற்றினாள்.

அவ்வபோது, வீட்டிலேயே அவருக்கு சுகர் டெஸ்ட், பிபி எல்லாம் பார்ப்பாள்.

அவள் நண்பர் வட்டாரத்தில்  சொல்லி, நல்ல ஒரு பிசியோதெரபிஸ்டை கொண்டு, பழைய ஆளை மாற்றி விட்டு அவருக்கு மிகவும் நன்றாக பிசியோதெரபி கொடுக்க செய்தாள் ஜான்வி!

இப்போது அவரிடம் கடந்த வருடங்களில் இல்லாத முன்னேற்றம், ஜான்வியின் வருகைக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டிருக்கிறது!

இதையெல்லாம் எடுத்து சொல்லி, வீட்டினர் வாயை, மற்றும் சீப் டாக்டர் உள்ளிட்ட ஹாஸ்பிட்டல் ஆட்களையும் அடைத்து விட்டனர் ஜகதுவும் கனகுவும்!

பரணியின் அருகே, அமர்ந்து கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தார் தமிழரசி.

அவரின் ஒரு கையை எடுத்து, தன் வலது கையோடு சேர்த்து, தன் கன்னத்தின் அடியில் வைத்துக் கொண்டு சிறு பிள்ளையை போல் தூங்கிக் கொண்டிருந்தான் பரணி!

அவனின் இன்னொரு கையில் ஏற்றப் பட்டிருந்த குளுக்கோஸ் முடியும் தருவாயில் இருக்கவே, அவர் கொஞ்சம் லேசாக  குரலை  உயர்த்தி, “வத்சலா.. போய் ஜான்வியைக் கூப்பிடு, இங்க இது முடியப் போகுது பார்”. என்றார்.

சித்தி வத்சலா போய் ஜான்வியை அழைத்துக்கொண்டு வந்தார்.

வத்சலாவை குட்டி பாப்பா மகிழினி அழைக்க, அவர் அங்கிருந்து  நகர்ந்து விட்டார்.

“பெரியம்மா , உங்களை பெரியப்பா உடனே வர சொல்றார்” என்றபடி உள்ளே வந்தான் ஆதவன்.

“பவிக்கா எங்கடா, பாஸ் பெரியப்பா கூட இல்லையா அங்க?”

“பவிக்கா குளிக்க போய்ட்டாங்க, பாஸ் பெரியப்பா வெளியில யார்கிட்டயோ பேசிட்டு இருக்காங்க” என்று சொல்லி விட்டு அவனும் ஓடி விட்டான்.

“ஜான்வி, கொஞ்சம் இங்க இரும்மா, நான் இதோ வந்திடறேன்” என்று பரணி அருகில் ஜான்வியை பார்த்துக்க சொல்லி விட்டு அவரும் கணவனைக் கவனிக்க சென்று விட்டார்.

சென்றவர், திரும்பி வந்த பார்த்தது!

அவர் கை என்று நினைத்து ஜான்வியின் கையைப் பிடித்து தன் கன்னத்தில் வைத்து தூங்கிக்கொண்டிருந்த பரணியையும், சங்கடமாக நின்று கொண்டிருந்த ஜான்வியையும்!

கொஞ்சம் திகைத்தவர், சமாளித்துக் கொண்டு, “தம்பி, கொஞ்சம் டாக்டர் கையை விடுப்பா, அம்மா கையின்னு நினைச்சு பிடிச்சுட்டு இருக்க பாரு!” என்று அவனை மெல்ல எழுப்பினார்.

கொஞ்சம் திடுக்கிட்டு கண் விழித்தவன், சாரி என்று சொல்லி அவள் கையை விடுவித்தான்.

வயிற்றுப் போக்கு வாந்தியோடு, அவனுக்கு காய்ச்சலும் இருந்தது. காய்ச்சல் மயக்கத்தில் இப்படி செய்து விட்டான்.

தமிழரசிக்கும் சங்கடந்தான்! கூடவே கேள்வியும்!

காய்ச்சல் மயக்கம் என்றாலும் கூட அவனுக்கு என்னோட கையும் ஜான்வி பொண்ணோட கையும் ஒண்ணு போல தோணுதா அவனுக்கு! அவன் இப்படி வத்சலா கைய கூட பிடிச்சுட்டது இல்லையே!

ஒரு வேளை அவனுக்கு இந்த பொண்ணை பிடிச்சுப் போய் இருக்கோ? அதனால தானோ!

அப்படி அவனுக்கு பிடிச்சிருந்தா, எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லை!

இந்த பொண்ணுக்கு என்ன குறைச்சல்! டாக்டருக்கு படிச்சிருக்கோம்னு என்னிக்காவது கொஞ்சமாச்சும் திமிர காட்டி இருக்கா? எல்லோர்கிட்டயும் நல்ல படியா நடந்துட்டு தானே இருக்கு!

குறிப்பா வயசுக்கு மரியாதை கொடுக்குது!

ஆனா அத்தை இதுக்கு ஒத்துக்குவாங்களா?

“அதெல்லாம் ஒத்துக்குவாங்க” என்றார் வத்சலா!

தமிழரசி தனக்கு ஏற்பட்ட கேள்விகளை வத்சலாவிடம் புலம்பி இருக்க அவரிடமிருந்து தான் இந்த பதில்!

“எப்படிடி அவ்வளவு உறுதியா சொல்ற?”

“ஏன்க்கா நம்ம மாமியார் நம்ம அனிதாவ கூட பரணிகிட்ட பேச விடாது! ஆனா இந்த பொண்ணை பேச விடுது. குவாட்டர்ஸ்க்கு அனுப்பாம நொண்டி சாக்கு சொல்லிட்டு இங்கயே தங்க வச்சுருக்கு! வீட்டுக்கு சாப்பிட கூப்பிடுது! கொலு பார்க்க எல்லோர் வீட்டுக்கும் பவி, பாரதி கூட இந்த பொண்ணையும் தான் கூட்டிட்டு போவுது!

இந்த கனகு ஆத்தா வேற துணை இதுக்கு!

 எனக்கென்னமோ அத்தை ஏதோ மனசுல வச்சுட்டு தான் இந்த பொண்ணை இங்க தங்க வச்சிட்டு இருக்கு, வார்த்தைக்கு வார்த்தை பேத்தி பேத்தின்னு கூப்பிடுது வேற! நாம் கொஞ்ச நாள் பொறுத்துப் பார்ப்போம் அக்கா, இல்லன்னா நாமளே துணிஞ்சு பரணிக்கு இந்த பொண்ண கேட்டு விடுவோம்!” என்றார் வத்சலா!

இரண்டு நாட்களில் பரணி கொஞ்சம் நார்மலாகி விட்டான். ஆனாலும் வண்டியை எடுக்க விட வில்லை வீட்டினர்! எனவே காரை மணி ஓட்ட இவன் காரில் ஆபிஸ் மற்ற இடங்களுக்கு சென்று வந்தான்.

அப்படி போய் விட்டு திரும்பி வரும் வழியில், ரோட்டை விட்டு சற்றே இறங்கி இருந்த அந்த பாதையில் நின்று கொண்டிருந்தது ஜான்வியின் ஸ்கூட்டி!

“அண்ணே அங்க பாருங்க, நம்ம டாக்டரோட ஸ்கூட்டி அந்த பேய் பண்ணை வீட்டுக்கு போற வழியில நிக்குது!” மணி தான் முதலில் பார்த்து விட்டு பரணியிடம் காட்டினான்!

ஆமாம், அது ஜான்வியோட ஸ்கூட்டி தான்!

இங்க நிறுத்தி விட்டு என்ன பண்றா அங்க?

அந்த பாழடைந்த பழைய பண்ணை வீட்டில் இப்போது யாருமே இல்லை இப்போது!

 ஒரு காலத்தில் இவர்கள் பண்ணை வீட்டைப் போல செழிப்பமாக ஆள் அம்பு படைகளுடன் இருந்த வீடு தான் அதுவும்!

இப்போதும் அவர்கள் நொடித்து எல்லாம் போய் விட வில்லை!

அந்த வீட்டின் பெண் ரொம்ப வருஷம் முன்னாடி வேற ஜாதி பையனை லவ் மேரேஜ் செய்து கொண்டதால், அந்த வீட்டை சேர்ந்தவர்கள் அவமானம் தாங்காது ஊரை விட்டே சென்று விட்டார்கள்.

அத்தனை ஏக்கர் நிலங்களையும் தோப்பு எல்லாவற்றையும் விற்று விட்டு!

அந்த வீட்டை மட்டும் இன்னமும் விற்க வில்லை! கொஞ்ச நாள் ஆள் போட்டு பராமரித்தவர்கள் பின் விட்டு விட, இப்போது அது இப்படி பேய் பங்களா மாதிரி இருக்கிறது.

சுற்றிலும் நிறைய புதர்கள் மண்டி, பூச்சிகளும் பாம்புகளுமாக, கூடவே பேய் வதந்திகளும்  இருக்கும் அந்த வீட்டின் அருகே உள்ளூர் ஆட்களே போக பயப்படும் போது, இவள் எதற்கு அங்கே போய் நின்று கொண்டு இருக்கிறாள் பரணிக்கு ரொம்பவே ஆச்சர்யம்!

அவன் காரை விட்டு இறங்கி அந்த இறக்கத்தில் ரெண்டு எட்டு வைக்கும் முன், வேகமாக அவன் அருகே ஓடி வந்து விட்ட ஜான்வி அப்படியே அவனை கட்டிக் கொண்டாள் பயத்தில்

அவளுக்கு சர்வாங்கமும் அளவுக்கு மிஞ்சிய பயத்தில் நடுங்கிக் கொண்டு இருக்கவே, பரணியும் அவளை விலக்காது, ஆதரவாக அணைத்துக் கொண்டான்.

இவனுக்கு பின்னால் இறங்கிய மணி, இவர்களை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டே அந்த சரிவில் இறங்கி எட்டிப் பார்த்தவன் கொஞ்சம் அதிர்ந்தான்!

அங்கே இரண்டு பெரிய பாம்புகள் உடலைப் பின்னிக்கொண்டு நெளிந்து கொண்டிருந்தன!

கிராமத்தில் பிறந்து வளர்ந்த மணிக்கே அதைப் பார்த்தவுடன் கொஞ்சம் பயமாக தான் இருந்தது என்றால், பாம்பை இது வரை சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கும் ஜான்வியின் நிலை!

அவள் இன்னமும் பரணியின் அணைப்பில் தான் இருந்தாள்!

மணி மெதுவாக போய் அவளின் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு, போய் விட்டான் ஊருக்குள்!

மணிக்கு ஒரு விஷயம் தெரிந்து விட்டால், அது ஊருக்கே தெரிந்த மாதிரி தான்! அவனால் வாயை மூடிக் கொண்டு இருக்கவே முடியாது! சரியான ஓட்டை வாயன்!

கனகு தான் அவனை கொஞ்சம் அடக்கி வைத்திருந்தார்!

இப்போதும் அவன் பார்த்த காட்சியை கனகு ஆத்தாவிடம் சொல்ல தான் நேரே போய்க் கொண்டிருக்கிறான்!

அப்ப கனகு ஆத்தாவின் அடுத்த ஆபரேசன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!