Skip to content
Post Views: 5,263
தன்னை யாரோ எழுப்புவது அறிந்து, கண்களை திறந்தான் ரகு.
வேறு யார்? அவனின் மது தான்! குளித்து முடித்து தலையில் ஈரத்துண்டுடன் அவனை எழுப்பிக்கொண்டு இருந்தாள்.
“டாக்டர், எழுந்திருங்க, எழுந்து போய், சீக்கிரம் போய் பிரஷ் பண்ணிட்டு வாங்க, காபி ஆறுது!”
ரகு அவளைப் பார்த்தான். முகம் முழுக்க மஞ்சள் தேய்த்து குளித்து, நெற்றி வகிட்டில் குங்குமமும், நெற்றியில் சின்ன கோபி பொட்டு, விபூதி!
Advertisement
இன்றும் வீட்டிற்கு அணியும் சிம்பிளான நேவி ப்ளூ கலர் சிந்தெடிக் சாரியில் மது! அவன் ஆசைப்பட்டு காத்திருந்த காட்சி தான் இது!
அவளை அப்படியே இழுத்து மேலே போட்டுக் கொள்ள கைகள் பரபரத்தன!
ஆனால், அவளின் இந்த நந்து கண்ணாவிற்கு பதில், இந்த டாக்டர் சார் விளிப்பு தான் அவனுக்கு நேற்றைய நிகழ்வுகளை நினைவுக்குக் கொண்டு வந்தது!
Advertisement
“ஓ, மேடம் இன்னும் கோபமா தான் இருக்காங்களா? இரு டார்லிங் உன்னை எப்படி சமாதானப் படுத்துறேன் பாரு உன் மாமா!” உள்ளுக்குள் சிரித்தபடியே எழுந்தான்.
Advertisement
இன்னும் அவன் தன் தவறை உணரவே இல்லை! அவளின் வலியும் புரியவில்லை! அதன் ஆழமும் புரியவில்லை!
“குட் மார்னிங் மது டார்லிங்!”
அவள் முறைத்தாள்.
Advertisement
“குட் மார்னிங் சொன்னா, பதிலுக்கு விஷ் பண்ணனும், இப்படி முறைக்கக் கூடாது!”
“ம்ம். குட்ட்.. மார்னிங்!” அவள் பல்லைக் கடித்தபடி சொன்னாள்.
அவன் ப்ரெஷ் ஆகி விட்டு, வந்து காபி குடிக்கும் போது அவனிடம் பேசினாள்.
“டாக்டர் ஒரு ரிக்வெஸ்ட்! நேற்று, நமக்குள் நடந்தது, வெளியில் தெரியக் கூடாது டாக்டர்! தெரிஞ்சா என் வீட்டுலயும் சரி, உங்க வீட்டுலயும் சரி, ரொம்ப வருத்தப் படுவாங்க. வீணா அவங்கள ஏன் கஷ்டப்படுத்தணும்? அதனால..”
“அதனால.. ? என்ன மது, நாம எப்பவும் போல இருந்திடலாம்னு சொல்ல வரியா? எனக்கு நோ அப்ஜெக்சன்!”
அவள் மீண்டும் முறைத்தாள்!
“நான் சொல்ல வரத முழுசா கேளுங்க ப்ளீஸ்!”
“ம்ம் சரி சொல்லு.”
“இன்னிக்கி, நம்மை, மறு வீடு அழைக்க மாதுவும் ராஜுவும் இங்க வரப் போறாங்க, நாம அங்க எங்க வீட்டுக்கு போகும் போது, எக்காரணம் கொண்டும் நம் பிரச்சினை அவங்களுக்கு தெரியாத மாதிரி நடந்துக்கணும்!”
“எனக்கு ஓகே தான்! பட் நீ தான் இப்படி முறைச்சு முறைச்சு காட்டிக் கொடுத்துடுவ போல இருக்கே!”
“இல்ல நான் அப்படி செய்ய மாட்டேன்!”
“ஓகே டன்!” என்றபடி குளிக்க டவலை எடுத்துக் கொண்டு போனான் ரகு.
மது, தான் கொண்டு வந்த அவளின் ட்ரெஸ்கள், மற்ற உடைமைகள், நகைகள் இவற்றை அங்கிருந்த வார்ட்ரோபில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.
ரகு தன்னை பின்னாலிருந்து அணைப்பது தெரிந்து, விலக முயற்சிக்க, அவனோ அவளைத் தூக்கிக்கொண்டு போய் அந்த ரெக்லைனர் சோபாவில் உட்கார வைத்தான்!
“என் மகாராணி, இன்னும் இந்த சிம்மாசனம் ஏறவே இல்லையே!”
உட்கார வைத்து அவளை முத்தமிட முயல, அவள் டக்கென எழுந்து கொண்டாள்.
வேகமாக எழுந்ததில், அவள் கை விரல் அந்த சேரின் பட்டனை அழுத்தி விட, அதன் கால் வைக்கும் பூட் ரெஸ்ட் மேலே தூக்கிக் கொள்ள, அவள் கால் தடுக்கி, தடுமாறி கீழே விழப் போனாள்!
சட்டென அவளை அணைத்துப் பிடித்து, கீழே விழாமல் செய்தான் ரகு!
அணைத்தவன், இன்னும் பிடியை இறுக்கி, அவளை நகர விடாமல் செய்து,
அவளின் கன்னத்தில், கழுத்தில் முத்த மழையாக ஆரம்பித்து, உதடுகளில் வந்து நின்றான்.
நேற்று செய்ய நினைத்தை, இன்று செய்தான்!
கொஞ்சம் வன்மையாக!
மது திணறினாள்! அவனை எதிர்த்தால், இன்னும் வன்மையைக் கூட்டுவான் என்று அவளுக்கும் தெரியும்! எனவே எதிர்க்க வில்லை அவள்!
ஒரு வழியாக அவளை விட்டான்.
விட்டவுடன் அவள் சொன்னாள்.
“இதுக்கெல்லாம் நான் சார்ஜ் பண்ணுவேன் டாக்டர்! என்னோட இந்த சர்வீஸ்க்கு!
உங்கள பொறுத்த மட்டில், நான் ஒரு வொர்க்கர் தானே, இந்த விசயத்துக்கு!
ஆனா பாருங்க, நான் இந்த தொழிலுக்கு புதுசு!
அதனால எவ்வளவு சார்ஜ் பண்ணனும்னே கூட தெரியல!
நீங்களா பார்த்து போட்டுக் கொடுங்க டாக்டர்! கிஸ் பண்றதுக்கு இவ்வளவு, ஹக் பண்றதுக்கு இவ்வளவுன்னு!”
“ஓகே, எனக்கு கீழே வேலை இருக்கு, நீங்க கிளம்பி ப்ரேக்பாஸ்ட் சாப்பிட வாங்க சீக்கிரம்!”
ரகு அப்படியே உறைந்து போனான்!
இவளுக்கு இப்படி கூட பேசத் தெரியுமா? இது என்ன நாக்கா? இல்ல தேள் கொடுக்கா?
விருச்சிகம் வேலையக் காட்டத் தொடங்கி விட்டதா?
கீழே போனான்.
வைஷு, தன்விக்கு ஊட்டிக் கொண்டு இருக்க, தாரிகா அவளே சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள்.
“ஹாய் சித்தா! குட் மார்னிங்!” என்றனர் இருவரும்!
வைஷு, அவனை நமுட்டு சிரிப்பு சிரித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தாள்!
இவள் வேற? நடந்தது எதுவும் தெரியாம!.. உள்ளுக்குள் சலித்துக் கொண்டான்!
கூடவே ராகவனும் பெரியப்பா, அத்தை மாமாவுடன் ராமநாதனும் வந்து விட, அனைவருக்கும் டிபன் எடுத்து வைத்தாள் மது!
ராகினியும் அவள் கணவனும் அதி காலையில் ஒரு உறவினர் வீட்டு விசேசத்திற்கு சென்று விட்டனர்.
“எப்பம்மா, உன் தம்பி இங்க வரான், உங்கள அழைக்க?” ராமநாதன் கேட்டார்!
“பத்து மணிக்கு மாமா! எல்லோரையும் வர சொல்லியிருக்காங்க மாமா!”
“எல்லோராலும் வர முடியுமான்னு தெரியலம்மா! அண்ணன் வருவாரு உங்க கூட, வைஷு நீ போறியாம்மா?”
“ம்ம். போறேன் மாமா! நானும் பெரிய மாமாவும் அவங்க கூட போறோம்!”
அங்கே மதுவின் வீட்டில் தடபுடலாக வரவேற்பு, விருந்து!
அவர்கள் வீட்டின் முதல் கல்யாணம்! முதல் மாப்பிள்ளை அவன்! கேட்கவா வேண்டும்!
பட்டுப் பாட்டி அசத்தி விட்டார் விருந்து சமையலில்!
அவர் செய்துருந்த இன்னொரு நல்ல காரியம், அவரது மருமகளை ஊருக்கு அனுப்பி வைத்தது தான்! ஆம் மகேஸ்வரி இல்லை , ஊருக்குப் போய் விட்டாள்!
மது நிம்மதியாக உணர்ந்தாள்.
அவள் இருந்து, ஒருவேளை தனக்கும் ரகுவிற்கும் இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை எதையும் மோப்பம் பிடித்து விட்டால், அவ்வளவு தான் ! மொத்தமும் பாழாகி விடும்!
இந்த நாகா பாட்டி ஒட்டுக் கேட்பதில் நிபுணி வேறு!
ரகு இத்தனை பேசி, அவளை நோக அடித்ததற்கு , இந்நேரம் அவள் அன்று இரவே அங்கிருந்து கிளம்பியிருப்பாள்!
ஆனால் பல விசயங்களை எண்ணி பொறுத்து போனாள்.
முதலில் தன் திருமணம் தோற்று போனது மகேஸ்வரிக்கு தெரிந்தால் போதும், அவள் பாட்டியை பேசியே கொன்று விடுவாள்.
அப்புறம் மானுவின் திருமணம்! அது வைஷுவின் உறவினரோடு!
அப்புறம் இந்த காண்டீன் காண்ட்ராக்ட்! அதில் இவளை நம்பி வேலைக்கு இருக்கும் பெண் ஊழியர்கள்! அவர்களின் குடும்ப கமிட்மெண்ட்கள்!
மாதுவின் படிப்பு இன்னும் முடியவில்லை!
அப்புறம் ரெங்கநாதன் மாமா, அவர் மிகவும் இடிந்து போய்விடுவார்!
குழந்தைகள் தன்வியும் தாருவும் மதுவை மிஸ் செய்வார்கள்!
வைஷு, தனக்கு இவ்வளவு சப்போர்ட் பண்ணியிருக்கா! அவள் வருத்தப் படுவாள். இப்படி பல காரணங்களை யோசித்து தான் மது பொறுமை காப்பது!
சாப்பிடும் போது, பெரியப்பா கேட்டார்
“நீங்க எப்பவுமே நான் வெஜ் சாப்பிட மாட்டீங்களாம்மா?”
“அப்படியெல்லாம் இல்ல! நாங்க எங்க வீட்டுல எல்லாம் சாப்பிடுவோம்! இங்க மதுவோட அத்தை கணவர் ராமு அண்ணா வெஜிடேரியன்!
அவர் வளர்த்ததால் மதுவோட அப்பாவும் அப்படியே! என் பொண்ணு லீலாவும் இங்க வந்து வெஜிடேரியனா ஆகிட்டா! குழந்தைகளும் அப்படியே வளர்ந்துட்டாங்க!”
“மாமா, அடுத்து எங்க வீட்டுல வர சண்டே மதுவுக்கும் அத்தானுக்கும் விருந்து இருக்கு!
அங்க வாங்க! பறக்கிறதுல இருந்து மிதக்கிற வரை எல்லாம் உண்டு!” ராஜு சிரித்தபடி சொன்னான்!
சாப்பிட்டு விட்டு, மாதுவும்,மானுவும் அவர்கள் வீட்டு பழைய போட்டோ ஆல்பங்களை எடுத்து வந்து காட்டினார்கள்!
ரகு, சின்ன வயது மதுவின் போட்டோக்களை ரசித்துப் பார்த்தான்! சிலவற்றை எடுத்து வைத்தும் கொண்டான் மதுவுக்கு தெரியாமல்!
வீட்டிற்கு வந்த பின் தனிமையில் அவனுக்கு தாங்க்ஸ் சொன்னாள் மது!
“எதுக்கு?”
“சொன்ன மாதிரி, எதையும் வெளியே காட்டிக்காம இருந்ததுக்கு!”
“ஓ! .. அந்த தாங்க்ஸ ஒரு கிஸ் பண்ணிக் கூட சொல்லியிருக்கலாம்!”
அவள் முறைக்க, அவளை மேலும் சீண்ட எண்ணி,
“ப்ரீ ஆப் காஸ்ட் ல தான்!”
அவள் பல்லைக் கடிக்க அங்கிருந்து எஸ்கேப்!
அந்த ஞாயிறு ராஜுவின் வீட்டில் விருந்து!
அவன் சொன்ன மாதிரியே அனைத்தும்!
கையில் மாவு கட்டு போட்டிருந்தாலும் தகுந்த ஆட்களை வைத்து பக்கா விருந்து ஏற்பாடு செய்து இருந்தார் சொர்ணம்!
ராஜுவின் அப்பா, எல்லோரையும் வரவேற்றார்!
சாப்பிடும் போது,
ரகு நான் வெஜ் அயிட்டங்களை தொடவே இல்லை!
ராஜு கேட்டான்
“அத்தான், நீங்க நான் வெஜ் சாப்பிட மாட்டீங்களா?”
“இல்லையே சித்தாக்கு பிஷ் ரொம்ப பிடிக்குமே!” தன்வி எடுத்துக் கொடுத்தாள்!
“ம்ம்.. சாப்பிடுவேன்.. இப்ப சாப்பிடறது இல்ல!”
“இது எப்போ இருந்துடா?” கேட்டான் ராகவன் ஆச்சரியம் தாங்காமல்!
“ம்ம். மது. ஒரு வெஜிடேரியன், அவளுக்காக நானும் இப்ப மாறிட்டேன்!” கொஞ்சம் தயங்கிய படி ரகு சொல்ல, இளையவர்கள் எல்லோரும்
“ஓ..ஓ..” என்று சந்தோஷ கூச்சலிட்டனர்!
மதுவுக்கு ஒரு மாதிரி வெட்கமாக போய் விட்டது!
அவள் தலை குனிந்து கொண்டாள்!
வைஷு அவளை லேசாக கிள்ளி “என்னம்மா, இப்படி பண்றீங்களேம்மா!” என்று கிண்டலடித்தாள்!
வீடு திரும்பியவுடன் , அவனிடம் பல்லைக் கடித்தாள் மது!
“ஏன், இப்படி கொடுக்கிற காசுக்கு மேலே கூவி ஓவர் ஆக்டிங் பண்றீங்க? நீங்களே காட்டிக் கொடுத்துடுவீங்க போல இருக்கே!”
“ஏய் மது! இது ஓவர் ஆக்டிங் எல்லாம் இல்லடி! நான் நிஜமாவே உனக்காக தான் நான் வெஜ் சாப்பிடறத விட்டுட்டேன்!”
“நான் வெஜ் சாப்பிட்டுட்டு வந்து உன்னை கிஸ் பண்ணினா, நீ ஒரு மாதிரி கொஞ்சம் சங்கடப் பட்டாப்ல இருந்துச்சுடி அப்போ! அதான் அப்பவே விட்டுட்டேன்!”
“ம்ம். நம்பிட்டோம்!”
என்ன இது இந்த சின்னவிசயத்துல கூட இவள நம்ப வைக்க கஷ்டப்பட வேண்டியிருக்கு!
இவ கொஞ்சம் டப் தான் போல, எல்லாம் இந்த வாயால் வந்தது! அவன் தன்னைத் தானே திட்டிக்கொண்ட போது அவன் போன் அடித்தது!
“சார் நாங்க ஹோட்டல் ரிசப்சன்ல இருந்து பேசுறோம்! நீங்க புக் பண்ணியிருந்த ரூம்கள இருந்து எல்லா கெஸ்டுகளும் செக் அவுட் பண்ணிட்டாங்க, ஒருத்தர் மட்டும் இன்னும் பண்ண மாட்டேங்கிறார்! புல் போதையில் கிடக்கார்! ரூம் பாய்ஸ் போனா அவங்கள அடிக்க வரார்! நீங்க கொஞ்சம் இங்க வர முடியுமா?”
ரகு அங்கே உடனே போனான்!
அங்கு பிரச்சினை பண்ணிக் கொண்டு இருந்தது பார்த்தி!
error: Content is protected !!