Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வேள்வி செய்கிறாய் விழியிலே

வேள்வி செய்கிறாய் விழியிலே – 20

“ஏய்! மானு, எழுந்திரு, நான் தான் மது மடியில உட்காரனும்! அவ என் மது! நீ எழுந்திரு..” தன்வி குட்டி சிணுங்கினாள்.

மாதுவையும் மானுவையும் இந்த வீக் எண்ட், இங்கே வந்து விட சொல்லியிருந்தான் ரகு!

அதனால்  அன்று சனிக்கிழமை மாலையே, பட்டுப் பாட்டிக்கு துணைக்கு ஒரு ஆளை வைத்து விட்டு அவர்கள் இங்கு வந்து விட்டார்கள்.



Advertisement

ரகுவின் அறையில் தான் இப்போது அனைவரும் இருக்க, மானு அவள் அக்காவிடம் செல்லம் கொஞ்சி மடியில் படுக்க, தன்வி குட்டி அவளிடம் பொசசிவ்நெஸ் காட்டினாள்!

“சரிடா, நீ இந்த பக்கம் வா, அவ அந்த பக்கம் இருக்கட்டும்” என்றாள் மது தன்வி குட்டியை சமாதானம் செய்ய.

“ம்ம். அது என் பக்கம்” என்று மாது வந்து அவள் தோளில் சாய்ந்து கொண்டான் வேண்டுமென்றே!

Advertisement

உடனே தன்விக்கு கோபம் வந்து விட்டது!

Advertisement

தாருவுக்கும் தான்!

“அண்ணா, அதுதான் மது ஆண்ட்டிய எங்க சித்தாக்கு மேரேஜ் பண்ணியாச்சுல்ல, அப்பன்னா மது ஆண்ட்டி எங்களுக்கு தான் சொந்தம்!” என்று அவளும் சண்டை போட்டாள் அவளுக்கு தெரிந்த லாஜிக்கில்!

அதைக்கேட்ட மூவருக்கும் சிரிப்பு வந்து விட்டது!

Advertisement

அப்போது அங்கு வந்த ரகுவோ மனதிற்குள்

“டேய் அவ உங்க யாருக்கும் சொந்தமில்ல, அவ என் மதுடா! என்னோட டார்லிங்! நியாயத்துக்கு நான் தான் அவ மடியில் இந்நேரம் படுத்து இருக்கணும்! எல்லாம் இந்த மூக்குக்கு கீழே ஒரு ஆர்கன் இருக்கே!

அது தான் .. இந்த வாய்.. சும்மாயில்லாம அது பண்ணுன வேலை! நான் இப்படி உங்கள வேடிக்கைப் பார்த்து ஏங்கிட்டு இருக்கேன்! ஹ்ம்ம்!” என்று பெருமூச்சு விட்டான்!

“இரு என் அம்மா கிட்ட போய் சொல்றேன்!” என்று தன்வி வைஷுவைத் தேடிக்கொண்டு போக, அவள் பின்னாலே போய் அவளைத் தூக்கிக்கொண்டு வந்து விட்டாள் மானு!

“ஹேய்! குட்டிமா, சும்மா சொன்னேன்டா! இந்தா .. நீயே உன் மது மடியில உட்கார்ந்துக்கோ!”

அவர்கள் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்க, மானு கேட்டாள்

“மதுக்கா, நாம இன்னிக்கு நிலாச்சோறு சாப்பிடலாமா மொட்டை மாடியில போய்! இன்னிக்கு பவுனர்மிக்கா! அம்மா இருக்கும் போதெல்லாம் நாம அப்படி அடிக்கடி சாப்பிடுவோமே!”

“அக்கா, ப்ளீஸ்க்கா” மானு மேலும் கெஞ்ச,

“ம்ம்.. சரி” என்றாள் மதுவும்!

“நிலாச்சோறுன்னா என்ன?” தன்வி குட்டி கேட்க,

“அதுவா டெரஸ்ல போய் உட்கார்ந்துட்டு அம்மா ஒரு பெரிய பவுல்ல எல்லோருக்கும் சேர்த்து சாதம் பிசைந்து கையில் கொடுப்பாங்க , எல்லோரும் அப்படியே நிலாவை பார்த்திட்டே சாப்பிடுவோம்!” என்று மானு விளக்கம் கொடுக்க, தன்வி குட்டி ஏகத்துக்கும் குஷியாகிவிட்டது.

எல்லோரும் மொட்டை  மாடிக்கு போவதை ஏக்கமாக பார்த்தான் ரகு!

“அத்தான் நீங்க வரல?” கேட்டாள் மானு.

“இல்லடி அவர்க்கு ஒரு இம்பார்ட்டன்ட் கால் இருக்கு நாம போவோம்” மதுவே அவனுக்காக பதில் சொல்லிவிட்டு வேண்டுமென்றே அவனை விலக்கி வைத்து விட்டுப் போனாள்.

ரகு பாவமாக நின்று கொண்டிருந்தான்.

பின் எல்லாம் முடிந்து, இரவு தூங்குமுன்னர் மது ரகுவிடம் கேட்டாள்

“என்ன டாக்டர், உங்க காதுல இருந்து பயங்கர புகை வந்தத பார்த்தேன்!

சும்மா, என்னை அம்மா மாதிரி நினைக்கறேன் நினைக்கறேன்னு சொல்லி இவ கிட்ட நாம பண்ணினது எல்லாம் இப்ப பண்ண முடியலைன்னு வருத்தமா இருக்கா டாக்டர்!”

“என்ன பண்றது? நீங்க உண்மையிலேயே அப்படி நினைச்சு இருந்தா, அது உங்களுக்கு, இந்த தாயன்பு என்னிடம் இருந்து டன் கணக்கில் கிடைச்சுருக்கும்!

இப்ப பாருங்க, மாதுவுக்கும் மானுவுக்கும் நான் ஒரு தாய் ஸ்தானத்தில தான் இருக்கேன்!

அவங்களுக்கு என் அன்பு கிடைக்குது! ஏன்னா அவங்க கிட்ட இருக்கிறது உண்மையான  பாசம்! தன்வி குட்டிக்கும் தாருவுக்கும் கூட அப்படிதான்!

ஆனா நீங்க? உங்களுக்கு அது எப்போதுமே என்கிட்ட இருந்து கிடைக்கப் போறதில்ல! ஏன்னா, நீங்க என்னை வெறும் உடம்பா தான் பார்க்குறீங்க!”

“மே பி , நானும் உங்க அம்மா யூஸ் பண்ணின அதே சாண்டல் பவுடர், சீயக்காய் பொடி கஸ்தூரி மஞ்சள்  இதெல்லாம் யூஸ் பண்றதால, நான் அவங்கள ரிசம்பில் பண்ணியிருக்கலாம்!

ஆனா அதை வச்சுட்டு, நீங்க என்னை அம்மா மாதிரி நினைக்கிறதா நான் நம்ப மாட்டேன்!

நீங்களும் அப்படி நினைச்சுட்டு உங்கள நீங்களே ஏமாத்திக்காதிங்க!

 உங்கள என் பக்கம் ஈர்த்தது இந்த உடம்பு மட்டும் தான்ற ரியாலிட்டி எனக்கும் தெரியும்!

இந்த லவ் அபெக்சன்னு எல்லாம் நினைச்சுகிட்டு நான் திரும்பவும் ஏமாற தயாரா இல்ல!”

“உங்களுக்கு தெரியுமா, என் அம்மா என்னை விட ரொம்ப அழகு! அவ்வளவு நேச்சுரல் பியுட்டி அவங்க!

ஆனா அதே அம்மா, பெட்ரிட்டனா இருந்தப்போ, அவங்க எவ்வளவு கோரமா போய்ட்டாங்க தெரியுமா?

இதெல்லாம் அனாடமி படிச்ச உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியது இல்ல!

இந்த அழகு எல்லாம் டெம்ப்ரரி தான்! அதை பார்த்து வர இமொசனும் டெம்ப்ரரி தான்!

அதுனால சும்மா சும்மா, நான் உன்னை லவ் பண்றேன்.. அது இதுன்னு சொல்லிட்டு, அப்புறம் தெரியாம அன்னிக்கு பேசிட்டேன்னு சொல்லிட்டு வீணா ட்ரை பண்ணாதீங்க! ப்ளீஸ்!”

சொல்லிவிட்டு, போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்கி விட்டாள் மது!

ரகுவால் தூங்க முடியவில்லை!

இன்னும் எத்தனை நாள் இப்படி இவள் சுடுசொற்களை கேட்டுக் கொண்டு இருக்க வேண்டுமோ தெரியவில்லை!

இன்று மட்டுமே இது இரண்டாவது தடவை , மது இப்படி அவனிடம் சூடாக பேசுவது!

மதியம் நடந்தது இது!

வெளியே சென்றிருந்த ரகு வீட்டுக்கு வந்த போது அவனுடன் இன்னொரு இளம்பெண்!  வைஷ்ணவி!

வைஷு, இந்த வைஷ்ணவி அப்புறம் ரகு மூணு பேரும் திக் பிரண்ட்ஸ்!

கல்லூரி காலத்தில்!

வைஷு அண்ட் வைஷு என்று இவர்கள் இருவரும் அப்ப ரொம்ப பாப்புலர் அவர்கள் காலேஜில்!

இப்போது வைஷ்ணவி யு எஸ்ஸில் இருக்கிறாள்!

இன்னும் கல்யாணம் ஆக வில்லை! பண்ணிக் கொள்ளும் எண்ணமும் இல்லை அவளுக்கு.

கேட்டால்

“நேற்று காதல் கொண்டு, இன்று கணவன் கொண்டு

நாளை அடுப்பினில் வெந்திட ஆசை இல்லை!

முதலில் மாலைப் போடும், பிறகு விலங்கு பூட்டும்

உங்க கசமுசா கல்யாணம் தேவையில்லை!”

என்று பாடுவாள்.

ரொம்ப சிவ பக்தி வேறு!

இந்தியா வரும்போது தவறாமல் திருவண்ணாமலை போய் விடுவாள்!

இப்போது கூட சதுரகிரி போகும் ப்ளானில் இருக்கிறாள்!

சுத்த சைவம் வேறு!

இந்தியா வரும் போது எல்லாம் ரகு வீட்டுக்கு வந்து விட்டு தான் போவாள்.

ரகுவின் கல்யாணம் திடீரென்று பிக்ஸ் ஆனதால் அவளால் வர முடியவில்லை!

அவளைத் தான் இப்போது வீட்டிற்கு கூட்டி வந்தான் ரகு!

வைஷு பின்னால் வருவதாக  கூறியிருந்தாள்.

வீட்டுக்கு வந்தவனுக்கு, ஒரு சின்ன ஐடியா தோன்றியது!

என்ன தான் படித்து இருந்தாலும், இப்போது அவன் மேல் கோபமாக இருந்தாலும், மதுவுக்கு.. இல்ல எந்த ஒரு பொண்ணுக்கும் தன் புருஷன் இன்னொரு புதிய  பொண்ணோடு வந்து இறங்கும் போது, கொஞ்சம் சந்தேகம் வரும்!

அவளோடு கொஞ்சம் நெருக்கமாக இருப்பதைப் பார்த்தால் பொசசிவ் ஆவார்கள் என்று நினைத்து, வேண்டுமென்றே வைஷ்ணவியை மதுவுக்கு அறிமுகம் செய்து வைக்காமலே, நேராக தன் ரூமிற்கு அழைத்து சென்றுவிட்டான்.

“எங்கடா உன் வொய்ப்?’ என்று அவள் கேட்டதுக்கு கூட,

“வருவா, நீ வா” என்று அவளை தன் ரூமிற்கு அழைத்து சென்று கதவை வேறு சாத்திக் கொண்டான்!

அவ்வபோது CCTVயில் மது வருகிறாளா என்று பார்த்துக் கொண்டும் இருந்தான்!

மதுவும் வந்தாள் அவன் ரூமிற்கு! கையில் ட்ரேயுடன்!

“ஓ காபி கொடுக்கும் சாக்கில் நோட்டம் விட வந்துட்டாளா?” ரகு கொஞ்சம் சந்தோசப் பட்டான்.

அவன் வேண்டுமென்றே வைஷ்ணவியை ரொம்ப க்ளோஸ் ஆக நெருங்கி உட்கார்ந்து கொண்டான், பார்த்தால்  மது தவறாக எண்ணும்படி!

கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தவள், ட்ரேயில் இருந்த சூப் பவுலை அவளிடம் கொடுத்தாள்!

“ஹாய் மது! ஐ ம் வைஷு! அனதர் வைஷு ..வைஷ்ணவி!”

“ஹாய்!”  சிரித்தாள் மது!

“என்ன சூப் இது! நான், ப்யூர் வெஜ் ப்பா!’

“இது ஸ்வீட் கார்ன் சூப் தான்! பயப்படாம குடிங்க! நீங்க ப்யூர் வெஜ்ன்னு எனக்கும் தெரியும்!”

“ஓ தேங்க்ஸ்!” என்றபடி குடித்தாள் அவள்!

“எனக்கு ரொம்ப கோல்ட், அதுக்கு இந்த பெப்பர் போட்ட சூப் ரொம்ப நல்லாயிருக்கு மது!”

“ஓகே சரி மது, நீ கீழே போ, நான் இவ கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான் ரகு வேண்டுமென்றே!

மது சிரித்துக் கொண்டே வெளியேறினாள்.

கதவருகே போகும் போது அந்த வைஷ்ணவியின் குரல் கேட்டது!

“ஏய். அப்படி என்னடா, என்கிட்ட சீக்ரெட்! உன் மதுவுக்கு தெரியாம, ..அது சரி.. நீ முதல்ல கொஞ்சம் தள்ளி உட்கார்டா, சும்மா வந்து ஈசிக்கிட்டு, நானே இங்க வந்து வெயில் கொடுமை தாங்காம இருக்கேன், பாரு AC போட்டும் எனக்கு எப்படி வேர்க்குது, தள்ளி உட்கார்டா” அவள் கொஞ்சம் சிடுசிடுத்தாள்!

கேட்ட மதுவுக்கு சிரிப்பு தான் வந்தது!

இவங்க மூவரின் பிரன்ஷிப் பத்தி, காலேஜ் கால லைப் பத்தியெல்லாம் ஏற்கனவே வைஷு சொல்லியிருக்கிறாள்.

அவள் கல்யாண ஆல்பத்தில் மது இந்த வைஷ்ணவியை பார்த்து இருக்கிறாள்!

ரகுவின் திட்டமும் புரிந்தது அவளுக்கு!

பாவம்! மண்டை மேல் இருக்கும் கொண்டையை மறந்து விட்டான்!

வைஷ்ணவி அங்கிருந்து விடைப் பெற்று சென்றபின், இதையே சொல்லி ரகுவை கலாய்த்தாள் மது!

“என்ன டாக்டர்! மண்டை மேல் இருக்கும் கொண்டையை மறந்துட்டீங்களே!”

“இந்த வைஷ்ணவியும் வைஷு அக்கா மாதிரி உங்க பெஸ்ட் பிரண்ட்ன்னு எனக்கு முன்னமே தெரியும்!”

“வைஷு அக்கா சொல்லியிருக்காங்க!”

“ஏய்..வைஷு குரங்கே உன்னை யாருடி இத அதுக்குள்ளே மதுகிட்ட சொல்ல சொன்னது?” ரகு மனதிற்குள் அவளை திட்டினான்!

“எப்படி… எப்படி.. , நீ கீழே போ மது நான் இவ கிட்ட தனியா பேசணும்னு, அவங்ககிட்ட க்ளோஸ் ஆ உட்காருவீங்களா!”

“ஹா ஹா” மது சிரித்தாள்

“வச்சாங்க பாரு, ஒரு ஆப்பு! தள்ளி உட்காருடா, கச கசன்னு இருக்குன்னு, நான் மாதுவ திட்டற மாதிரி!”

“ஓ நீங்க என்கிட்ட பொசசிவ்நெஸ்ஸ எதிர்பார்த்தீங்களோ!”

“பொசசிவ்நெஸ் எப்ப வரும்? எது மேல வரும்? தனக்கு உரிமைன்னு நினைக்கிறப்போ வரும்!”

“நான் தான் உங்கள அப்படி நினைக்கவே இல்லையே! அப்ப எப்படி வரும்!

பாவம் டைம் வேஸ்ட் டாக்டர் உங்களுக்கு!” மது சிரித்தாள்!

உள்ளுக்குள் ரொம்பவே வலித்தாலும், மது ரொம்ப நாள் கழித்து இப்படி சிரிப்பதைப் பார்க்கிறான்!

அதற்கு தான் அசிங்கப்பட்டாலும் கூட பரவாயில்லை என்றே அவனுக்கு தோன்றியது அப்போது!

“திட்டு மது! கோபப்பட்டு பேசு மது, நீ அமைதியா இருந்தா தான் பிரச்சினை! ஒதுங்கி போனால் தான் கஷ்டம்!”

இப்போதும் அவன், மது அவனைத் திட்ட திட்ட தான் அவள் மனக்காயம் ஆறும் என்று அவன் நம்பினான்!

அந்த நம்பிக்கையோடு வெறுமனே கண்களை மூடி அசைவற்று படுத்திருந்தான்.

கொஞ்சம் நேரம் கழித்து மது போர்வை விலக்கிக் கொண்டு அவன் பக்கம் திரும்பினாள்.

அவனிடம் அசைவு இல்லை! தூங்கி விட்டான் போல.

“சாரி நந்து கண்ணா! இன்னிக்கு உன்னை ரொம்ப நோக அடிச்சுட்டேன்! நான் வேணுமின்னு அப்படி பேசல, நீ அன்று ஏற்படுத்திய மன வேதனை அப்படி பேச வச்சுடுச்சு!

ஆனா இந்த மானங்கெட்ட மனசால உன்னை  வெறுக்கவெல்லாம் முடியாது!

நான் ஏன் இப்படி இருக்கேன்!

சாரிடா நந்து கண்ணா, ரொம்ப சாரி அவன் நெற்றியில் முத்தமிட்டாள் மது!

அவன் விழித்துக்கொண்டு இருந்தான்! அவள் பேசியதைக் கேட்டுக் கொண்டு தான் இருந்தான்!

அவளை அப்படியே இழுத்துப்போட்டு கட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆவலை கஷ்டப் பட்டு அடக்கிக் கொண்டு கண் மூடிக் கிடந்தான்.

இப்போது அதை செய்தால், அவள் மீண்டும் இன்னும் மனதை இழுத்துக் கொள்வாள்! பொறுமை முக்கியம்! அவள் என் அன்பை முழுவதும் உணரும் வரை பொறுத்திருக்கணும்!

மது அவனின் அன்பை உணருவாளா!

அவன் தன்னை, தன் அன்பை  நிரூபிக்கும் வகையில் ஏதேனும் நடக்குமா?

நடக்கும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!