Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வேள்வி செய்கிறாய் விழியிலே

வேள்வி செய்கிறாய் விழியிலே – 25

“நந்து கண்ணா குட் மார்னிங்!” மது ரகுவின் நெற்றியில் முத்தமிட்டு எழுப்பினாள்.

“குட் மார்னிங் மது! விடு, மது நான் தூங்கனும்! என் கிட்ட வராதே, நான் ஒரு மாசம் விரதம் இருக்கேன்!”

“விரதமா என்ன விரதம்?”



Advertisement

“ம்ம். வைராக்கிய விரதம்! நீ முன்னாடி ஒரு வாட்டி என் கிட்ட சொல்லியிருக்க!

நானே உன் கிட்ட நெருங்கி வந்தா கூட வைராக்கியமா இருக்கணும்னு! அதான், இப்ப ட்ரை பண்றேன்!”

சட்டென கண் விழித்தான் ரகு!

Advertisement

அட.. கனவு!

Advertisement

ஆனால் கனவில் முத்தம் கொடுத்தால், இப்போது எப்படி நெற்றியில் ஈரம் இருக்கும்! குழம்பினான்!

தன் ஈகோவை பயன்படுத்திக் கொண்டு இந்த பார்த்தி என்னவெல்லாம் பண்ணியிருக்கான்!

இவ்வளவு படித்தும் என்ன யூஸ்?  தன்னளவு படிக்காத ஒருத்தன், தன்னை இப்படி ஆட்டுவித்துக் கொண்டிருந்ததை நினைத்தால், இப்போது கூட அவமானமாக தான் இருக்கிறது!

Advertisement

மது கூட ஒருமுறை சொல்லியிருக்காளே, யார் என்ன பண்ணினாலும் பேசினாலும் நாம் மனதளவில் வைராக்கியமாக இருக்கனுன்னு, தான் அதை அப்போது விளையாட்டாக எடுத்து கொண்டு விட்டோம்!

ஆனாலும் இந்த பொம்பளங்களுக்கு இருக்கிற அளவு வைராக்கியம் நமக்கு இருக்க மாட்டேங்குதே!

மது, என்னவென்றால், இது வரை எந்த சூழலிலும் யாரிடமும்,  ராஜு உட்பட யாரிடமும் பண உதவியை வாங்கி விடக்கூடாது, என்பதில் வைராக்கியம் காட்டுகிறாள்!

ஏன் வைஷு கூட தான்!

அவனுக்கு ப்ளஸ் டூ படிக்கும் போது அவள் செய்தது நினைவு வந்தது!

அது ப்ளஸ் டூ ஸ்கூல் ஆரம்பித்து ஜூலை மாத கால கட்டம்!

வைஷு படிக்க  ரொம்ப மெனக்கிடாமல் இருப்பதைப் பார்த்த அவர்கள் கிளாஸ் டீச்சர் அவளை அழைத்து, “ரகு மாதிரி நீயும் டாக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டால் மட்டும் போதாது வைஷு, படிக்கணும், சின்சியரா படிக்கணும்! அவன் வீட்டுல எல்லோரும் டாக்டர்ஸ்!

அவனுக்கு நிறைய கைடன்ஸ் அப்புறம் இன்ப்லுயன்ஸ் இருக்கும்!

உன் வீட்டில் நீ தான் முதலில் டாக்டருக்கு படிக்க ஆசைப்படுற!

ஆசைப்படுற நீ, அந்த அளவு effort போடணும்! இப்படி பொறுப்பில்லாம TV, கிரிக்கெட் மாட்ச் பார்த்துட்டு இருக்க கூடாது!”

“சரிங்க மேம்! இனி நான் TV பார்க்க மாட்டேன்!”

“சும்மா சொன்னா பத்தாது, ப்ராமிஸ் பண்ணு!”

“ஓகே மேம், இன்னில இருந்து, ஒரு வருஷம் நீ TV யே பார்க்க மாட்டேன்! இது ரகு மேல சத்தியம்!”

“எதே, ஏண்டி என் மேல சத்தியம் பண்ற!”

“விடுடா, கசாப்பு கடையிலே எல்லாம் ஆட்டை கேட்டுகிட்டா வெட்டுறாங்க அது மாதிரி தான்!”

விளையாட்டாய் சொன்னாலும், வைஷு அந்த சத்தியத்தை மீற வில்லை!

இதில் வேடிக்கை என்னவென்றால், பப்ளிக் எக்சாமே முடிந்து விட்ட பிறகு கூட அவள் அந்த ஒரு வருடம் முடியவில்லை என்று TVயே பார்க்க வில்லை!

அவள் பெற்றோரே பார்க்க சொன்ன போதும், விஜிம்மா சொன்ன போதும் கூட  அவள் டிவியே பார்க்க வில்லை!

அந்த வயதில் அவளுக்கு இருந்தது, நமக்கு ஏன் இல்லாமல் போய் விட்டது!

ரகு, ஈகோவை விட்டு விட வேண்டும் என்று வைஷுவிடமும் மதுவிடமும் ஈகோ கொண்டான்!

இவன் இப்படி இருக்க, அங்கே மதுவோ, முழுவதும் வேற மாதிரி மன நிலையில்!

இடையில் ஒரு நாள், தவிர்க்க முடியாத சூழ்நிலையில், ஹாஸ்பிட்டல் ஆயா ஒருவரை மதுவுக்கு துணைக்கு விட்டு விட்டு ரகு ஹாஸ்பிட்டல் செல்ல நேர்ந்தது!

அந்த ஆயா, எப்போதும் மதுவிடம் பிரியமாக இருப்பாள்.

 மதுவும் அவளுக்கு உதவிகள் செய்ததுண்டு!

“ஏன் ஆயா, எங்க கல்யாணத்திற்கு நீ வரல?”

“அது வந்து அம்மாடி, அப்ப பார்த்து, என்னோட அத்தைக்  கிழவி.. வயது எண்பதுக்கு மேல. அது செத்து போச்சு! அங்க போக வேண்டியதா போச்சு!”

“அப்பப்பா என்ன வாழ்க்கைமா , இந்த மனுஷ வாழ்க்கை! என் அத்தை வாழ்க்கையில படாத கஷ்டம் பட்ட பொம்பள! இப்ப தான் அதுக்கு இங்க விடுதலை கிடச்சுருக்கு!

அது என்னமோ அவங்க குடும்பத்துல ஒரு பொம்பள கூட நல்லாவே இல்ல போமா!

அது பொறந்த இடத்துலயும் அப்பா அண்ணன் தம்பி எல்லோர் மிரட்டல் உருட்டலுக்கு பயந்தே வாழ்ந்தது!

இத கட்டுனவன், மொத பொண்டாட்டிக்கு குழந்தை இல்லன்னு, இத ரெண்டாம் தாரமா கட்டிக்கிட்டு போனான். அங்க போனா அதுக்கு மேலே!

ஒரு பக்கம் முத பொண்டாட்டியோட கொடுமை ஒரு பக்கம்! தன்னை விலக்கிட்டு இவள கல்யாணம் பண்ணிட்டானேன்ற துவேசம்!

இன்னொரு பக்கம் , புருசனோட அதிகாரம்! நேருக்கு நேர் நின்னு கூட அது பேச முடியாதாம்!

அப்படி ஏதாவது பேசிட்டாலோ, அடி, உதை!

பேசினால் மட்டுமில்ல, “சொன்னதை” கேட்கா விட்டாலும் கூட !

நான் ஒரு தடவ அது கிட்ட விளையாட்டா கேட்டுபுட்டேன் பாப்பா! அது எப்படி அத்தை நேரா நின்னு பேச கூட மாட்டேங்கிற? அப்படி எப்படி இத்தனை புள்ளைங்கன்னு!

அதுக்கு சொன்னிச்சு பாரு பதிலு! நான் அப்படியே அழுதுட்டேன்!

சொன்னதை செய்யலன்னா அதுக்கும் அடி தான் கிடைக்குமாம்! அந்த ஆளுக்கு தன்னை நிருபிக்கனும்னு வருஷம் தவறாம இத புள்ள சுமக்க வச்சுடுவானாம்! கொஞ்சம் கூட ரெஸ்ட் எடுக்க விட மாட்டானாம்!

மொத்தம் எட்டு புள்ளங்க அதுக்கு! அதில் நாலு குழந்தையா இருக்கும் போது செத்துப் போச்சுங்களாம்!  இதோட மூத்த பையன் வளர்ந்து கொஞ்சம் விவரம் தெரிஞ்ச பின், தன் அம்மாவை கொஞ்சம் பார்த்துக்க ஆரம்பிச்சானாம்!

நம்ம பொம்பளைங்க எல்லாம் அந்த காலத்துல எவ்வளவோ கஷ்டப் பட்டுருக்காங்க தெரியுமா பாப்பா!

ஆனா இப்ப பாரு, இந்த காலத்துல பொசு பொசுக்குன்னு பொண்ணுங்க கோபம் பட்டுட்டு புருசன விட்டு விலகி வந்துடுதுங்க!

அதுக்காக அப்படி அந்த காலம் மாதிரி பொறுத்து போக வேண்டாம்!

ஆனா சின்ன விசயத்துக்கு கூட விட்டு கொடுக்க மாட்டேன்னா எப்படிம்மா?

பாரு என் வீட்டுல என் பேத்தி இப்படி தான் வந்து உட்கார்ந்துருக்கா! அவ புருஷன் வந்து நீ எடுத்து சொல்லு ஆயான்னு கெஞ்சிட்டு நிக்கிறான்! என்னத்த சொல்ல!”

ஆயா எங்கேயோ ஆரம்பித்து எங்கோ முடித்தாள்!

மதுவுக்கு ரொம்ப யோசனை ஆகி விட்டது!

அந்த காலம் முதல் இந்த காலம் வரை இந்த மாதிரி ஆண்கள் இருக்க தான் செய்கிறார்கள்!

இந்த பாட்டியோட புருஷன், அப்புறம் அந்த தர்ஷினியோட தங்கை புருஷன் மாதிரி!

இவர்களை எல்லாம் பார்க்கும் போது, ரகு செய்தது அப்படி ஒன்றும் மன்னிக்க முடியாத தப்பு இல்லை!

தான் இப்படி அவனை விலக்குவது தான் தப்பு, அவன் இத்தனை முறை சாரி கேட்டதுக்கப்புறமும்!

இப்போது மது ரகுவை நெருங்கி வந்தாள்.

அவனோ லூசு மாதிரி, இப்ப போய் வைராக்கிய ட்ரைனிங் எடுத்துக் கொண்டிருக்கிறான்!

ஏம்மா இதுக்கு எண்டே (End) இல்லியா?

தன்னை வெளிப்படுத்த தான் அவள் முதலில் அவனை நந்து கண்ணா என்று கூப்பிட்டு, குட் மார்னிங் சொல்லி முத்தமிட்டது!

ஆனால் அவன் அதை கனவு என்று நினைத்துக் கொண்டான்!

இப்போது அவள் காயங்கள் பெருமளவு குணமாகி விட்டன!

இன்னும் முழங்கால் காயம் மட்டுமே இன்னும் ஆற வில்லை.

கொஞ்சம் அவன் தோள் பிடித்து தான் நடக்கிறாள்.

நடக்கும் போது, வேண்டுமென்றே  அவன் கைகளை தன் இடுப்போடு சேர்த்து பிடித்துக் கொண்டாள்!

அவன் “விடு மது!” என்று விலக, அவள் கோபமாக முறைக்க, அவன் இப்போது அவளிடம் உண்மையை சொல்லி விட்டான்!

அதான், இந்த வைராக்கிய விரதம் பற்றி!

 “நீ கூட சொல்லியிருக்கியேடி!”

“யோவ் போய்யா! லூஸு டாக்டர்! அத செய்ய இப்ப தான் நேரம் பார்த்தியா! அதெல்லாம் ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்! இனி என்னை மீறி, எந்த பார்த்தியோ கார்த்தியோ உன்கிட்ட வந்து உன் மனச மாத்த முடியாது!  ஏன்னா, நீ இப்ப இங்க இருக்க. அவன் கையைப் பிடித்து தன் நெஞ்சில் வைத்துக் கொண்டாள்.  ஏற்கனவே நாம லேட்டு மாமா.. “

“ஏய் என்னடி இந்த எக்ஸ்ட்ரீமுக்கு மாறிட்ட? முதல்ல உன் கால் சரியாகட்டும்!”

“அதெல்லாம் ஆகிடும்!”

ஆனால் அவனோ அந்த ஒரு மாதம் முடிந்த பின் தான், அவளை நெருங்க வேண்டும், அது வரை கூடாது என்றே இருந்தான்!

மது விடுவதாக இல்லை அவனை!

மேகலா அக்காவிடம் சொல்லி, அவனுக்குப் பிடித்த ஜாதிமல்லியை வாங்கி தலையில் வைத்துக் கொண்டு,

‘காதலிக்க கைடு இல்ல சொல்லித் தர வா மாமா” என்று பாடி அவனைக் கட்டிக் கொண்டாள்.

“அடிப்பாவி, என்னடி இது இப்படி மாறிட்ட?”

“ஆமா மாமா உன்னை வளைச்சுப் போட ட்ரை பண்றேன்!”

“அதுக்கு தான் அவசியம் இல்லையே நான் தான் உன் அடிமைன்னே டிக்ளேர் பண்ணிட்டேனேடி அப்புறம் என்ன?”

“பண்ணி? என்ன யூஸ்? சும்மாவே இருக்கியே?”

“ஏய் மது, இப்படி எல்லாம் உனக்கு பேச தெரியுமா? என்னடி இதெல்லாம்?”

“அது அப்படி தான்!”

மது, இதுவரை அவனை விலக்கி வைத்து தவறு செய்து விட்டதாக நினைத்து, அவனை நெருங்கி வந்தாள்.

அவன் இப்போது விலகிப் போக, அவள் தொடர்ந்து அவனை சீண்டிக் கொண்டே இருந்தாள்.

திடீரென்று  பக்கத்தில் படுத்துக் கொண்டிருக்கும் அவனை கட்டிக் கொண்டு, “மாமா, இறுக்கி அணைச்சு உம்ம தருமோ” என்று மலையாளத்தில் கேட்பாள் ஒரு நாள்!

ஒரு நாள் மாமா, “நாக்கு ஒரு கிஸ் காவாலி”  என்று கேட்பாள்.

“ஏண்டி. ஏண்டி இப்படி பண்ற?” என்று கேட்டால், “நான் என்ன பண்ண, நாள் பூரா சும்மா உட்கார்ந்து டிவி பார்த்துட்டு இருக்கேன்!”

இப்பல்லாம் எல்லா லாங்குவேஜ் படமும் பார்க்குறேன்! மலையாளம், தெலுங்கு ஹிந்தின்னு!”

அவன் “இருடி, ஒரு நாள் இதுக்கெல்லாம் சேர்த்து இருக்கு உனக்கு!”

“அந்த ஒரு நாள் எப்ப மாமா?”

 “ஒரு நாள் ஒரு நாள்

 உன்னோடு ஒரு நாள்

உறவினில் ஆட புதுமைகள் காண “

என்று அன்று பாடியதை இன்றும் பாடினாள் மது!

 “ஏய்..உன்னை..”

“அச்சோ” என்று சொல்லிவிட்டு போர்வையை மூடி கொண்டாள் மது!

—————————

“ஏக் தோ தீன் சார் ஒத்துக்கோடி

நான் ஒண்ணு ஒண்ணா சொல்லித்தரேன் கத்துக்கடி

நீ சாய்ஞ்சு பார்த்தா சுத்துதடி

நெஞ்சில் தீ தீயாய் பத்துதடி”

டிவியில் சமந்தா பாட்டு ஓடிக் கொண்டிருக்க, ரகு பார்த்துக் கொண்டிருந்தான்!

“ஏக் தோ தீன் சார் ஒத்துக்குறேன்

ஒண்ணு ஒண்ணா சொல்லித்தா கத்துக்கிறேன்

நீ சாஞ்சா நெஞ்சில் தாங்கிக்கிறேன்

மடியில வாங்கிக்கிறேன்”

பின்னால் இருந்து மது பாடினாள்!

ரகு திரும்பிப் பார்க்க, அவள் அந்த ரெக்லைனர் சோபாவில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு பாடிக் கொண்டிருந்தாள்!

“மது.. ஒழுங்கா சர்ட் பட்டன போட்டுட்டு உட்காரு!”

“ஏன், நான் இப்படி தான் இருப்பேன்! நம்ம ரூமுக்குள்ள தானேன்னு சொல்லி தானே நீங்க இந்த சர்ட்டையும் ஷார்ட்ஸ்யும் வாங்கிக் கொடுத்துப் போட சொன்னீங்க! இப்ப என்ன வந்துச்சு?”

“ஏன் அந்த சமந்தா ஒத்த பட்டன போட்டுக்கிட்டு ஆடும் போது ஆன்னு வாயப் பொளந்துட்டு பார்த்தீங்க இல்ல? என்னைப் பார்த்தா மட்டும் கோபமா வருதா?”

“சமந்தாவும் நீயும் ஒண்ணாடி எனக்கு? நீ என் பொண்டாட்டி! நீ இப்படி இருந்தா எப்படிடி?”

“என்ன மாமா உன்னை டெம்ப்ட் பண்ணுறேனா? பண்ணி என்ன பிரயோஜனம்? நீ ஒரு அட்டெம்ப்ட்டும் பண்ண மாட்டியே மாமா?”

“ஏய்..உன்னை..” அவன் வேகமாக எழ, அவன் தொடை  டிவி ரிமோட்டில் பட்டு சானல் மாறி,  அதில்  ஒரு பழைய ராமராஜன் பட காமெடி!

கவுண்டமணியின் மேல் குட்டி சாத்தானை ஏவி விட்ட தைரியத்தில் செந்தில் அவரை கன்னாபின்னாவென்று திட்டும் காமெடி சீன் வந்தது இப்போது!

“யோவ் மனுசனா இருந்தா சூடு சொரன, வெக்கம் மானம் எல்லாம் இருக்கனும்யா! நீயல்லாம் ஒரு மனுசனா? நல்ல ஆம்பிளையா இருந்தா, என் மேல கை வச்சு பாருய்யா! என்ன முறைக்கிற?” என்று செந்தில் கவுண்டமணியை திட்டும் காட்சி!

“அட.. அட.. என்ன ஒரு டைமிங்! கரைக்ட்டா போட்டுருக்க மாமா!” அவள் மேலும் சீண்ட!

“என்னடி சொன்ன? இன்னியோட என் விரதம் முடிஞ்சது தெரியாம, பேசிட்டியே பேபி! சோ சேட்!”

அவன் பாய்ந்து விட்டான் இப்போது!

“அய்யோ டாக்டர்! நான் தெரியாம பேசிட்டேன்! ப்ளீஸ் மன்னிச்சு! ஐ யாம் பாவம்!”

“என்ன இருந்தாலும் நான் உன் மது டார்லிங் இல்லையா? ப்ளீஸ்!”

“யோவ் டாக்டரே, கொஞ்சமாச்சும் டாக்டர் மாதிரி நடந்துக்கோ, இப்படி ரவுடி மாதிரி இருக்காதே!”

“ஓ! நான் டாக்டர்ன்றது இப்ப தான் அம்மணிக்கு தெரியுதா? கொஞ்சம் முன்னாடி என்னவெல்லாம் பேசின?”

“அது தான் பேசுன வாயை நல்லா பனிஷ் பண்ணிட்டியே?”

“ஹே.. பேபி, இது வெறும் ஸ்டார்டிங் தான்! இன்னும் இருக்கே!

அதுக்குள்ள என்ன?

ஏண்டி..  ஒழுங்கா கிஸ் பண்ண கூட தெரியாத கழுத நீ,

இந்த பத்து நாளா, என்ன பாடு படுத்துன என்னை? எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு கொடுக்க வேணா?”

இத்தனை நாளாய் Pre-Prod(uction) ஸ்டேஜ் லேயே இருந்த அவன், இப்போது முழு மூச்சாய் “production” இல் இறங்கினான்!

production?

அதாங்க baby production!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!