Skip to content
Post Views: 7,678
“ஏய்.. என்ன குட்டிமா சாப்பிட்டுட்டு இருக்கே? மூஸ் கேக்கா? ப்ரௌனியா?”
வீடியோ காலில் பேசுகையில் தன்வியைப் பார்த்து கேட்டாள் அவர்களின் அத்தை டாக்டர் ராகினி!
அன்று ஒரு சனிக்கிழமை பிற்பகல் நேரம்!
Advertisement
அவர்களுக்கு ஸ்கூல் லீவ் என்பதால், இருவரும் வைஷுவின் ஓய்வு எடுக்கும் அறையில் இருந்தனர்!
பெரும்பாலும் அவர்கள் இப்படிதான் சனிக்கிழமைகளில் இங்கு வந்து வைஷு கூட இருப்பார்கள்.
அவள் மாலை ஓபிக்கு கிளம்பும் வரை இங்கேயே இருப்பர்.
Advertisement
பின் டிரைவர் வந்து கூட்டிக்கொண்டு போய் வீட்டில் விட்டு விடுவார்!
Advertisement
அப்போது ராகினி வீடியோ காலில் வந்தாள். இது அவ்வபோது அவர்கள் செய்வது தான்! இப்போதும் பண்ணியிருந்தாள்!
“அய்யோ அத்தை! இது வேற பிரவுன் அல்வா, மதுவோட ஸ்பெஷல் டிஷ்!”
“பிரவுன் அல்வாவா அது என்ன வைஷு?”
Advertisement
“உளுந்தங்களி அண்ணி! கருப்பு உளுந்து கருப்பட்டி சேர்த்து செஞ்சது!”
“அதையா, இவங்க இப்படி விரும்பி சாப்பிடுறாங்க! பரவாயில்லயே! என்னையவே அந்த காலத்துல இதை சாப்பிட வைக்க எங்கம்மா படாத பாடு படுவாங்க! நல்ல ட்ரைன் பண்ணியிருக்க வைஷு!”
“நான் எங்க ட்ரைன் பண்ணினேன்? எல்லாம் மதுவோட கைங்கரியம்! இதெல்லாம் சாப்பிட்டா தானே ஸ்டார்ஸ் வாங்க முடியும்! ஸ்டார்ஸ் சேர்த்தா தானே மாமி டாடியோட அவுட்டிங் போக முடியும்?” சிரித்தாள் வைஷு!
காய்கறி, ப்ரூட்ஸ், சாதம், அப்புறம் இந்த மாதிரி ஹெல்தி டிஷ் எல்லாம் மிச்சம் வைக்காம சாப்பிட்டு முடித்தால், ரொம்ப நல்ல குட் கேர்ள் ஆக இருந்தால், மது அவர்களுக்கு ஸ்டார் ஸ்டிக்கர்கள் தருவாள்!
கோல்டன் மற்றும் சில்வர் ஸ்டார் ஸ்டிக்கர்கள்!
எவ்வளவு ஸ்டார்ஸ் எவ்வளவு சீக்கிரம் சேர்ப்பார்களோ அதைப் பொறுத்து தான் அவர்கள் அவுட்டிங் ப்ரோக்ராம்!
ஸ்டார்களை தாரிகாவும் தன்வியும் தனித்தனியேயும் சேர்க்கலாம். சேர்ந்தும் சேர்க்கலாம்!
அவர்கள் ஒற்றுமையாக ஸ்டார்ஸ் சேர்க்க அதிலும் ஒரு சப் க்ளாஸ்!
இது மதுவும் வைஷுவும் சேர்ந்து போட்டிருக்கும் புது ரூல்ஸ்!
இதில் பெனால்டியும் உண்டு!
எதாச்சும் தப்பு செய்து மாட்டிவிட்டால், கொடுத்த ஸ்டார்ஸ் திரும்ப வாங்கப்படும்!
தவறு செய்துவிட்டு அதை தானாகவே ஒத்துக் கொண்டால் அதில் கொஞ்சம் சலுகை மற்றும் ரிலாக்சேசன் உண்டு!
அதனால் தன்வியும் தாரிகாவும் சாப்பாடு ஒழுங்காக சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்!
அதனால கொஞ்சம் முன்பு இருந்ததை விட கொஞ்சம் எடை கூடி விட்டார்கள்!
“அதான் அக்காவும் தங்கச்சியும் மொழு மொழுன்னு சூப்பரா ஆகிட்டிங்களா! இப்படியே அழகி ஆகிட்டே போய்ட்டு, அப்புறம் என் பையன கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு சொல்லிடாதீங்க!” என்றார் டிபிக்கல் கிராமத்து பெண்மணி போல ஒரு விளையாட்டுக்கு!
“அத்தை! ஒரு டாக்டரா இருந்துட்டு, நீங்களே இப்படி பேசலாமா? மேரேஜ் பத்தியெல்லாம் பேசுற வயசா எங்களுக்கு! அதுவும் ஆதி அண்ணா எங்கள விட ரொம்ப பெரியவங்க!” பட படவென்று பேசினாள் தாரிகா!
“அம்மாடி! என் தம்பி பொண்ணுக்கு வாய பாரு! ஏய் குட்டிமா நான் சும்மா ஒரு funக்கு தாண்டா அப்படி சொன்னேன்!”
“ம்ம் என்ன சின்ன மேடம் நீங்க ஒண்ணுமே சொல்லல, ஒரேடியா அமைதியா இருக்கீங்க?”
“இந்த மேரேஜ் பத்தியெல்லாம் நான் ஒண்ணும் பேசவே மாட்டேன்! அப்புறம் என் ஸ்டார்ஸ்சை எல்லாம் மது பிடுங்கிடுவா!”
சொன்ன தன்விக்கு, மதுவை எப்போதுமே தங்கள் வீட்டிலேயே வைத்துக் கொள்ள ஆசை!
அதை தாரிகாவிடம் சொன்ன போது, “அது முடியாது தன்வி! மது ஆன்டி கல்யாணம் ஆகாதவங்க , நம்ம வீட்டுல எல்லாம் புல் டைம் இருக்க மாட்டாங்க!
நம்ம வீட்டுலேயே இருக்கணும்னா, நம் வீட்டுல இருக்கிறவங்க யாரையாவது கல்யாணம் செய்துகிட்டா மட்டும் தான் இங்கேயே இருக்கலாம்!”
தாரிகா ஒரு பெரிய மனுசி போல அந்த எட்டு வயதிற்கு தனக்குத் தெரிந்ததை சொன்னது!
நம் வீட்டுல அப்படி இருப்பது நம் சித்தா தான்!
பேசாம அவனை மதுவ கல்யாணம் செய்துக்க சொல்லி விடுவோம்!
அப்போ மது நம் வீட்டிலேயே இருப்பாள் எப்போதும்! தன்வியின் அந்த சின்ன மூளையில் இந்த ஐடியா வந்தது!
வந்ததை அப்படியே மதுவிடம் சொல்லவும் செய்தது!
மது திட்டி விட்டாள்!
“இப்படியெல்லாம் பேச யார் உனக்கு சொல்லிக் கொடுத்தது?
இது எல்லாம் பெரியவங்க விஷயம்! நீ குழந்தை! இது பற்றியெல்லாம் பேசவே கூடாது!
இது தப்பு! முதல்ல உன் கிட்ட இருக்கிற ஸ்டார்ஸ் பிப்டிய எடுத்து பெனால்டியா என்கிட்ட கொடுத்துடு” என்று வாங்கிக் கொண்டு விட்டாள்!
இனி அந்த ஐம்பது ஸ்டார்ஸ் சேர்க்க அவள் இன்னும் பத்து நாள் ஆகும்!
இதையெல்லாம் தன் அத்தையிடம் சொன்னாள் தன்வி!
“நான் கஷ்டப்பட்டு சேர்த்த ஸ்டார்ஸ் எல்லாம் இந்த மேரேஜ் பத்தி பேசியதால் போய்டுச்சு! நான் இனிமே பேசவே மாட்டேன்!” என்றாள் சின்னதாக முகத்தை வைத்துக் கொண்டு!
ராகினிக்கு சிரிப்பு ஒரு பக்கம் என்றால், சிந்தனையும் ஒரு பக்கம்!
அவள் மீண்டும் தன்வியிடம் குறும்புடன் சிரித்தபடி கேட்டாள்!
“ஏண்டா குட்டி, நம்ம வீட்டுல கல்யாணம் ஆகாம , நம்ம பெரிய தாத்தா கூட தான் இருக்கார்! நீ ஏன் உன் சித்தாவ கல்யாணம் செய்துக்க சொல்லி மதுவ கேட்ட?”
“அய்யோ அத்தை! பெரிய தாத்தா ரொம்ப வயசானவர்! அவரைப் போய் எப்படி?”
“ஆனா நம்ம ரகு சித்தாக்கு மது தான் நல்ல மேட்சிங்!”
ராகினிக்குள் இந்த வார்த்தைகள் அப்படியே ஆழமாய் உள்ளே இறங்கியது!
குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள்! இது தெய்வ வாக்கோ!
ரகுவிற்கு ஏற்ற பெண் தான் மதுவோ?
இந்த பெரியப்பா வேறு இப்போது போனில் பேசும் போது கூட மதுவைப் பற்றி அதிகம் சிலாகித்து பேசுகிறார்!
வைஷுவைப் பற்றி கேட்கவே வேண்டாம்! அவள் பேச்சில் மது அதிகம் வருகிறாள்!
ராகவனுக்கும் அவளைப் பற்றி நல்ல அபிப்பிராயம் தான்!
ஆனா இந்த ரகு என்ன நினைக்கிறான்னு தெரியலையே!
அடுத்த வாரம் தாரிகாவின் பிறந்த நாள் வருகிறது!
அப்போது அங்கு வைத்து பேசிக் கொள்ளலாம் என்று மனதிற்குள் தீர்மானித்தாள் ரகுவின் அக்கா ராகினி!
ரகுவின் ஓய்வு அறையில், அவனும் மதுவைப் பற்றி தான் யோசித்துக் கொண்டிருந்தான் அதே நேரம்!
அவனுக்கு தினமுமே மது வரும் நேரம் வீட்டில் இருந்து அவளை சைட் அடிக்க ஆசை தான்!
ஆனால் அவன் பயந்தது இந்த தன்வி குட்டிக்கு தான்!
அது கண்டுப் பிடித்துவிடும்!
“என்ன சித்தா, மது வர்ற நேரம் நீயும் கரெக்டா வீட்டுக்கு வந்துடுற?“ என்றோ,
அல்லது
“என்ன சித்தா மது நம்ம வீட்டுக்கு வர்ற ஆரம்பிச்சதுலே இருந்து இப்பெல்லாம் நீயும் தினமும் வீட்டுக்கு வந்துடுற!” என்றோ சொல்லி, மானத்தை வாங்கிவிடும்!
இதை அப்படியே அவள் அம்மா அந்த பெரிய ராட்சசி வைஷுவிடமும் சொல்லித் தொலைத்து விடும்!
அதனால் அவன் கொஞ்சம் கெத்து மெயின்டெயின் பண்ண , வீட்டில் இருந்து கொண்டே, சில சமயம் கீழே போகாமல் இருக்க வேண்டியும் இருந்தது!
அப்போ எல்லாம் மதுவின் போட்டோ இருந்தால் நல்லா இருக்கும்!
போனில் வைத்துக் கொள்ளலாம்! ரகசியமாய் ரசிக்கலாம்!
ஆனால், அவளை எப்படி போட்டோ எடுப்பது அவள் அனுமதியில்லாம!
யோசித்துக்கொண்டே அவன் அறையை விட்டு வெளியே ரிசப்சன் பக்கம் வந்தான்!
எங்கேயாவது மது இருக்காளா என்று பார்த்த படி!
மது அப்படி சில நேரம் இங்கு இருப்பதை அவனும் பார்த்து இருக்கிறானே!
சில சமயம் கமலா ஆண்டிகிட்ட பேசிக்கிட்டு இருப்பா, அட்மின் ஆபிசில்.
இல்லையென்றால் டயடிசியன் தர்ஷினியுடன் பேசிக் கொண்டிருப்பாள் அவளுடைய கேபினில்!
அங்கேயெல்லாம் அவள் இருப்பது தெரிந்தால், கேசுவலாக, ஏதோ அபிசியலா பேச போன மாதிரி அங்கே நேரே சென்று அவர்களிடம் பேசிவிட்டு, மது இருப்பதையே சட்டை செய்யாதவன் போல அவளை நேரே பார்க்காமல், ஓரக்கண்ணால் சைட் அடித்து விட்டு வந்து விடுவான்!
இந்த ரகு டாக்டர் இப்போதெல்லாம் பொசு பொசுகென்று நம் காபினுக்கு வந்து விடுகிறார்! நாம் ரொம்ப அலர்ட்டா இருக்க வேண்டியிருக்கு என்பது போல் தான் அவர்கள் நினைத்துக் கொள்ளும்படி அவன் ரொம்பவும் கெத்து கட்டிக்கொண்டு தான் மதுவை சைட் அடித்துக் கொண்டிருந்தான்!
அவன் வெளியே வந்த போது, ஓபி பேசன்ட்கள் காத்திருக்கும் ஹாலில் இருந்த டிவியில் கே டிவியில் காதல் கோட்டை படப் பாடல் “நலம் நலமறிய ஆவல்” ஓடிக்கொண்டிருந்தது!
சரியாக அவன் வெளியே வந்த நேரம்
“நிழற்படம் அனுப்பிடு என்னுயிரே
நிஜமன்றி வேறில்லை என்னிடமே!”
அவன் மைன்ட் வாய்ஸ் போல அனுராதா ஸ்ரீராமுடன் எஸ் பி. பி பாடிக் கொண்டிருந்தார்!
ஆனால் அவன் மைன்ட் வாய்ஸ் அங்கு போட்டோவில் இருந்த அவன் அம்மா விஜிக்கும் கேட்டிருக்கும் போல! அவர் மகனின் ஆசையை சீக்கிரமே நிறைவேற்றினார்!
மறு நாளே, அவன் போனில் மதுவை நிற்க வைத்து போட்டோ எடுக்கும் சந்தர்ப்பம் அவனுக்கு கிடைத்தது!
மறுநாள்.
“ஐ..மது..! மது முன்னாடி வண்டியில போய்க்கிட்டு இருக்கா.. சித்தா வண்டிய நிறுத்து, நிறுத்து..!” ஆனந்த கூக்குரலிட்டாள் ரகுவோடு பைக்கில் வந்து கொண்டிருந்த தன்விக் குட்டி!
“ஏய் இரும்மா, மது எங்க இங்க வரப் போறா? இன்னிக்கு சண்டே! நீ வேறே யாரையாவது பார்த்துட்டு கத்தாதே!”
ஞாயிற்றுக்கிழமைகளில் மது அவர்கள் வீட்டுக்கு போவதில்லை.
அன்று வைஷுவே குழந்தைகளைப் பார்த்துக் கொள்வாள், அவர்கள் பிரைவசியில் நுழையக் கூடாது என்று மது சண்டே அன்று போக மாட்டாள்!
“இல்லை சித்தா அது மது தான், நீங்க போய் ஓவர்டேக் பண்ணி நிறுத்துங்க!” அடம்பிடித்தாள் சிறுமி!
வேறு வழியில்லாமல் அவனும் அது போல செய்ய, உண்மையாகவே மது தான்! பின்னால் மானஸா!
மது கிரீம் மற்றும் பீச் கலர் காம்பிநேசனில் காட்டன் சாரி அணிந்து, எப்போதும் போல் இல்லாமல் (அவள் காண்டீனில் இருக்கும்போது தலையைப் பின்னி கொண்டையிட்டுக் கொண்டு அதன் மேல் ஒரு டிச்போசபல் கேப் அணிந்து கொள்வாள் சாப்பாட்டில் முடி விழுந்து விடக் கூடாது என்பதற்காக)
தன் நீளமான தலைமுடியை பின்னாமல் ஒரு கேப்சர் கிளிப் மட்டும் போட்டு, லூஸ் ஹேரில், ஜாதி மல்லிப்பூவை இரு சரமாக தலையில் வைத்துக் கொண்டிருந்தாள்!
நெற்றியில் சின்ன சந்தன கீற்றுடன் சின்ன கோபி பொட்டு!
காதில் முத்துவினால் ஆன பெரிய குடை ஜிமிக்கி! பார்க்க அப்படியே தேவதை போல் இருந்தாள்!
மானஸாவும் பட்டு பாவாடை தாவணி அணிந்து இருந்தாள்! அப்படியே மதுவின் சாயலுடன் கொஞ்சம் சின்னப் பெண்ணாக!
“ஹாய் மது!” என்றபடி வண்டியில் இருந்து குதித்துக் கொண்டு இறங்கியது தன்வி!
தன் ஸ்கூட்டியின் முன் திடீரென்று வந்து நின்று வழி மறித்தவர்களை சற்று கோபமாக நிமிர்ந்து பார்த்த மது, இவர்களை கண்டதும் குளிர்ச்சியானாள்!
அவளும் ரகுவை எப்போதும் புல் பார்மல் ட்ரெஸ்ஸில் பார்த்து இருக்கிறாள்!
இப்போது அவனும் டி சர்ட் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து இருக்க, அவளுக்கு கொஞ்சம் கூச்சமாக இருந்தது அவனைப் பார்க்க!
வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கினாள்!
“ஹாய் குட்டிமா! நீ எங்கடா இவ்வளவு காலையில?”
மது வண்டியில் இருந்து இறங்கியதும் ஓடிப் போய் அவளைத் தொற்றிக் கொண்டு, அவள் இடுப்பின் இருபுறமும் கால்களை போட்டுக் கொண்டு அவள் வயிற்றில் லான்ட் ஆகி விட்டிருந்த, தன்வியை அவள் நெற்றியில் முட்டி கொஞ்சியவாறு கேட்டாள் மது!
“நானும் சித்தாவும் பிஷ் வாங்க மார்கெட்டுக்கு போயிட்டு இருக்கோம்! நீ எங்க போயிட்டு இருக்க?”
“ஓ! அப்படியா, இன்னிக்கு என் சிஸ்டர் மானுவுக்கு பர்த்டே! அதான் காலைல கோயிலுக்குப் போயிட்டு, அப்படியே ஆண்ட்டியோட திக் பிரெண்ட் ராஜு அங்கிள் வீட்டுக்கு ஸ்வீட் கொடுக்கப் போய்க்கிட்டு இருக்கோம்! அவங்க வீடும் இந்த பக்கம் தான்!”
“அப்படியே உனக்கு, தாருவுக்கு, தாத்தாவுக்கும் ஸ்வீட் எடுத்துட்டு வந்துருக்கேன், உங்க வீட்டுல போற வழியில கொடுக்கலாம்னு இருந்தேன், நீயே வந்துட்டே! இந்தா!” ஒரு ஷாப்பிங் பேகை கொடுத்தாள்!
“என்ன இது?”
“அக்காரவடிசில், அப்புறம் பட்டணம் பக்கோடா வித் கோகனட் சட்னி! சூடா இருக்கு ஹாட் பாக்ஸ்ல! என் பாட்டியோட சிக்னேச்சர் டிஸ்கள்! சாப்பிட்டுப் பாரு!”
“மெனி மோர் ஹாபி ரிட்டர்ன்ஸ் ஆப் தே டே!” ரகு மானஸாவுக்கு கைக் கொடுத்து வாழ்த்தினான்!
“என்ன படிக்கிற?”
“பி என் வொய் எஸ் (BNYS) நாச்சுரோபதி அண்ட் யோகா சயின்ஸ்!”
“ஓ தட்ஸ் நைஸ்!” ஆச்சர்யப் பட்டான் ரகு!
“சித்தா மது இன்னிக்கு ரொம்ப அழகா இருக்கா இல்ல? ப்ளீஸ் எங்கள ஒரு போட்டோ எடேன் ப்ளீஸ்!” தன்வி கொஞ்சிக் கேட்டாள்!
“நோ குட்டிமா, இப்படி அவங்க கன்சென்ட் இல்லாம எல்லாம் போட்டோ எடுக்கக் கூடாது!”
“இல்ல பரவாயில்ல டாக்டர், எங்கள போட்டோ எடுங்க!” மது அனுமதித்து
தன்வியைத் தூக்கி வைத்துக் கொண்டாள்!
அப்படியே அவர்கள் மூவரையும் தன் ஐ போனில் போட்டோ எடுத்தான்! அப்படியே மதுவையும் ஒரு போட்டோ தனியே!
அவன் ஆசைப்பட்டது கிடைத்தது விட்டது இந்த தன்விக் குட்டியால்!
போகும் போது அவளுக்கு ஒரே முத்த மழைதான்! கொஞ்சல் தான் அவளின் சித்தாவிடமிருந்து!
அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார்கள் சகோதரிகள் இருவரும்!
“ஏன்க்கா, இவரா காண்ட்ராக்ட் எடுத்ததற்கு உன் மேல் கொலை காண்டில் இருக்கிறதா சொன்ன? பார்த்தா அப்படி தெரியலையே! அவர் உன்ன வேற மாதிரில்ல பார்த்துட்டு இருந்தார்!”
“வேற மாதிரின்னா எப்படி?”
“ஒரு மாதிரி ரொமாண்… நாக்கைக் கடித்துக் கொண்டு,
“ஷ்.. இல்ல.. அப்படி ஒண்ணும் உன் கோபமா இருக்கிற மாதிரி தெரியல அவர் பார்வை!”
“அவர் என்னமோ செய்துட்டு போகட்டும் விடு!”
மது அவன் பேச்சைத் தங்கையிடம் தவிர்த்தாள்!
அவன் தான் அவளை அப்படியே முழங்கி விடுவது போல் பார்த்தான் என்றால், தன் பங்குக்கு தான் ஏதாவது இவளிடம் உளறி வைத்து விடக் கூடாது!
அவர்கள் ராஜுவின் வீட்டுக்கு சென்றபோது, அவன் அப்பா தேவேந்திரன் எங்கோ வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தார்.
இவர்களைப் பார்த்ததும் தலையை மட்டும் ஆட்டிவிட்டு காரில் ஏறிப் போய் விட்டார்!
அவர் எப்போதுமே இப்படி தான் இவர்களிடம் நேரிடையாக எதையும் பேச மாட்டார்! ஏன் பேசவே மாட்டார்!
ஆனால், ராஜு உதவி செய்வதை தடுக்கவும் மாட்டார், அவரும் மறைமுகமாக உதவவே செய்வார்!
“ஏன்ப்பா இப்படி?” என்று ராஜுவே ஒருமுறை கேட்டே விட்டான்!
அவர் கொஞ்சம் தயங்கி விட்டு, “சரி நீயும் இப்ப ஒரு பெரிய மனுஷன் ஆகிட்ட உன்கிட்ட ஓபனா சொல்றதுல தப்பு இல்லை!”
“அப்பா சின்ன வயசுல கொஞ்சம் ஆட்டம் போட்டுருக்கேன்! பொம்பளைங்க விசயத்துல.. பேருக்கு ஏத்தா மாதிரி!”
“அதுனால சொசைட்டியில எனக்கு இந்த வயசுல கூட நல்ல பேர் இல்ல!
இத்தனை வயசுலயும் என்னை அதே மாதிரி தான் பார்க்கிறாங்க!
ஆனா நான் உன் அக்கா மதுரா கேன்சர்ல இறந்த பின் நான் ரொம்ப மாறிட்டேன்! அது அவங்களுக்கு தெரியாது!”
“நான் உன் பிரண்ட என்ன தான் என் பொண்ணு போல நினைச்சாலும், இந்த சொசைட்டி நம்புமான்னு தெரியல!
அதுங்க இன்னொரு இடத்துல வாழ்க்கைப்பட்டு போக வேண்டிய பொண்ணுங்க!
நம்ம கிட்ட தொடர்பு இருக்கிறதால, வீணா தேவையில்லாம அவங்க பேர் கெட்டுடக் கூடாதுப்பா! அதுனலா தான் உன் பின்னாடி இருந்து ஹெல்ப் பண்ணுறேன்!”
“நீயும் கூட நேரே எதுலயும் இன்வால்வ் ஆகி அந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணிடாதே!
அவள் தம்பிய அவள் பின்னாடி அனுப்பிட்டு, அவன் பின்னாடி தான் நீ நிக்கணும்! ஏன்னா நீ ஒண்ணும் கூடப் பிறந்தவன் கிடையாது மதுவுக்கு!”
“இப்ப வேற நீங்க ஒருத்தன் கிட்டயிருந்த காண்ட்ராக்ட்டை, அவனை டெர்மினேட் பண்ண வச்சு வாங்கியிருக்கீங்க!
பார்த்து கேர்புல்லா இருங்க! அவனால ஏதும் பிரச்சினை வந்தாலும் வரலாம்! அப்படி வந்தா, நீ இப்படி தான் நடந்துக்கணும்”
தன்னிடம் அப்பா இப்படி சொல்லியதை மதுவிடம் சொல்லியிருக்கிறான் ராஜுவும்!
“அதனால் அவர் உன்கிட்ட பேசாம போனா, அவர் ஏதோ கோபமா இருக்கார்னு நினச்சிடாதே!” என்றும் சேர்த்து சொன்னான்!
இப்போது மது அதை நினைத்துப் பார்த்து விட்டு, நேரே ராஜுவின் அம்மாவையும் பாட்டியையும் காண வீட்டின் உள்ளே சென்று விட்டாள்!
ராஜூவின் அப்பா இவ்வளவு யோசித்து நடந்தும் கூட, அடுத்து வந்த சில நாட்களிலேயே விதி மதுவைக் காயப்படுத்தி விட்டது!
அதுவும் அவளின் ரகுவின் வார்த்தைகளால்!
“உன் அடுத்த ப்ளான் என்ன மது? என் வீட்டில் எல்லோரும் இப்போ உன் பக்கம்! அடுத்து என்னையும் வளைச்சுப் போட்டு, என்னைக் கல்யாணம் செய்துக்கிறதா?”
இதன் பின்னணியில் அந்த ஒட்டுண்ணி பார்த்தி!
error: Content is protected !!