Skip to content
Post Views: 7,158
“என்னையும் வளைச்சுப் போட்டு, என்னைக் கல்யாணம் செய்துக்கிறதா?”
ரகுவின் வார்த்தைகளே இன்னும் காதில் மீண்டும் மீண்டும்! மதுவின் காதுகளில் ரிபீட் ஆக கேட்டுக் கொண்டிருந்தது!
அவளால் சரியாக ஸ்கூட்டியை ஓட்ட முடியவில்லை! தலை பயங்கரமாக வலித்தது!
போனில் கீதாவிடம் “கொஞ்சம் டின்னர் வேலைய நீயே இருந்து பார்த்துக்கிறியாடா, எனக்கு கொஞ்சம் தலை வலிக்குது, வீட்டுக்குப் போயிட்டு காலைல வந்துடறேன் நேரமா! உதவிக்கு வேணுமின்னா மானுவ அனுப்புறேன் ப்ளீஸ்டா!”
Advertisement
“அக்கா என்னக்கா, அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்! நீங்க ரெஸ்ட் எடுங்க! படிக்கிறப் பிள்ளைய ஏன் தொந்தரவு செய்றீங்க?” கீதா பொறுப்பேற்றுக் கொண்டாள்!
மது வீட்டுக்குப் போய், பாட்டி போட்டுக் கொடுத்த காபியை குடித்து விட்டு, மாடிக்குப் போறேன் என்று அவரிடம் சைகையில் சொல்லிவிட்டு. மாடியில் இருக்கும் அந்த சின்ன அறைக்குள் நுழைந்து கொண்டு கதவைத் தாழிட்டு விட்டு அங்கிருந்த ஒற்றை கட்டிலில் தொம்மென்று விழுந்து, சத்தமில்லாமல் விக்கி விக்கி அழுதாள்!
மது அப்படி தான், எவ்வளவு கஷ்டம் என்றாலும், வேதனை என்றாலும் அடுத்தவர் பார்க்க அழவே மாட்டாள்!
Advertisement
கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட அடுத்தவர் முன்னிலையில் அவளிடம் இருந்து வரவே வராது!
Advertisement
ஆனால் அழாமல் இருந்து உள்ளுக்குள் ஸ்ட்ரெஸ் ஏற்றிக் கொள்ளாமல் இருக்க, இப்படி தனியே அவளுகென்று உள்ள ஒரு உலகம், இந்த தனியறை! இதில் வந்து அழுது தீர்த்து விடுவாள்!
இது பள்ளியில் படிக்கும்போது, அவளின் மரியாதைக்கும் பிரியத்திற்கும் உரிய ஒரு டீச்சர் சொல்லிக் கொடுத்தது!
“அடுத்தவர் பார்க்கிற மாதிரி யூரின் போவியா மது?’ கேட்டார் அவர்.
Advertisement
‘சீ..” என்று வெட்கப் பட்டாள் சிறுமி மது!
“அது எப்படி உனக்கு ப்ரைவசியான விஷயமோ, அது போல தான் இப்படி கண்கள் வழியே கண்ணீர் விடுவதும்! பிரைவசியான விஷயம்!”
“இப்படி அடுத்தவர் முன் அழுதால், ஒன்று நம் வீக்னெஸ் அடுத்தவங்களுக்கு காட்டுற மாதிரி ஆயிடும், இல்ல. அழுது காரியம் சாதிக்கிறோம்ன்ற கெட்ட இமேஜ் கிடைக்கும்!”
“அதுவும் பெண்கள் எப்போதும் அழுதழுது காரியம் சாதித்துக் கொள்வார்கள் என்ற அவப்பெயர் ஏற்கனவே நமக்கு உண்டு!”
“நாமும் அதை புரூவ் பண்ற மாதிரி தான் நடந்துக்கிறோம் பெரும்பாலும்!
அதுனால தயவுசெய்து எப்போதுமே அடுத்தவங்க முன்னாடி அழாதே! அது நம்மை பலவீனப்படுத்திவிடும்!
நாம அழுது, அதைப் பார்த்தவர்கள் சிலர் சந்தோசப் பட, சிலரோ அய்யோ பாவம் என்பார்கள், அது இன்னும் நம் ஸெல்ப் கான்பிடன்ஸ குறைக்கும்!”
இப்படி சொல்லிக் கொடுக்கப்பட்டு வளர்ந்திருந்தாள் மது!
அதனால், இன்று ரகு சொன்ன அந்த அமில வார்த்தைகளைக் கேட்டு, இதயத்தில் ஒரு அடி விழுந்தாற்போல் வலியும் பீறிட்டு வந்த அழுகையையும் உள்ளுக்குள் அடக்கிக் கொண்டாள்.
தொடர்ந்து அவளுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், அவளுக்கு அழுகையை உள்ளுக்குள் அடக்க மட்டுமில்ல, வெளியே ஏதாவது ஜோக் சொல்லி சிரிக்கவும் ட்ரைன் ஆக்கி விட்டிருந்தன!
“வளைச்சுப் போட்டு, கல்யாணம் செய்யப் பார்க்கிறியா?’,
கிட்டதட்ட அவள் அத்தை மகேஸ்வரியின் அம்மா அந்த நாகா பாட்டி கேட்ட அதே அமில வார்த்தைகள்!
அதுவும் மதுவைப் பார்த்துக் கூட இல்லை!
பதினாறு வயது மானுவைப் பார்த்து!
மது அப்படியே அதிர்ந்து நிற்க,
“அக்கா வளைச்சுப் போடுறதுன்னா என்னக்கா?” என்று அப்பாவியாய் கேட்ட மானுவைத் தன் தோளோடு அணைத்துக் கொண்டு வெளியே அழைத்து சென்று விட்டான் மாது அவர்களின் சகோதரன்!
“பாட்டி! வார்த்தையை அளந்து பேசுங்க, வாய் இருக்குன்னு என்ன வேணா பேசலாமா? வயசுல பெரியவங்க நீங்க! அவள் சின்னக் குழந்தை! அவளைப் பார்த்து இப்படி..”
“என்னாடி சின்ன புள்ள, அதான் வயசுக்கு வந்து வருஷம் நாலாகுதுள்ள! அதான் என் பேரன் சபரிய வளைச்சுப் போட பார்க்குறா?”
“பாட்டி, திஸ் இஸ் டூ மச், இப்படியெல்லாம் பேசாதீங்க!” துணைக்கு வந்தான் அவர்களின் டாக்டருக்கு படித்துக் கொண்டிருந்த அவர்களின் மாமா மகன் சபரி!
“நீ சும்மாயிருடா, இந்த அன்னக் காவடிங்கள கல்யாணம் செய்துட்டு, அப்படியே அவங்க குடும்பம் மொத்தத்துக்கும் சோறு போட தான் என் பொண்ணும் மாப்பிள்ளையும் உன்ன இவ்வளவு செலவு செய்து படிக்க வைக்குராங்களா?
பாரு உனக்கு என் பேத்தி ப்ரீத்தி இருக்கா! நீ பாட்டுக்கு இவ கிட்ட மயங்கி அவளை கல்யாணம் பண்ணிக்கலாம் நினைச்சுக்கிட்டு இருக்காதே, அது ஒரு நாளும் நடக்கவே நடக்காது”
அதற்குள் அங்க வந்து விட்ட மதுவின் மாமா, “அத்தை இப்ப யாரு சபரிக்கு கல்யாணப்பேச்சு எடுத்தா?
நீங்க வீணா ஏன் இப்படி மானுவ போய் திட்டிகிட்டு இருக்கீங்க?”
‘ம்ம். உங்க பையன் தான் சொல்லிட்டு இருக்கான போன்ல, அவ பிரண்ட் கிட்ட, என் அத்தை பொண்ணு மானுவ எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு, அவ படிப்பை முடிச்சதும் நான் அவளைத் தான் கல்யாணம் செய்துக்கப் போறேன்னு”
“ஏண்டா சொன்னியா?’
“ஆமா சொன்னேன் தான், அதுக்கு இவங்க எதுக்கு மானுவ திட்டனும்?”
“அவ தான உன்னை மயக்கி வச்சு இருக்கா?”
“பாட்டி, அவ என் கிட்ட பேசுனது கூட கிடையாது, ஏன் மதுவும் கூட என்னிடம் அவ்வளவா பேசுனது கிடையாது, மாது மட்டும் தான் பேசுவான், இந்த பத்து நாள்ல! அவங்கள போய் இப்படி..”
“அப்பா, பாட்டி பேசுறது ரொம்ப அநியாயம்ப்பா!”
“பார்த்தீங்களா மாப்பிள்ளை! இப்பவே எப்படி அவங்களுக்கு பரிஞ்சுட்டு வரான் பாருங்க!”
“ஸ்..ப்பா முடியல.” என்று அவன் வெறுப்புடன் உள்ளே போய் விட்டான்!
மதுவின் அம்மா லீலாவதியின் அண்ணன் சந்திர சேகர்!
செங்கல்பட்டில் உள்ளது அவர்கள் வீடு.
மதுவின் மாமா, அப்பாவைத் தொடர்ந்து அவள் அம்மா லீலாவும் இறந்து விட தனியே இருந்த தங்கையின் பிள்ளைகளை தம்மோடு அழைத்து வந்து விட்டார் சேகர்!
ஓய்வுபெற்ற அரசு அதிகாரி!
அவர் மனைவி மகேஸ்வரிக்கு இன்னும் சில ஆண்டுகள் இருக்கின்றன ஓய்வுப் பெற.
அவர்களுக்கு சபரி, சாலினி என்று இரு மக்கள்.
சபரி டாக்டருக்கு படித்துக் கொண்டிருந்தான். ஷாலினி பள்ளியிறுதியில்!
சேகர் மற்றும் லீலாவின் தாயார் பட்டு, தந்தை சுந்தரம்.
சுந்தரம் அரசுப் பணியில் இருக்கும் போதே இறந்து விட்டார்.
பின் வாரிசு அடிப்படையில் இருவரில் யாராவது ஒருவர்க்கு வேலை என்று வந்த போது, லீலா தன் அண்ணன் சேகருக்கு விட்டுக் கொடுத்தாள்!
பட்டு அம்மாவின் ஆசைப் படி!
தன் பெண் கெட்டிக்காரி, பையன் தான் அசடு, அவன் இப்படி ஒரு நிரந்தர அரசு வேலையில் அமர்ந்தால் தான் உண்டு என்று அவர் தன் விருப்பத்தை மகள் லீலாவிடம் சொல்ல, அவளும் தட்ட வில்லை!
பட்டுவும் அவர் மகன் சேகருக்கு ஒரு கண்டிசன் போட்டு தான் இதை செய்தார்.
தங்கைக்கு திருமணம் முடித்த பின் தான் அவன் செய்து கொள்ள வேண்டும் என்று!
நினைப்பது எல்லாம் தான் நடப்பதில்லையே!
வேலைக்குப் போன இடத்தில் உடன் பணி புரிந்த மகேஸ்வரியுடன் காதல்! அதன் தொடர்ச்சியாக கல்யாணம் முன்பே கர்ப்பம்!
வேறு வழியில்லை பட்டு அம்மாக்கு!
மகள் திருமணத்திற்கு முன் மகன் திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை!
திருமணம் ஆகும் வரை வெல்லமாய் பேசிக் கொண்டிருந்த மகேஸ்வரியும் அவள் அம்மாவும், காரியம் ஆனவுடன் புத்தியை காட்டினார்கள்!
அவர்களுக்கு லீலா இப்போது ஒரு பாரம்!
“அதுவும் எவனையாவது லவ் கிவ் பண்ணும், அப்படியே அதைக் காரணம் காட்டி, போட வைத்து இருக்கும் நகைகளை கூட போடாமல் ஓட்டிவிட்டு விடலாம்னு நினைச்சால், இந்த சனியன் ஒருத்தன கூட நிமிர்ந்து கூட பாக்காம தான் காலேஜ் போய் வருது!
இத காலேஜ் அனுப்புனதே இப்படி ஏதாவது நடக்கட்டும்னு தான்!”
இந்த விசயத்தில் அந்த பெண்மணி நாகாவுக்கு வேறு ஒரு மனக் குமைச்சல், பொறாமையும் உண்டு!
தன் பெண் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் ஆனது, அவருக்கும் கொஞ்சம் வருத்தம் தான்!
என்ன தான் அவளுக்கு நல்ல படியா கல்யாணம் ஆகிவிட்டது என்றாலும், தன் வளர்ப்பை நினைத்து கொஞ்சம் காம்ப்ளெக்ஸ் தான் உள்ளுக்குள்!
அது அப்படியே எரிச்சல் ஆக வெளிப்படும்!
இந்த லீலா மட்டும் எப்படி இப்படி ஒழுக்கமாக இருந்து அவள் அம்மாவிற்கு பெருமை சேர்க்கிறாள்!
கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்கள் ஆதலால், அவர்களுக்கு குழந்தைகளை வளர்க்கவும் ஆள் தேவைப் பட்டது!
அதனால் லீலாவின் திருமணத்திற்கு எந்த முயற்சியும் எடுக்கவே இல்லை
இதை ஒருவாறு ஊகித்துக் கொண்டு விட்ட பட்டு அம்மாள்,
அவள் கணவரின் நண்பரான ராமச்சந்திரன் கொண்டு வந்த வரன் – ரவீந்திரனுக்கு லீலாவைத் திருமணம் செய்து கொடுத்து விட்டார்!
பின் மகன் குழந்தைகளை வளர்ப்பது மட்டுமே அவருக்கு கடமையென்று ஆகிவிட்டது!
குழந்தைகள் பெரியவர்கள் ஆகும் வரை எட்டிக் கூட பார்க்காத மகேஸ்வரியின் அம்மா, அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின் வந்து ஒட்டிக் கொண்டு விட்டார் மகள் குடும்பத்தில்!
இதுவரை இருந்த அவரது மகன் வீட்டில் தொடர்ந்து இருக்க முடியாத சூழ்நிலை வந்தவுடன்!
வந்து பட்டு அம்மாளையும் வெளியே விரட்டி விட்டு இருப்பார், அவருக்கு மட்டும் பென்சன் என்ற ஒன்று இல்லாவிட்டால்!
அது இருப்பதால் பட்டுவை அங்கே வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் அம்மாவும் பெண்ணும், நாட்டு வைத்தியம் பார்க்கிறோம் என்று அவர் காதை டாமேஜ் பண்ணி, செவிடாக்கி விட்டு!
இப்போதும் லீலா இறந்த வீட்டில் கிட்டத்தட்ட அனாதைப் போல நின்றுக் கொண்டிருந்த அவள் பிள்ளைகளை அப்படியே விட்டுவிட்டு வர மனம் இல்லாது சேகர் இங்கே அழைத்து வந்து விட்டார்!
மாது மட்டும் அங்கேயே ராஜுவின் வீட்டில் தங்கி படிப்பை தொடர்வது என்று ப்ளான் செய்து விட்டு!
இவர்களால் அவர்கள் வருவதை தடுக்க முடியவில்லை!
“ம்மா விடும்மா, அவங்க இருக்கிற வீட்டை விற்றே இதுங்களுக்கு ஏதாவது காய் விக்கிறவன் இல்ல ஆட்டோ ஓட்டுறவன பார்த்து கல்யாணம் பண்ணி விடலாம்!”
“இந்த மானு என்னமோ படிக்கிறேன்ன்னு சொல்லிட்டு இருக்கு! அதெல்லாம் நான் விட மாட்டேன், ஏதாவது ஜவுளிக் கடை போன் கடைக்கு வேலைக்கு அனுப்பி அது கல்யாணத்தையும் இதே மாதிரி நடத்திடலாம்!
போடுற சோத்துக்கு இருக்கவே இருக்கு வீட்டுல வேலை!
அந்த பய மாதுவும் யாரோ அவன் பிரன்ட் ராஜு வீட்டுல இருந்து தான் காலேஜ் போகப் போறானாம்!
இருந்து விட்டு போகட்டும்” என்று மகள் சொல்லிய போதும் அந்த பெண்மணி நாகாவுக்கு அந்த பெண்களைக் கண்டாலே எரிச்சல்!
வீட்டில் நிறைய தொந்தரவு கொடுத்தார்!
அன்று .. மானு பீரியர்ட்ஸ் ஆகி விட, சாலினி வாங்கி வைத்து இருந்த சானிடரி நாப்கின்களை எடுக்கப் போன போது, ரொம்பவும் கீழ்த்தரமாக அதைக் கூட தர மறுத்து, பிடுங்கி வைத்துக் கொண்டு, இத யூஸ் பண்ணிக்கோ என்று ஒரு பழைய லுங்கி துணியைக் கொடுத்தார்!
“ஷாலு ஸ்கூல் போறவ, அவளுக்கு தான் வாங்கி வச்சுருக்கு இதெல்லாம்! உனக்கு இல்ல!” என்றார் வெடுக்கென்று!
மானு தரை துடைக்கக் கூட லாயக்கு இல்லாத அந்த துணியைப் பார்த்தாள்! அழுகையாக வந்தது!
ரொம்ப நேரம் தங்கையைக் காணாது தேடி வந்த மது, அழுதுக் கொண்டே பாத்ரூம் வாசலில் நின்றுக் கொண்டிருந்த மானுவைப் பார்த்து விவரம் அறிந்தாள்!
“அக்கா, இத எப்படிக்கா யூஸ் பண்றது?” அவள் வேகமாய் அழ,
“ச்சே..” என்றாகிவிட்டது மதுவுக்கு!
“இப்படி கூடவா ஒரு பொம்பள இருப்பாங்க! யாருன்னே தெரியாதவங்க கூட ஹெல்ப் பண்ணும் இந்த விசயத்துக்கு போய்!”
அவள் தம்பி மாதுவை அழைத்தாள்!
“டேய் நான் பேப்பரில் ஒண்ணு எழுதி தரேன், நீ போய் மெடிக்கல் சாப் எங்கன்னுப் பார்த்து வாங்கிட்டு வா”, என்று எழுதப் போக,
“வேண்டாம் அக்கா, எனக்கு தெரியும் நானே வாங்கி வரேன்” என்று சைக்கிள் எடுத்துக் கொண்டு போனான்!
இதையெல்லாம் கூட பொறுத்துப் போன மதுவால், இந்த சொல்லை தாங்கிக் கொண்டு தொடர்ந்து அந்த வீட்டில் இருக்க அவள் தன்மானம் இடம் கொடுக்கவில்லை!
பேக் செய்து கொண்டு கிளம்பிவிட்டாள்!
நடந்த எதுவும் பட்டுவுக்கு முதலில் தெரியவில்லை காது கேட்காத காரணத்தால்!
பின் சபரியின் மூலம் அறிந்து கொண்டவர், தானும் கிளம்பிவிட்டார் பேரப்பிள்ளைகளுக்கு துணையாக!
அப்போதுமே கூட, “அம்மாச்சியோட பென்சன் காச ஆட்டய போடலாம்னு தான் இப்படி டிராமா பண்ணி, தள்ளிட்டு போறா உங்கம்மாவ” என்ற மகேஸ்வரியின் முகத்தில் பட்டுவின் பென்சன் வரும் ATM கார்டை அவரிடம் இருந்து பறித்து தூக்கி எறிந்துவிட்டு கிளம்பி விட்டாள் மது ரோசமாக!
“ஆமாம் போங்க, போயி சோத்துக்கு வழியில்லாம உங்கப்பா கட்டி வைச்சுருக்க அந்த லீலா பேலஸ பேத்து பேத்து தின்னுங்க!” என்று நொடித்தாள் மகேஸ்வரி!
மது கண்களைத் துடைத்துக் கொண்டு, கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தாள்!
பழைய நினைவுகள் தலைவலியை அதிகப் படுத்த தைலம் தேய்த்துக் கொண்டாள்!
இந்த சமூகம் ஒரு பெண்ணை அவமானப்படுத்த, கேவலப்படுத்த வேண்டுமென்றால் ரொம்ப மெனக்கிட எல்லாம் வேண்டியதில்லை!
ரொம்ப சிம்ப்ளா அவள் கேரக்டரை அசாசிநெட் பண்ணினால் போதும்! நடத்தையை தவறாக பேசி விட்டால் போதும்!
நேற்று மானு, இன்று நான்!
error: Content is protected !!