Skip to content
Post Views: 6,272
மதுவினும் இனியாள் – 31
அத்தியாயம் 31:
வேகமாக திரும்பிய மது அவரிடம் சென்று கைகளை பிடித்து கொண்டு “சாரிப்பா. என்னாலதான உங்களுக்கு இப்படி ஆச்சு” என்று சொல்லிக்கொண்டு அழுதாள். அவளிடம் இருந்து கைகளை விலக்கி கொண்டவர் “மீனாட்சி. உன்னட்டத்தான் சொல்றேன். வருண கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிறாளா இல்லையான்னு அவளை கேளு” என்று மதுவை பார்க்காமல் மீனாட்சியை பார்த்து கேட்டார்.
“அப்பா என்னட்ட பேசமாட்டீங்களா. சாரிப்பா. ப்ளீஸ் என்ன மன்னிச்சிருங்க. என்னட்ட பேசுங்க”
Advertisement
மீனாட்சிதான் “ரெண்டு பேரும் அமைதியா இருங்க. உங்களுக்கு மறுபடியும் பிபி அதிகமாய்ட போகுது. மது நீ கிளம்பி முதல்ல வீட்டுக்கு போ. நைட்டெல்லாம் தூங்காம வந்துருக்க. எதுவா இருந்தாலும் அப்பா வீட்டுக்கு வந்த உடனே பேசிக்கலாம்”
“மீனாட்சி நீ சும்மா இரு. மது, எவனோ முன்ன பின்ன தெரியாத ஒரு வெள்ளைக்காரனுக்கெல்லாம் உன்ன கல்யாணம் பண்ணி கொடுக்க முடியாது. நீ வருண கல்யாணம் பண்ணிக்க சம்மதம்ன்னு சொல்லு. நா வீட்டுக்கு வரேன். இல்லன்னா எனக்கு என்ன ஆனாலும் பரவால்ல நீ ஆஸ்திரேலியாக்கே கிளம்பு. நாங்க எப்படியோ போய்க்கிறோம்” என்று அவர் மூச்சு வாங்க பேசியதை பார்த்த மீனாட்சி மதுவிடம்,
“என்ன மது பாத்துட்டுருக்க. அப்பா டென்ஷன் ஆக கூடாதுன்னு டாக்டர் சொல்லிருக்காரு. சரின்னு சொல்லேன் டி”
Advertisement
அப்பொழுதும் மது யோசிப்பதை பார்த்த செல்லதுரை கையிலிருந்த செலைன் ஏறிக்கொண்டிருந்த நீடிலை பிய்த்து எறிய போனார். மது அவசரமாக அவர் கைகளை பிடித்து கொண்டவள்,
Advertisement
“சரிப்பா எனக்கு வருண கல்யாணம் பண்ணிக்க சம்மதம். நீங்க டென்ஷன் ஆகாதீங்க. எனக்கு நீங்கதான் முக்கியம். வேற யாரும் கிடையாது” என்று செல்ல துரையின் கையை பிடித்து கொண்டாள்.
அதைக்கேட்டு அமைதி ஆனார் மதுவின் அப்பா
இந்த காட்சியை அப்பொழுதுதான் உள்ளே வந்த பார்த்தியும், சத்யனும் பார்த்துவிட்டு, பிறகு ஒருவரையொருவர் பார்த்து கொண்டார்கள்.
Advertisement
சத்யன் உள்ளே வந்து மதுவின் அம்மா அப்பாவிடம் நலம் விசாரித்தான். ஏற்கனவே சத்யன் மீனாட்சியிடம் போன் மூலம் பேசியிருப்பதால் அவர்களுக்கு அவனை நன்றாக தெரியும்.
மதுவின் துணைக்கு வந்ததற்கு நன்றி சொன்னார் மீனாட்சி. பிறகு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். சத்யன் மதுவிடம் “மது அப்ப நா கோயம்புத்தூர் கிளம்புறேன். நீ கிளம்புற டேட் முடிவு பண்ணி சொல்லு” என்றான்.
மது பேசாமல் தலையை மட்டும் ஆட்டினாள். மீனாட்சிதான் “என்னப்பா உடனே கிளம்புற. இங்க ரெண்டு நாள் தங்கிட்டு போயேன்” என்றார்.
“இல்ல ஆன்ட்டி . நீங்க அங்கிள கூட்டிட்டு வீட்டுக்கு போங்க. நா இன்னொரு டைம் வரேன்” என்றவன் மதுவிடம் “மது உன் லக்கேஜ்லாம் இறக்கிக்க. நா இதே கார்லயே கிளம்பிடலாம்ன்னு பாக்கிறேன்” என்று மதுவை கையோடு வெளியே கூட்டி சென்றான். பார்த்தியும் கூடவே சென்றான்.
ரூமை விட்டு கொஞ்சம் தள்ளி சென்றதும் சத்யன் மதுவிடம் “ஹே குட்டி பிசாசு. அப்ப பாஸ கழட்டிவிட முடிவு பண்ணிட்டியா?” என்றான். அவனை முறைத்தாள் மது.
“அவரை ஏன் முறைக்கிற மது. கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்ட. என்ன பண்ணலாம்ன்னு இருக்க” என்றான் பார்த்திபன்.
“அண்ணா. நான்தான வருண கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொன்னேன். வருண் சொல்லலேல. அவன் நல்ல பையன் தான். சொன்னா புரிஞ்சுப்பான். நோ ப்ராபளம்”
“அதான பாத்தேன். நீ கேடியாச்சே. ஆனா உங்க அப்பா எப்படி மது நீ சொன்னத நம்பி அமைதி ஆயிட்டார். உன்ன மாதிரி ஒரு கேடிய பெத்ததுக்கான எந்த அறிகுறியும் இல்லாம இவ்ளோ அப்பாவியா இருக்காரே” என்று அவன் சொல்லி கொண்டிருக்கும் போதே அந்த இடத்துக்கு மீனாட்சி வந்தார்.
வந்தவர் மதுவிடம் “நம்மதான சம்மதம் சொல்லிருக்கோம். வருண விட்டு வேண்டாம்ன்னு சொல்லிடலாம்ன்னு பிளான் ஏதும் வச்சிருக்கியா மது. உங்க அப்பா பாவம் அப்பாவி. உன்ன நம்பிடுவார். ஆனா உன்ன பத்தி எனக்கு நல்லாவே தெரியும். ஒன்னு சொல்றேன் கேட்டுக்க. நீ வருண கலயாணம் பண்ணிக்கலனாலும் எங்களுக்கு ஒன்னும் பிரச்னை இல்ல. ஆனா நீ சொல்ற வெளிநாட்டுக்காரன கல்யாணம் பண்ணிக்க நாங்க ஒத்துக்க மாட்டோம். அத தெளிவா புரிஞ்சுக்க” என்று சொல்லிவிட்டு திரும்ப ரூமிற்க்கு சென்றுவிட்டார்.
அவர் சென்றவுடன் சத்யன் மிக தீவிரமாக யோசித்து “இப்போ புரியுது மது. நீ உங்க அம்மா மாதிரி பொறந்துருக்க” என்றான்.
மதுவும் பார்த்தியும் அவனை முறைத்தனர். ஐய்யயோ, இதுக என்ன நம்மள பாச பார்வை பார்க்குதுங்க. இடத்தை காலி பண்ணிட வேண்டியதுதான், என்று நினைத்தவன் “சரி மது நான் கிளம்பறேன்” என்றவனை பார்த்தியும் மதுவும் சென்று வழியனுப்பி வைத்தனர்.
மதுவும் பார்த்தியும் மாலை நேரம் வரை இருந்தார்கள். மீனாட்சியின் தம்பி சிவநேசன் நேற்றிலிருந்து மீனாட்சிக்கு துணைக்கு இருந்தவர் , இன்று காலை வீட்டுக்கு சென்றிருந்தார். இப்பொழுது ஹாஸ்ப்பிட்டல் வந்தவர் மதுவிடம் “என்னடா மது.எப்படி இருக்க” என்று விசாரித்தார். அதற்கு மது அவரிடம் “நல்லாருக்கேன் மாமா. அத்தையும், அஸ்வினும் எப்படி இருக்காங்க” என்று அவர் மனைவியையும் ஒரே மகனையும் நலம் விசாரித்தாள்.
“நல்லாருக்காங்கடா. நீ வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்துட்டு காலையில் வரலாம். இங்க அம்மாக்கு நா துணைக்கு இருக்கேன்” என்றார்.
மது பார்த்தியை பார்த்தாள்.
“நா கொஞ்ச நேரம் இருந்துட்டு நைட் வீட்டுக்கு போறேன் மது. நீ உங்க வீட்டு கார்ல ட்ரைவர் இருக்கார். கிளம்பு” என்றவன் அவளை காரில் ஏற்றி விட்டு மது அப்பாவின் ரூமிற்குள் திரும்பவும் வந்தான்.
மீனாட்சிதான் அவனிடம் ஆதங்கப்பட்டார். “முன்னாடியே நீ அவனை பத்தி சொல்லிருக்கலாம்ல பார்த்தி. இவ்ளோ தூரம் போற அளவுக்கு விடாம ஊருக்கு கூப்ட்டிருக்கலாம்ல அவள” என்று.
“நா ஊருக்கு வர வரை மது அவருக்கு ஓகே சொல்லலம்மா . பாக்க கூட வரவேண்டாம்னுதான் சொல்லிருந்தா. அந்த ஹேரி மட்டுமில்ல. இன்னும் நிறைய பேர் இவளுக்கு ப்ரொபோஸ் பண்ணிருக்காங்க இந்த ஏழு எட்டு மாசத்தில. இவ எல்லாரையும் அவாய்ட் பண்ணிட்டுதான் இருந்தா. ஒருத்தன் லவ் பண்ணி மது ஓகே சொல்லலைன்னு, அவன் சொந்த காரனுங்க மதுட்ட தப்பா நடக்க பாத்தானுங்க. அப்ப இந்த ஹேரிதான் மதுவுக்கு ஹெல்ப் பண்ணி, அவரு இன்ஃப்ளுயன்ஸ்ல அவனுங்கள அந்த நாட்டை விட்டே கிளப்பிட்டார். இவளை எல்லாருக்கும் பிடிக்குது. லவ் சொல்றாங்கன்னு இவளை நாம வீட்டுக்கு கூப்பிடணும்னா நாம மதுவ படிக்க வச்சிருக்க கூடாது, வேலைக்கு அனுப்பியிருக்க கூடாது, முதல்ல ஆஸ்திரேலியா அனுப்பியிருக்க கூடாது இதுக்கெல்லாம் பயந்தா நம்ம பொண்ண கற்காலம் மாதிரி பூட்டிதான் வைக்கணும்” என்று பார்த்தி கூறியதும் அதிர்ந்து போனார்கள். பிரபஞ்சன் விஷயத்தை பற்றி இன்னும் விளக்கமாக கேட்டு தெரிந்து கொண்டார்கள் சிவநேசனும் மதுவின் பெற்றோரும்.
“அந்த பையன் அவ்ளோ பெரிய ஆளா” என்று சிவ நேசன் கேட்டார்.
“ஆமா அங்கிள். பெரிய பணக்காரர். பயங்கர மூளை” என்று ஆரம்பித்து ஹேரியை பற்றி முடிந்த வரையில் நல்ல விதமாகவே எடுத்து கூறினான் பார்த்தி.
“அவன் எவ்ளோ பெரிய ஆளா வேணா இருக்கட்டும். நம்ம பொண்ணுக்கு அவன் வேண்டாம் என்று மீனாட்சி திட்டவட்டமாக கூறினார்.
மது வீட்டுக்கு வந்தவள் முதலில் ஹேரியிடம் கால் பண்ணி பேசினாள். தந்தை நன்றாக இருப்பதை மட்டும் கூறிவிட்டு ரெஸ்ட் எடுக்க போவதாக சொல்லி வைத்தவள் அமெரிக்காவில் அவள் அத்தை வீட்டில் இருக்கும் அப்பத்தாவிற்கு கால் பண்ணினாள். அவர் போனை எடுத்ததும் அவரிடம் பாய்ந்தாள்.
“ஏன் கெழவி. நீ பண்ண வேலதானா இது. பொண்ணையும் பையனையும் சம்மந்தி ஆக்கி விடலாம்னு பிளான் பண்ணி, இதெல்லாம் பண்ணிக்கிட்டிருக்கியா”
“முதல்ல உங்கப்பன் எப்படியிருக்கான் மது. நீ ஊருக்கு வரேன்னு உங்கம்மா சொன்னாளே வந்துட்டியா” என்று கூலாக பதில் கேள்வி கேட்டார் ஞானசரஸ்வதி மதுவின் அப்பத்தா.
“நா ஊருக்கு வந்துட்டேன். உன் பையன் நல்லாருக்கார். என்ன ப்ளாக்மெயில் பண்ணிட்டு படுத்துருக்கார்”
“எதுக்குடி உனக்கு மெயில் பண்றான்”
“ஏய் கெழவி, மெயிலும் பண்ணல, லெட்டரும் போடல. என்ன வருணத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு மிரட்டிட்டு இருக்கார்”
“ஏண்டி. உனக்கு வருண கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லையா” என்று கேட்டவரிடம் சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் பிறகு “நா வேற ஒருத்தர காதலிக்கிறேன். அவன் ஆஸ்திரேலியாகாரன்ங்கிறதால உன் பையனும், மருமகளும் சம்மதிக்க மாட்றாங்க” என்று மது கூறியதை கேட்டதும் அப்பத்தா “அப்ப அவன் கூட ஓடி போய்டுடி” என்றார்.
“கெழவி…!”
“ஆமாண்டி. எனக்கும் நீ வருண கல்யாணம் பண்ணிக்கிறதுல விருப்பம் இல்ல. உங்கத்தை பொண்ணு கேட்டாலும் உங்கப்பன் ஒத்துக்க மாட்டான்னுதான் நா அமைதியா இருந்தேன். இந்த பக்கம் பொண்ணு அந்த பக்கம் பையன். நா எந்த பக்கம் பேசுனாலும் சரி வராதுன்னுதான் பேசாம இருக்கேன். இங்க இந்த வருண் பய போக்கு ஒன்னும் எனக்கு சரியா படல”
வருணை மது ஒரு ஆறு வருடங்களுக்கு முன் இந்தியா வந்தபோது பார்த்திருக்கிறாள். அமைதியாக அவன் உண்டு அவன் வேலை உண்டு என்று இருப்பான். மது அப்போது பன்னிரண்டாம் வகுப்பில் இருந்ததால் பிஸியாக இருந்தாள். அவனும் அப்போது படித்து கொண்டுதான் இருந்தான். அவளிடம் ஃபார்மலாக பேசுவான் அப்போது. அதற்கு பிறகு அவன் ஊருக்கு சென்ற பிறகு ஏதும் பேசியதில்லை. அவள் அத்தை அவளிடம் நன்றாக பிரியமாகவே இருப்பார். மாமாவும் நன்றாக பேசுவார் மதுவிடம். அங்கேயே கன்ஸ்டரக்சன் கம்பெனி வைத்திருக்கிறார். அதை யோசித்து கொண்டிருந்த மது பாட்டியிடம்
“ஏன் அப்பத்தா. நல்ல பையனாதான் இருந்தான் இங்க வந்தப்ப பாத்திருக்கனே”
“ஒன்னும் எனக்கு சரியா புரிபடல மது. நானே உனக்கு கால் பண்ணலாம்னுதான் இருந்தேன். இன்னும் ஒரு அஞ்சு நாள்ல நாங்கல்லாம் அங்க வரோம். அப்பவே உனக்கும் வருணுக்கும் நிச்சயம் பண்ணிடலாம்னு பேசிட்டுருக்காங்க. அதுக்குள்ள நீ ஆஸ்திரேலியாக்கே போய்டு” என்று வைத்து விட்டார் அப்பத்தா.
இரண்டு நாளில் செல்ல துரை ஹாஸ்ப்பிட்டலில் இருந்து வந்ததும் மெல்ல மீனாட்சியிடம் கிச்சனில் வந்து பேசினாள் மது.
“ஏம்மா. யாரு என்ன ன்னு கூட விசாரிக்காம வெள்ளையா இருக்கான்ற ஒரே காரணத்துக்காக எப்படிம்மா வேண்டாம்கிறீங்க”
மத்திய சாப்பாட்டுக்கு காய் அரிந்து கொண்டிருந்த மீனாட்சி “எதுக்கு மது விசாரிக்கணும். மேல்நாட்டு கலாச்சாரம் என்னன்னு என்னைவிட அங்க இருக்க உனக்கு நல்லா தெரியுமே”
“பொதுவா பாத்துட்டு அப்படி பேச கூடாதும்மா. ஹேரிக்கு இதுவரையிலும் ஒரு கேர்ள் பிரண்ட் கூட கிடையாது. என்ன லவ் பண்ண ஆரம்பிச்சப்புறம் தண்ணி அடிக்கறத விட்டுட்டான். என் மேல உயிரா இருக்கான். இதைவிட என்னம்மா வேணும்”
“உன் வயசுக்கு உனக்கு இவ்ளோதான் தெரியும் மது. ஆனா உன்ன பெத்தவங்க நாங்க உன் எதிர்காலத்த யோசிச்சுதான் முடிவு பண்ண முடியும்”
“என்ன முடிவும்மா. நீங்க பாக்கிற மாப்பிள மட்டும் என்னை சாகிற வரை பத்திரமா பாத்துப்பான்னு எத வச்சு நம்புறீங்க. ஆனா என்னால உறுதியா கூற முடியும் என் ஹேரி நா சாகிற வரை இல்ல, அவன் சாகிற வரை என்ன மட்டும் தான் நினைச்சு வாழ்வான்” என்று சொல்லிவிட்டு மது சென்று விட்டாள். அந்த வார்த்தைகள் மீனாட்சியை அசைத்து பார்த்தது.
மறுநாள் செல்லத்துரையும் மீனாட்சியும் வீட்டு வாசலில் கிடந்த சேரில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த மது பொதுவாக “நா இன்னும் ரெண்டு நாள்ல ஆஸ்திரேலியா கிளம்பனும்” என்றாள்.
செல்லத்துரை அவளிடம் பேசுவதில்லை. மீனாட்சியும் அவசியத்திற்குத்தான் பேசினார். மதுவும் பெரிதாக பேசுவதில்லை இருவரிடமும். ஆனால் சொந்த வீட்டிலேயே இப்படி அந்நியள் போல் இருப்பது மதுவிற்கு வலித்தது.
இப்பொழுது மீனாட்சிதான் சொன்னார் “இன்னும் மூணு நாள்ல உங்க அத்தை குடும்பமும் அப்பத்தாவும் வராங்க. உனக்கு வருணோடு நிச்சயம் மாதிரி வச்சுட்டு கல்யாண தேதியும் முடிவு பண்ணதுக்கு அப்புறம் நீ கிளம்பலாம்”
“ம்மா, கிண்டல் பண்றியா. நீ சொல்றத பாத்தா பதினைஞ்சு நாள் ஆகும் போல. அவ்ளோ நாள் லீவெல்லாம் முடியாது. நானே எமர்ஜென்சி லீவ் எடுத்துட்டு வந்தேன்”
“லீவ் இல்லன்னா வேலைய விட்ரு. ஊருக்கே போகாத”
“உங்க மாமனார் ஆஃபீஸ்லயா நா வேலை செஞ்சிட்ருக்கேன். உன் இஷ்டத்துக்கு வேலைய விட்றதுக்கு. அப்படியே விட்றதா இருந்தா கூட இந்த ப்ராஜெக்ட் முடிஞ்சப்புறம்தான் நா வேலைய விட முடியும். உங்க சம்மதம் இல்லாம நா யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் இது செல்லத்துரை பொண்டாட்டி இந்த தாய் மீனாட்சி மேல சத்தியம்” என்றவள் கூறியதை கேட்டதும் செல்லத்துரைக்கு சிரிப்பு வர பார்த்தது. மீனாட்சிதான் பீதியுடன் மகளை பார்த்தார்.
“அவ போகட்டும் மீனாட்சி. மூணு மாசம் கழிச்சு நிச்சயத்தோடே கல்யாணம் வச்சுக்கலாம். ஆனா ஒன்னு மட்டும் கேட்டுட்டு போக சொல்லு. அவ வேற மாதிரி முடிவு எடுத்தா அன்னைக்குதான் இந்த பூமியில நமக்கு கடைசி நாள்” என்று சொல்லிவிட்டு செல்லதுரை உள்ளே சென்றுவிட்டார்.
அதற்கு பிறகு மது யோசிக்கவில்லை. சத்யன் இன்னும் பத்து நாள் இருந்து விட்டு வருகிறேன் என்று சொன்னதால், ரெண்டு நாளில் பிளைட் ஏறிவிட்டாள்.
(வருவாள்…)
error: Content is protected !!