Skip to content
Post Views: 4,414
காதல் அன்று
ராகவ் எப்போதும் உட்கார்ந்து கொண்டு தம் அடிக்கும் அந்த பால்கனியில் இருக்கும் ஒரு சேரில் உட்கார்ந்து கொண்டு வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
உள்ளுக்குள் அவள் ராகவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
இது அவளுக்கு முன்பிருந்தே இருந்த பழக்கம் தான்! அவன் உயிருடன் இருக்கும் போதே அவன் பிரிந்திருக்கும் நேரத்தில் அவள் இப்படி தானே பேசிக் கொண்டிருப்பாள்!
Advertisement
இப்போதும் அப்படியே!
ராகவ் இறந்து மூன்று மாதங்கள் ஆகி விட்டிருந்தன!
அதற்குள் எத்தனை இடிகள் அவளுக்கு!
Advertisement
ராகவ் இறந்ததையே தாங்கிக் கொண்டு இன்னுமும் உயிருடன் இருக்கும் அவளுக்கு அந்த அடுத்தடுத்த இடிகள் மற்றவர்களுக்கு தந்த அளவு அதிர்ச்சியை இவளுக்கு தரவில்லை!
Advertisement
இடிகள்?
ஆமாம்!
ராகவ் இருந்து ஒரு வாரம் கூட ஆக வில்லை, வித்யாவின் கைக்கு இன்னமும் ராகவின் டெத் சர்டிபிகேட் கூட வந்து சேர்ந்திருக்கவில்லை!
Advertisement
அந்த ஏற்பாடுகளை எல்லாம் திவ்யா அப்பாவும் அவள் பிரன்ட் செலின் அக்காவின் கணவன் தமிழ்செல்வனும் பார்த்துக் கொண்டார்கள்!
செலின் கணவன் தானே அவர்களின் லாயர்!
ஆனால் அதற்குள் இவர்கள் வாய்தா முடிந்து அடுத்த ஹியரிங் வந்து, தமிழ்செல்வனையும் மீறி அங்கே பணம் விளையாடி விட்டது!
எல்லோரும் வித்யா உட்பட நினைத்துக் கொண்டிருந்தது போல ராகவ் கேஸ் போட்டு இருந்தது வெறும் அந்த வீட்டிற்காக மட்டும் இல்லை!
அவனின் சொத்து மொத்தத்திற்கும்!
அவற்றின் மொத்த மதிப்பு கிட்டதட்ட நூறு கோடி ரூபாய்!
அத்தனைக்கும் ஏக போக வாரிசு ராகவ்! அது மொத்தமும் அவன் அம்மா நந்தினியின் சொத்துக்கள்!
இராஜேந்திரன் வழியில் உள்ள சொத்துக்கள் அனைத்துமே ஏற்கனவே அந்த இவில் பவர் ஈஸ்வரியின் வயிற்றுக்குள் போய் ரொம்ப வருஷங்கள் ஆகி விட்டன!
இப்போது நந்தினியின் சொத்துக்களையும் அபகரிக்க தான் அந்த ஈஸ்வரி அத்தனை தூரம் ராகவிற்கு கல்யாணம் ஆகவே கூடாது, வாரிசு வந்து விடக் கூடாது என்று அத்தனை ஏற்பாடுகள் பண்ணியது!
இதை வெறும் சித்திக் கொடுமை என்ற அளவில் மட்டுமே பார்த்திருந்தவர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சி!
ஆனால் உண்மையை அறிந்தவர்கள் சில பேர் மட்டுமே!
பெரியப்பா அதனால் தான் அத்தனை தீவிரம் காட்டினார் ராகவிற்கு நியாயம் கிடைக்க!
அதனால் தான் ராகவ் பணக் கஷ்டம் வந்த போது தாங்கிக் கொள்ள முடியாமல் ஸ்ட்ரெஸ்க்கு ஆளானான்!
எப்படி இருக்க வேண்டிய நான், என் மனைவி மகனோடு இப்படி காசுக்கு கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கிறோனே, அதுவும் என் மயில் எப்படி கணக்கு பார்த்து கணக்குப் பார்த்து செலவளிக்கிறாள்!
வித்யா சிக்கனமாக இருக்கும் போதெல்லாம் ராகவ் கடும் மனஉளைச்சலுக்கு தான் ஆளானான்!
ஒரு பக்கம் மனைவியை நினைத்து பெருமையாக இருந்தாலும் ஒரு பக்கம் இப்படிப் பட்ட சூழ்நிலையில் என் தேவதையை வைத்து இருக்கிறோமே என்றும்!
ராகவ் இறந்த பத்து நாட்களுக்குள், வித்யாவின் இன்னமும் கண்ணீர் கூட காய்ந்திருக்க வில்லை, அவள் கேசை அவள் எடுத்து தொடர்ந்து நடத்தலாமா என்று எல்லாம் கொஞ்சம் கூட அந்த பக்கம் யோசிக்கவில்லை, அவள் ராகவ் இறந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னுமும் மீளவில்லை! ஆனால் அவளுக்கு மூச்சு விடக் கூட இடம் தராமல், கேசை காசு கொடுத்து முடித்து விட்டு, தீர்ப்பை அவர்கள் பக்கமே வாங்கியும் விட்டார்கள்!
சொத்துக்கள் அனைத்தையும் நந்தினி ராகவின் பேரில் எழுதிய டாகுமெண்ட்கள் இன்னமும் பெரியாப்பாவின் லாக்கரில் சிக்கியிருக்க,
மனைவியின் சொத்துக்கள் கணவனுக்கு என்றும், மகன் ராகவ் இறந்து விட்டதால் மொத்தமும் ராஜேந்திரனுக்கே என்றும் தீர்ப்பு வந்து விட்டிருந்தது!
மேலும் ராகவ் வித்யாவின் கல்யாணத்தின் போது வித்யா மைனர் என்றும் பள்ளி மாணவி என்றும் அதனால் அவர்கள் திருமணம் செல்லாது என்றும் ராகவின் பங்கும் வித்யாவிற்கு கிடையாது மொத்தமும் இராஜேந்திரனுக்கு தான் என்றும் தீர்ப்பு!
படித்துப் பார்த்தால் பள்ளிக் கூட பசங்கள் கூட சொல்லி விடும் அபத்தம் என்று! அப்படி ஒரு தீர்ப்பு!
ரவுத்திரமானார் பெரியப்பா!
அதற்கு மேல் சியாம்!
“அவங்க நல்லாவே இருக்க மாட்டாங்க சார்” என்றான் அழுகையும் கொதிப்புமாக!
ராகவ் வித்யா எப்படியெல்லாம் லவ் பண்ணினார்கள்!
வித்யா எப்படி துணிந்து இந்த கல்யாணம் செய்து கொண்டாள் என்பதை எல்லாமும் ராகவ் சின்ன வயதில் பட்டக் கஷ்டங்களையும், நந்தினிக்கு ராஜேந்திரன் செய்த துரோகத்தையும் சொல்லி அழுதார் பெரியப்பா!
கேட்டுக் கொண்டிருந்த ஐபிஎஸ் கெவினுக்கே அழுகை வந்தது!
“விட மாட்டேன் சார், அப்பீல் போவோம், என் மாமனார் ஹை கோர்ட் சீனியர் லாயர்!
தமிழ் சார், நீங்க அப்பீலுக்கு ஏற்பாடு பண்ணுங்க நாம அவங்கள உண்டு இல்லைன்னு பண்ணிடலாம்!” என்று சூளுரைப்பது போல சொன்னான் கெவின்!
“அதுக்கு முன்னால வித்யாவுக்கும் மித்துவுக்கும் பாதுகாப்பு வேணும் சார்” என்றார் திவ்யா அப்பா!
“கண்டிப்பா, ராகவ் ஹார்ட் அட்டாக்ல இறந்ததால, அந்த ஈஸ்வரி மேலே லீகல் ஆக்சன் எடுக்க முடியல, ஆனா கண்டிப்பா, இவங்க மேலே ஒரு சின்ன தூசுப் பட்டாலும் உன்னை தான் கொண்டு வந்து உள்ளே வைப்பேன், அது அவங்க தானா போய் தடுக்கி விழுந்தா கூட உன்னை தான் அரெஸ்ட் பண்ணவேன்னு சொல்லி மிரட்டி தான் வச்சுருக்கேன்” என்றான் கெவின்.
“அவங்க இங்க முதல்ல இருக்க வேண்டாம் சார்! வித்யாவுக்கு இங்க இருந்தா ராகவ் ஞாபகமாவே இருக்கும். அவங்கள என் பொண்டாட்டியோட பேர்ல ஒரு அப்பார்ட்மெண்ட் சென்னையில இருக்கு. அங்க தங்க வைப்போம்!
என் பொண்டாட்டி தான் ராகவிற்கு கொடுத்த கஷ்டத்திற்கு பிராயச்சித்தமா இத சொல்ல சொன்னா” என்றான் சியாம்!
கேசுக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்த பின், ராகவ் இறந்ததில் இருந்தே கடும் மனஉளைச்சல் மற்றும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து விட்டோமோ என்ற குற்றுவுணர்ச்சி காரணமாக உடல்நிலை சரியில்லாமல் போய் விட்டது பெரியாப்பவிற்கும்!
அதிலும் ராகவின் உடலுக்கு அவனின் மகன் தன் பிஞ்சுக் கரங்களால் கொள்ளி வைத்த காட்சி இன்னமும் அவர் மனதில் இருந்து கொண்டே இருந்தது!
அங்கேயும் வந்து வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார் இராஜேந்திரன் அழுதபடி!
கொள்ளி வைக்க விடவில்லை அவரை பெரியப்பா!
“நீ வச்சா அவன் கட்டை வேகாது போடா” என்று கத்தி விட்டார்!
இப்படியே மன உளைச்சல் அவரையும் பாடாய் படுத்தி ஒரு நாள் தூங்கிக் கொண்டிருக்கும் போதே அவர் உயிரையும் எடுத்து விட்டது ராகவ் இறந்த இரண்டே மாதத்தில்!
வித்யாவிற்கு மூன்றாவது இடி! துணையாக சப்போர்ட்டாக இருப்பார் என்று நினைத்திருந்த ஒரு பெரியவரும் போய் விட்டார்!
இதையெல்லாம் யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்தாள் வித்யா!
கைகள் அந்த பால்கனியில் அவள் பாதுகாத்து வைத்திருக்கும் ராகவ் உபயோகித்த ஆஷ் ட்ரேயை தடவிக் கொடுத்தன! அதில் இன்னமும் அவன் குடித்துப் போட்டிருந்த சிகரெட் துண்டுகள்!
இந்த வீட்டை விட்டு விரைவில் கிளம்ப போகிறோம் என்ற நினைவுடன்,
“எத்தனை வாட்டி உன்கிட்ட சொல்லியிருப்பேன் மாமா சிகரெட்டை குறைன்னு! நீ என் வார்த்தைய கேக்கவே இல்லியே மாமா!
நான் எப்படி மாமா மிச்ச காலத்தை ஓட்டுறது? நீ இல்லாம!
மித்து மட்டும் இல்லன்னா, நான் இந்நேரம் உன் கூடவே வந்திருப்பேன் மாமா!
வருவதற்கு முன்னால அந்த ஈஸ்வரியையும் அவ கேடு கெட்ட புருசனையும் போட்டுத் தள்ளிட்டு!
கண்ணகி அவ புருஷன் சாவுக்கு நீதி கேட்டு , மதுரையையே எரித்து விட்டாள்ன்னு படிச்சுருக்கோம்!
மதுரைய எரிச்சுட்டு, புஷ்பக விமானம் ஏறி மேலுலகம் போயிட்டான்னு கூட சொல்லுவாங்க!
அதே கண்ணகிக்கு கையில் ஒரு குழந்தை இருந்திருந்தா அப்படியெல்லாம் செஞ்சுருப்பாளான்னு தெரியல!
எனக்கும் உன் சாவுக்கு காரணமானவங்கள எரிச்சு கொல்லும் அளவு கோபம் இருக்கு மாமா, ஆனா மித்து! அவனை யார் பார்த்துப்பா?
அவனுக்காக தான் மாமா இந்த உயிரக் கையில் பிடிச்சுட்டு இருக்கேன்!
எவ்வளவு ஆசை ஆசையா லவ் பண்ணினோம் மாமா, ஆசை ஆசையா வாழ்க்கையைத் தொடங்கினோம் மாமா, இப்படி ஆச்சே!
ஆனா ஒண்ணு மாமா , எந்த சொத்துக்காக ஆசைப்பட்டு நம்மை வாழ விடாம பண்ணினாங்களோ, அத நிச்சயம் அவங்களுக்கு கிடைக்க விடவே மாட்டேன்!
கூடவே அந்த சொத்தை விட அதிகமா நம்ம மித்துவை சம்பாதிக்கும் அளவு அவனையும் கொண்டு வருவேன்!
வெறும் சொத்து மட்டுமில்ல மாமா, நாம வாழாத நம்ம வாழ்க்கையையும் சேர்த்து அவன் வாழனும் மாமா!
அவனுக்கு நல்லபடியா, நான் உன்னை லவ் பண்ணின அளவுக்கும் மேலே லவ் பண்ற பொண்ணு பொண்டாட்டியா வரணும்!
உன்னை நான் பார்த்துகிட்ட மாதிரி அவளும் அவனைப் பார்த்துக்கணும்!
நாம வாழாத அந்த மிச்ச காதல் வாழ்க்கையையும் அவன் வாழனும்! வாழ வைப்பேன்!
நீ தான் எனக்கு துணையாக இருக்கணும்” என்று மனதுள் பேசினாள் வித்யா!
அவள் வீட்டருகே இருந்த சர்ச் பெல் அடித்தது. கூடவே ஒரு பைபிள் வாசகமும்!
“பயப்படாதே நான் உனக்கு துணை நிற்கிறேன்” அவளுக்கு என்னமோ ராகவே அப்படி பதில் சொன்ன மாதிரி இருந்தது!
மனதுள் ஒரு தைரியம் கொஞ்சம் பிறந்தது!
எழுந்து மற்ற வேலைகளைப் பார்க்க தொடங்கினாள்!
அவள் அம்மா லதா மித்துவைக் கூட்டி வந்தார்.
மித்து வித்யாவிடம் ஓடி வந்தான்.
“மயூ.. அப்பா எங்கே? ஏன் இன்னமும் ஊரில் இருந்து இன்னமும் வரல?
வரும் போது எனக்கு ஹோம்மெட் சாக்லேட்டும் பேசன் ப்ரூட்டும் வாங்கிட்டு வரேன்னு சொன்னாங்க, இன்னமும் வரவே இல்லை!” அவன் அழுதான்!
“அப்பா, நம்ம அரசு தாத்தா மாதிரி சாமி கிட்ட போய்ட்டார், இனி வர மாட்டார்!” என்றாள் வித்யா.
“அப்போ அப்பாவோட போன் எனக்கு” என்றான் மித்து!
வித்யாவிற்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது!
“அய்யோ மாமா, இப்படி நீ ஆசை ஆசையா பெத்த இந்த பச்சை மண்ணை, இப்படி குழந்தைத் தனமா, இருக்கும், எங்க நிலைமையின் வீரியம் தெரியாது பேசும் இந்த குழந்தையை நான் எப்படி மாமா வளர்ப்பேன்?
நீ போய் இருக்க கூடாது மாமா, இப்படி என்னைத் தனியா தவிக்க விட்டு போய் இருக்க கூடாது மாமா”அவளுள் மீண்டும் ஆற்றாமையும் அழுகையும் வந்தது!
இப்போதும் சர்ச்பெல் அடித்தது!
“நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை
உன்னை கைவிடுவதும் இல்லை”
அவளுக்கு இப்பவும் ராகவே அவளிடம் சொன்னது போல தான் இருந்தது!
அப்படியே ஹாலில் இருந்த அவனின் போட்டோவைப் பார்த்தாள்.
அப்படியே கொஞ்ச நேரம் பார்த்து கொண்டிருந்து விட்டு பார்வையை விலக்கியவள் கண்ணில் பட்டது அந்த முருகன் காலண்டர்!
“யாமிருக்க பயமேன்!”
இந்த மாதிரி படங்கள் மற்றும் பைபிள் வசனங்களும் அவ்வபோது அவள் எதிரில் தோன்றி, அவளின் எண்ணங்களுக்கும் அந்தந்த நேர தவிப்புகளுக்கும், பயங்களுக்கும் குழப்பங்களுக்கும் ராகவே அவளுக்கு பதில் சொல்லுவது போலவே ரொம்பவும் சரியா அமைந்தன அவை!
இப்படி அவளாக தருவித்துக் கொண்ட நம்பிக்கையுடனும் அவளின் அன்பு ராகவின் ஆத்மா தன்னுடனே தான் இருக்கிறது என்ற நம்பிக்கையிலும் மீதி காலத்தை கடக்கத் துவங்கினாள் வித்யா மயூரி!
அவளின் அன்புக் குழந்தை ஜீவமித்ரனை அவள் எண்ணியபடி வளர்த்து ஆளாக்கி விட்டாளா? கேசில் ஜெயம் கண்டாளா, அந்த கேடு கேட்ட ஈஸ்வரியும் அவள் புருசனும் என்ன ஆனார்கள்?
அவ்வளவு எளிதா வித்யா மயூரி கடந்து வந்த பாதை?
நிகழ்காலத்தில் சந்தித்து சொல்வாள் மயூ!
error: Content is protected !!