Skip to content
Post Views: 1,149
யோசனையோடு அவன் ஓபி அறைக்கு வந்தவள் கண்டது, அவன் டேபிள் மீது, வீட்டில் உள்ளதை போன்றே சிறிய அளவிலான அவர்கள் கேம்ப் அன்று எடுத்த போட்டோவை தான்.
” ஓ இதை பார்த்து தான் எல்லாருக்கும் என்னை தெரியுதா. ஆனாலும் உங்க அலும்பு இருக்கே. ” சுகமாய் சலித்தவள்.
Advertisement
” என்னவாம் இப்போ. என் பேமிலி போட்டோ நான் வச்சிருக்கேன். இதில என்ன மேடமுக்கு சலிப்பு. ” கண் சிமிட்டி குறும்பாய் அவளை பார்த்து சிரித்தபடி, அவளை அமர சொன்னவன்.
Advertisement
” இன்னைக்கு மட்டும் ஈவினிங் வருவேன். கேஸ் வந்தா புக் பண்ணிருங்க” என சிஸ்டரிடம் கூறிவிட்டு, அங்கே இருந்த புக் சிலவற்றை எடுத்து கொண்டு வெளியேறினான்.
Advertisement
அவன் அறைக்கு வெளியே வந்தவள் தான் எங்கே செல்ல வேண்டுமென கேட்க
Advertisement
” மேடம் உங்க ரூம் அது தான் பார்த்துக்கோங்க” என்றப்படியே கண் காட்ட, அவனது அறைக்கு நேர் எதிரே அவள் பணி செய்ய வேண்டிய பிரிவின் இடம் இருந்தது. அதை பார்த்ததும் சிரிப்பு தான் வந்தது அவளுக்கு.
” அரு, எப்படிடா இப்படி எல்லாம் பண்ற.. முடியல.” சிரித்தபடியே இங்கேயும் உங்க முன்னாடி தான் நான் இருக்கணுமா. “
” எஸ்.., என் வைப் தான் பக்கத்துல வச்சிக்கோனு சொன்னா. அவ சொன்னா நான் எதையும் செய்வேன். என் பிளான் மிஸ் ஆகாது ” கெத்தாய் சொன்னவனை பார்த்தவளுக்கோ தன் மீது இவன் ஏன் இத்தனை அன்பு வைத்துள்ளான் என்றே தோன்றியது.
பணியிடத்தில் அவன் நடந்து கொள்ளும் முறை தெரிந்தவள் ஆகையால் வேறு ஒன்றும் கூறாது அங்கே சென்றாள். கடமையை செய்து கொண்டே, விழியில் அவளை சிறை செய்யும் வித்தையில் மன்னன் ஆயிற்றே அவன். காதலும் கடமையும் இணைந்தே நடந்தது. அவன் படிப்பை பொறுத்து, முழு நேரமோ, பகுதியோ அங்கே இருப்பான்.
கன்சலேட்டிங் பொறுத்து நேரம் மாறுபடுவதால் இரவில் இவளே வீடு திரும்பி விடுவாள்.
அடுத்து வந்த நாட்களில் பணியும், தேர்வும் என பரபரப்பாய் சுற்றி கொண்டிருக்க அவர்களுக்கான தனிமை நேரங்கள் குறைந்தன. கிடைத்த பொழுதில் காதல் சிறகடிக்க நாட்களும் நகர்ந்தன.
பணியிடத்தில் ஒரு நாள் பேசி கொண்டிருக்கும் போது சக தோழி ஒருத்தி, ” நீங்க நெஸ்ட் மந்த் தான் வருவீங்கனு சொன்னாங்க., சடன்னா எப்படி கிளம்பி வந்திங்க ” என கேட்க. புரியாமல் முழித்தவள் அவரிடம் எதுவோ சொல்லி சமாளித்தாள்.
பின் தான் தனக்கு தெரியாமல் எத்தனையோ செய்பவன் இதிலும் ஏதும் செய்திருப்பானோ என சந்தேகம் எழும்பியது. அன்றும் ஒரு நாள் வைபவ் டெய்லி பேசுவான் என கூறியதும் நினைவில் எழ அடுத்தடுத்து தடாலடியாய் நடந்தவை யாவும் நினைத்து பார்த்தாள்.
திருமணத்திற்கு வந்தவர்கள் யாவரும் அதை சிலாகித்து பாராட்டி சென்றதும், சுகந்தி கூட “உனக்கு உடனே கல்யாணம் சொன்னதும் எப்படி பண்ண போறேன்னு தெரியாம பதறி போயிட்டேன். மாப்பிள்ளையும், அண்ணனும் சேர்ந்து எல்லாத்தையும் அழகா, நிறைவா முடிச்சிட்டாங்க, ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து செஞ்சிருக்காங்கனு” பாராட்டி தள்ளியதும் நினைவில் எழுந்தது.
இரண்டே நாட்களில் சட்டென ஹனிமூன் அழைத்து சென்றதும், ஒரே வாரத்தில் இங்கே அழைத்து வந்ததுமென அனைத்தும் மனதில் சுழன்று எழுந்தன.
திருமணம் முடிந்து இங்கு வந்த முதல் நாளிலேயே அனைத்து பொருளும் வீட்டில் இருக்க கண்டவள்,” நீங்க ஹாஸ்டல் இருந்ததா அத்தை சொன்னாங்க. அப்புறம் எப்போ இங்கே வந்திங்க. சமைக்க எல்லாம் ரெடியா வாங்கி வேற வச்சிருக்கிங்க ” என்றதும் அவன் மலுப்பியதும் நினைவில் வந்தது.
” அந்த மேம் எதுக்கு ஒரே ஒரு தர்ம பத்தினினு என்னை பார்த்ததும் சொன்னாங்கா” என்றதற்கு
” நான் கொடுத்த ரெசுமை ரிமைன் பண்ணா அதே ஆளு தான் இப்பவுமான்னு சிரிக்கிறங்கா. அதான் ஒன் அண்ட் ஒன்லினு நானும் சொன்னேன்” என்றதும்,
” உங்களுக்கு என் டீடெயில்ஸ் எல்லாம் யாரு கொடுத்தாங்க” என்றதற்கும் பதில் சொல்லாமல் நழுவியவை அனைத்தும் நினைவில் எழுந்தன.
” எதை கேட்டாலும் கட்டி புடிச்சி முத்தம் கொடுத்து, என்னை ஏமாத்திட்டு இருக்காரு. இன்னைக்கு வரட்டும். இருக்கு அவருக்கு. “கோபத்தில் கொந்தளித்தவள் அவன் வந்து சாப்பிட்டு முடித்து, படுக்க வரும் வரை அமைதி காத்து, பின்பு தான் அந்த தோழி கேட்டதை கேட்க ஆரம்பித்தாள்.
” போச்சுடா.., யாரு என்னை மாட்டி விட்டாங்க., ” என சடுதியில் கேட்டவனை முறைத்து பார்த்தவள், சோபாவில் சென்று அமர்ந்தபடியே
“இன்னும் என்ன என்ன பண்ணிருக்கீங்க ஒழுங்கா சொல்லுங்க? என்றாள் கடுப்பாய்.
இதற்கு மேலும் எதையும் மறைக்க வேண்டாமென எண்ணி, அவள் அருகில் வந்து அமர்ந்தவன் கரங்களை கையில் கோர்த்து மெதுவே ” இன்னொரு மெயின் மேட்டர் இருக்கு. சொன்னா அடிக்க கூடாது..,” என்றான் தயங்கி.
அவனையே ஆழ்ந்து பார்த்தவள் ” நம்ம மேரேஜ் கூட உங்க பிளான் தானா?” என கேட்க.
” ம்ம்ம். லைட்டா..,” என்றான் கண்ணடித்து. அவன் செயலில் கடுப்பானவள், அவன் கைகளில் அடித்து தள்ளி விட்டு
” எல்லாத்தையும் ஒழுங்கு மரியாதையா இன்னைக்கு சொல்லி முடிங்க., ” என முறைத்து பார்க்க,
” இப்படிலாம் முறைக்க கூடாது. மீ பாவம்..,” என்றவன் அவளை கை வளைவில் இழுத்து தோளில் தலையை வைத்து,
” வைபவ் நீ ரொம்ப டிஸ்டர்பா இருக்கனு அடிக்கடி சொல்ல ஆரம்பிச்சான். அப்பாட்ட சொன்னப்போ நெஸ்ட் மந்த் லீவுல வரும்போது பேசி மேரேஜ் ஏற்பாடு பண்ணலாம்னு சொன்னார். மேரேஜ்க்கு எல்லா வேலையும் அப்போவே ஸ்டார்ட் பண்ணிட்டேன். மண்டபம், இன்விடேஸன் டிசைன், மத்தது எல்லாம் ரெடியா பிளான் பண்ணி வச்சிட்டேன். இங்கேயும் உனக்கு வேலைக்கு ஏற்பாடு பண்ணேன். வீடும் செட் பண்ணி வச்சேன்.
திடிர்னு நீ நைட் புல்லா தூங்காம, டென்ஷனா அழுதுட்டு இருக்கனு வைபவ் சொன்னான். அப்போவே முடிவு செஞ்சேன் சடனா மேரேஜ் பண்ணிக்கலாம்னு. டிக்கெட் போட போறேன், அம்மா கால் பண்ணி பேசுறாங்க., பட் நாங்களே நினைச்சு பார்க்கல தர்ஷி, ராஜி ரெண்டு பேரும் சேர்ந்து பண்ண வேலை எல்லாம். நீ வேற வர சொல்லி மெசேஜ் போட்டியா. உடனே கிளம்பி வந்துட்டேன். அப்புறம் நடந்த கதை எல்லாம் உனக்கே தெரியுமே ” நீளமாய் பேசி முடித்தவன் அவளை நிமிர்ந்து பார்க்க அப்போதும் கோபம் தணியாமல் தான் அமர்ந்து இருந்தாள். அவள் கையை மெதுவே பிடிக்க, திரும்பி பார்த்தவள்
“அப்படியே நாலு போடு போடலாம்னு தான் நினைக்குறேன், முடிய மாட்டேங்குது.,” எரிச்சலில் முகத்தை திருப்ப
” வேணும்னா அடிச்சுக்கோ, நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்., ப்ளீஸ். மூஞ்சை மட்டும் திருப்பாதடி, ” கழுத்தோட சேர்த்து இறுக்கி அணைக்கவும் ,கொஞ்சம் தணிய ஆரம்பித்தாள்
” இதை அன்னிக்கு நான் கார்ல பேசும் போதே சொல்லி இருக்கலாமே..,”
” டேய்.., உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு இல்லை. ஏற்கனவே நீ என்னை நினைச்சு தவிச்சுட்டு ரொம்ப டென்ஷன்ல இருந்த, இதையும் சொல்லி ஏன் தவிக்க விடனும்னு தான் சொல்லல. வீராப்பா அன்னைக்கு உன்கிட்ட பேசிட்டு வந்துட்டேன். அப்புறம் தான் தெரியும் அந்த பொண்ணு விஷயம்லாம். திருப்பி திருப்பி உன்னை கஷ்டப்படுத்த கூடாதுன்னு தான் தள்ளி இருந்து உன்னை வாட்ச் பண்ணிட்டு இருந்தேன்.
” நீங்க இப்படி தவிச்சுட்டு இருந்ததற்கு அப்போவே என்னை கல்யாணம் பண்ணி இழுத்துட்டு வந்துருக்கலாமே ?” கலங்கிய குரலில் பேசுவதை கேட்டவன் பொறுக்க முடியாமல் அவளை மடியில் அமர்த்தி கொள்ள, அவன் கழுத்தில் முகம் புதைத்தவள் “எதுக்கு நீங்க இவ்ளோ கஷ்டப்படணும்? தேவையா ? ” என்க.
” ஏன்னா நீ என் நந்திதா. உனக்காக என்ன வேணா செய்வேன்னு எத்தனை தரம் சொல்லிருக்கேன். இத கூட புரிஞ்சிக்க மாட்டியா? ஊருல உள்ள பொண்ணுங்கள எல்லாம் படிக்க வச்சி நல்ல இடத்துல வேலைக்கு உட்கார வச்சி, சுயமரியாதையா இருக்கணும்னு நினைக்குறவன் நான். என் பொண்டாட்டி படிச்சு, சுயமா இருக்கணும்னு நினைக்க மாட்டேனா. அதுக்காக என்ன கஷ்டம்னாலும் படலாம். தப்பே இல்லை.,” என்றான்.
“நான் உங்களை ரொம்ப படுத்தி எடுத்திட்டேனோ ? “
“நான் தான் உன்னை படுத்திட்டு இருக்கிறேன் “
கோபத்தில் ஆரம்பித்தவை கெஞ்சலில் நின்று, கொஞ்சலில் மொத்தமாய் மறைந்தது. தனக்காக எதையும் செய்யும் அவன் மேல் இன்னும் பித்தாகி, நாளும் பொழுதும் சந்தோஷத்தில் கழிய, இப்போது ஊருக்கு செல்லும் போது கூட தன்னை தனியே விடுத்து செல்ல தயங்கியவனை இவள் தான் தேற்றி அனுப்பினாள். அனுப்பிவிட்டு இன்று வருந்துபவள், தனித்து உண்ண கூட தோணாது பாலை மட்டும் அருந்தியவள், சென்று விழி மூடி உறங்க முயற்சித்தாள், உறக்கம் வருவேனா என்றது.
அங்கோ அவன் கான்பிரென்ஸ் ஹாலில் இரு நாட்கள் முழுதாய் இருந்தவன், அதை பற்றி குறிப்புகளை எல்லாம் லேப்டாப்பில் டைப் செய்து கொண்டு இருந்தான். அருகில் இருந்த நண்பர்களின் அரட்டை, கேலி பேச்சில் எல்லாம் தலையிடாமல், காரியமே கண்ணாக இருந்தவனை கலாய்த்து தள்ளி கொண்டு இருந்தார்கள்.
ஆண்கள், பெண்கள் வேறுபாடு எதுவுமின்றி இடுப்பில் கைப்போட்டும், லஜ்ஜயே இல்லாமல் கொஞ்சி கொண்டும் இருக்கும் அவர்களுக்கு இவனை பார்த்து, எப்படி இத்தனை ஆர்ப்பாட்டத்திலும் அமைதியே உருவாக வேலை பார்க்கிறான் என ஆச்சர்யம் கலந்த கிண்டல் பேச்சு, எதற்கும் செவி மடுக்கவில்லை. ” டேய் ! இங்கே வந்துட்டு இவன் ஏன்டா இப்படி இருக்கிறான். குஜாலா இல்லாமல் என்ன மனுஷனோ ” என்ற டேவிட்டின் குரலை கேட்டும், செவி மடுத்தான் இல்லை.
காரியமே கண்ணாக வேலை முடித்தவன் மதியமே கிளம்பி விட்டான். ஏனோ அவளை இந்த நிலையில் தனித்து விட்டு வந்தது எண்ணி மனம் கலங்கியது. விரைந்து கிளம்பியவன் வீட்டின் உள் நுழைய அவன் மனையாலோ வாடிய கொடியாய் கட்டிலில் சுருண்டு படுத்திருந்தாள். “நந்திதா! ” அவன் சிறு குரல் அவளை வாரி சுருட்டி எழ வைத்தது. ” அரு! ” அவனை இறுக்க கட்டி கொண்டு முகம் முழுக்க முத்தம் வைத்தவள், அவன் தோளிலேயே மயங்கி சரிந்தாள்.
அவளை எழுப்பி தட்ட, எழவில்லை. கையை பற்றி மெதுவே அவளை படுக்க வைத்தவன், தண்ணீர் தெளித்து பார்த்தான். மெதுவே கண் விழித்து பார்த்தாள், பின்பு தான் அவள் கைப்பற்றி நாடி துடிப்பை செக் செய்து பார்த்தவன், கண்ணீர் நீர் தளும்ப அவளை நோக்கினான்.
விருட்டென எழுந்தவன் தோசை ஊற்றி கொண்டு வந்து ஊட்ட, முதல் வாய் சாப்பிட்டவள், அடுத்து கையை அவன் புறம் நீட்டி ஊட்டி விட்டாள். ” நீங்களும் தானே சாப்பிடல, ” சிரித்தபடி சாப்பிட்டு முடித்தவன் அவள் அருகில் அமர்ந்து கொண்டான்.
” ஏன் சாப்பிடாம இருந்த?
” தனியா சாப்பிட புடிக்கல ” என்றால் முகத்தை பார்த்தபடியே .
” நீ ஒன்னும் தனியா இல்லையே. நம்ம பொண்ணு கூட தான இருக்க, அப்புறமென்ன?” என்றவன் கேள்வி கூட அவளுக்கு புரியவில்லை. பதில் கூட சொல்லாமல்
” நீங்க எப்படி இவ்ளோ நாள் தனியா இருந்திங்க ? என்னால முடியல..,” என்றவள் அவன் கரங்களை பற்றி அதில் முகத்தை அழுந்த பதிந்து அவனையே பார்த்திருந்தாள்.
“இப்படி தவிச்சே என்னை எங்கே போனாலும் விழுந்தடிச்சு வர வைக்குற..,” என்றபடியே அவளின் நெற்றியில் முத்தம் வைத்தவன்
“வி ஆர் பிரகனண்ட், இனிமே சாப்பிடாம, தூங்காம இருந்து பாரு, அடி தான் விழும்.,” என்றான் அதிரடியாய்.
அப்போதும் அவன் முகத்தை அதிர்ச்சியாக பார்த்து கொண்டு இருந்தவளுக்கோ புரியவில்லை. தனக்கே தெரியாமல் இவன் என்ன சொல்கிறான் என முழித்து பார்க்க.
” முழிக்காதே., உன் கையில பல்ஸ் ரேட் டிஃபரெண்டா இருக்குனு ஒன் வீக்கா எனக்கு டவுட் இருந்தது. மே பி வார்ட்டி பைவ் டேஸ் இருக்கும். இன்னைக்கு மயங்கிவிழுந்து, செக் பண்ணதுல கன்போர்ம் ஆகிருச்சு. ஒழுங்கா தூங்கி ரெஸ்ட் எடு. மார்னிங் போய் லேப் டெஸ்ட் எடுப்போம்.” கண் சிமிட்டி கூறியவனையே பார்த்தவள்,
தன்னிசையாக அவள் கரங்கள் வயிற்றை மெதுவே வருட தொடங்க, பாவையின் விழிகளோ அவனையே இமை மூடாமல் விழித்து பார்க்க, அதன் அர்த்தம் உணர்ந்து, தலையசைத்து, இமை மூடி ஆமோதித்து இமைகளில் அழுத்தமாக முத்தமிட்டான்.
error: Content is protected !!