Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ithaiya Geethamae

Ithaiya Geethamae 29 1

கீதம் 💜 29

அழகே உருவான அரும்புகள் மூன்றிலிருந்து ஐந்து வயது வரை இருக்கும். அவனை பார்த்ததும் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து ஓடி வந்ததை கண்டதும் , விழி விரித்து பார்த்தவள், புன்னகையில் இதழ்கள் விசுகரிக்க, தன் கணவனை கண்டாள். அவர்களை பார்த்ததும் அவன் கண்களில் தெரிந்த ஆனந்தமே அவனும் அவர்களை காண ஏங்கியுள்ளான் என்பதை அவளுக்கு எடுத்து உரைத்தது.



Advertisement

” டாட் !”  என ஒரு குட்டியின் குரல் அவனின் செவி அடையும் முன்னே, கோரசாயாய் சத்தம் ஒலிக்க அவர்களின் உயரத்திற்கு மண்டியிட்டு  அமர்ந்தவன், அவளை அள்ளி கொஞ்ச, அவனை சுற்றியும் இருபது கரங்கள் தழுவியது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு. கடவுள் வடித்த அழகான சிற்பங்கள் உயிர்பெற்று, குட்டி கண்களை விரித்தும், சுருக்கியும், அழுதும், சிரித்தும் என உணர்ச்சி பிரவாகத்தில் தத்தளிக்க செய்து அவனை ஒரு வழி செய்தனர்.

அரை மணி நேரத்திற்கும் மேலாகியும் அவன் அவளை நிமிர்ந்து கூட காண முடியவில்லை, அத்தனை கொஞ்சல்களையும்  முடித்து, அவர்களின் அலைப்புறுதல் அடங்கிய பின்னரே, எதிரில் நின்ற முகம் தெரியா பெண்ணை கண்டு முழித்து நின்றனர். அவளை கண்டதும் இன்னுமே அவன் மேலே சென்று விழ, அப்போது தான் அவனும் அவளை பார்த்தான்.

Advertisement

Advertisement

யாரென  தெரியாவிடினும் சின்ன குழந்தைகள் என்றாலே  தூக்கி கொஞ்சி மகிழும் நந்துவின் முகத்தில் அவர்களை கண்டும், அவன்பால் அவர்கள் கொண்ட பாசத்தை பார்த்தும், சந்தோஷத்தில்  முகம் கொள்ளா மகிழ்ச்சியில் திளைத்து நின்றாள். தனக்கும் குழந்தை இருந்தால் இப்படித்தானே இவன் கொஞ்சி கொண்டிருப்பான், சிறு சிட்டு ஒன்று அவன் கன்னம் கடித்தபடி, தோளில் அமர்ந்து, கழுத்தை இறுக்க கட்டி கொண்டு விளையாடி மகிழ்வது போல, கனவில் பறக்க தொடங்கியவளை அவன் குரல் கலைத்தது.

கண்களில் அன்பும், இதழில் சிரிப்புடன் தங்களை பார்த்து கொண்டிருந்தவளை கைகாட்டி ” ஷி இஸ் மை வைப் ., நந்திதா ஸ்ரீ ” என்றவுடன் அரும்புகள் முகத்தை சுருக்கி, அவளை அண்ணாந்து பார்த்து உற்று நோக்க., தன்னிசையாய் இதழில் ஒரு தயக்க சிரிப்பு அவர்களிடம் எட்டி பார்த்தது.

Advertisement

தொண்டை குழிகள் ஏறி இறங்க அவர்களை அள்ளி அணைக்க துடித்த மனதை கட்டுப்படுத்தி நின்றாள். புதிதாய் ஒருவர் சிறுவர்களை தூக்கினால் அவர்கள் அழுது ஆர்ப்பாட்டம் செய்வதை எத்தனை முறை கண்டிருப்பாள்.

நொடிகள் கழிய ஒரு வாண்டு மெல்ல அவள் அருகே வந்து ” மாம்.,” என்க, இன்னுமே திகைத்து பார்த்து, அதிர்ச்சியில் நின்றவளை கை பிடித்து இழுத்தவன், தன்னருகே அமர செய்ய, அதுவரை அவளுக்கு சுயஉணர்வே இல்லை. அவள் சொன்னதை கேட்டு மனதில் எதுவோ நெகிழ அந்த அரும்பையே விழிகள் கலங்க பார்த்து கொண்டிருந்தாள்.

இத்தனை நாட்கள் அன்பு இல்லத்தில் அக்கா அக்கா என்று கோரஸ் பாடி அவளை சுற்றி வந்தே கண்டிருந்தாள். எத்தனை குழந்தைகளை அவளே அங்கு கொண்டு சென்று கொடுத்திருப்பாள். முகமறியா குழந்தை என்றாலும் தாய்மை உணர்வில் அள்ளி அணைப்பவள்,  இன்றோ தாய் என்று தன்னை அழைக்கும் குழந்தையை கண்டதும்  என்ன சொல்வது என்றே அவளுக்கு தெரியவில்லை. கண்ணீர் குளம் கட்ட ஆரம்பித்தது. அவள் விழி பார்த்து இமை முடி திறந்தவன், தலையசைக்க, படபடத்த மனதை சற்றே அடக்கி அவர்களை பார்த்து சிரித்தாள்.

” நந்திதா, வெளியே போய் எல்லாம் சொல்றேன்., பசங்க உன்னையே பார்த்துட்டு இருக்காங்க பாரு., அவங்கள மொத கவனி, ” மெல்லிய குரலில் அவள் காதருகே குனிந்து முணுமுணுக்க, பின் தான் அதிர்ச்சி விலகி அவர்கள் புறம் அவள் கவனம் திரும்பியது.

மருள மருள விழித்தபடி, குண்டு கண்களை உருட்டி உருட்டி பார்த்து, செப்பு இதழில் சிறு நடுக்கம் உணர, அவளை பார்த்தே நின்றிருந்தனர். சுயம் பெற்றவள் பிறகே தன் கையில் இருந்த சாக்லேட்களை அவர்களிடம் கொடுத்து நட்பு பாராட்டி, சிரித்து பேசி, அவர்களின் தயக்கம் உடைத்து அவர்களையும் பேச வைத்தாள். மேலும் இரு மணி நேரங்களை அவர்களோடு செலவிட்டு தான், அங்கிருந்தே வெளியேறினர்.

காரில் சென்று ஏறும் வரை ஒன்றும் பேசாமல் வந்தவள், பின்பு  தான் அவனை பார்த்தாள். ” என்ன  ரொம்ப  ஷாக் கொடுக்கிறேனா..,”

” ம்ம்ம்.,” தலையை மட்டுமே ஆட்டியவளை பார்த்தவன் சிரிக்க.

” இன்னும் என்னன்ன இருக்கு. மொத்தமா சொல்லுங்க., மண்டை காயுது.,” சலித்து கொள்ள.

“அதுக்குள்ளயா., ” என்றான் மீண்டும் சிரித்து.

” டேய்., காலையில் இருந்து எத்தனை ஷாக் தான் கொடுப்பிங்க. வந்த ரெண்டு நாள்ல வேலை ரெடியா இருக்குனு ஆவர் லெட்டர் கொடுத்தாங்க. அதுவே இன்னும் என்னனு நீங்க சொல்லல ., அதுக்குள்ள இந்த பேபி வேற திடிர்னு அம்மானு சொன்ன உடனே, ஒரு மாறி நெர்வஸா ஆகிட்டேன்..,”

”  ரிலாக்ஸ்டா., அவங்க என்னை அப்பான்னு கூப்பிட்டா நீ தானே அம்மா., அந்த லாஜிக்ல மட்டும் பாரு. ” என்றவன் அவளை அருகே இழுத்து தோளோடு அணைத்து கொண்டு., தொடர்ந்து அவளிடம்

” அவங்க எல்லாரும் கொரோனா டைம்ல பிறந்த பேபீஸ். அப்பா அம்மானு ரெண்டு பேருமே இறந்து யாருமே இல்லாத சின்ன சின்ன குழந்தைங்க. இது டிரஸ்ட் ஹாஸ்பிடல்ங்கிறதால இங்கேயே ஹோம் மாறி ரெடி பண்ணி பராமரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. நான் இங்க டூட்டி ஜாயின் பண்ணப்ப  டெய்லி இவங்கள தான் செக் பண்ணி ரிப்போர்ட் பண்ணனும்.

“ஹ்ம்ம்ம்.,”

”  இன்னும் நிறைய பசங்க இருந்தாங்க. தத்து கொடுத்தது போக இவங்க தான் மிஞ்சி இருக்காங்க. இவங்களும் எப்போ போவாங்கன்னு தெரியாது.

நான் இங்கே வந்த புதுசுல ஒரு வயசு குட்டியா இருந்த ஜோனா தான் மொத மொதல்ல டாட்ன்னு கூப்பிட்டா. என்ன பார்த்ததும் அவளுக்கு அது தான் பீல் ஆகிருக்கு. உன்னையும் இன்னைக்கு அம்மானு கூப்பிட்டதும்  அவ தான்.” என்றவனை விழிகளில் வலி, அதிர்ச்சி பொங்க பார்த்திட்டாள்.

” அடுத்தடுத்து எல்லா குட்டிசும் அப்படியே கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க., அவங்கள தடுக்கவும் தோணல. எனக்கும் புடிச்சது. நீயும் கூட இல்ல., தனிமையில் இருந்த எனக்கு ஆறுதலை கொடுத்தாங்க. அவங்க கூடவே இருந்தேன். ரொம்ப அட்டாச்  ஆகி பழகிட்டாங்க., நம்ம இங்க இருக்குறவரை வந்து பார்க்க போறோம். ” என்றவன் தொடர்ந்து அவள் தலையில் வருடி கொடுத்தபடி,

” கொஞ்சம் பெருசாகிட்டா அவங்களே புரிஞ்சிப்பாங்கா., என்னை மட்டுமில்ல., இங்க வர்ற அவங்கள புடிச்சவங்களை எல்லாம் அந்த குழந்தைங்க அப்பா, அம்மானு தான் நினைச்சி கூப்பிடுறாங்க., இந்த வயசுல அவங்கள ஏங்க விட சொல்றியா., எனக்கு அவங்க சந்தோசம் தான் முக்கியம்.” நீண்ட உரையில் அனைத்தையும் கூறி முடித்து பெருமூச்சு விட்டவனிடம் பதிலை கூட அவளால் கூற முடியவில்லை.

ஆனால் இது அந்த குழந்தைகளுக்கு பிற்காலத்தில் ஏமாற்றம் கொடுக்கும் என்ற போதிலும் சிறு தளிரை வாட செய்ய மனம் வரவில்லை. வீட்டுக்கு செல்லும் வரை மனம் அவர்களை பற்றி எண்ணியே வருந்தியது. இறக்கும் தருவாயில் தங்கள் குழந்தையை எண்ணி அந்த தாய் உள்ளம் எப்படி வருந்தி இருக்கும். அவர்களின் விதி என்று விட்டுவிடவும் முடியவில்லை. அவன் கூறியபடி முடிந்த அளவு அவர்களிடம் நேரம் செலவிட்டு, மகிழ்ச்சியாய் வைத்திருக்க முடிவெடுத்தாள்.

இரவு பணி முடிந்து வந்தவன் உணவை முடித்து விட்டு, அறைக்கு வந்தவளை பார்த்தவுடன் தான், காலையில் நடந்தவற்றை நினைவு கூர்ந்தவன், அவள் கூறியது நினைவில்  வர அவளை சட்டென கட்டிலில் இழுத்து அமர வைத்தான்.

” ஏய் ! உன்னை எத்தனை பேரு நந்துமானு கூப்பிட்டுருக்காங்க., அப்போ எல்லாம் ஒன்னும் தோணாம, இன்னைக்கு மட்டும் ஏன் நெர்வஸா இருக்குனு சொன்ன., “

“!!!”

ஒன்றும் சொல்லாமல் முகம் திருப்பி அமர்ந்து இருந்தவளை, தன் முகம் காண கன்னத்தை தொட்டு திருப்ப, கண்களில் சிறு தயக்கமும், சிவந்த கன்னமும் கூறியது அவள் மனதின் நிலையை.

”  என்னமா., சொல்லு.,” சற்றே சாய்ந்து அமர்ந்தவன் அவளையே பார்த்தபடி இருக்க, நொடிகள் நிமிடங்களாக கண்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருக்க, உதட்டை கடித்து, கூறவா, வேண்டாமா என தவித்தவள், தயங்கி தயங்கி அவன் முகம் பார்க்க, ” புதுசா என் பொண்டாட்டிக்கு ரொம்ப வெட்கம் எல்லாம் வருதே ” என கிண்டலாய் சொன்னவன் இதழில் நமுட்டு சிரிப்புடன்

” ஒ..  நம்ம பசங்க பத்தி நினைக்க ஆரம்பிச்சிட்ட போல..” கூறியப்படியே தன் மேலே அவளை இழுத்து இறுக்கி அணைக்க, அவன் முகம் காண முடியாமல் வெட்கி முகத்தை அழுந்த மார்பில் புதைக்க,, ” ஓய்.., ஒழுங்கா என்னை பாரு..”  சீண்டியவனை

“அச்சோ… விடுடா .. ” மேலும் புதைந்தவளில் புதையல் தேடி எடுத்து தான் நகர விட்டான்.

***

மூன்று மாதங்கள் கடந்த நிலையில், முப்பதாவது தளத்தில் உள்ள,  தன் வீட்டின் ஜன்னல் வழியே தெரிந்த டொரோண்டோ நகரின் மொத்த அழகையும்  வெறித்து பார்த்து கொண்டிருந்தவள், சட்டென தன் இடை பற்றி  இழுத்து, தன்னோடு  சேர்த்தணைத்து, வாசம் நுகர்ந்து, முத்த மழை பொழியும் அவன் ஸ்பரிசத்திற்கு ஏங்கி தவிக்கும் தன் மனதை எண்ணி தவித்து கொண்டிருந்தாள்.

நொடி பொழுதும் அவளை விட்டு பிரியாமல், அவளை காதல் கடலில் தத்தளிக்க வைத்தவன் கான்பிரன்ஸ் என்று மூன்று நாட்களாக அமெரிக்கா சென்று விட்டான். மேலும் கடந்த ஒரு வாரமாக அவள் அருகில் கூட வருவதில்லை. வேலை முடிந்து வருபவன், சாப்பிட்டு விட்டு, லேப்டாப்பும் கையுமாக தான் திரிகிறான். அவள் உறங்கிய பின் தான்,  அவள் அருகே வந்து நெற்றி முத்தம் மட்டும் கொடுத்து, கைகளை மென்மையாக பற்றி கொண்டு உறக்கம் கொள்கிறான். விழி பார்த்து அனைத்தையும் செய்பவன் மறந்தும் அவள் அருகே நெருங்கி வருவதில்லை.

ஏன் இப்படி இருக்கிறான் என்றே அவளுக்கு புரியவில்லை. அவன் அருகாமையை எண்ணி மனம் தவித்தது. காலை வேளை முழுதும் அவன் அன்பில் கரைந்த நினைவுகள் மனதில் நிழலாய் வலம் வர தொடங்கியது.

” அரு! லேட்டா ஆச்சு. கைய விடுங்க, போய் சமைக்கணும்..,” அவனின் உடும்பு பிடியில் இருந்து வெளிவர முடியாமல், கெஞ்சியவளை சட்டென விட்டு, குறும்பாய் சிரித்து, கண்ணடிக்க.

” ச்சே.,  டெய்லி உங்களோட முடியல., காலையில் என்ன விளையாட்டு., எப்போ பாரு, என் பின்னாடியே சுத்துவீங்களா.., போய் குளிங்க., ” அவள் தள்ளி விட்டு தான் குளியல் அறைக்கு கூட செல்வான்.

டீயை போட்டு முடிப்பதற்குள் பின்னால் வந்து மீண்டும் நின்றிருப்பான். காய்களை வெட்டி கொடுத்து, சமைக்க உதவி செய்கிறேன் என்ற பெயரில் அவளோடு இழைந்து கொண்டே அவனுக்கு இருக்க வேண்டும். சமையல் மட்டுமே அவள். இதர வேலைகள் அனைத்தும் அவனே செய்து விடுவான்.

” உங்களுக்கு எல்லாமே நான் தான் பண்ணனுமா..,”  என அவனிடம் கத்தினாலும் அவன் கேட்கும் முன்பே அனைத்தையும் அவன் கை பிடித்து கொடுப்பவள் அவளாய் தான் இருப்பாள். அவன் உடுத்தும் உடை முதற்கொண்டு அவள் விருப்பமே.

அரக்க பறக்க சமைத்து விட்டு, குளித்து வந்து, மருத்துவமனைக்கு கிளம்புபவளுக்கு தினமும் காலை ஊட்டிவிடும் வேலையை மட்டும் எக்காரணம் கொண்டும் நிறுத்த மாட்டான்.

இங்கே வந்த இரு வாரங்களில் அவன் பகுதி நேரத்தில் வேலை பார்க்கும் மருத்துவமனையிலேயே இவளுக்கும் வேலை வாங்கி தந்து, முதல் நாள் பணிக்கு செல்ல அரக்க பறக்க ரெடியாகி கிளம்பி காரில் வந்திறங்க

” நந்திதா, யூனிவர்சிட்டி அந்த கேம்பஸ்ல தான் இருக்கு. உனக்கு எதாவது வேணும்னா உடனே கால் பண்ணு. நான் வந்திறேன்., ” என்றவனிடம் தலையாட்டி அவனோடு வெளியே நடந்து வந்தவளை பார்த்ததும் அனைவரும் சினேகாமாய் சிரித்து, அவனோடு சேர்த்து அவளுக்கும் ” ஹாய் மேம் ” வேறு சொல்ல, குழம்பி போய் அவனை பார்த்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!