Skip to content
Post Views: 5,459
பிசினெஸ் விசயமாக பெங்களூர் போயிருந்த ஜீவா ஏர்போர்ட்டில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான்.
அவனுக்கு இன்று வீட்டிற்கு போகவே மனமில்லை!
பின்னே , அவன் அம்மா மயூவும் இப்போது அங்கு இருக்க மாட்டாள். அவனின் நிலாவும் அங்கே இருக்க மாட்டாள் , அப்புறம் வீட்டிற்கு போய் என்ன தான் செய்வது?
என்னது அவனின் நிலாவா?
Advertisement
ஆமாம், இப்போதெல்லாம் வெண்ணிலாவை வேற ஆளாக அவனால் நினைக்க முடியவில்லை!
அவள் நினைவு தான் அவன் பெங்களூரில் இருக்கும் போதும். காபி குடிக்கும் போது, சாப்பிடும் போது என்று அவள் நினைவே அவனுள்!
அங்கே வீட்டில் இருக்கும் போது தான் அவளை விட்டு பார்வையை விலக்க முடியவில்லை, முன்பு எல்லாம் அவளறியாமல் சைட் அடித்துக் கொண்டிருந்த அவனால், இப்போதெல்லாம் அந்த மாதிரி எல்லாம் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், அவள் தன்னை கவனிக்கிறாள் என்ற உணர்வு இருந்தும் கூட அவனால் அவளை ரசிப்பதை கன்ரோல் செய்ய முடியவில்லை!
Advertisement
ஆனால் அவள் மட்டும் என்னவாம், அவன் அப்படி பார்க்கும் போது எல்லாம் அவள் முகத்திலும் தோன்றும் அந்த ஒரு சின்ன வெட்கம்! அதையும் அவனால் உணர்ந்து கொள்ள முடிகிறதே!
Advertisement
அது அவனுக்கு மட்டுமே ஆன ஒரு எக்ஸ்பிரசன் என்பதையும் அவன் அறிவான்!
ஏனென்றால் நிலா, அவள் மாமா அன்புவிடமோ, அல்லது வேறு யாரிடமோ அவள் அப்படி நின்றதில்லை!
அவள் மனதிலும் தான் இருக்கிறோம் என்ற உள்ளுணர்வு அவனுள் இருந்து கொண்டு தான் இருக்கிறது!
Advertisement
ஆனால் அவ்வபோது அவள் முகத்தில் தோன்றும் அந்த குழப்பம்!
அது தான் இன்னமும் அவனுக்கு காரணம் தெரியவில்லை!
ஒரு வேளை அவளின் ஸ்டேட்டஸ் பத்தின காம்ளெக்ஸ் ஏதும் இருக்குமோ என்று தான், அவளுக்கு மேலும் மேலும் சம்பாத்தியம் வரும் வழிகளை எல்லாம் அவளுக்கு சொல்லிக் கொடுத்து அவளுக்கு தன்னம்பிக்கை வர செய்து கொண்டிருக்கிறான்!
யார் எப்படி வேண்டுமானாலும் நினைக்கட்டும்!
ஒருவரின் சம்பாத்தியம் தான் அவரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்!
மயூவே அடிக்கடி சொல்வாள்.
நம் பாங்க் பாலன்ஸ் நமக்கு ஒரு ஸெல்ப் கான்பிடன்சை கொடுக்கும். காசு மட்டுமே உலகமில்லை என்றாலும், காசும் வேண்டும் தான்! என்பாள்.
நிலாவுக்கு அந்த கான்பிடன்சை வளர்த்தும் விட்டுக் கொண்டு தான் இருக்கிறான்!
ஆனாலும் இதையும் தாண்டி, அவளுக்குள் வேறு ஏதோ ஒரு தடை!
அது என்னவென்று தான் தெரியவில்லை!
எப்படி யோசித்தும், நிலா இவனின் அன்புக்குரிய அந்த மயூ யார் என்று குழப்பத்தில் தான் நிலா இருக்கிறாள் என்ற கோணத்தில் மட்டும் அவன் யோசிக்கவே இல்லை!
இப்போ வீட்டுக்கு போனா நிலா இல்லாமல் ரொம்ப போரடிக்கும், வீட்டுக்கு போய் ரெப்ரெஷ் ஆகி விட்டு பேசாமல் எங்காவது வெளியே சென்று விட்டு வரலாம் என்று நினைத்துக் கொண்டே,
காரை விட்டு இறங்கி வீட்டிற்கு சென்று கதவைத் திறந்தால், அங்கே வெண்ணிலா கிச்சனில் என்னமோ சமைத்துக் கொண்டிருந்தாள்!
“ஹேய் நிலா, நீ என்ன அதுக்குள்ள வந்திட்ட?” என்றபடி உள்ளே நுழைந்தான்!
வெண்ணிலா ஆபிசில் எல்லோரும் டீமாக அவுட்டிங் சென்று இருந்தார்கள்.
அவர்களோடு வெண்ணிலா போக தயங்க, ஜீவா தான் தைரியம் சொல்லி அனுப்பினான்.
“உன் கம்பெனி கார்பரேட் கம்பெனி தான் என்றாலும் அங்கு வெஸ்டர்ன் கல்ச்சர் எல்லாம் இல்லை!
அது தெரிந்து தானே உன்னை அங்கு ரெபர் பண்ணியதே! உன் ஹெச்ஆர் எனக்கு தெரிந்தவ தான்!
டிப்பிக்கல் குடும்பஸ்த்ரீ! உன் டீம் லீடரும் அப்படி தான்! அவனும் கொஞ்சம் ஆர்த்தடாக்ஸ் பேமிலி தான்! இது ஒரு பாமிலி டூர் மாதிரி தான் இருக்கும்! பயப்படாம போயிட்டு வா!
உங்க மாதிரி டெவலப்பர்ஸ்க்கு இந்த மாதிரி ஏதாவது டூர் போய் மனசை ரிலாக்ஸ் பண்ணிகிட்டா தான் ஸ்ட்ரெஸ் போகும்னு தானே மேனேஜ்மென்ட் இப்படி அரேன்ஜ் பண்றாங்க!
உன் வீட்டில் பர்மிசன் வாங்கணும்னா சொல்லு, நான் அன்பு அண்ணன் கிட்ட பேசுறேன்” என்று சொல்லி அவனே அன்புவுக்கும் போன் செய்து அவன் ஓகே சொன்னபிறகு தான் வெண்ணிலா அங்கிருந்து கிளம்பியதே!
இப்போது என்னவென்றால், இவள் இங்கு இருக்கிறாள்? அவனுக்கு ஒரு சின்ன இன்ப அதிர்ச்சி தான்!
“அது ஒண்ணும் இல்ல சார், எங்க டீம்ல இருக்கும் ஐஸ்வர்யா கன்சீவா இருக்காங்க.
அவங்களுக்கு மார்னிங் சிக்னெஸ்! அங்க வந்து அடுத்த நாள் காலையிலேயே ஒரே வாமிட்டிங்! அவங்களுக்காக வெயிட் பண்ணி, நிறுத்தி, நிறுத்தி போய்கிட்டிருந்தோம்!
ஒரு கட்டத்தில் அவங்களே, இல்ல, நீங்க எல்லோரும் என்ஜாய் பண்ணுங்க, என்னை ஒரு கேப் புக் பண்ணி அனுப்பி வச்சுருங்கன்னு சொல்லிட்டாங்க!
கன்சீவா இருக்கும் அவங்கள எப்படி தனியா அனுப்புறதுன்னு யோசிச்சப்போ, நான் கூட்டிட்டு போய் அவங்க வீட்டுல விடறேன் சொல்லி நானும் அவங்களோட கிளம்பிட்டேன்!”
“ஏன் நிலா, உனக்கு அவங்களோட என்ஜாய் பண்ண ஆசையில்லையா?”
வெண்ணிலா பேசிக்கொண்டே, தோசை ஊற்றிக் கொண்டிருந்தவள், திரும்பாமலே, “இல்ல சார், எனக்கு என்னமோ அவங்களோட ஒட்டவே இல்லை!
இத்தனைக்கும் நான் சினிமாவில் பார்த்த மாதிரி கேம்ப்பயர் எல்லாம் ரெடி பண்ணி, ரொம்ப ஜாலியா தான் இருந்தது!
எனக்கு தான் பிடிக்கல, வீட்டு நினைப்பாவே இருந்தது!”
“ஏன் நிலா உனக்கு உன் அம்மா அப்பா நினைப்பு வந்திடுச்சா?” கேட்டபடியே ரெப்ரெஷ் ஆகி வந்தவன் கிச்சன் மேடையிலே அமர்ந்து கொண்டான்!
இப்பவும் திரும்பாமலே நிலா பேசினாள்.
“இல்ல சார், இந்த வீட்டு நினைப்பா இருந்துச்சு, நீங்க எப்ப வருவீங்க, இந்நேரம் பெங்களூர்ல உங்க மீட்டிங் முடிஞ்சு இருக்குமா, வீட்டுக்கு எப்ப வருவீங்க, என்ன சாப்பிட்டிங்க, மயூ மேடம் வந்துட்டாங்களா, வீட்டுல இருந்தா இப்ப என்ன பண்ணிட்டு இருப்பீங்க, இப்படி. உங்க நினைப்பாவே இருந்துச்சு, எப்படா வீட்டுக்கு வருவோம்னு இருந்துச்சு!” ஒரே ப்ளோவில் பேசிக் கொண்டே போனவள் சட்டென்று நிதானத்துக்கு வந்தவள், நாக்கைக் கடித்துக் கொண்டு அப்படியே பேச்சை நிறுத்தி விட்டிருந்தாள்!
இங்கோ ஜீவா வானத்தில் பறந்து கொண்டிருந்தான்!
“அடியே, என் செல்ல ஹனி! இது அவன் நிலாவுக்கு வைத்திருக்கும் செல்லப் பெயர்! அப்ப நீயும் என்னை இவ்வளவு தேடியிருக்க இல்ல? உன்னை.. “ ஜீவாவுக்கு அவளை அப்படியே பின்னால் இருந்து அணைத்துக் கொள்ள கைகள் ஆசைக் கொண்டன!
அதிலும் அவள் மீது இருந்து வரும் அந்த வாசம்!
வெண்ணிலா ஊரில் இருந்து வரும் போதே அவள் அம்மா வசந்தா அரைத்துக் வைத்திருக்கும் வீட்டு சீயக்காய் பவுடர் கொண்டு வந்திருந்தாள்!
சீயக்காயோடு, பூந்திக் கொட்டை, வெந்தயம், செம்பருத்தி உள்ளிட்ட பொருட்கள் கலந்த பவுடர் அது!
வெண்ணிலா அதை தான் தேய்த்துக் குளித்து விட்டு, எதிர் பிளாட் மாமியோடு அம்மன் கோவில் ஒன்றுக்கும் சென்று வந்திருந்தாள்!
அந்த கோவிலில் கொடுத்த அந்த தாழம்பூ குங்குமம், அப்புறம் அவள் தலையில் வைத்திருந்த அந்த முல்லைப் பூ இவையெல்லாம் எந்த காஸ்ட்லி பெர்பியும்கள் கொடுக்காத, ஒரு நறுமணம், இது வரை அவன் நுகர்ந்திராத ஒரு நறுமணம்!
அந்த நறுமணம் தான் அவளிடமிருந்து!
அது அவனை ரொம்பவும் ஈர்த்தது!
ஆனாலும் மனசாட்சி “நோ ஜீவா, உன்னை ரொம்ப நல்லவன்னு நம்பி, இப்படி இவளை இங்க தங்க அவங்க வீட்டு ஆளுங்க விட்டுருக்காங்க, எல்லாத்துக்கும் மேல அவங்க மயூவோட வார்த்தைக்காக நம்பி விட்டுருக்காங்க, அதனால் இப்படி யோசிக்காதே, தப்பு! உன் நிலா எங்க போய்ட போறா, மயூ எப்படியும் உன் மூஞ்சை வச்சே கண்டுப்பிடிச்சுடுவா! அவளே சீக்கிரம் உன் நிலாவ உன்கிட்ட கொண்டு வந்து சேர்ப்பா!
இந்நேரம் அவளுக்கு டவுட் வந்தாலும் வந்திருக்கும்!
நம்ம பய ஒரு பொண்ணு பின்னாடியும் போனதில்லையே, இப்படி ஒரு பொண்ணை வீட்டுக்கே கூட்டிட்டு வந்திருக்கானேன்னு!
வெறும் என் குரலை வச்சே, நிலா இங்கேர்ந்து போறது எனக்குப் பிடிக்கலன்னு தெரிஞ்சுட்டு , சும்மா ஒரு நொண்டி சாக்கு சொல்லி அவளை இங்கேயே தங்க வச்சவ தானே! என் செல்ல மயூ!
நான் வேற அன்னிக்கு சந்தோசத்துல அத்தனை உம்மா கொடுத்துட்டேன் அவளுக்கு, இந்நேரம் கன்பர்மே பண்ணியிருப்பா! பார்ப்போம் ஒரு அம்மாவா என்ன பண்ணப் போறான்னு!
ஆனா மயூவுக்கும் நிலாவைப் பிடிக்கணுமே!” அவனுள் கொஞ்சம் கவலையும் பிறந்தது!
இல்ல இல்ல நிலாவை மயூவுக்கு கட்டாயம் பிடிக்கும்!
அவனும் யோசித்துக் கொண்டே ஆனால் வெண்ணிலாவைப் பார்த்துக் கொண்டே இருந்தான் கண் இமைக்காமல்!
அவன் அப்படி பார்த்துக் கொண்டிருப்பது கண்டதும் நிலாவுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது!
“சார், தோசை சாப்பிடுங்க. பெசரட் தோசை! உங்களோட பேவரிட்டாமே, மயூ மேடம் ஒரு வாட்டி சொன்னாங்க! நான் மாமி கிட்ட கத்துக்கிட்டேன்!” பேச்சை மாற்றினாள் நிலா!
மவுனமாகவே தோசையை சாப்பிட்டான் ஜீவா.
———
இரண்டு நாட்கள் கழித்து.
இன்னும் வெண்ணிலாவின் ஆபிஸ் டூர் ப்ரோக்ராம் முடிந்து இருக்கவில்லை. எங்கோ ட்ரெக்கிங் போய்க் கொண்டு இருக்கிறார்களாம்.
வெண்ணிலாவுக்கு வீட்டில் இருக்க போர் அடித்தது. தனியே வெளியே போகவும் பிடிக்கவில்லை.
எனவே எதிர் வீட்டில் இருக்கும் மாமி வீட்டில் அவருடன் பேசிக் கொண்டிருந்தாள்.
இந்த மாதிரி எல்லாம் பேசுவதற்கு ஆள் கிடைக்காமல் ஏங்கிக் கொண்டிருந்த மாமிக்கு ஒரே சந்தோசம்!
ஹாலில் அமர்ந்து பொதுவான விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். டிவியும் ஓடிக் கொண்டிருந்தது.
அப்போது ஒரு நியூஸ் சானலில் மும்பையில் இருக்கும் ஒரு பிரபல ஹோட்டலை தீவிரவாதிகள் தாக்க செய்த முயற்சி, கடைசி நிமிடத்தில் மும்பை போலிசால் தடுக்கப்பட்டு விட்டது என்றும் கூறினார்கள்.
அந்த ஹோட்டலில் தங்கியிருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்களை குறிவைத்து தான் இந்த தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தார்கள் என்றும், இந்தியாவிற்கு அந்த அந்நிய முதலீடு கிடைக்கப் பெறாமல் செய்யவே இந்த வெளிநாட்டு சதி திட்டம் என்றும், அது நம் நாட்டு உளவுத்துறை மற்றும் போலிசாரால் ரொம்பவும் திறமையாக கையாளப் பட்டு அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் அந்த வெளிநாட்டு முதலீட்டாளர், இது போன்ற அச்சுறுத்தலுக்கு பயந்து தான் பின் வாங்க போவது இல்லை என்றும் இந்தியாவில் முதலீடு செய்யும் தன் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் திட்டவட்டமாக சொல்லி விட்டது மேலும் ஒரு மகிழ்ச்சி அடைய செய்யும் தகவல் என்றும் சொன்னார்கள் நியூஸில்!
மேலும் நேரலையான அந்த செய்தியில், சம்பந்தப்பட்ட அந்த ஹோட்டலிலிருந்து அதன் ரிப்போர்ட்டர் அங்கிருந்து பேசினார்.
“ம்ம். சொல்லுங்க பிரகாஷ், அங்க நிலைமை சீராகி விட்டதா?”
“ம்ம். இங்கு பழைய சகஜ நிலை வந்து விட்டது. ஆனாலும் இங்கு ஒரு அதிகாரப் பூர்வமில்லாமல் ஒரு செய்தியும் இந்த ஹோட்டல் வளாகத்தில் பேசப்படுகிறது!
இங்கு தங்கியிருந்த அனைத்து விருந்தினரும் பாதுகாப்பாக இருந்தாலும் உள்நாட்டு விருந்தினர் ஓரிருவரின் தற்போதைய நிலை தெரியவில்லை என்கிறார்கள்!”
தொடர்ந்து நியூஸ் ஓடிக் கொண்டிருந்தது.
இங்கோ வெண்ணிலா கதி கலங்கிப் போய் உட்கார்ந்து இருந்தாள்.
ஏனெனில் ஜீவா சென்று இருந்ததும் மும்பை தான். அவன் மீட் பண்ண போய் இருப்பதும் அங்கு தங்கியிருக்கும் வேறு ஒருவரை தான்! இவை வெண்ணிலாவுக்கும் தெரியும்!
அதனால் தான் அந்த ஒரிருவரில் ஒரு வேளை ஜீவாவும் இருந்து விட்டால், அவள் மனம் பதறியது.
அவளின் பதட்டத்தைப் பார்த்து விட்ட மாமி அதிர்ந்து போய், “என்னம்மா ஆச்சு, ஏன் இப்படி டென்சன் ஆகுற?” என்றார்.
அவள் தன் பயத்தை, சந்தேகத்தை திக்கித் திணறி சொன்னாள்.
“அப்படியெல்லாம் ஒண்ணும் இருக்காது, நீ ஜீவாவுக்கு போன் பண்ணு!”
போன் பண்ணினாள். நாட் ரீச்சபிள்!
“மயூவுக்கு கட்டாயம் அவன் போன் பண்ணியிருப்பான், அவளும் உன்னை மாதிரி நியூஸ் பார்த்துட்டு பயந்துட்டு இருப்பான்னு, நீ அவளுக்கு ட்ரை பண்ணு” என்றார் மாமி!
மயூவின் போனும் ஸ்விட்ச் ஆப்!
வெண்ணிலாவின் ஹார்ட் பீட் எகிறியது!
“இரும்மா பதறாத! இரு மாமா விட்டு விசாரிக்க சொல்றேன்! அவருக்கு ப்ரெஸ்ல நிறைய பேர தெரியும், அதெல்லாம் ஜீவாவுக்கு ஒண்ணும் ஆகி இருக்காது!”
“சரி மாமி” என்று அவள் வீட்டுக்கு திரும்பி போய், சாமி படம் முன்பு விளக்கேற்றி கந்தசஷ்டி கவசம் சொன்னாள்.
இருந்தும் அவள் பதட்டம் குறையவே இல்லை!
அப்போது காலிங் பெல் அடித்தது.
பயந்து கொண்டே திறந்தால், மாமி தான்!
“மாமா விசாரிக்க போய் இருக்காரு நிலா, அப்படி ஒண்ணும் பயப்படற அளவு அங்கு ஒண்ணும் நடந்திருக்காது, அந்த டிவி நியூஸ் சானல் வெறும் சென்சேசன் உண்டாக்க அப்படி சொல்லி இருப்பான்னு சொல்றா. நீ ஒண்ணும் பதட்டப்படாதே!” சொல்லி விட்டு போனார்.
மீண்டும் அவள் ஒரு முறை சஷ்டி கவசம் படித்தாள்.
இப்போது மீண்டும் பெல் அடிக்க, கதவைத் திறந்தால், கை நிறைய லேப் ரிப்போர்ட்ஸ், மெடிசன்ஸ் அடங்கிய கவர்களுடன் ஜீவா!
வெண்ணிலா எதைப் பற்றியும் யோசிக்காமல், அவனை ஓடிச் சென்று இறுக்க கட்டிக் கொண்டாள்.
அவளின் வேகமான ஹார்ட்பீட் அவனுக்கே கேட்டது அந்த அளவு!
“ஏய்.. நிலா என்ன ஆச்சு. ஏன் இப்படி டென்சன்?” அவன் அதிர்ந்து போய் கேட்டான்.
ஜீவாவின் குரல் கேட்டு வெளியே வந்த மாமி, நிலா, இப்படி அவனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நிற்பதைக் கண்டவுடன் சட்டென்று உள்ளே போய் விட்டார்!
“ஏய் நிலா, என்னம்மா ஆச்சு, ஏன் இப்படி?” அவள் கன்னம் தட்டி அவன் கேட்கவும் தான் நிலா நடப்புக்கு வந்தாள்.
அய்யோ என்ன பண்ணிட்டு இருக்க வெண்ணிலா, அவள் தன்னையே திட்டிக் கொண்டு ஒன்றும் சொல்லாமல் உள்ளே போய் விட்டாள். அவன் கூடவே வந்தான்.
“என்ன ஆச்சு நிலா?”
“நீங்க மும்பை போகலியா?”
“ஏர்போர்ட் வரை போனேன், அப்ப பார்த்து மயூ கிட்ட இருந்து போன்!
அவளுக்கு உடம்பு சரியில்ல உடனே வான்னு, அதனால நான் ட்ரிப்பை கேன்சல் பண்ணிட்டு அவளை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிட்டேன்!
அங்க போய் மாத்தி மாத்தி டெஸ்ட், ஸ்கேன் என்று ஒரே அலைச்சல்! கொஞ்சம் பயம் வேற! அந்த டென்சன்ல உனக்கு இன்பார்ம் பண்ண மறந்துட்டேன்! சாரி! ஆனா இப்ப என்ன ஆச்சு? எதுக்கு இப்படி டென்சன் உனக்கு?”
“டிவி நியூஸ் பார்த்தீங்களா, இல்ல சோசியல் மீடியாவாவது பார்த்தீங்களா?”
“ஏன்? ஒண்ணுமே பார்க்கல, பார்க்க தோணல, மயூவோட ஹாஸ்பிட்டல்ல இருந்ததுனால!”
“நீங்க தங்க போறேன்ன்னு சொல்லியிருந்த அந்த ஹோட்டலை டெரரிஸ்ட்கள் அட்டாக் பண்ண இருந்தாங்க! ஆனா எல்லோரையும் காப்பாத்திட்டாங்க, ஆனா ஒண்ணு ரெண்டு பேர் பத்தி மட்டும் தகவல் தெரியலன்னு சொன்னாங்க! உங்களுக்கு ஏதும் ஆச்சோ பயந்தே போயிட்டேன்! அப்படி பயந்து போய்ட்டேன்!
உங்களுக்கு ஒரு போன் பண்ணனும்னு கூட தோணல இல்ல?” அவள் உதடு கோணி அழுதாள்.
“ஏய் அழாத நிலா, சாரி.. சாரி, எனக்கு இப்படி ஒரு விஷயம் நடந்து இருக்கிறதே தெரியாது இல்ல, தெரிஞ்சு இருந்தா நீ பயந்துட்டு இருப்பன்னு போன் பண்ணி இருப்பேன்ல! அழாத நிலா!”
“சாரி எல்லாம் வேணாம் சார். நான் தான் சாரி கேக்கணும்! ஒரு டென்சன்ல உங்க கிட்ட இப்படி நடந்துகிட்டேன்!
உங்க மயூ மேடம் எப்படி இருக்காங்க? இப்ப உடம்பு பரவாயில்லையா?” அவள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கேட்டாள்.
“ம்ம் இப்ப பரவாயில்ல நிலா, ஏய் சாரிம்மா” அவன் திரும்பவும் சாரி கேட்க,
“சாரி நான் தான் கேட்கணும், உங்களுக்கு உங்க மயூ இருக்கும் போது, நான் இப்படி உங்கள ஹக் எல்லாம் பண்ணிட்டேன்! சாரி சார்” என்றாள் வெண்ணிலா.
வாய் தான் இப்படி பேசியதே தவிர, அவளுள் இருந்த ஒரு சின்ன பொறாமையோ, அல்ல பொசசிவ்நெஸோ, இல்லை ஏக்கமோ ஏதோ ஒன்று அவனுக்கு அவளை காட்டிக் கொடுத்து விட்டது! அவளின் தற்போதைய நிலையை!
அவளின் தவிப்பை, இது வரை இருந்த குழப்பத்திற்கான காரணத்தை!
புரிந்து கொண்டவுடன் துணிந்து அவள் அருகில் சென்று அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு கேட்டான்.
“மயூ யாருன்னு நினைச்சுட்டு இருக்க? அவ இப்ப இங்க வந்திருக்கா, கீழே அவளோட பிரண்ட்ஸ் பிடிச்சுட்டுகிட்டுப் பேசிட்டு இருக்காங்க! வந்தா தெரியும் உனக்கு!”
“எனக்கு ஒண்ணும் தெரிய வேண்டாம்” அவள் விலக முற்பட,
“முடியாது. நீ தெரிஞ்சுக்கணும்”, அவளை இன்னும் இறுக்கிக் கொண்டான்.
ஜீவாவிடம் இதை எதிர்பார்க்கவில்லை அவள்!
நீ தெரிஞ்சிக்கணும். அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே காலிங் பெல் அடித்தது.
“நீயே போய் திற மயூ தான்!” சொல்லி விட்டு அவன் ரூமிற்கு போய் விட்டான்.
வெண்ணிலாவுக்கு ஒரே குழப்பம்! இவன் செய்கையிலும் பேச்சிலும் குழம்பிக் கொண்டே கதவைத் திறந்தாள்.
வெளியே நின்று கொண்டிருந்தாள் மயூ!
வெண்ணிலா அவளைப் பார்த்தாள்.
பாப் வெட்டிக் கொண்டு, குர்தி அணிந்த, ஆனால் நல்ல கண்ணியமான தோற்றத்தில் ஒரு பெண்! சட்டென்று நடிகை நதியா போல் தோற்றம்!
அதாவது டக்கென்று பார்த்தால் வயதே தெரியாது, சிறு பெண் போல இருக்கும்! ஆராய்ச்சிக் கண்ணோடு பார்த்தால் மட்டுமே அவளின் வயது தெரியும்!
ஆனால் பார்ப்பதற்கு ஜீவாவின் அக்கா மாதிரி இருக்கும் இவளையா ஜீவா லவ் பண்ணுகிறான்?
வந்தவள் பேசினாள்.
“என்ன நிலா அப்படியே திகைச்சுப் போய் நிக்கிற? நான் தான் மயூ! வித்யா மயூரி! ஜீவாவின் அம்மா!”
அவ்வளவு தான்! நிலாவுக்குள் என்னென்னமோ எண்ணங்கள்! பெரிய பாரமே இறங்கி விட்டது போல!
இவ்வளவு நாளாக இருந்த ஒரு குற்றவுணர்ச்சி போய், மிகப்பெரிய சந்தோசம்! ஆனால் அது அழுகையாக வெளிப்பட்டது!
அவள் ஓடிச்சென்று மயூவையும் இறுக கட்டிக் கொண்டாள்!
தேம்பி தேம்பி அழுதாள்!
“மயூ வந்தாச்சா” என்றபடி வெளியே வந்த மாமி,
இப்போது மயூவைக் கட்டிக்கொண்டு நிற்கும் நிலாவைப் பார்த்து ஆச்சரியப் பட்டார்!
என்ன இந்த பொண்ணு, வடக்கத்திக்காரி மாதிரி ஜீவாவையும் கட்டிப் பிடிச்சுட்டு நின்னா, இப்ப மயூவைக் கட்டிப் பிடிச்சுட்டு நிற்கிறா?
இவ ஏதோ திருச்சில வயலூர் அருகே இருக்கிற ஒரு கிராமத்திலிருந்து வந்திருக்கிறதா தானே சொன்னா? அதுவும் எங்க ஊர்லதான் தேசிய வாழை ஆராய்ச்சி மையம் இருக்கு என்று கூட சொல்வாளே!
எந்த ஊரோ, என்னமோ ஆனா ரொம்ப நல்ல பொண்ணு! டீ மயூ இவளையே உன் மாட்டுப் பொண்ணா கொண்டு வந்திடு! அவ ஜீவா மேல அவ்வளவு பாசமா இருக்கா! அவ தவிச்ச தவிப்பை தானே பார்த்தேனே!
மாமியின் மனக்குரல் மயூவுக்கு எட்டுமா?
error: Content is protected !!