Skip to content
Post Views: 659
“ஆனந்தி மிஸ் உங்களுக்கு இப்ப கிளாஸ் இல்லையா”என்று சொல்லிக்கொண்டு வந்தாள் பூரணி.
டீச்சர் ரெஸ்ட் ரூமில் தனது இருக்கையில் அமர்ந்து அடுத்த கிளாஸ்க்காக நோட்ஸ் எடுத்துக்கொண்டு இருந்த அவள் பூரணியைப் பார்த்து புன்னகைத்து, “இல்ல மிஸ் டூ ஹௌர்ஸ் ஃபிரீ தான் அதான் நெஸ்ட் கிளாஸ்க்காக நோட்ஸ் எடுத்துட்டு இருந்தேன்”
“என்ன மிஸ் எப்ப பாத்தாலும் புக்ஸ்,நோட்ஸ்,பேப்பர், எக்ஸாம் தானா வேற என்டர்டைன்மென்டே இல்லையா”
அதற்கு பதில் சொல்லாமல் இதழ்ப்பிரியா ஒரு புன்னகையை கொடுத்தாள்.
Advertisement
“அது சரி எது கேட்டாலும் இந்த புன்னகை ஒண்ணா கொடுத்துருங்க. மிஸ் லைட்டா பசிக்குற மாதிரி இருக்கு கேன்டின் போலாமா”
“சரி போலாம் மிஸ் இத எடுத்து வைச்சிட்டு வரேன்”என்று சொல்லி அதுவரை தான் நோட்ஸ் எடுத்துக் கொண்டு புக்ஸை அழகாக அடுக்கி வைத்து விட்டு வந்தாள்.
“அது எப்படி மிஸ் என்ன வேலை செஞ்சிசாலும் அழகா செய்ரிங்க நல்ல வேலை எங்க அம்மா உங்கள பாக்கல. அவங்க மட்டும் நீங்க செய்றாத பாத்தா என்ன திட்டியே கொன்னுருவங்க”
Advertisement
அதற்கும் சேர்த்து ஒரு புன்னகையை கொடுத்துக் கொண்டு இருவரும் சேர்ந்து கேண்டின் நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். அப்போது அவர்களை நோக்கி ஓடிவந்த அந்த பள்ளியின் மாணவன் ஒருவன், “ ஆனந்தி மிஸ் உங்களை தேடி ஒருத்தர் வந்து இருக்கார். உங்களை உடனே கூட்டிட்டு வர சொல்லி ஹெட் மாஸ்டர் சொன்னாங்க” என்று சொல்லி நிக்காமல் சென்றான்.
Advertisement
“அடேய் நில்லுடா கொழுப்ப பாத்திங்களா மிஸ் நின்னு கூட சொல்ல மாட்டேன் ஓடுறான். அது சரி உங்களை தேடி யாரு மிஸ் வந்திருக்காங்க” என்றாள் பூரணி.
“தெரியல மிஸ் வெயிட் பண்ணுங்க நான் போய் பாத்துட்டு வரேன்” என்று சொல்ல ஹெட் மாஸ்டர் ரூம் நோக்கி சென்றாள் ஆனந்தி.
அந்த கதவை தட்டிவிட்டு உள்ளே சென்று, “குட் மார்னிங் சார்”என்றாள்.
Advertisement
“வா மா குட் மார்னிங்”என்று புன்னகையுடன் அழைத்தவரை பார்த்து பதில் புன்னகை கொடுக்க போனவளின் கண்களில் அவருக்கு எதிரே உள்ள இருக்கையில் அமர்ந்தவன் விழ அப்படி அந்த புன்னகை அவளின் இதழ்களில் உறைந்தது.
“என்னமா அப்படி பாக்குற ஓ.. தம்பிய பார்த்து சப்ரைஸ் ஆகி நீக்கியாமா தம்பி நீங்க சொன்னது சரிதான் உங்கள பார்த்த உடனே அப்படியே உறைஞ்சிப் போய் இருக்காங்க பாருங்க”
“ ஆமா சார் என்னை எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க அதான் உறைஞ்சிப் போய் இருக்காங்க சரி சார் நாங்க வெளிய போய் பேசுறோம் நீங்க உங்க வேலைய பண்ணுங்க. என்ன மேடம் அப்படியே நிற்க போறிங்களா இல்ல வெளியே வந்து என்கிட்ட பேச போறீங்களா” என்று சொல்லி அவளின் பதிலை எதிர்பாராமல் வெளியே சென்றான் அவன்.
“ சோ மேடம் இங்க தான் இருக்கீங்க. நேம் சேஞ்ச் ஆள் சேன்ஜ் ஃபுல் லைஃப் சேஞ்ச் ஆயிடுச்சு என்ன. எல்லாம் ஓகே தான் ஆனா உங்களையே ஒரு முட்டாள் கிட்டத்தட்ட அஞ்சு வருஷமா லவ் பண்றானே அவனுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க மேடம் அத சொல்லிட்டீங்கன்னா நான் உங்கள டிஸ்டர்ப் பண்ணாம போய்க்கொண்டே இருப்பேன் எப்படி இப்ப சொல்ல போறீங்களா இல்ல இங்க இருந்து எப்படி எஸ் ஆகலாம் திங்க் பண்ணிக்கிட்டு இருக்கீங்களா. என்னா நீங்கதான் சொல்லாம கொள்ளாம ஓடிப்போயிருவீங்களே அதுக்கப்புறம் ஒரு முட்டாள் உங்களுக்கு தேடி அலஞ்சி கஷ்டப்பட்டு பைத்தியக்காரன் மாதிரி தேடி வந்து உங்க முன்னாடி நிக்க இருக்கான் இல்ல. என்ன மேடம் அமைதியா இருக்கீங்க ஏதாவது பேசுங்க அப்புறம் தானே எனக்கும் புரியும் இன்னும் எத்தனை வருஷம் இப்படியே முட்டாளா வெயிட் பண்ணிட்டு இருக்கனும்னு” என்று கோவமாக கத்திக்கொண்டு இருந்தவனை பார்த்து எந்த பதிலும் சொல்லாமல் மௌனமாக நின்றாள் அவள்.
“ பேசமாட்ட நீ பேச மாட்ட இல்ல உனக்கு தான் ஊர்ல இருக்க எல்லாரோட கஷ்டமும் கண்ணுக்கு தெரியும் ஆனா என் கஷ்டம் எதுவும் உனக்கு கண்ணுக்கு தெரியாது இல்ல இனி எத்தனை வருஷம்தான் இப்படியே என்கிட்ட இருந்து ஒளிஞ்சி ஓட போற சொல்லுடி வாய தொறந்து ஏதாவது ஒன்னு சொல்லுடி அப்ப தான் எனக்கு புரியும்”
“ கொஞ்சம் நிறுத்துங்க சார். ஆமா ஃபர்ஸ்ட் நீங்க யாரு ஏன் என் முன்னாடி நின்னு இப்படி கத்திட்டு இருக்கீங்க நீங்க சொல்றது எதுவுமே எனக்கு புரியல நான் உங்களை இதுவரைக்கும் பார்த்தது கூட இல்ல. என்ன சார் உங்க பிரச்சனை பார்க்க நல்ல டீசண்டா இருக்கீங்க ஏன் தேவை இல்லாமல் பேசிட்டு இருக்கீங்க போங்க சார் நீங்க தேடுற ஆளு நான் இல்லைன்னு நினைக்கிறேன் இனிமே இப்படி தேவை இல்லாம வந்து என் முன்னாடி பேசிட்டு இருக்காதீங்க சரியா” என்று சொல்லி வேகமாக நடக்க தொடங்கியவளை கையைப் பிடித்து தடுத்து நிறுத்தினான்.
“ எங்க மேடம் அவசரமா போறீங்க நான் இன்னும் உங்க கிட்ட பேசி முடிக்கல அது எப்படி நீங்க நான் தேடுறவங்க இல்ல அப்படித்தானே சரி ஓகே. எல்லாம் சரியா சொன்ன மேடம் ஆனா உங்க கழுத்துல ஒரு செயின் போட்டு இருக்கீங்களே அது என் லவ்வருக்கு நான் வாங்கி கொடுத்தது அது மட்டும் நீங்க ஏன் போட்டு இருக்கீங்கன்னு சொல்ல முடியுமா. என்ன இதுவும் உங்களுக்கு வேற யாரும் வாங்கி தந்தது என் காதுல பூவ செத்த போறீங்களா சொல்லுடி சொல்லு நீ யாருன்னு எனக்கு உண்மைய சொல்லு” என்று அவளின் கையை பிடித்து இறுக்கினான்.
“என்ன சார் உங்க பிரச்சனை தனியா இருக்க பொண்ணு கிட்ட ஏன் இப்படி பண்றீங்க. நீங்க தேடுறவங்க நான் கிடையாது ப்ளீஸ் உங்களை இதுக்கு முன்னாடி நான் பார்த்ததே இல்ல அதனால என் வழியில நீங்க குறுக்க வராதீங்க” என்று சொல்லி நடக்க தொடங்கியவளை கையை பிடித்து இழுத்து அவனின் காருக்குள் தள்ளினான் .
” நீ நான் தேடுனவ இல்லன்னு சொல்ற இல்ல. ஓகே அத நீ நான் சொல்றவங்க முன்னாடி வந்து சொல்லு நான் நம்புறேன்” என்று சொல்லி கார் கதவை லாக் செய்துவிட்டு அதனை வேகமாக ஓட்ட தொடங்கினான் இளமாறன்.
@@@@@@@@@@
“என்னமா அப்படி பாக்குற அன்னைக்கு அவ்வளவு பேசினாங்க ஆனா இன்னைக்கு எல்லாத்துக்கும் சேர்த்து மன்னிப்பு கேட்கிறாங்க. இதுல எது நடிப்பு எது உண்மை பாக்குறியா. அன்னைக்கு பேசுனதும் நான் தான் இன்னைக்கு பேசுனதும் நான்தான். என்ன அன்னைக்கு உங்க குடும்பத்து மேல இருந்த என்னோட தப்பான அபிப்ராயத்தால அப்படியெல்லாம் பேசனேன் ஆனா இன்னைக்கு எல்லாத்தையும் புரிஞ்சுக்கிட்டு என்னோட தப்பான கருத்து எல்லாத்தையும் நீங்கி மன்னிப்பு கேட்டு பேசுறேன் இதுதான் நான் இப்படித்தான் இருப்பேன். எனக்கு எதையும் மனசுல வச்சுட்டு பின்னாடி பேச பிடிக்காது ஏதா இருந்தாலும் முன்னாடி தான் பேசுவேன் இதுதான் என்னோட குணம் இதுவரைக்கும் நான் பேசுவதற்கு உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன் மா என்னை மன்னிச்சிரு” என்று தனது முன்னே நின்று இரு கைக்கூப்பி மன்னிப்பு கேட்பவரை பார்த்து பதறி, “ஐயோ அத்தை என்ன பண்றீங்க என்கிட்டே போய் மன்னிப்பு கேப்பீங்களா நானே சின்ன பொண்ணு. நீங்கதான் என் அப்பாவோட தங்கச்சி ஆயிட்டீங்களே இனிமே நான் ஏன் உங்களை மன்னிக்கனும் அதான் எல்லோரும் எந்த கசப்பும் இல்லாம நல்லா பேச தொடங்கிட்டேங்களே அதுவே போதும் எனக்கு. எனக்கு உங்க மேல எந்த கோபமும் இல்ல என்ன நீங்க தாத்தாவ அப்படி பேசுனது மனசு கஷ்டமா இருந்துச்சி அதான் இப்போ சரியா போச்சே இனிமே இப்படி என்கிட்ட மன்னிப்பு கேட்காதீங்க அத்த. இனிமே நம்ம எல்லாரும் ஒரே குடும்பம் தான் ஒரே குடும்பத்துக்குள்ள ஒருத்தர் மன்னிப்பு கேட்கிறது அவ்வளவு நல்லா இருக்காது அத்தை” என்ற இனியாவை பிரியமுடன் அணைத்தும் கொண்டார் ஈஸ்வரி.
“என்னமா எல்லார்கிட்டயும் நீ மன்னிப்பு கேட்டு முடிச்சிட்டானா அடுத்து நடக்க வேண்டியது பத்தி நம்ம பேசலாமா” என்றார் வள்ளியம்மை.
“இனி பேச என்னம்மா இருக்குது அதான் என் அண்ணங்க இருக்காங்களே அவங்களுக்கு தெரியும் அவங்க மருமகன் கல்யாணத்தை எப்படி நடந்தனும். அதனால நான் எதுவும் கேட்க மாட்டேன். என்ன அண்ணங்களா தாய் மாமாவா இருந்து என் பையனோட கல்யாணத்தை நீங்க நடத்த மாட்டீங்களா” என்று பழனி முருகன் செந்தில் முருகன் இருவரையும் பார்த்து கேட்ட ஈஸ்வரியை பார்த்து, “ நீ சொல்ல வேணுமா நம்ம பசங்களோட கல்யாணத்தை இந்த ஊரை வியக்குற மாதிரி எப்படி நடத்துறோம்னு நீ நிம்மதியா உட்கார்ந்து வேடிக்கை மட்டும் பாருமா. என்ன அண்ணா நான் சொன்னது கரெக்ட் தானே” என்றார் பழனி முருகன்.
“ஆமாம்மா தம்பி சொன்ன மாதிரி எதுவும் பண்ண வேண்டாம் ஒக்காந்து இடத்துல இருந்து கல்யாணத்தை வேடிக்கை மட்டும் பாரு நாங்க எப்படி எங்களோட மருமகன் கல்யாணத்தை நடத்துறோம்னு” என்றார் செந்தில் முருகன்.
“அப்புறம் என்ன எனக்கு கல்யாண விஷயம் எதுனாலும் என் அண்ணங்கக்கிட்டயும், என் பசங்கக்கிட்டயும் பேசுங்கமா”
error: Content is protected !!