தூங்கும் திவ்யா அரிய நாச்சியை பார்க்க ரசித்து நின்றான் ஆண்டவர் கனி.
Advertisement
சிறிது நிமிடம் முன் வீட்டிற்க்கு வந்தவன் ஹாலில் தந்தை தூங்கும் இடம் காலியாக இருக்க. எங்கே அவர் என்று லட்சுமியின் அறைக்கு வந்து பார்த்தான். தந்தையும், தாயியும் தூங்குவதை பார்த்தவன்.
Advertisement
திவ்யா எங்கே இருப்பாள் ஒரு வேளை பார்கவியின் அறையில் தங்கி இருப்பாளோ இல்லை, அவர்கள் வீட்டில் உறவுகள் வந்தால் தங்கவென ஒரு அறை காலியாக இருக்கும். அங்கே சென்று இருப்பாளோ என்று காலியாக இருக்கும் அறையை சென்று பார்த்து வந்தான்.
அங்கேயும் இல்லை என்றவன். கண்டிப்பாக பார்கவி அறையில் தான் இருப்பாள் என்று முடிவு எடுத்து.
தனது அறைக்கு வர. அவனின் பொக்கிஷம் அவனின் கட்டிலில் தூங்குவதை பார்த்தவன்.
சந்தோஷமான மனநிலையில் குளிக்க சென்றான். குளித்துவிட்டு வந்து மனைவியை பார்க்க.
அவள் முகம் ஏதோ வலியில் முனங்குவதை பார்த்தவன் என்ன ஆச்சு. இவளுக்கு என்ன என்று அருகில் வந்து பார்த்தான்.
அவளின் வலது கால் விரலில் அடிபட்டு இருந்தது. அப்போதுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது திருச்செந்தூர் கோவில் சாமி தர்ஷனம் பார்க்க வரிசையில் நிற்கும் போது திவ்யாவில் கால் விரல் படியில் இடித்து நகம் சதையோடு பிய்த்து இருந்தது.
அது வலிக்குமோ என்று அவள் அருகில் வந்து பார்க்க. ஒரு காலை மட்டும் பெட்ஷீட்டால் மூடி இருந்தவள். அடிபட்ட காலை சற்று தள்ளி வைத்து இருப்பதை பார்த்தவன்.
முதல் உதவி பெட்டி எடுத்து வந்து அவள் பக்கத்தில் அமர்ந்து, அவளின் காலை தூக்கி தன் மடிமீது வைத்தை அடிப்பட்ட விரலை பார்க்க, ஒரு நடு விரலில் நகம் பாதி அடிப்பட்டு இரத்தம் உரைந்து இருந்தது. அதை முதலில் பாதி உடைந்த இருந்த நக கன்னை நக வெட்டியால் கட்பண்ண.
ஏய் கத்தாதடி, தப்பா நெனைக்க போறாங்க என்றவன். இரு ஒரு நிமிசம் நகம் பாதி கட்டாகி இருக்கு கொஞ்சம் கட் பண்ணிட்டேன், ரத்தத்தை சுத்தம் பண்ணி மருந்து போட்டுவிடுறேன் என்று அவனின் வேலையை பார்க்க.
இவளுக்கு வலி பொறுக்க முடியாமல் போதும், போதும் வலிக்குது என்று காலை இழுக்க பார்க்க.
ஏய் சும்மா இரு, கால இப்படியே விட்ட செப்டிக் ஆகிரும் என்றவன். கால் விரலுக்கு மருந்திட்டு சிறிய பேன்டேசை ஒட்டி விட்டு. அவளின் காலை பெட்டின் மீது வைக்க. கலங்கிய கண்களோடு அவனை பார்த்து இருந்தவளை.
அவ்வளவு தான் இதுக்கு போய் அழுவாங்கலா என்று கண்ணீரை துடைத்து விட. அவளின் கன்னம் இரண்டும் சூடாக இருக்க, கழுத்தை தொட்டு பார்த்தவன் என்னடி பீவர் மாதிரி இருக்கு. மாத்திரை போட்டியா.
உம் என்றவள். படுத்து கொள்ள.
எப்போ போட்ட.
1 மணிநேரம் முன்னாடி என்றாள்.
அப்போ பீவர் இன்னும் குறையாமா இருக்கு என்றவன். மீண்டும் படுத்து இருக்கும் திவ்யாவின் கழுத்தை தொட்டு பார்த்தவன், காய்ச்சல் குறையவில்லை வா, ஹாஸ்பெட்டல் போகலாம் என்க.
காலையில் போகலாம் எனக்கு தூக்கம் வருது. அசதியா இருக்கு என்றவள், பெட்சீட்டை மூடி தூங்க முற்பட.
ஏய் எழுந்து வா என்றவன். தன் டாக்டர் நண்பன் விஷ்ணுவுக்கு கால் பண்ண. போனை எடுத்த ஆண்டவர்கனியின் நண்பன் என்ன வென்று கேட்க.
என் மனைவிக்கு பீவர் உன்னை பார்க்கணும்.
அவன் இரவு டூட்டியில் இருப்பதால் நேராக கிளினிக் வர சொன்னான்.
சரிடா வர்றேன் என்றவன். வா திவ்யா என்றான்.
என்னால முடியல , நான் தூங்கனும், தூங்கி எழுந்த சரியாகிடும் என்று தூங்க.
அவள் மூடி இருந்த பெட்ஷீட்டை எடுத்தவன். வா என்று அவளை கிளம்ப சொல்ல.
அவளுக்கு எழுந்து கொள்ள சுத்தமாக முடியவில்லை போங்க என்றவன். அவனை தள்ளி விட்டு மீண்டும் பெட்டில் படுக்க முயற்சி செய்தவளை.
அவளை வா என்று தூக்க.
அவன் தூக்க வருவதை பார்த்தவள் வர்றேன், வர்றேன் என்று கிளம்ப. இரவு பேன்ட், சட்டையில் இருந்தவளை.
மேல சர்கின் போட்டுக்கோ என்றவன் அவளை அழைத்துக்கொண்டு கீழே வந்தான்.
கார் எடுத்தால் சத்தம் கேட்டு யாராவது வருவார்கள் என்று நினைத்தவன்.அவனின் புல்லட்டை மெல்ல அவர்கள் வீட்டை விட்டு தள்ளி நிறுத்தி சார்ட் பண்ணியவன்.
திவ்யாவை ஏற சொல்ல.
பாதி கண்களை மூடிய படியே வந்தவள். ஆண்டவர்கனியை முறைத்து விட்டு வண்டியில் இரண்டு காலை போட்டு பின்னாடி ஏறி அமர்ந்தாள்.
வண்டியை மெதுவாக இயக்கினான் கனி.
அவனின் முதுகில் தனது முகத்தை வைத்தவள். ஒரு கை ஆண்டவர்கனியின் தோளை இருக்கமாக பிடித்திருந்தவள். இன்னொரு கையை புல்லெட்டில் உள்ள சைடு கம்பியை பிடித்திருந்தாள்.
அவனின் முதுகில் திவ்யாவின் பீவரின் சூட்டை உணர்ந்தவன். உடம்பு எவ்வளவு சூடா இருக்கு வரமாட்டேன்னு சொல்லுற என்று திட்டிக்கொண்டே வண்டியை மெல்ல இயக்கி வந்தவன், ஏய் பொண்டாட்டி தூங்கிறாத விழுந்துற போற என்று பேசி கொண்டே வந்தான்.
அவளோ எப்போ வரும் ஹாஸ்பெட்டல் என்றாள் முனங்கிகொண்டே.
இன்னும் 5 மினிட்ஸ்ல என்று ஹாஸ்பெட்டல் வந்தான். அது ஒரு சிறிய 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவமனை.
நேராக அவனின் நண்பனின் அறைக்கு சென்று கதவை தட்ட.
வா கனி என்றான் டாக்டர் விஷ்ணு.
ஆண்டவரகனியும், விஷ்ணுவும் 12 டாம் வகுப்புவரை ஒன்றாக சேர்த்து படித்தவர்கள்.
என்னாச்சு,யாருக்கு? என்று விஷ்ணு ஆண்டவர்கனியிடம் கேட்க.
திவ்யாவை காட்டி தன் மனைவி என்று அறிமுகம் படுத்தியவன், இவளுக்கு பீவரா இருக்கு, இன்று கடலில் குளித்தது, காலில் அடிப்பட்டது என்று அனைத்தையும் சொல்ல,
வாங்க சிஸ்டர் என்று திவ்யாவை செக் பண்ணிய விஷ்ணு வைரஸ் பீவர் மாதிரி இருக்கு என்றவன். மாத்திரையை கொடுத்து, ஏதாவது சாப்பிட கொடுத்து மாத்திரையை போட சொல்லு கனி, மூணு நாளைக்கு பீவர் இருக்கும் சரியாகிரும் என்று அனுப்பி வைத்தான்.
இருவரும் வீட்டுக்கு வரும் வழியில் இரவு நேர ஹோட்டலில் இட்லி வாங்கி உண்டு விட்டு, அவளை மாத்திரையை போட செய்தவன். வண்டியில் ஏறி இருவரும் வீடு நோக்கி செல்ல.
ஸ்டாப், ஸ்டாப் என்று ஆண்டவர் கனியை வண்டியை நிப்பாட்ட சொன்னவள்.
வண்டி நின்றவுடனே, வேகமாக இறங்கியவள் இரவு சாப்பிட்டதை எல்லாம் வாமிட் எடுக்க.
என்னாச்சு என்று அவளின் பின் சென்றவன், அவள் வாமிட் எடுப்பதை பார்த்து வேகமாக சென்று வண்டியில் உள்ள வாட்டர் பாட்டிலை எடுத்து வந்து அவளுக்கு கொடுத்தான்.
அவளோ அவன் கொடுத்த வாட்டர் பாட்டிலை வாங்காமல் மீண்டும் வாமிட் எடுக்க.
தண்ணி குடி திவ்யா, கொஞ்சம் நல்லா இருக்கும் என்றவன். அவளை எழுப்பி நிக்க செய்தவன், அவளின் வாயை தண்ணீர் எடுத்து துடைத்து விட.
நான் என்று சொல்ல வந்தவளை. நான் பண்ணுறேன் என்றவன்.
அவளின் வாயை துடைத்து விட்டவன். வாயை கொப்பளி என்று தண்ணீர் பாட்டீலை எடுத்து அவளின் வாய் அருகே கொண்டு சென்று கொப்பளிக்க வைத்து. தண்ணீர் கொஞ்சம் குடிக்க வைத்து, கொஞ்சம் நேரம் காற்றோட்டமாக நில்லு என்று விஷ்ணுவுக்கு கால் பண்ணி வாமிட் பண்ணிட்டா திவ்யா என்ன பண்ண என்று கேட்க.
அவனோ மெடிக்கல் சாப்பிற்கு சென்று ஒரு வாமிட் மாத்திரையை வாங்கி, ஒரு மடக்கு தண்ணியில முலுங்க சொல்லு. கொஞ்சம் நேரம் கழிச்சு காய்ச்சலுக்கு மாத்திரை கொடுக்க சொல்லி விட்டு போனை வைத்தான்.
சரி என்ற கனி, திவ்யாவை வண்டியில் ஏற்றி மெடிக்கல் சாப்பிற்கு சென்றவன் வாமிட் மாத்திரை வாங்கி கொஞ்சம் தண்ணீரில் குடிக்க வைத்தவன்.
வீட்டுக்கு வரும் வழியில் ஒரு இரவு நேர கடையில் சுக்கு காபி பார்சல் வாங்கி வந்தான்.
தனக்காக பார்த்து, பார்த்து செய்யும் கணவனையே ஆசையாக பார்த்திருந்தாள்.
வீட்டிற்கு வந்தவன். அவளை மெதுவாக அழைத்து அறைக்கு வந்து அவளை உடைமாற்றி படுக்க சொல்லி விட்டு கீழே சென்றவன். ஒரு கிளாசில் சுக்கு காபியை குடிக்கும் பதத்திற்கு ஆற்றி எடுத்து ரூம் வந்து அவளை குடிக்க சொல்ல.
அவளோ எனக்கு வேண்டாம், தொண்டையெல்லாம் வாமிட் பண்ணதால எறியுது, இந்த சுக்கு காபி காரமா இருக்கும் வேண்டாம் என்க.
அப்படியெல்லாம் இல்லை நல்ல தொண்டைக்கு இதமா இருக்கும். ஏதாவது குடிச்சுட்டு தான் மாத்திரை போடனும். கொஞ்சம் குடிடா என்று, கொஞ்சமாக குடிக்க வைத்து மாத்திரையும் போட வைத்தவன். கட்டிலில சாஞ்சு கொஞ்சம் நேரம் உங்காரு என்றவன் தலையனை எடுத்து அவளின் முதுகின் பின் வைத்தவிட்டு, அவளின் அருகில் அமர்ந்து அடிப்பட்டு இருந்த காலை பார்த்து புண் வலிக்குதா என்றவன். அவளின் காலை தொட போக.
வேண்டாம் என்றவள், அவனின் கையை பிடித்துக்கொள்ள.
என்ன நான் உன் காலை தொட கூடாதா.
ஆமாம் என்றவள், அவனின் கையை பிடித்து தன் மடிமீது வைத்து கொண்டு ,அவனின் தோள் சாய்ந்த தாங்யூ என்று சொல்லியவளை.
எதற்கு என்றவன், பின்பு யோசித்து அடி வாங்குவ. உனக்கு நான் செய்யாமா யார் செய்வா. ஆன நான் உன்னை ரொம்ப கஷ்டபடுத்தி, அழ வச்சு சாரிடா என்றான் அவளின் நெத்தியில் முத்தமிட்டு.
அவளோ அவனை நெருங்கி அணைத்தபடியே அமர்ந்திருக்க.
மெல்ல அவளை தோள் அணைத்தவன். தூங்கு என்று தட்டி கொடுக்க.
அவனிடம் இன்னும் ஒன்றியவள் அணைத்தபடியே தூங்க.
அவள் தூங்கி விட்ட பின் அவளை நன்றாக படுக்க வைத்து விட்டு அவனும் தூங்கினான்.
காலை விடிந்தும் இருவரும் நன்றாக தூங்கிக்கொண்டு இருக்க.