Skip to content
Post Views: 741
“அப்பா நான் போன் பண்ணா அம்மா எடுக்கல. அம்மா நல்லா தான இருக்காங்க. அவங்க உடம்புக்கு ஒன்னும் இல்லல”
“அவளுக்கு என்ன அவ நல்லாதான் இருக்கா. நீ ஏன் இப்படி பைத்தியமா இருக்கமா. அவளுக்கு உன் மேல துளி கூட பாசம் இல்ல புரிஞ்சிக்கமா”
“இல்லப்பா அம்மாக்கு என் மேல பாசம் இருக்கு ஆனா எங்க என் மேல காட்டுனா பெரியம்மா கோவப் படுவாங்கனு பாக்காங்க. அதான் பாசத்த காட்டமா இருக்காங்க”
“உனக்கு நான் சொன்னாலும் புரியாது.நீயாவும் புரிஞ்சிக்கமாட்ட.அப்ப நீயா பட்டு திருத்துனா தான் உண்டு ”
Advertisement
“ஏன் பா அப்படி சொல்லூறீங்க. நீங்க தான் அம்மாவ சரியா புரிஞ்சுக்காம இருக்கீங்கபா”
“எது நான் உங்க அம்மாவ சரியா புரிஞ்சுக்கலையா உனக்கு தான் உங்க அம்மாவோட சுயரூபம் என்னன்னு தெரியல”
“அப்படி சொல்லாதீங்கபா அம்மா ரொம்ப நல்லவங்க நீங்கதான் அம்மாவ சரியா புரிஞ்சுக்காம இருக்கீங்கபா. அம்மாக்கு என் மேல பாசம் அதிகம் தான் பா உங்களுக்கு தான் தெரியவே இல்லை”
Advertisement
“ஓ அப்படி சொல்றியா உன் பாசமான அம்மா நீ மாசமா இருக்கியே உனக்கு எத்தனை தடவை ஃபோன் பண்ணி பேசினா சொல்லு. எப்படி இருக்குன்னு ஒருநாள் வந்து பார்த்திருக்களா சொல்லுமா. உனக்கு இதுவரைக்கும் ஆசையா ஏதாவது செஞ்சு தந்திருக்காளா சொல்லுமா. என்னமா அமைதியா இருக்க ஏதாவது பேசு. உனக்கு தான் பாலுக்கும் கல்லுக்கும் வித்தியாசம் தெரியாம போச்சே. அவ உன் மேல பாசம் காட்டவே இல்லை. அது உனக்கு இப்போ புரியல ஆனா புரிய வேண்டிய காலம் கண்டிப்பாக வரும் அப்போ நீ எப்படி தாங்குவன்னு எனக்கு தெரியலம்மா ” என்றார் வேதனையாக பாண்டியன்.
Advertisement
“அப்பா ப்ளீஸ் அப்படி எல்லாம் சொல்லாதீங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு”
“இதுக்கே கஷ்டப்பட்டால் எப்படிம்மா இனி தான் நீ தாங்க வேண்டிய உண்மை நிறைய இருக்கு. ஆனா இவங்களுக்காக நீ ஒரு குடும்பத்தை பழி வாங்க போயிருக்க பாரு அதுதான் என்னால தாங்க முடியலமா நான் உன்னை சரியா வளர்க்கலைன்னு நினைக்கிறேன். இதுவரைக்கும் நீ செஞ்சதுக்கெல்லாம் சேர்த்து வச்சு அறுவடை பண்ண போற நாள் ரொம்ப தூரத்தில் இல்லைமா. எப்படி நீ தாங்க போறேன்னு எனக்கு தெரியல அந்த கடவுள் தான் உனக்கு இதையெல்லாம் தாங்க பலம் தரணும் வேண்டுகிறேன்மா. சரி போனை வைக்கேன் மா” என்று சொல்லி வைத்தார்.
அவரின் இந்த பேச்சினை கேட்டுக்கொண்டு இருந்தவள் முதன் முதலாக தான் செல்லும் பாதை தவறோ என யோசிக்க தொடங்கினாள் கவியாழினி.
Advertisement
@@@@@@@@@@@
“டேய் என்னடா பண்ணிட்டு இருக்க இன்னும் நான் சொன்னவங்கள போய் கூட்டிட்டு வராம என்ன தான் பண்றடா ” என்றான் டென்ஷனாக கவின்.
“ஏன் மச்சான் இவ்வளவு டென்ஷன் ஆகுற அது எல்லாம் கரெக்டா டைமுக்கு போய் கூட்டிட்டு வந்துருவேன். மாறாண்ணா வந்துட்டாங்களா” என்றான் கூலாக சதீஷ்.
“ஆல்மோஸ்ட் அண்ணா ரீச் ஆயிட்டாங்க இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துருவாங்க அதான் உன்ன போய் அவங்கள கூட்டிட்டு வர சொல்றேன் போடா”
“ டேய் அவங்க அப்பவே கிளம்பிட்டாங்க டா. இதோ இங்க இருக்க பஸ் ஸ்டாண்டுக்கு இன்னும் அரை மணி நேரத்துல வந்துடுவாங்க அதுக்கு அப்புறம் போய் நான் கூட்டிட்டு வரேன்”
“டேய் உன்ன அவங்க வீட்டுக்கு போய் தான கூட்டிட்டு வரச் சொன்னேன் ஏன்டா இப்படி பண்ற”
“டேய் என்னை என்னடா செய்ய சொல்ற உன்னோட மாமனார் தான் நாங்களே அங்க வரோம் தம்பி நீங்க இங்க வந்தா அங்களுக்கு சந்தேகம் வந்துரும் சொன்னாரு அதான் நான் போகல இப்ப என்னங்கற அதான் வந்துட்டு இருக்காங்களா எல்லாம் கரெக்டா தான் நடக்கும் டென்ஷனாகாம இரு சரியா”
“ம்” என்று சொல்லி பெருமூச்சு விட்டவனை பார்த்துக்கொண்டு இருந்தவன், “ மச்சான் கேக்குறேன் தப்பா நினைச்சுக்காத இப்ப நீ எல்லாம் சொன்னா உன் அண்ணா வாழ்க்கைல எல்லாம் சரியாயிடும். ஆனா அதுக்கப்புறம் என்ன பிரச்சனை வரும்னு யோசிச்சு பார்த்தியா உன் குழந்தை உனக்கு வேண்டாமா. இதெல்லாம் உன் ஒய்ப்பால தாங்க முடியும் நீ நினைக்கிறாயா இப்பதான் இது எல்லாம் சரியான போகுதுல ஏன் இப்போ நீ சொல்லணும்னு நினைக்க கொஞ்ச நாள் போகட்டுமே உன் பேபி உன் கைகளில் வந்த பிறகும் நீ சொல்லலாம் தானே”
“இல்லடா இதுதான் கரெக்ட் டைம் இப்ப எல்லாருக்கும் தெரிஞ்சாதான் எல்லாரும் சந்தோஷமா இந்த கல்யாணத்துல கலந்துப்பாங்க அதோடு சேர்த்து சிலரோட முகமூடிய கிழிக்க வேண்டியது இருக்கு. என் பேபிக்கு ஒன்னும் ஆகாது எப்படியும் என் கைக்கு வந்துருவா நீ கவலைப்படாதடா எல்லாம் கண்டிப்பா சரியாக நடக்கும்”
“ நீ இப்ப யோசிக்கிறதெல்லாம் உன் அண்ணனை மட்டும் தான் எனக்கு நல்லா தெரியும் டா. நீ ஏண்டா இவ்ளோ நல்லவனா இருக்க உன்னோட இந்த நல்ல மனசால தான் நீ எல்லாத்தையும் இழந்து நிக்க போறியோ எனக்கு தோணுது பாத்துக்கடா நான் போய் அவங்கள கூட்டிட்டு வரேன்” என்று சொல்லி கிளம்பினான் சதீஷ். போகும் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவன் மனதில், “எனக்கு தெரியும்டா எப்படியும் எனக்கு பெரிய பிரச்சனை வரும்னு. ஆனா உண்மையை ரொம்ப நாள் மறைச்சி வைக்க முடியாது டா. அது எப்படியும் ஒரு நாள் நம்ம கண் முன்னாடி வந்து நிற்கும் அதுக்கு நம்மளே சொல்றது எவ்வளவு பெட்டர்” என்று சொல்லியவன் மூடி இருந்து தனது அறையை பார்த்துவிட்டு, “நீ எப்படி எல்லாத்தையும் தாங்க போறேன்னு எனக்கு தெரியலடி ஆனா நீ தாங்கி தான் ஆகணும். எல்லா உண்மையும் தெரிஞ்ச பிறகு என்ன நடக்கும் எனக்கு தெரியல நீயே என்ன விட்டுப் போனாலும் ஆச்சரியப்படுறத்துக்கு இல்ல பார்க்கலாம் என்ன நடக்குதுனு. அப்படியே நீ என்னை விட்டு போனாலும் நம்ம ரெண்டு பேரும் பாலமா என் பேபி கண்டிப்பா இருக்கும்னு நான் நம்புறேன்” என்று மனதில் சொல்லிக் கொண்டு அவள் இருக்கும் அறைக்கு சென்றான் கவின்.
அங்கே அவன் வந்தது கூட தெரியாமல் ஏதோ யோசனையில் நின்றவளை பார்த்து, “கவி…… ஏய் கவியாழினி”என்றான் சத்தமாக
அதில் கலைந்தவள், “என்ன…என்ன…. சொல்லி கூப்பிட்டீங்க”என்றாள் திணறலாக
“நான் என்ன சொல்லி கூப்பிட்டேன் மிஸஸ்.கவி” என்றதும் பயத்துடன் தன்னை பார்த்தவளை பார்த்து, “அதான் மா மிஸஸ். கவித்தமிழரசன் சொல்லித்தான் கூப்பிட்டேன். ஏன் நீ மிஸஸ் கவித்தமிழரசன் கிடையாதா என்ன” என்றான் சந்தேகமாக பார்த்துக் கொண்டு
“ஓ அப்படி கூப்பிட்டீங்களா. அப்ப எனக்கு தான் தப்பா கேட்டுருக்கு போல ” என்று தனக்குள்ளே மெதுவாக பேசிக்கொள்ள அவளையே பார்த்துக் கொண்டே இருந்தவன் “ஏன் உனக்கு எப்படி கேட்டுச்சி”என்றான் அவளை ஆழமாக பார்த்துக் கொண்டு
“இல்….ல அப்படி தான் கேட்..டுச்சி. எ..து..க்..கு கூப்..பிட்டீ..ங்க” என்றாள் பதட்டமாக.
“ஓ வேற ஒன்னும் இல்லல” என்றான் சந்தேகமாக
“இ…ல்ல…இல்லையே சரி எதுக்கு கூப்பிட்டீங்க அத சொல்லுங்க”
“அது ஒன்னும் இல்ல யோசனை எல்லாம் பலமா இருக்கே நெஸ்ட் என்ன பண்ணலாம். எப்படி இவனை ஏமாத்தலாம்னு பிளான் பண்ணிட்டியா என்ன” என்றான் நக்கலாக
“அப்படி எல்லாம் நான் யோசிக்கவே இல்ல. என்ன நம்புங்க”
“நம்பணுமா அதுவும் உன்னை சரி ஓகே உன்ன இப்ப நான் நம்புறேன். உனக்கு என்கிட்ட சொல்ல ஒண்ணுமே இல்லையா”என்றான் அவள் கண்களை அழுத்தமாக பார்த்துக் கொண்டு
அவன் கண்களை பார்க்க முடியாமல் தலை குனிந்துக் கண்களை முடி தன்னை நிலைநிறுத்தி கொண்டு, “இல்ல எதுவும் சொல்ல இல்ல”என்று அவன் கண்ணை பார்த்து சொன்னாள்.
“சோ உனக்கு என்கிட்ட சொல்ல எதுவும் இல்ல ரைட்”
“இல்ல நான் என்ன உன் கிட்ட சொல்ல போறேன். அதுலாம் ஒன்னும் இல்ல” என்றாள் தெளிவாக.
“ ஓ.. கடைசியா ஒரு முறை கேட்கேன் உனக்கு சொல்ல என்கிட்ட ஒன்னும் இல்லையா” என்றான் அழுத்தமாக
“இல்ல அப்படி எதுவும் இல்ல உங்க கிட்ட நான் என்ன சொல்ல போறேன் நான் சொல்லுறதுக்கு ஒண்ணுமே இல்ல” என்றாள் அதே அழுத்தத்துடன் அவன் கண்களை பார்த்து
“ சரி ஓகே நெஸ்ட் நடக்குறத பேஸ் பண்ண ரெடியாயிரு பொண்டாட்டி” என்று அவள் கன்னத்தை லைட்டாக தட்டிவிட்டு, “வரட்டா” என்று சொல்லி கண்களை சிமிட்டி விட்டு சென்றான் கவின்.
போகும் அவனின் இந்த பரிணாமத்தை புரியாமல் பார்த்துக் கொண்டு, “எல்லா உண்மையை சொல்லி உன்கிட்ட வந்து எனக்கு யாருமே இல்லைன்னு சொல்லி கட்டி பிடிச்சு அழுகணும் போல தோணுது தமிழ் மாமா. ஆனா இப்ப என்னால முடியாது. என்ன மன்னிச்சிடு மாமா உன் முகத்தைப் பார்த்து நடந்த உண்மையெல்லாம் என்னால சொல்ல முடியல. இருந்தாலும் நீ இந்த குழந்தையை உன் குழந்தையை ஏத்துக்கிட்ட அதுவே எனக்கு போதும். உன் கூட ரொம்ப வருஷம் வாழனும் போல ஆசையா இருக்கு. ஆனா அது என்னால முடியாதுன்னு எனக்கும் தெரியும் இன்னும் கொஞ்ச நாள் தான் உன் கூட இருக்க முடியும். ஐ அம் சாரி உன்னோட ஞாபகமா நம்ம குழந்தை மட்டும் எடுத்துட்டு நான் கூடிய சீக்கிரம் உன்கிட்ட இருந்து போயிருவேன். லவ் யூ சோ மச் தமிழ் மாமா ஆனா என்னோட காதலை உன்கிட்ட சொல்ல கூட முடியாத ஸ்டேஜ்ல நான் இருக்கேன் சாரி எல்லாத்துக்கும் என்னை மன்னிச்சிரு” என்று தனது மனதில் சொல்லிக் கொண்டாள்.
error: Content is protected !!