Skip to content
Post Views: 555
கலைவாணி பேசிக்கொண்டிருக்கும் போதே, வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டிருந்த பவித்ராவை, “ஏய், நில்லுடி என்று கூப்பிடக் கூப்பிட சென்றிருந்தாள்”.
இடுப்பில் கையை வைத்துத் கொண்டு, தலையை ஆட்டியவாறு இப்போவே கண்ணக் கட்டுதே முடியல…., எனப் புலம்பியவள் தனது வண்டியின் அருகே வந்தாள்.
அப்போது கோயில் சுவரின் மறைவிலிருந்து வந்தவனைப் பார்த்த கலை, சற்றே அதிர்ந்தாலும் பாருங்கண்ணா எப்படி போறானு எனக் கோபமாகக் கூறினாள், சரி விடு, வீட்டுக்குத்தான் போவா,
“ஒரு அரை மணி நேரம் கழிச்சு ஃபோன் பண்ணி பேசு, நார்மலாயிடுவா, எனக் கூறினான் மறைவிலிருந்து வெளியே வந்த அறிவு.” ஏதாவது சொன்னாளா எனக் கேட்டான்.
Advertisement
ஆம் அன்று காலை பவி கோபமாக வண்டியை எடுத்துச் சென்றவுடன், அறிவு அழைத்தது கலையைத்தான், பவி கொஞ்சம் டென்ஷனா இருக்கா, கொஞ்சம் பார்த்துக்கோ எனக் கூறினான்.
உடனே கலை, அண்ணா அவ ரொம்ப நாளாவே ஏதோ மாதிரிதான் இருக்கா, “எப்போபாரு ஏதோ யோசனையிலேயே இருக்கா என்றாள் கலை”. உடனே கலையிடம் சில விஷயங்களை கூறிய அறிவு, அவளிடம் பேசச் சொன்னான்.
வாய் பிளந்து கேட்ட கலை, நானும் சந்தேகப் பட்டேன். அப்ப நிஜமாவே உங்க லவ் ஃப்ராப்ளத்துலதான் பவி ரொம்ப டல்லா இருக்காளா எனக் கேட்டாள்.
Advertisement
அந்தப் பக்கம் என்ன கூறப்பட்டதோ, போனை தள்ளிப்பிடித்துக் கொண்டு, ஆமா, இவங்க சொன்னவுடனே இவங்க ஆளுக்கிட்ட பேசனும், ஆனா என்ன பிரச்சனைனு கேட்டா மட்டும் பதில் சொல்லாம மழுப்பறது,
Advertisement
இந்த விஷயத்துல இரண்டும் ஒன்னுதான் என சொல்லிக் கொண்டிருக்கும்போதே அந்தப் பக்கம் இருந்து ஹலோ ஹலோ கலை கேட்குதா என்று கத்தும் சத்தத்தில், அச்சோ எனத் தன்னை சுதாரித்துக் கொண்டு நீங்க பேசறது சரியா கேட்கலங்ண்ணா, ஈவ்னிங் பவித்ராகிட்ட பேசிட்டு உங்களுக்குக் கால் பண்றேன் எனக் கூறி அவசர அவசரமாக அழைப்பைத் துண்டித்தாள்.
அப்பாடா, ஜஸ்ட் மிஸ்ஸு என்று நெஞ்சில் கை வைத்து நிமிர்ந்த போதுதான் பவி ஸ்டாஃப் ரூமிட்குள் நுழைந்தாள். இங்கே அறிவைப் பார்த்த பின்புதான் தங்களைப் பின்தொடர்ந்து வந்தது தெரிந்தது. ஏதாவது சொன்னாளா என அறிவு கேட்ட கேள்விக்கு, இல்லனா ஏன் இப்படி இருக்கேனு கேட்டதற்கு நீங்க வந்துருக்கீங்கன்னு சொன்னா,
அதனால ஒன் வீக்கா உங்கவீட்டுக்கு போகலைனு சொன்னா, அப்புறம் எனக் கூறித் தயங்கினாள். ம்….. சொல்லு அப்புறம் என்னாச்சி எனக் கேட்டான். கொஞ்சம் தயங்கியவாறு, அப்புறம் உங்களை நல்லா திட்டினா என்றாள் க்கும்……,அதத்தான் எப்பாரு செய்யறாளே என நினைத்துக் கொண்டு,
Advertisement
சரிமா, பாத்து வீட்டுக்குப் போ, போயிட்டு எனக்கு ஒரு மெசேஜ் பண்ணிடு எனக் கூறிக் கலையை அனுப்பி வைத்தான். பின்பு, பக்கத்திலிருக்கும் கோயில் திண்ணையில் சென்று அமர்ந்து கொணடான்.
பின் விளைவுகளை நினைக்காமல் தான் செய்த தவறை நினைத்து எப்போதும் போல், இப்போது வருந்திக்கொண்டே பழைய நினைவுகளுக்குள் சென்றான் அறிவுச்செல்வன்.
வண்டியை எடுத்துக் கொண்டு வேகமாகச் சென்ற பவித்ரா வண்டியை நிறுத்திவிட்டு, அம்மா என அழைத்துக் கொண்டே வீட்டிற்குள் சென்றாள். ஏண்டி என்னாச்சு எனக் கேட்டுக்கொண்டே வெளியே வந்தாள் விஜயா.
அம்மா எனக்கு ஆன்லைன் மீட்டிங் இருக்கு. நான் ரூம்ல இருக்கேன், நடுவுல வந்து தொந்தரவு செய்யாத எனக் கூறிக் கொண்டு அவளது அறைக்குச் சென்று கதவை அடைத்துக்கொண்டாள். இதுக்குத்தான் இந்தக் கத்து கத்தினாளா எனக் கூறிக் கொண்டு இருக்கும் போதே,
என்னவாம் வந்தவுடனே ரூமுக்கு ஓடறா என அப்பத்தா கேட்பதும் அதற்கு போனுலேயே ஏதோ மீட்டிங்காம் என அம்மா சொல்வதும், என மூடிய கதவிற்குப் பின் இருந்து சத்தம் கேட்டது.
“ இன்னும் ஒரு நிமிடம் நின்றிருந்தாளும் தன் முகத்தையும், குரலையும் வைத்து தான் அழுததைக் கண்டிருப்பார்.” அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே கதவைத் தாழிட்டுவிட்டு அறைக்குள் நுழைந்த அடுத்த நொடி படுக்கையில் விழுந்தவள் கண்களை மூடிக்கொள்ள, அவளது மூடிய கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் தலையணையை நனைத்ததுடன், இங்கே இவளின்
நினைவலைகளும் பின்னோக்கிச் சென்றன.
அது ஒரு மருத்துவமனை வளாகம். அங்கே பிரசவ அறைக்கு வெளியே சுந்தரம், காமாட்சியம்மாள், பொன்னாத்தாள், சுகுணா, போன்றோர் ஆளுக்கொரு மூலையில் பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது குழந்தை வீரிட்டு அழும் சத்தம் கேட்டு ஒருவர் முகத்தை ஒருவர் பரவசத்துடன் பார்த்துக் கொண்டனர்.
சிறிது நேரம் கழித்து செவிலிப் பெண் ஒருவர் பூந்துவாலையால் சுற்றப்பட்டிருந்த குழந்தையை எடுத்துக் கொண்டு வெளியே வந்து, பேஷண்ட் விஜாவுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு என்றார். காத்திருந்த அனைவரும் அவரை சூழ,
குழந்தையை நடுங்கும் கைகளுடன் வாங்கிக்கொண்ட சுந்தரம் விஜயா எப்படி இருக்காப்ல எனக் கேட்டார். அவங்களும் நல்லா இருக்காங்க, ஒரு மணி நேரத்துக்குள்ள ரூமுக்கு மாத்திடுவோம், அப்புறம் அவங்கள பார்க்கலாம் எனக் கூறிச் சென்றார்.
நான்கு வருடங்களாக இந்த வரத்திற்குத் தானே தாங்கள் தவமிருந்தது என எண்ணி, கண்ணீருடன் அக்குழந்தையைப் பார்த்திருந்தார். அம்மா, அத்தை எனக்கு பொண்ணு பொறந்துருக்குப் பாருங்க என அவர்களிடம் காட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் சுந்தரம்.
ஆமா அப்பு, மஹாலச்சுமியே பொறந்துருக்காப்புல என்றார் சந்தோஷ மிகுதியில். இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்க கையில் தனது மூன்று வயது மகனைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குள் நுழைந்தார் துரைப்பாண்டி,
மச்சான் குழந்தை பொறந்துடுச்சா எனக் கேட்டுக் கொண்டே தன் கையில் இருந்தவனைக் கீழே இறக்கிவிட்டு, அவர்களின் அருகில் ஆர்ப்பரிப்புடன் சென்றார். மச்சான் வந்துட்டீகளா, எனக்குப் பொண்ணு பொறந்துருக்கு எனத் தன் கையில் இருந்த குழந்தையை அவரின் கைகளுக்கு மாற்றினார்.
அப்புடியே விஜயா மாதிரியே இருக்குறாப்புள என் ராசாத்தி என்றார். அங்கு துரையால் இறக்கிவிடப்பட்ட சிறுவன், அனைவரையும் பார்த்துக் கொண்டே அவர்களின் அருகே வந்தான். அறிவு என அழைத்த சுகுணா அவனைத் தூக்கிக் கொண்டு,
இங்க பாரு அத்தைக்குப் பாப்பா பொறந்துருக்கு எனக் காட்டினார். உடனே அவன் குழந்தையின் கையைத் தொட போனான். உடனே அவனது அப்பாத்தா அவனது கையைப் பட்டென்று தட்டிவிட்டு அது குட்டிப் பாப்பா தொடாம பாரு என அதட்டினார். அப்போது அக்குழந்தையின் மீது ஏற்பட்ட அவனின் வெறுப்பு அவனை என்னவெல்லாம் செய்ய வைத்துவிட்டது என்று எப்போதும் போல் இப்போதும் எண்ணித்தவித்தான்.
error: Content is protected !!