Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கவிதையாய் ஒரு காதல்

கவிதையாய் ஒரு காதல் – கவிதை 9

கவிதை 9

வீட்டிற்கு வந்த சேர்ந்த பின்னர் ஜேம்ஸின் திருமண விஷயத்தை பற்றி எனது அம்மாவிடம் பேசினேன்…

“உன்னோட கல்யாணம் முடிய தான் கல்யாணம் பண்ண போறதா சொல்லிட்டு இருக்கான்” என்றார்.

“அதெல்லாம் சரி வராதும்மா, பொண்ணு வீட்ல கூப்பிட்டு பேசுங்க, சீக்கிரம் கல்யாணம் பண்ணிடலாம், நான் கொஞ்ச நாள் தான் நிற்பேன், அதுக்குள்ள ரெஜிஸ்டர் ஆவது வச்சுடலாம்” என்று சொன்னேன்.



Advertisement

“அப்போ உன் லைஃப்” என்று ஜேம்ஸ் அதிலேயே வந்து நின்றான்.

“என் லைஃபை நான் பார்த்துக் கொள்ளுவேன்” என்று திட்டி விட்டேன்…

இப்போது என்னிடம் பணம் நிறையவே இருந்தது…

Advertisement

அவனின் திருமணத்தை உடனே கூட நடத்தி விட முடியும்.

Advertisement

வீட்டில் தயங்கினார்கள்…

ஸ்டெல்லாவின் எண்ணை ஜேம்ஸிடம் வாங்கி நானே பேசினேன்.

“நான் ஹரிணி” என்று சொன்னேன்.

Advertisement

“ஆஹ் சொல்லுங்க” என்றாள் ஸ்டெல்லா.

“ஜேம்ஸ் எல்லாமே சொன்னான், உன் வீட்ல தெரியுமா?” என்று கேட்டேன்.

“ம்ம் தெரியும்” என்றாள்.

“அப்போ நாங்க பேச வரலாமான்னு கேட்டு சொல்றியா?” என்று கேட்டேன்…

அவளும், “சரி அண்ணி” என்று உடனே முறை சொல்லி அழைத்து இருக்க, என் இதழ்களிலும் சிரிப்பு…

“சரிம்மா வச்சிடுறேன், எதுன்னாலும் எனக்கு கால் பண்ணு” என்று சொல்லி விட்டு வைத்து விட்டேன்…

அடுத்த நாளே ஸ்டெல்லாவின் வீட்டினர் எனக்கு அழைத்து இருந்தார்கள்…

அவர்களுக்கும் மகளுக்கு திருமணத்தை முடித்து விட வேண்டும் என்று அவசரம் போலும்…

நானும் திருமணத்தை உடனே நடத்தி விடுவது பற்றி பேசினேன்…

அவர்களுக்கும் சந்தோசம்…

“அடுத்த வாரமே ரெஜிஸ்டர் வைக்கலாமா? நானே எல்லாமே பார்த்துக்கிறேன்” என்று சொன்னேன்…

“சரிங்க” என்று சொல்லி இருந்தார்கள்…

ஜேம்ஸ் தான் வானுக்கும் பூமிக்கும் குதித்து விட்டான்.

“என்ன அவசரம்?” என்று திட்டினான்.

“அந்த பொண்ண ஏமாத்த போறியா? இல்ல தானே, பிறகு என்னடா?” என்று அதட்டினேன்…

அடங்கி விட்டான்.

நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டும் சொல்லி அவர்களுக்கான நிச்சயதார்த்தத்தை ஏற்பாடு செய்தோம்…

நிச்சயதார்த்த நாளும் நெருங்கியது…

அம்மாவின் முகம் தான் சரி இல்லை…

என் வாழ்க்கையை நினைத்து வருந்திக் கொண்டு இருக்கின்றார் என்று எனக்கு தெரிந்தது…

நிச்சயதார்த்த நாள் அன்று வந்த சொந்தங்களும் என்னை பற்றி விசாரிக்க அவர் மிகவும் உடைந்து தான் விட்டார்…

நான் இதற்கு என்ன செய்து விட முடியும்?

என்னால் அவரை பரிதாபமாக பார்க்க மட்டுமே முடிந்தது…

எனக்கு இதெல்லாம் பழகி போன ஒன்று…

நான் காதிலும் போட்டுக் கொள்ளவில்லை…

நிச்சயதார்த்தம் அழகாக முடிந்தது…

அன்று இரவு மனதில் இருந்த ஒரு பாரம் இறங்கி  விட்டது…

குளித்து விட்டு வந்து கண்ணாடி முன்னே அமர்ந்து இருந்தேன்…

நாட்காட்டியைப் பார்த்தேன்… பிரபஞ்சனின் திருமணத்துக்கு இன்னும் மூன்று நாட்களே மீதி இருந்தன…

அவனை இப்போது பார்த்து தான் ஆக வேண்டுமா? என்று என்னிடம் நானே கேட்டுக் கொண்டேன்.

ஆம் என்பதை தவிர என்னிடம் இருந்து எந்த பதிலும் எனக்கு கிட்டவே இல்லை.

நீண்ட நேரம் யோசித்து விட்டு அலைபேசியை எடுத்தேன்…

அவன் எண் இன்னுமே அலைபேசியில் இருந்தது…

விவாகரத்து எடுத்த பின்னர் எடுக்கவே கூடாது என்று என்னை நானே அடக்கி இருந்தேன்…

இப்போது அதே எண் தானா? இல்லை எண்ணை மாற்றி விட்டானா? என்று தெரியவில்லை…

எனது எண் புது எண் தான்…

யோசனையுடன் அலைபேசியை எடுத்து அவனுக்கு அழைத்தேன்…

முதல் ரிங் போனது…

பயத்தில் கட் செய்து விட்டேன்…

சட்டென அவன் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது…

இதயமே அடைத்து விட்டது…

இத்தனை நாட்கள் கழித்து என் மேல் அவனுக்கு கோபம் இருக்குமா? இல்லையா? என்று தெரியவில்லை…

ஆனால் இதனை விட்டால் எனக்கும் அவனுடன் பேச வாய்ப்பு இல்லை…

தயக்கத்துடன் அலைபேசியை எடுத்து காதில் வைத்தேன்.

“ஹெலோ” என்றான்.

அவனது அதே கம்பீரமான குரல்…

எனக்கு தான் பேச வார்த்தைகள் வரவில்லை…

மீண்டும், “ஹெலோ யாரு?” என்று கேட்டான்.

இதற்கு மேல் அமைதியாக இருப்பது சரி இல்லை என்று தோன்ற, “ஹெலோ” என்றேன் தட்டு தடுமாறி.

என் குரலை கேட்டதுமே மறு பக்கத்தில் நீண்ட மௌனம்…

மீண்டும், “ஹெலோ” என்றேன்.

“ஹரிணி எப்படி இருக்க?” என்று கேட்டான்.

இந்நாள் வரை என் குரலை அவன் மறக்காமல் இருக்கின்றானே.

சட்டென கண்களில் கண்ணீர் நிரம்பி விட்டது எனக்கு…

அடக்கிக் கொண்டே, “நான் நல்லா இருக்கேன், நீங்க?” என்று கேட்டேன்…

மறைக்க முடியாமல் என் குரலின் நடுக்கம் என்னுடைய பலவீனமான மனநிலையை காட்டிக் கொடுத்தது…

“ம்ம் இருக்கேன், வந்து இருக்கியாம்னு கேள்வி பட்டேன்” என்றான்…

“உங்கள பார்க்கலாமா?” என்று கேட்டு விட்டேன்…

அதற்காக தானே காத்துக் கொண்டு இருந்தேன்…

அதனால் நேரடியாகவே கேட்டு விட்டேன்…

அவனிடம் மௌனம்…

“கஷ்டம்னா வேணாம்” என்றேன்.

“நோ நோ நாட் லைக் தட், எனக்கு கல்யாணம்” என்றான்.

அவளும், “தெரியும், விஷ் பண்ண தான் கூப்பிடுறேன், உங்க கல்யாணத்தை நிறுத்த மாட்டேன்” என்றேன்…

அவனும் பெருமூச்சுடன், “ம்ம் பார்க்கலாம், எங்க?” என்று கேட்டான்.

“நம்ம வழக்கமா பார்க்கிற இடத்துல” என்று சொன்னேன்…

அவனோ, “அங்கேயா?” என்று கேட்க, நானோ, “கல்யாணத்த வச்சுட்டு பப்லிக் ஆஹ் மீட் பண்ண முடியாது ல” என்றேன்…

அவனும், “ம்ம் அது இன்னும் பாழடைஞ்சு தான் இருக்கு, பார்க்கலாம்” என்றான்.

“எப்போ?” என்று நான் கேட்க, “நாளைல இருந்து ஆஃபீஸ் லீவு தான்” என்றவனிடம், “நாளைக்கு ஈவினிங்?” என்று கேட்டேன்.

“ம்ம் ஓகே” என்று சொல்லி விட்டான்.

“சரி ஓகே வச்சுடுறேன்” என்று சொல்லி விட்டு வைத்து விட்டேன்.

அதற்கு மேல் என்ன சொல்வது என்று எனக்கும் தெரியவில்லை…

அன்று எனக்கு தூக்கமே இல்லை…

அடுத்த நாள் எப்போது வரும் என்று ஏக்கமும் எதிர்பார்ப்பும்…

ஏதோ டீனேஜ் பெண் போல எனக்குள் பட்டாம் பூச்சிகள் எல்லாமே பறக்க ஆரம்பித்து விட்டன.

அடுத்த நாள் மாலை நேரம் போல, அழகான சிவப்பு நிற சில்க் புடவை ஒன்றை எடுத்து உடுத்துக் கொண்டேன்…

அமெரிக்காவில் எனக்கு புடவை அணிய வாய்ப்பு கிடைப்பது இல்லை…

இங்கே வந்ததும் ஆசை தீர புடவை அணிந்து கொண்டேன்…

அதற்கு பொருத்தமான சின்ன ஆபரங்களையும் அணிந்து கொண்டே வெளியே வர, “எங்கம்மா போக போற? ஜேம்ஸ் வெளிய போய்ட்டான்” என்றார் அம்மா…

“ஃபிரென்ட்ட பார்க்க தான் மா, ஆட்டோவில் போயிட்டு வந்திடுறேன்” என்று சொல்லிக் கொண்டே, வெளியேறிய நான் வானத்தை தலையுயர்த்தி பார்த்தேன்…

மேகம் கறுத்துப் போய் இருந்தது…

மழை வரும் அறிகுறி தான்…

அங்கே வந்த ஆட்டோவில் கையை காட்டி ஏறிக் கொண்டே நான் இடத்தை சொல்ல, “அந்த பாழடைஞ்ச கட்டிடம் ஆச்சே” என்றான் ஆட்டோக்காரன்…

என்ன பதில் சொல்வது அவனிடம்…

“ம்ம், அங்க தான்” என்று சொன்னேன்…

அவனும், என்னை ஒரு மார்க்கமாக பார்த்துக் கொண்டே அவ்விடம் கொண்டு இறக்கி விட்டான்…

எவ்வளவோ அபிவிருத்திகள் வந்தும், அந்த கட்டிடம் காதலர்களுக்கு எழுதி வைத்த போல அப்படியே இருந்தது…

மெதுவாக நடந்து சென்று அங்கே எழுதி வைக்கப்பட்டு இருந்த பெயர்களை பார்த்துக் கொண்டே நடந்தேன்…

எனது பெயரும் பிரபஞ்சனின் பெயரும் கூட ஒரு இடத்தில் நாங்கள் எழுதி வைத்த நினைவு…

அதனையும் கண்டு பிடித்து விட்டேன்…

சட்டென கண்கள் கலங்கி விட்டன…

மெதுவாக இருவரின் பெயரையும் நான் வருடிக் கொடுத்த சமயம், “வந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சா?” என்று ஒரு குரல்…

அவன் குரல் தான்…

சட்டென திரும்பி பார்த்தேன்…

எனது பிரபஞ்சன் நின்று இருந்தான்…

ஜீன்ஸ் மற்றும் ஷேர்ட் அணிந்து இருந்தான்.

அதே தோற்றம்…

கொஞ்சம் முகத்தில் வயது ஏறி இருந்தது…

அவனை பார்த்ததுமே தேங்கி இருந்த கண்ணீர் வழிந்து விட, வேகமாக துடைத்துக் கொண்டே, “இல்ல இப்போ தான் வந்தேன்” என்றேன்.

“ம்ம், எப்போ பயணம்?” என்று கேட்டான்.

“துரத்துறதுலயே இருக்கீங்களே” என்றேன்.

“நோ நோ, அந்த மீனிங் ல கேட்கல, ஜஸ்ட் சும்மா தான்” என்றான்.

நானும் மெதுவாக சிரித்த போதும், என்னை அறியாமல் என்னுடைய இதழ்கள் கீழ் நோக்கி வளைய, “நான் சத்தியமா குழந்தையை அபார்ட் பண்ணல பிரபஞ்சன்” என்றேன்.

அவன் என்னையே அப்படியே வெறித்து பார்த்துக் கொண்டு நின்று இருந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!