Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதோ இதோ என் பல்லவி

Itho Itho En Pallavi 2 1

இதோ.. இதோ.. என்  பல்லவி

  அத்தியாயம் – 2



Advertisement

    விக்ரம்  ஜித்  அவனின்  தந்தைக்கு   போன்  போட அவர்  எடுக்க வில்லை.

Advertisement

Advertisement

அவனின்  போனிற்க்கு   மெசேஜ் மட்டும்  வந்திருந்தது, நான்  ரொம்ப  பிசி  கல்யாணத்துக்கு  வர முடியாது என்று.

விக்ரம்  ஓகே டாடி என்று  மெசேஜை  அனுப்பியவன்.

Advertisement

பால்கனியில்   உள்ள  சேரில்  அமர்ந்து கொண்டு, ஒரு பார்வை  பல்லவி மேல் வைத்தவன், இன்னொரு பார்வை  கல்யாண  மேடையை  பார்த்துக்கொண்டு இருந்தான்.

கல்யாணம் நல்ல படியாக  முடிந்தது, கல்யாண  மேடை  பக்கத்தில்  ரோசியும், ஐஸ்வர்யாவும்  நின்று இருந்தனர்.

பல்லவியை அவர்கள்   பார்த்தும்   பார்க்காது போல்  இருந்து கொண்டனர். பல்லவி இவர்களை  பார்த்து சிரித்தாலும்.

அம்மாவும்  மகளும்   பார்க்காதது போல  நின்று கொள்ள.

 பல்லவிக்கு  எப்போது  டா திருமணம் முடியும் கிளம்பலாம்  என்பது போல்   இருந்தது.   நான் என்ன  செய்தேன்  இவர்களுக்கு   என்றே  தோன்ற  முதலில் கிளம்பனும்   என்று  ஞானதுரை சித்தப்பாவை தேடினாள்.

அவரோ  யாருடனோ  சிரித்து  பேசிக்கொண்டு இருந்தார்.

சில  நிமிடம்  பார்த்துக்கொண்டு  இருந்தவள். அவரிடம்  சென்று “கல்யாணம் முடிஞ்சது, நான்  கிளம்புறேன்” என்று கூற.

ஞானதுரை  “சாப்பிட்டு  போலாம்டா ” என்றவர், நண்பனிடம்  சொல்லிவிட்டு, “இரு பல்லவி “என்று ரோசியிடம்  சென்று “சாப்பிட போலாமா” என்று அழைக்க.

“நாங்க சாப்பிட  நேரம் ஆகும், நீங்க  உங்க அண்ணண் மகளை பாருங்க என்றார்”..

ஞானதுரை ஒன்றும்  பேசாமல் வந்தவர். ”  உன் சித்தி  அப்பறம்  சாப்பிடுறாங்கலாம், நீ வா”   என்று அழைத்து சென்றார்.

இருவரும் உணவு பரிமாறும்  இடம்  வந்தனர். இந்திய உணவு, மற்றும் லண்டனில் உள்ள  உணவு வகைகள்  என்று , தனி, தனியா பப்பே  முறையில்  உணவு  பரிமாற  பட, அவர், அவர்  தேவைக்கு  ஏற்ப  வாங்கி  கொள்ளலாம்.

இருவரும் அவர்களுக்கு   தேவையான உணவை  எடுத்து கொண்டு   பார்க்க, அங்கே நிறைய இடங்கள் உணவை  உட்கார்ந்து உண்ண சேர்கள் போடப்பட்டிருந்தது, சிலர் நின்று கொண்டே  உண்டனர், சிலர் அமர்ந்து இருக்க.

ஞானதுரை  பல்லவியோடு  உணவை  வாங்கிக்கொண்டு  அமர இடம் தேடினார்கள்.

ஞானதுரையின்  நண்பர்  ஒருவர்  வந்து  அவரிடம் பேச, அவரும்  நண்பனிடம் பேசிக்கொண்டே  உணவு  உண்ண.

பல்லவியை  பார்த்து “நீ உட்கார்ந்து சாப்பிடு  பல்லவி , ஒரு ஐந்து  நிமிசம்டா ” என்று  நண்பனிடம்   நின்று  கொண்டே பேச.

  “ஓகே  சித்தப்பா ”  என்றவள், உட்கார  இடம்  தேட, ஒரு சிறுவன்  தனியாக  உணவு  உண்பதை  பார்த்தவள். அங்கே  சென்று       “நான்  இங்கே  உட்காரலாமா”  என்று அந்த  சிறுவனிடம்  ஆங்கிலத்தில்  கேட்க”.

” யா.. ஓகே ”   என்று சிறுவன்  உணவை  தனியாக சாப்பிட, இவளும்  அவனோடு  சேர்ந்து அமர்ந்து  உணவை சாப்பிட..

பல்லவி அச்சிறுவனிடம் ” தனியா  சாப்பிடுற  உன்கூட யாரும்  வரலீயா”  என்றாள்.

அச்சிறுவன்  கொஞ்சம் தூரத்தில்  நின்று  இருந்த  ஒரு  பொண்ணை  காட்டி,  “மை,  மாம், இஸ், தேர்…”   என்று  காண்பிக்க.

 “ஓகே” என்றவள், அவனிடம்” உன்  பேர்  என்ன”?

“சூர்யா ஜித்”  என்றான்.

  சூர்யா ஜித்  பல்லவியிடம் ” உங்க  நேம் என்ன?”  என்றான்.

 “என்  பேரா  பல்லவி”  என்றாள்.

 “பல்லவியா “என்றவன்,   உணவை உண்ண  தெரியாமல் கீழே, மேலே  சிந்த.

“நான் உனக்கு  எல்பு  பண்ணவா”  என்றாள்.

 “நோ”  என்றவன் நான் பிக் பாய்  எனக்கு  தெரியும்”  என்று  அவனே  உண்டான்.

பல்லவி  அச்சிறுவனை பார்த்து இருந்தாள், ஒரு 7  வயது  இருக்குமா, இவனை இப்படி  தனியா  உணவு உண்ண அனுப்பிய  அவனின் அன்னையின் மீது  கோபம் வந்தது.

அச்சிறுவனுக்கு  தண்ணீர் தேவைப்பட  அவனால் வாட்டர் பாட்டிலை  திறக்க  முடியாமல்  கஷ்டப்பட்டவனை.

 “இரு நான் திறந்து தர்ரேன்”  என்று அவனிடம் இருந்த  வாட்டர் பாட்டிலை வாங்கி  திறந்து அவனிடம் தர.

பாட்டிலை வாங்கி தண்ணீர் குடித்தவன், “தாங்யூ ஆன்டி என்றான்”.

“சரிடா தண்ணீர் நல்லா குடி” என்றாள்.

தண்ணீர்  குடிக்கும் போது சூர்யஜித்திற்கு  புரையேறி  இருமியவனை,. தலையிலும்,  முதுகிலும்  தட்டி  கொடுத்தவள்  மெதுவாக  தண்ணீரை  குடிக்க  வைத்தாள்.

அவனின்  தட்டில்  உணவு  காலியாக. “இன்னும் வேணுமா” என்றவள் ,  சூர்யஜித்திற்கு  தேவையான உணவை வாங்கி வந்து  கொடுத்தாள்.

அவனோ அவளுக்கு மறுபடியும் “நன்றி சொல்லி விட்டு ” உணவை உண்டு விட்டு, அவளிடம் “பாய்” சொல்லிவிட்டு கிளம்பியவனை.

” ஒரு நிமிசம் என்றவள்” அவனை தூக்க ஆசையாக இருக்க, “உன்னை ஒரு  வாட்டி  தூக்கவா” என்றாள்.

 அவனோ  ” நோ   ஐ  யம் பிக் பாய்” என்றான்.

“அட  போடா ”  என்றவள்  அவனை  தூக்கி  முத்தம் மிட்டே கீழே விட்டாள்.

அவள் முத்தமிட்ட கன்னத்தை துடைத்தவன்.

” நோ கிஸ்  மீ”  என்றான்.

 “அட போடா பால்கோவா” என்றாள்.  அவன் பார்ப்பதற்கு  நல்ல நிறமாக, கொஞ்சம் பூசினார் போல  உடம்பு இருக்க, அவனுக்கு பல்லவி  பால்கோவா  என்று மனதில் பெயரிட்டிருந்தாள்.

வாட்?  என்றவனை.

  அவனின் கன்னத்தை கைகளால்  பிடித்து  முத்தமிட்டவள் “பாய்” என்று கையாட்ட.

  அவனும்  அவள் தொட்ட கன்னத்தை  துடைத்து கொண்டே  “பாய் சொல்லி “சென்றான்.

 ஞானதுரை “போலாமா” என்று  பல்லவியிடம் வர.

 அவளும் உண்டு முடித்திருக்க. “போலாம்  சித்தப்பா ”     என்று இருவரும் கிளம்பினார்கள்.

ஞானதுரை  பல்லவியை  வீட்டில்  விட்டு மறுபடியும்  மண்டபம்  வந்தார், மதியம்  வரை அங்கே இருந்து விட்டு, பிறகு  ரோசி, ஐஸ்வர்யா, ஜான் அனைவரும் வீடு திரும்பினார்கள்.

 *****

விக்ரம் ஜித்  அன்று இரவு தந்தைக்காக  அவன் வீட்டில் காத்து  இருந்தான்.

அவர்களின்  வீடு எட்டு மாடி கட்டிடம் கொண்டது. ஒரு, ஒரு தளத்திலும்  இருபது அறைகள் இருக்கும்.

விக்ரம் ஜித்தின்  குடும்பம் மிக பெரியது,  அவனின் சித்தப்பா குடும்பம், அத்தை குடும்பம்,  அவனின் தந்தையின்   அண்ணன் குடும்பம், இன்னும் நெருங்கிய சொந்தம் என பலபேர்  அந்த வீட்டில் இருப்பார்கள்.

யாரையாவது பார்க்க வேண்டும் என்றால். அவனின்  போனில்  உள்ள பேமிலி  குரூப்பில்  மெசேஜ்  போட்டால், அவர்கள் மறு மெசேஜ் போடுவார்கள். பிறகு  சந்திப்பார்கள்,

அவர், அவர்களுக்கு  என்று தனி,  தனி பிஸ்னஸ் இருக்க. அதன்படி அனைவருமே  அவர்கள் உண்டு அவர்கள்  வேலை  உண்டு என்று சரியாக இருப்பார்கள்.

 விக்ரம் ஜித்தின் தந்தை சுந்தரம், தாய் சிவகாமி, விக்ரம் 15  வயது இருக்கும் போது  சிவகாமி  ஒரு ஆக்சிடென்டில் மாட்டி இறந்து விட்டார், விக்ரமுக்கு  ஒரு தங்கை  இருக்கிறாள்.

 விக்ரம்  தன் நண்பன் சத்தீஸ்க்கு  அவளை திருமணம் முடித்து வைத்திருந்தான்.

அவளும் விக்ரம்ஜித்  இருக்கும் வீட்டில் தான் இருக்கிறாள்.

அவளுக்கு சூர்யஜித் என்று 7 வயதுடைய பையன் இருக்கிறான்.

அனைவரும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள்.

சுந்தர் வீட்டுக்கு வந்து, மகனுக்கு  இன்னும் பத்து நிமிசம் கழிச்சு வா என்று வாட்சப்பில் மெசேஜ் போட.

 “ஓகே  டாடி” என்று பத்து நிமிசம் கழித்து  தந்தையின் ரூம்பிற்கு சென்றான்.

 ” வா  விக்ரம்” என்று  மகனிடம்  சேர்ந்து அமர்ந்தவர் “என்ன விசயம்  ஜித் கண்ணா” என்றார்.

 “நான் உங்ககிட்ட  என்ன சொன்னேன் டாடி.. “

” நீ என்ன சொன்ன, எத பத்தி கேக்குற” என்றார்..

“ஐஸ்வர்யாவை பத்தி”..

 “அதுவா!  நீ  தானே  யோசிச்சு  சொல்லுறேன்னு  சொன்ன..”

 “ஆமாம்”.

  அது தான்,  நான் ஞானதுரையிடம்  கல்யாணத்துக்கு ஓகே சொன்னேன்.

 “அப்பா  என்றவன்   நான் யோசிச்சு  சொல்லுறேன்னு  தானே சொன்னேன்,   எப்போ  கல்யாணத்துக்கு  ஓகே சொன்னேன்”.

 “ஜித் என்றவர்  நீ எந்த பொண்ணை உனக்கு கல்யாணம் பண்ண சம்மதம் கேட்டலும்   நோ தான் சொல்லுவா.

ஐஸ்வர்யாவை  பத்தி சொல்லும் போது யோசிச்சு சொல்லுறேன்னு சொன்ன,  அது தான், உனக்கு  ஐஸ்வர்யாவை  புடிச்சிருக்குன்னு நெனச்சேன்”.

“அப்பா  என்றவன், எனக்கு ஐஸ்வர்யாவை பிடிக்கல. என்னுடைய   கேரக்டர் வேற அவளுடைய கேரக்டர் வேற இரண்டு பேருக்கும் ஒத்து வராது, பா, ஞானதுரை அங்கிள் கிட்ட  கல்யாணம் வேண்டாமுன்னு  சொல்லி  இருங்க, அவர்  வேற என்னை  மாப்பிள்ளை  என்று கூப்பிடுறாரு, எனக்கு அது பிடிக்கல”..

  “ஜித்  நீ   இன்னைக்கு பேசுறத, அன்னை நான் உன்    கிட்ட கல்யாணம் சம்மதம் கேட்டப்பா சொல்ல வேண்டியது தானே”.

 “நான்  யாருன்னு உங்களுக்கு தெரியுமுள்ள,  நான்  ஒரு வைர வியாபாரி, ஒரு கல்லை பாத்தவுடனே சொல்லுவேன். இது  என்ன கல், இதோட   தரம் என்னன்னு, அப்படி பட்ட ஆளு நானு, எனக்கு வர பொண்டாட்டி எப்படி இருக்கனுமுன்னு   எனக்குன்னு சில எதிர் பார்ப்பு இருக்கு. அதில் ஒன்னும் கூட ஐஸ்வர்யா கிட்ட இல்ல. அத பத்தி நான் பேச மாட்டேன் அது அவளோட வாழ்க்கை.

 இது என்னோட வாழ்க்கை. எனக்கு என்னோடு சேர்ந்து கடைசிவரைக்கு வர போற பொண்ணு மேல அளவு இல்லாத பாசம் வேணும்.  அவள எனக்கு பிடிக்கனும், என்னைய அவளுக்கு பிடிக்கனும், உண்மையான அன்பு எனக்கு வேணும்.   நம்ம கிட்ட இருக்குற காசு,பணம்,சொத்த பார்த்து  வர்ர பொண்ணு எனக்கு வேண்டாம்.

எனக்குன்னு   ஒரு பொண்ணு கண்டிப்பா வருவ. அப்போ சொல்லுறேன்.  அவ கூட எனக்கு

 கல்யாணம் பண்ணி வைங்க.”

 “டேய் நீ சொல்லுற மாதிரி எல்லாம் இப்போ பொண்ணுங்க இல்ல”.

”  ஏன் இல்லை அதுயெல்லாம்  இருக்காங்க  பா , நமக்கு தான் கண்டு பிடிக்க தெரியல “

“சரிடா நீ கண்டுபிடிச்சி கூட்டிட்டு வா , நான் சந்தோஷமா  உனக்கு கல்யாணம் பண்ணிவைக்கிறேன்”.

“சரிப்பா” என்றவன். “நீங்க உடனே   ஞானதுரை அங்கிள் கிட்ட சொல்லுங்க இந்த கல்யாணம் நடக்காதுன்னு”..

” உடனே சொல்ல முடியாது நேரம் பாத்து சொல்லுறேன் ஜித் கண்ணா”  என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!