Skip to content
Post Views: 4,875
“குட் நைட் டாடி” என்று அவரை அணைத்து விட்டு, அவனின் அறைக்கு சென்றான்..
வழக்கம் போல் பல்லவிக்கு வீடு, வேலை என்று நாட்கள் சென்று கொண்டு இருந்தது.
Advertisement
அன்று பல்லவிக்கு அவளின் வேலையை முடிக்க அதிக நேரம் ஆகிவிட. அவள் வீட்டுக்கு செல்ல வேண்டிய கடைசி ட்ரெயினை எப்படியாவது பிடித்திட வேண்டும் என்று வேலைகளை வேகமாக முடித்து விட்டு, ரயில்வே டேஷன் வர, அந்த கடைசி ட்ரெயின் எப்போவோ சென்று இருந்தது.
Advertisement
அவளுக்கு ட்ரெயினில் தான் வேலைக்கு சென்று வர தெரியும். பஸ்சில் போக தெரியாது. ஞானதுரை ஒரு வாட்டி சொல்லி இருக்கிறார், எந்த பஸ்சில் ஏறி வர வேண்டும் என்று. அப்படி இல்லன்னா டாக்சி புக் பண்ணி வா என்று.
Advertisement
இவளோ டாக்சி புக் பண்ணிக்கொண்டே , பஸ் ஸ்டாப் வந்து இருந்தாள். டாக்சி புக் ஆகாமல் போக. பஸ்சிலே போலாம் என்றவன். எந்த பஸ் இந்த டைமுக்கு வரும் என்று போனில் உள்ள ஆப்பை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
Advertisement
அந்த பஸ் ஸ்டாபில் ஆட்கள் யாரும் இல்லாமல் இருக்க. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. இன்னும் 5 நிமிடத்தில் அவள் வீட்டு பக்கம் செல்ல கூடிய பஸ் வரும் என்று போனில் பார்த்தவள் அப்பாட பஸ் வந்துரும் என்று நிமிற, அவளின் பின்னாடி இருந்த ஒருவன் அவளின் கழத்தில் உள்ள செயினை இழுக்க.
இன்னொருவன் அவளின் ஹேன் பேக்கை பிடிங்கிக்கொண்டு ஓட.
முதலில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்தவள். பேக்கை தூக்கிக்கொண்டு ஓடியவன் பின்னாடி ஓடினாள்..
அவனோ மின்னல் வேகத்தில் ஓட. இவளால் அவனை பிடிக்க முடியவில்லை.
அவனோ ஒரு சந்தில் ஓடி ஒழிந்து விட்டான்..
இவளோ , என் பேக், என் பேக் டேய் எங்கடா போன என்று அவனை தேட.
அந்த இருட்டில் அவன் எங்கே போனான் என்று தெரியவில்லை. அவள் கையில் போன் மட்டுமே கழுத்தில் லைட்டாக கீறி இரத்தம் வர. அதை துடைத்தவள். தொட்டு பார்த்து சின்ன கீறல் தான். ஆனால் அவன் செயினை பிடிங்கிய வேகத்தில் கீறியதால் கழுத்து வலிக்க. கால் வேற ஓடி வந்ததால் வலி எடுத்தது.
என் பேக் என்று அழுதாள், யாரும் இல்ல தெருவில் நிற்று. ஒரு சில வாகனம் மட்டும் சென்று கொண்டு இருந்தது. அந்த ஹேன் பேக்கில் தான் அவளின் பாஸ்போர்ட், ஒர்க் பண்ணுற ஐ,டி என்று எல்லாம் இருக்க.
அவளுக்கு அழுகை வர. அழுது கொண்டே வந்தவள், தூரத்தில் போலிஸ் ஜீப் சத்தம் கேட்க.
சத்தம் வந்த திசை நோக்கி ஓடியவள். அந்த வாகனத்தை நிப்பாட்டி, ஆங்கிலத்தில் அவர்களிடம் ” என் பேக்கை ஒருத்தன் திருடிட்டான், என் பாஸ்போர்ட் மிஸ்சிங் ” என்று சொல்ல.
அந்த லண்டன் போலிஸ் காரனுக்கு இவள் பேசிய ஆங்கிலம் புரியவில்லை. இவள் பாஸ்போர்ட் இல்லை என்றது மட்டும் புரிய.
” யூ நோ பாஸ்போர்ட் என்றான் போலிஸ் காரன்.”
“இவள் எஸ் என்க”
இவள் பேசியது வேற புரியவில்லை, இவளிடம் பாஸ்போர்ட்டுமில்லை ” வா டெஷனுக்கு உன்னை விசாரிக்கனும், என்று அவர்கள் வாகனத்தில் ஏற சொல்ல”..
இவளோ ” நோ மை பேக் மிஸ்ஸிங், தீப் ” என்று கூற வர.
“வா என்று அவளை வாகனத்தில் ஏற்ற”..
பல்லவி “ஒரு போன் பண்ணிக்கிறேன்” என்று சித்தப்பாவுக்கு போன் போட போக.
போனை பிடிக்கியவர்கள் “வா ஏறு உன்னை விசாரணை பண்ணணும் என்று வண்டியில் ஏற சொல்ல.
இவளோ அவர்களோடு வண்டியில் ஏற மாட்டேன் என்று சண்டை போட.
அந்த போலிஸ் காரர்கள் இவளுக்கு கையில் விலங்கிட்டு, காரில் அவளை ஏற்றி விசாரிக்க போலிஸ் டேசனை நோக்கி கார் சென்றது.
போலிஸ் வாகனத்தின் பின்னாடி ஒரு கார் ஹார்ன் அடித்தப்படியே வர.
போலிஸ் வாகனம் அதை கண்டுக்கொள்ளாமல் வேகமாக சென்றது.
போலிஸ் டேசன் உள்ளே வந்து அவளை ஒரு சேரில் அமர வைத்து “அமைதியா உட்கார்” என்று சொல்லிவிட்டு.
மேல் அதிகாரியிடம் சென்று” ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்து இருக்கோம். அவளிடம் பாஸ்போர்ட் இல்லை, அவள் பேசுறது புரியல, இது அவளுடைய போன் என்று சொல்லி தர”.
அதை வாங்கிய அதிகாரி, இன்னொருவரிடம் அந்த போனை குடுத்து, ” செக் பண்ணுங்க என்று தர”.
மின்னல் வேகத்தில் போலிஸ் டேஷன் உள்ளே நுழைந்தான் விக்ரம் ஜித்.
அவனை அங்கே உள்ளவர்களுக்கு தெரியும் என்பதால்,” என்ன? ஜித் இந்த நேரத்தில் வந்து இருக்கீங்க என்று ஆங்கிலத்தில் கேட்க”..
” நீங்க இப்போ கூட்டிட்டு வந்த கேர்ள் ” என்று கேட்க.
“அந்த பொண்ண என்றவர்கள். அவள் பேசுறது புரியல, அவ பாஸ்போர்ட் அவ கையில இல்ல அதான் விசாரனை பண்ண கூட்டிட்டு வந்தோம். உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணா..”
“எஸ் என்றவன் மை கேர்ள்” என்றான்…
“அந்த பொண்ணு கிட்ட என்ன நடந்ததுன்னு கேளுங்க ஜித். அந்த பொண்ணோட பாஸ்போர்ட், அண்டு ஒர்க் பண்ணுற ஐ, டி கார்டை காட்டிட்டு கூட்டிட்டு போங்க” என்க.
“ஓகே என்றவன் நான் போயி பேசிட்டு என்னவென்று சொல்லுறேன். எங்கே அந்த பொண்ணு”? என்று கேட்க.
“வாங்க” என்று ஒரு போலிஸ் காரர், அவள் இருக்கும் இடத்துக்கு அழைத்து சென்றார்.
அங்கே உள்ள ஒரு அறையில் கைகள் விலக்கிட்டு ஒரு சேரில் அமர்ந்திருந்தாள் பல்லவி.
இவன் உள்ளே வந்ததும், இவனை பார்த்து ஆங்கிலத்தில் ” நான் ஒன்னும் பண்ணலை என்னை விடுங்க என்று அழுதவளை”.
” ஏய் வாயை மூடு என்றான் தமிழில்”.
அவளோ “தமிழா நீங்க என்றவள் மீண்டும் அழ”..
“ஏய் வாய மூடுன்னு சொன்னேன்”, என்றவன்..
அவளின் அருகில் வர.
” சார், சார் நான் எதுவும் பண்ணல. என் பேக்கை ஒருத்தன் திருடிட்டு போயிட்டான். அதத்தான் இந்த போலிஸ் காரன்கிட்ட சொன்னேன், என்ன இங்கே கூட்டிட்டு வந்துட்டான். “..
“எனக்கு உதவி பண்ணுங்க சார் என்று அழுதவளை”..
“என்ன நடந்துச்சுன்னு எனக்கு கொஞ்சம் நிதானமா சொல்லுறீயா என்றான்”…
அவளோ இன்று ஆபிஸ்சில் இருந்து வெளியே வந்தது முதல் , இப்போ நடந்தது வரை சொல்லி முடிக்க.
“ஓ என்றவன். உன் ஹேன் பேக்கை ஒருத்தன் திருடிட்டான், அதுல உன் பாஸ்போர்ட், ஐ, டி எல்லாம் இருந்தது அது தானே..”
“ஆமாம் என்று தலையாட்ட”.
“சரி உன் பேர்னென்ன”?.
“பல்லவி, பல்லவி செல்லத்துரை” என்றாள்.
“செல்லத்துரை உங்க அப்பாவா.”
“ஆமாம்”.
“வா ” என்று போலிஸ் காரர்களிடம் அழைத்து சென்றவன். முதலில் அவள் கை விலங்கை கழட்டி விட சொன்னான்.
ஒருவர் வந்து அவள் கை விலங்கை கலட்டியவுடன். விக்ரம் ஜித்தின் அருகே சென்று நின்று கொண்டாள்.
விக்ரம் பல்லவிக்கு நடந்ததை போலிஸ்சிடம் சொல்ல.
“சரி” என்றவர்கள்.
அவளின் போனையும் செக் பண்ணிவிட்டு. சந்தேகப்படும்படி ஒன்னும் மில்லை.
ஆனா பாஸ்போர்ட் இருந்தா தான் அனுப்ப முடியும்.
விக்ரமோ கோபம் கொண்டு “அதை தான் திருட்டு பயலுங்க எடுத்துட்டு போயிட்டாங்களே, இப்போ எப்படி பாஸ்போர்ட் காண்பிக்க முடியும்” என்றான்.
பல்லவி அவளின் போனில் எல்லாம் இருக்கு என்று கூற.
போனை வாங்கி அனைத்தையும் பார்த்தவர்கள். அதை அவர்களின் ஈமெய்லுக்கு அனுப்பி வைத்துவிட்டு. மீண்டும் ஆயிரம் கேள்வி கேட்க.
விக்ரம் தன்னுடைய அனைத்து ஐ. டி கார்டையும் காண்பித்து. “இவ என் பொறுப்பு என்று கூற”..
“சரி கூட்டிட்டு போங்க”.
“அவங்க பேக்கை கண்டு பிடிச்சுட்டு கால் பண்ணுறோம்”..
“ஒரு கம்பிளைன்ட் மட்டும் எழுதி குடுத்துட்டு போங்க”என்க.
இருவரும் சேர்ந்து கம்பிளைன்ட் எழுதி கொடுத்து விட்டு வெளியில் வர.
” வா பல்லவி என்றவன் காரில் ஏற சொல்ல”..
பல்லவி நிமிர்ந்து அவன் முகத்தை பார்த்து “நன்றி சார், என்றவள், நீங்க வர்லேன்னா நான் என்று அழுதவளை..”
“ஏய் பல்லவி அழதே என்று சொல்ல.”
அவளின் அழுகையை தாங்க முடியாதவன் மெல்ல தோள் அணைத்து ஆறுதல் படுத்த.
அவளோ அவனை நன்றாக அணைத்துக்கொண்டு, “நன்றி சார், நீங்க இல்லையின்ன நான் என்று மறுபடியும் அழுதவளை..”
“போதும் பல்லவி ” என்று அவளை அணைத்து சமாதானம் பண்ணிக்கொண்டு இருந்தான்….
error: Content is protected !!