Skip to content
Post Views: 696
“ இன்னுமா புரியல உங்களுக்கு சரி நானே தெளிவா சொல்றேன் அத்த.
நீங்க சொன்னது எல்லாம் கரெக்டு தான் ஆனா அந்த சொத்து உங்க அப்பா பேருல தான் இருந்துச்சி. உங்க பாட்டியோட அண்ண பையன் தான் உங்க அப்பா ரத்தினம். உங்க அப்பாவுக்கும் அம்மா கற்பகத்துக்கும் உங்க பாட்டி தான் மேரேஜ் பண்ணி வச்சி அதுக்கு பரிசா 25 ஏக்கர் நிலத்த உங்க அப்பா பேருல உங்க பாட்டி எழுதி வச்சாங்க. அது உங்க பெரியம்மாக்கு பிடிக்கல. எப்படி என் பேருக்கு எதுவும் எழுதாம உன்னோட பொண்ணுக்கு மட்டும் எழுதி கொடுத்து இருக்கனு ரொம்ப சண்டை போட்டாங்க. அதனால உங்க பாட்டி வேற ஒரு இடத்தை அவங்க பேர்ல எழுதி வச்சாங்க. இருந்தாலும் அவங்க பேருல எழுதி வைத்த நிலத்தோட மதிப்பை விட உங்க அப்பா பேருல இருந்த நிலம் தான் ரொம்ப மதிப்பானது. அந்த கோவத்துல தான் உங்க பெரியம்மா ரொம்ப நாளா உங்க அம்மா கூட பேசாம இருந்தாங்க. அப்படியே ரொம்ப வருஷம் உங்க குடும்பத்துக்கும் அவங்க குடும்பத்துக்கும் பேச்சுவார்த்தையே இல்லை. ஆனா ஒரு பிசினஸ் விஷயமா உங்க ஊருக்கு வந்த உங்க பெரியப்பா அந்த நிலத்தை பார்த்துட்டு அத அவருக்கு வேணும்னு ஆசைப்பட்டாரு. உங்க அப்பா கிட்ட அந்த நிலத்துக்கு பதிலா நிறைய காசு தரேன்னு சொல்லி கேட்டாங்க. ஆனா உங்க அப்பா எங்க அத்தை எனக்கு தந்த பரிசு இது கண்டிப்பாக தரமாட்டேன்னு சொல்லிடாங்க. அதுக்கு பிறகு உங்க பெரியம்மா வச்சி உங்க அம்மா கிட்ட உங்க பெரியப்பா கேட்டார். ஆனா அவங்க எவ்ளோ எமோஷனல் ப்ளாக்மெயில் பண்ணியும் உங்க அம்மாவும் அப்பாவும் அந்த இடத்தை கொடுக்கல அந்த கோவத்துல தான் உங்க பெரியப்பா உங்க அம்மா அப்பாவ ரெண்டு பேரையும் ஆக்சிடென்ட் பண்ணி கொன்னுட்டாரு. அதுக்கப்புறம் நல்லவர் வேஷம் போட்டு வந்து உங்களையும் அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டாரு. நீங்க அங்க போன பிறகுதான் அந்த நிலத்தை உங்க பெரியம்மா பேருக்கு மாத்துறதுக்கு முயற்சி பண்ணாங்க அப்பதான் தெரிஞ்சிச்சி உங்க அப்பா பேருல இடம் இருக்குன்னு. அதனால தான் உங்களுக்கு 18 வயசு கரெக்டா வரவும் ஒரு பெரியவருக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து அந்த இடத்தை அவங்க பேருக்கு மாத்த முயற்சி பண்ணுனாங்க. ஆனா அவங்க பிளான் மொத்தமா நீங்க க்ளோஸ் பண்ணிட்டு மாமாவ கல்யாணம் பண்ணிட்டீங்க. அதுவும் தன்னோட மகளுக்கு பார்த்த மாப்பிள்ளையோட தம்பியை நீங்க பிளான் பண்ணி கல்யாணம் பண்ணத அவங்களால பொறுக்கவே முடியல. அப்பவே உங்கள கொல்ல முயற்சி பண்ணி இருக்காங்க ஆனா ஒவ்வொரு முறையும் நீங்க தப்பிச்சிட்டீங்க. நீங்க தப்பிச்சதுக்கு காரணம் நம்ம தாத்தா தான். என்னா அவருக்கு பெரிய மாமா கல்யாணத்துல என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சிருக்கு. அப்படி தான தாத்தா”
“ஆமா கண்ணா நாங்க முதல்ல விசாரிச்சப்போம் நல்ல குடும்பமா தான் தெரிஞ்சி அதுக்கு அப்புறம் அந்த பொண்ண பார்த்து பேசி முடிச்சு எல்லாம் பண்ணுனோம். ஆனா கல்யாணத்துக்கு முதல் நாள் வந்த எங்க சொந்தக்காரங்க சொல்லி தான் அந்தப் பொண்ணோட அப்பா அம்மாவ பத்தியும் அந்த பொண்ண பத்தியும் தெரிஞ்சிச்சி. அந்த பொண்ணு ஒன்னும் நல்ல பொண்ணு இல்ல. அவ ஏற்கனவே ஒரு பையன லவ் பண்றதா சொல்லி ஏமாத்துனது தெரிய வந்துச்சி. சரி எல்லாம் பேசி இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம் நாங்க முடிவு பண்ணோம். ஆனா அதுக்குள்ள இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி வந்துட்டாங்க அத பத்தி பேசி பேசி சண்டை பெருசாயிட்டு. சரி இதோடு சேர்த்து நம்ம பையனோட கல்யாணத்தை பண்ணிரலாம்னு என் தங்கச்சிகிட்டயும் மாப்பிள்ளை கிட்டயும் பேசினேன் அவங்களும் இதுக்கு ஒத்துக்கிட்டாங்க. அதான் அந்த சூட்டோட சேர்த்து என்னோட பையன் கல்யாணத்துக்கு நான் முடிச்சிட்டேன். ஆனா அதுக்கப்புறம் தெரிஞ்சு அந்த குடும்பமே ஒரு தில்லாலங்கடி குடும்பம் கண்டிப்பா இவங்களால என் மருமகளுக்கு ஏதாவது பிரச்சனை வரும்னு சொல்லி தான் அவளுக்கு பாதுகாப்பு ஏற்பாடு பண்ணுனேன்” என்றார் மயில்வாகனார்.
அதனைக் கேட்ட செந்தில் முருகன் – சிவகாமி தம்பதியர் நம்ம கல்யாணத்துல இவ்வளவு நடந்து இருக்கா என்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பழனி முருகன் நம்ம வாழ்க்கையில இவ்வளவு நடந்து இருக்கா என்று நினைத்துக் கொண்டு நடப்பதை பார்க்க தொடங்கினார். பிரபாவதி குற்ற உணர்ச்சியுடன் கைகூப்பி தனது மாமாவை பார்த்து, “ மாமா என்ன சுத்தி இவ்வளவு நடந்து இருக்கு ஆனா எதுவுமே தெரியாம நான் உங்க எல்லாத்துக்கும் பிரச்சனை கொடுத்து இருக்கேன். என்னை மன்னிச்சிருங்க மாமா அத்தை நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க. எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க இது வரைக்கும் நான் பிரச்சனை பண்ணதுக்கு எல்லாத்துக்கும் சேர்த்து என்ன மன்னிச்சிடுங்க” என்று அனைவரும் முன்பும் மன்னிப்பு கேட்டு அழ தொடங்கினாள் பிரபாவதி.
Advertisement
“விடுமா ஏன் அழுதுட்டு இருக்க அதான் எல்லாம் முடிஞ்சிட்டே அப்புறம் என்ன. நீ தப்பு பண்ண நாங்களும் தான் காரணம். உனக்கும் சிவகாமிக்கு நான் வித்தியாசம் காட்டாமல இருந்திருந்தால் நீ இவ்வளவு பிரச்சினை பண்ணி இருக்க மாட்ட. எல்லாம் என் தப்பு தான் என்னை நீ மன்னிச்சிருமா” என்றார் வள்ளியம்மை.
“ ஐயோ அத்தை நீங்க ஏன் மன்னிப்பு கேக்குறீங்க எந்த தாய் தான் தம் பேச்ச மீறி பையன் கல்யாணம் பண்ணிட்டு வந்தா ஏத்துக்க முடியும் நான்தான் கொஞ்சம் விட்டுக் கொடுத்து போய் இருக்கனும் தப்பு பண்ணிட்டேன் மன்னிச்சிடுங்க அத்த” என்றாள் அவர் கையை பிடித்து அழுது கொண்டு
“சரி விடுமா என்ன நடக்கும்னு இருந்திருக்கு நடந்து முடிச்சிட்டு இனி யாரை குறை சொல்லி என்ன நடக்க போகுது. நீ அழாத நீ பட்ட கஷ்டமும் கொஞ்ச நஞ்சம் இல்ல” என ஆறுதலாக அவளை அணைத்துக் கொண்டார்.
Advertisement
“ஏன் அத்தை நான் என்ன அவ்ளோ பெரிய தப்பு பண்ணனா. ஏன் கடவுள் என் அப்பா அம்மாவ சீக்கிரமா என்கிட்ட இருந்து எடுத்துக்கிட்டாங்க. தப்பு செஞ்சா அவங்க எல்லாம் நல்லா தானே வாழ்கிறார்கள்” என்றாள் ஆதங்கமாக
Advertisement
“யாருமா சொன்னா அவங்க நல்லா வாழ்றாங்கன்னு. உங்களோட கல்யாணத்துக்கு அப்புறமா உடனே உங்க அக்காவ அவ காதலிச்சு ஏமாத்துன பையனையே கல்யாணம் முடிச்சு வச்சாங்க. ஆனா அந்த கல்யாணம் ஒரு நாள் கூட நீடிக்கல. உங்க பெரியப்பாவோட வேலையே கஷ்டப்படுறவங்க கிட்ட இருந்து அவங்க நிலத்தை அடிச்சு புடிங்கிறது தான். அப்படி ஏமாத்தபட்டவங்கள ஒருத்தர் பொண்ணு மாப்பிள்ளை வர்ற கார் ஓட பிரேக்க டேமேஜ் பண்ணிட்டாங்க. அதனால அந்த கார் ஆக்சிடென்ட் ஆகி மாப்பிள்ளை பையன் அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். உங்க பெரிய அக்கா கோமாக்கு போய்ட்டாங்க. தன் கண் முன்னாடியே தன்னோட பொண்ணுக்கு இப்படி ஆனத நினைச்சு உங்க பெரியப்பா ஹார்ட் அட்டாக்ல போய் சேர்ந்துட்டாரு. அவர நினைச்சி நினைச்சி உங்க பெரியம்மாவும் அவர் போன ஒரே வருஷத்துல இறந்துட்டாங்க. அதுக்குப் பிறகு உங்க பெரியம்மாவ தான் மட்டும் பார்த்துக்க முடியாதுன்னு உங்க சின்ன அக்கா இவரை லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க” என்றார் சிவசாமி.
இங்கே நடப்பது அனைத்தையும் ஒருவித அழுத்தத்துடன் பார்த்துக் கொண்டு இருந்த யாழினிக்கு குற்றயுணர்வு அதிகமானது. ஏனென்றால் அவளுக்கு சொல்லப்பட்ட கதைக்கும் இப்போது இவர்கள் சொல்லுவதற்கும் ஒரு சதவீதம் கூட ஒத்துப் போகவில்லை. ஏற்கனவே குற்ற உணர்வில் இருந்தவள் இப்போது இதை கேட்ட பின் தான் செய்தது 100 சதவீதம் தவறு என புரிந்தது. தனது அன்பை தனக்கு எதிராகவே திருப்பி எவ்வளவு பெரிய சதி செயலில் ஈடுபட்ட செய்திருக்கின்றார் என்று அவளுக்கு புரிந்தது. புரிந்து என்ன செய்ய எல்லாவற்றையும் தனது கையாலே போட்டு உடைத்த பிறகு இனி என்ன செய்வது என யோசிக்க தொடங்கினாள்.
அவளின் ஒவ்வொரு அசைவையும் பார்த்துக் கொண்டிருந்த கவினுக்கும் அவளின் மனநிலை புரிந்தது இருந்தும் என்ன செய்ய இது அவளால் தேர்ந்தெடுக்க பட்ட பாதை இனி வரும் எல்லாவற்றையும் அவள் மட்டுமே தாங்க வேண்டும் என்றும் மனதில் நினைத்துக் கொண்டு அவளை பார்த்துக் கொண்டு இருந்தவனை பார்த்து,“சரி கவின் இதுக்கும் நம்ம வீட்ல நடக்கிற பிரச்சனைக்கு என்ன சம்பந்தம் இன்னும் நீ அதை சொல்லவே இல்லையே. அதோட இந்த பொண்ணு யாரு” என்றார் செந்தில் முருகன் யாழினி பார்த்துக்கொண்டு
Advertisement
“சொல்றேன் மாமா. எனக்கு அத்தையோட குடும்பத்தில் நடந்த எந்த பிரச்சினையும் தெரியாது. ஒரு நாள் இனியா எனக்கு போன் பண்ணி இருந்தாங்க” என்று அன்று நடந்ததை சொல்லத் தொடங்கினான் கவின்.
error: Content is protected !!