Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதோ இதோ என் பல்லவி

Itho Itho En Pallavi 5

இதோ.. இதோ.. என் பல்லவி

அத்தியாயம் – 5



Advertisement

Advertisement

   விக்ரம் ஜித்  அமைதியாக  காரில்   அமர்ந்திருந்த  பல்லவியை  பார்த்தவன்.

Advertisement

”   பல்லவி”  என்றான்.

Advertisement

”  உம்  சொல்லுங்க  சார்”  என்றாள்.

”  சாரி  உன்ன  ரொம்ப  டென்ஷன்  பண்ணுறேன், பிறந்த நாள் அதுவுமா” என்றான்.

 அவளோ எதுவும்  பேசாமல் அமைதியாக வர.

 ”  விக்ரமனின்  போன்  ஒலித்தது, போனை  காரில் கனேக்ட்  பண்ணியவன்,. ” சொல்லுட   விக்டர், ”  என்றான்.

”  ஹலோ விக்ரம்”

” சொல்லுடா விக்டர்  என்ன கால் பண்ணியிருக்க  சொல்லுடா, “.

 ” டுடே  பார்ட்டி  ஞாபகம்  இருக்கா”.?  என்றான்.

”  என்ன  பார்ட்டி?.

” ஹே  மேன்  நம்ம  ஜுலி   பெர்த்டே,  உன்னோட  பெஸ்டீ  மறந்துட்டீயா “?என்றான்.

” யா, யா, ஒன் வீக்  முன்னாடி கால்  பண்ணா  மறந்துட்டேன்டா”.

”  மகனே  நீ மட்டும் வராம  இருந்த  நேர்ல  வந்து  சாமியாடிருவா, ஒழுங்க  வந்து  சேரு, டெரஸ்  கோடு  புளு கலர், புளு  கலர் டெரஸ் தான் போடனும்  தெரியுதா, இன்னும் பார்ட்டிக்கு  டூஹவர்ஸ்  தான்  இருக்கு  வந்து சேரு, “.

”  ஓகே டா  தாங்யூ, ஞாபகம் பண்ணதற்கு ”  என்றான்.

 ” டேய்  பார்ட்டி நடக்குற  இடம் தெரியும் தானே”.

 “தெரியும்டா வந்துருவேன்”.

”  ஓகே டா பாய், பார்ட்டியில மீட் பண்ணலாம் ”  என்று விக்டர் போனை வைத்தான்.

 எப்படி மறந்தேன்  என்று  புலம்பியவனை, பார்த்துக்கொண்டு  இருந்தாள் பல்லவி.

தன்னை பார்க்கும் பல்லவியை பார்த்து, ” என்ன?பல்லவி”.

”  அது யாரு ஜுலி?”  என்றாள்.

” அவ  என்னுடைய கேர்ள்  பிரெண்டு”  என்றான்.

” கேர்ள்  பிரண்டுனா “.?

 ஓ உனக்கு ஜுலியை பத்தி தெரிஞ்சுக்கனுமா என்று  மனதில் நினைத்தவன்.

”  அவளும், நானும்  ஒன்னா காலேஜில்  படிச்சோம். “

   ” ஓ   காலேஜ்  பிரண்டா”  என்றவளின் குரலில் ஏதோ  ஒரு பொறாமை உணர்வு போல் தோன்ற.

”  நீயும் வர்ரீயா?  ஜுலி  பெர்த்தடே  பார்ட்டிக்கு ”  என்றான்.

”  இல்ல, வேண்டாம்  அவங்க உங்க  பிரண்டு,  நான் எப்படி”.

” நீயும்  என் பிரண்டு  தானே, அப்படி தானே  சொல்லுவ, வா பல்லவி, உன்னை நைட் டின்னர்  முடிச்சுட்டு  வீட்டுல  கொண்டு போய்  விட்டுடுறேன். “

” வா, பல்லவி அங்க வர்ரது எல்லாம் என்  கூட படிச்ச பிரண்டு தான், அப்பறம்  உனக்கு  ஒரு இரண்டு பேரை அறிமுகம்  பண்ணிவைக்கிறேன், உனக்கு அவங்கள  கண்டிப்பா பிடிக்கும், வா ” என்று அழைக்க.

 அவளுக்கு போலாமா  வேண்டாமா என்று  குழப்பமாக  இருக்க. மனதில் அவர் உனக்காக  சிவன் கோவிலுக்கு எல்லாம் கூட்டிட்டு வந்து இருக்காரு, ஒரு பெர்த்தரே  பார்ட்டி தானே  போலாம் என்று நினைத்தவள், ”  வர்ரேன் சார் ”  என்றாள்.

”  தாங்யூ பல்லவி”   என்றவன்  அவன் எப்போதும் உடை வாங்கும் பெரிய ஷோருமிற்கு பல்லவியை அழைத்து சென்றான்.

  “நான் இங்கேயே வெய்ட் பண்ணுறேன் சார்,  நீங்க போய் ட்ரெஸ் சேஞ்சு பண்ணிட்டு  வாங்க”  என்று ஷோருபில் உள்ள சேரில் அமர பார்க்க.

”  என்ன?  என்னை மட்டும் ட்ரெஸ் பண்ண சொல்லுற, நீயும் வா பல்லவி, பார்ட்டிக்கு வர்ர வங்க எல்லாரும் ப்புளு கலர் ட்ரெஸ்தான்  போடனும், வா ”  என்று அழைக்க.

 பராவால்ல சார் நான்  புடவையிலே  வர்ரேன்”  என்றவளை.

 வா பல்லவி என்று, அவளுக்கு ஒரு ப்புளு கலர் ஸ்லீவ் லெஸ் ஆன, முட்டி வரைஉள்ள, டைட்டான ப்பிராக்கை செலக்ட் பண்ணியவன், அவளிடம் தந்து போட சொல்ல.

அவளோ ”  இது ரொம்ப சின்னதா இருக்கு, கைவேற இல்ல, வேண்டாம் ”  என்றவளை.

”  போடு  பல்லவி உனக்கு  அழகா இருக்கும், எனக்காக பிலீஸ்மா”  என்றவனை.

  “சரி”   என்று    உடையை வாங்கி கொண்டு போனவளிடம்.

”  நீ ரெடியா இரு பல்லவி 10  மினிட்ஸ், நான் ட்ரெஸ் பண்ணிட்டு  வந்திருவேன்”  என்று ஆண்கள்  உடை இருக்கும் தளத்திற்கு சென்றவன், அவன் டார்க் ப்புளு கலரில் சர்ட,கோர்ட், பேன்ட்டையும்  தேர்வு செய்து, உடையணிந்து ரெடியாகி கீழே வர.

 பல்லவி இன்னும் வந்திருக்க வில்லை.

அவளை தேடியவன் ட்ரெயல் ரூம் அருகே சென்று பல்லவி, பல்லவி என்று  அழைக்க.

”  சார் ”  இங்கே  என்று, ஒரு  கதவை  லைட்டாக  திருந்தவள்.

”  அவனை  அவள் இருக்கும் ட்ரெயல் ரூம்புக்கு  அழைக்க, “.

”  என்ன பல்லவி”  என்றான்.

”  ஒரு நிமிசம்  உள்ளே வாங்க  சார் என்று அவனை உடை மாற்றும் அறைக்கு அழைக்க”.

 முதலில் தயங்கியவன், பிறகு என்னவென்று  உள்ளே வர.

அவன் செலக்ட் பண்ணி குடுத்த  ஆடையில் அழகாய் இருந்தவளை பார்த்து ரசித்தவன் “என்ன பல்லவி”?  என்றான்.

  “இந்த ட்ரெஸ் ரொம்ப டைட்டா இருக்கு சார். உட்கார்ந்த கிழிஞ்சுரும் போல,   எனக்கு  இது மாதிரியான ட்ரெஸ்   போட தெரியாது, எனக்கு வேற மாதிரியான ட்ரெஸ்  எடுத்து தாங்க சார் இது வேண்டாம், கம்பர்டபலா இல்ல  சார் வேண்டாம் என்று மறுத்தவளை”.

”  வா பல்லவி” என்று  வெளியில் அழைத்து வந்தவன், அவளை  பெரிய கண்ணாடி முன் நிற்க வைத்தவன்,    “இப்போ  பாரு என்று அவளின் பிம்பத்தை  பார்க்க வைத்தவன், பாரு அழகா இருக்கு இந்த ட்ரெஸ்  உனக்கு”.

 அவனின் போனில் இருந்து  அவளை போட்டோக்களை  எடுத்து  அவளிடம்  காண்பிக்க,.

   ”  உம் நல்லா தான்”  இருக்கு என்றாள்.

 அப்பறம் என்ன  என்றவள், நல்லா நட, உட்காரு என்று  சேரில் அமர வைத்து,  பின்பு  எழ வைத்தவன், இப்போ ஒகே வா  என்றான்.

அவளோ மெல்ல தலையாட்ட. அவளின் அருகே வந்தவன், ”  ஒரு செல்பி” என்று  நிறைய புகைப்படங்களை  அவளோடு சேர்ந்து  எடுத்து  கொண்ட பின்னே விட்டான் அவளை.

 அங்கே அழகு படுத்தும்  நிலையம் இருக்க அதில்  உள்ள ஒரு பெண்ணை அழைத்து, மேடமுக்கு ஹேர் ஸ்டெயில், அப்பறம்  லைட் மேக்கப் பண்ணி விடுங்க  என்று  சொல்ல. “

” வேண்டாம் சார்  “என்றாள் பல்லவி.

”  போ பல்லவி, ஒரு  10  மினிட்ஸ், யூ லுக் வெரி நைஸ், ”  என்று அனுப்பி வைத்தான்.

பத்து நிமிடம் கழித்து வந்தவளை, பார்த்தவன், எதுவும் சொல்லாமல் காருக்கு அழைத்து வந்திருந்தான்.

 காரில் பல்லவியை ஏற சொல்லி விட்டு, ”  ஒரு நிமிசம் பல்லவி என்று எங்கோ சென்று வந்தவனை.

”  எங்கே போனீங்க, சார்” என்றாள் பல்லவி.

” ஒன்னும் இல்லை பல்லவி போலாமா”  என்றவனை.

” இப்போ  எங்கே போயிட்டு வந்தீங்க?  சொல்லுங்க சார். “

”  உண்மைய  சொல்லவா, பொய் சொல்லவா? “.

” உண்மையவே  சொல்லுங்க”  என்றாள்.

”  நான் சொன்னா நீ  என்னை திட்ட கூடாது “.

”  திட்ட மாட்டேன் ”  என்றவளிடம்”.

 ”  நீ இந்த ட்ரெஸ், அண்ட் மேக்கப் எல்லாம் சேர்ந்து உன்னை  பார்க்க யூ, யூ லுக் வெரி  ஹாட்  பல்லவி”  என்றவன்.

”  உன்ன  பார்த்ததும்,  என்னை என்னால  கன்ரோல் பண்ண முடியல, இங்கே  இருந்தா  ஒன்னு உன்ன கிஸ் பண்ணி இருப்பேன், இல்ல ஹக் பண்ணி இருப்பேன், அது தான்  10   மினிட்ஸ்  தனியா போய்  ரிலாக்ஸ் பண்ணிட்டு  வந்தேன்”  என்றவனை.

என்ன  சொல்ல என்பது போல் பார்த்து இருந்தவளை, ”  சாரிடா, தப்பு தான்”  என்றவன்,   காரை எடுத்து  கிளப்பினான்.

இருவரும் பார்ட்டி ஹால் வரும் வரை எதுவும் பேசவில்லை.

 அது மிக பெரிய ஹோட்டல், அதில் ஒரு தளம் முழுக்க புக்  பண்ணி இருந்தாள், ஜுலி.

 விக்ரம் ஜித் எந்த பார்ட்டிக்கு போனாலும் தனியாக தான் போவான், வருவான், இந்த  பெர்த்தடே பார்ட்டிக்கு பல்லவியை அழைத்து   வருவதை பார்த்தவர்கள்,  அவனின் வருங்கால மனைவி என்றே நினைத்தனர்.

ஜுலி விக்ரமனை பார்த்து, ” ஹே  கம்  விக்கி என்று தோள் அணைத்தவள், பல்லவியை பார்த்து  கம்   என்று அழைத்தவள்.

 ” விக்ரமிடம்    பல்லவியை  பார்த்து   யூ லவ்  ஹிம்  என்று  கேட்க. “

“ஆமாம் ” என்றவன், பல்லவியை பார்த்து ”  மை  லைப்… ”  என்றான் அழுத்தமாக.

 அவளோ என்ன  இப்படி சொல்லுகிறான் என்றே, அவனை  பார்த்திருந்தாள்.

 இருவரையும்  உள்ளே அழைத்த ஜுலி, அவளின் கணவரிடம்  விக்ரமையும், பல்லவியையும் அறிமுகப்படுத்த,  விக்ரம் ஜித்தும் ஜுலி கணவரும் கைகுலுக்கி கொள்ள, பல்லவி  அவரை பார்த்து தலையாட்டி இருந்தாள்.

 அங்கே உள்ளவர்கள்  பாதிபேர் ஜுலியுடன் படித்தவர்கள் என்பதால், அனைவருக்கும் விக்ரமிடமும், பல்லவியிடமும் நன்றாக பேச.

பல்லவியை பத்தி கேட்ட அனைவரிடமும், ”  மை பியான்சி ”  என்றே அறிமுகப்  படுத்தினான்.

அவளோ  இவன்  கல்யாணமாகிருச்சுன்னு சொன்னா ஆளு, பியான்சி தானே சொல்லுறான்னு அமைதியாக இருந்து கொண்டவள், ஆனா மனதை போட்டு வருத்திக் கொண்டாள்…

இது நடக்குமா,?  பைரவி அம்மா  ஒத்து கொள்வாரா என்ன  நடக்க  போகுதோ இறைவா, என்று வருத்தத்தில்  இருக்க.

   விக்ரம் ஜுலியிடம்  “வேர்  ஈஸ் மை ஏஞ்சல்ஸ்”  என்றான். இதோ.. என்ற ஜுலி, அவளின்  வீட்டு பணி பெண்ணிடம் குழந்தைகளை அழைத்து வர சொன்னாள்.

 ஜுலியின் இரட்டை  பெண் குழந்தைகளை  பணி பெண்கள் தூக்கி வர, கொலு, கொலுவென பால் நிறத்தில், சிவப்பு வண்ண பிராக்  அணிந்துவந்த  குழந்தைகளை  விக்ரம் தனது  இரண்டு கைகளில்  அள்ளி அணைத்திருந்தான்.

 பல்லவிடம் ”  நான் சொன்னேன்ல, உனக்கு  ரெண்டு பேரை அறிமுகம்  படுத்தி  வைக்கிறேன்னு, இவங்க தான் மை ஸ்வீட்  ஏஞ்சல்ஸ்,  என்று இரண்டு குழந்தைகளை காண்பிக்க.

பல்லவிக்கு குழந்தைகளை பார்க்க ஆசையாக  இருக்க,  ஒரு குழந்தையை  அவனிடமிருந்து  வாங்கியவள்.

குழந்தையை தொட்டு தடவ, அந்த குழந்தை இவளை பார்த்து சிரித்தது, இரு குழந்தைகளும்  ஒரு வயது மேல் இருக்கும்.  இப்போ தான் நடக்க பழகி இருந்தனர்.

கீழே இறக்கி விட சொல்லி  குழந்தைகள் இருவரிடம் இருந்து இறங்க முயற்சி பண்ண, பார்ட்டி ஹாலில்  கூட்டமாக இருப்பதால் , விக்ரமும், பல்லவியும் பார்ட்டி ஹால்   வெளியில்  வந்து இறக்கிவிட, இருவரும் தத்தி, தத்தி நடக்க  பார்க்க அழகாய் இருந்தது.

 பல்லவி  விக்ரமிடம் “குழந்தைகள் நா  உங்களுக்கு பிடிக்குமா,”?.

 ”  ரொம்ப பிடிக்கும் பல்லவி,  முதலில் குழந்தைகளை தூக்க  பயப்படுவேன், என் தங்கை பையன் சூர்ய ஜித்தை  குழந்தையிலே தூக்கி, தூக்கி ,  பழகிடுச்சு,.

 பல்லவிக்கு  சூர்ய ஜித்  என்ற கேட்கவுடன் எங்கேயோ கேட்க மாதிரி இருக்கே,  இந்த பேரை என்று யோசிக்க.

ஜுலி வந்துவிட்டாள் இருவரையும் சாப்பிட அழைக்க, அவளின் வீட்டு பணி பெண்களிடம் குழந்தைகளை ரூம்பிற்கு அழைத்து செல்ல சொல்லி விட்டு, விக்ரமை அழைக்க, சாரி ஜுலி  பேபி என்றவன், பல்லவியோடு  இரவு டின்னர் சாப்பிட போறேன், டுடே பல்லவி பெர்த்தடே என்று சொல்ல,.

 ” ஹே   பல்லவி ஹாபி பெர்த்தடே  என்று வாழ்த்துக்கள் சொல்லி, இருவரையும் என்ஜாய் அவர் டின்னர் என்று அனுப்பி வைத்தாள்.

பல்லவியை அழைத்து கொண்டு கார் பார்கிங் வர.

”  என்ன?  அவசரம் சார், இன்னும் கொஞ்சம் நேரம் அங்கே இருந்துருக்கலாம்”.

”  ஏன் பல்லவி”?.

”  உங்க பிரெண்ட்ஸ் எல்லாம் வந்து இருக்காங்க, அங்கேயே டின்னர் முடிச்சுட்டு, நான்  என் வீட்டுக்கு கிளம்பி  இருப்பேன்.”

 ” அதுக்கு தான் உன்ன  கூட்டிட்டு வந்தேன். “

” என்ன சார். “

”  இன்னைக்கு  என்ன நாள், மை ஸ்வீட் ஹார்ட் பல்லவியோட பிறந்த நாள், அத நாம  கொண்டாட வேண்டாமா,,? “.

 ”  நம்ம காலையில இருந்து அத தானே  பண்ணிட்டு  இருக்கோம்  சார். “

  ” இன்னும் இருக்கு பல்லவி, ஒரு ஸ்வீட்  சர்பிரைஸ்”  என்று  காரில் நீண்ட நேரம் பயணம்  செய்ய.

அவளோ   “சார்  எங்கே போறோம்?

எப்போ வரும் என்று பேசிக்கொண்டே இருந்தவள் தூங்கி இருந்தாள்.

  ”  நன்றாக தூங்கிக்கொண்டு இருந்தவளை,   ” பல்லவி, பல்லவி” என்று விக்ரம் அவளை எழுப்ப,.

 “என்ன  சார் வந்துருச்ச  என்றவள் மெல்ல எழுந்தாள் , கண்களை திறந்து பார்க்க   ஒரே வெளிச்சம், பார்க்கு இடங்களில் எல்லாம்  மின் விளக்குகளாக மின்ன, கீழே இறங்கி பார்த்தாள், அவள் நீண்ட நாள்களாக போகவேண்டும் என்று நினைத்த, லண்டன் பிரிச் மேலே நின்று இருந்தாள். இரவு நேரம் கீழே தேம்ஸ் நதி  ஓடிக்கொண்டு இருக்க,  பெரிய மேம்பாலத்தில் வேகமாக செல்லும் வாகனங்கள்,  நின்று பார்க்கும் இடத்தில் காரை நிறுத்தி இருந்தான் விக்ரம்.

அவள் ஒவ்வொன்றை ரசித்து பார்த்ததை  பார்த்து இருந்தவன், “பிடிச்சுருக்கா பல்லவி”.

 ” உம் என்று தலையாட்டியவள் தாங்யூ சார்”   என்றாள், ரொம்ப நாளா ஆசைப்பட்டேன் சார் இங்கே வரனுமுன்னு, நீங்க கூட்டிட்டு வந்துடீங்க,  என்று அவனை  நன்றியோட பார்க்க.

“என்னை பார்க்காம, உனக்கு பிடிச்சத பாரு  ”  என்க.

 நீண்ட நேரமாக தேம்ஸ் நதியையும், நதியை சுற்றி இருப்பதை பார்த்து இருந்தவளை, ” போலாமா பல்லவி ஆசை தீற பார்த்தாச்சு. “

“கொஞ்சம்  நேரம் சார்”   என்றவள் சிறிது நேரம் பார்த்து விட்டு, ”  “போலாம் சார்”  என்று இருவரும் கிளம்ப,.

” என் வீட்டுக்கு   போறோமா சார்”.

 ” இல்ல பல்லவி வா ,  நேர்ல பாரு” என்று 10  நிமிடம்  காரில் பயணம் செய்தவர்கள்,  பின் இறங்கி நடக்க வைத்தவன், தேம்ஸ் நதிக்கு அழைத்து வந்துதிருந்தான்.

 ” எங்கே   போறோம்” என்றவள் விக்ரமனின் பின்னாடியே  வந்தவள். நதியை  பக்கத்துல இருந்து பார்க்க போறோமா  என்று  அவனிடம் கேட்க, ” இல்ல பல்லவி   கப்பல்ல போறோம், “

 “என்னது  என்று கண்களை விரித்து!   பார்த்தவள் அந்த சிப்புலீயா போறோம் என்று  சந்தோஷச பட்டவள், விக்ரமனின்   கைகளை பிடித்து கோர்த்து கொண்டவள் போலாம் போலாம் என்று சிறுகுழந்தை போல் குதுகளித்தவளை,”  பாருடா”  என்றவன், பல்லவி தன் கைகோர்த்தை பார்த்து,   நிற்க.

”  வாங்க  சார் போலாம் ”  என்று அவனை இழுத்து சென்றாள் பல்லவி.

 இருவரும் கப்பலில் ஏறி தேம்ஸ் நதிகரையை சுத்தி வர.

அந்த கப்பலில் நிறைய ஆட்கள் இருந்தனர், கப்பலில் மேல் தளத்தில் உள்ள மேடையில் சில கலைஞர்கள், பாட்டு பாடி ஆடி என்று சந்தோஷமாக இருக்க, பல்லவி  விக்ரமனின் கையை விடாது பிடித்தபடியே  நதியை சுத்தி பார்த்து கொண்டே வர.

 விக்ரம் பல்லவியை பார்த்து ரசித்திருந்தான்.,

  நதியின்  குளுமையான காற்று வீச , பல்லவி விக்ரமனின் கையை இருக்கி பிடித்துகொள்ள.

”  என்ன பல்லவி  குளிறுதா”  என்றவன்,”வா”  என்று தன்னுடைய ஓவர் கோர்டை அவளிடம்  தர.

அதை வாங்கி அணிந்து கொண்டவள். ”  தாங்யூ விக்ரம்” என்றாள்.

 நல்லா  முன்னேற்றம் தான் என்றான் விக்ரம்.

 என்ன என்பது போல் பார்த்தவளை,  ”  விக்ரமுன்னு கூப்பிட்டீயா  அத சொன்னேன்.

காற்று அதிகமாக வீச, பல்லவியின் முடி காற்றில் அலை பாய, அதை அவளின் காதோரம் ஒதுக்கி  விட்டவனின், கண்னை பல்லவி  ஆசையாக பார்க்க,.

அந்த  கண்கள் அவனிடம்  ஏதோ சொல்ல வர, அதை அவன்  புரிந்துக்கொண்டான்.

பல்லவி திரும்பி நின்று கொண்டாள்.

”  பல்லவி”  என்றான் விக்ரம்.

திரும்பி நின்று கொண்டே   “சொல்லுங்க   விக்ரம்” என்றாள்.

”  என்னை திரும்பி பாரு பல்லவி” என்றான்.

”  இவ்வளவு நேரம்  உங்களை தானே பார்த்துட்டு  இருந்தேன்.

”  இப்போ பாரு பல்லவி”  என்றான்.

அவளோ அவனிடம் பதில் சொல்லாமல் நழுவி ஓட.

இரண்டு எட்டில் பல்லவியின் கையை பிடித்தவன், ” என் முகத்தை  பாரு பல்லவி”  என்றான் மறுபடியும்.

முடியாது என்பது போல் அவனுக்கு முதுகு காட்டி  நின்றவளை.

”  நீ   பாக்குறீயா இல்ல, நான் உன்க்கிட்ட  வரவா ”  என்றவனை.

” இல்லை ”  என்றவள், அவனின் முகத்தை பார்க்க முடியாமல் தவிக்க.

”  தெரிஞ்சு போச்சு”  என்றான்.

”  என்ன தெரிஞ்சு போச்சு ”  என்றவள். அவனின் முகத்தை ஒரு நொடி  பார்த்து, தலை குனியா.

”  நீ சொல்லாதத  உன் கண் சொல்லியிருச்சு  பல்லவி  என்றான்”.

”  என்ன?  சொல்லுச்சு  அப்படி ஒன்னும் சொல்லல்லை”  என்றாள்.

 ” சொல்லுச்சு பல்லவி”என்றான்.

”  என்ன?  சொல்லுச்சு சொல்லுங்க பார்க்கலாம்”.

”  சொல்லவா, ”  என்றவன் “இந்த விக்ரமனை எனக்கு ரொம்ப பிடிக்குமுன்னு  சொல்லுச்சு, உன் கண்ணு  பல்லவி.”

”  இல்லை அப்படியெல்லாம் இல்லை, என்றவளை.

”  பொய் சொல்லாத பல்லவி”.

 ” நான் ஏன்   பொய்  சொல்ல போறேன் “.

” அப்போ  நேர  என் முன்னாடி நின்னு, என் கண்ண பார்த்து நாம பிரெண்டாவே  இருக்கலாமுன்னு  சொல்லு  பார்ப்போம்”.

  அவளோ, அவளால்  முடியாது  என்பது போல்  அவனை தவிர்க்க.

அவளின் முகத்தை தன்  முகம் பார்க்க வைத்தவன், ” சொல்லு”  என்றான்.

அவனின் கண்களை பார்த்தவள், “விக்ரம்” என்றவளின்  குரல் கமர, அவள் கண்கள் சொல்லிய சேதியில்,.. அவளை  அணைத்தவன் ”  நீ எதுவும்  சொல்ல வேண்டாம் ”  என்றவன்.

அவளின் முதுகை தட்டி கொடுத்தவனின் சட்டையில் அவளின் கண்ணீர்  நனைத்தது அதை உணர்ந்தவன்.

 அவள் தன்னிடம்,  அவள் கொண்ட நேசத்தை  கூட சொல்ல முடியாத அளவுக்கு, அவளின் பயத்தை அறிந்தவன்.

” நீ ஒன்னும் சொல்லாதே  பல்லவி, நான் இருக்கேன் பாத்துக்கிறேன் என்று அணைத்திருந்தான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!