Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதோ இதோ என் பல்லவி

Itho Itho En Pallavi 6

இதோ.. இதோ.. என் பல்லவி

அத்தியாயம் – 6



Advertisement

 சிறிது நேரம் பல்லவியை அணைத்திருந்தவன், நம்ம இறங்குற  இடம்  வந்துருச்சு, “வா பல்லவி  நாம வேற  சின்ன  படகுல, நம்ம போற இடத்துக்கு போகனும் வா”..

Advertisement

Advertisement

”  எங்கே போறோம் “.

 ”  இங்கே பக்கத்துல தான் வா, படகுல போறோம் நதி யோரம் எங்களுக்கு  ஒரு வீடு இருக்கு அங்க தான் போறோம். “

Advertisement

”  ஏன் கப்பல் உள்ள போகாதா”?.

”  கப்பல் போக முடியாது பல்லவி, சின்ன படகு மாதிரி தான்   போக இடம் இருக்கும், அதனால  நாம ஒரு 20  நிமிசம்  படகுல போனா அந்த ஔஸ்  வரும், வா ”  என்று அழைத்து சென்றான்.

கப்பலில்  இருந்து கீழே இறங்கியவர், சின்ன படகில் ஏற பார்த்தனர், அங்கே மூன்று பேர் போகிற, வாக்கில் சிறிய  படகு போல் நீள வாக்கில் வைத்திருக்க, விக்ரம் மூன்று பேர் போகிற மாதிரி  படகை புக் பண்ணிவிட்டு, இவளை வா என்று அழைக்க.

படகு  தண்ணீரில் ஆடுவதை பார்த்தவள்,  ”  நான் வரமாட்டேன் எனக்கு பயமா இருக்கு, படகு ஆடுது, நீங்களே உங்க வீட்டுக்கு போயிட்டு வாங்க, நான் வரலை “

”  வா பல்லவி நான் புடிச்சுக்கிறேன்” என்று அழைக்க.

”  நோ விக்ரம்  படகு தண்ணீல ஆடுது, நான் ஏறுனா இன்னும் ஆடும், எனக்கு பயமா இருக்கு, நீச்சலும் தெரியாது, நான் படகில் வரல என்று கப்பல் இருக்கும் பக்கம் நடக்க. “

”  பல்லவி என்ன?  பல்லவி, இதுக்கு போய் ஏன் பயப்படுற, முதலில் ஆடும், மூவ் ஆன  ஒடனே, சரியாகிரும் வா,  பல்லவி படகில் ஏறு ”  என்று அழைக்க.

”  நோ, நான் வரலை ”  என்று கப்பல் இருக்கும்  இடத்தை நோக்கி நடந்தவளை. “

படகில் இருந்து குதித்தவன் “பல்லவி வா”  என்று  கைபிடித்து இழுத்து வந்தான்.

”  விக்ரம், விக்ரம்  படகு  ரொம்ப  ஆடுது தண்ணீல, எனக்கு பயமா இருக்கு, நான் வல்ல  என்னை  விட்டுடுங்க, பிலீஸ்  என்று கெஞ்சியவளை கை பிடித்து இழுத்துவந்தவன், அவன் படகில் ஏறி இவளை படகில் ஏற்ற, ”  விக்ரம், விக்ரம் பயமா இருக்கு விக்ரம் என்று பயந்து கொண்டே மெல்ல படகில் ஏறினாள்.

 இவள் ஏறியவுடனே படகு நன்றாக இந்த பக்கம், அந்த பக்கம்  என்று படகு ஆட, ஐயோ நான் செத்தேன், யாராவது என்னைகாப்பாத்துங்க, ஐயோ என்று விக்ரமனை பிடித்து கொண்டு கத்தியவளை.

விக்ரமுக்கு இவள் பண்ணும் அலம்பல்  தாங்க முடியாமல் சிரிக்க.

படகை இயக்குபவர் கூட இவளை பார்த்து சிரித்தார், ஆங்கிலத்தில் சின்ன குழந்தை மாதிரி பயப்படுறாங்க என்று அவரும் சேர்ந்து சிரிக்க..

“அங்க  பாரு  பல்லவி  வெள்ளக்காரன்  கூட உன்னை  பார்த்து சிரிக்குறார்.”

  தன் மடிமீது அமர்ந்திருந்தவளை ”  கொஞ்சம் எறங்கி கீழே  உட்காருறீயா பல்லவி”.

” உம் மாட்டேன் கீழே விழந்துருவேன், என்று அவன் மடி மீது இருந்தவளை.

”  நீ திருச்சி பொண்ணு தானே, அங்கே நிறைய ஆறு எல்லாம் இருக்கும் தானே”..

”  ஆறு எல்லாம் திருச்சியில் இருக்கு, எனக்கு தண்ணீனா பயம், அது மட்டும் இல்ல எங்க வீட்டு ஜோசியர் சொல்லி இருக்காரு  எனக்கு தண்ணீயில கண்டம் இருக்காம், தண்ணீல போறத தவிர்க்கனுமாம்”…

”  என்ன பல்லவி இந்த காலத்துல இப்படி பேசுற பயப்படாம வா”  என்றவன், ‘அங்கே   பாரு ”  என்க..

அவர்கள் எதிர் பக்கத்தில்  ஒரு சிறிய படகில், ஒரு ஆங்கிலேய ஜோடிகள் இருவரும் தோள் அணைத்து, படகு சவாரியை ரசித்து  என்ஜாய்  பண்ணி கொண்டு வருவதை  பார்த்தவர்கள்.

”  பாரு எவ்வளவு  ரசிச்சு போறாங்க, நீயும்  தான்  இருக்கீயே பயந்து, பயந்து “என்று பல்லவியை திட்ட..

”  ஏன் விக்ரம் திட்டுறீங்க, எனக்கு தண்ணீனா மட்டும் தான் பயம், வேற எந்ந பிரச்சனையும் இல்லை”…

”  ஆமாம், ஆமாம் உனக்கு வேற எதுவும் பயம் இல்ல, கொஞ்சம் தள்ளி உட்காரு  பல்லவி”  என்று அவளை படகில் தள்ளி உட்கார வைக்க…

”  ஐயோ நான் விழுந்துருவேன்”  என்ற விக்ரமனின் மேல் தொங்கி கொண்டு வந்தாள்…

” நான் உன்னை கீழே விழ விடாமாட்டேன் பல்லவி, ”  நல்ல சுத்தி பாரு எவ்வளவு அழகான  பில்டிங்”  என்று காண்பிக்க.

”  நான் சுத்தியும் பார்க்கல, ஒன்னும்  பார்க்கல, எனக்கு என் உயிர் தான் முக்கியம், என்னை முதலில்  இந்த படகில் இருந்து  கரையில், இறங்கி  விடுங்க அது போதும்” என்று பேசிக்கொண்டே வர, இவர்கள் பக்கத்தில் ஒரு  பெரிய படகு மோட்டார் உதவியோடு  வேகமாக செல்ல, இவர்கள் படகு வேகமாக ஆடியது.

”  ஐயோ   என்னை  காப்பாத்துக்க, நான் செத்தேன்  என்று கத்தியவளை “..

” பல்லவி கத்தாத பல்லவி” என்றான்..

”  விக்ரம்,  இங்கே பாருங்க தண்ணீ  பூராம் என்  மேலே தெரிச்சு போச்சு, படகு உள்ளேவும் தண்ணீயா இருக்கு,  என்ன மட்டும் பயப்படாத சொன்னீங்க  இப்போ பாருங்க எவ்வளவு தண்ணீ,என்று அவனை ஒரு பாடு படுத்தி எடுத்து விட்டாள்…

 ”  அதோ பாரு வந்துருச்சு”  என்று ஒரு ஔசை காண்பித்தான்…

  பல்லவி அப்பாடா வந்துருச்ச,  இதில் இருந்து வேற இறங்கனுமே என்று பயந்து போய் பார்த்தவளை…

”  வா”  பல்லவி என்று அவளை படகில் இருந்து தூக்கி அங்கே  உள்ள ஔசின்  படி  கட்டில்  உட்கார வைத்து  இருந்தான்.

”  தாங்யூ விக்ரம்”  என்றவள்,   ஏன் சார் உங்களுக்கு வீடு கட்ட  லண்டனுல  இடமே இல்லையா, இப்படி  தண்ணீல  தான் வீடு கட்டனுமா”…

” உனக்கு ரொம்ப பிடிக்குமுன்னு  கூட்டிட்டு  வந்தேன் பாரு, நீ பேசுவ”…

” நல்லா  கூட்டிட்டு வந்தீங்க, திரும்பி  இதுல தானே போகனும்” என்று  அந்த படகை காண்பித்து வருத்தப்பட்டவளை…

பார்த்து சிரித்தவன், ” நீ   நல்லா என்ஜாய்  பண்ணுவ  அப்படியின்னு  நெனச்சேன்  பாரு, எல்லாம் வேஸ்ட் வா ”  என்று  ஔசின்  உள்ளே அழைத்தான்..

”  நான்  கொஞ்ச  நேரம்  இப்படி உட்கார்ந்துட்டு   தான் வருவேன், என் ஹார்ட்  பீட் எல்லாம் வேகமாக துடிக்குது, ”  என்று அவளின் நெஞ்சின்  மீது  கைவைத்து, வீட்டின் படி கட்டிலே  அமர்ந்து இருந்தாள்…

”  வா  பல்லவி  உனக்கு  இங்க தான்  டின்னர்  ஏற்பாடு  பண்ணி இருக்கேன், முடிச்சுட்டு நாம  கிளம்பனும், ”  வா ”  என்று அவளை கைபிடித்து  அழைத்து  சென்றான்…

 அந்த  வீடு  மிக  பெரியதாக  இருந்தது, பெரிய, பெரிய  ரூம்புகளாக  இருந்தது,  நீண்ட கற்கள் வைத்து , உயரமாக கட்டிடம் போல் இருந்தது.

பல்லவியை  ஓரு அறைக்கு  அழைத்து  சென்றவன், ரூம்பை திறந்து விட்டு, அந்த ரூம்பில் ஒரு  டேபலின்   மேல்   கவர் இருக்க, அந்த கவரை எடுத்து பல்லவியிடம் கொடுத்தவன்.

 “இதில்  ஒரு ட்ரெஸ் இருக்கு பல்லவி, நீ இதை போட்டு  ரெடியாகு, நானும் போய் ரெடியாகி வர்ரேன், நாம சேர்ந்து டின்னர் சாப்பிட்டு கிளம்பலாம்,  அப்பறம் அது  பாத் ரூம், நீ குளிச்சாலும்  ஓகே, இல்ல ப்பிரஷ்சாகி  ட்ரெஸ்  சேஞ்சு பண்ணிக்கோ, நான் வேற  ரூம் போய்  ரெடியாகி  வர்ரேன்”  என்றவன்…

ரூம்பை லாக்  பண்ணிக்கோ என்று  சென்று விட்டான்..

 கதவை சாத்திவிட்டு  வந்தவள், இந்த  விக்ரம்  காலையிலிருந்து  ஒரே  சர்பிரைசா  இருக்கு,  இது மாதிரியெல்லாம்  நாம  அனுபவச்சதே  இல்ல, விக்ரமனின்  கவனிப்பு அவளுக்கு ஒரு சுகத்தை  தர, அவன் குடுத்து சென்ற கவரை திறந்து பார்த்தாள், வெண்மை  நிறம்  கொண்ட  சேலை  இருந்தது, சேலையின்  வேலை பாடுகள் அழகாய் இருந்தது, சேலையில் எம்பிராய்டரி வெர்க்  நிறைய இருக்க, நடவே சிவப்பு கற்கள்  பதித்ததை  பார்க்க அற்புதமாய்  இருந்தது, அந்த சேலையை வருடி கொடுத்தவள், ரசிகன்டா  நீ , ஒன்னு, ஒன்னையும்  எவ்வளவு ரசிச்சு பண்ணுர  லவ்  யூ விக்ரம் என்று மனதில் அவனை கொஞ்சியவள்.. பாத் ரூம் நோக்கி  சென்றாள்..

ஒரு குளியலை  போட்டவள் உடை அணிந்து போது தான் பார்த்தாள், அந்த சேலையின்  பிளவ்சின் பின்னாடி பார்க்க அது  மிக டீப்பாக இருக்க, ஸ்சீவ் லெஸ் வேற, நல்ல வேளை  பின்னாடி  இழுத்து கட்ட  கயிறு இருந்தது, அதனால் கொஞ்சம் ஈசியாக இருக்க, வேகமாக உடை அணிந்து புடவை கட்டி  ரெடியாகும்  முன்..

 கதவை தட்டும்  ஓசை கேட்க ” 2  மினிட்ஸ்  விக்ரம்  என்றவள், அழகாய் மடிப்பு எடுத்து  கட்டி இருந்தாள்..

கண்ணாடியில் அவளை பார்க்க அவ்வளவு அழகாய் இருந்தது, இந்த   சேலையில்  என்னை பார்த்து  என்ன  சொல்ல  போறாறோ  என்று  தயங்கிய  படியே  வந்து கதவை திறந்தாள்…

 விக்ரமனை  நிமிர்ந்து பார்க்க, அவனுமே  அவளை போலவே  வெண்மை நிற கோர்ட்  சூட்டில் இருந்தவனை  கண் சிமிட்டாமல்  பார்க்க,,. விக்ரமனோ  அவன் அவளுக்காக செலக்ட் பண்ணிய சேலையில்  ஜொலித்தவளை  “யு லுக்  ப்புயூட்டி புல்  பல்லவி ”  என்றவன்,, அவளின் அருகில்  வந்து “கம்” என்று  கைபிடித்து அழைத்து சென்றான்.

  அவனிடம்  தன் கையை கொடுத்தவள், அவனோடு இணைந்து நடந்தாள், வீட்டின்  பின்னே  தேம்ஸ்  நதி ஓடிக்கொண்டு இருக்க, நதி கரையின் பக்கத்திலே  இருவரும்  அமர்ந்து   டின்னர்  சாப்பிட  செட் போட பட்டு இருந்ததை பார்க்க மிக அழகாய்  இருந்தது.

மெல்லிய இசை வேற ஒலித்து  கொண்டு  இருக்க, பல்லவி  இதை எதிர்  பாராதவளுக்கு, ஏதோ சினிமா மாதிரி இருந்தது,..

அவளை அழைத்து வந்தவன், அங்கே  போடப் பட்டு  இருந்த  சேரில் அமர வைத்து  டேபளின்  மீது  இரவு உண்ண டின்னரும், ரெட் கலர் ஸ்டாபெரி கேக் கேன்டில்லோடு  இருக்க,..

விக்ரம் கேன்டீலை  ஏற்றியவன், அதை  ஊதிவிட்டு கேக்கை  கட்பண்ண சொல்ல, அவன்சொல்லியது  போலே செய்ததாள் பல்லவி   , ஹாப்பி பெர்த்தரே பல்லவி என்று அவளை பார்த்து பாட, கட் பண்ணிய கேக்கை அவனுக்கு ஊட்டி விட, அவனும் பதிலுக்கு   ஹாப்பி பெர்த்தடே பல்லவி  என்று  கேக்கை ஊட்டி விட்டு அவளை அணைத்துக்கொண்டவன், சிறிது நேரம் கழித்து அவளுக்கு ஒர்  கிப்ட் கொடுக்க,..

அதை வாங்க  மறுத்தவளை  “ஏன் பல்லவி”   என்றவனை.

”  பயமா இருக்கு விக்ரம்”..? என்றாள்.

” என்ன பயம்”?..

”  ஏதோ கனவு போல் இருக்கு, என்னை சுத்தி வேகமாக எல்லாம் நடக்குற மாதிரி இருக்கு, “..

”  என்ன? வேகமாக  நடக்குது  இன்னைக்கு உன் பெர்த்தடே அதான்  இப்படியெல்லாம்.. “.

”  இல்ல  விக்ரம்  எனக்கு ”   என்றவளை…

 அவளின் உதட்டின் மேலே விரலை வைத்தவன், ”  இன்னைக்கு  நிறைய  பேசிட்டோம்  பல்லவி, கொஞ்சம்  உன் பெர்த்தடேவ  என்ஜாய்  பண்ணு வா”  என்று அவளை டின்னர் சாப்பிட வைத்தான்..

இருவரும்  அமைதியாக   சாப்பிட்டு முடிக்க..

”  போலாமா பல்லவி”  என்றவன், இரு போட்டோ எடுத்துக்கலாம் என்று இருவரும் இணைந்து நின்று போனில் சில போட்டோக்களை எடுத்தனர், போட்டோக்களை பார்த்து கொண்டே”  இனிமே எப்போ இங்க வர போறோமோ,,..?

”  ஏன் விக்ரம் இங்கே வர முடியாதா “?

”  ஆமாம் பல்லவி  இனிமே இங்க வர இரண்டு வருஷம் இல்ல  அதுக்கு மேலே கூட ஆகலாம்”  என்று வருத்தப்பட..

”  நீங்க ஏன் இப்படி சொல்லுறீங்க விக்ரம்.. “

”  இங்கே வா” என்றவன்,  ஏதோ சீரியஸ்சாக  சொல்லுவது  போல், முகத்தை  வைத்து கொண்டு இன்னும் இரண்டு மாசத்துல நான் இந்தியா போயி உங்க அம்மாவை பார்ப்பேன்,.. “

”  உம்  சரி  பார்த்து”  அப்பறம்  என்றாள் பல்லவி.

 ”  அப்பறம் என்ன , உங்க அம்மாகிட்ட சம்மதம் வாங்கி இன்னும் 4  இல்ல 5  மாசத்துல  நம்ம கல்யாணம் நடந்துரும். “

”  உம், அப்பறம்”  என்று அவன் சொல்வதை கேட்டுக்கொண்டு இருந்தாள்,..

”  உம், அப்பறம்   என்ன  கல்யாணம்  நடந்த,   நான் இருக்குற  ஸ்பீடுக்கு  கண்டிப்பா நெக்ஸ்ட்  மந்தே நீ கன்சீவ்வா  ஆகியிருவா… “

”  அப்புறம் என்று முறைத்தவளை.”

”  உம்,  நீ கன்சீவ் ஆன இங்கே வர முடியுமா?  முடியாது,  அப்புறம் பாப்பா பிறந்து கொஞ்சம் பெருசாகி இரண்டு மூனு  வருஷம் ஆகும்முல  இங்கே வர “என்றவனை..

 தன் புடவையை எடுத்து இடுப்பில் சொருகியவள், நான் ஏதோ பெருசா சொல்லுறிங்கன்னு  சீரியஸ்சா கேட்டா, விளையாடுறீங்க என்றவள்,  அவனை  அடிக்க துரத்த,..

 ”  அவனோ நோ பல்லவி, நோ வைலன்ஸ் என்று  பயந்தது போல் ஓட ,  இவளும் அவனை துரத்தி கொண்டு ஓட, இருவரும்  சிறிது நேரம் ஓடி, பிடித்து  விளையாடி விக்ரமனின் தோளில் அடித்தவள், நீங்க ரொம்ப ஸ்பீடா போறீங்க விக்ரம், எனக்கு தான் பயமா இருக்கு…

”  ஆமாம் பல்லவி இப்பவே எனக்கு 29  இயர்ஸ் ஆச்சு, உனக்கு 24  இல்ல 25  இருக்குமுல,,.

” ஆமாம் ”  என்று தலையாட்டியவளை”..

 “இரண்டு பேருக்கும் சரியானா வயது பல்லவி,  கல்யாணம் பண்ணுறதுக்கு  இவ்வளவு ஸ்பீடு இல்லனா  எப்படி மா,,  ஆமாம் பல்லவி என்னை பத்தி நீ ஒன்னும் கேட்கல,?”.

 ”  என்ன கேட்கனும் விக்ரம்”..

” ஐ மீன், நான் என்ன  படிச்சுருக்கேன், என்ன வேலை பார்க்கிறேன் என்று நீ ஒன்னும் கேட்கலயே.. “?

” ஏன் விக்ரம்  எனக்கு மூனுவேல  சாப்பாடு  போட மாட்டீங்களா?   அப்படி  இல்லனாலும்  பரவாயில்லை, நான் உங்களையும் சேர்த்து பாத்துக்கிறேன்,  படிச்சுருக்கேன், வேலைக்கு போறேன், வேற என்ன வேணும், தெரிஞ்சுக்குற  நேரம்  வந்த  தெரிஞ்சுக்கிறேன் ”  போலாமா என்றவளை..

அணைத்துக்கொண்டான் விக்ரம், ”  யூ ஆர், டிப்ரண்ட் பல்லவி, ஐ லைக் இட்,  சோ மச் டா என்று, அவளை  அழைத்து வந்த படியே, அவளின் வீட்டின் அருகே விட.. “

”  பாய் ”  என்று சொல்லியவளால்  காரை விட்டு  இறங்க முடியவில்லை..

  ” என்ன  பல்லவி,?  என்றவனிடம்.

”   எல்லாம் நல்ல படியா நடக்கும் தானே விக்ரம் “என்றவளின்,  கையை பிடித்துக்கொண்டவன்.  “நான் இருக்கேன்டா, எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன் நீ நிம்மதியா தூங்கு, சரியா என்று அவளின் கன்னத்தை தட்ட,,.

 ” பாய்   விக்ரம், குட் நைட்” என்று காரில் இருந்து இறங்கினாள்…

 ”  கால் பண்ணுறேன் பல்லவி என்று கிளம்பினான். “

  தினமும் பல்லவிக்கு  காலையிலும், மாலையிலும் போனில் அழைப்பான் விக்ரம், இருவரும் போனில் நன்றாக பேசிக்கொண்டனர்..

 நாட்கள் வேகமாக செல்ல, எல்லா  வார விடுமுறையற்று காலையிலே  வந்து பல்லவியை அழைத்து சென்று விடுவான் விக்ரம்,  பல்லவி இருவரும் லண்டனை சுத்தி வந்தார்கள், அவள் பார்க்காத  இடங்களுக்கு அழைத்து சென்றான்,..

பல்லவிக்கு  ஆபிஸ்சில் லீவ்  என்றாள் , விக்ரமிடம்  சொல்லிவிடுவாள், இருவரும் சேர்ந்து  காரில் சென்று வருவார்கள்..

அப்படி ஒரு முறை சென்று  வரும் போது,  பல்லவியை  வீட்டில் விட்டு காரில் சென்றுகொண்டு இருந்தவன், காரின்னுள் பல்லவியின் ஹேன் பேக்  இருப்பதை பார்த்தவன்,, அவளுக்கு கால் பண்ணி   “வெளிய வா,   பல்லவி உன் பேக் காரில் இருக்கு  என்க..

”  ஓகே விக்ரம் என்றவள், சிறிது நேரம் கழித்து கார் சத்தம் கேட்டு வெளியில் வர, விக்ரமனின்  கார் நின்று இருந்தது..

விக்ரமிடம் யாரோ  நின்று பேசுவது போல் தெரிய..

 யாரு என்று பார்த்தாள், ஞானதுரை சித்தப்பா, சித்தப்பா என்று அருகில் வந்தாள் பல்லவி..

 ஞானதுரை  பல்லவியை பார்த்து   “பல்லவி வாம்மா,  என்றவர் இவர்தான் நம்ம ஐஸ்வர்யாவை கல்யாணம் பண்ண போற மாப்பிள்ளை, விக்ரம் ஜித்,  அன்னைக்கு கல்யாண வீட்டில் பார்த்தோமே ஞாபகம் இருக்க என்றவர்,, விக்ரமிடம் ஏதோ பேச..

 சாக் அடித்தது போல், நின்று இருந்தாள் பல்லவி….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!