Skip to content
Post Views: 1,295
“திவ்யா அக்கா சீக்கிரம் வாங்க. பஸ் போக போகுது” என்று சொல்லை கேட்டு வேகமாக ஓடி வந்து பஸ்ஸின் கம்பியை பிடித்தாள் அவள். சுண்டினால் ரத்தம் வரும் அளவிற்கு சிவந்து இருந்த தனது முகத்தினை அழுத்தி துடைத்து, ஓடி வந்து பஸ் ஏறியதால் படபடக்கும் நெஞ்சினை சமாதானம் செய்யும் விதமாக கண்ணை மூடி மூச்சினை இழுத்து விட்டு தனது பெரிய கண்களை திறந்து பச்சரிசி பல் தெரிய தனது தம்பியினை பார்த்து புன்னகைத்தாள் திவ்ய பாரதி. அவள் பாரதி கண்ட புதுமைப் பெண்ணா என்று கேட்டால் இல்லை. இப்போது நடக்கும் கொடுமைகளை கண்டு தனது மனதுக்குள் திட்டிக் கொண்டு கடந்த செல்லும் சராசரியான பெண்களில் இவளும் ஒருத்தி. அவளுக்கும் மத்த பெண்களுக்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால் பிரமன் தனது கலைத்திறமையை அவள் உடலில் அதிகமாக காட்டியுள்ளனோ என்று வியக்க வைக்கும் அழகிய சிலை அவள்.
“ஏன் கா எவ்வளவு நேரம் இந்த பஸ் போனா அடுத்த பஸ் 2 மணி நேரம் கழிச்சி தான் வரும்னு தெரியாதா உனக்கு”என்றான் கோவமாக அவளுக்கு மட்டும் கேக்கும் விதமாக சுபாஷ்.
அவளின் தம்பி ஆனால் தற்போது அவளை காக்கும் தகப்பனாக இருந்து வருகிறான்.
அவன் சொன்னதை கேட்டு அதிகாலையில் பூத்த பன்னீர் ரோஜாப்பூ போல இருந்த அவள் முகம் வாடிய ரோஜா போல மாறியது.
Advertisement
அவளின் முகத்தை பார்த்து தம்பிக்கு உடனே மனம்வாடி, “சரி உன்னை எதுவும் சொல்லலக்கா முகத்தை அப்படி வச்சிக்காத. லைட்டா எதுவும் சொல்ல கூடாது உடனே முகம் அப்படியே வாடி போயிருமே சரி மேல வாக்கா” என்றதும் பளிச்சென்று மாறிய அவளின் முகம், “ தேங்க்ஸ் டா தம்பி” என்று அவன் அவளுக்காக பிடித்து வைத்திருந்த இருக்கையில் போய் தனது தோழி கீதாவுடன் அமர்ந்தாள் பாரதி.
“அது எப்படி டி எல்லா திருட்டுத்தனமும் பண்ற மூஞ்ச மட்டும் எப்படி பச்ச பிள்ளை மாதிரியே வெச்சி இருந்து எல்லாத்தையும் தப்பிக்க”என்றாள் கீதா.
“வேற என்னடி பண்ண சொல்ற சில விஷயங்களை படிக்கும்போது மட்டும் தான் பண்ண முடியும். இப்ப என் தம்பி கிட்ட போய் நான் டென்னிஸ் விளையாடிட்டு இருந்தேன் அதனாலதான் லேட்டு அப்படின்னு சொல்ல முடியுமா. இல்ல பசங்கள அவங்களுக்கே தெரியாம பாக்குறது என்னோட பொழுதுபோக்கு அத போய் அவன் கிட்ட சொன்னா அவன் புரிஞ்சுக்கவா போறான்.அதனாலதான் அவங்க திட்டும்போது முகத்தை பாவமா வச்சிக்கிறேன் அத பார்த்துட்டு அவங்களும் திட்டாம போயிடறாங்க இதுல என்னை ஏன் டி தப்பு சொல்ற” என்றாள் பாரதி
Advertisement
“அது சரி மா நான் உன்ன ஒரு தப்பும் சொல்லல போதுமா. அது எப்படி சின்ன பசங்களிலிருந்து பெரிய ஆளுங்க வரைக்கும் எல்லாத்தையுமே நின்னு வேடிக்கை பார்க்க ”
Advertisement
“அது உனக்கு சொன்னா புரியாதுடி பசங்க எல்லாம் நார்மலா அவங்களுக்குள்ள பேசிட்டு இருப்பாங்க. திடீர்னு அப்போ பாத்து பொண்ணுங்க கிராஸ் ஆனாங்கன்னு வச்சுக்க. அப்ப பொண்ணுங்கள பார்த்து ஒரு மாதிரி ஒரு சீன் போடுவானுங்க பாரு. அதுல இருக்க காமெடி உனக்கு தெரியாது. அதுவும் அவங்களுக்கு பிடிச்ச பொண்ணு வந்தானா போடுவாங்க பாரு ஒரு சீனு ஐய்யய்யோ அதெல்லாம் நின்னு அவங்களுக்கே தெரியாம வாட்ச் பண்ண மட்டும் தான் கண்டுபிடிக்க முடியும்”
“உன்ன கூட தான் பார்த்து நிறைய பேர் சீன் போடுறாங்க அதையே நீ மட்டும் ஏன் நீ கண்டுக்காம இருக்க. அது ஏன் அவங்களுக்கே தெரியாம பார்க்க நீ நேரா பார்க்க வேண்டியது தானே”
“ஏன் டி நான் நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா. ஒரு பையனை நேருக்கு நேர் நான் பார்த்தாலே அவனை லவ் பண்றேன்னு நினைச்சு பின்னாடி சுத்த தொடங்கிடுவானுங்க. இதுல உனக்கு அவங்க போடுற சீனை பார்த்து அப்படியே மயங்கி நின்னேன்னு வச்சுக்க உடனே தூக்குடா இந்த செல்லத்தை தூக்கிட்டு போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த அளவுக்கு இப்போ உள்ள பசங்க எல்லாம் கெட்டுப் போய் இருக்கானுங்க. இதுல சின்ன பசங்க பெரிய பசங்க ஏன் வயசான பெரியவங்க வரைக்கும் எல்லாம் ஒரே கேரக்டர் தான். ஒரு பொண்ணு அவங்கள பார்த்து லைட்டா சிரிச்சு அவங்க கிட்ட பேசிட கூடாது உடனே அவங்களுக்கு அவ தப்பான பொண்ணு தான் அவளை எப்படியாவது கரெக்ட் பண்ணி அவங்களுக்கு தேவையானத அவகிட்ட இருந்து எடுத்துக்கணும் இது மட்டும் தான் அவங்களுடைய குறிக்கோளா இருக்குமே தவிர அவளும் நம்மள மாதிரி ஒரு மனுஷி தான் அவளுக்கும் ரசிக்கிற தன்மை இருக்கும் அப்படி எல்லாம் அவங்க புரிஞ்சுக்க மாட்டாங்க அதனால நான் அவங்களுக்கு தெரியாம பாத்துக்குறேன் சரியா”
Advertisement
“அதுவும் கரெக்ட் தான். நியூஸ் சேனல் பார்த்தாலே தினமும் ஒரு கற்பழிப்பு அதுவும் அஞ்சு வயசு குழந்தைங்க ரெண்டு வயசு குழந்தைங்க ஏன் 60 வயசு பாட்டி வரைக்கும் அவங்கள இவங்க பாக்குற தன்மை எப்படி இருக்கும்னு நினைச்சாலே தூக்கம் வராது போல”
“இப்பல்லாம் எந்த பசங்க பொண்ணோட கண்ண பாத்து பேசுறாங்க அவங்களுக்கு எல்லாமே கீழே எப்படி இருக்கு அப்படிங்கறது தான அவங்களோட நினைப்பு . முன்னாடி எல்லாம் மாமா பொண்ணு அத்தை பொண்ணு மட்டும் கிண்டல் பேசிகிட்டு சைட் அடிச்சிட்டு இருந்தாங்க. இப்ப அக்கா தங்கச்சி ஏன் அம்மா கூட அவங்களுக்கு எப்படி தெரியுறாங்கன்னு எனக்கு புரியவே இல்லை. அப்படி என்ன உங்களுக்கெல்லாம் ஒரு சுகம் தேவைப்படுதுன்னு புரியல ஒருத்தன் தன்னோட அஞ்சு வயசு மகளை கற்பழிக்கிறான் அப்போ இவ்ளோ நாள் அந்த குழந்தையாக எப்படி பார்த்தான். அவன் கையில அந்த குழந்தையை எப்படி இருந்திருக்கும். நினைச்சு பாரு அந்த பச்சை பொண்ணுக்கு நம்ம அப்பா நம்மள என்ன பண்றானு கூட தெரிஞ்சிருக்காது அப்படி என்ன இவங்களுக்கெல்லாம் ஒரு இது கேக்குது எனக்கு புரியவே இல்லை”
“இப்பயெல்லாம் பொண்ணுங்கள பொண்ணுங்களாவா பாக்குறாங்க. அவங்களோட இச்சைக்கு பயன்படுத்துற ஒரு போதப் பொருளை தான பார்க்குறாங்க. எல்லாம் இப்ப வர்ற கஞ்சா, குட்கா, சரக்கு எல்லாத்தையும் தின்னு அவங்க மூளை மழுங்கிட்டு அதனால அவங்க கிட்ட இருந்து நம்ம எந்த உதவியும் பெற முடியாது நம்மள நம்மலே காப்பாத்திட்டா தான் உண்டு”
“அது சரி தான் ஆனா இதுல ஓவரா பசங்களே நம்ம குத்தம் சொல்ல முடியாது. பொண்ணுங்களும் அப்படித்தான் இருக்காங்க. இதில் என்ன ஒரு காமெடினா தப்பு பண்ற எல்லா பெண்களும் சேப்பா தான் இருக்காங்க. ஆனா ஒன்னும் தெரியாத அப்பாவி பொண்ணுங்க தான் இவங்ககிட்ட மாட்டிட்டு படாதபாடு பட்டு கடைசில செத்து போறாங்க”
“அதுவும் சரி தான் டி தப்பு பண்ற ஆணா இருந்தாலும் சரி பெண்ணா இருந்தாலும் சரி எந்தவித பாகுபாடும் காட்டாம தப்பு பண்ணினாங்கனு நிரூபிக்கப்பட்டனா உடனே இவங்களுக்கெல்லாம் தண்டனை கொடுக்கணும்”
“என்ன தண்டனை டீ கொடுக்க சொல்ற. இவங்க கொடுத்தாங்கலே 60 வயசு கிழவனுக்கு அவன் வாழ்நாள் வரைக்கும் ஆயுள் தண்டனை இதெல்லாம் ஒரு தண்டனையா. ஆயுள் தண்டனை தூக்கு தண்டனை இதெல்லாம் ஒரு தண்டனையே கிடையாது என்ன பொருத்தவரைக்கும். தப்பு பண்ணவங்க ஆணா இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி 40 வயசுக்குள்ள இருக்காங்களா அவங்களுக்கு கொண்டு போய் கொட்டும் பனியில நம்ம ராணுவ வீரர்கள் இருக்காங்களே அங்க போய் போடுங்க. பாவம் அவங்க ஏன் தன்னோட உயிர் இந்த தேசத்துக்காக கொடுக்கணும். இவங்களாம் வாழ்ந்து என்ன பண்ண போறாங்க பேசாம இவங்கள கொண்டு போய் அங்க போட்டு அவங்க சுட்டுக் கொல்லட்டும்னு விட்டுற வேண்டிய தான”
“அதுவும் சரிதான் அப்போ இந்த 40 வயசுக்கு மேல இருக்குறவங்கள”
“வெரி சிம்பிள் அவங்க எல்லாம் வாழ்ந்து என்ன பண்ண போறாங்க. அவங்கள எல்லாம் இப்ப புதுசா தயாரிக்கிற மருந்து யூஸ் பண்ணி பாக்குறதுக்கு ஏதாவது ஒரு நாயோ குரங்கோ இல்ல ஒரு ஆளு தேர்ந்தெடுப்பாங்க இல்ல. அவங்களுக்கு பதிலா இவங்கள அனுப்பி டெஸ்ட் பண்ண வேண்டியதுதான்” என்றாள் அசால்டாக பாரதி.
அவளை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த கீதா “வெரி டேஞ்சரஸ் லேடி டி நீ இனிமே உன்கிட்ட கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டன்ட் பண்ணனும் போல” என்று இருவரும் சிரித்து பேசிக்கொண்டு இருக்க
“நம்ம இறங்க வேண்டிய ஸ்டாப் வரப்போகுது ரெண்டு பேரும் என்ன பேசிட்டு இருக்கீங்க. இறங்குங்க எப்ப பார்த்தாலும் சிரிச்சு பேசிகிட்டு அப்படி என்னதான் பேசுவீங்களோ” என்று கோபமாக அவர்களுக்கு மட்டும் கேட்கும் விதமாக திட்டினான் சுபாஷ்.
“ஏய் உண்மையாவே இவன் உனக்கு தம்பி தான இல்ல அண்ணனா எப்ப பார்த்தாலும் உன்னை திட்டிட்டே இருக்கான்” என்றாள் கடுப்பாக கீதா
“ஹேய் அவனுக்கு என்ன யாரும் எதுவும் சொல்லிடக்கூடாது அதனாலதான் என்ன எப்பவும் திட்டிட்டே இருக்கான். அடுத்தவங்க ஏதாவது சொல்லி நான் கண் கலங்கி நின்னுட்டா அத அவனால பார்க்க முடியாது. அதான் யாரும் எதுவும் சொல்றதுக்கு முன்னாடி அவனே சொல்லிடுறான். அவன் திட்டுறத மட்டும் பாக்காத அதுக்குள்ள இருக்கிற என் மேல அவன் வைச்சி இருக்குற பாசத்தை பாரு. எங்க அப்பா இறந்ததுல இருந்து அவன் எனக்கு தம்பியா இல்ல ஒரு தகப்பனை போல என்னை அவன் பாத்துக்கிறான். இன்னும் அவனுக்கு ஒரு எக்ஸாம் தான் இருக்கு அத முடிஞ்ச உடனே பார்ட் டைம் எதாவது வேலை பார்க்கலாம்னு தேடிட்டு இருக்கான். நல்லா படிக்கிற பையன் இப்போ அவனுக்கு படிப்போட பணம் சம்பாதிக்க தான் குறியா இருக்கான். இப்போதைக்கு அவனுக்கு என்னையும் எங்க அம்மாவையும் கண் கலங்காம பார்த்துக்கணும் இது மட்டும்தான் அவன் மைண்ட்ல ஓடிட்டு இருக்கு அதனால அவனை எதுவும் குறை சொல்லாதடி என்னால தாங்க முடியாது” என்றாள் கண் கலங்க
“சரிம்மா நீ கண் கலங்காத உன் தம்பிய இல்ல இல்ல உங்க அப்பாவை இனி நான் எதுவும் சொல்லல போதுமா” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது அவர்கள் இருக்க வேண்டிய ஸ்டாப் வர பேருந்தில் இருந்து இறங்கி தனது வீட்டை நோக்கி நடந்து சென்றனர்.
error: Content is protected !!