Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vannam Theda Vaarayo

தேடல் 28

அவர்களது இரண்டாம் லெவள் போட்டியின் நாலும் வர இருந்தது.

நேற்று முழுவதிலும் தன் குடும்பத்தினருடன் இருந்த சந்தோஷம் அவளை மகிழ்வாக இருக்க வைத்தது.

காலை எழுந்ததில் இருந்து அவளது அன்னை அவளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தார்.. இந்த அன்பில் கரைந்தவளுக்கு அந்த நிமிடம் கூட சூர்யாவின் முகம் மேக கூடத்தில் இருந்து மின்னல் வந்து மறைவது போல் அவளின் மனதில் கலர் ஃபோட்டோவாக வந்து மறைந்தது…

அவளுக்கு ஏன் என்று புரியவில்லை. எதற்காக தன் மனம் அவனை நாடுகிறது..?? ஒவ்வொருவரின் செயலும் ஏன் அவனையே ஞாபக படுத்துக்கிறது‌..??அவள் மனம் போன போக்கில் யோசித்துக் கொண்டு அதை கலைக்கும் விதமாக உதய் அவளுக்கு அழைத்திருந்தான்.



Advertisement

திரையில் உதயின் பெயரை கண்டவளுக்கு ஏனோ இதை அவனிடம் பகிர வேண்டும் போல் மனம் ஊந்துகோல் இட அதை செவ்வனே செய்தது அவளது கரங்கள்…

ஆன் செய்த சுமி பேசாமல் அமைதியாக இருக்க உதயே ” என்கிட்ட இப்ப என்ன விஷயத்த எப்படி சொல்லனும்னு யோச்சிட்டு இருக்கியோ அத அப்படியே சொல்லு பாப்போம் ” என்றான் அவளது மனதை படித்தவன் மாதிரி…

” எப்படி உதய் நான் ஏதோ சொல்ல நினைக்கிறேன்னு கண்டு பிடிச்ச ” என்று அந்த நேரத்தில் தோன்றிய கேள்வியை கேட்க

Advertisement

அதை கேட்டு நகைத்தவன் “நான் உதய் கிருஷ்ணன் சுமி மா. என்னோட பேருலயே அந்த கிருஷ்ணனோட அணுக்கிறத்த பெற்றவன் மா. பெண்களின் மனதில் என்ன இருந்தாலும் அறிய கூடிய திறமை உடையவன் நான். அதுவும் இல்லாம நீ என்னோட பெஸ்ட் பிரண்ட் நீ என்ன நினைக்கிறகின்றத கண்டு பிடிக்க முடியாதா என்ன இதுக்கு ஹேச்லார் வியெலார் மாதிரி இருக்குனும்னு எந்த ஒரு அவசியம் இல்லை ” என்றான் அவள் கேட்ட சிறு கேள்விக்கு…

Advertisement

எதுக்காக தான் இப்படி ஒரு கேள்வியை கேட்டோம் என்றானது அவளிற்கு…

“என்ன சுமி அமைதியாவே இருக்க..??? என்கிட்ட ஏதோ சொல்லனும்னு சொன்னியே..??அத இன்னும் சொல்லலையே நீ ” என்றவனின் குரலில் அக்கரை இருந்தது..

” நான் எங்கடா உன்கிட்ட சொல்றேன்னு சொன்னேன் சொல்லனும்னு நினைக்க தான் செய்தேன் ” என்று கூறி அவள் வாயாலேயே அவன் விரித்த வலையில் அழகாக மாட்டிக் கொண்டாள்.

Advertisement

“அடடே என் செல்லக் குட்டி இப்படி உங்க வாயாலேயே உண்மைய ஒத்துக்கிட்டிங்களே ” என்று குழந்தையிடம் பதிலை பெற்றது போல் சொல்ல சுமியும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்..

ஒரு நொடி அமைதிக்கு பின் சுமியே பேசத் தொடங்கினாள் .

” எனக்கு ஒரு சொல்யூஷன் வேணும் உதய். நீ என்னோட பெஸ்டி அதுனால தான் இத உன்கிட்ட சொல்றேன் ” என்று புதிர் போட்டவள் உதயிடம் அனைத்தையும் கூறி முடித்தாள்..

” எனக்கு என்ன பண்றதுன்னே தெரில பா .எங்க பார்த்தாலும் அவனோட ஞாபகம் அவனோட கோபம் கூட எனக்கு அழகா தான் தெரியுது. எனக்கு அவன பாக்கும் போதுலாம் ஏதோ வானத்துல பறக்கிற மாதிரி ஒரு ஃபீல் ஆகுது உதய். ஏனோ என்னோட மனசு அவனை நோக்கியே போகுது என்னால இத எதையும் தடுக்க முடியல ” என்றவள் ” இதுக்கு என்ன தான் சொல்யூஷன் டா ” என்று அவனிடம் அவளுக்குள் எழுந்த கேள்வி கனைகளை அவனிடம் ஒப்படைத்தாள். அனைத்தையும் கூறிய அவள் அவனின் பெயரை கூற மறந்தால்…

இதை அனைத்தையும் கேட்ட உதய் சிறு அமைதிக்கு பின் “ஒரு நிமிஷம் உன் கண்ண நல்லா மூடு சுமி .. அதுக்கப்புறம் ஒரு ஆழ்ந்த மூச்ச இழுத்து விட்டுட்டு மனச ஒருநிலை படுத்து அது உனக்கு பதில் சொல்லும் நீ கேட்ட அனைத்து கேள்விக்கும் ஒரே பதிலாக ” என்று கூறி அணைத்து விட்டான். அந்த நேரத்தில் அவனும் அவனின் நிதியின் காதலில் விழுந்து தத்தளித்து கொண்டு இருந்தான்.

அவளும் அதே போல் செய்து பார்க்க அவள் உடல் சிலிர்ப்படைய அதே நேரத்தில் அவளை சுற்றி ஏதோ பட்டாம்பூச்சிகள் பறப்பது போல் உணர்வு ஏற்பட மெதுவாக இமைகளை விளக்கி பார்க்க அவளது சுவாசம் அவனாக அவள் கண் முன் தோன்றினான் வசிகரிக்கும் புன்னகையோடு….

[the_ad id=”6605″]

அந்த புன்னகையில் அவளை துளைத்தவள் மெதுவாக அவனை நெருங்கிட அவளது இதயத்தின் துடிப்பு அதிகரிக்க ஏதோ பயம் அவளுள் தோன்றிட அதே நேரத்தில் சொல்லா உணர்வு அவளுள் எழுந்தது…

அவனை நெருங்கி வந்தவள் எதுவும் பேசாமல் இருவரும் இமை வழியாக காதலை பகிர்ந்து கொண்டு இருக்க சுமியின் கைகளை மெதுவாக பற்றிய சூர்யா அவளது கரத்தினை அவனுள் வைத்துக் கொண்டு அவள் இமை நோக்கி “ஐ ” என்று கூறிக்கொண்டு இருக்கையில் ” சுமி சுமி ..ஏய் சுமித்ரா ” என்ற அழைப்பு அவளின் அந்த அழகான நேரத்தை வீணாக்கி விட கோபத்துடன் இமை திறந்தாள்…

“என்ன சைந்து எதுக்காக இப்ப என்ன கூப்பிட்ட ” என்று புன்னகையுடன் அதே நேரத்தில் கடுப்புடனும் கேட்க

அவளை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்தவள் ” ஏன்டி இப்படி உக்காந்துட்டு தூங்கிட்டு கிடக்கிற ” என்று அவளை பார்த்து கேட்க

” நான் எப்ப டி தூங்குனேன். சும்மா கண்ண மூடிட்டு தான் டி இருந்தேன் ” என்றவள் அவளை பார்க்க ” சீக்கிரம் கிளம்பி தொல டி ஆண்டியும் அங்கிலும் உனக்காக தான் கீழ வெயிட் பண்ணிட்டு இருக்காங்க ” என்று கூற

ஸ்ஸ் என்று நாக்கை கடித்தவள் அவளை இழுத்துக் கொண்டு கீழே சென்றாள்..

கீழே அவளுக்காக அவளது அன்னை மற்றும் தந்தை காத்திருக்க இருவரிடமும் சென்றவள் அவர்களை அணைத்துக் கொண்டாள் .

“சரி டா நாங்க கிளம்புறோம் ” என்று சொல்லி பனிமலர் அவள் நெற்றியில் இதழ் பதித்து “கவனமா இருக்கணும் டா ” என்றிட அவர்களை பார்த்து ” என்கூட ஒருவாரம் இருக்கேன்னு சொன்னீங்க இப்போ என்னென்னா அதுக்குள்ள கிளம்புறீங்கன்னு வந்து நிக்குறிங்க “என்று சிறுபிள்ளை போல் பேச

“எங்களுக்கும் ஆச தான் டா உன் கூட இருக்கணும்னு ஆனா அங்க வேலை இருக்கே  நான் போய் தான ஆகனும் டா ” என்று கூறி வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டார்.

அதன் இருவரையும் ஃப்ளைட் ஏற்றிவிட்டு கல்லூரிக்கு சென்றனர் மூவரும்…

சூர்யா அனைத்து வேலைகளையும் திறம்பட செய்து கொண்டு இருந்தாலும் அவனின் பார்வை சுமிக்காக ஒதுக்கப்பட்ட அறையின் மீதே இருந்தது..

ஏனோ சூர்யாவுக்குள் சொல்ல முடியாத பயம் ஒன்று உருவானது. அது அவள் பேச முடியாது என்றதுனாலா அல்லது அவனது உணர்வுகளா என்று தெரியாமலையே அவளுக்காக காத்திருந்தான்..

நேற்று அத்தனை முறை அழைத்தும் அவள் போன் எடுக்கவில்லை என்றதும் அவள் மேல் கோபம் வந்தாலும் சிறிது பயமும் சேர்ந்தே வந்தது இந்த காலத்தின் நடப்புகளை அறிந்து…

அவன் எதிர்பாரா நேரம் சுமி அவளது இரு தோழிகளுடன் அவளுக்கு அளிக்கப்பட்ட அறைக்குள் நுழைய ஒரு நிமிடம் சூர்யாவின் விழிகளை கண்ட பின்பே உள்ளே சென்றாள் சுமி..

அவளை கண்ட பின்பே சூர்யாவிற்கு நிம்மதியாக இருந்தது. பயம் சென்றது ஆனால் கோபம் மட்டுபடாமல் இருக்கத் தொடங்கியது…

இது தெரியாத சுமி சந்தோஷமாக வலம் வந்து கொண்டிருந்தாள் . உதயிடம் பேசிய பின்பு அவளுக்கு ஒரு தெளிவு கிடைத்திருந்தது. அது அவள் சூர்யாவின் மேல் உள்ள காதலை புரிந்து கொள்ள செய்தது.

அன்று நாள் முழுவதும் சூர்யாவும் சுமியும் பேசிக் கொள்ளாமல் அவர்கள் வேலையை செய்து கொண்டு இருந்தனர்…

அடுத்த இரண்டு நாளும் இப்படியே சென்றது. அவர்களது வேலையும் முடித்து விட்டனர். நாளை செகண்ட் லெவள் ப்ளஸ் விண்ணிங் யார் என்று சொல்வதற்கான நாலும் அது தான் …

இருவருக்குள்ளும் பயம் இருக்க தான் செய்தது.

சூர்யாவின் வாழ்வில் இது ஒரு பெரிய ஆப்பர்ச்சுனிட்டி . இதை தவரவிட அவனுக்கு எண்ணமில்லை.

சுமிக்கோ ஜோஸ்மானிடம் வேலை செய்ய வேண்டும் என்பது அவளது நீண்ட நாள் கனவு . அது நிறைவேறுமா இல்லையா என்பது நாளை விடியலின் போது தெரியவரும்..

அடுத்தநாள் காலை பரப்பப்படும் இருந்தது அந்த கல்லூரி வளாகம். சிறப்பு விருந்தினராக ஜோமானை அழைத்திருந்தனர். அவரை காண்பதற்காகவே கல்லூரியில் கூட்டம் நிறைந்திருந்தது…

விடியலின் தொடக்கம் அவளுக்கு ஏதோ பயத்தை உருவாக்க அது எதுவென்று தெரியாமல் முழித்தால் அந்த பேதை..

காம்பெட்டிஷன் ஸ்டார்ட் ஆக சூர்யா சுமி சைந்தவி மற்றும் மெர்லின் என நால்வரும் அவர்களது உழைப்பை அங்கு சமர்பித்து இருந்தனர்.

அதிலும் ஜோஸ்மான் வந்திருந்ததை அறிந்து ஒவ்வொரு பெண்களும் மூன்று கோட்டிங்கு கீழ் மேகப் செய்யாமல் இருக்கவில்லை…

சுமியோ எப்பொழுதும் போல் இருக்க அவளின் பால் ஈர்த்தது ஜோஸ்மானிற்கு . அனைத்து பெண்களும் அவனையே சுற்றி வலம் வர சுமியோ அவனை ஒரு பொருட்டாக கூட கணக்கிடவில்லை.

அவளது பார்வை முழுவதும் அவளின் மன்னாலன் மேல் இருக்க அவனோ அவளை பொருட் படுத்தாது அவனின் வேலையில் மூழ்கி இருந்தான்.

இருவருக்கும் இடையில் ஏதோ பனி போர் போன்றது சென்றது கொண்டிருந்து அது இருவருக்குமே தெரியவில்லை. அவளாக வந்து பேசுவால் என்று சூர்யாவும் அவனாக வந்து பேசுவான் என்று சுமியும் இருக்க இருவருமே பேசிக் கொல்லாமல் இருந்து விட்டனர். சுமியை பொருத்தவரை அது காதல் சூர்யாவை பொறுத்தவரை அது நட்பு…

ஜோஸ்மான் சுமியை கண்களாலே பருகி கொண்டு இருந்தான். அவனது கண்ணில் அவ்வளவு ஆசை இருந்தது அவள் மீது.

அனைத்து பெண்களும் அவனையே சைட் அடித்துக் கொண்டு இருந்தாலும் மெர்லின் மட்டும் அவனை கூர்ந்து கவனிக்க தொடங்கினாள்..

அவனது சென்ற இடத்தை கண்ட அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதெல்லாம் சகஜம் என்று விட்டுவிட்டால்.. ஆனால் அவனது பார்வை சுமியை மட்டுமே நோக்கி இருந்தது .அவளை அணுஅணுவாய் இரசித்து வந்தான் ஜோஸ்மான்.

[the_ad id=”6605″]

அனைவரும் அனைவரது டிசைனையும் பார்த்து முடித்தனர். ஆர்க்டெக்ட் காண முடிவினை முதலில்லே சொல்ல நினைத்தனர்.

அதேபோல் அவர்களும் ஒவ்வொருவரின் திறமையை பற்றி பேசி அவர்களை பாராட்டிய பிறகு பரிசுகளை வழங்கினர். அதில் சூர்யா முதலாம் பரிசு வென்றிருந்தான்.

அவனை விட அதிக சந்தோஷப்பட்டவள் சுமியே. அவனது உழைப்பிற்கான அங்கீகரிப்பு அவனுக்கு கிடைத்தது. அதை எண்ணி பெரிதளவில் மகிழ்ச்சி கொள்ளாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க தொடங்கினான்…

டிசைனிங்கான ரிசல்ட் வர நேரம் ஆகும் என்பதால் அவளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருக்க தூரத்தில் சூர்யா விக்ராந்த் சைந்துவிடம் பேசிக் கொண்டு இருப்பதை  பார்த்த சுமி அவர்களை நோக்கி செல்ல எத்தனிக்க…

ஜோஸ்மான் அவளை தடுத்து நிறுத்தினான். அவள் ஜோஸ்மானை பார்த்த மகிழ்வு ஒரு நொடியே இருந்தது..

பக்கத்தில் இருந்த மெர்லினை கண்டு “எக்ஸ் க்யூஸ் மீ நாங்க கொஞ்சம் தனியா பேசணும் நீ கொஞ்சம்.. ” என்று முடிப்பதற்குள் அவளே சுமியை முறைத்து விட்டு ஒதுங்கி நின்றாள்..

“சொல்லுங்க சார் என்கிட்ட என்ன பேச போறீங்க ” என்று கேள்வியுடன் அவனை நோக்க

“உங்களோட டிசைன்ஸ் எல்லாம் சூப்பரா இருக்கு மிஸ். சுமித்ரா ” என்றவனின் பார்வை அவளது மேனியில் இருக்க..

இதை எதையும் பார்க்காத சுமி “தேங்க் யூ சார் ” என்றுவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றாள்..

மெர்லிக்கு ஏனோ இந்த முறையும் சுமியின் மீதே கோபமாக வந்தது. அவனின் கனை கண் பார்வைக்கு ஏங்கு கின்ற பெண் இங்கு எத்தனையோ இருந்தும் இவனது பார்வை இவளின் மேல் இருந்ததை எண்ணி கோவம் கொண்டாள். அந்த ஏங்கு கின்ற பார்வையில் இவளும் அடங்கும்….

வேகமாக அவர்களிடம் வந்த சுமி சைந்தவியிடம் “சூர்யா எங்க டி  ” என்று பார்வையை அலைய விட்டவளாக கேட்க..

“இப்போ தான் ப்ரோ ஏதோ ஒர்க் இருக்குன்னு சொல்லி கிளம்பி போனாரு டி. எதுக்கு கேக்குற..??? ” என்று கேட்க

“கங்ராட்ஸ் சொல்ல தான் டி ஃப்ர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கிருக்காருல அதான் ” என்றவளின் முன்பு தொங்கி போனது..

மாலை வரவும் டிசைனிங் கான பரிசுக்கான அறிவிப்பு வர அவர்களை அனைவரும் ஆர்வமாக இருந்தனர்..

முதல் பரிசு மெர்லினும் இரண்டாம் பரிசு சுமியும் பெற்றிருந்தனர்..

இரண்டாம் பரிசு சுமிக்கு தரும் போது ஜோஸ்மான் கைக் குழுக்கி அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு விடுவித்து பரிசு வழங்கினான்..

சந்தோஷத்தில் இருந்த சுமியால் இந்த அணைப்பின் நோக்கம் தெரியாமல் போனது.

அடுத்ததாக முதல் பரிசு கொடுக்க அவன் வெறும் கைக் குழுக்களோடு நிறுத்திக் கொண்டான்.

கோபமாக இருந்த மெர்லின் இப்போது அந்த கோபம் வெறுப்பாக மாறி இருந்தது.

அடுத்த ஒரு வாரமும் சுமியும் சூர்யாவும் சந்தித்துக் கொள்ள வில்லை . அதற்கான நேரமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை..

அந்த ஒரு வாரமும் சுமி மெர்லின் ஜோஸ்மான் டிசைனிங் கம்பெனியில் இருந்தனர்.

மெர்லினை ஜோஸ்மான் கண்டுக் கொள்ளவே இல்லை. அந்த ஒரு வாரம் முழுவதும் சுமியுடனே அதிக நேரத்தை கழித்தான் ஜோஸ்மான். அவளுக்கு ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்தான் டிசைங்கில்…

அதேபோல் சூர்யாவும் ஒருவாரம் காலேஜில் கெஸ்ட் லக்ச்ராக சென்றிருந்தான். இப்படியே இவர்கள் நாட்களை கழிக்க…

அந்த காம்பேட்ஷன் வெற்றிகரமாக முடிந்தற்காக ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்தனர்..

[the_ad id=”6605″]

சுமியோ தான் அந்த பார்ட்டிக்கு வர வில்லை என்று சொல்ல மெர்லினும் சைந்தவியும் அவளை சமாதானம் படுத்தி அழைத்து வந்தனர்…

சுமியின் மனதிலோ ” இன்னைக்கு எப்படியாவது அவன்கிட்ட என்னோட லவ்வ சொல்லிரனும் இல்லன்னா இனி அவன பாக்கவே முடியாம பொயிடும் ” என்று எண்ணிக் கொண்டாள்..

அதேபோல் போல் தான் அங்கே சூர்யாவும் கூற அவனை பார்ட்டிக்கு வர சம்மதம் வாங்குவதற்குள் ஒரு ஜென்மம் முடிந்தது போல் உணர்ந்தான் விக்ராந்த்..

அந்த பார்ட்டியில் அவளிடம் தன் காதலை சொல்லி அவளை தனத்தாக்கி கொள்ள வேண்டும் என்ற ஆசையில் பார்ட்டிக்கு கிளம்பி சென்றான்…

எங்கே தெரிய போகுது இந்த நாள் தான் சுமியின் வாழ்வையே தலை கீழே ஆக்க போகுது என்று…யார் அவளிடம் சென்று சொல்வது இதுவே அவள் சூர்யாவை காண போகிற கடைசி முறை என்றும் இனி அவனை கண்டால் அது நந்தினியை காதலிக்கிற சூர்யாவாக இருக்க கூடும் என்று அவள் அறியவில்லை…..

~தேடல் தொடரும் ???

???????????????????????

Stay tuned…✌️✌️✌️✌️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!