Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vannam Theda Vaarayo

தேடல் 29

சுமியும் சூர்யாவும் இருவரது நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பார்ட்டிக்கு வந்திருந்தனர்.

அனைவரும் அந்த பார்ட்டிக்கு அழகு பதுமையாக வந்திருந்தனர். சுமி முதல் நாள் சூர்யாவிடம் திட்டு வாங்கி வாங்கி வந்த உடையை அணிந்திருந்தாள். அந்த உடை அவளின் வலைவு தெளிவுகளை அழகுடன் எடுத்துக் காட்டியது…

சூர்யா ப்லக் ஃபண்ட் அதுக்கு மேச்சு ஆகிற மாதிரி க்ரே சர்ட் வித்து ப்லக் கோர்ட் அணிந்திருந்தான். பெண்களை திரும்பி பார்க்கும் அவளிவிற்கு அவனின் கேசம் அழகுறாய் இருந்தது…

இருவரும் அவர்களது நண்பர்களுடன் இருக்க அப்போ உள்ளே வந்த ஜோஸ்மான் அவளின் அழகில் அவனை துளைத்திருந்தான். அவளையே விழுங்கும் படி பார்க்க இதை உணராத சுமி அவள் தோழிகளுடன் சிரித்து பேசிக்கொண்டு இருந்தாள்…



Advertisement

அவளை பார்த்த படியே அடி எடுத்து வைத்தவன் அவளை நெருங்கி வந்து ” வில் வீ டேக் அ செல்ஃபி ” என்று கேட்க

அவனை ஆச்சரியமாக பார்த்தவள் ” யா ஸூயர் ” என்று அவனுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டாள்…

“நான் கொஞ்சம் உங்க கூட தனியா பேசணும் கொஞ்சம் அந்த பக்கம் வரிங்களா ” என்று கேட்க

Advertisement

சிறிது யோசித்தவள் ” ஓகே வாங்க போகலாம் ” என்று விட்டு அவனுடன் நடந்து சென்றாள் .பப்பிற்கு வெளியே வந்தவர்கள் பக்கத்தில் இருந்த ஸ்டோன் பேஞ்சில் அமர்ந்தனர்..

Advertisement

அதேநேரத்தில் விக்ராந்த் மற்றும் சூர்யா அங்கு வந்து சேர அனைவருக்கும் பொதுவாக ஹாய் சொன்னவன் ” மித்ரா எங்க சிஸ்டர் ஆளையே காணோம் ” என்று பார்வையை சுழற்றிய படியே கேட்க…

“ஜோஸ் அவகிட்ட ஏதோ தனியா பேசணும்னு சொல்லி கூட்டிட்டு பொயிருக்காங்க ப்ரோ ” என்றாள். மெர்லின் எதுவும் அமைதியாக நின்றிருந்தாள். அவள் முகத்தில் சிறிதளவும் புன்னகை இல்லை…

அவர்களுடன் சூர்யா இருந்தாலும் அவனின் மனம் முழுவதும் சுமியே இருந்தாள். அவனிற்கு ஏதோ தவறாகவே பட்டது. அவனின் பார்வை சுமியின் மீது பட்டு தெரிப்பதை அவன் பார்த்திருக்கிறான். அது அவ்வளவு நல்லதான பார்வை இல்லை என்பது இப்போது தெள்ளத் தெளிவாக புரிந்து போனது..

Advertisement

அங்கே இருக்க மனமின்றி ” எக்ஸ் க்யூஸ் மீ ” என்றவன் அவர்களிடமிருந்து தள்ளி அவளை தேட தொடங்கினான்.

“சொல்லுங்க ஜோஸ்மான் எதுக்கு என்ன அழச்சீங்க ” என்று கேட்டு அவனை பார்க்க

“இந்த ட்ரெஸ்ல நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அப்படியே ஆலத் தூக்குது ” என்றான் அவளில் மேனியில் பார்வையை பார்த்த படி…

” என்ன இப்படி பேசிட்டு இருக்கீங்க .இது உங்களுக்கு நல்லது இல்ல ” என்று அருவருப்பாய் அவள் கோபமாக பேசியடியே எழுந்து நின்றாள்..

“இதுல என்ன டா இருக்கு எனக்கு உன்ன பிடிச்சிருக்கு எனக்கு நீ வேணும்னு ஆச படுறேன். அதுக்கு நீ என்ன கல்யாண பண்ணிக்க சம்மதிக்கனும் .என்னைக்கு உன்ன முதன்முதல்லா அந்த ரெஸ்டாரண்ட்ல பாத்தேனோ அன்னைக்கே உன்னோட அழகுல விழுந்துட்டேன் டி . என்ன என்னமோ நீ செஞ்சிட்ட உன்னோட அழகு என்ன கட்டி போட்டுடுச்சி . நான் எவ்வளவோ பொண்ணுங்கள கடந்து வந்திருந்தாலும் உன்ன பாத்ததும் அப்பிடியே நான் மெஸிமெரைஸ் ஆயிட்டேன் . அப்பவே முடிவு பண்ணிட்டேன் நீ தான் எனக்குன்னு ” என்று சொல்லி அவள் முன் மண்டியிட்டு பல்லேடியம் மோதிரத்தை நீட்ட…

அவள் அவனின் பேச்சில் எரிச்சலுற்று செய்வதறியாது நிற்க

“ஸ்வீட் ஹார்ட் ” என்று அவன் கொஞ்சலாக அவளை அழைக்க அவனது குரல் மிகவும் நெருக்கத்தில் கேட்கவே சுயநினைவு அடைந்தவள் அவனை பார்க்க அவன் அவளுக்கு நெருக்கமாக நின்றிருந்தான்…

அவள் அவனை விலக்கி தள்ளி நின்று” நீங்க பண்றது ரொம்பவே தப்பு உங்களுக்கு பிடிச்சிருக்குன்னு ஒரு காரணத்துக்காக நான் உங்களோட ஆசைக்கு சம்மதிக்கனும்னு எதிர் பார்க்கவே பார்க்காதீங்க அது எப்போதும் நடக்காது ” என்று நிமிர்ந்த நிலையில் கூற..

அவளின் மேனியை அப்போது அணுஅணுவாய் அளவெடுத்தவன் “‌ என்ன அப்படியே உன்னோட இழுக்கிற டி ஸ்வீட் ஹார்ட் ” என்று கொஞ்சியபடியே முன்னேற

சுமி பயத்தில் கால்லை பின்னே நகர்த்திய படி ” நீ பண்றது உனக்கே அசிங்கமா இல்ல . இப்படி ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாமல் கிட்ட வர ” என்று அப்பொழுதும் பயத்தை மறைந்து அவனிடம் பேச

” இதுக்கு எதுக்கு நான் அசிங்கம் படணும் டியர் நமக்கு வேண்ணுனா நாம தான் முயற்சி பண்ணனும் அத தான் பண்ணிட்டு இருக்கிறேன் ” என்றவன் அவள் வலக் கையை இறுக்கமாக பிடித்து இழுக்க அவன் மீதே மோதி நின்றாள்…

அதில் கிறங்கியவன் அவளின் இதழை சிறை செய்ய முயற்சி செய்ய அவனின் நினைப்பை எண்ணி அறுவருப்புற்றவள் சிறிதும் தாமதிக்காமல் அவனின் கண்ணத்தில் பளார் என்று அறைந்தாள்..

இதை அப்போதே அங்கு வந்த சூர்யா பார்க்க வேகமாக அவளிடம் சென்றான்…

சூர்யாவை கண்டவள் “சூர்யா ” என்று ஓடிச் சென்று அவனின் மார்பில் சாய்ந்து கொண்டு அழ…

சுமியின் நிலையை எண்ணி அதிர்ந்தவன் அவளின் சூர்யா என்ற அழைப்பில் மேலும் அதிர்ந்து தான் போனான்…

பேசா மடந்தை என்று இதுநாள் வரை நினைத்திறிந்த அவன் இப்போது அவளின் வாய்மொழி பேச்சில் ஏமாந்து இருக்கிறோம் இல்லை ஏமாற்றி இருக்கிறாள் அதுவும் எதற்காக என்னிடம் இந்த நடிப்பு என்று யோசித்த அவனுக்கு அவள் ஒரு போதும் தான் ஊமை  என்று சொல்லவில்லை என்று நினைக்க மறந்து‌ அவளின் மீது வெறுப்பை வளர்த்துக் கொண்டான்…

சுமியின் மீது இருந்த கோபமோ தன்னை ஏமாற்றி விட்டாள் என்று தெரியாமல் ஏமாந்ததின் இயலாமையோ ஏதோ ஒன்று அவனின் கோபத்திற்கு நெய் ஊற்றியது போல் இருக்க சுமியையே வெறித்து பார்த்து கொண்டிருந்த ஜோஸின் மீது திரும்ப சுமியை தள்ளி நிறுத்தியவன் அவனை ஒரே அடியில் கீழே விழ வைத்து விட்டான்.

சூர்யாவின் அடியில் கீழே விழுந்தவன் எந்திரிக்க முடியாமல் போக தத்தி தத்தி எழுந்து நிற்க முயல ” இங்க பாரு பொண்ணுங்கனா உனக்கு என்ன அவ்வளவு கேவளாம போச்சா சொல்லு .உன்ன மாதிரி ஆளுங்க இந்த மாதிரி உலகத்துல நடமாடுறதுனால தான் பொண்ணுங்களுக்கு பாதுக்காப்பே இருக்க மாட்டேங்கிது ” என்றவன் அவனை கோபம் தீரும்வரை மிதித்தவன் இறுதியில் ” பொண்ணுங்களுக்கு கொடுத்திருக்க அந்த புனிதமான கர்ப பையை ஆண்களுக்கு வச்சி படைக்கனும் அப்போ எல்லா ஆண்களுக்கும் தெரிய வரும் பொண்ணுங்களுக்கு எவ்வளோ கஷ்டம் வருதுன்னு . இதெல்லாம் தெரியாததுனால தான் பொண்ணுங்கள உங்க உடல் சுகத்துக்காக பயன் படுத்திக்கிறிங்க ” என்று சொல்லிவிட்டு ” நீயெல்லாம் ஆம்பிளையா இருக்க தகுதியே இல்ல டா ” என்றவன் சுமியின் வலக் கையை பிடித்து இழுத்துச் சென்றான்…

இங்கு நடந்தது யாருக்கும் தெரியவில்லை அது ஆல் நடமாட்டம் இல்லாததால். இரு கண்கள் அதை வெறித்து பார்த்து விட்டு சென்றது…

வேகமாக இழுத்துச் சென்றவன் அவனின் பார்வை அவள் மேல் படர விட்டான். அதுவும் அவளுக்கு அவனால் ஏதேனும்‌ ஆகிருக்கும்மோ என்றே எண்ணி..

“நல்ல வேலை எதுவும் ஆகவில்லை ” என்று எண்ணி அவளை விலக்கி செல்ல அவளின் “சூர்யா” என்ற அழைப்பில் அப்படியே நின்றான்…

“தேங்க்ஸ் சூர்யா ” என்று சுமி சொல்ல திரும்பி ஒரு வெற்று பார்வையை பார்த்தவன் எதுவும் பேசாமல் சென்று விட்டான்…

விக்ராந்திடம் வரும் போது பேரர் வர அவரின் கையில் மதுபானத்தை எடுத்து குடிக்க தொடங்கினான்.

மதுபானங்கள் இருக்கும் இடத்தை சிறிது நேரம் கழித்து அடைந்தவன் அங்கிருந்த பேரரிடம் கேட்டு மதுபானத்தை அருந்த தொடங்கினான்.

சுமி இவர்கள் இருக்கும் இடத்தை அடைந்தவள் சூர்யாவையே கண்களினால் தேட அதே நேரம் மெர்லின் மூவருக்கும் பானங்களை எடுத்து வந்து கொடுக்க..

“இந்தா சுமி இத குடி ” என்று அவள் கையில் ஜூஸ் தர

” எனக்கு ட்ரிங்க்ஸ் பண்றது பிடிக்காதுன்னு உனக்கு தெரியும் தான்னே மெர்லின் அப்புறம் எதுக்கு இத தர ” என்று சுமி சகஜமாக கேட்க..

“எனக்கு தெரியும் சுமி இது வெரும் ஆரேஞ் ஜூஸ் தான் குடி இந்த சைந்து நீயும் குடி ” என்றவள் இருவர் கையிலும் அதை திணித்து விட்டு அவளுக்கு ஒன்றை எடுத்து பருக தொடங்கினாள்…

சூர்யாவை தேடி வந்த விக்ராந்த்..,, ஒரு ஓரத்தில் இருந்து குடித்துக் கொண்டிருப்பதை பார்த்து அவனிடம் சென்றான்..

“டேய் சூர்யா என்னடா பண்ற எதுக்காக இப்படி குடிக்கிற உனக்கு தான் குடிக்கிற பழக்கம் கூட இல்லையே டா ” என்று அவன் கையில் பாதி குடித்து வைத்திருந்த பாட்டிலை பிடுங்கி வைத்தான்…

” என்ன ஏமாத்திட்டாங்க நானும் ஏமாந்து பொய்ட்டேன் டா ” என்று புலம்ப அவன் அதிகப்படியாக குடித்திருப்பது தெரிய வர அந்த ஹோட்டலில் ஒரு ரூம் புக் செய்து அவனை அந்த ரூமில் படுக்க வைத்து விட்டு வந்தான்.

சிறிது நேரத்தில் அனைவரும் ஆடத் தொடங்க சைந்துவின் கண்டிப்பில் சுமியும் கூட சேர்ந்து ஆட தொடங்கினாள்…

சுமி சைந்து மெர்லின் என மூவரும் பாடலிற்கு ஏற்றவாறு ஆட  விக்ராந்த் ஒருமாதிரி வருவதை கண்ட சைந்து அவர்களிடம் இருந்து பிரிந்து விக்ராந்திடம் வந்தாள்…

“விக்கி என்ன ஆச்சி ஏன் இவ்ளோ டல்லா இருக்க ” என்று கேட்க அவன் அமைதியாக இருக்கவே “சொல்லு விக்கி ” என்று அவன் தாடையை பிடித்து கேட்க

“சூர்யா குடிச்சிருக்கான் சைந்து “என்றான் அமைதியாக .இதை கேட்ட சைந்து “இதுல்லாம் சாதர்ண விஷியம் இதுக்கு எதுக்கு இப்படி இருக்க ” என்று சொல்ல

“இல்ல சைந்து அவன் குடிக்க மாட்டான் நந்தினி சிஸ்டருக்கு குடிக்கிறவுங்கள பார்த்தா ஒரு பயம் அதுனால அவன் குடிக்கவே மாட்டான். இன்னைக்கு குடிச்சிருக்கான் அதுவும் யாரோ ஏமாத்திட்டாங்க ஏமாந்துட்டேன்னு சொல்லி அழுகுறான் டி எனக்கு என்னென்ன புரியல ” என்று சொல்ல

“சரி இப்போ ப்ரோ எங்க ..???” என்று கேட்க அவனுக்குன்னு ஒரு ரூம் புக் பண்ணி இப்போ தான் தூங்க வச்சிட்டு வந்துருக்கேன் ” என்க ”  சரி வா ப்ரோவ பாத்துட்டு வந்தரலாம் ” என்று சொல்லி அவனை அழைத்துச் சென்றாள்…

ஆடிக் கொண்டிருந்த சமிக்கு தீடிரென்று மயக்கம் வர மாதிரி இருக்க அவளை தாங்கி பிடித்த மெர்லின் “என்ன ஆச்சி சுமி..??” என்று பதற்றமாக கேட்க

“தெரில மெர்லின் ஏதோ தலை எல்லாம் சுத்துது மயக்கம் வர மாதிரி இருக்கு “என்று சொல்லி அவள் மயங்கி சரிய அவளை   அழைத்துக் கொண்டு அங்கிருந்த ரூமிற்கு சென்று அவளை படுக்க வைத்தவள் அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க அவள் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள் சுமி..

“இங்கேயே இரு சுமி நான் போய் சைந்துவையும் டாக்டரையும் கூட்டிட்டு வரேன் ” என்று அவள் கையை விடுவித்து கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினால்…

அதுவரையிலும் சுமியை கண்கொடுத்த பாம்பு போலவே ஜோஸ்மான் பார்த்துக் கொண்டு இருக்க அந்த சமயத்தை தனக்கு சாதகமாக மாற்ற எண்ணி யாரும் அறியாமல் அவளது அறை கதவை திறந்து உள்ளே சென்றவன் யாரும் அறியும் அக்கதவை சாற்றினான்..

அவளின் பெண்மையை அறியாமல் அது களவு பட்டது. இதற்கு யாரை குற்றம் சாட்டுவது மயக்கத்தின் வீரியத்தில் என்ன நடந்தது என்று தெரியாமல் மயங்கி கிடந்த அவளின் குற்றமா..??? அல்லது அடிப்பட்ட பாம்பை போல் அவளையோ கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவன் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட அவனின் மேல் குற்றமா..???

ஒருவாரம் கழித்து அந்த  விடியல் சுமியின் கனவு வாழ்வை பறிப்பதற்காகவே விடிந்தது..

மயக்கம் தெளிந்து எழுந்த சுமிக்கு என்ன நடந்தது நடக்கிறது எங்கு இருக்கிறோம் என்று பிடி படவே இல்லை…

அவளுக்கு உடம்பு முழுவதும் வலி ஏற்பட அவள் உடலில் பல இடங்கிளில் நகங்களால் ஏற்பட்ட காயங்கள் இருந்தது..

அவளை சுற்றி சைந்துவும் மெர்லினும் அமர்ந்திருந்தனர்.

“ஹே எனக்கு என்ன டி ஆச்சி உடம்பெல்லாம் ரொம்ப வலிக்குது இதுல ட்ரிப்ஸ் போட்ட அச்சு வேற தெரியுது ” என்று அந்த வலியில் கேட்க…

மெர்லின் ஏதோ சொல்ல வர அவளை தடுத்த சைந்து ” அது ஒன்னும் இல்ல சுமி அன்னைக்கு நாம போன இடத்துல இவ சாஃப்ட் ட்ரிங்க்ஸ்ன்னு நினைச்சி ஹார்ட் டிரிங்க்ஸ் கொடுத்துட்டா அதுல நீ அன்னைக்கு வண்டி ஓட்டி போனதுல ஒரு சின்ன ஆக்ஸிடென்ட் நடந்துடுச்சி . ஒரு வாரமா நீ மயக்கத்துல தான் இருந்த நேத்து தான் உன்ன வீட்டுக்கு கூட்டிட்டு வந்தோம். ஆனா   இப்போ தான் நீ கண்ணு முழிக்கிற ” என்றாள் .

இதனை கேட்க சுமி அவள் பிடித்து யோசிக்க முயல அவளுக்கு எதுவும் ஞாபகத்தில் இல்லை…

விக்ராந்த் தான் சுமியின் வீட்டிற்கு அழைப்பு விடுத்து சொன்னான்…

இதனை கேட்ட அதிர்ச்சியில் சுமியின் அன்னைக்கு பனிமலர்க்கு ஹார்ட் அட்டாக் வர அவரை உடனே மஹாலிங்கமும் வெங்கட்டும் மருத்துவமனையில் சேர்த்தனர்…

இதனை அறிந்துக் கொள்ளாத சுமி ” ஆமா சூர்யாவும் விக்கி ப்ரோவும் எங்க ” என்று சுமி கேட்க

“ப்ரோ அவுங்க ஊருக்கு பொயிட்டாரு டி சுமி ” என்றாள் சைந்து.

இது அனைத்தையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள் மெர்லின்…

மேலும் இரண்டு நாட்கள் கடக்க அதன் பிறகே உதய்க்கு விவரம் தெரிய வர சுமியை காணச் சென்றான்…

ஆனால் சென்னையில் பனிமலர் தீவிர சிகிச்சையில் உயிருக்கு போராடி கொண்டு இருக்க மருத்துவர்கள் அவரை காப்பாற்ற அவர்களால் முடிந்த முயற்சியை செய்தனர்.

ஆனால் எவ்வளவு முடிந்தும் அவரது உயிரை அவர்களால் காப்பாற்ற இயலவில்லை.. இதை கேட்ட மஹாலிங்கத்திற்கும் வெங்கட்டிற்கும் சிலை என்ன இருந்தனர்.. (bourboninspector.com)

லண்டன் வந்த உதய்க்கு பனிமலர் இறந்த விவரம் அளிக்க பட கண்ணீர் தானாக வெளி வர அதை துடைத்தவன் அவளை பார்க்க  சென்றான்.

அவனை கண்ட மகிழ்வில் சுமி திளைக்க அவளின் நிலையையும் அறியாமல் பனிமலரின் இறப்பை அறியாமல் அவளை அழைத்துக் கொண்டு சென்னைக்கு வந்தடைந்தான்….

வீட்டிற்கு வந்தவள் கண்டது உயிரற்ற உருவமாய் கண்ணாடி பேழைக்குள் இருந்த பனிமலரே…

அதை கண்ட அதிர்ச்சியில் அங்கேயே மயங்கி சரிந்தாள்…

~தேடல் தொடரும்…

????????????????????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!