Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

நிறம் பாராத காதல்.

நிறம் பாராத காதல் 12

✨

நிறம் பாராத காதல்✨

✨அத்தியாயம்..12

மிரட்டும் தோரணையில் ரணதீரன் வைதேகியை எச்சரித்தவனின் வார்த்தைகளைக் கேட்டு வைதேகியின் உடல் நடுங்கியது.



Advertisement

“சரி விக்ரம்…நம்ம அப்புறம் பேசலாம்” என்ற மாறன் கைபேசி இணைப்பைத் துண்டித்தவன், “அப்போ ரம்யா கொலைக்கும் வேலுவுக்கும் சம்மந்தம் இல்லையா?”என்று ரணதீரனிடம் கேட்டான்.

“ஏன்? என் வேலுவை பார்த்தால் கொலைகாரன் மாதிரியா இருக்கு?” என்று ரணதீரன் கேக்க, “அண்ணா…என்னாச்சு!? ரம்யாவை யாரு கொலை பண்ணிருக்காங்க?” என்ற வைதேகியின் கேள்வியில் ரணதீரன் சத்தமாகச் சிரித்து விட்டான்.

“ஏன் இப்படி சிரிக்கிறீங்க?”என்று வைதேகி ரணதீரனை கோபத்துடன் கேட்டவள்,”அண்ணா… ரம்யாவை யாரு கொலை பண்ணாங்க?” என்று பதற்றதுடனும் ஆர்வத்துடனும் கேட்டாள்.

Advertisement

“ரம்யா படிக்கும்போது யாரையோ காதலித்து அவனை நம்பி மோசம் போயிருக்காள், அவன் சொன்னான்னு கல்யாணத்தை கூட நிறுத்திட்டு வீட்டுல இருந்த நகை பணத்தை தூக்கிக்கிட்டு ஊரை விட்டு அந்தப் பையனைத் தேடி அவன் ஊருக்குப் போக எண்ணி வேலுவோட காருல லிப்ட் கேட்டுப் போனபோது தான் சிசிடிவில வேலு முகம் பதிவாகி இருக்கு” என்று மாறன் சொல்ல,
“அட பாவமே” என்ற ரணதீரனை வைதேகி முறைத்து பார்த்தாள்.

Advertisement

“வேலு என்னமோ ரம்யாவை பஸ்ஸ்டாண்ட்ல தான் ட்ரோப் பண்ணி இருக்கான், அப்புறமா தான் இந்த ரம்யாவை பணத்துக்கு ஆசைப்பட்டு அவள் காதலித்த பையனே அவளைச் சித்திரவதை பண்ணி சாகடித்து அந்தப் பொண்ணோட நகையை எல்லாம் தூக்கிக்கிட்டு அந்தப் பொண்ணை பிணமாக அந்த வீட்டுலயே போட்டுட்டு போய் இருக்கான். பாவம் அந்தப் பொண்ணு வயத்துல ஒரு குழந்தையோடு இறந்துப்போய் இருக்கு” என்று மாறன் கவலையுடன் பேசிக்கொண்டு இருக்க, ரணதீரனினை வைதேகி மேலும் சந்தேகத்துடன் பார்த்து இருந்தாள்.

“ஆனா ரம்யாவை அவங்க காதலன் தான் கொலை பண்ணதா போலீஸ் எப்படி கண்டுபிடிச்சாங்க?”என்று வைதேகி கேக்க,”ஏன் மாமா… உங்க தங்கச்சி என்ன வக்கீலா?” என்ற ரணதீரனின் தோளில் வேடிக்கையாகத் தட்டிக் கொடுத்தான் மாறன்.

“பக்கத்து ஊருல ரம்யாவோட காதலன், இந்த ரம்யாவோட நகையை விற்க போகும்போது யாரோ ஒரு புண்ணியவான் அந்த ஆளைப் பிடித்துப் போலீஸ்ல ஒப்படைத்து இருக்காங்க” என்று மாறன் விக்ரம் சொன்னதை வைதேகியிடம் சொல்ல,

Advertisement

“அந்தப் புண்ணியவான் வேற யாரும் இல்லை மாறன் சார்… உங்க மச்சான் தான்” என்ற வேலு மூன்று வேட்டை நாய்களுடன் இவர்கள் முன்னே வந்து நின்றான்.

வேலு சொன்னதை கேட்டு வைதேகி மற்றும் மாறனின் முகம் ஆச்சிரியத்தில் மாறி இருக்க,”என்ன…வேலு சொல்லுற!?அப்போ ரம்யாவை யாரு கொலை பண்ணாங்கன்னு ராணா தான் போலீஸ்க்கு இன்போர்ம் பண்ணானா? ” என்று மாறன் கண்கள் மிளிர ஆச்சிரியமாகக் கேட்டான்.

“ஆமா மாறன் சார்…இன்னைக்கு விடியல் காலையில நான் தான் ரம்யா என்ற பொண்ணை பஸ் ஸ்டாண்ட்ல இறக்கி விட்டேன், அப்போ அவங்க ஒரு பையன் கூட அங்கிருந்து ஆட்டோல ஏறிப் போனதை நான் பார்த்தேன். ஆனா அந்தப் பொண்ணு ஒரு வீட்டுல பிணமா இருக்குறதா ராணா சார் சொன்னாரு, நாங்க இன்னைக்கு உங்க ஸ்கூல்லுக்கு கம்ப்யூட்டர் வாங்க பக்கத்து ஊருக்குப் போகும்போது அங்க ஒரு அடகு கடையில நான் காலையில ரம்யாக்கூட பார்த்த பையனை அடையாளம் காட்டி ராணா சார்கிட்ட விவரத்தைச் சொன்னேன். ராணா சார் தான் அங்க இருக்குற காவல் நிலையதுல அவனை ஒப்படைத்து அவனை அர்ரெஸ்ட் பண்ண ஏற்பாடு பண்ணாரு” என்று வேலு நடந்ததைச் சொல்லி முடித்தான்.

“அப்போ அந்தக் கொலுசு?” என்று வைதேகி கேட்டதும், “இந்தாங்க மேடம் ரம்யாவோட கொலுசு… நீங்களே அவங்க நினைவா வச்சிக்கோங்க” என்ற ரணதீரன் அவன் கால் சட்டையில் இருந்த கொலுசை எடுத்து வைதேகி கையில் கொடுத்தான்.

“ஏன் வேலு… அப்போ நீ ரம்யாவை காருல ஏத்துகிட்டு போகும்போது அவங்க என் கம்பெனில வேலை பார்க்குற பொண்ணு, அவள காணோம்னு போலீஸ் தேடுற விஷயம் எல்லாம் உனக்குத் தெரியாதா?” என்று மாறன் கேக்க, “எனக்குத் தெரியாது சார்… இன்னைக்கு ராணா சார் தான், வைதேகி மேடம் என் காருல கிடைச்சதா ஒரு கொலுசை எடுத்துக் கொடுத்தாங்க, அந்தக் கொலுசு எப்படி என் காருல வந்துச்சுன்னு கேட்டுப் போன் பண்ணாரு, அப்போ தான் நான் விடியல் காலையில ஒரு பொண்ணுக்கு லிப்ட் கொடுத்த விஷயத்தைச் சொன்னேன்” என்றான் வேலு.

“ஆமா… விக்ரம் சொல்லும்போது ஏதோ கருப்பு காருன்னு சொன்னானே, யாரோட கார் அது?” என்று மாறன் கேக்க,

“என் கார் தான் மாமா”என்று ரணதீரன் சொல்ல,”என்ன உன் காரா? அந்தக் காரை எப்போ நீ வாங்குன!?” என்று மாறன் சந்தேகமாகக் கேட்டான்.

“அதெல்லாம் உங்களுக்கேன்? ரம்யாவை கொலை பண்ணது அவளோட காதலன் தான். ரம்யாவுக்கு லிப்ட் கொடுக்கும்போது அவளோட கொலுசு என் காருல தவறிடுது, இவ்ளோ தான் நீங்களும் உங்க புது தங்கச்சியும் தெரிஞ்சிக்க வேண்டிய விஷயம், இதுக்கு மேல ரம்யா சேமியான்னு எந்தக் கதையும் என் எதிர்ல பேசாதீங்க” என்ற ரணதீரன் மீண்டும் அவனுடைய பங்களாவிற்குள் புகுந்து கதவை அடைத்துக்கொண்டான்.

“அண்ணா… எனக்கு என்னமோ உங்க மச்சான் பொய் சொல்லுற மாதிரி தோணுது” என்று வைதேகி சொல்ல,

“மேடம்… ராணா சார் பொய் சொல்லல, நீங்கக் காலையில இந்தக் கொலுசைப் பற்றிக் கேக்கும்போது எனக்கும் ஒன்னுமே புரியல, ஆனா ராணா சார் தான் காலையில இருந்து நடந்த விஷயத்தை எல்லாம் கேட்டுத் தெரிஞ்சிகிட்டு, என் காருல வந்தது ரம்யா தான்னு கண்டுபிடித்து, ரம்யாவை கொலை பண்ண உண்மையான கொலைகாரனை போலீஸ்ல ஒப்படைக்க ஏற்பாடு பண்ணாரு” என்றான் வேலு.

வேலு பேசியதை சந்தேகமாகக் கேட்ட வைதேகி,” சரி ரம்யா கொலைக்கும் உங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை அதை நான் நம்புறேன்.ஆனா நேத்து நைட்டு நீங்க ஒரு பொண்ணை அந்தக் கருப்பு கலர் கார்ல தூக்கி வீசுனிங்களே அத நான் என் ரெண்டு கண்ணால பார்த்தேன், அந்தப் பொண்ணு யாரு!?” என்று வைதேகி கேட்க,

“வேலு….வெளியே என்ன தேவையில்லாத பேச்சு வேண்டியது இருக்கு வா உள்ள” என்ற ரணதீரனின் குரலில் வேலு தலை தெரிக்க அவனின் பங்களாவிற்குள் ஓடினான்.

வேலுவும் ரணதீரனும் சொல்வது உண்மை இல்லை என்ற சந்தேகம் வைதேகி மனதில் எழுந்த நிலையில் குழப்பதுடனே பங்காளவிற்குள் நுழைந்த பெண்ணவளை சிரித்த முகத்துடன் வரவேற்றார் வேதநாயகி.

“என்ன அத்த.. ரொம்ப சந்தோசமா இருக்கீங்க, என்ன விஷயம்?” என்று மாறன் கேக்க,”இந்தாங்க மாப்புள்ள பால்கோவா எடுத்துக்கோங்க” என்று வேதநாயகி சொல்ல,

“டேய் மாறா… நீ இவங்களுக்கு அல்வா தரது தெரியாம உன் மாமியார் உனக்குப் பால்கோவா தராங்க டா” என்று பொறுமையாகச் சொன்ன தன் அம்மா கீதாவை முறைத்தான் மாறன்.

“வைதேகி நீயும் ஸ்வீட் எடுத்துக்கோ” என்ற வைதேகி இன்று ஜோசியர் சொன்ன நல்ல செய்தியை இவர்களுடன் பகிர்ந்துக்கொள்ள வைதேகிக்கு தான் வேதநாயகியின் மகிழ்ச்சியை கண்டு நெருடாலகவே இருந்தது.

“மாப்புள்ள… அடுத்த வாரமே ரணதீரன் வைதேகி நிச்சியத்தை பண்ணிடலாம்” என்று வேதநாயகி சொன்னதும் வைதேகி தலையில் இடி இறங்கியதை போல உணர்ந்தவள் திருத்திருவென முழித்தவளை பார்த்து, “ஏன் அடுத்த வாரம்… இந்த வாரத்துல நல்ல நாள் இல்லையா?”என்று கேட்டுக்கொண்டே ரணதீரன் உள்ளே நுழைந்தான்.

நேற்று வரை வைதேகியை பிடிக்காமல் இருந்த தன் மகனுக்கு இன்று அவளைப் பிடித்துப் போனதா!! என்று ஆச்சிரியமாக வேதநாயகி தன் மகனைப் பார்த்து இருக்க,”என்ன மாப்புள்ள…வைதேகியை கல்யாணம் பண்ணிக்க உங்களுக்குச் சம்மதமா?” என்று கீதா சட்டென்று கேட்டதும், “ஒ…பரிபூரண சம்மதம்” என்ற ரணதீரனை மாறன் கேள்வியாகப் பார்த்து இருக்க, வைதேகி திருடனுக்கு தேள் கொட்டியது போல நின்று இருந்தாள்.

“மாமா… உங்க மச்சான் அவன் ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டான்” என்று மாயா தன் கணவன் மாறனின் காதைக் கடிக்க, “அவனுக்கு நான் மாமன் டி இப்போ பாரு” என்றவன் சாமி அறை சென்று கையில் பஞ்சாங்கத்துடன் வந்தவன், “நானே இந்த வாரத்துல நல்ல நாளாகப் பார்த்துச் சொல்லுறேன் மச்சான், உங்க ஆசை போலவே இந்த வாரத்துல உங்களுக்கும் வைதேகிக்கும் நிச்சியம் வச்சிக்கலாம்” என்ற மாறன் பஞ்சாங்கத்தை புரட்டிபார்த்தான்.

“இங்க என்ன நடக்குது, என்னைக் கனடா அனுப்பி வைக்கிறேன்னு சொல்லி, இந்த மாறன் அண்ணன் என்னை வைத்துக் காமெடி பண்ணிக்கிட்டு இருக்காரா” என்று எண்ணியப்படி வைதேகி பதற்றத்தில் நின்று இருக்க,

“என்ன பயமா இருக்கா? நீ கவலை படாத நம்ம நிச்சயம் நடக்காது” என்று வைதேகி காதின் அருகே சென்று ரணதீரன் மெல்லிய குரலில் சொன்னதும் வைதேகி பெருமூச்சை எடுக்கும் முன்னே, “ஏன்னா நான் தான் இன்னைக்கு நைட் உன்னைச் சாகடிக்க போறேனே” என்றான் ரணதீரன்.

ரணதீரன் வைதேகியை பயமுறுத்துவதை அன்பாகக், காதலாகப் பேசுகிறான் என்று எண்ணிய வேதநாயகி மனதளவில் மகிழ்ச்சியடைய, “அத்த… இந்த வாரம் நல்ல நாள் இல்லை, அடுத்த வாரத்துல நிச்சியம் வைக்க ஏற்பாடு பண்ணலாம்” என்று மாறன் சொன்னதும், “அப்போ அடுத்த வாரம் எல்லாம் நல்ல படியா முடிஞ்சிடும்” என்று வைதேகியை பார்த்து இரட்டை அர்த்தத்தில் சொன்னான் ரணதீரன்.

“கண்டிப்பா எல்லாம் நல்லதாகவே முடியும் மச்சான்” என்று மாறன் சொல்ல, இவர்கள் அனைவரும் ஒன்றாகப் பேசி உண்டு முடித்து அவரவர் அறைக்கு உறங்கச் சென்று இருக்க, “ஹாப்பி லாஸ்ட் நைட்” என்று வைதேகியை எச்சரிக்கும் குரலில் மிரட்டி விட்டுச் சென்றான் ரணதீரன்.

ரணதீரன் சொன்னது போலவே இன்று தன்னை கொன்று விடுவானா என்று பயந்த வைதேகி அவள் அறைக்குள் சென்றவள் கதவைப் பூட்டி, அங்குள்ள நாற்காலியைக் கதவுக்கு முட்டு கொடுத்து, யாருக்கும் தெரியாமல் சமையலறையில் எடுத்து வந்த கத்தியைக் கட்டில் பக்கத்தில் மறைத்து வைத்துக் கொண்டாள்.

“உண்மையா ராணா சார் நம்மள கொலை பண்ணிடுவாரா!?” என்று பயந்த வைதேகி நீண்ட நேரம் உறங்காமல் தன் அறைக்குள் குட்டி போட்ட பூனையைப் போலக் குறுக்கும் நெடுக்கும் நடந்துக்கொண்டு இருந்தாள்.

ரணதீரனின் செயல்கள் இவள் நிம்மதியை தொலைத்து இருக்க, அவள் கண்களில் தூக்கம் நெல்மணி அளவும் வராமல் போனது,”நம்ம குடும்ப பிரச்சனையில அடைக்கலம் தேடி இங்க வந்தா இந்த ராணா என்னமோ நம்மள கொலை பண்ணிடுவேன்னு மிரட்டுறாரே… பேசாம நம்ம விக்ரம்க்கிட்ட உதவி கேக்கலாமா? ” என்று யோசித்த வைதேகி, விக்ரம் இன்று காலை அவளிடம் தந்த விசிட்டிங்க கார்டை எடுத்து மாறன் இவளுக்காக வாங்கி வந்த போனிலிருந்து தயக்கத்துடன் விக்ரமை அழைத்தாள்.

இரண்டு ரிங்கில் போனை எடுத்த விக்ரம், “ஹலோ யார் பேசுறது?” என்று கேக்க, “நான் வைதேகி பேசுறேன்” என்று தயக்கத்துடன் இவள் பேச, “ஹேய் வைதேகி நீங்களா!?” என்று ஆச்சிரியத்துடன் கேட்டான் விக்ரம்.

“ஆமா நான் தான்.இந்த நேரத்துல உங்கள டிஸ்டர்ப் பண்ணுறதுக்கு சாரி” என்று வைதேகி தயக்கத்துடன் பேச்சை ஆரம்பிக்க, “சாரி எல்லாம் எதுக்கு, சொல்லுங்க என்ன விஷயம், எதாவது பிரச்சனையா?” என்று விக்ரம் கேட்டான்.

“பிரச்சனை இல்ல… ஆமா அந்த ரம்யாவை கொலை பண்ணது அவங்க காதலன் தானா!?” என்று வைதேகி கேக்க, “ஆமாங்க, காதல் என்ற பெயருல அந்தப் பொண்ணை ஏமாத்தி கொலை பண்ணிட்டான், நான் கூட இந்த வழக்குல தேவையே இல்லாம ராணா அண்ணனோட டிரைவரைச் சந்தேகப்பட்டுட்டேன்” என்று விக்ரம் சொல்ல, “அப்போ ராணா சார் சொன்னது உண்மை தான் போல” என்று தனக்குள் எண்ணிகொண்டாள் வைதேகி.

“ஹலோ…இத கேக்க தான் போன் பண்ணிங்களா?” என்று விக்ரம் கேக்க,

“ஹாங் இல்லை… நான் கண்டா போகத் தேவையான விஷயங்களை எல்லாம் மாறன் அண்ணன் பார்த்துகிறேன்னு சொல்லிட்டாரு, இருந்தாலும் என் குடும்பத்துல இருந்து எனக்கு வேற எதாவது பிரச்சனை வருமான்னு பயமா இருக்கு”என்று வைதேகி பயத்துடன் கேட்க,

“இன்னாவரைக்கும் உங்க பக்கத்துல இருந்து எந்த ஒரு தகவலும் கிடைக்கல வைதேகி… அப்படியே எதாவது பிரச்சனை வந்தாலும் நான் இருக்கேன் கவலை படாதீங்க” என்று தைரியம் சொன்னான் விக்ரம்.

“சரிங்க… ரொம்ப நன்றி நான் போனை வைக்கிறேன்” என்று வைதேகி சொல்ல, “இது உங்க நம்பரா?” என்று விக்ரம் கேக்க, “ஆமா… மாறன் அண்ணன் எனக்கு இன்னைக்கு தான் புது போன் வாங்கி கொடுத்தாரு. சரி நான் போன் கட் பண்ணுறேன்” என்ற வைதேகி கைபேசி இணைப்பைத் துண்டித்தவள் அப்படியே கட்டிலில் படுத்து உறங்க ஆரம்பித்தாள்.

ஆழ்ந்து உறங்கிக்கொண்டு இருந்த வைதேகியின் அறையில் உள்ள ஜன்னல் கதவுகள் காற்றில் படார் படாரென அடித்துக்கொண்டு இருந்த சத்தத்தில் வைதேகி தூக்கம் கலைந்து எழுந்தவள் சுவற்றில் மாட்டி இருக்கும் கடிகாரத்தை பார்க்க நேரம் நள்ளிரவு ஒரு மணியைக் காட்டியது.

“நிம்மதியான தூக்கத்தை இந்த ஜன்னல் கதவு வேற சத்தம் காட்டி எழுப்பி விட்டுடுது” என்று முணங்கிக் கொண்டே வைதேகி ஜன்னல் அருகே சென்று கதவை மூடப் போனவளின் கண்ணுக்கு நேற்று அவள் வீட்டின்னுள் பார்த்த அதே கருப்பான பெண்ணின் உருவம் ரணதீரனின் பங்களா வாசலில் தலை விரி கோலமாக மூன்று வேட்டை நாய்களுக்கு நடுவே படுத்து இருப்பதை பார்த்து வைதேகிக்கு தூக்கி வாரி போட்டது.

“நேத்து இந்த உருவத்தைப் பார்த்துத் தானே நான் மயக்கம் போட்டு விழுந்தேன்” என்று எண்ணிய வைதேகி தன் செல் போனில் உள்ள டார்ச்சைக்கொண்டு வேகமாகத் தன் அறையிலிருந்து கீழே இறங்கி சென்றவள், யாருக்கும் தெரியாமல் ரணதீரன் பாங்களவை நோக்கி நடந்து சென்றாள்.

வேட்டை நாய்கள் மூன்றும் ஏனோ வைதேகியை பார்த்தும் பார்க்காததை போலப் படுத்து இருக்க, வைதேகி சட்டென்று அங்கே இருந்த பெண்ணைத் தன் போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டவள்,

“யாரு இந்தப் பொண்ணு பார்க்க மனநலம் சரியில்லாத பெண்ணைப் போல இருக்காங்களே” என்று எண்ணிய வைதேகியின் செல் போனுக்கு சட்டென்று புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

கைபேசியின் அழைப்பு மணி கேட்டு ரணதீரனின் வீட்டு வாசலில் அமர்ந்து இருந்த பெண் தலை தூக்கி பார்த்தவள், “இந்த நேரத்துல நீ இங்க என்ன பண்ற? போப்போய்த் தூங்கு” என்று சொல்ல, மீண்டும் வைதேகியின் கைபேசிக்கு அதே புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

“மணி 1ஆகுது, யாரது இந்த நேரத்துல நமக்குப் போன் பண்ணுறாங்க”என்று அச்சதுடன் வைதேகி அந்த அழைப்புக்குப் பதில் தந்தவள்,”ஹலோ… யார் பேசுறது?” என்று கேட்டதும்,

“ஹாங் உன் புருஷன் பேசுறேன், கேள்வியைப் பாரு, ஒழுங்கா நீ எடுத்த போட்டோவை டெலீட் பண்ணுடி” என்ற கம்பிரமான குரலில், பேசுவது ரணதீரன் தான் என்று தெரிந்துக்கொண்ட வைதேகி பயத்தில் கைபேசி இணைப்பைத் துண்டித்தாள்.

ரணதீரனின் பங்களா வாசலில் நின்றுக்கொண்டு வைதேகி அங்கிருந்த பெண்ணைக் கேள்வியாகப் பார்த்து இருக்க, சட்டென்று பங்களாவின் கதவைத் திறந்துக்கொண்டு வெளியே வந்தான் ரணதீரன்.

“ஏங்க… யாருங்க இவங்க? இவங்கள பார்த்துத் தான் நேத்து நான் மயங்கி விழுந்தேன்” என்று வைதேகி சொன்னதும், “இவங்க யாரா இருந்தா உனக்கு என்ன!? எதுக்காக நீ இவங்கள போட்டோ எடுத்த?” என்று கோவமாகக் கேட்ட ரணதீரன் சட்டென்று வைதேகியின் கைபேசியை பிடுங்கி கீழே தூக்கி போட்டு உடைத்தான்.

“ஏன் இப்படி பண்ணுறீங்க, நான் இப்போ என்ன கேட்டுட்டேன்னு இவ்ளோ கோவம் உங்களுக்கு, என்னை உங்களுக்குப் பிடிக்காதுன்னு எனக்குத் தெரியும், அதுக்குன்னு இப்படியா என்னைக் கஷ்டடுத்தி பார்ப்பீங்க, மாறன் அண்ணன் எனக்கு உதவி செய்யறேன்னு சொன்னதால தான் நான் இங்க இருக்கேன், இல்லைனா நான் எப்பவோ இங்க இருந்து போய் இருப்பேன்” என்று கண்கள் கலங்கி பேசும் பெண்ணவளின் கண்ணீரை கண்டு ரணதீரனினுக்கு துளி அளவும் அவள்மீது பரிதாபம் வரவில்லை.

“நடிக்காத…உன்னை மாதிரி அழகான வெள்ளை தோல் ஆளுங்க எல்லாம் அடுத்தவுங்கள அழ வச்சி தான் ரசிப்பிங்க, நீயும் கூட எவனையோ அழ வச்சிட்டு தானே இங்க வந்து மறைந்து இருக்குற, போ… போய் உன் நீலிக்கண்ணீரை உன்னோட புது அண்ணன்கிட்ட நடிச்சு காட்டு, அவரு உன்னை நம்புவாரு” என்ற ரணதீரன், நாய்களுக்கு நடுவே அமர்ந்து இருக்கும் கருப்பான உருவத்துக்குச் சொந்தக்காரியான பெண்ணைக் கைத்தாங்கலாகத் தூக்கி, “பொம்மி …நீ வா நம்ம உள்ள போகலாம்” என்றவன் கிட்டத்தட்ட ரணதீரனை விடவே ஐந்து ஆறு வயது கூடுதலாக இருக்கும் பெண்ணவளை அழைத்துக்கொண்டு தன் பங்களாவிற்குள் நுழைந்து கதவை அடித்துச் சாத்திகொண்டான்.

ரணதீரனின் கோவத்தை மீறி அவன் வார்த்தையில் உள்ள வலிகள் வைதேகியின் மனதை பிசைந்தது.

“என்ன சொல்லுறாரு இவரு, வெள்ளை தோல் ஆளுங்க எல்லாம் கெட்டவுங்கன்னு சொல்ல வராரா? இல்லை கருப்பான ஆளுங்க எல்லாம் பாவம்னு சொல்ல வராரா?” என்று புரியாமல் வைதேகி கீழே உடைந்துக்கிடந்த கைபேசியின் பாகங்களை எல்லாம் ஒன்றாக இணைத்துக் கொண்டு இருந்தாள்.

உடைந்த கைபேசியை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் போக எண்ணியவளின் அருகே நிழல் ஆடுவதை போலத் தெரிந்ததும், வைதேகி சட்டென்று திரும்பிப் பார்த்தவளின் கண் எதிரே இருபத்தைந்து வயது மதிக்கதக்க அழகான பெண் ஒருவர் சிரித்த முகத்துடன் நின்று இருக்க,”ஏய்…உன்னை… உன்னைத் தானே நேத்து நைட் வேலு காருக்குள்ள தூக்கி வீசினாரு!?” என்று வைதேகி கேட்க, அந்தப் பெண்ணோ மேலும் அழகாகச் சிரித்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!