Skip to content
Post Views: 3,561
விக்ரமுக்கு பல்லவியின் மீது கோபம் இருந்தாலும், தன்னை புரிந்து கொள்ள வில்லையே, அவளையும் வருத்தி கொள்கிறாளே என்று நினைந்தவன்.. கொஞ்சம் விட்டு பிடிப்போம் என்று நினைத்து காரில் கிளம்பினான்..
பல்லவியின் முகத்தை பார்க்க முடியவில்லை, விக்ரமுக்கு ஒரு வாரத்தில் இவ்வளவு இளைத்து இருக்கிறாளே, கண்ணுக்கு கீழ் கருவளையம் போல் இருக்க, அவள் சரியாக தூங்க வில்லை என்று நினைத்தவன், இவளை எப்படி தன்னை நம்ம வைப்பது,,
அவளையும் வருத்தி, தன்னையும் நம்பாமல் என்று புலம்பிய படியே வீடு வந்து சேர்ந்தான்…
Advertisement
விக்ரமனின் தந்தை , “ஞானதுரையிடம் இந்த கல்யாணம் வேண்டாம்” என்று மிக தன்னையாகவே சொல்ல..
Advertisement
ஞானதுரை வானத்துக்கும், பூமிக்கும் குதித்தார், ஏன் வேண்டாம், ஏதற்கு வேண்டாம் நீங்க தானே முதலில் பேசுனீங்க, பிடிச்சுருக்குன்னு சொன்னீங்க, இப்போ இப்படி வந்து பிடிக்கலன்னு சொன்ன எப்படி, நான் எல்லார் கிட்டையும் விக்ரமுக்கும் என் பொண்ணு ஐஸ்வர்யாவுக்கு கல்யாணம் பண்ண போறோமுன்னு சொல்லி இருக்கேன்,, இப்போ வந்த இப்படி சொன்னா நான் ஒத்துக்க மாட்டேன்” என்று சண்டை போட..
Advertisement
“சுந்தர் ஞானதுரையிடம் விக்ரம், ஐஸ்வர்யாவை பிடிக்கலன்னு சொல்லிட்டான் துரை, விக்ரமுக்கு ஐஸ்வர்யா மேல் எந்த பிடிப்பு வரலையின்னு சொல்லுறான் புரிஞ்சுக்கோ துரை”, என்று சமாதானம் பண்ணி அனுப்பி வைத்தார்..
Advertisement
ஞானதுரை இன்னும் வீட்டில் யாரிடமும் சொல்ல வில்லை, கல்யாணம் நின்றது என்று ரோசிக்கு தெரிந்தாள், தன்னை ஒரு வழி ஆக்கி விடுவாள், எப்படி இந்த விசயத்தை சொல்வது என்று நினைத்து கவலையில் இருக்க..
ஞானதுரை அண்ணன் மகளை சரியாக கவனிக்கவில்லை..
பல்லவி மீண்டும் ஒரு வாரம் வீட்டில் இருந்த படியே வேலை பார்த்தவள், தன் மனதை தேற்றி கொண்டு ஆபிஸ்க்கு சென்று வந்தாள்..
விக்ரம் பல்லவியை கண்காணிக்க வைத்த ஒருவன் பல்லவியை பற்றி, தகவல் சொல்லிக்கொண்டு இருந்தான்,.
மேம் ஆபிஸ் போறாங்க சார் என்க.. அவளை புகைப்படம் எடுத்து டெய்லி அனுப்பு மாறு சொல்லி இருந்தான், அதன் படி பல்லவியை தினமும் புகைப்படம் எடுத்து அனுப்ப,, அந்த புகைப்படத்துடன் சிறிது நேரம் பேசி கொண்டு இருப்பான் விக்ரம்,..
அவளை நேரடியாக பார்க்க ஆசை பட்டால், அவள் ஆபிஸ் விட்டு வரம் வழியில் சென்று விக்ரம் காரில் சாய்ந்து நின்று இவளை பார்க்க.
அவளோ யாரோ நிற்பது போல் விக்ரமனை கடந்து சென்று விடுவாள்..
விக்ரம் சில முறை பல்லவியிடம் பேசலாம் என்று அருகில்வர,, இவளோ அவன் பக்கம் வந்தாலே முறைத்து விட்டு செல்ல..
அவளுக்கு கோபம் குறையட்டும் என்று பொறுமையாக இருந்தான்.
மகனின் வருத்தமான முகத்தை பார்த்த சுந்தர், விக்ரமிடம் என்ன? விசயம் என்று எங்க,, “ஒன்னும் இல்ல டாட் “என்றான்..
” உன் முகமே சரியில்ல என்ன விசயம் ஜித் கண்ணா அப்பாகிட்ட சொல்லு”, என்றார்.
நீண்ட நாள்களாக தன் அறைக்கு வராத தந்தையை பார்த்த விக்ரம், வாங்க டாடி என்று, அவர் அருகே அமர்ந்து, அவரின் தோளில் சாய்ந்து கொள்ள..
” என்னாச்சு ஜித் கண்ணா? அது நான் அப்பா அந்த கல்யாணம் வேண்டாமுன்னு ஞானதுரை கிட்ட சொல்லி கல்யாணத்த நிருத்திட்டேனே அப்பறம் என்ன? உனக்கு பிடிச்ச பொண்ண பாத்தீயா”?..
” ஆமாம் டாடி “என்றவன். பல்லவியை பத்தி சொல்ல, அனைத்தையும் கேட்டவர்..
“சாரிடா ஜித் என்னால தானே, நான் மட்டும் சரியான நேரத்துல ஞானதுரைக்கிட்ட இந்த விசயத்தை சொல்லி இருந்தா, இந்த பிரச்சனை வந்து இருக்காது..
” என்ன டாடி பண்ணுறது, அவ கோபம் குறையட்டும் பேசலாம்”..
” அந்த பொண்ண உனக்கு அவ்வளவு பிடிச்சுருக்கா “?..
” ரொம்ப பிடிச்சுருக்கு டாட், அவ தான் எனக்கு எல்லாமே, அவ கிட்ட அம்மாவோட சில குணம் இருக்கு டாட், ஆனா என்னை புரிஞ்சுக்க மாட்டேங்குறா, ஒரு நாள் புரிஞ்சுப்பா, அந்த நாளுக்காக காத்து இருக்கேன்”…
” சரிடா நல்ல தூங்கு நாளைக்கு பேசலாம்”.. என்று அவர் அறைக்கு சென்று விட்டார்.. மகன் வருந்துவதை பார்க்க முடியாதவர், மறுநாளே பல்லவியை பார்க்க அவளின் ஆபிஸ்க்கு வந்து விட்டார்..
அந்த ஆபிஸ்சில் உள்ள அனைவருக்கும் சுந்தரை தெரியும், பின்னே டாப் 20 கோடிஸ்வரனை யாருக்கு தான் தெரியாது, சுந்தர் நிறைய பிஸ்னஸ் நடத்துகிறார் , செல்போன் கம்பெனி, ஐ. டி கம்பெனி என்று இன்னும் நிறைய நடத்தி வருபவர்..
ஏன் பல்லவிக்கு கூட சுந்தரை தெரியும் பல முறை டி. வியில் பார்த்து இருக்கிறாள், ஆனால் விக்ரம் அப்பா என்று தெரியாது..
சுந்தர் பல்லவியின் ஆபிஸ் வந்து, கம்பெனியின் ஓனரை நேரடியாக பார்த்து, பல்லவிடம் தனியே பேச வேண்டும் என்று சொல்ல..
சுந்தரை முதலில் வரவேற்றவர், பின்பு சுந்தரை தனி அறையில் அமர வைத்து விட்டு, பல்லவிக்கு தகவல் சொல்ல…
யார் என்று முதலில் கேட்டவள், சுந்தர் சார், எந்த சுந்தர் என்று தகவல் சொன்னவனிடம் கேட்க..
ஐ. டெக் கம்பெனியோட ஓனர் சுந்தர் ஜித் ஜீ என்று சொல்ல..
சரி என்றவள், இவர் ஏன் என்னை பார்க்கனும் என்று நினைத்தவள்..
சுந்தர் இருக்கும் அறைக்கு வந்தவள், சுந்தரை பார்த்து “குட் ஈவ்னிங் சார், ஐ யம் பல்லவி” என்று தன்னை அறிமுகம் பண்ணிக்கொள்ள…
பல்லவியிடம் தனது கையை கொடுத்தவர்,” சுந்தர் ஜித்” என்று தன்னை அறிமுகம் படுத்தி கொண்டவர்…
பல்லவிக்கு சுந்தர் ஜித்தா என்ன, விக்ரம் ஜித் அப்பாவா இருப்பாரோ என்று சந்தேகம் வர…
“ஹாய் மருமகளே “என்று அழைத்தவர்,, “நான் விக்ரம் ஜித்தோட அப்பா சுந்தர் ஜித்” என்க.. “சொல்லும்மா உனக்கும் என் பையனுக்கு என்ன பிரச்சனை”, என்றார்..
பல்லவிக்கு இவ்வளவு பெரிய கோடிஸ்வரனின் மகனா விக்ரம் என்று திகைத்து எதுவும் பேசாமல் நிற்க..
“என்னோட தப்பு தான்மா , நான் விக்ரமனிடம் சரியா கேட்காம ஐஸ்வர்யாவுக்கு, விக்ரமுக்கும் கல்யாணம் பேசினேன்.. நீ அத தப்ப புரிஞ்சுகிட்ட, உன் சித்தாப்பா வேனா கேளு, நான் கல்யாணத்த நிறுத்த சொல்லிட்டேன்….
இப்போ உனக்கு புரிஞ்சதாமா,, இந்த கலயாண விசயத்துல விக்ரமுக்கு எந்த சம்பந்தம் இல்ல, நானா முடிவு பண்ணி, நானே ஞானதுரைகிட்ட சொல்லி இந்த கல்யாணம் வேண்டாமுன்னு சொல்லிட்டேன்”..
“இப்போ உனக்கு புரிஞ்சதா “.. என்றார்..
பல்லவி” ஆம் “என்று தலையாட்ட..
” என் பையனுக்கு உன்ன ரொம்ப புடிச்சுருக்கமா, நீ கோபமா இருக்கேன்னு வருத்தபடுறான், அம்மா இல்லாத பையன்மா அவன், அவன் எந்த விசயத்துக்கும் கலங்கி நான் பார்த்ததே இல்ல, இப்போ உனக்காக, உன் அன்புகாக கலங்கி போய் நிக்குறான், பிலிஸ்மா அவனை ஏத்துக்கோ,, நான் பண்ண தப்புக்கு அவனை தண்டிச்சுறாதமா” என்றார்..
” ஐயோ அங்கிள் நீங்க எவ்வளவு பெரியவர், என்க்கிட்ட போய், வேண்டாம் அங்கிள்.. ” என்றவளை..
” அப்போ நீ கண்டிப்பா என் பையன் கிட்ட பேசனும்”..
பல்லவி ” சரி” என்று தலையாட்டியவள், சுந்தரின் காலில் விழ,,..
” நல்லா இருமா” என்றவர், இரண்டு பேரும் சீக்கிரம் சமாதானம் ஆகுங்க,, நான் இந்தியா போய் உங்க வீட்ல பேசுறேன்…
பல்லவியின் கலங்கிய கண்ணை பார்த்தவர்,, “பொம்பள பிள்ளைங்க அழ கூடாது மா அழத, என் ஜித் உன்ன நல்லா பாத்துப்பான்”….
” சீக்கிரம் எங்க வீட்டுக்கு மருமகளா வாம்மா என்று சொல்லி விட்டு சென்று விட்டார்..
சுந்தர் வந்து பல்லவியை பார்த்து சென்று இரண்டு நாட்கள் ஆனது,, பல்லவி கூகுளில் சுந்தரை பற்றியும், விக்ரமை பற்றி தெரிந்து கொள்ள, மனதை இன்னும் குழப்பி கொண்டாள்.
இவ்வளவு பணக்காரர் தனக்கு வேண்டாம் என்று முடிவு எடுத்தவள், விக்ரமனை சந்திக்கக் கூடாது, கோபப்பட்டது கோபம் போலவே போகட்டும் என்று அமைதியாக இருக்க..
விக்ரமுக்கு, சுந்தர் பல்லவியை பார்க்க சென்று வந்ததது தெரிந்து விட..
இன்னும் இவளுக்கு என்னவாம், எல்லாரும் போய் இவ காலில் விழனுமாம் போடி,, நீயா வா என்று பல்லவியின் மீது கோபமாக இருக்க,, ஒரு வாரம் கடந்து இருந்தது இதற்கு மேல் முடியாது என்றவன்,,.
பல்லவியை நேரில் பார்க்க அவளின் ஆபிஸ் வாசலில் காரில் சாய்ந்து இருக்க..
பல்லவி வேலை முடிந்து வெளியில் வர,, விக்ரமனை பார்த்தவள், ஒரு நிமிடம் பார்த்து சந்தோச பட்டு முகம் மலர்ந்து, பின்பு மீண்டும் முகம் சுருக்கியதை பார்த்தவன்..
பல்லவி என்று அருகில் செல்ல..
முதலில் நின்றவள், பின்பு வேண்டாம் என்று வேகமாக நடக்க..
விக்ரம் பல்லவியின் கையை பிடித்து இருந்தான்.
அவளோ அவனிடம் இருந்து தன் கையை எடுத்து விட்டு ஒன்னும் பேசாமல் ரெயில்வே டேஷசன் நோக்கி நடந்தாள்..
” போடி போ, நீயே என்னை தேடி வருவ என்றவன் , சத்தமாக சொல்லி விட்டு சென்றான்..
பல்லவிக்கு மனமே ஆரவில்லை, எவ்வளவு ஆசையாக தன்னோடு பேசவந்தவனை காயப்படுத்தி விட்டோமோ என்று வருந்தியவள்.
ஒரு மனமோ அவனிடம் பேசு என்க, இன்னொரு மனமோ அவன் எவ்வளவு பெரிய ஆள் உனக்கு வேண்டாம் என்று இன்னொரு மனம் சொல்ல, தன்னையே வருந்திக்கொண்டவள், என்ன முடிவு எடுப்பது என்று குழப்பி கொண்டாள்..
இன்று விக்ரமனின் பிறந்த நாள், காலையிலே பல்லவி கோவில் சென்று விக்ரமனின் பெயரில் அர்ச்சனை பண்ணிவிட்டு வந்தவள்,, அவனுக்கு ஒரு வாழ்த்தாவது சொல்ல வேண்டும் என்று நினைக்க,, வேண்டாம் எல்லாம் முடிஞ்சது மாதிரி தான் இருக்கு, நீ புதுச ஆரம்பிக்காத,, நீ வாழ்த்து சொன்னா மறுபடியும், இது தொடரும், அமைதியா இரு என்று மனதை ஒரு நிலை படுத்தியவள்,, அமைதியாக இருக்க..
இன்னொரு மனமோ அவன் உன் பிறந்த நாளுக்கு என்வெல்லாம் செய்யதான்.. நீ ஒரு வார்த்தை வாழ்த்து சொன்னீயா என்று கேட்க..
துணிந்து முடிவு எடுத்தவள், நீண்ட நாட்கள் கழித்து விக்ரமுக்கு போனில் அழைக்க…
நீண்ட நேரம் கழித்து போனை எடுத்து ஹலோ என்றான் விக்ரம்..
” ஹலோ நான் தான் விக்ரம் பல்லவி” என்றாள்..
” பல்லவியா அப்படியாரும் எனக்கு தெரியாது போனை வைங்க” என்று போன் காலை கட் பண்ணி இருந்தான் விக்ரம்……
error: Content is protected !!