Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதோ இதோ என் பல்லவி

Itho Itho En Pallavi 7 1

இதோ.. இதோ.. என் பல்லவி



Advertisement

அத்தியாயம் – 7

Advertisement

Advertisement

 ஞானதுரை  விக்ரமனை அவரின்   வீட்டிற்கு அழைக்க.

Advertisement

“இல்ல  அங்கிள்  ஒரு  பிரெண்டை  பார்க்க வந்தேன், வேலை இருக்கு போகனும்” என்றான்.

 ஞானதுரை  ”  வாங்க  மாப்பிள்ளை” என்று அவரின்  வீட்டுக்கு அழைக்க செல்ல.

  பல்லவி  ஷாக்கில்  இருந்து, நினைவு  வந்தவள்,   ஞானதுரையின் மாப்பிள்ளை  என்ற  வார்த்தையை கேட்ட பின், தன்னை சுத்தி என்ன நடக்குது.

விக்ரம் ஏன் என்னிடம் பொய் சொன்னார், என்னை காதலிப்பதாக சொன்னது பொய்யா, உண்மையா?.

 எது உண்மை, தன்னை காதலிப்பது உண்மையா, இல்லை ஐஸ்வர்யாவை கல்யாணம் பேசியதா…

ஐயோ… என்றவளின் கண்ணீல் இருந்து  கண்ணீர்  அருவி போல்  கொட்ட.

தனது அறைக்கு வந்தவள், அவளின்  கட்டிலில் படுத்து  அழுது கொண்டே இருந்தாள்..

தன்னிடம் விக்ரம் பொய் சொன்னாரா,?  ஐஸ்வர்யாவை கல்யாணம் பண்ணிப்பாரா,  அப்பறம்  ஏன் என்னிடம்  வந்து காதலை சொல்லி, காதலித்தது ஏன்?  என்று  புலம்பிய  படியே   அழுது கொண்டே தூங்கி இருந்தாள்.

விக்ரம்  ஞானதுரையின்  வார்த்தையை தட்ட முடியாமல், ஒரு ஐந்து  நிமிடம்  அவரின்  வீட்டில் இருந்தவன்..

”  வேலை  இருக்கு அங்கிள்” என்று கிளம்பி இருந்தான்..  போகும் போது  பல்லவி இருக்கும்  வீட்டை பார்த்த படியே  சென்றான்..

காரில் ஏறியவுடனே  பல்லவிக்கு   போனில்  அழைக்க,, அழைப்பு போய் கொண்டே  இருந்ததே தவிர, பல்லவி போனை எடுக்க வில்லை…

போனை  எடுடி, போனை எடு  என்று திட்டிக்கொண்டே  அவனது  வீடு வந்து சேர்ந்தான்..

எப்பொழுதும்  அவனின் தந்தை அறைக்கு அனுமதி கேட்டே செல்பவன், இன்று அனுமதி இல்லாமல் தந்தையின்  அறைக்கு செல்ல..

விக்ரமனின் தந்தை சுந்தர் ஒரு முக்கியமான  பைலை  பார்த்துக்கொண்டு  இருத்தார். கதவு திறந்த  சத்தம்  கேட்டு  யாரு என்று பார்க்க..

விக்ரமனை  பார்த்தவர் ”  வா  ஜித்  கண்ணா என்றவர்,,  என்ன  முகமெல்லாம்  ஒரு மாதிரியா  இருக்கு என்ன விசயம்”..

” டாட் நீங்க  ஞானதுரை  அங்கிள் கிட்ட  கல்யாணம் வேண்டாமுன்னு  இன்னும்  சொல்லலீயா”?  என்றான்..

 ”  ஆமா விக்ரம்  அவன்  ஒரு பிராசெக்ட்  விசயமா  வெளியூர் போயிட்டு, வந்துட்டு இருக்கான் அவன  பாக்க  முடியல ஜித்”…

”  போங்கப்பா”  என்றவன்,,. ” நாளைக்கு  நீங்க  அங்கிள் கிட்ட சொல்லுறீங்க, அவ்வளவு தான் ”  என்று  கதவை  சாத்தி சென்று விட்டான்..

அவனின் ரூம் வந்தவன், மறுபடியும் பல்லவிக்கு போனில் அழைக்க, போன் சிவிச் ஆப் என்று வர, கடுப்பானது விக்ரமுக்கு  நாளை நேரில்  பேசிக்கொள்ளலாம் என்று  சிறிது நேரம்  கழித்து தூங்கி போக..

 மறுநாள் காலையில்  எழுந்த விக்ரம், பல்லவிக்கு  போனில் அழைக்க, அழைப்பு  போகாமல்  இருக்க, தன்  நம்பரை  பிளாக்கில் போட்டு விட்டாள்,  என்று கோபம் கொண்டவன்.. மீண்டும் வேற ஒரு நம்பரில் இருந்து  பல்லவிக்கு  கால்  பண்ண,..

சிறிது நேரம் கழித்த பல்லவி போனை எடுத்து ” ஹலோ ”  என்க.

  ”  பல்லவி ”  நான் விக்ரம்  என்றான்.

 இவனின்  குரலை கேட்ட பல்லவி போனை கட் பண்ணி இருந்தாள்..

 அங்கே பல்லவி போனை கட் பண்ண, இவளை என்றவன் மறுபடியும் போன் போட, கால் சென்று கொண்டே இருக்க,..

பல்லவி போனை எடுக்க வில்லை..

புள் ரிங் போயி கால் கட்டாக,  விக்ரம் போனை தூக்கி  எறிந்திருந்தான், கோபம் கட்டு கடாங்காத  கோபம்.

என் போனை  எடுக்க  மாட்டீயா, வர்ரேண்டி  நேருல, உனக்கு இருக்கு என்றான்…

பல்லவியின்  வீட்டின் வெளியே ஒருவனை  24  மணி நேரமும் கண்காணிக்க சொன்னான்,, பல்லவி வீட்டை விட்டு வெளியே வந்த தன்னிடம் சொல்ல  வேண்டும் என்று சொல்லி இருந்தான்.

 பல்லவின்  மனதில் ஆயிரம் கேள்விகள், அவளால் வெளியே சொல்ல முடியவில்லை  அழுது, அழுது  ஓய்ந்து  போய் இருந்தாள், சரியாக சாப்பிடாம அழுத முகம்  கண்கள் வீங்கி சிவந்து  அவள் முகத்தை அவளால்  கண்ணாடியில்  பார்க்க முடியவில்லை,,.

வீட்டில் இருந்த படியே  ஒருவாரம்  வேலை பார்த்தவள், தெரியாத நம்பரில் இருந்து  போன் வந்தாள்  பல்லவி எடுக்க வில்லை,  விக்ரம் தன்னை அழைப்பான் என்று, பல்லவி போனை  எடுக்க வில்லை,,   பல்லவிக்கு உண்ண  உணவு  பொருள்கள் எல்லாம் தீர்ந்து போயிருக்க. கடைக்கு  செல்லலாம்  என்று வெளியில் வந்தவளை,, பார்த்த விக்ரமனின் ஆள், அவனிடம் தகவல் சொல்ல..

”  நான் வந்துட்டே இருக்கேன்,  மேம் எங்க  போறாங்கன்னு பாரு, பின்னாடியே போ”  என்றான்..

”  சரி சார் ”  என்றவன், பல்லவின் பின் தொடர்தான்..

பல்லவி வீட்டின் அருகே உள்ள  பெரிய  மாலில்  தனக்கு  தேவையான உணவு பொருள்களை  வாங்கி கொண்டு இருந்தாள், தீடிர் என்று  யாரோ தன் பக்கத்தில்  நிற்பது போல் தெரிய, நிமிர்ந்து  பார்த்தாள், விக்ரம் மாஸ்க் அணிந்து நின்று இருந்தான்..

அவனை கடந்து  சென்று  பில்  போடும்  இடத்துக்கு வந்து நின்றவளிடம்,, அருகில்   வந்தவன்,  “வெளியே இருக்கேன் வா உன்கிட்ட   பேசனும் ”  என்று   சொல்லி சென்று விட..

 இவளோ விக்ரம் சொல்லியதை காதில் வாங்காதவள்   போல. பொருள்களை பில் போட்டு, வீடு நோக்கி நடந்து செல்ல…

காரில் அவளை பின் தொடர்ந்தவன்,  அவளின் முன் சென்று காரை நிப்பாட்டி, காரில் இருந்து இறங்கியவன்,  ” பல்லவி உன்கிட்ட பேசனும் வா”  என்று அழைக்க..

 அவளோ அவனை யார் நீ என்பது போல் பார்த்து விட்டு, “உங்களை எனக்கு தெரியாது முன்ன, பின்ன தெரியாதவங்க கிட்ட நான் பேசுறது இல்ல, வழிய விடுங்க  சார்”, என்று அவனை கடந்து செல்ல…

”  பல்லவி  பிலிஸ் பல்லவி புரிஞ்சுங்கோ, நான் எல்லாம் விளக்கமா சொல்றேன் வா”  என்று அழைக்க..

 “உங்க   கிட்ட பேச எனக்கு ஒன்னும் இல்லை, நீங்க என்ன சொன்னாலும்  தலைய ஆட்டுற பல்லவி நான் இல்ல,   என்ன பேச வைக்காதிங்க  சார், நானே  ஏன்டா வாழ்றோமுன்னு இருக்கேன்,தேவை இல்லாம என்ன பேச வைக்கதீங்க,  நீங்க யாரா வேனா கல்யாணம் பண்ணுங்க, யாரோ வேனா  லவ் பண்ணுங்க,  இனிமே என் பக்கம் வர கூடாது”,,..

“வந்த என்னடி பண்ணுவ,”..

“நீங்க ஒன்னும் வரவேண்டாம் வழிய விடுங்க,”..

 “உன்கிட்ட   மரியாதையா சொன்னா   நீ கேட்க மாட்ட வா”  என்று அவளை  கைபிடித்து  இழுத்து காரில் ஏற்ற..

அவளோ காரில் வர முடியாது  என்று அடம் பிடிக்க.

”  பல்லவி  ஒரு 5  நிமிசம்  நான் சொல்லுற கேளு,  என்று பல்லவியை காரில் ஏற்றினான்.

  “நீங்க   ஐந்து நிமிசமுன்னு சொல்லி  என்ன  பண்ணுவீங்கன்னு  எனக்கு தெரியும், கதவை திறங்க, உங்களுக்கும்  எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல, மரியாதையா கதவை இருக்க, இல்ல நான் மனிஷியா  இருக்க மாட்டேன்”  என்று விக்ரமிடம் சண்டை போட…

“பல்லவி சொன்னா கேளு, நான் எல்லாம் உனக்கு சொல்லுறேன்..”

“நீங்க என்ன சொன்னாலும்  நான் கேட்க மாட்டேன்”…

” பல்லவி கொஞ்சம் பொறுமையா கேளு, ஜஸ்வர்யாவை எனக்கு பிடிக்கல எப்பவோ, எங்க அப்பா கிட்ட சொல்லிட்டேன், இந்த கல்யாணத்தை நிப்பாட்ட, எங்க அப்பா இன்னும் ஞானதுரை அங்கிள் கிட்ட சொல்லல்ல, இப்போ சொல்லிட்டாரு  புருஞ்சுக்கோ”…

”  நீங்க  சொல்லுற நான் நம்ம தயாரா இல்ல, கதவை திறங்க நான் போகனும்… கதவை திறங்க   போறீங்க இல்லையா”?..

”  பல்லவி சொன்ன கேளுடா, நான் உன்ன தவிர வேற யாரையும் என் மனசுல நினைக்கல”…

”  இத  நான் நம்மபனுமா “?..

 ” ஆமாம்  என்னை நம்பு பல்லவி, உண்மையா சொல்லு, என் காதலை நீ உணரலையே, என் காதல் உனக்கு புரியலையா, நான் உன்னை ஏமாத்துவேனா”…

”  ஆமா நான் தான் நீங்க உண்மையாவே என்னை லவ் பண்ணுறீங்கன்னு நெனச்சு ஏமாந்து போனேன்,, ஆனா நீங்க என்னை  டைம் பாஸ் பண்ண லவ் பண்ணியிருக்கீங்க”…

  ”   ஏய் என் கண்ண பாத்து சொல்லு நான் உன்னை, டைம் பாஸ்சுக்கு பழகினேனா,, என் அன்பு உனக்கு புரியலையா பல்லவி”..?

” என்ன லவ் பண்ணிட்டு, ஐஸ்வர்யா கல்யாணம் பண்ண பேசுறத, “..

” அத  தானே நான்   சொன்னேன் தானடி, வீட்டுல முடிவு பண்ணிட்டாங்க”..

 ”  என்ன வீட்டுல, நீங்க என்ன  சின்ன குழந்தையா, உங்கள கேட்காம எப்படி கல்யாணம் பேசி இருப்பாங்க, இந்த கதை எல்லாம் என்கிட்ட விடா தீங்க, உங்ககிட்ட பேச எனக்கு விருப்பம் இல்ல, கார் கதவை திறங்க,”..

” பல்லவி  புரிஞ்சிக்கோடா  நான் உன்னை ஏமாத்தல”…

  ”   சரி  என்னை ஏமாத்தல தானே அப்போ  கதவ திறங்க,”  என்றாள்…

 விக்ரம்  கார்  கதவை  திறங்க,,.

“நன்றி  சார்,, என்க்கிட்ட மறுபடியும் பேசாதீங்க என்றவளின் கண்ணீல் அவளை மீறி  கண்ணீர்  வெளியே வர..

பல்லவியின் கையை பிடித்துக்கொண்டன், ”  என்னை வேண்டாமுன்னு  சொன்ன  தானே  அப்போ ஏன் அழற, “…

”  நான் உங்களை உண்மையா நேசிச்சேன், நீங்கதான் எல்லாமுன்னு நெனச்சேன், என் நெஞ்செல்லாம்  வலிக்குது தெரியுமா,  எங்க சித்தப்பா உங்களை ஐஸ்வர்யா மாப்பிள்ளை சொன்னவுடன், நான் எப்படி துடிச்சுருப்பேன், நீங்க தான் எல்லாமுன்னு  நெனச்சு இருந்த என் மனசுல  இடி வந்த விழுந்தமாதிரி ஆகிறுச்சு. என்னால அத ஏத்துங்க முடியல,,.. “

 “பல்லவி”  என்றான்..

 ”  வேண்டாம் சார் எல்லாம் முடிஞ்சது, இனி மேல பேச எதுவும் இல்ல, என்னால முடியல,, இப்போ  தான் என் மனதை தேத்தி  நானே எனக்கு தைரியம் சொல்லி வச்சு இருக்கேன்.. அதை  ஒடச்சுறாதீங்க,,  என்று அவளின் கண்ணீரை  துடைத்து விட்டு தனது பொருள்களை  எடுத்துக்கொண்டு  விக்ரமனை திரும்பி  கூட பார்க்காமல் சென்று விட்டாள்….

 மனதில் சொல்லென வலிகள், விழிகளில்  கண்ணீர் நிற்க வில்லை  பல்லவிக்கு,,..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!