Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தவணைமுறையில் நெஞ்சம் கொள்ளுதே

TNK-4-1

சலாம் ராக்கி பாய்

ராக் ராக் ராக்கி

சலாம் ராக்கி பாய்

 

சலாம் ராக்கி பாய்

சலாம் ராக்கி பாய்

இலாக்கா தேறா பாய்

டு ஹேய் சப்கா பாய்

 

 என்ற பாடல் வரிகள் பேக்ரவுண்ட் மியூசிகா ஒலிக்க கேஜிஎஃப் ராக்கி கெட்டப்பில் அந்த திரையில் தோன்றினார் வேதசலாம் தாத்தா.

“ஹாய் பிரண்ட்ஸ் நான் உங்க சலாம் வேதா பாய் எல்லாரும் எப்படி இருக்கீங்க?”என்று தனது இன்ஸ்டா லைவில் கலந்து கொண்ட விவெர்ஸ் பார்த்து கேட்டார்.



Advertisement

 

“ஹாய் வேதா பாய்”

 

Advertisement

“ஹாய் டார்லிங்”

Advertisement

 

“லவ் யூ வேதா பாய்”

 

Advertisement

“வேதா பாய் ஏன் எவ்வளவு நாள் லைவ் வரல”

 

“சலாம் வேதா பாய்”

 

“ஹேண்ட்சம் வேதா”

 

“ வேதா பாய் கெட்டப் சூப்பர்”

 

“❤️❤️❤️”

 

“ மாஸ் வேதாபாய் 🔥”

 

“வேதா பாய் சால்ட் அண்ட் பேப்பர் லுக்குல ஏகே மாதிரி இருக்கீங்க” என்று தொடர்ந்து கமெண்ட்கள் வந்து கொண்டிருக்க தனது வெள்ளை முடியை ஸ்டைலாக கோதிக்கொண்டு கமெண்டுகளைப் படித்து அதற்கு ரிப்ளை பண்ண தொடங்கினார்.

 

“ஹாய் சதா செல்லம் ஐ லவ் யூ”

 

“ஹாய் வெங்கி”

 

“ஹாய் சுமா டார்லிங்” என்று தொடர்ந்து அவர்களிடம் பேசிக் கொண்டு இருக்க “மாமா” என்று அழைத்து வாசலில் நின்றாள் புஷ்பராணி.

 அவரின் குரலில் நிமிர்ந்து பார்த்தார் வேதாச்சலம்.

அரசூரில் மிகப்பெரிய செல்வந்தர் திரு.வேதாசலத்தின் தந்தை கணேசன். அவருக்கு சுற்றியுள்ள அனைத்து ஊர்களிலும் தோட்டம்,இரண்டு அரிசி ஆலைகள், ஒரு சர்க்கரை ஆலை, தியேட்டர், சூப்பர் மார்க்கெட், லார்ஜ், ஹோட்டல் என பல உள்ளது. அவ்வளவு சொத்து இருந்தும் வேதாச்சலம் தனது இருபதாவது வயதில் இந்திய ராணுவத்தில் சேர்ந்து 15 ஆண்டுகள் அதில் பணிபுரிந்தார். அவரின் மகன் விநாயகம் பத்து வயது சிறுவனாக இருந்தபோது தனது அன்னை கோமதியை இழந்து விட்டதால் தனது மகன் தாயின் நினைவில் வாடிடக்கூடாது என்று அந்தப் பணியை துறந்துவிட்டு தனது சொத்துக்களை வந்து பராமரிக்க தொடங்கினார். உறவுகள் எவ்வளவு கெஞ்சியும் இரண்டாவது திருமணம் செய்யாமல் தனது மகனுக்காகவே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார். காலப்போக்கில் அவரின் தாய் தந்தை இருவரும் இறந்துவிட வாலிப வயதினை எட்டி விநாயகம் பக்கத்து ஊரில் காலேஜ் படிக்க சென்றபோது அவர் ஜூனியராக சேர்ந்த புஷ்பராணி அழகு மற்றும் பேச்சில் மயக்கி அவளை காதலித்து பெரியோர்களின் ஆசியோடு திருமணம் செய்து கொண்டார். புஷ்பராணி எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். இருவருக்கும் திருமணம் ஆகி அடுத்த வருடத்தில் திருகுமரன் பிறந்துவிட அவர் தனது பேரன் திருகுமரனுக்காக கிட்டத்தட்ட அந்த ஊரின் பாதி இடத்தில் தனது அரண்மனையை அமைத்திருந்தார். அந்த வீட்டை வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு மரம் செடி மட்டும் தான் தெரியும். ஏனென்றால் ஆறடி உயரம் கொண்ட கோட்டை சுவரிலிருந்து ஒரு மீட்டர் உள்ளே தள்ளி தான் வீடு இருக்கும். வீட்டினை சுற்றி மா பலா வாழை கொய்யா என்ற மரங்களுடன் ரோஸ் முல்லை பீச்சி என அனைத்து பூ வகைகளும் அங்கே உள்ளது. ஒரு கிலோமீட்டர் நடந்து உள்ளே வந்தால் வீட்டின் முன்னே இருந்த பெரிய தூண்களில் ஜாதி மல்லி பூச்செடியை பரப்பிவிட்டு அது முன் பக்கம் பந்தல் போட்டு வீட்டின் முகப்பில் வைத்திருந்தனர். வீட்டில் உள்ளே நுழையும் போது மல்லிகை பூ வாசம் நம்மை வேறு ஒரு உலகத்திற்கு கூட்டி செல்லும். முகப்பில் படி ஏறி உள்ளே வந்தால் பெரிய ஹால் அதில் 15 பேர் அமரக்கூடிய அளவுக்கு இரு பக்கங்களிலும் இருக்கைகள் போடப்பட்டு இருந்தது. இடது பக்கம் சமையலறை வலது பக்கத்தில் பெரிய பூஜை அறை அதன் பக்கத்தில் வெளியே செல்வதற்கு வழி இருந்தது. சற்று தள்ளி விருந்தினர்கள் வந்தால் தங்குவதற்கு அறை அதன் பக்கத்தில் பெரிய ஆபீஸ் ரூம், காலில் நடுவே இருந்த படிக்கட்டு வழியே மேலே சென்றால் முதல் தளத்தில் வேதாச்சலம் தாத்தாவின் அறை மற்றும் விநாயகம்- புஷ்பராணி ஆகியோரின் அறைகள் உள்ளது. அதனுடன் சேர்த்து நான்கு அருகில் உள்ளது. இரண்டாவது தளத்தில் சரண் மற்றும் திருவின் அறைகள் மற்றும் உடற்பயிற்சி கூடம், இன்டோர் ஸ்போர்ட்ஸ் ரூம், ஹோம் தியேட்டர் ரூம் உள்ளது. மொத்தத்தில் பலமை புதுமை அனைத்தும் சேர்ந்து விதத்தில் அந்த வீட்டை அரண்மனை போன்ற கட்டி இருந்தார்.

 

தன்னை அழைத்து தனது மருமகளை பார்த்து புன்னகைத்து விட்டு, “ஓகே பிரண்ட்ஸ் இதோட நான் என்னோட லைவ்வ முடிச்சுக்கிறேன். பாய் பிரிண்ட்ஸ் அடுத்த லைவ்ல மீட் பண்ணலாம்” என்று சொல்லி முடித்துவிட்டு தன் மருமகளை பார்த்து, “என்னம்மா”என்றார்.

“சாப்பிட வாங்க மாமா எல்லாம் ரெடி ஆயிட்டு” என்றார் அவர் மருமகள் புஷ்புராணி.

“சரிமா விநாயகம் வயலிருந்து வந்துட்டானா” என்று தனது மகனைப் பற்றி விசாரித்தார்.

“இல்ல மாமா வயலுல எதோ வேலை இருக்கு அதனால சாப்பாடு கொடுத்து விட சொல்றாங்க நான் அப்பவே அவருக்கு கொடுத்து விட்டேன்”

“ஓ சரிமா பசங்க வந்துட்டாங்களா இல்லையா”

“இன்னும் இல்ல மாமா. சரணையும் அவன் பிரண்ட்ஸையும் திரு கூப்பிட்டு வரேன்னு சொல்லி போயிருந்தான். நீங்க சாப்பிட வாங்க அவங்க இப்ப வர்ற நேரம் தான்”

“சரி மா”என்று சொல்லி சாப்பிட சென்றார்.

 

@@@@@@@@@@@@@@

 

“மிஸ்டர். திருப்பூர் குமரன் இத்தனை பேர கூட்டிட்டு போறீங்களே. பிரியாணி பத்துமா” என்றான் சரண்.

“அட துரோகி என்னடா எங்களை கலட்டி விடலாம்னு பாக்கியா” என்றான் கார்த்திக்.

“ஆமா டா அப்படியே பிரியாணி இல்ல சொல்லி நம்மள கழட்டி விடலாம்னு பாக்கான்”என்று சொல்லி அவனை மூவரும் முறைத்து பார்த்தார்கள்.

“டேய் கொஞ்சம் சும்மா வாங்க டா. எப்ப பாரு சோத்துக்கு செத்தவன் மாதிரி சண்டை போட்டுக்கிட்டு இன்னும் சின்ன பசங்கனு நெனைப்பா” என்றான் அதட்டலாக வண்டியை ஒட்டிக்கொண்டு திரு.

“மிஸ்டர்.திருப்பூர் குமரன் உங்களுக்கு தான் எழு கழுத்த வயசு ஆகுது எங்களுக்கு இல்ல. வயசானாலும் நான் பிரியாணி திம்பேன் அது என்னோட உரிமை அத யாரும் கேக்கக்கூடாது. ஓகே வா”

“சரி டா பொங்காத” என்று பாலா சொல்லி கொண்டு இருக்கும்போதே வீடு வந்து விட அந்தப் பெரிய கேட்டினை திறந்து சல்யூட் அடித்தார் வாட்ச்மேன். அவருக்கு தலையசைத்து விட்டு, “டேய் உள்ள போங்க டா”என்று அவர்களை உள்ளே போக சொல்லி தனது ஜீப் நிறுத்த சென்றான் திரு.

 ஜீப் விட்டு இறங்கிய மூவரும், “டேய் யார் ஃபர்ஸ்ட் உள்ள போறாங்களோ அவங்களுக்கு தான் நிறைய பிரியாணி ஓகேவா. கேம்மை ஸ்டார்ட் பண்ணலாமா” என்றான் சரண்.

“இல்லடா நான் வரல எல்லாரும் சேர்ந்து என்ன ஏமாத்துறீங்க போங்கடா நான் உள்ள மெதுவாக போறேன்” என்றான் கொஞ்சம் குண்டாக இருந்த பாலா.

“டேய் குண்டூஸ் அப்படி எல்லாம் பண்ண மாட்டோம் வாடா” என்றான் கார்த்திக்

“போங்கடா ஒவ்வொரு வாட்டியும் இப்படி சொல்லி சொல்லி என்னை ஏமாத்துரதே உங்களுக்கு பொழப்பா போச்சு. உங்களோட நிறைய பிரியாணி எனக்கு வேண்டாம் போடா” என்று சொல்லி உள்ளே சென்றான்.

“டேய் குண்டா இருடா நாங்களும் வருகிறோம்” என்று சொல்லி அவன் பின்னே ஓடினர் மற்ற மூவரும்.

 

 இவர்கள் நால்வரும் உள்ளே வந்து பார்க்க அங்கே வேதாச்சலம் தாத்தா, “இன்னைக்கு மட்டன் பிரியாணி சூப்பர் செம டேஸ்ட் நல்லா இருக்கு பிரிண்ட்ஸ். அப்படியே பீஸ் பிச்சனா நல்லா வெந்து ஷாப்டா இருக்கு. டேஸ்ட் செம அடிபோலி பிரண்ட்ஸ். ஆனா என்னதான் நம்ம மட்டன் சாப்பிட்டாலும் இந்த 65 சிக்கன் இருக்கே அதுவும் இந்த லெக் பீஸ் அது அப்படியே எடுத்து கொஞ்சூண்டு மைனஸ்ல முக்கி அத அப்படியே ஒரு கடி கடிக்கும்போது வரும் பாரு டேஸ்ட் அத அடிச்சுக்க உலகத்துல எதுவுமே இல்லை” என்று தனது யூடுப் சேனலுக்கு வீடியோ எடுத்து அதன் சுவையே தனது வியூவர்ஸ்க்கு சொல்லி சாப்பிட்டு கொண்டு இருந்தார்.

“ பிரண்ட்ஸ் இதை எப்படி சாப்பிடணும் தெரியுமா பஸ்ட்டு மட்டன் பிரியாணி கொஞ்சம் எடுத்துக்கணும் அது கூட கொஞ்சம் பீஸ், வேக வெச்ச முட்டையோட மஞ்சள் கரு இருக்கே அது கொஞ்சம் பிச்சு வச்சி அது கூடவே கொஞ்சம் கிரேவி ஊத்திக்கணும். ரொம்ப முக்கியம் முட்டையோடு மஞ்சள் கரு உடையவும் கூடாது பிரியாணியோட பிசையவும் கூடாது. அது அப்படியே ரவுண்டு புடிச்சு வாயில் வைத்து அது கூட கொஞ்சம் வெங்காய ரைத்தா இருக்குல்ல அத கொஞ்சம் எடுத்து வாயில வச்சுட்டு சாப்பிட்டா எப்படி இருக்கும் தெரியுமா” என்று அவர் சொல்ல அதற்கு கார்த்திக்,“வாந்தி வர்ற மாதிரி இருக்கும்” என்று முடித்து வைத்தான்.

“டேய் சும்மா இருடா என் சீனியர் எவ்வளவு அழகா பேசுறாரு பாரு. அத்த பாருடா அதை விட்டுட்டு சும்மா கமெண்ட் பண்ணிட்டு இருந்தா டென்ஷன் ஆயிடுவேன்” என்றான் கோபமாக சரண்.

“டேய் அவர் சொல்றத கேட்டா வாமிட் வருது டா. நீ அதை ரசிக்க வேற செய்றியா. சை என்ன டேஸ்ட் டா உன் தாத்தாவோட டேஸ்ட் முடியல” என்று முகத்தை சுழித்தான் சுரேஷ்.

“ டேய் வாய மூடுங்கடா அப்படி வச்சு சாப்பிட்டா எவ்ளோ டேஸ்டா இருக்கும் தெரியுமா உங்களுக்கு என்ன டா சாப்பிட பத்தி தெரியும். இதெல்லாம் எப்படி ரசிச்சு ருசித்து தின்றது எல்லாம் ஒரு கலைடா அத எல்லாம் உங்களை மாதிரி பர்கர் பீசா திங்குறவங்களுக்கு எங்க இருந்து தெரியப்போகுது போங்கடா நான் போறேன்” என்று கோபப்பட்ட பாலா தாத்தாவை நோக்கி சென்றான்.

“டேய் வாய் வச்சுட்டு சும்மா இருக்க மாட்டீங்களா அவனுக்குத்தான் சாப்பாடப் பத்தி சொன்ன கோவம் வரும் உங்களுக்கு தெரியாதா. ஐயோ அங்க வேற லெக் பீஸ் கம்மியா இருக்கு இவன் வேற கோவமா போறானே நமக்கு எல்லாம் கிடைக்குமோ என்னவோ சீக்கிரம் வாங்கடா” என்று சொல்லி வேகமாக சென்றான் சுரேஷ்

 

 வேகமாக வந்த இவர்களை பார்த்துவிட்டு, “ பிரண்ட்ஸ் இங்க பாத்தீங்களா நம்மளோட பிரியாணி என்னோட ஜூனியர்ஸ் எப்படி ஈர்த்து இருக்குன்னு எவ்வளவு வேகமா ஓடி வராங்க பாருங்க இதுதான் நம்ம பிரியாணியோட ஸ்மெல்ங்கறது. நீங்க எவ்ளோ பெரிய டிஸ் வச்சு தின்னுட்டு இருந்தாலும் இந்த பிரியாணி இருக்கே அது அந்த வாசனை சாப்பிடாதவங்களுக்கும் அப்படியே பசியை தூண்டி அவங்கள ஒருவாட்டி சாப்பிட வைக்கும். சரி ப்ரெண்ட்ஸ் நாங்க எல்லோரும் பிரியாணிய ரவுண்டு கட்ட போறோம் நீங்களும் போய் கடையில் பிரியாணி வாங்கி சாப்பிடுங்க. பாய் அடுத்த வீடியோல மீட் பண்ணுவோம் பிரண்ட்ஸ்” என்று சொல்லி தனது வீடியோவை கட் செய்த வேதாச்சலம் தனது பேரனை பார்த்து திரும்பி, “ஹாய் ஜூனியர்ஸ் என்னவா என்னடா இந்த வாரம் வீட்டுக்கு வரல. எனக்கு தெரியாம ஏதாவது சாப்பிட்டீங்களா” என்றார் சந்தேகமாக நால்வரைக்கும் பார்த்துக் கொண்டு

“ ஐயோ சீனியர் உங்கள விட்டுட்டு நாங்க ஏதாவது தின்பமா என்ன” என்றான் கார்த்திக்

 “சரிடா பிழைச்சி போங்க” என்றவர் தனது பேரனை பார்த்து, “ ஜூனியர் என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க”

“ஏன் சீனியர் நான் வரலைன்னா என் பங்கையும் சேர்த்து நீங்க திங்கலாம் பிளான்ல இருந்தீங்களா என்ன”

“என்ன ஜூனியர் இப்படி சொல்றீங்க நம்மோடு போராட்டம் இன்னும் முடியல இல்ல. அதுக்குள்ள நீங்க இங்க வந்துட்டீங்கன்னா சமரசம் ஆயிட்டீங்கன்னு அர்த்தம் அதைத்தான் கேட்டேன் ஜூனியர்”

“என்ன பண்ண சீனியர் பிரியாணி பார்த்த உடனே கட்சி மாறுற உங்களை மாதிரி தொண்டன வச்சுட்டு எப்படி என்னோட போராட்டத்தை நான் கடைசி வரைக்கும் கொண்டு போக முடியும் அதான் நானே சரண்டர் ஆகிட்டேன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!