Skip to content
Post Views: 3,514
இதோ.. இதோ.. என் பல்லவி
அத்தியாயம் -9
Advertisement
Advertisement
பல்லவிக்கு தேள் கடித்தால் உடல் சோர்வு இருக்க. விக்ரம் அவளை வீட்டில் விட்டவுடன் அவள் அறைக்கு வந்து தூங்கி விட்டாள்..
Advertisement
பல்லவியின் போன் விடாமல் அடிக்க, கண்விழித்து பார்த்தவள் போனை எடுத்து யார் என்று பார்க்க..
Advertisement
பல்லவியின் தந்தை செல்லத்துரை தான் மகளுக்கு போன் பண்ணிக்கொண்டு இருந்தார்..
போனை ஆன் பண்ணி காதில் வைத்தவள், ” சொல்லுங்கப்பா” என்றாள்..
செல்லத்துரை ” இரண்டு நாளா ஏன் போனை எடுக்கல பல்லவி” என்றார்..
” அது, அது ” என்றவள், ” போன்ல சார்சு இல்லப்பா, நான் போனை கவனிக்கல என்றாள்..
“சரி பல்லவி உன் பாட்டி பழனியம்மாவுக்கு உடம்பு சரியில்ல, உன்ன கடைசியா பாக்கனுமுன்னு சொல்லுறாங்க, நீ கிளம்பி வா இந்தியாவுக்கு” என்றார்..
” என்னப்பா திடிரின்னு “.
” 90 வயசுக்கு மேல் ஆச்சுல, அது தான் உன் அம்மா பைரவி ஊருல தான் இருக்க,, உன் போனுக்கு டிக்கெட் அனுப்பி இருக்கேன் பாத்துக்கோ, இன்னும் 2 ஹவர்சுல உனக்கு பிளைட் இப்பவே கிளம்பு சரியா இருக்கும், கிளம்பி வா என்று போனை வைத்தார்..
அவளுக்கோ என்ன திடிர்னு, ஆபிஸ்சில் லீவு கொடுப்பாங்களான்னு தெரியலயே…இந்த அப்பா வேற யார கேட்டு டிக்கெட் போட்டாருன்னு தெரியலயே என்றவள்..
அவளின் ஆபிஸ்சுக்கு போன் போட்டு ஒரு , ஒன் வீக் லீவு கேட்க..
அவர்களோ சரி என்று லீவு கொடுக்க தன் துணிமணிகளை பேக் செய்தவள்.. விக்ரமுக்கு கால் பண்ண, கால் சென்று கொண்டே இருந்ததே தவிர, விக்ரம் போனை எடுக்க வில்லை..
பல்லவி விக்ரமிடம் தான் ஊருக்கு போவதாக வாய்ஸ் மெஜேசை ஒன்றை அனுப்பிவிட்டு.
ஏர்போர்ட்க்கு கிளம்பி வீட்டை பூட்டியவள் சித்தப்பாவுக்கு கால் பண்ணினாள்,.
ஞானதுரையின் போன் நாட் ரீச்சபல் என்று வர..
ஞானதுரையின் வீட்டின் காலிங் பெல்லை அடித்தாள்..
ரோசிதான் கதவை திறந்தார். என்ன என்பது போல் ரோசி ஒரு பார்வை பார்க்க,, கெஸ்ட் ஔசின் சாவியை ரோசியிடம் கொடுத்தாள்.. ” நான் இந்தியாவுக்கு போறேன் சித்தி 10 நாள்ல வந்துருவேன் என்று கூற..
ஓ என்று நக்கல் பார்வை பார்த்தாள் ரோசி…
“வர்றேன் சித்தி, சித்தப்பா கிட்ட சொல்லுங்க, நான் சித்தப்பாவுக்கு கால் பண்ணேன் போன் போகல” என்று கூறிவிட்டு வர்றேன் டைம்மாச்சு சித்தி என்று கிளம்பி இருந்தாள்..
பல்லவி விக்ரமுக்கு மறுபடியும் போன் போட அவன் எடுக்கவே இல்லை.
பல்லவின் மனதில் ஏதோ தப்பா நடக்க போகுது என்று தோன்ற…
ஏர்போர்ட்க்கு போக டெக்சியை புக் பண்ணியவள் ஏர்போர்ட் வந்து சேர்ந்தாள்…
ஏர்போர்ட் வாசலில் நின்றபடியே விக்ரமுக்கு போன் போட்டாள், கால் நாட் ரீச்சபல் என்று மீண்டும் வர.. ஞாபகம் வந்தவளாக சுந்தருக்கு போன் போட..
பல்லவி போனில் அழைப்பதை பார்த்த சுந்தர், ” சொல்லுமா மருமகளே எப்படி இருக்க”?.
” நான் நல்லா இருக்கேன் அங்கிள், நீங்க எங்க இருக்கீங்க, “.
” நான் ஆபிஸ்ல தான் இருக்கேன், இப்பதான் ஒரு மீட்டிங் முடிஞ்சது என்னம்மா விசயம்,, “..
” விக்ரம் சார் அங்க இருக்காங்களா”..?.
” தெரியலயேமா? ஒரு 10 நிமிசம் முன்னாடி தான் பார்த்தேன், என்கூட மீட்டிங்ல இருந்தான்”..
” சரி அங்கிள்” என்று போனை வைத்தவள்..
மீண்டும் கடைசியாக விக்ரமுக்கு ஒருமுறை போன் போட, போன் பிசி என்று வர.. அவனை பார்க்காமல் சென்ற விடுவோமோ என்று வருந்தியவள்.
கடைசியாக ஒரு வாய்ஸ் மேசேஜில் நான் இந்தியா கிளம்புறேன் ஏர்போர்ட்ல இருக்கேன் நீங்க வரமுடியுமா? விக்ரம்” என்று வாய்ஸ் ரெக்கார்ட் செய்து அனுப்பியவள்.. ஏர்போர்ட் உள்ளே சென்றவள். அவளின் லக்கேஜை சரிபார்த்து, லக்கேஜில் போட்டு வந்தவள்,
ஏர்போர்ட் செக்கிங் போகும் வழியில் நின்று விக்ரம் வர்ராங்களா என்று ஏக்கமாக பார்த்து நின்று இருந்தாள்..
அவள் எண்ணம் பொய்யாகாமல் விக்ரம், பல்லவியை தேடிக்கொண்டே வந்தான்..
பல்லவிதான் முதலில் விக்ரமனை பார்த்தாள், ” விக்ரம் என்று அவனிடம் சென்றவள், அவனை அணைத்துக்கொண்டு அழ..
” ஏய் பல்லவி என்னடா, நான் தான் வந்துட்டேன் ஏன் அழற”..
” நீங்க ஏன் போனை எடுக்கல. “
” நான் ஒரு மீட்டிங்ல இருந்தேன்மா, போனை சைலன்டில் போட்டு இருந்தேன். மீட்டிங் முடிஞ்சவுடன் தான் உன் மிஸ்டு கால், வாய்ஸ் மெஷேஜை பார்த்தேன், உன்னை பார்க்க வந்துட்டேன் போதுமா ” என்று பல்லவியின் நெத்தி முட்டி சொல்ல..
” எங்க உங்களை பாக்க முடியாமல் போயிருவேனோன்னு பயந்துட்டேன், இப்போ ஹாபியா இந்தியா போவேன் என்றவளை..
” என்னாச்சு?. பல்லவி கண்டிப்பா இந்தியா போயிதான் ஆகனுமா?..
” ஆமா விக்ரம் எங்க பாட்டிக்கு உடம்பு சரியில்ல, கடைசியா என்ன ஒருவாட்டி பார்க்கனுமாம், அம்மாவோட, அம்மா எனக்கு அம்மம்மா என்னைய ரொம்ப பிடிக்கும் அவங்களுக்கு “”.. என்றாள்.
” எனக்கும் தான் பல்லவி உன்னை ரொம்ப பிடிக்கும் “..
” ஒன் வீக் இல்ல 10 டேசுல நான் வந்துருவேன் விக்ரம்” என்று சொல்ல.
” நீ அங்கே இரு பல்லவி, நாம பேசுனது தானே, நீ ரிட்டன் எல்லாம் வரவேண்டாம், நானும் டாடியும் வர்றோம் சரியா ” என்றான்..
பல்லவி “உம் “என்று தலையாட்ட..
பல்லவி போகும் விமானம் பயணிகள் வரும்மாறு அனோன்ஸ் மென்ட் வர..
” ஓகே விக்ரம் டைம் ஆச்சு வர்றேன்” என்றவளின் கண்கலங்க..
” ஏய் லூசு ஒன் வீக் தானேமா, நான் வந்துருவேன், நம்ம திரும்பி லண்டன் வர்ரப்போ, ஜோடியா தான் வருவோம், சந்தோஷமா போ” என்றான்…
” உங்ககிட்ட பேசுனதுல மனசு லேசாச்சு வர்றேன் என்றவள், விக்ரமிடம் பாய்” சொல்லிவிட்டு பிளைட் ஏறினாள்..
பிளைட் ஏறியவுடன் தான் ஞாபகம் வந்தவளாக அவளின் அக்காவுக்கு போனில் அழைக்க. போன் ரிங் போனது ஆனால் பல்லவியின் அக்கா போனை எடுக்க வில்லை, தூங்கிட்ட போல என்று போனை கட் பண்ணிவிட்டாள் பல்லவி…
பல்லவி இந்தியா வந்து இறங்கினாள்.. அவளை அழைத்து செல்ல ஏர்போர்ட்டுக்கு பல்லவியின் தந்தை, அவளின் அக்கா கணவர் செல்வராஜூம் வந்திருந்தனர்..
பல்லவி இருவரையும் பார்த்து அருகில் வர. இருவரும் ஒன்று போலா பட்டு வேஷ்டி சட்டையில் இருக்க..
” என்னப்பா? நீங்களும், மச்சானும் பட்டு வேஷ்டியில் இருக்கீங்க, பாட்டிக்கு உடம்பு சரியில்லை தானே அப்போ, நீங்க இப்படி டிரெஸ் பண்ணி இருக்கீங்க”..
” நீ வாம்மா போகுறப்போ சொல்லுறேன்” என்று பல்லவியின் தந்தை மகளை காரில் அழைத்து செல்ல..
” நம்ம வீட்டுக்கா போறோம்பா” என்றாள் பல்லவி..
செல்லத்துரை “சொல்லுறேன் வாம்மா” என்று காரில் வெகுதூரம் அழைத்து சென்று ஒரு கல்யாணம் மண்டபம் முன் காரை நிறுத்தினார்..
” பல்லவி என்ன டாடி யாருக்கு கல்யாணம்?” என்று காரில் இருந்து பல்லவி இறங்கி கொண்டே கேட்க.. செல்லத்துரை மௌனமாக இருந்தார்..
பல்லவி நிமிர்ந்து மண்டப வாசலில் பார்க்க மணமகன் விஷால், மணமகள் பல்லவி என்று எழுதி இருக்க.. அதை பார்த்து அதிர்ந்தவள்..
” அப்பா!! என்னப்பா இது?..
” நீ உள்ள வா பல்லவி பேசலாம்”..
“நோ பா இதுக்கு நான் சம்மதிக்க மாட்டேன், நோ ” என்றாள்..
” பல்லவி எதுனாலும் உன் அம்மா கிட்ட வந்து பேசு, இது எல்லாம், அவ ஏற்பாடு வா” மண்டபத்துக்குள் செல்லதுரை கைபிடித்து அழைத்து செல்ல..
தன் மொத்த சொந்தமும் கூடி இருந்தது அந்த மண்டபத்தில்…
தந்தையின் சொல் கேட்டு அவரின் பின்னே மணமகள் அறைக்கு வந்தாள்..
அந்த அறையில் பல்லவி அக்கா செல்லத்துரை பல்லவி என்று மூன்று பேர் மட்டும் இருக்க,, கதவை சாத்தி விட்டு தன் தந்தையிடம் ” என்னப்பா இது, யார கேட்டு, இந்த கல்யாணத்த முடிவு பண்ணீங்க” என்றாள் பல்லவி…
” யாரை கேட்டு முடிவு பண்ணனும்” என்று கதவை திறந்து கொண்டு வந்தார் பைரவி…
” அம்மா!” என்றவள் “எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம், எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல.”.
” உன் விருப்பம் கேட்டு நான் இந்த கல்யாணத்த ஏற்பாடு பண்ணல, போயி குளிச்சுட்டு வா நலுங்கு வைக்கனும்”..
” அம்மா என்னால முடியாது, எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம், என்கிட்ட என்ன சொல்லி வர வச்சிங்க, பாட்டிக்கு உடம்பு சரியில்லையின்னு தானே, இப்போ திடிர்ன்னு கல்யாணம் ஏற்பாடு பண்ணா என்ன அர்த்தம்”.
பைரவி மகளை பார்த்து ” உன்ன லண்டனுக்கு வேலைக்கு அனுப்புனா தேவையில்லா வேலையெல்லாம் பாத்துட்டு இருந்துருக்க, இங்கே இருந்தா எங்களுக்கு எதுவும் தெரியாதுன்னு நெனச்சியா”,.. பைரவி தன் பெரிய மகள் ஜோதியை பார்த்து “உன் தங்கச்சியை போயி குளிச்சுட்டு கல்யாணத்துக்கு ரெடியாக சொல்லு”.
ஜோதி தங்கையை பாவமாக பார்க்க..
தன் அக்காவை பார்த்த பல்லவி எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம், நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்க மாட்டேன், நான் திரும்ப லண்டனுக்கே போறேன்” என்றவளை..
பளார் என்று அறைந்திருந்தார் பைரவி பல்லவியை,,”அம்மா”!! என்று பல்லவி கன்னத்தில் கை வைத்திருக்க,,.
” வாய் ரொம்ப நீளுது, லண்டன் போறீயா, உன் காலை ஒடச்சுருவேன் ஜாக்கிரதை!,. உன்னை லண்டனுக்கு அனுப்புனது நாங்க, உன்ன எதுக்கு நாங்க லண்டன் அனுப்புனோம், வேலைக்குதானே, லவ் பண்ணுறீயா, லவ்வு தோல உறிச்சுருவேன் ராஸ்கல்”..
பல்லவியின் அருகே வந்த பைரவி “நீ என்கிட்ட என்ன சொல்லிட்டு லண்டன் போன.. நான் திரும்பி வந்தவுடனே, நீங்க யார சொல்லுறீங்களோ அவங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு தானே சொன்ன,, சொன்ன வாக்க காப்பாத்து’..
” மா” என்றவள் ” என்னால முடியாது, விக்ரமை விட்டு நான் யாரையும் நான் கல்யாணம் பண்ண மாட்டேன்”..
” யார்டி விக்ரம், யாரு விக்ரம்”?.
” அது, அது. “
” நீ லவ் பண்ணுற பையன் தானே” என்றார் பைரவி..
பல்லவி “ஆமாம்” என்று தலையாட்ட..
பைரவி, பல்லவியின் கழுத்தை பிடித்து இருந்தார்,, ” கொன்னு போட்டுடுவேன் உன்னை, அந்த ரோசி மகள் ஐஸ்வர்யாவுக்கு பார்த்த மாப்பிள்ளையை நீ லவ் பண்ணியிருக்க, உனக்கு அசிங்கமா இல்ல தூ, ” என்றார் மகளை..
” மா அது அப்படி இல்லமா”..
” எது எப்படி இல்ல, ஐஸ்வர்யாவுக்கு பார்த்த மாப்பிள்ளை தானே அந்த விக்ரம்? சொல்லுடி.. “
பல்லவி ” ஆமாம்” தலையாட்ட..
அப்பறம் என்ன? நேத்து அந்த ரோசி போன் போட்டு கேட்குறா, பொண்ண பெத்து லண்டனுக்கு ஊர்மேய அனுப்பி இருக்கியான்னு., சொல்லுடி நான் உன்னையா அப்படியா வளத்தேன், அப்பறம் கேட்குற இந்தியாவுல ஆம்பிளயே இல்லையா, தங்கச்சி கல்யாணம் பண்ண போற ஆம்பிளையை வளச்சு போட்டு இருக்கான்னு, இந்த பேச்சு கேட்டு நான் உயிரோட இருக்குறது, உன் அப்பாவுக்காக தான்.. நீ என்ன உயிரோடு கொன்னுட்ட பல்லவி.. நீ என்ன மறுப்பு சொன்னாலும், இன்னைக்கு உன் கல்யாணம் நடக்கனும்,. போ கிளம்பு “என்று சொல்ல..
என்ன மாதிரியான வார்த்தை இது, தன் தாயை பார்த்து இப்படி கேட்டு இருக்கிறார் இந்த சித்தி. தன்னிடம் லண்டனின் வைத்து எதுவும் கேட்காமல், தன் தாயிடம் சொல்லி தன்னை லண்டனில் இருந்து, இங்கே வர வைத்திருக்கிறார்கள் என்ன தந்திரம், சித்தப்பாவுக்கு இது தெரியுமா என்று சிந்தனையில் இருக்க..
“என்னடி அப்படியே உக்காந்து இருக்க போயி குளிச்சுட்டு வா மூகூர்த்த நேரம் ஆச்சு”..
“நான்” என்றவள், பைரவியிடம் , “அம்மா எனக்கு கல்யாணம் வேண்டாம், லண்டனும் வேண்டாம் வேற எதுவும் வேண்டாம், உன்கூடவே கடைசி வரைக்கும் தனியாவே இருந்துக்குறேன், இந்த கல்யாணம் மட்டும் வேண்டாம்” என்றாள் பல்லவி..
” ஏன் வேண்டாம், எதுக்கு வேண்டாம் பதில் சொல்லு ” என்றார் பைரவி..
” என்னால விக்ரமை தவிற வேற யாரையும் கல்யாணம் பண்ண முடியாதுமா “என்று கதறி அழுதவளை.. பார்த்த பைரவி,,.
” பாருங்க உங்க மகளை என்று செல்லத்துரையிடம் சொன்னவர், நீ என்ன அழுதாலும் இன்னைக்கு உன் கழுத்துல தாலி ஏறி ஆகனும்”..
” அது நான் செத்த தான் நடக்கும்” என்றாள் பல்லவி…
” சாவு, சாவுடி, நீ சாகாத, நான் சாகுறேன், உன்ன பெத்தேன் பாரு நான் தான் சாகனும்.. உன்ன பெத்து வளத்து, படிக்க வச்சு, உன்மேல நம்பிக்கை வச்சு லண்டனுக்கு வேலைக்கு அனுப்பினேன் பாரு தப்பு தான் அதுக்கு நான் தான் சாகனும்” என்று பைரவி புலம்ப…
” அம்மா! ” என்ற பல்லவி பைரவின் கால்களை கட்டி கொண்டு அம்மா சாரி, சாரிமா நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்குறேன், என்னால உங்கள யாரும் தப்பா பேச வேண்டாம், உங்க வளப்ப பத்தி எல்லாருக்கும் தெரியும், யாரோ ஏதோ சொன்னாங்கன்னு உங்களையே நீங்க வருத்திக்காதீங்கமா, உங்கள மாதிரி அம்மா யாருக்கு கிடைக்க மாட்டாங்கமா, நீங்க இல்லனா நாங்க இல்லமா, நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்குறேன், ஆனா இந்த கல்யாணம் மட்டும் வேண்டாம், என்ன வேணா கொன்னுடுங்க, நான் சந்தோஷமா செத்து போறேன், ஆனா இந்த கல்யாணம் மட்டும் வேண்டாம்”..
” கடைசியா நீ என்ன சொல்லுற பல்லவி” என்றார் பைரவி…
” எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் “..
” சரி நீ கல்யாணம் பண்ணிக்காத உன் அப்பாவுக்கு இனிமேல் பொண்டாட்டி கிடையாது, உன் அக்கா ஜோதிக்கு அம்மா இருக்க மாட்டா, நான் இனிமே உயிரோடவே இருக்க கூடாது என்றவர், பக்கத்தில் ஏதாவது இருக்க என்று பார்க்க, பூ கட் பண்ண சிறிய கத்தி இருக்க, அதை எடுத்தவர், அவரின் கையை மாறி, மாறி கட் பண்ண அனைவரும் இதை எதிர்பாக்கதவர்கள்..
ஐயோ! என்று அனைவரும் பைரவின் பக்கம் வர…
“யாரும் என் பக்கம் வர கூடாது.. ஒன்னு இந்த கல்யாணம் நடக்கனும், இல்ல என் உயிர் போகட்டும் “என்று மறுபடியும் பைரவி நான்கு ஐந்து முறை கையை கத்தியால் கீற,,..
“ஐயோ அம்மா வேண்டாம் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் கையை கட் பண்ணிக்காதீங்க” என்று மண்டியிட்டு கதறி அழ…
பைரவி கட் பண்ணுவதை நிறுத்தி இருந்தார்.. செல்லத்துரை மனைவியிடம் இருந்த கத்தியை பிடிங்கியவர், ” பைரவி உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சு இருக்கு ஏன்டி இப்படி பண்ணுற, உனக்கு எதாவது ஆச்சுன்னா நாங்க என்ன பண்ணுவோம்..
பைரவியிடம் வந்த ஜோதி ஏன்மா இப்படி பண்ணுறீங்க என்று ஈரதுண்டை வைத்து அழுத்தி பிடிக்க, இரத்தம் நிற்காமல் வர, மா கையை தூக்கு என்று தூக்கி பிடித்து இரத்தத்தை நிப்பாட்ட…
பல்லவின் அழகை இன்னும் நின்ற பாடில்லை,.
செல்லத்துரை பைரவியிடம் பல்லவியை காண்பித்து, “நீ கொஞ்சம் விட்டு கொடு பைரவி நம்ம பொண்ண நாம நம்ப வேண்டாமா, அவ அழுகுறத பாக்க முடியல, அவ ஏதாவது தப்பா முடிவு எடுத்தா, நம்ம பொண்ணு நமக்கு இல்லாம ஆயிட்ட என்ன பண்ணுவ”..?
” நீங்க சும்மா இருங்க, அவ இப்ப தான் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லி இருக்க, மறுபடியும் எதாவது சொல்ல போறா.. எனக்கு இப்பா தான் நிம்மதியா இருக்கு.. இரண்டு நாளா நம்ம தூங்குனோமா ? அந்த ரோசி பேசுனதே மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருந்துச்சு, என் பொண்ணு அப்படி இல்லன்னு நான் நிறுபிச்சி காட்டணும், இவளுக்கு கல்யாணம் பண்ணி என் வளப்பு சரியின்னு நான் காட்டணும்”..
ஜோதி அம்மாவுக்கு சூஸ் கொண்டு வந்து கொடுத்தவள், ” “சூஸ் குடிமா” கொஞ்சம் தெம்பா இருக்கும் என்றாள்,,
” எனக்கு எதுவும் வேண்டாம், உன் தங்கச்சிக்கு குடு. நான் நல்லா தான் இருக்கேன், நான் உயிரோட இருக்குறது அவ கையில தான் இருக்கு, அவள ரெடி பண்ணி கூட்டிட்டு வா, நான் வெளிய போய் கல்யாணம் வேலையை பாக்குறேன்” என்று பைரவியும், செல்லத்துரையும் அந்த அறையை விட்டு வெளியே செல்ல..
கீழே தரையில் மண்டியிட்டு அழுதுக்கொண்டு இருந்த தங்கையை பார்க்க பாவாமாக இருந்தது..
பல்லவியின் அக்கா ரூம் கதவை லாக் பண்ணிவிட்டு தங்கையிடம் வந்து ” என்னடி ஆச்சு உனக்கு நீயா லவ் பண்ண, என்னால நம்ப முடியலடி, லவ் பண்ணுறவங்களா நீ திட்டு வா, நீயே இப்படி, அழதடி எந்திரி உங்காரு என்று கட்டிலில் தங்கையை அமரவைத்தவள், சொன்ன கேளுடி, அம்மா இல்லன்னா நம்மலால இருக்க முடியுமா, “..
” அக்கா என்னால விக்ரமை தவிற வேற யாரையும் கல்யாணம் பண்ணமுடியாதுக்கா?..
“ஏய் சொன்ன கேளுடி, அம்மாவ பத்தி உனக்கு தெரியும் தானே, அவங்க ஒரு முடிவு எடுத்துட்டாங்கன்னா அதுல இருந்து பின் வாங்க மாட்டாங்க, இப்போ இன்னைக்கு உன் கல்யாணம் நடக்கலன்னா, நிச்சயம் நம்ம அம்மா நமக்கு இல்ல”,..
” உன் மச்சுனன் விஷால் கூட எனக்கு கல்யாணம் ஆனா நான் இருக்க மாட்டேன் பரவாயில்லையா”..
ஏய் சொன்னா கேளுடி , நம்ம இரண்டு பேரும் ஓரே வீட்ல
இருக்கலாம், விஷால் உன்ன நல்லா பாத்துப்பான், லவ் பண்ணா இப்போ என்ன, எல்லாரும் தான் லவ் பண்ணுறாங்க, லவ் பண்ணுற பையன தானா கல்யாணம் பண்ணுறாங்க, கல்யாணம் ஆனா சரியாகும்,,..
” நீவாய மூடு , அந்த விஷாலுக்கு கால் பண்ணு”.
“ஏய் என்னடி பண்ண போற”..
“கல்யாணம் மாப்பிள்ளை , என்னை கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னா , எப்படி இந்த கல்யாணம் நடக்கும்”..
“ஏய் பயமா இருக்குடி அம்மாவுக்கு தெரிஞ்சா,”.
” உன் புருஷன் தம்பிக்கு போன் போடு”..
சரி என்ற ஜோதி விஷாலுக்கு அழைக்க..
” அண்ணி சொல்லுங்க, அண்ணி” என்றான் விஷால்..
” தம்பி பல்லவி உங்க கூட பேசனுமாம்”..
” குடுங்க அண்ணி” என்றான் விஷால்..
“ஹலோ மச்சான் நான் பல்லவி”.
” சொல்லு பல்லவி”..
“எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல மச்சான், நான் விக்ரமுன்னு ஒருத்தர லவ் பண்ணுறேன் அவரைத்தான்..”
“ஏய்!! ஏய்! நிருத்துடி உன் காதல் கதை கேட்க எனக்கு நேரமில்ல. இன்னும் அரை மணி நேரத்துல கல்யாணம் ரெடியாகி வா, மணமேடையில் வெயிட் பண்ணுறேன்”…
” மச்சான் சொல்லுறத கேளுங்க என்னால முடியாது “..
“என்ன முடியாது”
“ஓ அவன் கூட எல்லாம் முடிஞ்சதா,, பரவாயில்லை , ஹாஸ்பெட்டல் போயி ஒரு செக் பண்ணிட்டு, ஒரு ஊசி போட்ட போதும், நீ ரெடியாகி வா, நீ என்ன சொன்னாலும் உன்ன கல்யாணம் பண்ணாம விட மாட்டேன், லண்டன் பேபி! ” என்று சிரிக்க….
error: Content is protected !!