Skip to content
Post Views: 751
” ஏண்டா இப்படி பண்ண? நான் உன்னை எவ்வளவு லவ் பண்ண தெரியுமா? ஆனா எனக்கு நீ பண்ணது என்னது மிகப்பெரிய துரோகம். நீ எல்லாம் நல்லாவே இருக்க மாட்ட ” என்று அவனின் சட்டை காலரை பிடித்து அழுது கொண்டிருந்தான் கலை.
“சீ… கையை எடு” என்று அவள் கையை தட்டி விட தன் வயிற்றை பிடித்துக் கொண்டு ஓரமாக அந்த சுவற்றை பிடித்து நின்றாள்.
Advertisement
” நீ உன் மூஞ்சிய கண்ணாடில பாத்திருக்கியா? பாத்த அப்பறமும் என் கூட வாழ உனக்கு எப்படி தோணுச்சு? ” என்ற திமிராக கேட்டான் சந்தோஷ்.
Advertisement
” சந்தோஷ் விளையாடாதடா. நம்ம குழந்தை அஞ்சு மாசம் என் வயித்துல. போக சொன்னா நான் எங்க போவேன். உன்னை நம்பி என் அப்பா, அம்மாவை விட்டுட்டு வந்துட்டேன் அவங்க புள்ளையே இல்லைன்னு தல முழுகிட்டாங்க. எனக்கு வேற யாருமே இல்ல நீ மட்டும் தான். நீ ஏன் இப்படி சொல்லலாமா? ” என்று பாவமாக முகத்தை வைத்து அழுது கொண்டே கேட்டாள் கலை.
Advertisement
” டார்லிங் இன்னும் என்ன பண்ற? ” என்று உள்ளே இருந்து ஒரு குரல் கேட்டது.
Advertisement
” இதோ வந்துட்டேன் குட்டிமா” என்று இளித்துக் கொண்டு பதில் கூற,
அவளோ அவனைப் பார்த்து நொறுங்கிப் போனாள்.
உங்களைப் பார்த்து இளக்காரமாக சிரித்து, ” உள்ள இருக்கா தெரியுமா அவதான் என்னோட டார்லிங். உன்ன பழி வாங்க தான் இந்த கல்யாணம். இவ்வளவு தைரியம் இருந்தால் லவ் சொன்னேன்னு என்னையவே அடிப்ப, என்ன அடிச்ச உன்ன வாழ்நாள் முழுவதும் அழுக வைக்க நினைச்சேன். அதுக்காக தான் போலியா ஒரு கல்யாணம் எல்லாமே. நம்ம கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணவே இல்ல. நம்ம கல்யாணம் பண்ணதுக்கு எந்த சாட்சியும் இல்லை. நீ என் பொண்டாட்டியும் இல்ல. உன் வயிற்றில் இருக்கிறது என்னோட குழந்தையும் இல்லை ” என்று இடுப்பில் கை வைத்து அவளைப் பார்த்து சிரித்துக் கொண்டே சொல்ல அவர்தான் அதிர்ந்து போனாள்.
கோபமாக அவன் சட்டையை பிடித்து, ” இங்க பாரு நீ என்ன என்ன வேணா சொல்லு. ஆனா இது உன் குழந்தை இல்லைன்னு மட்டும் சொல்லாத டா. உனக்கே தெரியும் உன்னை தவிர நான் யாரு கூடயும் படுக்கல. அப்புறம் எதுக்குடா வீணா என் மேல அபாண்டமாக பழி சொல்ற இந்த ஒரு வருசமா என் கூட இருந்தையே ஒரு நாள் கூட என் மேல காதல் இல்லையா? “
” இங்க பாரு கலை உன் கூட இருந்த எல்லா நாளும் காண்டம் யூஸ் பண்ணி இருக்கேன். எனக்கே தெரியாம கூட, என்னோட உயிர் உனக்குள்ள போகல. இது வேற எவனோ குழந்தை. அதுக்கு என் பெயரை இன்சியலா வைக்காத. டவுட் இருந்தா வா குழந்தை பிறந்த பிறகு டின் ஏ டெஸ்ட் எடுத்துக்கலாம் ஒருவேளை என் குழந்தையா இருந்தா, அதுக்கு உண்டான செட்டில்மெண்ட் கொடுத்துடுவேன் “
அவன் பேச பேச மேலும் உடைந்து போனாள். இரண்டு நாட்களாக வீட்டுக்கு வராமல் இருந்தவனை தேடி வந்து பார்க்க, வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதை பார்த்து அதிர்ந்து போனாள். அவனிடம் நியாயம் கேட்டால் என்னென்னமோ சொல்கிறானே நான் என்ன செய்வது. ஒன்றும் புரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள், ” இப்ப நீ என்னதான் சொல்ற தயவு செஞ்சு எல்லாத்தையும் தெளிவா சொல்லு. இன்னையோட நம்ம ரிலேஷன்ஷிப் முடிஞ்சுதா? உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா? நீ என்னை லவ் பண்ணவே இல்லையா?” என்று பேசு கண்களில் கண்ணீர் வந்து கொண்டிருந்தது.
வீட்டு வாசலில் நிற்க போக வர அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
” இவ்வளவு தூரம் நீ கேக்குற அதனால எல்லாம் உண்மையை சொல்றேன். நான் உன்ன லவ் பண்ணவே இல்ல. என் பிரண்ட்ஸ் உன்ன மாதிரி ஒரு பொண்ணு கிட்ட ப்ரபோஸ் பண்ண சொல்லி பெட் கட்டினாங்க. நீ ஓகே சொல்ல மாட்டன்னு அவங்க எல்லாரும் சொன்னாங்க நான் உன்னை மடக்கி காட்டுவேன்னு சொன்னேன் . பாக்கு கலரா இருந்தாலும் குண்டா அசிங்கமா இருக்க, அப்படி இருக்க உன்னை யாரு லவ் பண்ணி கல்யாணம் பண்ணி பா. சரி அவனுங்களுக்காக உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணா, நீ வேண்டாம்னு சொல்லி என்னை அடித்துவிட்டா. அவனுக்கு எல்லாம் என்னை எப்படி பார்த்தார்கள் தெரியுமா? அப்பவே முடிவு பண்ண உன் வாழ்க்கையை அணு அணுவா அழிக்கணும்னு சொல்லி, அதோட பிராசஸ் தான் ரெண்டு மாசம் பின்னாடியே சுத்தி உன்ன லவ் பண்ண வச்சேன். ஆறு மாசம் கழிச்சு கண்டிப்பா நீ என்கூட கல்யாணம் பண்ணி தான் ஆகணும்னு சொல்லி, லவ் மேட்டர உங்க வீட்டுக்கு தெரிய வைத்து , அவங்க கல்யாணம் ஏற்பாடு பண்ண, உன்னை என் கூட ஓட வச்சு யாருக்கும் தெரியாமல் கோயில்ல கரெக்டா கல்யாணம் பண்ணிட்டேன். ஒரு வாடகை வீடு எடுத்து கஷ்டப்படுற மாதிரி இந்த ஒரு வருஷமும் உன்ன கஷ்டபடுத்திக்கிட்டே தான் இருந்தேன். நீ பாக்குற தெரியுமா இந்த பங்களா இது என்னோடது. இது மட்டும் இல்ல எனக்கு சிட்டில நிறைய வீடு இருக்கு, எங்க அப்பா ரொம்ப பெரிய பணக்காரர் அப்படி இருக்கிறப்போ நான் எதுக்கு அந்த மாதிரி ஓட்டு வீட்டில் கஷ்டப்படணும். அது எல்லாமே உன்ன பழிவாங்க தாண்டி. இப்ப உள்ள இருக்கா பாரு இவதான் எங்க அப்பா பார்த்த பொண்ணு இன்னும் ரெண்டு மாசத்துல இவளுக்கு எனக்கு கல்யாணம். எங்கள விட பணக்கார குடும்பம். பணம் என்னைக்குமே பணத்தோட தாண்டி சேரும். இப்ப நீ என்ன பண்ற ஐயோ வாழ்க்கை போச்சுன்னு போய் செத்துப் போற.
இது எல்லாம் நான் இப்ப கூட ஏன் சொல்றேன் தெரியுமா, என்ன விஷயம்னு தெரியாமலே நீ வாழக்கூடாதுல விஷயம் தெரிஞ்சு இன்னும் கஷ்டப்பட்டு வாழனும். அதனாலதான் நீ என் பிரண்டு கிட்ட போன் பேசணும் சொன்ன உடனே அவனை இந்த அட்ரஸ் கொடுக்க சொன்னேன்” என்று சொல்லி நக்கலாக சிரிக்க அவ்வளவு உறைந்து போய் நின்று இருந்தாள்
திட்டமிட்ட சதி என் வாழ்க்கையை மொத்தமாக அழித்து விட்டானே. காதல் என்ற பெயரில் நாடகமாடி, ஒரு வருடமாக என் கற்பையும் எடுத்து, இப்பொழுது இந்த குழந்தைக்கு இவனும் தகப்பனில்லை என்று கூறுகிறான். இவனை நம்பி வந்தது இவ்வளவு பெரிய தவறு என்று இப்போதுதான் அவளுக்கு புரிந்தது.
வேகமாக அவனை பார்த்து கண்ணில் இருந்த கண்ணீரை துடைத்து, ” நான் இப்பவே போலீஸ்க்கு போறேன். உன்ன புடிச்சு கொடுத்து உனக்கு தண்டனை வாங்கி கொடுத்தா தான்டா எனக்கு நிம்மதியா இருக்கும். எனவே நீ ஏமாற்றிய இந்த கலையரசி யாருன்னு இன்னும் கொஞ்ச நேரத்துல தெரியப்போகுது ” என்று வேகமாக நடக்க போக,
” ஒரு நிமிஷம் நில்லடி இவ்வளவு பண்ண நான் உன்னை ஆஃப் பண்ண வேற விஷயம் கையில் இல்லாமையா இருக்கும் ” என்று சொல்லிவிட்டு அவன் நிறுத்த இவள் உறைந்து போய் திரும்பிப் பார்க்க,
அவள் ஒரு வீடியோவை காண்பிக்க அதை பார்த்து உறைந்து போனால் இது மிகப்பெரிய துரோகம் அல்லவா?
அதில் ஆறு மாதங்களுக்கு முன்னாடி ஒரு பார்ட்டிக்கு சென்றது. தன் நண்பனின் திருமணம் என்று அவளை அழைத்துச் செல்ல , அங்கிருந்த ட்ரிங்ஸ் குறைக்கும் பொழுது மிகவும் போதையாக இருந்தது. கடைசியாக கண்கள் மூடும் போது இருந்தது சந்தோஷ். அதனால் அவள் நிம்மதியாக கண்மூட, எழுந்திருக்கும் பொழுது ஆடை இல்லாமல் ஒரு ஹோட்டல் அறையில் இருந்தாள்.
வெளியே போன சந்தோஷ் ஆடையோடு உள்ளே வரவும், அவன் தான் என்று நினைத்து அப்படியே விட்டு விட்டாள். ஆனால் இப்பொழுது அந்த வீடியோவில் வேறு ஆணுடன், அந்த அறைக்குள் வருவது போல இருந்தது. சந்தோஷ் ஒல்லியாக கொஞ்சம் குள்ளமாக இருப்பான்.
அவனும் சற்று ஹயிட் அதிகமாக, சிக்ஸ் பேக் உடன் இருக்க தெளிவாக தெரிந்தது அது சந்தோஷம் இல்லை என்று. பார்த்தவுடனே தெரிந்து கொண்டால் அவள் அனைத்திற்கும் ஒருவன் யார் என்று. அவன் முகம் தெரியவில்லை என்றாலும் அங்கு இருப்பது சந்தோஷ் இல்லையே.
அவனும் வேகமாக முத்தம் கொடுத்து அவளை பெட்டியில் தள்ளி அவள் மீது சரிய, அந்த வீடியோ அதோடு முடிந்தது.
கண்களில் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருக்க, ” ஏன் சந்தோஷ் எதுக்கு இப்படி பண்ண? நீ தா உலகம்னு உன்ன ரொம்ப லவ் பண்ணி கல்யாணம் பண்ணி வந்தேன். என்ன பழிவாங்க நெனச்சிருந்தா எவ்வளவோ வழிகள் இருக்கு. அதுக்கு இந்த காதல் கல்யாணம் தா கிடைச்சா. என்ன ரேப் பண்ணி இருந்தா கூட இந்த வலி இருந்திருக்காது. எதுக்குடா இப்படி ஒரு கேவலமான காரியத்தை செஞ்ச. உன்ன கல்யாணம் பண்ண பாவத்துக்கு என்னை விபச்சாரிய மாத்திட்ட ” என்று அவள் அழுது கொண்டு பாவமாக கேட்க,
அவனுக்குமே ஒரு நொடி ஏதோ மாதிரி தான் இருந்தது. தான் செய்தது அனைத்தும் தவறு என்று ஒரு நொடி யோசிக்க தான் செய்தான். அடுத்த நொடி அவள் மேல் இருந்த பழி வெறி வெளியே வர,
” இங்க பாரு நான் வேணும்னே ஒன்னும் பண்ணல. அன்னைக்கு நீ மயக்கம் போட்டு விழுந்ததும், என்னோட பேபி என்ன கூப்டா அதனால உன்னை அங்கேயே படுக்க வைத்துவிட்டு, என்னோட பிரெண்ட்ஸ் கிட்ட சொல்லி உன்ன உள்ள படுக்க வைக்க சொல்லிட்டு தான் நான் போனேன். அதுக்கப்புறம் தான் இந்த வீடியோ எனக்கே கிடைத்தது. இப்ப கூட இதை நான் உனக்கு காமிச்சி இருக்க மாட்டேன். பெரிய பத்தினி மாதிரி போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கிறேன் சொன்னில. அதுக்காக தான் உன் லட்சணத்தை காமிச்சேன். இப்ப நீ போய் கம்ப்ளைன்ட் கொடுத்தேன்னு வை இத நான் காமிச்சு நீ அந்த மாதிரி பொண்ணு தான்னு நானே கம்ப்ளைன்ட் கொடுப்பேன். அதுக்கப்புறம் நீ இந்த சொசைட்டி ல அந்த மாதிரி பொண்ணு ன்னு பேரோட திரிவ” என்று அவன் கோபமாக சொல்லி முடிக்க அவள் உறைந்து போய், வழி நிறைந்த கண்களுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்படிப்பட்ட துரோகத்தை அவள் நினைத்துப் பார்க்கவே இல்லை தன் மீது கோபம் இருந்தாலும், தன்னை மனைவியாகவாவது நினைத்திருப்பான் என்று, விபச்சாரியாக கூட்டி கொடுத்துவிட்டு இருக்க செத்துப் போகலாம் போல இருந்தது.
வெற்று கண்களுடன் அவனைப் பார்த்துவிட்டு அப்படியே நடந்து போக, ஏனோ அந்த நிமிடம் அவனுக்கும் உள்ளம் வலித்தது. ” ஏய் ஒரு நிமிஷம் நில்லு” என்று சொல்லிவிட்டு அவள் அருகே செல்ல, கட்டு கட்டாக இரண்டு பணத்தை எடுத்து அவள் கையில் கொடுத்து, ” இனிமேல் இது வச்சு உன்னோட லைஃப பாரு. இந்த குழந்தையை கலைச்சிடு இது என்னோட குழந்தை இல்ல நீ வந்தாலும் நீதி கிடைக்காது. உன் மேல இருந்தா பழி எனக்கு தீர்ந்தது. இனிமேல் என் லைஃப்ல வராது கலை. உன்ன நான் பார்க்கவும் விரும்பல ” என்று சொல்லிவிட்டு அவளை பார்க்க இந்த முறை அவள் கண்களில் கோபம்.
அந்த பணத்தை கீழே போட்டுவிட்டு, ” எதுக்குடா இந்த பணம் உன் கூட இருந்ததுகா. அப்ப நீயும் இத்தனை நாளா என்ன அப்படித்தான் நினைச்சிருந்தியா? நான் உன்னை உண்மையோட காதலோட, என் புருஷனா நினைச்சுக்காத இந்த ஒரு வருஷமும் வாழ்ந்த, இந்த நிமிஷம் என் புருஷன் செத்துப் போயிட்டான். அதனால் இந்த பணம் கூட எனக்கு தெரியல. லைஃப்ல புருஷன் இல்லாமல் பொண்ணுங்க வாழ்றதே இல்லையா? என்னாலயும் வாழ முடியும் கௌரவமா. இப்பதான் நிம்மதியா இருக்கு என் வயித்துல இருக்க உன்ன மாதிரி பொறுக்கி ஓட குழந்தையும் கிடையாது. இவன் வளர்ந்து பெருசானதுக்கு அப்புறம் கண்டிப்பா உன்ன மாதிரி இருக்க மாட்டான் . அப்பன் பேரு தெரியாத குழந்தையாக இருந்துட்டு போகட்டும். ஆனா இந்த குழந்தைக்கு நீ அப்பன் இல்ல அது வரைக்கும் எனக்கு சந்தோஷம். இவ்வளவு கஷ்டம் கொடுத்த கடவுள் கடைசியா உன் மூலமா எனக்கு நல்லது தான் பண்ணி இருக்காரு. அதான் உன்னோட குழந்தை இல்லைன்னு சொன்னியே அந்த நல்லது. கடவுள்னு ஒருத்தன் இருந்தார்னா, கண்டிப்பா அவர் உன்னை பார்த்துபாரு உனக்கு சாபம் கொடுக்கவும், நீ நல்லா இல்லைன்னு நினைக்கவும் நான் யாரு. அப்படி நினைச்சா உனக்கு எனக்கு எந்த வேறுபாடும் கிடையாது. இப்ப சொல்றேன் கேட்டுக்கோ நீ என்னோட புருஷன் கிடையாது என் புருஷன் சந்தோஷ் செத்து போயிட்டான் ” என்று கோபமாக கூறி கழுத்தில் இருந்த தாலியை அறுத்து, அவன் மூஞ்சியில் விட்டெறிந்து அவனை திரும்பியும் பார்க்காமல் செல்ல,
அவன் தான் அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தான் இப்படி ஒரு மாற்றத்தை அவளிடம் எதிர்பார்க்காமல் இருந்ததால். தன் காலில் விழுந்து கெஞ்சுவால் என்று அவன் நினைத்திருக்க தாலி அறுத்தெறிந்து செல்வாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
போகும் அவளைப் பார்த்து இருந்தவன் ‘டார்லிங்’ என்று சத்தம் கேட்க,
” இதோ வந்துட்டேன்” என்று அவளை திரும்பி பார்த்துக் கொண்டே உள்ளே சென்றான். அவன் மனதும் கஷ்டமாகத்தான் இருந்தது ஏன் என்று புரியவில்லை. இப்ப வரையும் தான் செய்தது தவறில்லை என்று நினைக்கிறான். இந்த நினைப்பு அவளிடம் செல்லும் வரை, ” என்னடா உன்னுடைய எக்ஸ் நிறைய சீன் போட்டுட்டு போயிட்டா போல”, என்று அவனைப் பிடித்து இழுத்து முத்தம் கொடுக்க ஆரம்பிக்க , அந்த நிமிடம் அனைத்தும் மறந்து போய் அவளிடம் தஞ்சம் புகுந்தான் சந்தோஷ்.
🙏🙏🙏
error: Content is protected !!