Skip to content
Post Views: 4,500
நிறம் பாராத காதல்
அத்தியாயம் 16
மின்சாரம் தாக்கித் தூக்கி வீசப்பட்ட ரணதீரனை முதலுதவி செய்து வைதேகி காப்பாற்றியதும் வேதநாயகி தன் மகனைக் கட்டி அணைத்து கதறி அழுதவர் வைதேகி முன் மண்டியிட்டு, “இந்த நொடி நீ என் கண்ணுக்கு என் மகனைக் காப்பாற்றிய கடவுளா தான் தெரியுற வைதேகி, நீ நல்லா இருக்கனும்” என்று கண்கள் கலங்கினார்.
“அத்த… என்ன நீங்க, ஏன் இப்படி எமோஷனல் ஆகுறீங்க, முதல்ல உங்க பிள்ளையை எழுந்து கட்டில்ல உக்கார சொல்லுங்க, நான் போய்த் தண்ணிக்கொண்டு வரேன்” என்ற வைதேகி அந்த அறையிலிருந்து வெளியேறியதும், வேதநாயகி தன் மகனைக் கைப் பிடித்து அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்தார்.
Advertisement
“ராணா… இப்போ எப்படி இருக்க, வேணும்னா ஹாஸ்பிடல் போகலாமா?”
“ஹ்ம் ஹ்ம்… வேணா அம்மா. நான் நல்லா தான் இருக்கேன். “
“நான் பயந்துட்டேன் ராணா… வைதேகி மட்டும் இல்லைனா இங்க என்ன நடந்து இருக்கும்னு நினைத்துப் பார்க்கவே எனக்குப் பயமா இருக்கு “
Advertisement
“அம்மா… நான் நல்லா தான் இருக்கேன். நீங்கப் பயப்புடாதீங்க.”
Advertisement
“ராணா…உனக்கு ஷாக் அடிச்சதும் வைதேகி அவளோட மூச்சைக் கொடுத்து உன்னைக் காப்பாத்தினாள். உன் அப்பா தான் வைதேகியை இந்த வீட்டுக்கு மருமகளா அனுப்பி வச்சிருக்காரு” என்று வேதநாயகி உள்ளம் நெகிழிந்து வைதேகியை பற்றிப் பேசிக்கொண்டு இருக்கும் தருணம் கையில் சூடான தேநீருடன் உள்ளே வந்த வைதேகி, “இந்தாங்க சூடா இந்த டீயை குடிங்க” என்று அவனிடம் கொடுக்க, இந்த முறை ரணதீரன் மறுக்காமல் தேநீரை வாங்கிக்கொண்டான்.
தன் அருகே இதுவரை எந்தப் பெண்ணும் நின்று பேசக் கூட அருவெறுத்த நிலையில் இன்று வைதேகி தன் உயிரைக் காப்பாற்ற அவள் செய்த உதவியை எண்ணி ரணதீரனுக்கு வைதேகி மேல் பெரிய மரியாதை உண்டானது.
“வைதேகி… நம்ம வேணும்னா ராணாவை ஹாஸ்பிடல்க்கு அழைச்சிட்டு போகலாமா?” என்று வேதநாயகி கேக்க, “எனக்குத் தெரிந்து அதுக்கெல்லாம் அவசியம் இல்லை அத்த. ஆனா உங்களுக்குப் பயமா இருந்தா சொல்லுங்க நம்ம ராணா சாரை ஹாஸ்பிடல்க்கு அழைச்சிட்டு போகலாம், நான் வேணும்னா வண்டி எடுக்குறேன்” என்று வைதேகி சொன்னாள்.
Advertisement
“அம்மா… நான் நல்லா தான் இருக்கேன், ஹாஸ்பிடல்க்கு எல்லாம் வேண்டாம்” என்ற ரணதீரன் பொறுமையாகக் கட்டிலிலிருந்து எழுந்தவனின் கரங்களை அக்கறையாகப் பற்றிக்கொண்டாள் வைதேகி.
“எங்க போகணும் சொல்லுங்க, நான் அழைச்சிட்டு போறேன்” என்ற வைதேகியின் கையைத் தன் வசமிருந்து எடுத்து விட்டவன், “நான் என் இடத்துக்குப் போறேன்” என்றான்.
“இல்லிங்க… இன்னைக்கு நைட் நீங்க அத்தைக்கூட இருங்க, மின்சாரம் தாக்கிய உடம்பு, கொஞ்சம் அசதியா இருப்பிங்க, அதனால நீங்கத் தனியா இருக்க வேண்டாம்” என்று வைதேகி சொன்னதும், “ராணா… வைதேகி சொன்னது போல நீ இன்னைக்கு இங்கேயே படுத்துக்கோ” என்று வேதநாயகி சொல்ல, “ம்” என்றவன் தன் அம்மாவின் அறையிலேயே படுத்துக்கொண்டான்.
“அத்த… அவரு ரெஸ்ட் எடுக்கட்டும். நான் வெளிய இருக்கேன், எதாவது தேவைன்னா என்னைக் கூப்பிடுங்க” என்ற வைதேகி அந்த அறையிலிருந்து வெளியேறியதும் வேதநாயகி தன் மகனின் அருகே அமர்ந்து அவன் கேசத்தை அன்பாக வருடிக்கொடுத்தார்.
“அம்மா… நான் நல்லா தான் இருக்கேன். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்.” என்ற ரணதீரனின் நெற்றியில் வேதநாயகி இதழ் பதித்தவரின் கண்களில் கண்ணீர் பெருகியது.
“அம்மா ஏன் அழறீங்க?”என்ற ரணதீரன் படுக்கையிலிருந்து எழுந்ததும்,”ஒரு நொடி என் உயிரே போன மாதிரி ஆகிடுது ராணா… நாளைக்கு நீ வைதேகியை அழைச்சிட்டு நம்ம சிவன் கோவிலுக்குப் போயிட்டு வந்துடு” என்று வேதநாயகி சொன்னதும், தன் அன்னையின் வார்த்தைக்குச் சம்மதம் தெரிவிக்கும் விதமாகத் தலையசைத்தவன் தாயின் அரவணைப்பில் அந்த நொடி நிம்மதியாகக் கண்களை மூடியவனின் சிந்தையில் வைதேகியின் நினைவு மட்டுமே பதிந்து இருந்தது.
ரணதீரன் அப்படியே தூங்கி இருக்க, சில மணி நேரம் கடந்து மருத்துவமனைக்குச் சென்ற மாறனும் மாயாவும் கீதாவுடன் வீட்டுக்கு திரும்பியவர்களிடம் சற்று முன் நடந்த அசம்பவிதத்தை கண்ணீர் மல்கச் சொல்லிக்கொண்டு இருந்தார் வேதநாயகி.
“என்ன அத்த சொல்றிங்க!? ஐயோ ராணாவுக்கு என்னாச்சு?” என்று மாறன் பதறியதும், “இப்போ நல்லா இருக்கான் மாப்புள்ள, ஆனா வைதேகி இல்லைனா இன்னைக்கு என் மகன் எனக்கு இல்லாமல் போய் இருப்பான்” என்ற வேதநாயகியின் கண்ணீரை துடைத்துவிட்ட மாயா,
“அம்மா வைதேகி எங்க?”என்று கேட்டதும்,”இன்னைக்கு நைட் நான் தான் சாப்பாடு பண்ணுவேன்னு அடம் பிடித்துச் சமையல் பண்ண போய் இருக்காள்”என்றார் வேதநாயகி.
வைதேகியை தேடி சமையலறைக்கு ஓடிய மாயா,”வைதேகி…” என்று அழைத்தவள் அவளைக் கட்டி அணைத்து கண்ணீருடன், “ரொம்ப தேங்க்ஸ் மா, என் தம்பி தான் என்னோட மூத்த பையன், அவனுக்கு எதாவதுனா எங்கனால தாங்கிக்கவே முடியாது” என்றவள் வைதேகிக்கு மனதார நன்றி தெரிவித்தாள்.
“ஐயோ அண்ணி நீங்களுமா! அப்படியென்ன நான் பண்ணிட்டேன்,
அதுவும் இல்லாம இதெல்லாம் ஒரு முதலுதவி தான் அண்ணி” என்று வைதேகி சொல்ல
“இருந்தாலும் நீ பண்ணது ரொம்ப பெரிய உதவி வைதேகி, நானும் உனக்குப் பெரிய தேங்க்ஸ் சொல்லிக்கிறேன்” என்று தன் நன்றியைச் சொல்லிக்கொண்டே சமையலறை புகுந்தான் மாறன்.
“என்ன நீங்க! ஏன் மாறி மாறி நன்றி சொல்லுறீங்க! சரி கீதா அம்மாவுக்கு டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று வைதேகி பேச்சை மாற்றும் விதமாகக் கேட்டதும், “அம்மா நல்லா இருக்காங்க வைதேகி, சர்க்கரை அளவு தான் கூடி இருக்குதாம்” என்றான் மாறன்.
“இப்போ எல்லாம் பிறக்குற குழந்தைக்கே சர்க்கரை அளவு அதிகமா தான் இருக்கு, ஆனா உணவே மருந்து, மருந்தே உணவுன்னு சொல்லுற மாதிரி நம்ம சாப்பிடுற சாப்பாட்டில் கவனம் செலுத்தணும், அதனால தான் இன்னைக்கு நமக்கு நான் கேழ்வரகு தோசை வாத்து, கொள்ளு சட்னி வச்சி இருக்கேன்” என்று வைதேகி சொன்னதும், “ஐயைய அதெல்லாம் என் தம்பி சாப்பிட மாட்டேனே” என்றாள் மாயா.
“உன் தம்பி சாப்பிட மாட்டானா! இல்லை நீ சாப்பிட மாட்டியா?” என்று மாறன் கேட்டதும், “நானும் தான்.” என்று மாயா சொன்னதும், “அண்ணி… நீங்க டேஸ்ட் பண்ணி பாருங்க பிடிக்கலைன்னா சாப்பிட வேண்டாம்” என்ற வைதேகி இரவு உணவை மேசைமேல் அடுக்கி வைத்தவள், “அண்ணா… உங்க மச்சானை எழுப்பி அழைச்சிட்டு
வாங்க சூடா சாப்பிட்டா உடம்புக்கு நல்லா இருக்கும்” என்று வைதேகி சொல்லும் தருணம் ரணதீரன் தன் அம்மாவின் அறையிலிருந்து வெளியே வந்தவனை மாயா கட்டி அணைத்து கண்கள் கலங்கினாள்.
“ஏன் மச்சான், கரண்ட் விஷயம் எல்லாம் நான் வந்து பார்க்க மாட்டேனா! ஏன் அதுக்குள்ள நீ போய்க் கரண்ட்ல கை வச்ச” என்று மாறன் கண்டிக்கும் விதமாகக் கேட்டதும், “ஐயோ மாமா… எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை, நான் நல்லா இருக்கேன்” என்ற ரணதீரன் மீது என்றுமே மாறனுக்கு அதிகமான பாசம் இருக்க தான் செய்தது.
“இப்போ எப்படி மாப்பிளை இருக்கீங்க” என்று கீதாவும் அக்கறையாக நலம் விசாரிக்க, “எனக்கு ஒண்ணுமில்ல அத்த… நீங்க ஹாஸ்பிடல்க்கு போனீங்களே டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று கேட்ட ரணதீரன் இயல்பாக அனைவரிடமும் பேசிக்கொண்டு இருந்தவன் முன்னே தோசையை வைத்துச் சாப்பாடு தட்டை நீட்டினாள் வைதேகி.
“ஐயோ மாமா… இவனுக்கு இதெல்லாம் பிடிக்கவே பிடிக்காது இப்போ தட்டு பறக்கப் போகுது பாருங்க” என்று மாயா சொல்ல,
“அத்த… நீங்களும் வாங்க சாப்பிடலாம்” என்ற வைதேகி அவளாக அனைவர்க்கும் இரவு உணவைப் பரிமாறியவள், பொம்மியின் தட்டில் உள்ள தோசையயை அவளுக்கு ஊட்டி விடவும் செய்தாள்.
“அத்த… தோசை ரொம்ப நன்னா இருக்கு” என்று சிறுமி மயிழினி மழலை குரலில் சொன்னதும், “ஆமா வைதேகி தோசை சூப்பரா இருக்கு” என்ற கீதாவும் உணவை ரசித்துச் சாப்பிட்டார்.
“சார் நீங்கச் சொல்லுங்க டின்னர் எப்படி இருக்கு?” என்று வைதேகி ரணதீரனை பார்த்துக் கேட்டதும், “ம்… நல்லா இருக்கு” என்ற ரணதீரன் அவன் தட்டில் உள்ள தோசையை ருசித்துச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவனை மாயா வாயைப் பிளந்து ஆச்சிரியமாகப் பார்த்து இருந்தாள்.
“பார்த்து டி வாயில கொசு போகப் போகுது”என்ற மாறன் சிரித்துக்கொண்டே அவனும் தோசையை சாப்பிட,”வைதேகி சாப்பாடு ரொம்ப நல்லாவே இருக்கு, இதுவரை நான் கேழ்விரகு கஞ்சி தான் குடிச்சு இருக்கேன், ஆனா இந்தத் தோசை ரொம்ப அருமையா இருக்கு, ஏன் ராணா… தோசை நல்லா இருக்கு தானே?” என்று வேதநாயகி கேட்டதும்,
“ம்… நல்லா இருக்கு” என்று ரணதீரன் சொல்ல, அனைவரும் ஒன்றாகச் சாப்பிட்டு முடித்தார்கள்.
“அப்போ இன்னைக்கு நைட் வைதேகி கூடத் தான் பொம்மி தூங்கணுமா?” என்று கீதா கேட்டதும், பொம்மி அதுவரை அமைதியாக இருந்த பெண்ணவள், “நான் என் வீட்டுக்குப் போய்த் தூங்கப் போறேன்” என்றவளை அங்குள்ள அனைவரும் அதிசயமாகப் பார்த்தார்கள்.
“ஏன் அக்கா… உங்களுக்கு என்கூட தூங்க இஷ்டமில்லையா?” என்று வைதேகி கேட்டதும், “நான் நாளைக்கு காலையில இங்க வரேன், இப்போ நான் என் வீட்டுக்குப் போறேன்.நீலு என்கூட தங்கட்டும் நீ வேண்டாம்” என்ற பொம்மியை பார்த்து வைதேகியின் முகம் வடிப்போனது.
பொம்மியை நீலவேணி தோட்டத்து வீட்டுக்கு அழைத்துச் சென்றதும், பணியாளர்கள் சாப்பாட்டு மேசையைச் சுத்தம் செய்துகொண்டு இருக்க, “மச்சான் இன்னைக்கு நீ அத்தை ரூம்ல படுத்துக்கோ” என்று மாறன் சொல்ல,
“ஆமா ராணா… நீ என்கூட படுத்துக்கோ, வைதேகி நீயும் நேரத்தோடு போய்ப் படு மா” என்ற வேதநாயகி தன் அறைக்குச் சென்றதும், கீதாவும் அவர் அறைக்குச் செல்ல, “ஓகே எல்லோருக்கும் குட் நைட் நாங்களும் போய்த் தூங்கறோம்” என்ற மாயாவும் மாறனும் சிறுமி மயிழினியுடன் அவர்கள் அறைக்குச் சென்றார்கள்.
அனைவரும் உறங்கச் சென்றதும் வைதேகி தண்ணீர் சொம்புடன் மாடியில் இருக்கும் அவள் அறைக்குச் செல்லப் போனவளை, “ஒரு நிமிஷம்…” என்ற ரணதீரனின் குரல் தடுத்து நிறுத்தியது.
“என்னங்க கூப்பிட்டீங்களா?” என்ற வைதேகியின் முகத்தை முதல் முறை கோவபப்படாமல் நன்றியோடு பார்த்தான் ரணதீரன்.
“என்னாச்சு! உடம்புக்கு எதாவது பண்ணுதா, ஹாஸ்பிடல் போகலாமா?” என்று வைதேகி கேட்டதும், “ஹ்ம் ஹ்ம்… அதெல்லாம் இல்ல, நா… நான் நன்றி சொல்லத் தான் கூப்பிட்டேன்” என்று ரணதீரன் சொன்னதும், “எதுக்கு நன்றி?” என்று தெரியாததை போலக் கேட்டாள் வைதேகி.
“என்னைக் காப்பதியதுக்கு தான் தேங்க்ஸ்” என்று ரணதீரன் சொன்னதும்,”அத வச்சி நான் என்ன பண்ணுறது!?” என்று கிண்டலாகக் கேட்டாள் வைதேகி.
“என்னைக் காப்பாத்தியதுக்கு நன்றி சொன்னேன், நன்றியை வச்சி என்ன பண்ணுறதுனு கேட்டா நான் என்ன பதில் சொல்லுறது?” என்று ரணதீரன் கேட்டதும், “எனக்கு இந்த நன்றி எல்லாம் வேண்டாம் பாஸ், எனக்கு உங்ககிட்ட வேற ஒன்னு வேண்டும்” என்றாள் வைதேகி.
“என்கிட்ட இருந்தா! என்கிட்ட இருந்து என்ன வேணும்!?” என்று ரணதீரன் புருவம் உயர்த்தி முறைப்புடன் கேட்டதும்,
“எனக்கு உங்ககிட்ட இருந்து மூணு விஷயம் வேணும்” என்றாள் வைதேகி.
“என்ன வேணும்? பணம் வேணுமா, இல்ல நகை…” என்று ரணதீரன் கேக்கும் போதே, “ஹலோ பாஸ் அதெல்லாம் வேண்டாம், எனக்கு நான் கேக்குற மூணு விஷயம் உங்ககிட்ட இருந்து வேண்டும்.” என்று வைதேகி கேட்டதும், “சரி சொல்லு என்ன வேணும் உனக்கு!?”என்று கேட்டான் ரணதீரன்.
“முதல் விஷயத்தை இப்போ சொல்லுறேன், மீதி ரெண்டு விஷயம் நான் இங்க இருந்து போறதுக்குள்ள உங்ககிட்ட கேட்டு வாங்கிக்கிறேன்” என்று வைதேகி சொன்னதும் சில நொடிகள் தயங்கிய ரணதீரன், “என்ன முதல் விஷயம்?” என்று கேட்டான்.
“முதல் விஷயம் எனக்கு உங்களோட நட்பு வேண்டும்” என்ற வைதேகி அவன் முன் தன் வலது கரத்தை நீட்டியதும், “என் நட்பு உனக்கு ஏன்?” என்ற ரணதீரனை ஏகத்துக்கும் முறைத்த வைதேகி, “என்னோட முதல் தேவையே உங்க நட்பு தான். ம்… சீக்கிரமா கையைக் கொடுத்து என்னை உங்க தோழியா சேர்த்துக்கொங்க” என்ற வைதேகி அவன் முன்னே கையை நீட்டியப்படியே இருந்தாள்.
வைதேகியின் சந்தன நிற கரங்களின் அருகே ரணதீரன் தயக்கத்துடன் தன் கையை நீட்ட, அவளே சட்டென்று அவன் கரங்களை உரிமையோடு பிடித்துக் கைகுலுக்கியவள், “சூப்பர் பாஸ், அப்போ இன்னையில இருந்து நம்ம ஃபிரண்ட்ஸ் , ஓகே ஃப்ரெண்ட் நம்ம நாளைக்கு காலையில மீட் பண்ணலாம், குட் நைட். நீங்க இன்னைக்கு அத்தை ரூம்ல படுத்துக்கோங்க” என்ற வைதேகி சிரித்த முகத்துடன் அவள் அறைக்குச் சென்றவளை ரணதீரன் இந்த நொடியிலிருந்து தோழியாக ஏற்றுக்கொள்ள ஒரு மனதாக முடிவு செய்தவன் தன் அன்னையின் அறையிலேயே இன்று துயில்க் கொண்டான்.
மறுநாள் காலை ரணதீரன் தன் அம்மாவின் அறையிலிருந்து நேரத்துக்கு எழுந்து தன் பங்களாவிற்கு சென்றவன் குளித்து முடித்து அவன் அலமாரியை திறந்தது அங்கே அடுக்கி வைத்து இருந்த கருப்பு ஆடைகளில் ஒன்றை எடுத்து உடுத்தியப்படி கண்ணாடி முன்னே நின்று தன் கேசத்தை சரி செய்துக் கொண்டவன் வேகமாகத் தன் அறைக்குள் நுழைந்து, “குட் மார்னிங்” என்று தன்னை சுற்றி இருந்த இவன் உருவம் கொண்ட ஓவியங்களைப் பார்த்துப் பேசினான்.
“குட் மார்னிங் இருக்கட்டும், ஆமா நேத்து எங்க போன?” என்ற குரல் இவன் காதில் மட்டும் கேட்டதும், நேற்றைய தினம் வைதேகி இவனைக் காப்பாற்றிய விஷயத்தை உயிருள்ள மனிதனிடம் சொல்வதை போல ரணதீரன் அவன் அறையில் உள்ள அவன் உருவம்க் கொண்ட ஓவியங்களிடம் பேசிக்கொண்டு இருந்தவன்,வார்த்தைக்கு வார்த்தை வைதேகியின் நல்ல குணங்களை பற்றியே பேசினான்.
“நான் தான் சொன்னேனே… அந்தப் பொண்ணு பார்க்க நல்ல பொண்ணா தான் தெரியுறான்னு, ஆனா நீ தான் கோவப்பட்டு என்னைக் கிழிச்சி தூக்கி வீசிட்ட” என்ற குரல் ரணதீரனின் காதில் கேட்டதும், அவன் தலையைத் தூக்கி பார்த்தவன் கண்ணுக்கு மின் விசிறியில் கிழிந்து தொங்கும் ரணதீரனின் உருவம் கொண்ட ஓவியம் தெரிந்தது.
நாற்காலியில் ஏறி ரணதீரன் அந்த ஓவியத்தை எடுத்தவன், மேசைமேல் வைத்து அந்த ஓவியத்தைப் பார்த்து, “என்னை மன்னிச்சுடு, நீ சொன்னது சரிதான், வைதேகி ரொம்ப நல்ல பொண்ணு தான், அதனால தான் அவளை நான் என் தோழியா ஏத்துகிட்டேன்” என்ற ரணதீரனை பார்த்து அவனைச் சுற்றி இருந்த ஓவியங்கள் எல்லாம் மகிழ்ச்சியாகச் சிரிப்பதை போல அவன் காதில் மட்டும் சிரிப்பின் ஒலி கேட்டது.
“தீரா…அவளை நம்பாத, அவளை மட்டும் இல்லை! அழகான எதையுமே நம்பாதே, எல்லாம் வேஷம், நான் சொல்லுறத கேளு அவளை நீ நம்பாதே” என்று ரணதீரன் காதில் விழுந்த குரலைக் கேட்டு அவன் திரும்பிப் பார்க்க, அவன் எதிரே ரணதீரன் 18 வயதில் இருந்தபோது அவன் கையால் வரைந்த அவன் உருவம் கொண்ட அலங்கோலமான ஓவியம் ஒன்று கோவமாக அவனை முறைத்தபடி இருந்தது.
“அவளே இன்னும் ஒரு வாரம் தான் இங்க இருக்க போறான்னு மாமா சொல்லி இருக்காரு, இதுல அவளை நான் நம்பினாலும் நம்பலைனாலும் நமக்கு ஒன்னும் ஆகப்போறது இல்ல, ஆனா நேத்து அவ இல்லைனா இன்னைக்கு நான் இல்லை, அதனால அவ இங்க இருக்குற வரைக்கும் அவளுக்கு என்ன வேணுமா அதை நான் கொடுக்கத் தான் போறேன்.” என்ற ரணதீரன் தன் அறையைப் பூட்டிக்கொண்டு அந்தப் பங்களாவிலிருந்து வெளியேறினான்.
காலை எப்போதும் போலவே அனைவரும் ஒன்றாக அமர்ந்து தேநீர் பருகிக்கொண்டு இருக்க, “எங்க இன்னும் வைதேகி வரலையா?” என்று கேட்டுக்கொண்டே கீதா அவர் அறையிலிருந்து வெளியே வந்த சமயம், “இதோ நான் இங்க இருக்கேன்.” என்ற வைதேகி பொம்மியுடன் தோட்டத்து வீட்டிலிருந்து பெரிய வீட்டிற்குள் வந்தவளை தொடர்ந்து ரணதீரனும் உள்ளே நுழைந்தான்.
“ராணா வந்துட்டியா… அம்மாடி வைதேகி, நீயும் ராணாவும் வெறும் வயத்தோட கோவிலுக்குப் போயி தீர்த்தம் வாங்கிட்டு வந்துடுங்க.” என்று வேதநாயகி சொன்னதும், ரணதீரனும் வைதேகியும் ஜீப்பில் ஒன்றாகக் கோவிலுக்குச் சென்றதை பார்த்து,
“மாமா… இங்க என்ன நடக்குது!?, வாசல்ல நின்னப்படியே என் தம்பி உங்க தங்கச்சியை வெளியே அழைச்சிட்டு போறான்” என்று மாயா சொன்னதும்,
“எப்படியோ ரெண்டு பேரும் ராசியானா சந்தோஷம் தானே” என்ற மாறனின் வார்த்தை உண்மையாக வேண்டும் என்ற எண்ணம் மாயாவின் மனதிலும் இருக்க தான் செய்தது.
ஜீப்பில் வைதேகியை அழைத்துக் கொண்டு ரணதீரன் கோவிலுக்குச் செல்ல, “ஆமா வேலு அண்ணன் எங்கே?” என்று இயல்பாகக் கேட்டாள் வைதேகி.
“வேலு கம்பெனி விஷயமா சென்னைக்கு போய் இருக்கான், இன்னைக்கு நைட் வருவான்.” என்ற ரணதீரன் ஜீப்பை கோவில் அருகே நிறுத்தி, வைதேகியை அழைத்துக்கொண்டு சாமி சன்னிதானதுக்குள் நுழைந்தான்.
“தம்பி வாங்க வாங்க, பெரியம்மா நேத்து நைட்டே போன்ல விவரத்தைச் சொல்லிட்டாங்க, வாங்க அபிஷேகத்தை ஆரம்பிச்சிடலாம்.” என்ற ஐயர் பூஜையைத் தொடங்கியதும் வைதேகி கைகளைக் கூப்பி கண்களை மூடித் தெய்வத்தை வழி பட்டுக்கொண்டு இருந்தவள் அருகே ரணதீரனும் நின்றுக்கொண்டான்.
சில நிமிடங்களில் ஐயர் அபிஷேகத்தை முடித்துத் தீர்த்தம் மற்றும் பிரசாதத்தை கொடுக்க, மனதார தெய்வத்தை வணங்கியபிறகு இருவரும் கோவிலிலிருந்து வெளியேறினார்கள்.
ஐயர் கொடுத்த மல்லிப் பூவைத் தன் கூந்தலில் சூடிகொண்டு இருந்த வைதேகியை, “சித்ரா….” என்று அழைத்த பெண்மணியைப் பார்த்த வைதேகியின் முகமெல்லாம் வேர்க்க தொடங்கிய நிலையில்,
“வைதேகி உன்னைத் தான் அந்த லேடி கூப்பிடுறாங்க” என்று ரணதீரன் சொல்ல, “அவங்க லேடி இல்ல, அவரு தான் என் அத்தை பையன்” என்ற வைதேகியின் பதிலில் ரணதீரன் குழம்பி போனான்.
error: Content is protected !!