Skip to content
Post Views: 4,109
நான் தேடும் காதல் நீ…..4
நாச்சியப்பன் கடின உழைப்பாளி அவருக்கு இரண்டு பிள்ளைகள் மூத்தவன் செல்வம்,இளையவள் வைதேகி.நாச்சியப்பனின் மனைவி இரண்டாவது பிரசவத்தின் போதே இறந்துவிட தன் குழந்தைகளுக்கு தந்தையாகவும்,தாயாகவும் இருந்தவர் நாச்சியப்பன்.தனது கடையின் வருமானத்தை வைத்து தன்னால் முடிந்தவரை தன் இரு பிள்ளைகளையும் படிக்க வைத்தார் நாச்சியப்பன்.
செல்வம் நன்றாக படிப்பார் அதனால் அவர் படிப்பை முடிக்கும் போதே வேலையும் கிடைத்துவிட்டது,சென்னையில் பெரிய டெக்டைல்ஸ் நிறுவனத்தில் பணியில் அமர்ந்துவிட்டார்.வைதேகியும் அப்போது தான் தன் மேல் படிப்பில் அடியெடுத்து வைத்திருந்தார்.
தன் மகன் நன்கு படித்து தன்னை காப்பாற்றுவான் என்று மிகுந்த நம்பிக்கையில் இருந்தவருக்கு பெருத்த இடியாக விழுந்தது மகனின் திருமணம்.ஆம் தொழிலதிபரான ராஜாங்கத்தின் மகள் சாருலதாவை தன் மகனிற்கு திருமணம் செய்வதற்கு கேட்டதோடு அல்லாமல் செல்வத்தை வீட்டோடு மாப்பிள்ளையாகவும் கேட்டார்.
Advertisement
செல்வம் வேலையில் இருந்தது ராஜாங்கத்தின் ஒரு கிளையில் தான்.செல்வத்தின் திறமையைக் கண்ட ராஜாங்கத்திற்கு அவரை விட மனதில்லை அந்த நேரத்தில் தான் அவரின் மகள் சாருலதாவின் பார்வை அவ்வபோது செல்வத்தின் மீது ஆர்வமாக விழுவதைக் கண்டவர் உடனடியாக ஒரு திட்டத்தை தீட்டி அதை செயல்படுத்தியும் விட்டார்.
வீட்டில் வயதிற்கு வந்த பெண்ணிற்க அண்ணன் திருமணம் செய்யவது நல்லதல்ல அதோடு வீட்டோடு மாப்பிள்ளை என்பதில் தனக்கு விருப்பமும் இல்லை என்று நாச்சியப்பன் மகனிடம் கூற மகனோ காதல் மற்றும் பண பித்தில் எதையும் காதில் வாங்கவில்லை அதோடு,
“உங்களுக்கு பொறாமை எனக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சிடுச்சுனு….”என்று கூறிவிட,நாச்சியப்பனுக்கு பெருத்த அதிர்ச்சி தான் மகனின் இந்த பேச்சில் அதனால் அவர் மகனின் போக்கிலேயே விட்டுவிட விளைவு மகன் பெரிய வீட்டில் வீட்டோடு மாப்பிள்ளை ஆகிவிட்டான்.மகன் சென்றதிலேயே மனதொடிந்து இருந்தவருக்கு அடுத்த வருடத்தில் மிகப்பெரிய இடியாக விழுந்தது மகளின் கர்பம்.வைதேகி திடீர் என்று மயங்கி விழ அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனை சென்றவருக்கு வைதேகி கருதரித்திருப்பதாக கூறிவிட.பல இன்னல்களை தான்டி வந்தவருக்கு தன் மகளின் இந்த ஒழுக்ககேடான செயல் மிகவும் கோபத்தை தூண்டிவிட்டிருக்க அதிர்ந்து கூட பேசாதவர் மகளை அடித்துவிட்டார்.
Advertisement
“யாருடீ யாரு காரணம் இதுக்கு ஒழுங்கா சொல்லப்போறியா இல்லையா….”என்று வைதேகியின் இரு கன்னத்திலும் அறைந்து கேட்க,
Advertisement
“ப்பா என்னை மன்னிச்சிடுங்கப்பா….”என்று கைகூப்பி கேட்டவரின் மன்னிப்பு அவரின் காதில் சென்றடையவில்லை,
“எதுவும் பேசாத இதுக்கு யார் காரணம் மட்டும் சொல்லு….”என்று பெல்ட்டை எடுக்க,
“நி…நிரஞ்சன் அத்தான்….”
Advertisement
“யாரு….”
“நம்ம அண்ணியோட அண்ணன் நிரஞ்சன் ப்பா….ப்பா நீங்க நினைக்கிற மாதிரி இல்லைப்பா….என்னை கல்யாணம் செஞ்சிருக்கிட்டாருப்பா…. கோவில்ல வச்சு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டாருப்பா….”என்று மகள் அடுத்த குண்டை போட,மொத்தமாக நிலையிழந்துவிட்டார் நாச்சியப்பன்.
“ப்பா….என்னை பாருப்பா….”என்று தன் அருகே வந்த மகளை,
“வராத…கிட்ட வரதா….உனக்கும் உன் அண்ணனுக்கு என்ன குறை வைச்சேன் நான்….ஆங்…சொல்லு…என்ன குறை வைச்சேன்…ஆனா நீங்க இரண்டு பேருமே என் முதுகுல குத்திட்டீங்க…”என்று நாச்சியப்பன் தலையில் கை வைத்து அமர்ந்துவிட,
“ப்பா நான் எவ்வளவோ சொன்னேன் ப்பா அவர்கிட்ட ஆனா அவர் தான் எங்க வீட்ல இப்ப ஒத்துக்கமாட்டாங்க நாம கல்யாணம் செஞ்சிக்கிட்டு அப்புறமா சொல்லிக்கலாம்னு சொன்னார்….”
“ஓஓகோ…..இன்னும் என்னவெல்லாம் சொன்னார் உன் அவர்….உன் அப்பாக்கு தெரியாம கல்யாணம் செஞ்சு பிள்ளையும் பெத்துக்கலாம்னு சொன்னாரா….”என்று மீண்டும் மகளை அறைய கை ஓங்க இரண்டடி பின் சென்றார் வைதேகி.
மகள் ஏமாந்துவிட்டாள் என்பதையே ஏற்க முடியாமல் இருந்தவருக்கு அடுத்து அவள் யாரை நம்பி ஏமாந்திருக்கிறாள் என்று விடயம் தெரியவர இன்னும் இன்னும் மருகி தான் போனார் மனிதர்.நிரஞ்சனை பற்றி அத்தனை நல்ல எண்ணம் இல்லை அவருக்கு அதோடு தன் மகளின் மனதை எத்தனை எளிதாக மாற்றி இருக்கிறான் என்று கோபம் கனன்று கொண்டிருந்தது.என்ன தான் இதில் வைதேகியின் தவறு உள்ளது என்ற போதிலும் தந்தையாக அவளை விட முடியவில்லை.பாண்டியனிடம் கேட்டால் கண்டிப்பாக உதவுவான் தான் ஆனால் அவனின் நிலையும் சரியில்லாமல் இருக்க அவரை தொந்திரவு செய்யவில்லை.
ஆனால் இது அமர்ந்திருக்கும் நேரம் அல்லவே தன் மகளின் எதிர்காலமும் அடங்கியுள்ளதே என்று மகளை அழைத்துக் கொண்டு அவர் ராஜாங்கத்தின் வீட்டிற்கு சென்று அனைத்தையும் கூறிவிட,
“ச்சீ….நீயெல்லாம் என்ன மாதிரி பொண்ணு….”என்று சாருலதா காரி உமிழாத குறையாக கேட்டாள் என்றால்,செல்வமோ ஒருபடி மேல் சென்று வைதேகியை அறைந்துவிட்டார்.
“போதும் நிறுத்துங்க…யாரும் என் பொண்ணு மேல கை வைக்க கூடாது…எங்க உங்க பிள்ளை ஒழுங்கா வர சொல்லுங்க அவரை…நான் அவர் கிட்ட பேசிக்கிறேன்….”என்று நாச்சிப்பன் கூற,
“என்ன என் பிள்ளை எதுக்கு இங்க வரனும்…உங்க பொண்ணு ஒழுக்கம் கெட்டு யாருக்கிட்டயோ கெட்டு போய் வருவா….அதுக்கு என் பிள்ளை பலியாடா….”என்று சாருலதாவின் தாய் சாந்தினி வார்த்தைகளால் குத்தி கிழிக்க,
“அத்தான் என்னை கல்யாணம் செஞ்சிருக்கார்…என்கிட்ட ப்ரூப் இருக்கு….இப்ப அவரை வர சொல்லுங்க…..நீங்க தான் ஏதோ பண்ணியிருக்கீங்க இரண்டு நாளா அவர் என் போனை எடுக்கவேயில்லை….இப்ப நீங்க கூப்பிடல நான் போலீஸ்க்கு போவேன்….”என்று வைதேகி அழுது கொண்டே பேச,
“என்ன போலீஸா போ போ…நான் பார்க்காத போலீஸா….”என்று ராஜாங்கம் எகத்தாளமாக கூற,தந்தை மகள் இருவருக்கும் கிலி தான் பிடித்தது.அவர் கூறுவது சரியே அவர் பார்க்காத போலீஸார் இருப்பார்களா என்று நினைத்தவர்களுக்கு நெஞ்சம் அடைத்த உணர்வு.வைதேகி மடங்கி அமர்ந்துவிட நாச்சியப்பனுக்கு மகளை அவ்வாறு பார்க்க முடியாமல் மகனிடம்,
“டேய் அவ உன் தங்கைடா…கொஞ்சமாச்சும் அவ பக்கம் இருந்தும் ஒரு அண்ணா யோசிடா….”என்று கெஞ்ச தொடங்க,
“என்ன நாங்க முடியாதுனு சொன்னவுடனே உங்க பிள்ளைக்கிட்ட போறீங்களா….”என்று சாரு கேட்க,நாச்சியப்பன் இயலாமையுடன் மகனை பார்த்தார்.தன் தந்தையின் நிலையைக் கண்ட செல்வத்திற்கு மனது வலிக்க தான் செய்தது.அவர் தன் மாமனாரிடம்,
“மாமா…உங்க கூட கொஞ்சம் பேசனும்….என் கூட வாங்க….”
“எதுக்கு…”என்று சாருவும்,அவளின் அம்மா கேட்க,
“சொல்லுறேன்…கொஞ்சம் பொறுமையா இருங்க…மாமா என் மேல நம்பிக்கை இருந்தா வாங்க….”என்று கூற,அவருக்கு அத்தனை நம்பிக்கை செல்வத்தின் மீது.பின்னே திருமணம் முடிந்து தன் வீட்டில் காலடி எடுத்து வைத்தவுடன் தன் நிறுவனத்தை முதன்மை நிலைக்கு கொண்டுவந்துவிட்டாரே தன் மகன் நிரஞ்சனுக்கு கூட இத்தனை புத்திசாலி தனம் இல்லையே என்று வருத்தம் கூட இருந்தது.
சற்று நேரம் கழித்து வந்த இருவரும் திருமணத்திற்கு சம்மதித்துவிட நாச்சியப்பனிற்கு மகனின் மீது நம்பிக்கை இல்லை என்ற போதிலும் தன் மகள் செய்த காரியத்திற்கு வேறு வழியும் இருக்கவில்லை.வைதேகி திருமணம் ஆகி மூன்று மாதத்தில் செல்வத்திற்கு மகன் பிறக்க குடும்பமே கொண்டாடியது.ஆனால் இங்கு வைதேகிக்கோ எந்தவித கொண்டாட்டங்களும் கொடுக்கபடவில்லை.நிரஞ்சன் எப்போதும் கிளப்,பார்டி என்று தான் சுற்றுவான் வைதேகி ஏன் இப்படி இருக்கீங்க தொழிலை கவனிங்க என்று கூறினாள் அவளிற்கு அடியும் திட்டும் விழும்.அவனை பொறுத்த வரை மனைவி என்பவள் தேவைக்கு மட்டும் தான் அவள் தன் சுந்திர வாழ்வில் குறுக்கே வரக்கூடாது.
வைதேகியும் பலமுறை நிரஞ்சனை திருத்த முயன்று தோற்று தான் போனார்.தீர்த்தா பிறந்து மூன்று வயது ஆன போது வைதேகி இரண்டாவது கருவுற்றிருந்தார்.அந்த செய்தியை கணவரிடம் பகிர்ந்து கொள்ள அவர் கணவரின் அலுவலகம் செல்ல அங்கே அவரின் கணவரோ வேறு ஒரு பெண்ணுடன் மிக நெருக்கமாக இருப்பதைக் கண்டவருக்கு நெஞ்சம் அடைத்து தான் விட்டது.
கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவர மொத்தமாக உடைந்துவிட்டார் வைதேகி.இதை தன் வீட்டில் உள்ளவர்களிடம் கூற அவர்களோ வைதேகியை தான் குறை கூறினார்களே தவிர நிரஞ்சனை கண்டிக்கவில்லை.கடைசியாக செல்வத்திடம் அவரோ என்னால் முடிந்தவரை கூறிவிட்டேன இனி உன் பாடு என்று கூறிவிட வைதேகி கணவனிடம் சண்டையிட தொடங்கினாள் ஆனால் பலன் தான் இல்லை.
ஆக அடுத்த இரண்டு மாதத்தில் தீர்த்தாவை அழைத்துக் கொண்டு தன் தந்தையின் வீட்டுக்கு வந்துவிட்டார்.மகளின் நிலையை கேட்டறிந்த நாச்சியப்பனிற்கு அத்தனை கோபம் நிரஞ்சனின் மீது அவர் தன் பெண்ணிற்காக சண்டையிட இந்த முறை தன் மகனும் துணைக்கு நிற்காமல் போகவே ஒன்று செய்ய முடியாமல் போனது அவரால்.ஆக அடுத்த ஒரு மாதத்தில் வைதேகிக்கு விவாகரத்து நோட்டீஸ் வர தன் தந்தையை பார்த்தவர்,
“ப்பா நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்ப்பா…என்னை மன்னிச்சிடுங்க…நான் கடைசி வரை உங்க மகளாவே இருந்துடுறேன் ப்பா….என்னை வெளில தள்ளிடாதீங்க ப்பா….”என்று கதறிவிட என்ன தான் மகள் பெரிய தவறு செய்திருந்தாலும் அவளை கைவிட முடியாதே அதனால் மகளை தன்னுடன் வைத்துக் கொண்டார்.ஆனால் வைதேகிக்கு மனது விட்டு போயிருக்க அவர் சிவன்யா பிறந்து இரண்டு மாதத்தில் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார்.தீர்த்தாவும்,சிவன்யாவும் நாச்சியப்பனின் பொறுப்பானார்கள்.
தீர்த்தா குழந்தையிலேயே தைரியமான பெண்ணாக இருந்தால்,சிவன்யாவோ பொறுமையாகவும் திறமைசாலியாகவும் இருப்பாள்.ஆக இருவரும் இரு வேறு துருவங்கள் தான் ஆனால் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்கமாட்டார்கள்.தீர்த்தாவின் வயது ஏற ஏற தன் அன்னையின் தவறை உணர்ந்தவள் அவரை முழுவதுமாக வெறுக்க துவங்கிவிட்டாள்.
சிறு வயதிலேயே தந்தையின் அரவணைப்பு அவளிற்கு பெரிதாக கிடைத்ததில்லை இப்போது தாயும் பொய்த்து போக அவளாள் தாங்கிக் கொள்ள முடியாமல் போனது.தீர்த்தாவின் நிலை அறிந்து நாச்சியப்பன் தான் அவளை தேற்ற தொடங்கினார்.அவர் தன் பிள்ளைகளை வளர்க்க தவறியவற்றை தன் பேத்திகள் இருவருக்கும் கற்று கொடுத்து தான் வளர்த்தார்.அதிலும் தீர்த்தா வளர வளர அவளின் பக்குவமும் அதே சமயம் பிடிவாத குணமும் சேர்ந்தே வளர தொடங்கியிருந்தது.சிறு வயதிலிருந்தே தன் தாய்,தந்தையின் திருமணம் பொய்து போனதை அறிந்தவளுக்கு திருமணம் என்பது தேவையில்லாத ஒன்று என்று மனதில் ஆழமாக பதிய துவங்கியது.அதை நாச்சியப்பனிடமும் அவள் கூற அவர் மகிழ்வதை விட வருத்தம் தான் கொண்டார்.தன் மக்களின் தவறால் இந்த பிள்ளைகளும் பாதிப்படைகின்றார்களே என்று பாரம் அவரை வெகுவாக அரிக்க துவங்கியது.
ஆண்டுகள் உருண்டோடி தீர்த்தா கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த சமயத்தில் நாச்சியப்பனிற்கு மாரடைப்பு ஏற்பட அவரை மருத்துவமனையில் சேர்த்தனர் தீர்த்தாவும்,சிவாவும். அவரை பரிசோத்த மருத்துவர்கள் நாச்சியப்பனை காப்பாற்றுவது மிகவும் கடினம் என்று கூறிவிட மொத்தமாக நிலையிழந்து போயினர் சகோதிரிகள் இருவரும்.அந்த நேரத்தில் தனக்கு தெரிந்த வக்கீல் சதாசிவத்தை அணுகி அவரிடம் தன் ஒரே சொத்தான கடையை தீர்த்தாவின் பெயரில் மாற்றியவர்,அவளின் திருமணத்திற்கு பிறகு தான் அதை முழுமையாக சொந்த கொண்டாடலாம் ஒருவேளை அவளுக்கு முப்பது வயதிற்குள் திருமணம் முடியவில்லை என்றால் கடை ஒரு xx டிரஸ்டின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றுவிடும் என்று கூறி அதன் படி உயிலாக எழுதிவிட்டார்.அதை தீர்த்தாவிடம் எப்போது ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
நாச்சியப்பனின் உயிர் மருத்துவமனையில் நான்கு நாட்கள் ஊசலாடி பின் பிரிந்தது.தந்தையின் இறப்பு செய்தியை கேட்டு ஓடி வந்திருந்தனர் செல்வம் தம்பதியினர்.அவர்களை கண்டவுடன் தீர்த்தாவிற்கு கோபம் தலைக்கேர அவர்களிடம் செல்ல முயன்றவளை சிவன்யாவும்,அமரனும் தான் தடுத்து நிறுத்தினர்.
“க்கா வேண்டாம்….நீ அவங்க கிட்ட பேசறது கூட எனக்கு பிடிக்கலை….நீ என் கூடவே இரு….”என்று சிவன்யா அழுதபடி கூற,
“தீர்த்தா என்ன தான் இருந்தாலும் அவர் பையன் அவரை தடுக்க உனக்கு உரிமையில்லை….அதனால வாயை திறக்க கூடாது….”என்று அமரன் எச்சரிக்கை செய்ய,
“மகன் அது இதுனு சொன்ன நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது பார்த்துக்க….இவனெல்லாம் மனுஷ ஜென்மத்திலேயை சேர்த்தியில்லை இதுல மகனாம் மகன்….”என்று தீர்த்தா சத்தமாக கத்த தொடங்க அத்தனை பேர் கூடியிருக்கும் சபையில் அமரனால் எதுவும் செய்யமுடியாமல் போனது.அதுவரை அவர்கள் மீது கவனம் இல்லாமல் இருந்த செல்வத்திற்கு தீர்த்தாவின் சத்தத்தில் திரும்பி பார்க்க,
“பார்த்தாச்சுனா கிளம்ப சொல்லு அமரா….”என்று தீர்த்தா அழுத்தம் திருத்தமாக கூற,
“என்ன எங்களை வெளில போக சொல்லுறீயா….இது எங்க வீடு முதல் நீ வெளில போ…..”என்று சாருலதா காளி போல் பேச ஆரம்பித்தார்.ஆனால் தீர்த்தாவின் பார்வை அவரின் புறம் கூட திரும்பவில்லை அவளை பொறுத்தவரை சாரு எல்லாம் அவருக்கு ஒரு பொருட்டே இல்லை என்பது போல் அவள் செல்வத்தை முறைத்தபடி நிற்க,
“சாரு அமைதியா இருக்க மாட்ட…”என்று மனைவியை கடிந்தவர் தீர்த்தாவின் புறம் திரும்பி,
“மன்னிச்சிடுமா….அவ ஏதோ தெரியாம பேசிட்டா….அது…நான் இதை கேட்கிறது கூட தப்பு தான் நான் என் அப்பாவோட கடைசி காரியத்தை செஞ்சிட்டு போயிடுறேன்….”என்று கூற,
“என்ன அப்பாவா….ஓ இப்ப தான் இவரு உங்க அப்பானு தெரிஞ்சுதா….இத்தனை நாள் இவரு உங்க கண்ணுக்கு தெரியலை அப்படி தான…உங்க கிட்ட பேசவே எனக்கு பிடிக்கலை கிளம்புங்க முதல்ல….”
“இவரு தான் புள்ள அப்ப இவர் தான் எல்லாம் செய்வார்…நீங்க பொண்ணுங்க ஒதுங்கி நில்லுங்க…..”என்று சாருலதா கோபமாக கூற,
“சாரூ….அமைதியா இருக்கமாட்ட….நான் உன்கிட்ட என்ன சொல்லி கூட்டிட்டு வந்தேன்….அங்க வந்தா பேசக்கூடாதுனு சொன்னேன் தான…இப்ப எதுக்கு தீர்த்தா கிட்ட சண்டை போட்டுக்கிட்டு இருக்க….”என்று செல்வம் கடிய,
“நானும் முதல்ல இங்க சும்மா பார்த்துட்டு போகலாம் தான் வந்தேன்….ஆனா இவ இவ்வளவு திமிரா பேசும் போது நாம ஏன் நம்ம உரிமையை விட்டுக் கொடுக்கனும்…..”என்று அடங்குவேனா பார் என்று சாருலதா பேச,
“உங்க குடும்ப சண்டையை உங்க வீட்டுல வச்சுங்க இப்ப கிளம்புங்க….”என்று தீர்த்தா செல்வத்தை பார்த்து கூற,
“ஏய்…நான்….”என்று எகிறிய சாருவை திரும்பி ஒரு முறை முறைக்க தீர்த்தாவின் பார்வையே அவரை அடித்துவிடுவது போல் இருந்தது.
“பார்த்தீங்கலா என்னை அடிக்ககிறது போல பார்க்குறா…”என்று சாரு கணவனிடம் முறையிட,செல்வமோ அதை காதில் வாங்காமல்,
“இல்லமா நான் இல்லாம…நீ இதை செய்யமுடியாது…”என்று செல்வம் இப்போது இருக்கும் நிலை எடுத்துரைக்க,
“ஏன் செய்யமுடியாது….”என்ற தீர்த்தாவின் பார்வை அமரனை பார்க்க,அமரனோ தன் அன்னையை பார்த்தான்.
“அமரா…நீ என் தாத்தாவுக்கு கொல்லி வைக்க வேண்டாம் ஆனா உன் குருவுக்கு வைக்கலாம் இல்ல….”என்று கேள்வி அமரனிடம் இருந்தாலும் பார்வை என்னவோ அகிலாவிடம் தான் இறைஞ்சுதலாக இருந்தது.அகிலாவால் எதுவும் கூற முடியவில்லை அவள் நாச்சியப்பனை குரு என்று கூறியதில் அவரின் தலை தன் போல ஆடி தன் மகனிற்கு சம்மதம் தெரிவிக்க அதன் பின் காரியங்கள் யாவும் அமரன் செய்ய தொடங்கினான்.செல்வம் தீர்த்தா இப்படி செய்வாள் என்று நினைக்காதவர் அழுதபடி செல்ல பார்க்க,
“அது எப்படி யாரோ ஒருத்தன் என் மாமனாருக்கு செய்யலாம் நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன்….”என்று சாருலதா எகிறி கொண்டு நின்றார்.
“நீங்களா வெளியில போயீட்டீங்கனா உங்களுக்கு நல்லது இல்லை….”என்று தீர்த்தா அப்போது தான் சாருவை பார்த்து கூற,சாருவிற்கு கோபம் தலைக்கு ஏற தீர்த்தாவை வார்த்தைகளால் வதைக்கு நோக்குடன் அவளின் ஒழுக்கத்தை தவறாக கூற அதுவரை மனைவியை அடக்க முயன்று கொண்டிருந்த செல்வம் ஓங்கி அறைந்துவிட்டார்.தன் கணவர் தன்னை அறைந்ததையே நம்ப முடியாமல் இருந்தவரை இழுத்துக் கொண்டு செல்வம் வெளியேற தொடங்க சாருலதாவின் பார்வை வஞ்சத்துடன் பதிந்தது தீர்த்தாவின் மீது அதன் விளைவு இதோ நாச்சியப்பன் இறந்து நான்கு வருடங்கள் கழித்து இந்த சொத்தில் தங்களுக்கு பங்கு இருக்கிறது என்று வக்கீல் நோட்டீஸ் வந்ததிருந்தது.
தீர்த்தாவிற்கு நன்கு தெரியும் இதை சாருலதா தான் செய்திருப்பார் என்று முதலில் இதை பெரிதாக கருதவில்லை அதனால் அவள் வக்கீல் சதாபிவத்தை நாடும் போது தான் தன் தாத்தாவின் உயில் பற்றிய விபரங்கள் அனைத்தும் தெரியவந்தது.அதிலிருந்து தன் தூக்கத்தை தொலைத்தவள் கடைசி வாய்ப்பாக மீண்டும் அமரனிடம் தன் மனதை புரிய வைக்கிறேன் என்று கூறி அனைத்தும் மொத்த சொதப்பலில் முடிந்துவிட்டது.
error: Content is protected !!