Skip to content
Post Views: 3,714
‘சரி ” என்ற ஆபிதா பானு எல்லோரையும் சாப்பிட அழைக்க.. பிள்ளைகள் அனைவரும் டைனிங்டேபளில் வந்து அமர்ந்து கொண்டு சண்டை போட, முபாரக்கும், ஷேக் தாவுத்தும் என்னவென்று கேட்க..
பிள்ளை அனைவரும் சிவாகுட்டியின் பக்கத்தில் அமர வேண்டும் என்று சண்டை போட..
Advertisement
முபாரக் பிள்ளைகளை பார்த்து சிரித்தவன், இப்போ சிவாகுட்டி யார் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிட போகிறாள் என்பது தானே சண்டை என்றான்.
Advertisement
எல்லாம் பிள்ளைகளும் என் பக்கம் வா சிவாகுட்டி, என் பக்கம் வா சிவாகுட்டி என்று சொல்ல..
Advertisement
முபாரக் சிவாகுட்டியை தன் கையை நீண்டி தூக்க வர..
சிவாகாமி தான் எது கேட்டாலும் வாங்கி தரும் மாமனிடம் தாவிக்கொண்டு போனாள்…
Advertisement
தங்கை மகளை அணைத்து மித்தமிட்டவன் “பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவாம்மா” என்று குழந்தைக்கு வாழ்த்து சொல்ல..
குழந்தையோ மழலை மொழியில் மீண்டும் ஹாப்பி பெர்த்தரே சிவாக்குட்டி என்று சிரிக்க..
பிள்ளைகள் மீண்டும் தங்களோடு சிவாக்குட்டியை வா என்று அழைக்க,, முபாரக் எல்லாரையும் பார்த்து சாப்பிடுங்க என்று அதட்டல் போட எல்லா பிள்ளைகளும் தலை குனிந்து கொண்டு சாப்பிட்டனர்..
முபாரக் ஆபிதா பானுவின் மகளை தன் மடிமீது வைத்து கதை பேச..
அவளும் தன் மழலை மொழியில் மாமனுக்கு பதில் சொல்லிய படியே, மாமன் குடுப்பதை சாப்பிட, ஆபிதாவுக்கு அதிசயம்,! சிவகாமி இவ்வளவு சமத்தா, ஒரு நாளும் சாப்பிட்டது இல்லை,, என்று பார்த்து இருந்தாள்..
ஆபிதா, எல்லாருக்கும் உணவு பரிமாற, பிள்ளைகள் உணவு சாப்பிட்டு விட்டு விளையாட சென்று விட..
முபாரக்கு, ஷேக் தாவுத்தும் இரண்டு பேரும் பேசிக்கொண்டே உண்டு முடிக்க,,.
தங்கைக்கு தட்டில் உணவு எடுத்து கொண்டு வாஜிதா சாய்ந்து இருந்த சோபாவுக்கு சென்ற ஆபிதா பானு , தங்கைக்கு ஊட்டி விட, தன் அக்காவை பார்த்த வாஜிதாவுக்கு கண்ணில் நீர்,, தன் கூட பிறந்த அக்கா இருந்தால் கூட இப்படி பார்த்திருக்க மாட்டாள்,, இவளோ தன் குடும்பத்தயே, இப்படி பார்த்துக்கொள்ளும் இந்த ஆபிதா கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. என்ற எண்ணம் தன் அக்காவா இப்பொழுது இருக்கும், ஆபிதா கிடைத்த நாளை நினைத்து பார்த்தாள்..
4 வருடம் முன் நடந்ததை நினைத்தது மனம்..
தன் மூத்த அக்காவை,, மஹாமுது இந்தியாவில் உள்ள அவரின் நண்பன் மகன் சாஹீத்தை திருமணம் முடித்து வைத்தார்.
ஆபிதாவுக்கு சாஹீத்துக்கும் திருமணமாகி இரண்டு வருடம் கழித்து ஆஷிக் பிறந்து விட. ஆபிதாவின் குடும்பம் மிகவும் சந்தோஷமாக இருந்தது..
ஆஷிக்குக்கு 6 வயது இருக்கும் போது, ஆபிதாபானுவும், சாஹீத்தும் ஒரு விபத்தில் இருந்து விட…
ஆஷிக்கை மஹாமுது வீட்டிற்கு அழைத்து வந்து இருந்தனர், ஆஷிக் எப்பொழுதும் ஆபிதாவை, சாஹீத்தையும் கேட்டு அழ..
மொத்த குடும்பம் வேதனை இருந்தது.. ஒருமுறை இந்தியாவில் உள்ள சாஹீத்தின் தந்தை தாயை பார்த்து விட்டு வரும் பொழுது..
ஆஷிக் மிகவும் சந்தோஷமாக இருந்தான்,, அவனின் தந்தை வழி தாத்தா, பாட்டியை பார்த்துவிட்டு. இவர்கள் குடும்பம் மலேசியாவுக்கு திரும்பும் வழியில், ஆஷிக் பாத்ரூம் போகனும் என்று சொல்ல..
முபாரக் தங்கை மகனை காரில் இருந்து இறங்கி ஒரு பாலத்தின் பக்கத்தில் ஒன் பாத் ரூம் போக சொல்ல,,
ஆஷிக் பாத்ரூம் சென்று விட்டு திரும்ப.. பல்லவி தண்ணீரில் அடித்து வந்து ஒரு பாறையில் மேல் விழுந்து இருந்தாள்..
அதை பார்த்த அங்கே வந்த ஒரு திருட்டு பொண்ணும், அவனின் கணவனும்,, பல்லவியின் கழுத்தில் இருந்த நகைகளை கழட்டினார்கள், பின்பு அந்த பெண் பல்லவி கட்டி இருந்த புடவை நன்றாக இருக்க அதையும் கழட்டி அவள் அணிந்து கொள்ள.. அப்பறம் பல்லவியின் கழுத்தில் ஒரு சில்வர் ஜெயின் போல இருக்க அதையும் கழட்டும் போது, ஆஷிக் பல்லவியை பார்த்தவன், முபாரக்கை அழைத்து பல்லவியை காண்பிக்க..
முபாரக் பார்த்தது பல்லவியின் கழுத்தில் இருந்த பிளாட்டின செயின் கழட்டும் போது தான்..
“ஏய்” என்று முபாரக் கத்த அந்த திருட்டு பெண்ணும், அவள் கூட இருந்தவனும் ஆற்றில் குதித்து ஓடினார்கள்…
முபாரக் பாலத்தின் கீழே சென்று, ஒரு வேஷ்டியை எடுத்து பல்லவியை சுத்தி தூக்கிக்கொண்டு வர..
பல்லவியை தொட்டு பார்த்த முபாரக் உயிர் இருக்கு, ஹாஸ்பெட்டல் கொண்டு போலாம் என்று காரில் ஏற்றி சென்று கொண்டு இருக்கும் பொழுது..
ஆஷிக் அம்மா, அம்மா பானுமா என்று அழ..
சப்ரின் தன் பேரனிடம் ஏன்டா அழற, ஆன்டிக்கு ஒன்னும் ஆகாது என்று சொல்ல..
” நோ பாட்டி, ஆபிதா அம்மா பானு” என்று பல்லவியை அணைத்து கொண்டு அழ..
அப்பொழுது தான் அனைவரும் பல்லவியை பார்க்க, தன் இறந்து போன மகள் ஆபிதா பானுவை போலவே இருந்த பல்லவியை பார்த்த சப்ரின் ஆபிதா என்று முகத்தை பார்க்க 90 சதவீதம் ஆபிதாவை போலவே இருந்தாள் பல்லவி,,.
பார்த்த எல்லாருக்கும் சந்தோஷமும், அதிர்ச்சியாக இருக்க, பல்லவியின் தலையில் அடிபட்டு இரத்தம் கசிந்து கொண்டு இருக்க..
பல்லவி ஹாஸ்பெட்டலில் சேர்க்கப்பட்டாள்.சின்ன ஆப்ரேஷன் பண்ணி பல்லவியை காப்பாற்றி இருந்தனர்…
ஆஷிக் பல்லவியை விட்டு நகரவே இல்லை, அம்மா பானுமா, ஆபிதாமா என்று பல்லவியின் அருகிலே இருக்க,,.
பல்லவி கண்விழித்து பார்க்கும் பொழுது ஆஷிக் அம்மா என்று அணைத்து கொள்ள..
பல்லவிக்கு பழையது எல்லாம் மறந்து புது பல்லவியாக உயிர் பிழைத்து வந்து இருந்தாள்,
ஆஷிக் அம்மா என்று சொல்ல..
பல்லவிக்கு ஒன்றும் ஞாபகம் இல்லை..
சப்ரின் பல்லவின் அருகில் சென்று நான் உன் அம்மா சப்ரின் என்று சொல்லி பல்லவியின் கைகளை பிடித்துக்கொண்டு, ஆஷிக்கை காண்பித்து உன் மகன் என்று சொல்லி, உன் கணவர் ஆக்சிடன்டில் இறந்து விட்டார் என்று சொல்ல.
நாம மலேசியா போலாம் அங்க உன் அப்பா, உன் தங்கை எல்லாரும் இருக்காங்க என்ற சப்ரின் பல்லவியை ஆபிதா பானுவாக மாற்றி மலேசியாஅழைத்து வந்திருந்தார்..
சப்ரின் பல்லவியை கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டார்..
பல்லவிக்கு பழய நினைவுகள் ஒன்றும் ஞாபகம் இல்லாமல் இருக்க..
பல்லவியை இஸ்ஸாமிய பெண் போலவே மாற்றினார்.
முபாரக்கும், மஹாமுதும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க..
என் பேரனுக்கு அம்மா வேணும், எனக்கு என் ஆபிதா வேணும். அதற்காக நான் என்ன வேணா செய்வேன் என்று சொல்லி, அவள் மூத்த மகள் ஆபிதாவாக மாறி இருந்தாள் பல்லவி…
பல்லவிக்கு தன் பக்கதிலே இருந்து பார்த்து கொள்ளும் சப்ரின் தன் அம்மாவாகவே நினைத்தாள், தன்னை விட்டு நகராமல் இருந்த ஆஷிக்கை தன் மகனாவே ஏற்றாள்..
வாஜிதாவுக்கு ஊட்டி கொண்டு இருந்த, ஆபிதாவிடம் வந்த ஷேக்தாவுத் ” ஆபிதா நீ எனக்கு எல்பு பண்ணனும் என்று கேட்க, “.
” என்ன மச்சான், நீங்க சொல்லுங்க நான் செய்யுறேன், அதவிட்டுட்டு ஏன் எல்புன்னு கேட்குறீங்க” என்றாள்..
“அது என்றவர்” வாஜிதா நீ சொல்லு என்க..
” சொல்லு வாஜி” என்றாள் ஆபிதா பானு.
“அக்கா நாங்க லண்டனுல ஒரு பைஸ்டார் ஹோட்டல் வாங்கி இருக்கோம்”,.
” ரொம்ப சந்தோஷம் வாஜிதா,. எப்ப ஓப்பன் பண்ண போறீங்க ” என்றாள்.
“அது தான் அக்கா, உன்கிட்ட ஒரு எல்பு”.
“சொல்லு வாஜிமா” என்றாள்..
” அந்த பைஸ்டார் ஹோட்டல்ல எல்லா டிஸ்சும் சமைக்க ஆள் இருக்காங்க, ஆனா உன் மாதிரி பிரியாணி அப்பறம் அதுக்கு ஏத்த மாதிரி சைடிஸ் பண்ண ஆள் இல்ல, அதனால நீ ஒரு மாசம் லண்டனுல இருக்குற எங்க ஹோட்டல் போயி, அங்கே உள்ள செப்புக்கு நீ சமைக்குற பிரியாணி மாதிரி சொல்லி தரணும்”.. என்றாள் வாஜிதா பானு கேட்க..
” இவ்வளவு தானா, நான் ஏதேன்னு நெனச்சேன்” என்றவள்.. “ஆனா அப்பாவுக்கு நான் சமச்சு கொடுக்கனுமே என்று கூற..
” நான் இங்கே இருந்து அப்பாவை பாத்துகிறேன், ஆஷிக்கு ஸ்கூல் லீவ் தானே, பிள்ளைகளை கூட்டிட்டு போ, அங்க நமக்கு ஒரு வில்லா இருக்கு” என்று கூற..
யோசித்த ஆபிதாவை பார்த்த ஷேக் தாவுத், தினமும் ஒரு இரண்டு மணி நேரம் தான் ஆபிதா என்று கூற..
ஆபிதா முபாரக்கையும், மஹாமுதுவையும் பார்க்க.
முபாரக் நான் கடையை அப்போ, அப்போ வந்து பாத்துக்கிறேன் என்று கூற..
மஹாமுது “நீ போம்மா, வாஜிதா இருக்காளா அவ பாத்துக்குவா” என்றார்.
ஆபிதா பானு, ஷேக்தாவுத் சொன்ன படி லண்டன் வர சரி என்று சொல்ல.. அனைவருக்கும் சந்தோஷம்..
பிள்ளைகள் அனைவரும் ஆபிதாவை பிரியாணி செய்து தருமாறு கூற..
ஆபிதா எல்லாருக்கும் பிரியாணி சமைத்து தர கிச்சன் நோக்கி சென்றாள்……
error: Content is protected !!