Skip to content
Post Views: 3,570
இதோ.. இதோ.. என் பல்லவி
அத்தியாயம் – 11
Advertisement
Advertisement
Advertisement
அதிகாலை 5 மணி மலேசியாவில் உள்ள மஹாமுது இல்லம், தனது அறையில் உறக்கம் களைந்து எழுந்தாள் ஆபிதா பானு, தனது இடது பக்கம் 10 வயது ஆஷிக் தூங்கி கொண்டு இருக்க, ஆபிதாவின் வலது பக்கம் தனது கழுத்தை கட்டி கொண்டு தூங்கும் 3 வயது சிவகாமியை பார்த்தாள் பானு…
இருவரும் நன்றாக தூங்க , இருவரின் தூக்கம் கலையாமல் எழுந்த ஆபிதா பானு ஓய்வு அறை சென்று குளித்து வந்து, உடை அணிந்து , தான் எப்போதும் தொழுவும் இடத்தில் ஒரு விரிப்பை விரித்து அமர்ந்தவள், பிஸ்மில்லாஹ் னிர்ரஹ் மான் னிர்ரஷும் ( அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு ஆரம்பிக்கின்றேன் ) என்று இந்த நாளை தொடங்கியவள் ஒரு அரை மணிநேரம் காலை தொழுகையை தொழுது முடித்து பார்க்க, பக்கத்தில் இவளை போலவே மகன் ஆஷிக்கும் குளித்து முடித்து தொழுதுக்கொண்டு இருந்தான்..
Advertisement
ஆபிதா பானு ஆஷிக்தொழுது முடிக்கும் வரை காத்திருந்தாள்..
ஆஷிக் தொழுது முடித்து, அம்மாவை பார்த்து காலை வணக்கம் சொன்னான்,, மகனிற்கு காலை வணக்கம் சொன்னவள்..
இருவரும் சிவாகாமி என்ற ( சிவா குட்டி) எழுந்து கொள்ள காத்திருந்தனர்..
குழந்தையோ புரண்டு, புரண்டு படுத்து எப்படியோ எழுந்து கொள்ள, அம்மாவும், மகனும் சேர்ந்து சிவாகுட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்ல..
குழந்தை இருவரும் சொல்வதை பார்த்து ” ஹாபி பெர்த்தடே சிவாகுட்டி” என்று தனக்கு தானே சிவகாமி சொல்லி கொண்டே குழந்தை சிரிக்க..
“அம்மா அவளே அவ பெர்த்தடேவுக்கு வாழ்த்து சொல்லிக்கிறாமா” என்று ஆஷிக் தங்கையை பார்த்து சிரித்தான்..
” அவ சின்ன குழந்தைடா ஆஷிக், நம்ம பேசுற, திரும்பி சொல்லுறா”..
சிவாக்குட்டிக்கு இருவரும் பேசுவது புரியாமல் பாப்பா பெர்த்தடே , சிவா பாப்பா ஆஷிக்ண்ணா என்று சொல்ல…
ஆபிதா பானு தன் மகளை தூக்கி கட்டி அணைத்துக்கொண்டு “சிவாகுட்டி ஹாபிபெர்த்தடே டா பாப்பாவுக்கு என்ன வேணும்”,,..
” சாக்கி வேணும், கேக் வேணும்” என்று குழந்தை சொல்ல,,.
” பாப்பா குளிச்சுட்டு, புது ட்ரெஸ் போட்டு வா அண்ணா பாப்பாவுக்கு சாக்கி தருவேன்” என்றான் ஆஷிக்..
“சரி அண்ணா ” என்று குழந்தை, தன் பானு அம்மாவிடம் “பாப்பா லாலா” என்று கேட்க..
” வா நாமா லாலா போலாம் ” என்று ஆபிதாபானு குழந்தையை குளிக்கவைக்க சென்றாள்..
சிவகாமிக்கு லாலா என்றாள் தண்ணீர் என்று அர்த்தம், தண்ணீர் குடிக்க வேணும் நாலும் லாலா வேணும் என்பாள்,, குளிக்க சென்றாலும் லாலா போறேன் என்பாள்..
தன் மகளை குளிக்க வைத்து இருவரும் வெளியில் வர,, ஆஷிக் அவன் தங்கைக்கு புது உடையை எடுத்து வைத்திருந்தான்…
” அம்மா பாப்பாவுக்கு நான் ட்ரெஸ் பண்ணி விடுறேன், நீங்க போய் தாத்தாவை பாருங்க” என்று சொல்ல..
” சரி டா ஆஷிக் “என்று ஆபிதா பானு அவளின் தந்தை மஹாமுது அறைக்கு சென்றாள்..
மஹாமுது வாக்கிங் சென்று இருக்க, அவரின் அறை காலியாக இருந்தது,, ஆபிதா அவர் வரும் முன் அவருக்கான காலை உணவை சிறு தானிய கஞ்சியை தயார் செய்தவள், மஹாமுது உண்ணும் இடத்தில் அதை வைத்து விட்டாள்.
மஹாமுதுவின் வீட்டில் நிறைய பெண்கள் சமையல் வேலை செய்ய இருந்தாலும், அவருக்கு அவரின் வீட்டு பெண்களே சமைத்து கொடுக்க வேண்டும், முதலில் மஹாமுதின் மனைவி சப்ரின் தான் அவருக்கு மூன்று வேளையும் சமைத்து கொடுப்பார்.. ஒரு வருடம் முன் சப்ரின் மவுத்( இறந்துவிட ) ,, இப்போது மஹாமுதுவுக்கு மூன்று வேளையும் சமைத்து கொடுப்பது ஆபிதாவின் பொறுப்பானது..
இன்று அவள் மகள் பிறந்த நாளுக்காக அவர்கள் வீட்டுக்கு,அண்ணன் குடும்பமும், தங்கை குடும்பமும் வருவதால், சமையல் செய்யும் பெண் கத்தீபாவிடம் வந்து, இன்று விருந்து போல் காலை உணவு சமைக்க வேண்டும் என்று சொன்னவள்,,
இன்று சாயங்காலம் சிவகாமியின் பிறந்தநாளுக்காக அவர்களின் வீட்டு தோட்டத்தில் சின்னதாக ஒரு பார்ட்டி நடத்த ஏற்ப்பாடு செய்து இருந்தனர், அதனால் அந்த வேலை எப்படி நடக்கிறது என்று தோட்டத்திற்கு பார்வையிட சென்றாள்..
அவர்கள் வீட்டு வாசலில் ஆபிதாவின் அண்ணன் முபாரக் கார் வீட்டு வாசலில் வந்து நிற்க அதை பார்த்த ஆபிதா அண்ணனிடம் வந்தாள்..
முபாரக்கின் பிள்ளைகள் சனா, தாரிக் இருவரும் ஆபிதாவை பார்த்து “மாமி “என்று கட்டிக்கொள்ள,.
“வாங்கடா, செல்லங்களா ” என்றவள், அண்ணனிடம், “அண்ணி எங்கேண்ணா”?, என்றாள்..
“அண்ணி வரலடா, ” என்றவன் ” அண்ணி வந்தா “நம்ம கடையை யார் பாத்துகிறது “? என்றவன்,.
“வாப்பா எங்கே”?
“வாஜிதா வந்துட்டாளா”? என்றான்..
“இன்னும் வரலண்ணா , வருவா நீங்க உள்ள வாங்க. “.
“அண்ணி வருவாங்கலாண்ணா”.? என்றாள் ஆபிதா பானு..
தன் முதல் தங்கை ஆபிதா பானுவை பார்த்தவன், “நான் பிள்ளைகளை விட தான் வந்தேன் பானு, கொஞ்ச நேரத்தில் கிளம்பிறுவேன், அண்ணி ஈவ்னிங் பெர்த்தடே பார்ட்டிக்கு வருவா” என்றான்..
முபாரக் சிங்கப்பூரில் தங்க நகைகடை வைத்துள்ளான், அவனது தந்தை மஹாமுது மலேசியாவில் தங்க கடை வைத்துள்ளார், மஹாமுதின் மனைவி சப்ரின் ஒரு வருடம் முன் இறந்து விட, மஹாமுது மனைவி இறந்ததில் இருந்து, நகை கடைக்கு செல்வதில்லை,, இப்போது அந்த நகை கடையை ஆபிதா தான் பார்த்து கொள்கிறாள்..
மஹாமுதுவுக்கு மூன்று பிள்ளைகள்,, மூத்தவள் முபாரக்,, இரண்டாவது ஆபிதா பானு ,, கடைசியாக வாஜிதா பானு..
முபாரக்கின் பிள்ளைகள் இரண்டு பேர் ஆண் ஒன்று, பெண் ஒன்று,,..
வாஜிதாபானுவுக்கு ஷேக் தாவுத் என்பவரை திருமணமுடித்து, இரட்டை பெண் பிள்ளைகள் உள்ளனர்,, ஷேக்தாவுக் கேட்டிரிங் வேலை, மற்றும் எல்லாவிதமான விஷேசங்களுக்கும், டெக்கரேஜன் , அரேன்ஜ் பண்ணி தருவார்,, பெரிய அளவில் கேட்ரிங் பண்ணி தருவார் ஒரே நெரத்தில் 10,000 பேருக்கு, அல்லது 20.000 பேர்வரை உணவு தயார் செய்து, அனைவருக்கும் சரியாக பரிமாறுவார்,,.
மஹாமுது வாக்கிங் சென்று விட்டு வீடு வந்தார்..
முபாரக் தந்தையை பார்த்து அணைத்து காலை வணக்கம் சொல்ல..
அவரும் பதிலுக்கு தன் மகனுக்கு காலை வணக்கம் சொன்னவர், வெளியே சென்று வந்ததினால் கை, கால்களை சுத்தம் பண்ணிக்கொண்டு வந்தவர்…
ஆபிதா தனக்காக பண்ணி வைத்து இருந்த கஞ்சியை குடிக்கும் முன்,, அவரின் 95 வயதுக்கு மேல் ஆன தாய் பாத்தீமா பானுவை உணவு உண்டாரா என்று ஆபிதாவை கேட்க..
” இல்ல வாப்பா , காலையில் தாதியை( பாட்டி) பார்க்க போனேன், தாதி நாமாஸ் பண்ணிட்டு இருத்தாங்க, இப்போ போய் தாதியை சாப்பிட சொல்லுறேன், நீங்க சாப்பிடுங்க என்று சொல்ல” “சரி “என்று மஹாமுது காலை உணவை சாப்பிட…
தன் தாதிக்கு, கத்தீபா பண்ணி வைத்திருந்த உணவை எடுத்துக்கொண்டு தாதியின் அறைக்கு மெல்ல கதவை திறந்து வர..
பாத்தீமா ஒரு சிறிய கட்டிலில் கருப்பு நிற பர்தாவும், வெள்ளை நிற துணியால் தலையை சுத்தி கட்டி இருந்தவர், முகம் மட்டும் தெரியும் மாறு அமர்ந்து கொண்டு கையில் ஒர் முத்து மாலை வைத்து கொண்டு, எப்பொழுதும் அந்த முத்து மாலையில் உள்ள ஒரு, ஒரு முத்து மணியா எடுத்து அல்லாவின் பெயரை சொல்லி இந்த குடும்ப நன்னைகாக வேண்டுவார்…
ஆபிதாவை பார்த்த பாத்தீமா சிறிது நேரத்தில் அவர் சொல்லிக்கொண்டு இருப்பதை நிறுத்திவிட்டு, முத்துமாலையை ஒரு டப்பாவில் வைத்தவர், ஆபிதா பானுவை பார்த்து, சிவாவை வர சொல்லு என்றார்..
” நீங்க முதல்ல சாப்பிடுங்க தாதி, நான் சிவா கூட்டிட்டு வர்றேன்” என்றாள்..
“நீ போய் சிவாவை கூட்டிட்டு வா நான் அப்பறம் சாப்பிடுறேன்”
என்றார் பாத்தீமா..
“சரி” என்ற ஆபிதா பானு தன் அறைநோக்கி செல்ல, ஆபிதா ரூம்பில் போடும் சத்தம் கீழே வரைக்கும் கேட்டது..
ஆபிதா பானு தன் ரூம் கதவை திறக்க,, பிள்ளைகள் எல்லாரும் சிவாக்குட்டியை சுத்தி ஓடி பிடித்து விளையாடிக் கொண்டு இருந்தனர்…
தன் அண்ணன் மகள் சன, அண்ணன் மகன் தாரிக், மற்றும் அவளின் மகன் ஆஷிக்கிற்கு 10 வயதுக்கு மேல் இருக்க, 3 வயது சிவாக்குட்டியை அனைவருக்கும் பிடிக்கும்…
சிவாக்குட்டியை பெரிய பிள்ளைகள் ஏதாவது சொல்ல, சிவா அவர்களை பிடிக்க வருவது, இல்லை என்றால் அவர்களை அடிக்க வருவது என்று அந்த அறை மிகவும் சத்தமாக இருக்க..
ஆபிதா “எல்லாரும் அமைதியா இருங்க, பாத்தீமா பாட்டி கூப்பிட்டாங்க வாங்க” என்று அவரின் அறைக்கு அழைத்து சென்றாள்..
பிள்ளைகள் எல்லாரும் தம் பெரிய தாதி பாட்டியிடம் சென்றனர், பாத்தீமா அல்லாவை நினைத்து எல்லா பிள்ளைகளுக்கு ஆசி வணங்கினார்..
பாத்தீமா பானு சிவாவுக்கு ஒரு உடை வாங்கி வைத்திருந்தார், அதை குழந்தையிடம் தர,,
சிவாகுட்டி பாத்தீமா பானுவை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு தாங்யூ தாதி பாட்டி என்று வெளியில் ஓடி விட…
ஆபிதா தாதியை சாப்பிட வைத்து விட்டு வெளியே வந்தாள்,.
அவளின் தங்கை இரட்டைபெண் பிள்ளைகள் “பெரியம்மா” என்று வெளியில் இருந்து வந்து அணைத்து கொள்ள, “வாங்கடா எப்போ வந்தீங்க “?. என்றவள்,அம்மா எங்கே என்று வாஜிதாவை கேட்க,, “அம்மா அங்கே” என்று காரை காண்பித்து சொல்லிவிட்டு, சிவாகாமியை பார்க்க பிள்ளைகள் ஓடிவிட..
வாஜிதாவை காரில் இருந்து மெல்ல இறங்க சொல்லிக்கொண்டு இருந்தார் ஷேக் தாவுத்,,.
ஆபிதா தங்கையை அழைக்க வாசலுக்கு சென்றவள்,, ஷேக் தாவுத் வாஜிதாவை மெல்ல காரில் இருந்து இறங்க வைத்து கைபிடித்து அழைத்து வர,,
நிறை மாத,இரட்டை பிள்ளைகளை சுமந்து கொண்டு வரும் தன் தங்கை வாஜிதாவை பார்த்த ஆபிதா பானு தங்கையை அணைத்துக்கொண்டு, “எப்படி இருக்க வாஜிதா” என்றாள்..
” உம் நல்லா இருக்கேன்க்கா, “..
“வா போலாமா” என்றவள்,, தங்கை கணவர் ஷேக் தாவுத்தை பார்த்து வாங்க மச்சான் என்றாள்..
“சிவகாமி என்ன பண்ணுறா” என்றார் ஷேக் தாவுத்.
“அவளா மச்சான், பாப்பா பெர்த்தடே கேக் வேணும், சாக்கி வேணும் என்று சொல்லி கிட்டு, அண்ணன் பிள்ளைகளோடு விளையாடுற”..
” முபாரக் வந்துட்டாரா “.
“ஆமாம் மச்சான் அண்ணா கொஞ்ச நேரம் முன்னாடி தான் வந்தாங்க..
ஷேக் தாவுத் வீட்டினுள்ளே சென்று விட,,. தங்கையை மெல்ல அழைத்து வந்த ஆபிதா சாப்பிடுறீயா வாஜி என்றாள், தங்கை சோர்வை பார்த்து,.
“வேண்டாம் பானு பிள்ளைகளை சாப்பிடவை , பெரியம்மாவை பார்க்க போறம்முன்னு ஒருத்தியும் சாப்பிடலை”..
error: Content is protected !!