Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

லயம் மாறா காதல்

Layam Maaraa Kaathal 1 1

꧁☆☬  லயம் – 1 ☬☆꧂1

பரபரப்புக்கு குறைவில்லா சென்னை மாநகரத்தின் காலை பொழுது. இளஞ்சூரியன் எழுந்து சோம்பல் கலைந்த மனிதர்களை கொஞ்சம்  அனல் கூட்டி தொட்டு பார்க்கும் அலுவல் பொழுது.  திரும்பி பார்க்கும் இடமெல்லாம் வாகனங்கள் மட்டுமே ஊர்ந்து செல்ல அங்காங்கே நான் எப்பவும் நடைவாசி தான் என ஓட்டமும், நடையுமாய் தங்கள் அலுவலகத்திற்கு  ஓடும் கூட்டத்தில் யாரை நிறுத்தி நாம் பேச முயற்சித்தாலும் அப்புறம் பார்க்கலாம் என பதில் கூறி நம்மை தவிர்த்து ஓடி விடுவர். பிகாஸ் அனைவருக்கும் வேலை தான் முக்கியம் பிகிலு.



Advertisement

நடந்தும், பறந்தும் செல்லும் மனிதர்களை வேடிக்கை பார்த்து கொண்டே வாடிக்கை செயலாய் சூரியனும் தன் வேலையை ஆரம்பித்தார்.

அவர்க்கும் ஒன்பது முதல் ஆறு மணி வரை சுட்டெரிக்கும் வேலை தானே. ஆபீஸ் சென்றதும் கனிவாய் சிரித்து காலை வணக்கம் கூறி மதியம் வரை வேலை பார்த்து, பின் மதிய பொழுதில் உறக்கம் கொள்ள நினைத்து, சோம்பல் வேலை பார்ப்பது மனிதற்கு மட்டுமா பொருந்துகிறது.

Advertisement

Advertisement

விடியல் பொழுதில் இனிதே சிரித்து, கடகடவென உச்சி பொழுது வரை உஷ்ணம் கூட்டி, சிடுசிடுவென நம்மையும் எரிச்சல் கொள்ள செய்து, பின் தடதடவென சோம்பல் கொண்டு சற்றே குறைத்து, மாலை பொழுதில் மயக்கும் கொள்ள வைக்கும் சூரியனுக்கும் பொருந்துமே.

சின்சியர் சிகாமணியாய் சூர்யன் தன் வேலையை பார்க்க  ஒருவன் மட்டுமே அவருக்கு எதிராய் பனி விழும் மலர் வனத்தை ரசித்து கொண்டிருந்தான்.

Advertisement

பிரதான சாலையின் வழியே வந்து கொண்டிருந்த காரில் SPB தன்னை மறந்து பாடி கொண்டிருந்தார். உயிரை உருக்கும் குரலில், அவர் உருகி கொண்டிருக்க, அவரோடு இன்னுமாய் உருகி, கரங்கள் ஸ்ட்ரியங்கில் தாளமிட, இதழ்கள் முனுமுனுத்தபடி லைட் கிரீம் கலர் சர்ட், பிளாக் பேண்டில் காளையவன் இருந்தான்.

அகன்ற நெற்றியில் ஜெல் வைத்து வாரியும் அடங்காத முன் கேசம் காற்றில் அசைந்தாட, குறும்பு விழிகளில் மென் சிரிப்பு தெறித்தது. கூர் மூக்கில் அழகனாய்,  அடர்த்தியான மீசைக்கடியில் ஒளிர்ந்திருக்கும் சிவந்த இதழ்கள் நான் சிகரெட் குடிக்க மாட்டேன் என சத்தியம் செய்தது. மெல்லிய ஒலியில் இசைத்த

” இருபது நிலவுகள்

நகமெங்கும் ஒளிவிடும்..,

இளமையின் கனவுகள்

விழியோரம் துளிர்விடும்..,

கைகள் இடைகளில்

நெளிகையில்.., இடைவெளி

குறைகையில்.., எரியும் விளக்கு

சிரித்து கண்கள் மூடும்..,”

பாடல் வரி ஒலிக்கையில் சரியாய் சிக்னலில் வண்டி ப்ரேக்கிட்டு நின்றது.  தனக்கு முன் வரிசை கட்டி நின்ற வாகனங்களை பார்த்தவுடன் ” சே., இன்னைக்கும் ட்ராபிக்கா., டெய்லி இதே தொல்லை.,” சலிப்புடன் கூறியவன், அடுத்தடுத்து கேட்ட ஹாரன் ஒலியில் இன்னும் கடுப்பாகி, எரிச்சலாய் காரின் கண்ணாடியை இறக்கி, வெளியே எட்டி பார்க்க முற்பட்டான். வாகன அணிவகுப்பை பார்த்தால் இன்னும் அரைமணி நேரத்தை முழுங்கி கொள்ளுமோ என பயத்தை உருவாக்கியது.

அதற்குள் போன் ஒலியெழுப்பி அவனை திசை திருப்ப, அதை ஆன் செய்து, ப்ளூ டூத்தில் பேச முற்பட்டான்.

” யா., இட்ஸ் இளா.., டெல் மீ சார்.” என்றான் கம்பீரமாய்.

“!!!!”

மறுபுறம் கேட்ட அவர்களின் கேள்விகளை உள்வாங்கி கொண்டே, தன் லேப்டாப்பை ஓபன் செய்தவன் அவர்களின் கணக்குகளை பார்வையிட ஆரம்பித்தான்.

” ஒன் மினிட் சார்., ” செக் செய்து முடித்து,

 ” லாஸ்ட் மன்த்தை விட ப்ரோபிட் ஏன் குறைஞ்சிருக்குன்னா, சாலரி எஸ்பன்சஸ் இன்கிரிஸ் ஆகியிருக்கு. தென் மத்த செலவும் கணிசமா கூடிருக்கு. உங்க அக்கௌன்ட் மேனேஜர் உங்ககிட்ட இன்பார்ம் பண்ணலையா.., ” என்றான் கேள்வியாய்.

“!!!”

“நோ ப்ரோப்லேம் .,, நெஸ்ட் வீக் நான் வந்து எதை எல்லாம்  கட் பண்ண வைக்கலாம்னு பார்க்குறேன். யா., சார்., சுயர்  ” அவன் போன் பேசி முடிக்கும் தருவாயில் ஒரு சிவப்பு நிற ஸ்கூட்டி அவன் காரை ஒட்டி வந்து நின்றது. இரு கார்களுக்கு நடுவில் இருந்த இடைவெளியில் லாவாகமாய் எங்கும் இடிக்காது அனாயசமாய் வந்து நின்றாள் ஒரு பேதை.

ஹெல்மெட்டை எடுத்து விட்டு, தன் பக்கவாட்டு கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தில் கலைந்த தலைமுடியை சீர் செய்து, வியர்த்த முகம் துடைத்து, பொட்டினை சரி செய்தவளை கண்டு இவன் முகத்தில் முன்புறுவல் பூத்தது.

பிறை நெற்றியில் தொடங்கி அவன் பார்வை அவள் இதழை தொடரும் நேரம் அவள் போன் இசைத்ததில், சட்டென திரும்பி எடுத்து பார்த்தவளின் முகம் யோசனையை  தத்தெடுத்தது.

” ஹலோ, ம்ம்ம்.., லயா தான் சொல்லுங்க.”

“!!!”

“வாட் நேத்தே முடிக்க சொன்னேன், இன்னும் பண்ணாம என்ன பண்றீங்க? ” குரல் சற்று உயர்ந்து அவள் கோபத்தை பறைசாற்ற .

“!!!”

“நோ மோர் எஸ்கியுஸ்… அவ்ட்ரால்  கையை வெட்டி தூக்கி போட போற. இதுக்கு எதுக்கு மேன் உனக்கு வலிக்குது. “

 “!!!!”

“கை நீட்டி காசு வாங்க தெரியுதுல. சொன்னா சொன்ன வேலையை முடிச்சுட்டு தான் வேற வேலையை பார்க்கனும். “

“!!!!”

“உன்னால இதை முடிக்க முடியலன்னு காலையில் கால் பண்ணப்பவே சொல்லி இருக்கலாமே. நோகாம இப்ப வந்து சொல்ற. இன்னும் ஒன் அவர் டைம் தரேன். முடிக்கல கையை வெட்டி நானே உன் கையில் கொடுத்துருவேன். பீ கேர் புல். என்னை பத்தி முழுசா தெரியாம பேசாதே. மைண்ட் இட். போனை வச்சுட்டு போய்யா… சே… ” கடுப்பாய் கத்தியவளின் கோப  முகத்தை மீண்டும் பார்க்கும் முன் சிக்னல் வழிவிட அவள் வேகமாய் முந்தி சென்று விட்டாள்.

அவளை நினைத்து புருவம் உயர்த்தி, தோளை குலுக்கி கொண்டவன் அடுத்து நொடி வேகமெடுத்து கடந்து வந்து விட்டான். வழக்கம் போல அவன் தன் வேலையை பார்க்க செல்ல நாம் அவனை பார்ப்போமே. இளா இருபத்தியேழு வயதில் ஆடிட்டராய் பொறுப்புகளை சுமக்கும்  கட்டிளங்காளை. மாணிக்கவாசகம், தமயந்தி தம்பதியரின் புத்திரன். மாணிக்கவாசகம் ……. பாங்கில் மேனேஜராக பணிபுரிகிறார். தமயந்தியும் ஆடிட்டராக கலக்கி கொண்டிருக்கிறார். தாயை பின்பற்றி மகனும் தற்போது களம் இறங்கி வெற்றி கண்டுள்ளான்.

ஆசைக்கு ஒரு பெண் மாலாவினை பெற்று, BE படிக்க வைத்து முரளிக்கு மணம் முடித்தும் கொடுத்து விட்டனர். இருவரும் IT துறையில் தான் வேலை பார்ப்பதால் இணைந்தே அனைத்தும் செய்து, இரட்டை குழந்தைகளோடு மல்லு கட்டி கொண்டு, செங்கல்பட்டில் வசித்து வருகின்றனர். நான்கு வயது பேரன்கள் ரோஹித், ஹர்ஷித் அமைதியும், சேட்டையும் நிறைந்த அடக்கமான குழந்தைகள். இது தான் அவன் அன்பான கூடு.

***

“எங்க உங்க சீமந்த புத்திரனை இன்னும் காணோம்., ” தமயந்தி கிண்டலாய் கேட்க.

” என் பையன் வர இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு. டான் டான்னு எட்டுமணிக்கு வந்துடுவான். ” என்றார் மணியை பார்த்து கொண்டே சொன்னவர் மனைவியின் முகம் பார்த்து.

“ஏன் இன்னைக்கு ரொம்ப டல்லா இருக்கிற., நெக் பெயின் வந்துருச்சா., “

” ஹ்ஹ்ம்., காலையில டைட் ஒர்க். இத்தனைக்கும் அவன் தான் எல்லாம் செக் பண்ணி பைனல் என்கிட்டே கொடுக்கிறான். நான் கிராஸ் செக் மட்டும் பார்த்து சைன் பண்றேன். அதுவே முடியல., “

” உன்னை வேலை பார்க்க வேணாம்னு சொல்றேன்., கேக்க மாட்டேங்குற., தம்பி தான் வந்துட்டானே., கொஞ்சம் ரிலாக்ச்சா இருக்கலாம்ல., “

” வீட்டுல நான் மட்டும் தனியா உட்கார்ந்து என்ன பண்ண போறேன். ஆபீஸ்ல மட்டும் தான் பேசுறான். அதையும் மிஸ் பண்ண சொல்றிங்களா.,  என் மருமக வர்ற வரை வேலைக்கு போவேன்., அடுத்து அவ கூட ஜாலியா    இருப்பேன்., “

” மருமக கூட ஜாலியா .., ” நமுட்டு சிரிப்புடன் பார்க்க.

” ஏன் இந்த கொலைவெறி., ” என முறைத்தவர் ” எங்களை பார்த்து நீங்க  பொறாமையில் ஆடி போக போறீங்க பாருங்க., “

அப்போதும் அவர் சிரிக்க, தமயந்தி பார்வையில் சற்றே அடங்க, மீண்டுமாய் பேச்சை தொடர்ந்தார்.

” ஏங்க, இன்னைக்காவது  அவன்கிட்ட பேசுங்க., எனக்கு ஊருல உள்ளவங்க கிட்ட எல்லாம் பதில் சொல்லி மாள முடியல. “

” நீ பண்ண கூத்துல தான் அவன் கல்யாணமே வேணாம்னு நிற்கிறான். இவ்ளோ பேசுற., அதை நீயே அவன்கிட்ட கேட்க வேண்டியது தானே., என் மருமக எங்கடானு ஒரு வார்த்தை பேசு ., நாளைக்கே கூட்டிட்டு வந்துருவான். ” என்றார் முறைப்புடன்.

ஒன்றும் சொல்லாமல் ஓரவிழியால் அவரை பார்த்து கொண்டே ரிமோட்டை எடுத்து டிவியில் சேனலை மாற்ற ஆரம்பிக்க.

” உனக்கு இருக்க பிடிவாதம் தான் அவனுக்கு இருக்கு. இதில வார்த்தைக்கு வார்த்தை என் பையன்னு மூக்கு புடைக்க பேசுறது..,” கடுப்புடன் பேசியவரை பார்த்து கண்டு கொள்ளாமல் மெலிதே சிரித்தவர்.

” நான் சட்னி பண்ண போறேன்., அவன் வந்தா சீக்கிரம் கிளம்பி வர சொல்லுங்க., தோசை சாப்புட்டு முடிச்சி அவன் அக்காகிட்ட பேசிட்டே இருக்கட்டும். இல்லைனா லேட் பண்ணிருவான்.” என்றவாறே கிச்சனுக்குள் கிளம்பி சென்றார்.

“உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிகிட்டு நான் தான் ” என ஆரம்பித்தவர் மகன் வருகையை உணர்ந்து கப் சிப்பென அமர்ந்து கொண்டார்.

ஹாலில் அமர்ந்து இருந்த தந்தையிடம் பேசியவன் மேலே சென்று பத்தே நிமிடத்தில் கீழிறங்கி வந்தான். சட்னி தாளித்து முடித்து, தோசை மாவை   எடுத்து அடுப்பருகே வந்தவரின் முகம், மகன் கிச்சன் அறையில் நுழைய யோசனையாய் பார்த்தது. வந்தவன் எதுவும் பேசாமலே அவர் கையில் இருந்த கரண்டியை வாங்கி தோசை ஊற்ற ஆரம்பித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!