உனக்கென இருப்பேன்2
அத்தியாயம் 2
அய்யோ ….அய்யோ என் குடும்ப இப்படியா சந்தி சிரிக்கணும்
“சனம் கூடி கூடி பேசுது கும்மாளம் அடிக்குது “தலைவிரி கோலமாய் சரோஜினி புலம்பிக்கொண்டே இருக்க ….ம்மா மானத்தை வாங்காம உள்ளே வந்து தொலை ….தாயின் கரம் பற்றி இழுத்து போனால் அக்ஷயா .
மகன் பற்றிய கர்வத்தில் மிடுக்கோடு இருப்பவர் பொன்னுசாமி . பொன்னுசாமி வாத்தியார் பிள்ளை அஸ்வின் என்ற காலம் போய் அஸ்வின் அப்பா பொன்னுசாமி என்ற அளவிற்கு பெயர் எடுத்திருந்தால் அஸ்வின் .
Advertisement
விட்டுக்கொடுக்கும் உயர்ந்த குணம்,பிறருக்கு ஓடி உதவும் இளகிய மனம் , எதிலும் நிதானம் ,பொறுமை …ஆக பெற்றோர் கொண்டாடும் குலசாமியாய் இருந்தான் அஸ்வின் .
‘……………………….’
திருச்சியில் MBA படித்துவிட்டு வந்து TNPSC GROUP 1 தேர்விற்கு மும்மரமாய் தயாராகி வெறித்தனமாய் தேர்வெழுதி முதல் முயற்சிலேயே கிராம அபிவிருத்தி துறையில் உதவி இயக்குநர் பணி Assistant Director of Rural Development என்ற பணி கிடைக்கப் பெற்றான்.
Advertisement
அஸ்வின் கதாநாயக லட்சணம் கொண்டிருப்பவன அல்ல, எவ்வளவு நாகரீகமாய் உடுத்தினாலும் சற்று கிராமத்தான் தோற்றம் தெரியத்தான் செய்யும் .
Advertisement
மாநிறம் ,நல்ல உயரம் ,சற்று பூசிய உடல்வாகு …..
ஆஜானுபாகுவான அவன் தோற்றம் கண்டு அவனை காவல் துறைக்கு முயற்சிக்க சொல்லி கல்லூரி பேராசிரியர்களே கூறியதுண்டு .அவனுக்கு காவல் துறையில் நாட்டமில்லை .
‘……………………’
Advertisement
ராகவப் பிள்ளை , வெள்ளையம்மாள் தம்பதிகளுக்கு மூன்று ஆண்மக்கள் .
மூத்த மகன் பொன்னுசாமி அவர் முதுகலை வேதியியல் ஆசிரியர் .இரண்டாவது மகன் கிருஷ்ணசாமி அவரும் ஆசிரியர் தான் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் . கடைசி மகன் முத்துசாமி அவருக்கு வருமான வரித்துறையின் பணி .
ராகவப் பிள்ளையும் ஆசிரியர் தான் . ஆசிரியர் தொழிலோடு ஜோதிடம் பார்ப்பது ,சித்த வைத்தியம், பார்ப்பது லாவாதேவி தொழில் (வட்டிக்கு பணம் கொடுப்பது ) இப்படி பல வகையில் பணம் பண்ணும் வித்தை தெரிந்த விவரமான வாத்தியார் .
மூன்று பிள்ளைகளையும் முத்தாய் பெற்று அந்த காலத்திலேயே அருமையாய் படிக்க வைத்து ஆளாக்க்கி விட்டார் இதை அவரின் சாமர்த்தியம் என்பதா ? ஆண்டவன் அனுக்கிரஹம் என்பதா ?
ஊரில் பெயர்பெற்ற குடும்பம் ராகவபிள்ளையின் குடும்பம் குறைவில்லா சொத்து சுகமும் சேர்த்துவிட்டார் . சொல்லவா வேண்டும் கிராமத்தில் பெயரும் புகழும் கிடைக்க ?
மூத்த மகன் பொன்னுசாமிக்கு பெண் எடுத்த இடம் பெரிய நிலச்சுவாந்தாரின் சீமந்த புத்திரி . அவர் தான் அஸ்வினின் தாய் சரோஜினி .
இரண்டாவது மகன் கிருஷ்ணசாமிக்கு தன ஒரே தங்கை காஞ்சனையின் மகள் பத்மினியை மணமுடித்து வைத்துவிட்டார் .
மூன்றாவது மகன் முத்துசாமிக்கு சாதாரண குடுமபத்தில் பிறந்த தேவகியை மணமுடித்து வைத்தார் .
இரண்டாவது மருமகள் மீது தனி அக்கறை அவருக்கு . தங்கை மக்கள் அல்லவா? அந்த குடும்பத்தோடு சற்று அதிக நெருக்கம் .
ராகவபிள்ளையின் மூன்று மகன்களுக்கு சேர்த்து ஏழு பேரக்குழந்தைகள் . எழுவரிலும் அஸ்வின் நல்ல கொண்டவன் .
அந்த அதிபுத்திசாலி செய்த செயலை தான் ஏற்க முடியாமல் உடைந்து நின்றார் பொன்னுசாமி .
“…………………”
யக்கா பொன்னர் வாத்தியார் மவன் அசுவினு பண்ண காரியத்தை கேட்டியா ? பால்கார அஞ்சலை சொல்ல வீட்டுக்கார அம்மா ஆர்வமாய் கேட்டுக் கொண்டாள் .
எம்மாம் பெரிய படிப்பு படிச்ச புள்ள எப்படியாப்பட்ட உத்தியோகம் பார்க்குது ……இந்த தம்பி ஏன் இப்படி பண்ணுச்சு ?குழாயடியில் பெண்கள் கூட்டணி இதையே கூடி விவாதித்து க்கொண்டிருந்தது.
கிருஷ்ணர் வாத்தியார் வீட்டு சுமையை பொன்னர் வாத்தியார் மகன் சுமக்கிறான் என்று பேசிக் கொண்டனர் .
ஆமாய்யா என்ன இருந்தாலும் சித்தப்பன் புள்ள அல்பாயுசுல போயிட்டானே …..அவன் பொண்டாட்டி புள்ளைய அம்போன்னு விட்டுட முடியுமா?
பாவம் சின்னப்பொண்ணு ….கையில் குழந்தையோட நிற்குறதை பார்த்தா கல்மனசும் கரைந்துடுமே …. ! அரசமரத்தடியில் ஆடுபுலியாட்டம் ஆடிக்கொ ண்டிருந்த பெருசுகள் இப்படி பேசிக் கொண்டது .
“…………………”
கார் சீரான வேகத்தில் போய்கொண்டிருந்தது . பின் சீட்டில் குழந்தையை அணைத்துக் கொண்டு சோக சித்திரமாய் கண்மூடி அமர்ந்திருந்தவளை கண்டு அஸ்வினுக்கு மனசு பிசைந்தது .
கணவனை இழந்து நிற்பவளுக்கு வெறும் வாய் வார்த்தையில் ஆறுதல் கூறுவது முக்கியமல்ல …அவளுக்கு அபயம் அளிக்கும் முடிவோடு தான் வாழ்க்கை கொடுத்திருக்கிறான் .
‘“……………”
ஆறுதல் சொல்லி அவளை இன்னும் இன்னுமாய் வதைக்க விரும்பாதவனாய் சாலையில் கவனம் செலுத்தினான் .
கீர்த்தனாவிற்கு அஸ்வின் முகம் பார்க்கவே கூசியது .” தன் கணவனின் அண்ணன் ஆயிற்றே “அந்த நினைவே அவளை அருவெறுக்க வைத்தது.
எது நடந்த போதும் அவளை இழப்பதற்கில்லை என்ற நினைவோடு தான் தாலிகட்டி தன பொறுப்பாக்கி கொண்டான் .
சரி தவறு கடந்து தான் இம்முடிவை எடுத்திருக்கிறான் . அவன் தெளிவாக்வும் உறுதியுடனும் இருந்தான் .
கீர்த்தனாவால் தன் ஜீரணிக்க முடியவில்லை எப்படி இதை ஏற்க முடியும் ? மனம் ஒப்பவில்லை அவளுக்கு. நினைவே கூசி குறுக வைத்தது .
அவளோடு கூடி வாழ்ந்து குடுமப்ம் நடத்தும் நிலை பற்றி எல்லாம் யோசிக்கவில்லை .
அவள் நிராதரவாக நின்றுவிடாதபடி அவளை தன கண்காணிப்பில் கொண்டு வந்ததே போதும் என்றுஎண்ணிக் கொண்டான்
“…………………..”
அஸ்வின் ,கீர்த்தனா திருமண செய்தி கிருஷ்ணன் வாத்தியாருக்கு போன பொது நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டார் .
மருமகளின் மறுமண செய்தி கேட்ட பதமினி வானத்துக்கு பூமிக்குமாய் எகிறி குதித்தார் .
தத்தூ ….வெட்கம் கெட்டவ புருஷன் போய் சேர்ந்து வருஷம் ஒன்னு கூட ஆகல …அதுக்குள்ள பது பொண்ணாகிட்டாளா? என்ன மானங்கெட்ட ஜென்மமா இருப்பா ?
எம்புள்ளைக்கு பிறந்த குழைந்தையை தூக்கிட்டு போய் எவனுக்கோ கழுத்தை நீட்டியிருக்கா ….எம் மவனுக்கு பிறந்த குழந்தைக்கு எவன் அப்பனாகுறது? பத்மினி பத்திரகாளியாய் மாறி ஆடி தீர்த்து விட்டார் .
மருமகள் வேண்டாங்கிற …உனக்கு பேரக்குழந்தை மட்டும் எதுக்கு ? சும்மா ஊருக்கும் பேருக்குமா ஒப்பாரி வைக்காத ……எரிக்கும் பார்வையில் மனைவியை அடக்கினார் கிருஷ்ண சாமி .
அஸ்வின் கையில் அடைக்கலமாகி இருக்கும் தன மருமகளையும் பேரக்குழந்தையும் எண்ணி சாந்தமாய் உட்கார்ந்திருந்தார் .
“………………”
இழவு வீடு போல மயான அமைதியை தத்தெடுத்திருந்தது பொன்னுசாமி வாத்தியார் வீடு .
அம்மா இந்த காபியையாவது குடிம்மா ….அக்ஷயா தாயிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள் .
கொண்டாந்து என் தலையில் ஊத்து ….விரக்தியின் விளிம்பில் இருந்தார் சரோஜினி .
பொன்னர் வாத்தியாருக்கு ஏகப்பட்ட போன் அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தது .
புறக்கணிக்க இயலாமலும் பதில் சொல்ல முடியாமலும் சோர்ந்து போனவர் போனை அணைத்து வைத்துவிட்டார் .
“………………..”
கடலூர் லாரன்ஸ் ரோட்டில் உள்ள வசந்தபவன் ஓட்டலின் முன் காரை நிறுத்தினான் .
கார் நிற்கவே …உணர்வு திரும்பி தலை நிமிர்ந்தாள் கீர்த்தனா .
வா சாப்பிடலாம் ! தயக்கம் சிறிதும் இல்லை அவனுக்கு .
இல்ல…வேண்டாம் …பசிக்கலை ..நீங்க போய் சாப்பிடுங்க ! குரல் தடுமாறியது அவளுக்கு . இவ்வளவு பெரிய வாக்கியம் இன்று தான் அவனிடம் பேசி இருக்கிறாள் .
மணி பத்து ஆகப் போகுது ….கைப்பிள்ளைக்காரி சாப்பிடாம இருக்கலாமா ?
உரிமையாய் கடிந்து கொண்டான் .
மறுக்கும் வழி அறியாது அவன் பின்னே குழந்தையை தூக்கிக் கொண்டு நடந்தாள் .
குழந்தைக்கு சுலபமாய் செரிக்கும் விதமாக இட்லி ஆர்டர் பண்ணினான்.
முதலில் குழந்தைக்கு ஊட்டு ! பேரரை அழைத்து வெந்நீர் கொண்டுவர சொன்னான் .
அவனின் அக்கறை கண்டு அவள் ஸ்தம்மபித்து விட்டாள்.
குழந்தைக்கு ஒரு இட்டலி ஊட்டி பசியாற்றறி பேம்பர்ஸ் மாற்றிவிட்டாள் .
குழந்தையை என்கிட்டே கொடு ! வாகாய் வாங்கி கொண்டவன் நீ
சாப்பிடு என்றான் .
மளமளவென்று அவள் கண்ணில் கண்ணீர் வழிந்தது.
ம்ம்ம்ச் ….சாப்பிடு கீர்த்தி ! சற்று குரலை உயர்த்தினான் .
அவன் முகம் பாராது அமைதியாக உண்ண தொடங்கினாள் .
பசியாரிய குழந்தை அஸ்வின் முகம் பார்த்து சிரிக்க தொடங்கியது
என்னடா செல்லம் அப்பா பார்த்து சிரிக்கிறீங்களா ? என் பட்டுக்குட்டி இவ்வளவு அழகா சிரிப்பீங்களா ?மலர் செண்டாய் மார்பில் தாங்கி மனமுவந்து உச்சி முகர்ந்தான் தம்பி மகனை .
அவனின் அப்பா என்ற வார்த்தையில் சரேலென்று நிமிர்ந்துன்பார்த்தாள் கீர்த்தனா .
அவனோ எவ்வித கல்மிஷமும் இன்றி குழந்தையை கொஞ்சிக் கொண்டிருந்தான் .
அவசரமாக சாப்பிட்டு குழந்தையை வாங்கிக் கொண்டாள் .
தியா குட்டி கொஞ்ச நேரம் அம்மா கூட இருப்பீங்களாம் …அப்பா சீக்கிரம் சாப்பிட்டு வந்துடுவேனாம் …பொக்கிஷம் போல் குழந்தையை பாதுகாப்பாய் அவள் கையில் கொடுத்தான் .
சாப்பிட்டு முடித்து கிளப்பினார்கள் .யார் பார்த்தாலும் கணவன் மனைவி குழந்தையோடு வந்திருக்கிறார்கள் என்றே எண்ணிக்கொள்வாரகள் .
“…………………….”
உங்க அண்ணன் பையன் திட்டம் போட்டு தான் இப்படி பண்ணியிருக்கான் ,பத்மினி குற்றம் சாட்டி கத்தி கூச்சலிட்டார் .
என்ன திட்டம் போட்டிருந்தான் நீ அதை கண்டுட்ட? எரிச்சலடைந்துவிட்டார் கிருஷ்ணசாமி .
நம்ம குடியை கெடுத்ததே அவன் தான் . நல்ல்லா இருந்த என் புள்ளைக்கு காதல் கலயாணம் பண்ணி வச்சான். அவன் போய் ஆறு மாசம் ஆகல அவன் பொண்டாட்டிக்கு இவனே தாலியும் கட்டிட்டான் . ஆத்திரம் அவமானம் எல்லாம் சேர்ந்து அவர் உக்கிரமாய் காத்திக் கொண்டிருந்தார் .
அவனை ஏன் குறை சொல்ற ?
நீ பெத்த சீமந்த புத்திரன் லவ்வுல விழுந்துட்டான் . அந்த பொண்ணு இல்லைனா தற்கொலை பண்ணிக்குவேன்னு அழுது அரட்டுனான்.
தம்பி ஆசை பட்டுட்டானேன்னு அஸ்வின் கல்யாணம் பண்ணி வைத்தான் .
நம்ம புள்ளைக்கு ஆயுள் கம்மி….நம்ம என்ன பாவம் பண்ணினோமோ …ஒத்த ஆம்பிளை பெத்து அவன் இருந்து நமக்கு கொள்ளி வைக்க பாக்கியம் இல்லாம போயிட்டோம் . அதுக்கு அஸ்வினை ஏன் கரிச்சு கொட்டுற ?
அண்ணண் புள்ளையாச்சே முட்டுக்கொடுக்க வந்துட்டீங்க … அதற்கும் கத்தினார் .
சின்னபொண்ணு கையில் குழந்தையோட நிர்க்குறப்போ பாவம்னு வாயால் சொல்லாம வாழ்க்கை கொடுத்திருக்கானே ……என் அண்ணன் பிள்ளை எல்லாத்துலயும் ஒசத்திதான்டி…..கிருஷ்ணன் நெகிழ்ந்துபோனார் .
எது ….சொத்தோட சொத்து சேரட்டும்னு நீங்களே பிளான் போட்டு கொடுத்திருப்பீங்க போல ….விழி இரண்டால் எரிக்க முயன்றார் பத்மினி .
ச்சீ உன் சொத்து ஆசை இன்னுமா குறையல ? ஒத்த ஆண்வாரிசை எமனுக்கு தூக்கி கொடுத்துமா நீ அடங்கலை ….மறைந்துவிடும் கோபத்தோடு கையை ஓங்கி விட்டார் .
