Skip to content
Post Views: 3,213
இதோ.. இதோ.. என் பல்லவி
Advertisement
அத்தியாயம் – 12
Advertisement
Advertisement
ஆபிதா லண்டன் செல்கிறேன் என்றதில் இருந்து முபாரக் ஏதோ குழப்பத்தில் இருப்பதை பார்த்த மஹாமுது “என்ன முபாரக் ஏதோ நினைக்குற ஆனா சொல்ல மாட்டேங்குற, என்ன யோசனை ” என்றார்.
Advertisement
” நாம ஆபிதாவை நம்ம வீடு, நம்ம கடை தவிர 4 வருஷமா எங்கேயும் அவளை அனுப்பல, இப்போ அவளை வெளியில அனுப்புறோம், அவள தெரிஞ்சவங்க யாரவது பார்த்தா, ஆஷிக்கோட நிலமை என்ன ஆகுறது” என்று கூற.
மஹாமுது முபாரக்கை பார்த்து சிரித்தவர். ” ஒரு காரியம் நடக்குதுண்ணா, அது நம்மலோட கையில் இல்ல எல்லாம் அல்லாவோட செயல். ஆபிதா நம்ம வீட்டுல இருக்குறது. எல்லாம் காலத்தின் முடிவு, ஆபிதாவை அல்லா நமக்காக அனுப்பி வச்சு இருக்காரு, சாரி நமக்காக இல்ல ஆஷிக்காக” என்றவர்..
” ஆபிதாயில்லண்ணா ஆஷிக்கோட நிலமை ரொம்ப கஷ்டமா இருந்துருக்கும்,. அந்த பொண்ண நாம பார்க்காம இருந்துருந்தா அவளோட நிலமை என்னவேணா ஆகியிருக்கலாம். அவ நம்ம வீட்டுக்கு வந்த ஆபிதாவா இருக்கணுமுன்னு அல்லா நினைச்சுருக்காரு. இந்த பொண்ணு மட்டும் ஆபிதாவா இங்கே வராமல் இருந்தா, நாம எல்லாம் ஆபிதாவோட இழப்பில் இருந்து மீண்டு வந்து இருக்க முடியாது.. இந்த புது ஆபிதாவும், சிவாக்குட்டியும் அல்லா நமக்கு தந்த பொக்கிஷம் அத பத்திரமா பாதுக்காப்பது நம்ம கடமை, அந்த பொக்கிஷத்தோட உரிமைக்காரன் வந்து கேட்டா,?
நாம அந்த பொக்கிஷத்தை உரிமைப்பட்டவங்க கிட்ட திருப்பி கொடுக்கத்தான் வேணும்” என்றார் மஹாமுது..
” என்னப்பா சொல்லுறீங்க நம்ம ஆபிதாவை திருப்பி அனுப்பனுமா, அது முடியாது “.
” முபாரக் நிஜத்த புரிஞ்சுக்கோ, சிவாக்குட்டியை பார்த்தும் உனக்கு தெரியலையே” என்றார் மஹாமுது…
” என்னப்பா சொல்லுறீங்க, “?.
” ஆமா முபாரக் ஆபிதா வந்து கொஞ்ச மாசம் கழிச்சு தான் அவ மாசமா இருக்குறது, நமக்கு தெரியும்,, சரி அல்லா ஒன்னுக்கு இரண்டா நாம பாத்துப்போமுன்னு நம்பி அனுப்பி வச்சு இருக்காருன்னு அவங்க இரண்டு பேரையும் நாம பாத்துக்கிட்டோம்,, ஆபிதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது, உங்க அம்மா ஆபிதா குழந்தைக்கு நம்ம முறைப்படி பேரு வைக்கலாமுன்னு நெனச்சா, ஆனா அந்த நர்ஸ் வந்து குழந்தைக்கு பெர்த் சர்டிபிகேட்ல என்ன பேர் எழுதனுமுன்னு கேட்டப்போ, ஆபிதா மயக்கத்துல இருக்குறப்போ, என் பாப்பா பேரு சிவகாமி, சிவகாமியின்னு சொல்லுங்கன்னு சொன்னா,, அது மட்டுமா, குழந்தை அப்பா டாக்டர் எங்கன்னு கேட்டாரு,, நாம என்ன சொன்னோம். அவர் இறந்துட்டாருன்னு சொன்னோம்..
ஆபிதா என்ன சொன்னா தெரியுமா,, அவர் சாகமாட்டார் உயிரோட இருப்பாருன்னு சொன்னா.. அவளோட ஆழ் மனதில் , பழய நினைவு இருக்கு, அது எப்போ வெளியில் வருமுன்னு தெரியல” என்றார்.
” அப்போ ஆபிதாவுக்கு பழய ஞாபகம் திரும்பி வந்தா என்ன பண்ணுறது” என்றான் முபாரக்..
” ஞாபகம் திரும்பி வந்தா அவ குடும்பத்தோடு சேர்ந்து வைக்கறது தான், நம்ம கடமை”. என்றார் மஹாமுது..
” அப்போ ஆஷிக்” என்றான் முபாரக்..
” ஆஷிக் கிட்ட கேட்கனும் அவன் நம்மளோடு இருந்தாலும் ஓகே தான்,, இல்ல நான் ஆபிதா அம்மாவோட போவேன்னு சொன்னா, கண்டிப்பா நான் ஆபிதாவோட சந்தோஷமா அனுப்பி வைப்பேன். ஆபிதா ஆஷிக்கை நம்மல விட, நல்லா பாத்துப்பா,. எனக்கு என் பேரன் சந்தோஷம் தான் முக்கியம் ” என்றார் மஹாமுது..
” இதை நான் ஒத்துக்க மாட்டேன். ஆபிதாவுக்கு ஞாபகம் வந்த,. அவளும், சிவகாமியும் அவங்க குடும்பத்தோடு போகட்டும், நான் ஆஷிக்கை அனுப்ப மாட்டேன் ” என்றான் முபாரக்…
” இது சரி இல்ல முபாரக், ஒரு தாய்க்கிட்ட இருந்து ஒரு குழந்தையை பிரிக்கிறது தப்பு.. “.
” என்ன வாப்பா, சரியில்லண்ணு, தப்புன்னு சொல்லுறீங்க. ஆஷிக்கை அவளா பெத்தா, அவன் நம்ம ஆபிதா வோட பையன், ” என்றான் முபாரக்..
” ஆஷிக்கை பெத்தது என் பொண்ணு ஆபிதாவா இருந்தாலும், இப்போ இங்க ஆபிதாவா இருக்குற பொண்ணு தானே ஆஷிக்கை பாத்துக்குறது. அது மட்டுமா, நம்ம குடும்பத்தயே அவ குடும்பமா நெனச்சு வாழுற பொண்ணு,.. நான் அவள வருத்தபட விடமாட்டேன் முபாரக். அவளுக்கு ஞாபகம் திரும்பி வந்தா ஆபிதா என்ன சொல்லுறாளோ அத நான் செய்வேன். நீ இதுல தலையிட கூடாது..
” வாப்பா”! என்றான் கோபமாக முபாரக்..
” வாழ்க்கை அதன் போக்குல வாழ பழகு முபாரக்.. பின்னாடி வர்ரத, இப்போவே ஏன் யோசிக்குற, ஆபிதாவோட வாழ்க்கையில் என்ன நடக்கணுமுன்னு விதி இருக்கோ, அது தான் நடக்கும் ” என்றார் மஹாமுது..
முபாரக் மனதில் அதை நான் மாத்தி காட்டுறேன் என்று நினைத்து கொண்டான்..
ஆபிதா லண்டன் போக எல்லா ஏற்பாட்டையும் முபாரக் தான் பண்ணி கொடுத்தார்..
ஆபிதா லண்டன் செல்ல நாளும் வந்தது, அனைவரிடம் சொல்லிக்கொண்டு தன் பிள்ளைகளோடு ஆபிதா லண்டனுக்கு விமானம் ஏறினாள்..
முபாரக் ஆபிதா கூடாவே லண்டன் வந்தார்.. அவள் தங்கும் இடம் பார்த்து. ஹோட்டலுக்கு சென்று வர ஒரு காரை வாங்கி கொடுத்துவிட்டு தங்கைக்கு ஆயிரம் பத்திரம் சொல்லிவிட்டே சிங்கப்பூர் சென்றார்..
ஆபிதா முதலில் ஒரு கீரிச்சை தான் பார்த்தாள்.. அவள் ஹோட்டல் சென்றாள், பிள்ளைகளை தனியாக இருப்பார்கள் என்று, அவர்களுக்கு ஏத்த மாதிரி, ஒரு கீரிச்சை தேர்வு செய்தவள், இரண்டு நாள் பிள்ளைகளை கீரிச்சில் விட்டு அழைத்து வந்தாள்..
மூன்றாம் நாள் ஷேக்தாவுத் நடத்தும், 5 ஸ்டார் ஹோட்டலுங்கு சென்றாள்..
முதல் நாள் என்பதால் ஷேக் தாவுத் அனைவரையும் அறிமுக படுத்த, ஹோட்டலை சுத்தி பார்க்க மற்றும் அவர்களுக்கு தேவையான பொருள்களை வாங்க சொல்ல. எங்கே வைத்து சொல்லி கொடுப்பது என்று முடிவாக நேரம் சென்று கொண்டே இருந்ததது..
ஷேக் தாவுத் ” நாளைக்கு வா ஆபிதா இன்னைக்கு நேரம் ஆச்சு என்று சொல்லி அனுப்பினார்.. ஆபிதா பிள்ளைகளை கீரிச்சில் இருந்து அழைக்க சென்றாள்…
ஆபிதா பானுக்கு லண்டன் வந்ததில் இருந்தே, மனம் பட, பட வென அடித்துக்கொண்டு இருந்தது, இந்த இடத்திற்கு ஏற்கனவே வந்த மாதிரி இருக்கு என்றே மனதில் தோன்ற, அவள் ஏதாவது அதிகமாக நினைத்தாள் தலைவலி வந்து விடும் ஆபிதா பானுவுக்கு அதனால் அதிகம் யோசிக்க மாட்டாள்..
காரை ஓட்டிக்கொண்டு வந்தவள், பிள்ளைகளை கீரிச்சில் கூப்பிடும் இடத்தில் வந்து நின்றாள்..
முதலில் ஆஷிக் தான் வந்தான், முகம் ஏதோ கோபம் போல் இருக்க, பின்பு சிவாக்குட்டி வந்தாள், “மம்மி” என்று கத்திக் கொண்டே வந்தவள், ஆபிதா மேல் ஏறி இருந்தாள்..
” மம்மி, ரைம்ஸ் பார்த்தேன், டான்ஸ் ஆடினேன், அப், டவ்னு விளையாடினேன்” என்று சொல்லிக்கொண்டே வர..
ஆபிதா மகளிடம் “உம், உம் அப்புறம் என்று கேட்டுக்கொண்டே வந்தவள்,. ஆஷிக்கை பார்க்க, அவன் முகம் கோபமாக உள்ளதை பார்த்தவள்..
” என்ன ஆஷிக் என்னடா, ஏன் உன் முகம் கோபமாக உள்ளது, என்னாச்சுடா?..
” மா “என்றவன் ஆபிதா அணைத்து கட்டி கொண்டு அழ..
” என்னாச்சு ஆஷிக்”?.
” மா என்றவன், நம்ம சிவாக்குட்டி இங்க உள்ள ஒரு பையன் கூட ரொம்ப விளையாடுறா, என் கூட விளையாட மாட்டேங்குறா” என்று சிவாக்குட்டியை பத்தி புகார் கூற..
” யாருடா? அந்த பையன்.. “
” அவன் பேரு சூர்யஜித் தமிழ் பேசுற பையன்,. இங்கே யாருக்கும் தமிழ் தெரியாது, இவன் மட்டும் தான் தமிழ் பேசுறான். அதனால சிவாக்குட்டி அவன் கிட்ட போய் பேசுற, விளையாடுற, தூக்கு, தூக்கு சொல்லுறா என்க்கிட்ட வரமாட்டுறா” என்று கண்கலங்க..
ஆபிதா ” இங்கே ஒரு தமிழ் பேசுற பையன் இருந்தா உனக்கு வசதி தானே, அவன் கிட்ட நல்லா பேசு ப்பிரண்டாகிறு ” என்று கூற..
” அவன் ஒன்னும் எனக்கு ப்பிரண்டு இல்ல, அவன எனக்கு பிடிக்கல, அவன் எப்படி என் தங்கையை தூக்கலாம், கிஸ் பண்ணலாம் என்று கோபப்பட…
” சரி வா வீட்டுக்கு போய் பேசிக்கலாம்” என்று வீட்டுக்கு அழைத்து வந்தாள்..
வீட்டுக்கு வந்தும் ஆஷிக் கோபமாக இருக்க..
சிவாக்குட்டி ஆஷிக்கிடம் சென்று “அண்ணா வா, விளையாடலாம்” வா என்று அழைக்க..
” போ நான் வரமாட்டேன், உன் சூர்யா அண்ணா கிட்டயே போ” என்று கூற..
சிவாக்குட்டி ஓ… என்று கத்தி அழுதவள் ” மம்மி, போ சொல்லுறா, அண்ணா போ சொல்லுற” என்று அழுக..
“ஏன்டி என்னாச்சு, ஏன் அழுகுற ” என்று ஆபிதா வர,.
சிவாக்குட்டி ஆபிதாவை பார்த்து “அம்மா அண்ணா போ சொல்லுறா, சூர்யா போ சொல்லுறா” என்று அழுக..
அழும் மகளை தூக்கி கொண்டவள் , தங்க குட்டிமா அழ கூடாது அம்மா பிஸ்கேட் தரவா என்று பிஸ்கெட்டை ஒரு பௌலில் எடுத்து கொடுத்து, நீ டி. வி யை பாரு மம்மி வர்றேன் என்று சொல்ல.. தலையாட்டிய மகளை முத்தமிட்டவள் சோபாவில் உட்கார வைத்து விட்டு,. ஆஷிக்கிடம் சென்றாள்..
ஆஷிக் பக்கத்தில் சென்ற ஆபிதா மகனின் தலையை வருடி விட..
” அம்மா சாரிமா பாப்பாவை போண்ணு திட்டிட்டேன்” என்று கூற..
” அந்த தமிழ் பையன் என்ன பண்ணான் ஆஷிக், உன்ன திட்டுனானா”…
” இல்லை மா” என்றான்..
” அப்பறம் உன்ன ஹர்ட் பண்ணுற மாதிரி பேசுனானா, இல்ல அடிச்சானா”.
” அப்படி ஒன்னும் இல்லம்மா ” என்றான் மீண்டும்…
” அப்பறம் என்ன ஆஷிக் அவனும் உன்ன மாதிரி சின்ன பையன் தானே , நம்ம சிவாக்குட்டியை எல்லாருக்கும் பிடிக்கும் அவ குழந்தைடா,, அவளை பார்க்குறவங்க எல்லாம் தூக்க தான் ஆசை படு வாங்க,, அதுவும் அவள் பேசுறது எல்லாரும் பிடிக்கும் சரியா, பாப்பா கிட்ட யாரவது பேசுன, அவங்க குட் டா பேசுறாங்களா, பேட் டச் பண்ணுறாங்களான்னு நீ பாத்துக்கனும், அத விட்டுட்டு இப்படி கோபப்படலாமா.. அந்த தமிழ் பையனுக்கு, கூட பிறந்த சிஸ்ட்டரோ, பிரதரோ இருக்க மாட்டாங்க போல அதனால தான் அவன் நம்ம சிவாக்கிட்ட பேசுறான்.. அவனும் சின்ன பையன் தானே, நம்ம இங்க இருக்க போறது ஒரு இரண்டு மாசம் தான் அதுவரை சந்தோஷமா இரு, எல்லார்கிட்டை நல்லா பேசு, பழகு, பாப்பா கூட விளையாடு, யார் கிட்டையும் சண்டை போடதா” என்றாள் மகனிடம்…
” சரிமா ” என்றவள் ஆபிதாவை அணைத்து கொண்டு “சாரிமா” என்று சொல்ல,,
” என்க்கிட்ட சொல்லாத, உன் தங்கச்சி தான், அண்ணா போ, சொல்லிட்டான்னு அழுத, அவக்கிட்ட போய் சொல்லு, இரண்டு பேரும் எப்பையும் சண்டை போடக்கூடாது ” மகன் நெத்தில் முத்தமிட்டு பிள்ளைகளை சமாதானம் பண்ணி வைத்தாள்…
ஆஷிக் “சிவாக்குட்டி ” என்று அருகில் வர..
அவளோ, “நீ போ ஆஷிக்ணா, பாப்பா போ, சொல்லி, பாப்பா ஆங்ரி போ ” என்று கூற…
ஆபிதா ” ஏய் சிவா, அண்ணா கூட சேர்ந்து விளையாடு” என்று அதட்ட.
” போ மா நீ திட்டுற, வா அண்ணா, மம்மி பாப்பா டூ”,, என்று ஆபிதாவை பார்த்து சொன்னவள்.
” நீ வா, அண்ணா நாம விளையாடலாம்” என்று ஆஷிக்கூட விளையாட சென்றாள்..
ஆபிதா இருவரையும் பார்த்து சிரித்தவள் இரவு உணவு செய்ய தயார் ஆனாள்…
மறுநாள் சனி, ஞாயிறாக இருக்க பிள்ளைகளை வெளியில் அழைத்து செல்லலாம் என்று நினைத்தவள், ஷேக்தாவுத்திடம் கேட்க..
காலையில் ரெடியா இருங்க ஆபிதா, நான் காரை டிரைவரோடு அனுப்பி வைக்குறேன் என்றவர், லண்டனை சுத்தி பாருங்க என்றார்..
error: Content is protected !!