Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதோ இதோ என் பல்லவி

Itho Itho En Pallavi 12 2

ஆபிதா பிள்ளைகளிடம்  நாளை லண்டனை சுத்தி பாக்கலாம் என்று  சொல்ல, இருவரும் குதித்து ஆட ஆரம்பித்தனர்..

காலையில் வேகமாக எழுந்த ஆபிதா பிள்ளைகளுக்கு தேவையானதை எடுத்து வைத்துக்கொண்டு, இருவரையும் கிளம்ப சொல்லிவிட்டு. காலை உணவை தயார் செய்து விட்டு. பிள்ளைகளை உணவு உன்ன வைத்து முடிக்கவும், கார் வரவும் சரியாக  இருந்தது..



Advertisement

 மூன்று பேரும் சேர்ந்து காரில் ஏறினார்கள்,,.

கார் டிரைவர்  ஷேக் தாவுத்துக்கு  தெரிந்தவர்  என்பதால். இவர்களுக்கு   காலை வணக்கம்   சொன்னவர், முதலில் லண்டனில் உள்ள ஒரு  மியூசியம்  அழைத்து  செல்ல..

Advertisement

ஆபிதா பிள்ளைகளை அழைத்துக்கொண்டு  மியூசியத்தை  சுத்தி பார்த்தவர்கள்,, பின்பு  மியூசியத்தின் பக்கத்தில் உள்ள பார்க்கு சென்றனர்..

Advertisement

பிள்ளைகள் அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டு வர.. பின்பு கொஞ்சம் தூர கார் பயணம் செய்து மீன்கள் அருகாட்சியகம் அழைத்து வந்தார் டிரைவர்.

Advertisement

சிவகாமிக்கு  மியூசியத்தை விட இங்கே  கடலுக்கு அடியில்  மீன்கள் இருப்பது போல் பார்ப்பது, அவளுக்கு மிகவும் பிடித்து இருக்க..

” அம்மா  பிக் பிஸ்,  அண்ணா சார்க், ”  என்று  அவளுக்கு தெரிந்த மீன் பெயர்களை சொல்லிக்கொண்டே  மிகவும் ரசித்தாள். ஆஷிக் கூட “இங்கே  பாரு சிவா” என்று தங்கைக்கு மீன்களையும், ஆமை, என்று நிறைய கடல் வாழ் உயிரிணங்கள்  இருக்க அனைத்தையும்  தங்கைக்கு அதனின் பெயரை சொல்லி காண்பிக்க, அண்ணன் சொல்வதை கேட்டு கொண்டு வந்தவள் இது, இது என்று கேட்க ஆஷிக்கு தெரியாததை ஆபிதா பானு மகளுக்கு  பெயர் சொல்ல, அவர்கள்  சொல்வதை, திருப்பி சொல்லி அதை கண்ணாடியின் அருகில் சென்று  தொட்டு பார்த்து ரசித்தாள், அங்கே ஒரு ஹோட்டலில் மதிய உணவை உண்டு விட்டு கிளம்ப..

டிரைவர் கடைசியாக வந்தது தேம்ஸ்  நதிகரைதான் தான்,,  நதிகரை சிறிது நேரம் ரசித்து பார்க்க.. கப்பலில்  தேம்ஸ் நதியை ஒரு ரவுண்டு  சுத்தி பாக்க , டிரைவர் டிக்கெட்  வாங்கி வந்து ஆபிதாபானு விடம் தர..

நன்றி சொல்லி டிக்கெட்டை வாங்கியவள்.. பிள்ளைகளை அழைத்து கொண்டு கப்பலில் ஏறினார்கள்,, ஆஷிக்கு  கப்பலில் செல்வது மிகவும் பிடித்து இருக்க ஆபிதாவின் கையை பிடித்துக்கொண்டு கப்பலின் மேலே  வந்து சுத்தி பார்த்தான்..

ஆபிதா பானுவுக்கு  இங்கே ஏற்கனவே  வந்த மாதிரியே இருக்க, நினைவுகளை  மனதில் நினைக்க, அவளுக்கு  ஏதும்  நினைவில் இல்லை,, சிவாக்குட்டி  காலையில் இருந்து சுற்றியதால்  கப்பலில்  ஏறும் போது, தேம்ஸ் நதி காற்றுக்கு   தூங்கி விட, தன் தோளில் சிவாக்குட்டியை  தட்டிக்கொடுத்தவள்,   மகனை பார்க்க, அவனோ ”  அம்மா  அங்கே பார் பெரிய கப்பல், பாலம், கப்பல் ஆடுது, என்னை புடிச்சுக்கோ என்று  சிரித்துக்கொண்டே வந்தான்..

ஆஷிக் சிறிது நேரம் அமைதியாக இருக்க, “என்னடா தூங்கிட்டியா”  என்றாள் ஆபிதா..

 ஆசிக் ஆபிதாவின்  பக்கத்தில் வந்தவன் . ”  அம்மா அந்த  பையன் வந்து  இருக்கான்”..

”  எந்த  பையன்டா “?.

”  அது தான்  கீரீச்சில்  இருப்பானே  தமிழ் பையன் சூர்யா ஜித் அந்த பையன்” தான்..

” ஓ” என்றவள்,   “எங்கே இருக்கான் என்று கேட்க”?..

”  அதோ,  அவன்  டாடிக்கூட இருக்கான்  பாருங்க” என்று  காண்பிக்க..

 ஆபிதா சன்று  தள்ளி பார்க்க, அங்கே ஆஷிக்  வயதில்  உள்ள  ஒரு பையன் , ஒரு ஆணின்  கைபிடித்துக்கொண்டு  ஆஷிக்கை காண்பித்து  ஏதோ  பேசுவது  தெரிந்தது..

” நீ  போய் உன் பிரெண்டு கிட்ட பேசுடா”  என்றாள்..

”  நோ மா  அவன்  ஒன்னும் என் பிரெண்டு கிடையாது ”  என்றான்  ஆஷிக்..

”  ஆஷிக்  அப்படி  எல்லாம்  சொல்ல கூடாது”   என்று  பேசிக்கொண்டு இருக்க..

சூர்யஜித்  இவர்களிடம் வந்து  விட்டவன்.”  ஹாய்  ஆண்ட்டி ”  என்றவன், ஆஷிக்கை  பார்த்து ”  “ஹாய்   ஆஷிக்”  என்றான் சூர்யஜித்..

 ஆஷிக் சூர்யாவை பார்த்து  முகத்தை  திருப்பி கொண்டான்..

ஆபிதா ” ஆஷிக் ”  என்றவள்,” சே சாரி,  அண்ட் ஹேன் சேக்  பண்ணு” என்றாள்..

”  நோ… மா.. “என்றான்  ஆஷிக்..

“ஆஷிக்”   என்று   மறுபடியும்  ஆபிதா  ஒரு அதட்டல் போட..

”  ஓகே  மா.. ”  என்றவன், சூர்யாவுக்கு  கைகொடுத்து, ”  சாரி சூர்யா” என்றான்..

 ஆபிதா ” இரண்டு பேரும் அக் பண்ணுங்க ”  என்றாள்..

இருவரும் ஆபிதாவின்  முகத்தையே  பார்க்க.. உம் என்றாள்.. இருவரும் கைகொடுத்து அணைத்து கொள்ள, ” இனிமே இரண்டு பேரும் சண்டை போட கூடாது,”..

 இருவரும்  சரி என்று தலையாட்ட..

தூரத்தில் இருந்த விக்ரம் சூர்யாவும், ஆஷிக்கும் அணைத்து கைகொடுப்பதை  பார்த்து இருந்தவன், இரண்டு பேரையும் பார்த்து  சிரித்தவன், ஆபிதா இருவரையும் சமாதானம்  பண்ணுவதே  பார்த்தவன், சிறுவயதில்  நானும், பல முறை இப்படி தன்  கூட படிக்கும்  மாணவர்களிடம் சண்டை போட்டு  வரும் பொழுது, அவனின் அம்மா ஸ்கூல் வரும்  போது தன்னை எல்லோரிடம்  நன்றாக  பேசு, கைகொடு, என்று சமாதானம் சொல்லியதை நினைத்து பார்த்தான்,,.

சூர்யாஜித்  சிவகாமியை  பார்க்க,.

 ஆபிதா  “தூங்கிட்டா “என்று சொல்ல..

 சிவகாமியை ஆசையாக சூர்யா மறுபடியும் எட்டி பார்க்க..

ஆபிதா  சிவா, சிவாக்குட்டி என்று மகளை எழுப்பி விட,.

சூர்யா “பராவால்ல ஆண்ட்டி  பாப்பா தூங்கட்டும் ”  என்று  கூற..

சிரித்த ஆபிதா “சிவா, சிவாக்குட்டி  அண்ணா பாரு,   சூர்யா அண்ணா” என்று எழுப்ப.. சின்னவள்  இன்னும் நன்றாக ஆபிதாவை தோள் அணைத்து தூங்க,,.

சூர்யஜித்தோ  “பாப்பா,  சிவாபாப்பா” என்று அழைக்க..

 சூர்யஜித்தின்  சத்தம் கேட்ட , சிவகாமி  முளித்து  சூர்யாவை  பார்த்தவள்..

“அண்ணா சூர்ரீயா அண்ணா”  என் அழைத்தவள் அவனிடம் தவ..

” ஏய் பாத்துடி”  என்றவள்  சூர்யாவிடம்  சிவாக்குட்டியை மெதுவாக தர..

அவனோ ஆசையாக சிவாக்குட்டியை தூக்கியவன், ஆண்ட்டி நான் என் டாடிகிட்ட  சிவாவை  கூட்டிட்டு போகவா என்றான்..

”  எங்கே உன் டாடி “?. என்றாள்.

”  அதோ ”  என்று காண்பிக்க..

கப்பலில்  இறுதி இடத்தில் தேம்ஸ்  நதியை பார்த்தவாரு  திரும்பி  நின்று இருந்தான் விக்ரம்..

கப்பல் ஆடுதே நீ எப்படி பாப்பாவை  தூக்கிட்டு  போவா  இரு, நானும் வர்றேன் என்றவள்..

 பிள்ளைகளை  அழைத்துக்கொண்டு  விக்ரமனின் அருகில் வர..

டாடி என்று சூர்யாஜித் விக்ரமை அழைக்க..

 விக்ரம் திரும்பி பார்த்தான், தன் முன் கண்கள் மட்டும் தெரிய உடல் முகம் அனைத்தும்  பர்தா, துணியில் மறைத்து நிற்கும் பல்லவியை அவனுக்கு அடையாளம் தெரியவில்லை..

பக்கத்தில் சூர்யா வயதுடைய ஒரு சிறுவன், அப்பறம்  கொழு, கொழுவென  வெள்ளை நிறத்தில் ஒரு  குழந்தையை பார்த்தான்.

சூர்யா டாடி பாப்பா என்று சிவாவை அறிமுகம்  பண்ணிவைக்க, .

நீ சொன்னியே  உன் கீரிச்சுக்கு வந்து தமிழ் பசங்க இவங்க தானா என்று கேட்டவன்.  சிவாவை பார்த்து  ”  ஹாய் பேபி, ஹவ் ஆர் யூ, ”  என்றவன். குழந்தையிடம் கையை நீட்ட,.

அவளோ புதிய ஆளை  பார்த்து ஆஷிகின் கால்களை கட்டி கொள்ள..

“கம் பேபி” என்றான்  , சிவகாமியை பார்த்து.. அவளோ மம்மியை  பார்க்க..

ஆபிதா  விக்ரமனின்  குரலை கேட்டவள், இந்த குரலை  ஏற்கனவே  நான் கேட்ட குரல்  மாதிரியே இருக்கே என்றவள், அவனின் முகத்தை பார்க்க, அவளால்  முடியவில்லை, குனிந்தே இருந்தவள், அவனின்  குரல் அவளுக்கு ஏதோ செய்ய..

குழந்தை ஆஷிக்கின் கால்களை  கட்டிக்கொண்டு இருப்பதை  பார்த்தா, ஆபிதா ”  அங்கிள் கிட்ட போம்மா”  என்று சொல்ல..

விக்ரம் சட்டென நிமிர்ந்து  பார்த்தான், பல்லவின் குரல் கேட்டு, ஆபிதாவை  பார்த்து   “பல்லவி”   என்றான்..

அவளோ அப்போது தான் அவன் முகத்தை பார்த்தாள், எங்கோ பார்த்த முகம் போல தெரிய, அவனின் முகத்தையே பார்த்திருத்தவளிடம்.

மீண்டும் ” பல்லவி”  என்க..

 ”  நான் பல்லவி இல்ல  ஆபிதா பானு என்றாள்..

”  இல்ல ”  என்றவன் ”  உங்க வாய்ஸ் என் பல்லவி மாதிரியே இருந்துச்சு”  என்று கூற.

கப்பல்,  இறங்கும்  ஸ்டாப்பிங்கில்    நிற்க..

ஆபிதாவின் கார் டிரைவர்   கப்பலின் கீழே இருந்து, இவர்களை பார்த்து இந்த பக்கம் வாங்க  மேடம் என்று ஆங்கிலத்தில் கூற.. அவரிடம் சரி என்றவள்..

தன்னை ஆராய்ச்சி பார்வை பார்க்கும் விக்ரமிடம் ” வர்றோம் சார்” என்றவள்,   சூர்யாஜித்திடம் பாய் சொல்லு அண்ணாவுக்கு என்று  கப்பலில் இருந்து இறங்க சிவகாமியை ஆபிதா தூக்கிக்கொண்டு, ஆஷிக் வா என்று கப்பலின் இருந்து  கீழே இறங்க..

விக்ரமும், சூர்யாஜித்தும்  இவர்களை பின் கீழே இறங்கி  வர..

 கப்பல் லைட்டாக ஆட, ஆபிதா பானு கப்பல் ஆடவும் சிவகாமியை வைத்துக்கொண்டு விழ போக.

விக்ரம் சட்டென ஆபிதாவையும் சிவகாமியையும் சேர்த்து பிடித்து நிறுத்தியவனின் இதயம் தாறுமாறாக அடித்துக்கொள்ள..

“பல்லவி” என்றான் ஆழ்ந்த குரலில்..

 ஆபிதா அவன் சொல்லியதை கேட்காதது போல்.. நன்றி சார்  என்று  சொல்லி விலக..

ஆபிதாவின்  கண்கள்  மட்டுமே தெரிய, அது பல்லவின்  கண்போன்றே விக்ரமுக்கு  தெரிந்தது.

ஆபிதாவுக்கு சிவகாமியை வைத்துக்கொண்டு  கப்பலின் படிஇறங்க கஷ்டமாக  இருக்க.

குழந்தையை தா என்று ஒருமையில்  கேட்டவன் சிவகாமியை தூங்க  வர.

 குழந்தை விக்ரமிடம் வரமாட்டேன் என்க, சூர்யாஜித்  ” வா பேபி டாடிக்கிட்ட” என்று அழைக்க..

“சரி”  என்ற  குழந்தை  விக்ரமிடம் வர.. அப்போது தான்  விக்ரம்  சிவகாமியின் முகத்தை பார்த்தான்.. தன் தாய் சிவகாமியின்  முகம்  போலவே  குண்டு கன்னம், வட்ட முகம்  என்று தன்  தாய்  முக வடிவம் போல் இருந்த குழந்தை பார்த்தவன்.

ஏதோ ஒரு வித  உணர்வு தோன்ற  குழந்தையை  அணைத்துக்கொண்டான் விக்ரம்..

“அங்கிள்”  என்று அழைத்தவள், விக்ரமனின்  கன்னத்தை வருட, தன் தாய் சிவகாமி வருடியது போலவே இருந்தது..

குழந்தையிடம் “உன் டாடி எங்கே? உன் கூட வரலியா” என்றான் விக்ரம்..

 குழந்தையோ ”  என் டாடி அல்லா கிட்ட போயிட்டாரு அங்கிள் என்றாள்..

”  உன் நேம் என்னம்மா”.. என்றான்..

”   அதுவா  “என் நேம் சிவாக்குட்டி,” என்றது  குழந்தை..

 ஆஷிக் விக்ரமனை பார்த்து அவ  புல் நேம் சிவகாமி  அங்கிள் என்றான்..

விக்ரமுக்கு எங்கோ மணி அடித்தது போல் தெரிய, ஆஷிக்கிடம்  “பாப்பா தேட் ஆப்   பெர்த்” என்ன?  என்று  கேட்க..

 ஒன் வீக் தான் ஆச்சு அங்கிள் சிவாவுக்கு  3  வது பிறந்த நாள் கொண்டாடினோம் என்றான்,

”  நீ” என்று கேட்க,.

 “நான் பாப்பா வோட ஓன் பிரதர்” என்று சொல்ல.

அனைவரும் கப்பலில் இருந்து வெளியில் வந்து இருக்க..

 ஆபிதா  விக்ரம் முகத்தை பார்க்காமல், தாங்யூ,  வர்றோம் சார் ”  என்று சூர்யாவுக்கு  பாய் சொல்லிவிட்டு காரில் ஏற.

விக்ரமுக்கு  ஏதோ புரிவது போல்  தெரிய, அவனுக்கு இன்னும் தெரியவேண்டிய நிறைய  விசயங்கள்  இருக்க,  அவன்  மனம் காரில் செல்பவர்களிடம் சென்றது,…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!