Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அஞ்சன விழிகளின் மொழிகள் கேளாயோ..

விழிகள் 5

விழிகள் 5

தனஞ்ஜெயனின் அறை முழுதும் மல்லிச்சரங்களாலும் ரோஜா இதழ்களாலும் நிறைந்திருக்க.. அதனைப் பார்த்து வெட்க புன்முறுவல் புரிந்தான்…



Advertisement

தனஞ்ஜெயன் எப்போது அல்லியையும், அவளின் அஞ்சனம் பூசிய மலர்காந்த விழிகளையும் பார்த்தானோ, அன்றே அவளிடம் மொத்தமாக கவிழ்ந்து விட்டான்..

இருமாதங்களாய் தன்னவளிடம் பேச மனம் ஆவல் கொண்டாலும், நேரில் அவளின் வெண்டை பிஞ்சு விரல்களை பிடித்து மெல்லிதாய் கடித்து சில பல சில்மிஷங்களுடன் பேசும்பொழுது ஏற்படும் உணர்வு, போனில் அவள் ஒருபக்கமும் அவன் ஒருபக்கமும் பேசும்பொழுது ஏற்படாது என அவன் நினைத்தான்…

Advertisement

Advertisement

அதனால் முதன் முதலில் தன்னவளுடனான தனிமையை எதிர்பார்த்து அவன் காத்திருக்க… மென்பட்டு புடவையில்.. காலையில் அவன் கட்டிய மஞ்சள் கயிருடன், எளிதான நகைகள் மட்டும் அணிந்து.. தலை நிறைய மல்லிப்பூ வைத்து எளிமையில் விழிகளுக்கு இனிமை தந்து வந்தாள் அல்லிமலர்…

“வா அல்லிம்மா.” என தனஞ்ஜெயன் மென்மையாக அவளின் கரம் பிடித்து அழைத்தான்..

Advertisement

அதுவரை ஒருவித தயக்கத்தில் இருந்த பெண்ணவளுக்கு, சட்டென பிறவி குணம் தூக்க, அவனை நிமிர்ந்து பார்த்து.. “எனக்கு அல்லின்னு கூப்பிட்டா பிடிக்காது.. எல்லார் மாதிரி மலர்ன்னு கூப்புடுங்க” என வெடுக்கென்று கூற.. தனஞ்ஜெயனின் புன்னகை அகலமானது…

“ஓஹ்.. ஆனா எனக்கு உன்னை அப்படி கூப்பிடத்தானே பிடிச்சுருக்கு.. அல்லிம்மா” என குழைவாக கூறினான்.. 

“ஹ்ம்ம் என்னமோ ரெண்டு மாசமா இதே பெயரை வச்சு கூப்பிட்ட மாதிரி சொல்றிங்க..” என அவன் இருமாதமாய் போனில் கூட பேசாததை அவள் மறைமுகமாக கூற… அவளின் கோபம் தனஞ்ஜெயனுக்கு புரிந்தது..

“ஹ்ம்ம் அதுக்கு ஒரு காரணம் இருக்கு அல்லிம்மா..” என அவளை பக்கத்தில் அமர்த்தியவன்.. 

“எனக்கு உன்னை மொதல்ல பார்த்தவுடனே புடிச்சுடுச்சு… அதுவும் நீ இந்த குட்டி கண்ணுல நிறையா மை போட்டு பெருசா காமிச்சுருந்தியே அதுல விழுந்தவன் தான் இன்னும் எழல.. ஹ்ம்ம்” என்று பெருமூச்சுடன் கூறியவன்.. தன் அஞ்சனை விழியாளின் விழிகளுக்கு தன் முதல் முத்தத்தை பதித்தான்..

ஏற்கனவே.. தன்னை குறித்த அவன் உணர்வுகளில் சிறிது வியப்படைந்தவள்.. அடுத்து தன் விழிகளை பற்றி கூறியதும் அவனை முறைக்க முயல, அவனோ அதற்க்கு இடம் கொடுக்காது.. ஒற்றை முத்தத்தில் அவளை ஆஃப் செய்தான்…

“அடங்கொக்க மக்கா.. இவன சரியான அம்மா புள்ளன்னு நினைச்சா.. இவன் என்ன இப்படி ரொமான்ஸ் பன்றான்.. கொஞ்ச நேரத்துல நம்மளையே வாயடைக்க வச்சுட்டானே..” என உள்ளுக்குள் கூறிக்கொண்டிருந்தாள்.. அல்லிமலர்… 

“என்னடா அல்லி.. நான் கொஞ்சம் வேகமா போறேனா.. உனக்கு பயமாயிருக்கா..” என அவளின் மென் விரல்களை பிடித்து.. அழுத்தம் கொடுத்தவன்.. தன் மீசை உரச மெல்லிய முத்தம் வைக்க.. அஞ்சனாவின் உடல் ஷாக்கடித்தது போல் ஆனது… கன்னம் காதுகளோ செவ்வல்லி போல சிவக்க.. 

தனஞ்ஜெயன் ”செல்லம்மா.. என்னாச்சுடா.. ஏன் உன் முகம் இப்படி சிவக்குது..” என கொஞ்சமாக முன்னேறி அவளின் ஆப்பிள் நிற கன்னக்கதுப்புகளை மென்மையாக கவ்வ.. அல்லியின் விழிகள் ஒரு வித மயக்கத்தில் மூடிக்கொண்டது..

தனஞ்ஜெயன் மென்மையாய் அவளுடன் முன்னேறிக்கொண்டிருக்க… அஞ்சனா செய்வதறியாது தவித்தாள்.. அவளுக்குள் ஒரு புதுவித உணர்வு பொங்கிக் கொண்டிருந்தது.. தனஞ்ஜெயன் மெல்ல மெல்ல அவளுள் மூழ்கிகொண்டிருக்க.. ஒரு சுழலில் சிக்கிய மனநிலைக்கு ஆளானாள் பெண்ணவள்.. 

“அல்லி பூ ரொம்ப குளிச்சியானதாம், ஆனா என்னோட அல்லிமலர் மேனி எனக்கு கதகதப்பா இருக்கே” என அவள் செவியினுள் மீசை உரசி ரகசியம் பேச, அதன் தாக்கம் தாளாது அவனுடனே ஒண்டினாள்.. 

அல்லிமலர் அவனின் கரங்களுக்குள் மெல்ல மெல்ல மலர்ந்து கொண்டிருந்தாள்.. 

தனக்குள் இவ்வளவு மென்மையா.. தன் பெண்மையின் மென்மையையும் அதன் நாணத்தையும் இன்றுதான் உணர்கிறாள்.. அவனை கைப்பாவையாக மாற்ற வந்தவள்.. அவனின் கைப்பாவையாக மாறிப்போனாள்.. 

நடிநிசி ஆனா பொழுதும் நான்கு கண்களும் உறக்கமில்லாது தங்களுக்குள் சங்கமித்துக் கொண்டிருந்தன.. பூவையை புயலாய் ஆட்கொள்ளமல், அவளின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, மலர் மேனியவளை வீணையாய் மீட்டுகொண்டிருந்தான்.. 

கைவிரல் சங்கமத்தில் வளையல்கள் சிணுங்கியது, கால்களின் சண்டையில் கொழுசொலி தன் ஆதிக்கத்தை காண்பித்து கொண்டிருந்தது. 

செல்ல சிணுங்கல்கள், சிருங்கார பாஷைகள் என புதுமண தம்பதிகளின் இரவு அவர்களுக்கு நெருக்கத்தையும் இனிமையையும் தந்து கொண்டிருந்தது.. 

ஈருடல் ஓருயிராய் கலந்து, களைந்து, வியர்வை முத்துக்கள் அரும்ப, ஒருவரையொருவர் ஈஷிக்கொண்டு படுத்திருந்தனர்.. 

அல்லி தனஞ்ஜெயனின் நெஞ்சத்தில் மஞ்சம் கொண்டு படுத்திருக்க, அவனோ இருக்கரத்தால் அவளை அணைத்து சிகை கோதியவாறு இருந்தான்.. சில சில சில்மிஷ ரகசியங்களுடன், அவர்கள் தூங்குவதற்குள் வைகறை வந்துவிட்டது.. 

********************

தனா.. தனா என்று கதவு தட்டும் சத்தத்தில்.. மெல்ல தன் இமைகளை பிரித்தான் தனஞ்ஜெயன்.

விழி இரண்டும் சிவந்திருக்க, இமைகளோ இன்னும் கொஞ்சநேரம் மூடிக்கொள்ளேன் என கெஞ்சுவது போல் இருந்தது. இவனும் அதற்கு பாவம் பார்த்து விழி மூட முயற்ச்சித்தான். ஆனால் கதவு தட்டும் ஓசையுடன், தன் அக்காமார்களின் குரலும் கேட்கவும் விருட்டென்று எழுந்தான்..

மெல்ல விளக்கை போட்டவன் தன் அருகில் பார்க்க, அங்கு களைந்த நிலவாய் துயில் கொண்டிருந்தாள் அல்லிமலர். அவளின் உடைகள் அனைத்தும் அவளின் அருகே கேட்பாரின்றி கிடக்க, தனஞ்ஜெயனின் இதழ்களில் வெட்கபுன்னகை. 

அதோடு நேற்றைய தன் செயல்களில் அஞ்சன பூசிய மலர் விழிகள் காட்டிய உணர்ச்சிகள், அப்பப்பா.. 

மீண்டும் அதனைக் காண அவன் செய்தது எல்லாம் என அதனை நினைத்தவுடனே அவன் தேகம் கொதிப்படைந்தது. மீண்டும் அவள் மேல் படர முயற்சித்தவனை, “தனா எழுதுந்திருடா” என்ற கத்தல் கலைக்கவும், மனதேயில்லாது.. தன்னவளை எழுப்பினான்.

அல்லி, அல்லி, அல்லிக்குட்டி எழுந்துக்கோடா.. என மெலிதாய் எழுப்ப.. 

ஹுஹும்.. அவளிடத்தில் மெல்லிய முனங்கல் கூட இல்லை.. பாவம் தனஞ்ஜெயனுக்கு அவளைப் பற்றிதெரியவில்லை.. இடியே விழுந்தாலும் அவள் உறக்கம் சிறிதும் கலையாது. அவளாக எழுந்தால் தான் உண்டு.

இது தெரியாத தனா “அச்சோ பாவம் ரொம்ப டையர்டா இருக்கா போல. இப்போதானே தூங்குனா. சரி நாமலே போய் திறப்போம்.” என யோசித்து, அவளுக்கு போர்வையை நன்றாக போர்த்தியவன்.. உடையணிந்து கொண்டு மெல்லிய தயக்கமும் வெட்கமுமாய் கதவைத் திறந்தான்..

வெளியில் நின்ற இவனின் அக்காமார் கஜா, சந்தானம் இவனைக் கண்டு முழிக்க, தான்யாவோ சிரிக்க ஆரம்பித்தாள்.

“அடேய் உன் பொண்டாட்டி வெட்கப்பட்டு வந்து கதவை திறப்பான்னு பார்த்தா? நீ இப்படி வந்து நிற்கிற, எங்கடா மலர்?” என கேட்டாள்.

“அக்கா, அவ பாத்ரூம்ல இருக்கா” என்றான். மனைவியை விட்டுக்கொடுக்காது..

“ஓஹோ.. சரி அவளை சீக்கிரம் குளிச்சிட்டு தயாராக சொல்லு.. அவதான் வாசல் பெருக்கி கோலம் போடணும்.. அப்பொறம் பால் காய்ச்சனும்.. ஆறுமணிக்குள்ள போடணும்டா..” என எச்சரித்து விட்டு செல்ல.. தனஞ்ஜெயன் வேகமாக தன்னவளை எழுப்பினான்..

“அல்லிம்மா, எழுந்திரு. நேரமாகிடுச்சு. அக்கா எல்லாம் எழுந்துட்டாங்க..” என அவள் கன்னம் வருடி, தலைகோதி, கரத்தை உலுக்கி என அவனும் பல வழிகளில் முயற்சிக்கிறான் பலன் தான் இல்லை..

நேரம் வேறு சென்று கொண்டிருந்தது. தான்யா வேறு அவனுக்கு இருமுறை போனில் அழைத்து கூறிவிட்டாள். என்ன செய்வது என புரியாமல் அவன் தலையில் கைவைத்த நேரம், கார்த்திக் போன் செய்தான்.. 

“டேய் மாப்ள என்னடா ஆச்சு தங்கச்சி எழுந்திருச்சுட்டா, இல்லையா?” என கேட்டான் கார்த்திக்.. 

“இல்ல மாமா அல்லி இன்னும் எழுந்திருக்கவே இல்ல, நானும் எழுப்பி பார்த்துவிட்டேன், ஆனா அவ தூங்கிட்டு தான் இருக்கா” என தன் மாமனிடம் உண்மையை கூறினான்.. 

“அந்த பிள்ளைக்கு உடம்பு ஏதும் சரி இல்லையாடா? ஜுரம் எதுவும் அடிக்குதானு பாரு?” என அவன் கேட்டதும், தனஞ்ஜெயன் ஒரு நிமிடம் பதறி அவள் தலையில் கை வைத்து பார்த்தான். 

உடல் கொஞ்சம் சூடாகத்தான் இருந்தது.. ‘ஆமா மாமா கொஞ்சம் ஜொரம் அடிக்குது” என அவன் பதறி சொல்ல..

“சரி விடு அந்த பிள்ளைக்கு நேத்திய அலைச்சல் எல்லாம் சேர்ந்து ஜொரம் வந்திருக்கும் போல, உன் அக்கா கிட்ட சொல்லி நானே எல்லாத்தையும் சமாளிச்சுக்கிறேன், அந்த பிள்ளைய தொந்தரவு பண்ணாம நீயும் கொஞ்ச நேரம் தூங்கு. நான் போன் பண்றேன். அதுக்கு அப்புறம் ரெண்டு பேரும் வாங்க” என கார்த்திக் போனை வைத்தான்.. 

அப்போதுதான் சற்று சீராக மூச்சு விட்ட தனஞ்ஜெயன் அல்லியை அணைத்தவாறு மீண்டும் உறங்கினான்.. 

**********************

கீழே அல்லி இன்னும் வராமல் இருப்பதைக் கண்டு சுந்தராம்பாள் கோபமாக இருக்க, கஜலட்சுமியும் சந்தானலட்சுமியும் அமைதியாக அவருடன் நின்றிருந்தார்கள்.. 

“ஆறு மணிக்குள்ள வாச தெளிச்சு, கோலம் போட்டு, பால் காய்ச்சணும்ன்னு அவ கிட்ட சொன்னிங்க தானே?” என தன் மகள்களை பார்த்து, கோபமாக கேட்டார் சுந்தராம்பாள்..

“நாங்க அவளை பார்க்கலம்மா. தனா தான் கதவை திறந்தான். அவ குளிச்சிட்டு இருக்கான்னு சொன்னான். அதுனால அவன்கிட்ட சொல்லிட்டு வந்தோம்” என கஜலட்சுமி சொன்னார்.. 

அதில் மேலும் கோபமான சுந்தராம்பாள், தானே அவர்கள் அறைக்கு செல்லலாம் என கிளம்பினார்.. 

அப்போது அங்கு வந்த தான்யா, “அம்மா நான் இப்பதான் அவனுக்கு போன் பண்ணி கேட்டேன். மலருக்கு உடம்பு சரியில்லையாம், குளிச்சுட்டு வந்தவ அப்படியே தலைய புடிச்சுகிட்டு சுருண்டு படுத்துருக்காளாம், உடம்பு கொதிக்குதுன்னு சொன்னான். நான் அவங்கள மேலேயே இருக்க சொல்லிட்டேன்.” என தான்யா சொல்ல, சுந்தராம்பாள் அதை நம்புவதாக இல்லை.. 

“ஹக்கும், நல்லா ஜொரம் வந்துச்சு, இதெல்லாம் ஒரு காரணமா, அப்படியென்ன அவளுக்கு உடம்பு கொதிக்குதுன்னு நான் பாக்குறேன்” என அவர் கோபமாக செல்லப் பார்க்க, தான்யா தடுத்தாள்.. 

“அம்மா, வீடு முழுக்க சொந்தக்காரங்க இருக்கிறப்ப என்ன காரியம் பண்ண பாக்குற?, அதான் தனா சொல்றான்ல அந்த பிள்ளைக்கு உடம்பு முடியலன்னு, அவன் நம்மகிட்ட பொய்யா சொல்ல போறான்? என தான்யா பல்லை கடித்து, தன் அன்னையை முறைத்தவாறு கேட்க, சுந்தராம்பாள் அமைதியானார்.. 

தனஞ்ஜெயன் இதுவரை தன் குடும்பத்தினரிடம் பொய் சொன்னது இல்லைதான்.. அதில் சற்று சமாதானம் அடைந்தாலும், மருமகளாய் வந்தவள் முதல் நாளிலேயே தன் பேச்சைக் கேட்காமல் இருப்பதா? என அவரின் மாமியார் மனம் கோபமாக எண்ணியது.. 

“அதெல்லாம் சரிடி ஆனா முறைனு ஒன்னு இருக்குல்ல” என இழுத்தார் கஜலட்சுமி.. 

“அய்யோ அக்கா, இப்போ இந்த காலத்துல யாரு இந்த முறையெல்லாம் பாத்துகிட்டு இருக்குறா, ஏன் நம்மதுலயே சொல்லுங்களேன். என் மாமியார் வீட்டுல நான் ஒன்பது மணிக்கு மேல தான் ரூமவிட்டே வந்தேன்.” என தான்யா சொல்ல

“உன் மாமியார் வீட்டு பெருமையெல்லாம் அங்கேயே வச்சுக்கோ. இங்க நான் சொல்றத தான் கேட்கணும். சுந்தராம்பா வீட்டு மருமகள் இப்படித்தான் இருக்கணும்னு ஒரு வரைமுறை இருக்கு. இன்னைக்கு ஒரு நாள் விடுறேன். ஆனா நாளைல இருந்து அவதான் இதெல்லாம் பாக்கணும்” என முறைப்பாக சொல்லிவிட்டு சென்றார்.. 

சந்தானலட்சுமியும் கஜாவும் எதுவும் பேசாது அம்மாவின் பின்னே சென்றுவிட்டனர். 

ஷப்பா என பெருமூச்சை இழுத்து விட்ட தான்யா தன் அறைக்குள் நுழைய அங்கு கார்த்திக் சிரிப்புடன் அமர்ந்திருந்தான்.. 

“சிரிக்காதீங்க கார்த்தி, மொதல்ல அந்த தண்ணிய எடுங்க” என ஒரு முழு வாட்டர் பாட்டிலை காலி செய்தாள்…

“இந்த அம்மாவோட முடியல, இன்னைக்கே அந்த பொண்ண இந்த வேலையெல்லாம் செய்ய சொல்லணுமா? மலர் அவங்கள பத்தி என்ன நினைப்பா? என புலம்பினாள் தான்யா..

“அத்த இவ்வளவு நாள் தனி ராஜ்ஜியம் பார்த்தாங்க, இனி அப்படி இருக்க முடியாதுன்னு போகப் போக புரிஞ்சுப்பாங்க, அப்பொறம் எல்லாம் சரியாகிடும்” என கார்த்திக் சொல்ல, தான்யா முறைத்தாள்..

“அப்படியென்ன எங்கம்மா ராஜ்ஜியம் கட்டுனத நீங்க பாத்திங்க, அவங்களோட ஒவ்வொரு முடிவும் இந்த குடும்ப நலனுக்காக தான் இருக்கும். என்ன அவங்களுக்கு பிடிச்சது மட்டும் நடக்கணும்னு, ஒரு பிடிவாதமும் அதிகாரமும் அவங்ககிட்ட இருக்கும் அவ்வளவுதான், மத்தபடி எங்கம்மா சொக்க தங்கம்.” என தான்யா சொல்ல கார்த்திக் அமைதியானான்.. 

“இவ மட்டும் அவங்கம்மாவ என்ன வேணா பேசலாம். ஆனா நாம அவுங்கள பத்தி ஒரு வார்த்தை சொன்னா போதும், சட்டுன்னு மாறிடுவா” என உள்ளுக்குள் புலம்பினான் பாவப்பட்ட கணவன்.. 

விருந்தினர்கள் அனைவரும் ஒவ்வொருவராய் எழுந்து வர ஆரம்பித்தனர். அவர்களுக்கு காபி டீ கொடுப்பது, காலை சமையலை மேற்பார்வை பார்ப்பது என சுந்தராம்பாள் சுற்றிக்கொண்டாலும், அவர் கண்கள் அடிக்கடி மாடியையும் கடிகாரத்தையும் பார்த்து கொண்டிருந்தது.. 

*********************

அல்லியும் தனாவும் ஒருவரையொருவர் அணைத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.. 

அப்பொழுது,.. 

வா வா டியரு பிரதரு

பார்த்தா செதறும் சுகரு

அண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும்

அதுவே தனி பவரு

எங்க அண்ணன் எங்க அண்ணன்

அன்ப அள்ளித்தெளிக்கிறதில் மன்னன்

தங்கைப்பாசத்தில் அவனைத்தான்

அடிச்சிக்க ஊருல

ஆளே கிடையாதே

எங்க அண்ணன் எங்க அண்ணன்..  

என பாடல் ஒலி கேட்கவும், சட்டென அல்லியின் மலர்விழி திறந்தது.. 

அவள் தனஞ்ஜெயனின் கரத்திலிருந்து மெல்ல நழுவி தன் போனை எடுத்து காதில் வைத்தாள்.. 

அண்ணே என சோம்பலாக அவள் அழைக்க, 

மணிமாறன் சிரிப்புடன் “என்னத்தா இன்னும் எழலையா?”

“இல்லண்ணே” என கண்ணை கசக்கியவள், மணி என்னாகுது என போனை பார்த்தவள் அதிர்ந்து போனாள்.. 

“அண்ணே எதுக்குண்ணே என்னைய விடியக் காத்தால எழுப்பி விட்ருக்க” என ஏழு மணியை பார்த்து அலறியவாரு கேட்டாள்.. 

“சரியா போச்சு உனக்கு ஏழு மணி விடியக்காலமா அல்லி. ஒழுங்கா சீக்கிரம் எந்துச்சு குளிச்சுட்டு நல்ல ஒரு புடவை உடுத்திகிட்டு கீழ போ” என மஹா மிரட்டலாக சொன்னாள்.. 

மதினி என அல்லி சிணுங்க,

“ராணியம்மா மதனி காரணம் இல்லாம சொல்ல மாட்டா இல்ல, அதனால ரிசப்ஷன் வரைக்கும் அவ சொல்றது மாதிரி இருடா தங்கப்புள்ள” என மணிமாறன் கொஞ்சலாக சொன்னான்.. 

அல்லி சிணுங்களுடன் “சரி ஆனா ஒருவாரம் வரைக்கும்தேன்” என சொல்லிவிட்டு போனை வைத்தவள், தங்கு தங்குவென குளியறைக்குள் நுழைந்தாள்.. 

அரைமணிநேரத்திலேயே நேவிப்ளூகலர் சில்க் சாரியில், கரத்தில் பொன் வளையல்களுடன், பெரிய டாலர் செயின், மற்றும் கழுத்தை ஒட்டிய ரோஸ் நிற கற்கள் வைத்த மாங்காய் நெக்லசும் அணிந்து, நெற்றியில் வட்ட அரக்குபொட்டு, உச்சியில் குங்குமம் என தன்னை அலங்கரித்து கண்ணாடியில் பார்த்தவளுக்கு தன் கண்களையே எடுக்க முடியவில்லை.. 

“அடியே அல்லி வர வர உம்ம அழகு கூடிக்கிட்டே போகுதுடி” என கண்ணாடியில் தன் பிம்பத்தை பார்த்தவாரு, தனக்குத்தானே நெட்டிமுறித்துக் கொண்டாள்.. 

“சரி கீழ போவோம் மதினி வேற சொல்லிருக்காக” என சலித்தவாறு திரும்பியவள், ஆழ்ந்த சயனத்தில் இருந்த தனஞ்ஜெயனைக் கண்டு முகம் சிவந்து போனாள்.. 

“அடே அம்மாபுள்ளை பார்க்க பதுசா இருந்துகிட்டு என்னென்ன வேலை பார்த்து வச்சிருக்க, என்னையே வெட்கப்பட வச்சிட்ட இல்லடா, உனக்கு இருக்குடி” என உள்ளுக்குள் அவனை மெலிதாக கடிந்தவள், சிரிப்புடன் அவனின் சிகையை கோதிவிட்டாள். அவனின் கருமணிகள் இமைகளுக்குள் அசைவதைக் கண்டு சட்டென அங்கிருந்து விரைந்து விட்டாள்.. இப்பொழுது அவளால் அவனை நேருக்கு நேர் காண முடியாது. சிறிதாவது அவகாசம் வேண்டும்..

தன்னவனை நினைத்து வெட்க சிரிப்புடன் கீழே வந்தவள், முதலில் அங்கு கண்டது இறுக்கமான முகத்துடன் நின்றிருந்த மாமியாரையும் நாத்தனாமார்களையும்தான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!