Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை

மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை – 15

“என்ன மாமா இங்கேயே நிக்குறீங்க உள்ள வாங்க” என்றான் ராஜகுமாரன் மாணிக்கத்திடம்.

 

 



Advertisement

“அதெல்லாம் எதுக்கு மாப்ள நாங்க இங்கேயே இருக்கோம்” என்று தெருவிலே நின்றான் மாணிக்கம், ராக்காயி கையைப் பிசைந்துகொண்டு நின்றார் மகளிடம் பேசவும் முடியவில்லை அருகில் நெருங்கவும் முடியவில்லை.

 

Advertisement

 

Advertisement

கறி விருந்துக்கு வந்துவிட்டு இப்படி வாசலிலே நின்றால் எப்படி யார்தான் சொல்லுவது இவரிடம் என்று தடுமாறி நின்றார் அவர், ராஜலட்சுமி வெறும் தாலிக்கொடி மட்டுமே போட்டிருந்தாள் வேறு எந்த நகையும் இல்லை அதுவேறு அப்படியொரு எரிச்சலையும் வருத்தத்தையும் கொடுத்தது.

 

Advertisement

 

‘என் மவளுக்கு எவ்ளோ நகை போட்டேன் இப்படி ஒண்ணுமே இல்லாம வந்து நிக்குறாளே’ என்று ஆவேசம் கொள்ள… “என்ன அத்த மவள உத்து உத்து பாக்குறீங்க என்ன சங்கதி… எனக்குத் தெரியாம என் பொண்டாட்டிக்கு ஏதும் விஷேஷம் இருக்கோ” என்றான் மனைவியைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே.

 

 

பேசக் கூடாது, அவனிடம் வாய் விடக் கூடாது என்று மூளைக்கு புரிகிறது ராக்காயிக்கு என்றாலும் மகள் நிற்கும் கோலம் அவர் வாயைக் கிளறியது.

 

 

“பாதி நகைதானே நீங்கச் சொன்னமாதிரி வந்த நகை மீதி பாதி நான் கஷ்டப்பட்டு சம்பாரிச்சது அதைக்கூடவா என் மவளுக்கு போட உரிமையில்லை இப்படி கூட்டிட்டு வந்திருக்கீங்க” என்றார் ஆற்றமாட்டாமல்.

 

 

“பார்ரா… ஹ்ம்ம்… அப்போ அந்தப் புள்ள?” என்றான் கனகாம்பரம் பக்கம் பார்வை பதித்து, அவளும் அப்படிதான் வந்து நின்றிருந்தாள் கழுத்தில் தாலிக்கொடி, காதில் ஜிமிக்கி, கைகளில் கூடக் கண்ணாடி வளவிகள் மட்டுமே.

 

 

“பாதி நகையா அடக்குவெச்ச நகையைக் குடுத்து ஏமாத்தின உங்களுக்கே உங்க மக இப்படி நிக்குறது வருத்தமா இருக்கே அப்போ அவங்களுக்கு” என்றான் செல்லியம்மா பழனிச்சாமியை காண்பித்து, தம்பதிகள் முகத்தில் மித மிஞ்சிய வருத்தம் மகளை இப்படி பார்த்து.

 

 

“அவர் உங்களைவிட நேர்மையா உழைச்சு பொண்ணுங்களுக்கு நகை வாங்கி போட்டார் அதைத்தான் உங்க மவ உரசி பாக்க சொன்னா நீங்களும் உரசி பாத்தீங்க”.

 

 

 

“அப்போ அவங்களுக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கும், கறி விருந்தே அவங்களுக்குதான்  அந்தப் புள்ளயே அப்படி வந்து நிக்குது அதெல்லாம் உங்களுக்குப் பெரிய விஷயமா தெரியல இவ போட்டுட்டு வராததுதான் உங்களுக்கு இப்போ தொண்டையை அடைக்குதா” என்றான் எகிறிக்கொண்டு.

 

 

ராக்காயி எங்கோ பார்த்துக்கொண்டு நிற்க “மாமோவ்… வாயா எப்போ பாரு பஞ்சாயத்தை கூட்டிட்டு” என்று மாணிக்கத்தின் கையைப் பிடித்து இழுத்தான் ராஜகுமாரன்.

 

 

“விடு மாப்ள நான் வரமாட்டேன் இங்க சாப்பிடமாட்டேன் விருந்து உனக்கு அதனாலதான் வந்தேன்” என்றான்.

 

 

“செலவே நம்மளதுதான் மாமா, என் காசுல நான் குடுக்குற விருந்து அதுல சாப்பிட மாட்டிய நீ” என்றான் ராஜா.

 

 

“ஏண்டி உன் அப்பன் ஆத்தா அதைக்கூட செய்யமாட்டாங்களா” என்றான்  மாணிக்கம் மனைவியிடம் கோபத்தோடு.

 

 

 

“அட விடு மாமா அதுக்கு என்ன தெரியும் நீ வா” என்றவன் “அக்கா நீயும் வா, நீங்களும் வாங்க அத்த” என்றான் மாணிக்கத்தின் அன்னையிடமும்.

 

 

“ஏதே… உன் அக்காவுக்கு ஒன்னும் தெரியாதா கோழி கூவும்போது  போனை எடுத்தான்னா அது கூவி முடிக்கறதுக்குள்ள ரெண்டு ஊருக்கே சிண்டு முடிஞ்சு விட்டுருவா” என்றவன்.

 

 

“வாடி வந்து கொட்டிக்கோ என் மாப்ள போடுற சாப்பாடு அதனாலதான் உள்ள வரேன் இல்ல விருந்து முடியறவரைக்கும் வெளிலே  நின்னு வேடிக்கை தான் பாத்திருக்கணும்” என்றவன் மாமனாரை அலட்சியமாகப் பார்த்துச் சென்றான்.

 

 

 

செவ்வந்திக்கு தங்கையைப் பார்த்ததும் அத்தனை சந்தோசம் “நல்லா இருக்கியா நல்லா இருக்கியா” என்று அதையே கேட்டுக்கொண்டிருந்தாள்.

 

 

செவ்வந்தி நகைகள் அனைத்தையும் போட்டிருந்தாள் விருந்து அல்லவா ஊரே திரண்டு வந்துவிடும் நன்றாகப் புடவை கட்டி நகை போட்டுக்கொள்ள சொல்லியிருந்தார் ராக்காயி.

 

 

“கனகம் உன் நகையெல்லாம் என்கிட்டத்தான் இருக்கு எடுத்துட்டு வரேன் போட்டுக்க” என்றாள் செவ்வந்தி.

 

 

“இல்லக்கா வேண்டாம் அத்தையே அதை என் கைல கொடுக்கட்டும் அதுவரைக்கும் போடமாட்டேன், இப்போ நகை இல்லனா என்ன என் புருஷனை மிஞ்சித்தானே என்கிட்டே வரணும் யாரா இருந்தாலும், அப்படி யாரும் என்கிட்டே கேக்கமாட்டாங்க அப்படியே கேட்டாலும் அவரே பதில் சொல்லிப்பாரு” என்றாள் கணவனை ரசனையாகப் பார்த்துக்கொண்டே.

 

 

ராஜகுமாரனின் விழிகள் எங்கிருந்தாலும் மனைவியிலும் ஒரு நொடி பதிந்தே மீண்டது, அவளிடம் யார் பேசுகிறார்கள் அவள் முகம் மாறுகிறதா என்று நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான்.

 

 

செல்லியம்மாவுக்கும் வருத்தம்தான் மகளைப் பார்த்து என்றாலும் ஒன்றும் காண்பித்துக்கொள்ளவில்லை இப்பொழுது ஏதும் கேட்கப் போய் அது வேறு ஏதேனும் பிரச்னையில் சென்று முடிந்துவிடுமோ என்று அமைதியாக நின்றுவிட்டார்.

 

 

அங்கு ராஜகுமாரனும் கனகாம்பரமுமே பேசுபொருள் “ராக்காயியையே அந்தப் பொண்ணு பேசிடுச்சாம்”.

 

 

“வந்த வேகத்திலேயே அம்மாகிட்டயிருந்து பிள்ளையைப் பிரிச்சு கூட்டிட்டு போய்ட்டா பாரு”.

 

 

“இப்படி பட்ட மாமியாரையே ஏச்சுப்புட்டாளே அப்போ அவ எப்படிப்பட்டவளா இருப்பா”.

 

 

“அதைச் சொல்லு எல்லாம் வளர்ப்பை சொல்லணும் பொட்டப்பிள்ளையை அடக்க ஒடுக்கமா வளக்கணும் இல்லனா இப்படித்தான்”.

 

 

“அப்படியும் சொல்லமுடியாதே அதே வீட்ல இருந்துதானே பெரிய மருமவளும் வந்திருக்கு அந்தப் பொண்ணு அனுசரிச்சு போகலையா…”.

 

 

“அதானே இதுக்கு துடுக்குத்தனம் ஜாஸ்த்தி வீட்டுக்கு ஒண்ணு இப்போல்லாம் இப்படி இருக்குப்பா” என்று தங்களுக்குள்ளே பட்டிமன்றம் நடத்தினர்.

 

 

பழனிச்சாமியும் செல்லியம்மாவும் அனைத்தையும் கேட்டே நின்றனர், இதற்கெல்லாம் அவசியம் இருந்திருக்காது கொஞ்சம் வாயை அடக்கியிருந்தால் போதும் என்பதுதான் இப்பொழுதும் அவர்களின் எண்ணம்.

 

 

அவள் அன்று பேசாமல் போயிருந்தால் எந்தப் பிரச்சனையும் வந்திருக்காது இன்று தனிக்குடித்தனம் சென்றிருக்க வேண்டாம் ஊர் வாயில் இப்படி விழுந்திருக்க வேண்டாம், காலம் போனாலும் மகள்மேல் விழுந்த இந்தப் பழி போகாது ஊருக்குள் இப்படி சுற்றிக்கொண்டிருக்கும்.

 

 

 

மக்கள் இதை மறந்துவிட்டு அடுத்த வேலை பார்க்கச் சென்றுவிடுவார்கள்  என்று நாம் என்ன முடியாது  நாளையே ஏதெனும் சிறிய பிரச்சனையென்றாலும் மகளை உவமை படுத்தி பேசுவார்கள் ஆனால் இதை எதையுமே வாய்விட்டு அவர்களால் சொல்ல முடியவில்லை.

 

 

என் பொண்டாட்டியை எவண்டா பேசுறீங்க என்று வந்துவிடுவாரே மாப்பிளை பிறகு அவரை மலையிறக்க வேண்டும் ஆகையாலே அமைதியாக நின்றுவிட்டனர்.

 

 

ராக்காயி வாயே திறக்கவில்லை வீடுவரை வந்த மகள் வயிறார உண்டு செல்லட்டும் என்று அமைதியாகவே நின்றுவிட்டார், கார்த்தி அவன் கூட்டாளிகளுடன் சேர்ந்துகொண்டான் மகேஷ் மட்டும் ராஜகுமாரனின் பின்னே சுற்றிக்கொண்டிருந்தான்.

 

 

“என்ன மாப்ள வீட்டுக்கு வரது தானே அக்காவும் மாமாவும் தனியே போய்ட்டாங்களே வீடு வசதியா இருக்கா அக்கா நல்ல இருக்காளா இதெல்லாம் வந்து பாக்க வேண்டாமா, ஞாயித்து கிழமை வீட்டுக்கு வரணும் சரியா” என்றான் ராஜா.

 

 

“சரிங்க மாமா” என்றவன் அவனுடனே ஒட்டிக்கொண்டு நிற்க.

 

 

“ஏண்டாப்பா என் மாப்ள உன் அக்காளை கட்டினானா உன்னைய கட்டினானா பொண்டாட்டி  மாதிரி அவனையே ஒட்டிக்கிட்டு திரியிற கொஞ்சம் உன் அக்காளுக்கு எடம் குடுப்பா” என்றான் மாணிக்கம்.

 

 

மகேஷ் சங்கடமாக ராஜாவைப் பார்க்க “அட நீவேற சும்மா இரு மாமா நானே ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுனு ஒரே ஒரு மச்சானை வெச்சிருக்கேன் எங்களைப் பிரிக்கப் பாக்குறியா” என்றான் மகேஷின் தோளில் கையிட்டு அணைத்துக்கொண்டு.

 

 

“நடத்துங்கடா நடத்துங்க காறிசோறுக்கு வந்துட்டு எண்ணத்தையெல்லாம் பாக்க வேண்டியிருக்கு” என்று புலம்பிக்கொண்டு சென்றான் மாணிக்கம்.

 

 

ஊரும் உறவும் வயிறார உண்டு சென்றுவிட்ட பிறகு வீட்டு ஆட்கள் மட்டுமே எல்லோரும் ஒன்றாக அமர்ந்துகொண்டனர், பேச்சுக்களே இல்லை மாணிக்கமும் குடும்பமும் ராஜகுமாரனுடன் அமர்ந்துகொள்ள செந்திலும் அவனின் குடும்பமும் கூட இவர்களுடன் அமர்ந்துகொண்டனர்.

 

 

எதிர்பக்கம் ராக்காயி கனகசபை யோகன் அமர்ந்திருக்க செவ்வந்தி கணவனின் அருகில் சென்று அமர்ந்தாள் செல்லியம்மாவும் பழனிச்சாமியும் தடுமாறி நின்றனர் எந்தப் பக்கம் அமர என்று தெரியாமல்.

 

 

இந்தப் பக்கம் அமர்ந்தால் சின்ன மாப்பிளை சங்கடப்படுவாரோ என்று வருத்தமாக இருந்தது, அதுவே ராஜகுமாரின் பக்கம் அமர்ந்தாள் சம்மந்தியம்மா கோபித்துக்கொள்வார்களோ என்று பயமாகவும் இருந்தது.

 

 

இதைப்பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் மகேஷ் மாமனின் பக்கத்தில் அமர்ந்துகொண்டான் ஒரு பக்கம் மனைவியும் மறுபக்கம் மச்சினனும் அமர்ந்திருக்க மாமியார் மாமனாரை பார்த்த ராஜகுமாரன்.

 

 

“என்ன மாமா எதுக்கு இவ்ளோ யோசனை உங்க சம்மந்தி பக்கத்துல உக்காந்து சாப்பிடுங்க” என்றான் புன்னகையோடு.

 

 

அபோழுதும் அவர் தயங்க “மாமா நீங்க என்னைய மட்டுமே நம்பி உங்க பொண்ண கொடுக்கல உங்க நம்பிக்கை மொதல்ல அங்கயிருந்துதான் ஆரம்பிச்சுது, எனக்கும் என்னைப் பெத்தவங்களுக்கும் ஆயிரம் இருக்கும் அதெல்லாம் நீங்க மனசுக்கு எடுக்காதீங்க சந்தோஷமா போய் உக்காருங்க” என்றான் அதன் பிறகே அவர்கள் முகம் தெளிந்தது கனகசபையின் அருகில் பழனிச்சாமி அமர்ந்துகொள்ள அவரின் அருகில் செல்லியம்மாவும் அமர்ந்துகொண்டார்.

 

 

கனகசபை மகனைத்தான் பார்த்திருந்தார் அன்று அவன் பேசியது இன்றும் உள்ளுக்குள் குடைந்தது, எதுவுமே செய்யமுடியாமல் இப்படி ஒன்றுக்குமே உதவாமல் கிடக்குறோமே என்று பல வருடங்களுக்குப் பிறகு அவர் மனது கேள்விகேட்டது.

 

 

உணவே இறங்கவில்லை விருந்தைகூட மகன்களுக்காகத் தன்னால் செய்யமுடியவில்லையே, மருமகனின் வார்த்தையும் மனதை சுட்டது ராஜகுமாரன் விழிகள் தந்தையின் தடுமாற்றத்தை பார்த்தது அவர் உண்ணமுடியாமல் தவித்திருக்க கனகம் கணவனின் கையைப் பிடித்தாள்.

 

 

அவன் திரும்பிப் பார்க்க “மாமா என்னவோ போல இருக்காரு போய்ப் பேசுங்க” என்றாள் மெல்ல, அவனும் எழுந்து தந்தையின் அருகில் சென்றவன் இன்னும் கொஞ்சம் குழம்பை அவர் இலையில் ஊற்றிக்கொண்டே “என்னப்பா” என்றான் தன்மையாக.

 

 

“ஒண்ணுமில்லப்பா” என்றவர் குரல் கூடக் கொஞ்சம் கலங்கியிருந்தது.

 

 

“அன்னைக்கு ஏதோ கோபம் பேசிட்டேன் அதையெல்லாம் மறந்துடுங்க அடிச்சாலும் பிடிச்சாலும் உங்க எல்லார்கூடவும்தான் எங்கயும் போகமாட்டேன், கொஞ்ச நாள் தனியா இருக்கேன் அவ்ளோதான்”.

 

 

“அப்படிலாம் உங்களையும் உங்க பொண்டாட்டியையும் நிம்மதியா இருக்க விடமாட்டேன், தனிக்குடித்தனம் நடத்தி என் சபதத்துல சீக்கிரம் ஜெயிக்கணும்” என்றான் தாயை பார்த்துக்கொண்டே.

 

 

முகத்தை வெட்டிக்கொண்ட ராக்காயி கறிசோறை பெரிய உருளைகளாக உள்ளே தள்ளிக்கொண்டிருந்தார் “அங்க பாத்தீங்களா உங்க பொண்டாட்டிய புள்ள கோவிச்சிட்டு போய்ட்டானேன்னு ஏதாவது வருத்தமிருக்கா,  அங்கபாருங்க உங்க மூத்த பிள்ளையை நாளைக்கும் சேத்து இன்னைக்கே சாப்பிடுறான்,  சாப்பிடுங்கப்பா” என்க அதன் பிறகே  அவரால் கொஞ்சமேனும் உண்ண முடிந்தது.

 

 

 

விருந்தெல்லாம் முடிந்து பாக்கியை செட்டில் செய்தான் ராஜகுமாரன் அனைவரும் அப்படியே விடைபெற்றுச் சென்றுவிட்டனர் செவ்வந்தி ஏக்கமாகத் தங்கையைப் பார்த்துநின்றாள்,  மாமியார் முன் பேசவும் பயமாக இருந்ததது.

 

 

வந்ததிலிருந்து யோகன் கனகத்திடம் பேசவேயில்லை கனகம் அவளாகவே சென்று பேசினாள் அக்காளின் கணவன்… அதுமட்டுமா கணவனின் அண்ணன் அல்லவா.

 

 

“நல்லா இருக்கீங்களா மாமா” என்று அவள் நலம் விசாரிக்க “ஹ்ம்ம் ஹ்ம்ம்” என்றவன் முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றுவிட்டான் ராஜகுமாரன் பார்த்திருந்தான் ஒன்றும் சொல்லவில்லை, கனகம் அதன்பிறகு யோகனிடம் பேசவில்லை.

 

 

மாமனாரிடமும் பேசினாள் ஆனால் மாமியாரிடம் என்ன பேசவென்று தெரியவில்லை “அத்த” என்றவள் அவரின் அருகில் செல்ல முந்தியை உதறி இடுப்பில் சொருகிக்கொண்டவர் விறுவிறுவென்று நடந்துவிட்டார்.

 

 

அவளை அணைத்துக்கொண்ட ராஜகுமாரன் “விடு பாத்துக்கலாம்… போதும் நீ எல்லார்க்கும் மரியாதையை குடுத்துட்ட அதை அவங்களுக்கு காப்பாத்திக்க தெரியல இனிமே அவங்களா வந்தா வரட்டும்” என்றுவிட்டான்.

 

 

 

செல்லியம்மாவும் பழனிச்சாமியும் சொல்லிக்கொண்டு புறப்பட்டனர், மாணிக்கமும் குடும்பத்தோடு கிளம்பிவிட்டான் ராஜகுமாரன் கனகத்தை அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.

 

 

வீட்டிற்கு செல்லாமல் அவன் வேறு வழி செல்ல “வீட்டுக்குப் போகலையா” என்றாள் அவள்.

 

 

சாப்பிட்டது புல்லா இருக்கு கொஞ்சம் நேரம் அப்படியே சுத்திட்டு போலாம் என்றவன் நேரே போன் கடைக்குச் சென்றான் சிறிய போன் ஒன்றை அவளுக்கு வாங்கிக்கொடுத்துவிட்டான் அவ்வளவு சந்தோசம் கனகத்திற்கு.

 

 

காலை விருந்துக்கு வைத்துக்கொண்டு சென்ற மல்லிப்பூ வாடி விட்டிருக்க இரண்டு முழம் வாங்கிக்கொடுத்தான்,  கொஞ்சம் நேரம் அப்படியே  சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்தனர்.

 

 

இன்றைய வேலை, அசதி ஒன்றும் அவனைப் பாதிக்கவில்லை வாங்கிக்கொடுத்த பூ உதிர்ந்து மஞ்சத்தை அலங்கரிக்கும் வரைக்கும் அவன் காதல் மனைவி அயர்ந்து போகும்வரைக்கும் அவளைக் கொண்டாடி தீர்த்தான் திண்டாட வைத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!