Skip to content
Post Views: 3,258
அத்தியாயம் 2
வெற்றிவேல் செழியன் உறவுகளும் நட்புக்களும் சூழ்ந்திருந்த போது காட்டிய கவனிப்பை, அவனின் தொழில் முறை மேலதிகாரிகளின் வரவின் போது மட்டும் நாசுக்கான அறிமுகத்தோடு அவர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்ததை கண்ட கனிகா,
‘அதானே பாத்தேன்..?! என்னடா கஞ்சி சட்டை நம்ம துவைக்காமலே கந்தலாகிடுச்சோன்னு யோசிச்சேன்.
பயபுள்ள எப்பவும் போல தான் இருக்கு. ஏதோ நம்ம சொல்லி வச்ச பொய்யால இவ்வளவு தூரம் நம்மள பாக்குது பக்கி.
Advertisement
இல்ல.. இவங்கள சரி கட்டி கல்யாணம் வரை வந்திருக்க முடியுமா..? நோ ச்சான்ஸ்..!’ என மனதோடு கடுப்பாக நினைத்தவள்,
அந்த கடுப்பு சிறிதும் முகத்தில் பிரதிபலித்து விடாதவாறு வந்திருந்தவர்களிடம் இன்முகமாகவே பேசி வழியனுப்பினாள்.
‘இவரு தான் இப்படி இருக்காருன்னு பாத்தா.. வர்றவங்க பூராவும் தனியா வர்றாங்க.
Advertisement
அப்புறம் நம்ம மாமூக்கு கல்யாண ஆசை எப்படி வரும் சொல்லு..?!’ என அவளின் மனம் சொல்ல, ஆமோதிப்பான தலையசைப்பை மனதிற்கு அளித்திருந்தாள்.
Advertisement
ஏறக்குறைய அனைவரும் வந்து சென்றதும், மிக முக்கியமான உறவினர்கள் மட்டுமே அந்த மண்டபத்தில் இருந்தனர்.
சிறு சிறு குழுக்களாக அவர்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, அப்போது தான் மணமக்களுக்கான ஓய்வும் வாய்க்கப்பெற்றது.
அமர்ந்த சிறிது நேரத்திலேயே வெற்றிவேலிடம் யாரோ வந்து எதையோ கேட்க, அதற்கு மும்முரமாக பதில் சொல்லிக்கொண்டிருந்தான் அவன்.
Advertisement
அந்த நேரம் வெற்றிவேலின் அதீத அக்கறையால் அதிகமாய் அருந்திய ஜுஸ் மற்றும் ஏசி அறையின் குளுமை இயற்கை உபாதையை கனிகாவிற்கு கொடுக்க அமர்ந்த வாக்கிலேயே நெளிய துவங்கினாள்.
அவளின் அசைவில் அவள் புறம் கவனத்தை திருப்பிய வெற்றிவேல், “கனிம்மா.. என்ன பண்ணுது..? எனி ப்ராப்ளம்..?” என பதட்டத்தோடு கேட்க,
‘அய்யோ மாமா.. நீங்க வேற இப்படி கேட்டு கேட்டே எனக்கே நா நல்லா இருக்கனா.. இல்லையான்னு.. சந்தேகத்த வரவச்சிடுவீங்க போலவே..?’ என மனதுக்குள் நினைத்தவள்,
அவனிடம் ஒரு அசட்டு புன்னகையோடு, “இல்லங்க மாமா, ரெஸ்ட்ரூம் போகணும் அதான்..” என நெளிந்த படி இழுக்க,
அவளின் அந்த பாவனையில் வெற்றிவேல் செழியனின் இதழும் அழகாய் ஒரு முறுவலை சிந்தியது.
அதை அவன் இதழ் கடித்து மறைக்க முயன்ற போதும் அவனின் விழியின் பளிச்சிடலில் அது அப்பட்டமாக வெளிப்பட்டுவிட,
“மா..ம்..மா..” என அவளின் இழுவையில் வாய்விட்டே சிரித்துவிட்டான் வெற்றி.
அதில் இன்னும் சிவந்து முகம் சுறுக்கி பாவனை அவள் காட்ட, அதில் தொலைய சொன்ன மனதை அதட்டி அடக்கியவன்,
மெல்லிய புன்னகையோடு, “போயிட்டு வாடாம்மா. இனி யாரும் வரமாட்டாங்க.
முடுஞ்சா கொஞ்ச நேரம் அம்மாகிட்ட சொல்லிட்டு ரெஸ்ட் எடுத்துட்டே வா.
நா என் ப்ரண்ட்ஸ் கூட இருக்கேன்.. சரியா..?” என்றிட,
தலையசைத்துவிட்டு இருக்கையில் இருந்து எழுந்து ஒரு அடி வைத்தவளின் ஒற்றை கரத்தை பற்றி நிறுத்தியிருந்தான் வெற்றிவேல்.
அதில் அவன் புறம் திரும்பி பார்த்து விழியால் வினா தொடுத்தவளிடம்,
“கனிம்மா.. நீ சாப்பிட்டதும் போடற டேப்லெட்ஸ் எடுத்துக்கோ.. மறந்திடாதே.. சரியா..?” என்றதும்,
புருவம் யோசனையில் சுருங்க, “டேபிலெட்ஸ்ஸா..! அது எதுக்கு..?” என கேட்டவள்,
சட்டென சுதாரித்து சிறு அசட்டு சிரிப்போடு, “கண்டிப்பா மாமா.. அதெப்படி மறப்பேன். கண்டிப்பா போட்டுக்கறேன்..” என்றவள்,
அங்கிருந்து மணமகள் அறையை நோக்கி சென்றாள், ‘அவன் தன்னை கண்டு கொள்ள கூடாதே..!’ என்ற அவசரத்தோடு.
வெற்றிவேல் செழியன் அன்று இருந்த மனநிலையில் கனிகாவின் பதிலை சரியாக கவனிக்காமல் இருந்ததால், அவளின் குட்டு வெளிப்படாமல் அந்த நேரம் தப்பித்தாலும்.. அது இன்னும் சிறிது நேரமே நீடிக்க போவது தெரியவில்லை அவளுக்கு..
கனிகா மேடையிலிருந்து இறங்கி மணமகளறைக்கு செல்வதை பார்த்தபடியே தானும் தனது நண்பர்கள் குழு இருக்கும் இடத்திற்கு சென்றான் வெற்றி வேல்.
நடக்க போகும் விபரீதம் புரிந்திருந்தால் கனிகா வெற்றியை விட்டு விலகி சென்றிருக்க மாட்டாளோ.. என்னவோ..?!
ஆனால் விதி வலியது.. அன்றோ..!!
கனிகா அறைக்கு செல்லும் வழியில் மண்டபத்திற்குள் ஓடி விளையாடிய குழந்தைகளில் ஒன்று தவறி கீழே விழுந்து அழத்துவங்க,
அந்த இடத்திற்கு சரியாக வந்திருந்த கனிகா அவசரமாய் அந்த குழந்தையை தூக்கி,
“அச்சோ செல்லக்குட்டி விழுந்துட்டீங்களா..? எங்கே அடிபட்டுச்சு..?” என கேட்டபடியே அந்த குழந்தையை ஆராய்ந்தவள், பெரிதாக எதுவும் ஆகவில்லை என்பதை உணர்ந்து ஆசுவாச பெருமூச்சு விட்டாள்.
அதன் பின் அந்த குழந்தையின் அழுகையை நிறுத்தவென சமாதானம் செய்து கொண்டிருந்த நொடி,
அவளை கடந்து அவளையே பார்த்த படி சென்றவனை பார்த்திருந்தால் வந்த வேலையை விட்டுவிட்டு அவனிடம் சென்றிருப்பாளோ..?!
குழந்தையை சமாதானம் செய்யும் மும்முரத்தில் அவனை தவறவிட்டிருக்க,
குழந்தை அழுகையை நிறுத்தி கனிகாவை பார்த்து அழகாய் புன்னகை சிந்த தொடங்கிய நேரம் குழந்தையின் தாயும் வந்துவிட, அவரிடம் கொடுத்தவள் சிறு புன்னகையோடு அந்த குழந்தையின் கன்னத்தில் இதழொற்றி மீண்டாள்.
இது அனைத்தையும் பார்த்தபடியே கடந்தவன் நேராக சென்று நின்றது வெற்றிவேல் செழியனின் பின்புறமே..
கனிகாவும் தனது அறைக்கு சென்றவள் தனது தேவையை முடித்துவிட்டு வெற்றிவேல் செழியன் சொன்னது போல அத்தம்மாவிடம் கேட்க,
அவரும், “சாயங்காலம் தான்டா வீட்டுக்கு போகணும். இப்ப நேரம் சரியில்ல.
அதான நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு..” என்றுவிட,
ஓய்வுக்காக அங்கேயே தங்கிவிட்டாள் கனிகா.. அங்கொருவன் தங்களின் திட்டத்தையெல்லாம் தவிடு பொடியாக்கிவிட்டான் என்பதை அறியாமல்.
வெற்றிவேல் செழியன் தன் நண்பர்கள் குழுவோடு சேர்ந்து அரட்டையில் மும்முரமாய் இருந்த நேரம் அவன் முதுகில் பட்டென விழுந்த அடியில் திரும்பியவன், “நந்து..!” என அழைத்தபடி சந்தோஷத்தோடு எழுந்து கட்டிக்கொண்டான்.
கட்டிக்கொண்ட அதே வேகத்தில் அவனிடமிருந்து விலகியவன், “வாடா நல்லவனே.. ப்ரண்ட் கல்யாணத்துக்கு வர்ற நேரத்த பாரு.
நேரம் சரியில்லன்னு மண்டபத்த காலி பண்ணாம இருக்கோம். இல்லன்னா நீ வந்த நேரத்துக்கு நாங்க வீட்டுக்கே போயிருப்போம்..” என ஆதங்கத்தோடு சொல்ல,
“டேய் வெற்றி சாரிடா. ஒரு எமர்ஜென்சி கேஸ்டா. ஒரு குழந்தைக்கு ஏக்சிடென்ட் ஆகி அட்மிட் பண்ணிட்டாங்க. உடனடியா ஆப்ரேஷன் பண்ணியாக வேண்டிய கட்டாயம்.
இல்லைன்னா உன் கல்யாணத்துக்கு வராம இருப்பேனா..?” என வருத்தத்தோடு தனது தரப்பை கூற,
ஏற்கனவே அவனின் மருத்துவ துறையில் வரும் இதுபோன்ற விசயங்களை நன்கு அறிந்த நண்பனாய் தோழனின் காலதாமதத்தை மன்னித்து,
“எனக்கு புரியுதுடா. இருந்தாலும் நீ என் கல்யாணத்த மிஸ் பண்ணுட்டையேன்னு தான்.. சரி அந்த பேபிக்கு இப்ப ஓகே வா..?” என்றான் அக்கறையாக.
“இன்னும் ஸ்டேபிள் கண்டிஷனுக்கு வரல. அப்ஜர்வேஷன்ல தான் இருக்கு. லெட்ஸ் ஹோஃப்..” என்றவன்,
“அதவிடு. உன் வொய்ப் அ விட்டுட்டு இந்த தடியன்களோட என்ன கூத்து..?” என்றான் புன்னகைத்து.
“வந்ததுமே எங்கள கழட்டி விடச்சொல்ற பாத்தியா.. நீ தான் உண்மையான நண்பன்..” என சதிஷ் சொல்ல.. நண்பர்களின் இனிய கலாட்டா ஆரம்பம் ஆனது.
சிறிது நேரத்திற்கு பின், நந்துவை வெற்றிவேல் சாப்பிட சொல்ல, “பஸ்ட் இந்த கிஃப்ட்டை கொடுக்கனும். சிஸ்டர் வரட்டும் டா..” என்றதும்,
“உனக்கு அவள அறிமுகப்படுத்தி வைக்கனுமுன்னு தான் நா ஈகரா வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.
இவ்வளவு நேரம் என்கூட தான் இருந்தா. ஜஸ்ட் இப்ப தான் கனி ரூமுக்கு போனா.
கொஞ்சம் வெயிட் பண்ணு. நா போய் அவள கூட்டிட்டு வர்றேன்..” என சொல்லி எழுந்து செல்லப்போக,
“உன் வொய்ப் தான் எனக்கு நல்லா தெரியுமே..!
அவங்களாவே வரட்டும். நீ உக்காரூ..” என்றவனை புருவம் முடுச்சிட யோசனையோடு பார்த்தவன்,
பின் ஏதோ ஒன்றை தெளிவாக்கிக்கொள்ள விரும்பி தயக்கத்தோடு,
“கொஞ்சம் நம்ம தனியா பேசலாமா..?” என்றான்.
அவனின் தயக்கத்தோடான பாவனையில் வெற்றியை வித்தியாசமாய் பார்த்தாலும், மற்றவர்களிடம் தலையசைத்து விட்டு அங்கிருந்த அறைக்குள் புகுந்தனர் இருவரும்.
செல்லும் போது சிறு குழப்பத்தோடு சென்ற நந்தன், இப்போது மேலும் அதிகமாகவே குழம்பி போய் தான் வெளிவந்தான்.
தன்னிடம் வெற்றிவேல் செழியன் கேட்ட கேள்வியில் முதலில் அதிர்ந்தாலும்,
தன் நண்பனை நன்கு அறிந்தவனாய் அவனின் குழப்பத்திற்கு தன்னாலான பதிலை சொல்லிய போதும், அவனின் கேள்விக்கான காரணம் என்னவாய் இருக்கும்..? என்பது சுத்தமாய் விளங்கவில்லை அந்த மருத்துவனுக்கு.
*****
error: Content is protected !!