Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

உனக்கென இருப்பேன் -8

  உனக்கென-8

ஆபிசில் இருந்த டென்ஷனில் கீர்த்திக்கு அழைத்து பேச மறந்தே  போனான்.

அவனை சமாதானம் செய்யவும் ,திருமண வாழ்த்து கூறவும் அனைவரும் சூழ்ந்து கொண்டனர் 

மதிய உணவு  இடைவேளையிலன் போது  தான் கீர்த்திக்கு அழைத்து பேசவில்லை என்ற நினைவே வந்தது .



Advertisement

அச்சோ கீர்த்திக்கு பேசலையே … மடையா ….அப்படி என்ன சிந்தனை உனக்கு தன்னையே திட்டிக் கொண்டவன் அவசரமாய் அழைத்தான் .

இரண்டு முறை அழைத்து பார்த்தான் அவள் அழைப்பை ஏற்கவில்லை . ஏதாவது வேலையாக இருப்பாள் என்றெண்ணிக்  கொண்டான் .

தன்  மனைவி செய்து அனுப்பிய மதிய உணவை ஆசையாய் திறந்தான் .

Advertisement

வத்தக்குழம்பு நல்லெண்ணெய் மணத்துடன் எல்லாரையும் மோப்பம் பிடிக்க  வைத்தது. பொடியாய் நறுக்கிய உருளை வறுவல் செம்ம காம்போ . வெந்தயக் கீரை கூட்டு . சுட்ட அப்பளம் , மிளகு ரசம் என்று  நாவின் சுமை அரும்புகளை சப்புக் கொட்ட வைத்தது .

Advertisement

சார் அய்யர் ஹோட்டல் வத்தக் குழம்பு மாதிரி இருக்கு என்று புகழ்ந்து கொண்டே சாபிட்டான் சரவணன்.சார்  ரசம் இன்னும் இருக்கா என்று கேட்டான் உடன் பணிபுரியும் சந்துரு . 

பரவாயில்லையே சமையலில் ஜமாய்க்கிறா ! ஆச்சரியப்பட்டுக் கொண்டவன் போகும் பொது அகர்வால் சுவீட் வாங்கி போக வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான் . 

சீக்கிரம் வீட்டுக்கு கிளம்ப சொல்லி மனம் உந்தித் தள்ளியது . குழந்தையை பார்க்க வேண்டும் . இன்றைய நாள் அவளுக்கு எப்படி போனதோ ? மதியம் சாப்பிட்டிருப்பாளா? மஞ்சுமாக்கு அழைத்து கேட்கலாமா ? பலவித யோசனை அவனுக்கு . நிமிடத்திற்கு ஒருமுறை நேரத்தை பார்த்தான் .

Advertisement

சின்ன முள் ஐந்தை தொட்டு பெரியமுள் பனிரெண்டை தொடுவதற்குள் …சிறகின்றி பறந்து விட்டான். 

“………………”

அகர்வாலில்   மில்க் சுவீட் ,சூடான கீரை பக்கோடா வாங்கியவன் இரண்டு முழம் பூவும் வாங்கிக் கொண்டான் .

நினைவு வந்தவனாய் லாரன்ஸ் ரோட்டில் அமைந்துள்ள வசந்த் அன் கோ சென்றவன் டேபிள் டாப் கிரைண்டரும் LG பிரிஜ்ஜும் வாங்கி டோர் டெலிவரிக்கு முகவரி கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தான் .

நெடுங்காலம் மனைவி மக்களை பார்க்காதது போலும் இப்போது தான் காணப் போவது போலும் அவ்வளவு பரவசம் அவனுக்கு .

வேக  எட்டுக்களை  வைத்து வீட்ட்டிற்குள்  நுழைந்தான் .

கதவு திறந்திருந்தது . தொட்டிலில் குழந்தை இல்லை . அறை  இருளில் மூழ்கி இருந்தது .

இந்நேரம் எங்கே போனா ? நெற்றியை தேய்த்துக் கொண்டவன் உடை மாற்ற அறைக்குள் நுழைந்து லைட் ஆன் பண்ணினான் . கட்டிலில் சுருண்டு படுத்திருந்தாள் கீர்த்தி .

என்னாச்சு ? விளக்கு வைக்கிற நேரத்தில் படுத்திருக்கா … உடம்புக்கு முடியலையா ? அருகில் வந்தவன் அழுது வீங்கிய அவள் முகம் கண்டு பதட்டமானான் .

வினோத் நினைவா இருக்கோமோ ? சற்று தடுமாறியவன் மனம் கேளாமல் கீர்த்தி …கீர்த்தி எழுந்திரும்மா என்று மென்மையாய் அவள் தோளில்  தட்டினான் .

அவன் குரல் கேட்டு அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தவள் அவன் முகம் பார்க்க விரும்பாது தலை  கவிழ்ந்து கொண்டாள் .

என்னம்மா ? உடம்பு சரியில்லையா ? அவள் நெற்றியில் கை வைத்து பார்த்தான் . சில்லென்று தான் இருந்தது .

என்னாச்சு ? 

அவள் வாயை திறக்கவில்லை , காது கேளாதவள் போல் அமர்ந்திருந்தாள்.

கீர்த்தி உன்னை தான் கேட்கிறேன் என்னாச்சு? அவள் வாய் திறக்கவிலை.

பீரியட்ஸ் டைமா ? வயிறு வலிக்குதா ? அவன் தான் பேசிக் கொண்டிருந்தான் அவளிடமிருந்து பதில் இல்லை .

கீர்த்தி என்னடி உனக்கு ? சற்று கோபம் வந்துவிட்டது அவனுக்கு . அவள் முகம் பற்றி நிமிர்த்தினான் .

அவன் கண் பார்த்த அடுத்த நொடி கண்ணீர் பிராவகம் கரைபுரண்டது .

என்னனு கேட்டேன் …பொறுமை இழந்து விட்டான். அப்போதும் அவள் பதில் கூறினாள் இல்லை .

என்னை கட்டிக்கிட்டது பிடிக்கலையா ? என்னோட இருக்க பிடிக்கலையா ? விழியை இறுக்கிக் கொண்டு கேட்டான் .

அவள் அமைதியாக காலை கோர்த்துக் கொண்டு அதில் தலை கவிழ்ந்து விம்மினாள் .

என்னடி உனக்கு பிரச்சனை ? சொல்லி தொலையேன்! 

 அவள் தோள் பற்றி குலுக்கினான் .

எங்களை எங்காவது கண்காணாம ஹாஸ்டலில் கொண்டு போய் சேர்த்துடுங்க !  கை  கூப்பினாள் .

என்னடி பேசற ? கட்டுக்கடங்காத கோபத்தில் கை ஓங்கிவிட்டான் .

அவள் மிரண்டு போய் பார்க்க அவன் உள்ளம் நொறுங்கியது .

என்னம்ம்மா …உங்களை அநாதை ஆக்கவா நான் இவ்வளவு போராடறேன்?

என்ன தான் நடந்துச்சு ? சொன்னாதானே தெரியும் ? பல்லைக்கடித்துக் கொண்டு இறுகி போய் நின்றான் .

யோசனை வந்தவனாய் பத்மினி சித்தி கால் பண்ணாங்களா என்றான் .

ம்கூம் …என்று மறுப்பாய் தலை அசைத்தாள் .

எங்கம்மா ஏதாவது ?

ம்கூம் என்று அதற்கும் தலை அசைத்தாள் கண்ணீர் மட்டும்  நிற்கவே இல்லை.

வேறென்னடி உனக்கு பிரச்சனை ? கடுப்பாகிவிட்டது அவனுக்கு .

சட்டையை கழட்டி கட்டிலில் வீசிவிட்டு பொத்தென்று கட்டிலில் அமர்ந்தான் .

அவன் முகம் பார்க்காமல் கலவரமான முகத்துடன் எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள் .

“…………………”

கீர்த்திமா …குழந்தை பசிக்கு அழறான் கொஞ்சம் பால் கொடும்மா ! ரசம் சோறு ஊட்டினேன்  குழந்தை வாங்கவே இல்லை . குழந்தையை அவரால் சமாளிக்க முடியவில்லை .

வீறிட்டு அழும் குழந்தையை அஸ்வின் வாங்கிக் கொண்டான்.  

மஞ்சும்மா யாராவது வீட்டுக்கு வந்தாங்களா ? 

ஆமா அஸ்வின் ….உங்க ஊரில் இருந்து தான் . உங்க சித்தப்பா பொண்ணும் மாப்பிள்ளையும் .

என்ன நடந்திருக்கும் என்று  ஓரளவிற்கு யூகித்துக் கொண்டான் 

என்ன நடந்துச்சு ? மஞ்சுளாவை கேட்டான் .

தெரியலப்பா ….. அந்த பொண்ணு ரொம்ப சத்தம் போட்டுச்சு …கீர்த்தி அழுதுட்டு  இருந்தா … குளிக்கல …சாப்பிடல …  குழந்தையை கவனிக்கல . குழ்ந்தை அழற சத்தம் கேட்டு நான் வந்து தூக்கிட்டு போனேன் . என்கிட்டேயும் சொல்ல மாட்டேங்கிறா என்றார்.

 வந்தது நிஷாவா ? சௌந்தர்யாவா ? அதட்டலாய் கேட்டான் .

குழந்தை அரண்டு அழ …. என்ன தங்கம் …என்னாச்சு தோளில் போட்டு தட்டத்  தொடங்கினான் 

மஞ்சுளா நாசூக்காய் கிளம்பிவிட்டார் .

குழந்தை உதடு பிதுக்கி பிதுக்கி அழத்  தொடங்கிவிட்டது .

குழந்தை அழறது காதில் விழலையா ? சிலையாய்  நின்றவளை  மிரட்டினான்.

மௌனமாய் குழந்தையை வாங்கி பசியாற்றத் தொடங்கினாள்.

குழந்தை அழுகை நின்று கையை காலை உதைத்து விளையாட தொடங்கியது . 

குழந்தையை வாங்கிக் கொண்டவன் போய் குளிச்சுட்டு வா என்றான் .

சாவி கொடுத்த பொம்மை போல் குளியலறை புந்தாள் .

குளித்து வந்தவள் சாமிக்கு விளக்கேற்றி வர …. குழந்தையை அவளிடம் கொடுத்துவிட்டு அவன் குளிக்க போய் விட்டான்  .

டிபன் எதுவும் செய்ய்ய வேண்டாம் ஹோட்டலில் வாங்கிட்டு வரேன் என்று வெளியில் கிளம்பி விட்டான் .

டிபன் வாங்கி வந்தவன் ….வா சாப்பிடலாம் என்றான் .

நீங்க  சாப்பிடுங்க ! எனக்கு பசிக்கல… கொஞ்ச நேரம் பொறுத்து சாப்பிடறேன் என்றாள் .

பல்லை உடைப்பேன், மதியம் சமைத்தது அப்படியே இருக்கு . பசியில்லையோ உனக்கு … வந்து சாப்பிடுன்னு சொன்னேன் .அவன் உறுமிய உறுமலில் மௌனமாய் சாப்பிட அமர்ந்தாள் .

மேற்கொண்டு எதுவும் கேள்வி கேட்காமல் அவன் அமைதியாக டிபனை பிரித்து வைக்க …அவளுக்கு கலவரமாய இருந்தது .

பைத்தியக்காரி…தாய்ப்பால் கொடுக்குறவ இப்படி பட்டினி கிடந்தா பிள்ளைக்கு எப்படி பசியாத்துவ ? அவ்வளவு கோபம் அவனுக்கு .

பயத்தில் ஒரு வார்த்தை கூட அவள் பேசவில்லை . 

வாங்கி வந்த சப்பாத்தி இடியாப்பத்தை  பிரித்து வைத்தான் .

கலங்கிய விழி நீருக்கு அணை கட்டிவிட்டு சாப்பிடத் தொடங்கினாள் .

உறங்கிய குழந்தையை தொட்டிலில் படுக்க வைத்துவிட்டு கட்டிலில் அமர்ந்தாள் .

கீர்த்தி உன்னோட பேசனும்  என்றான் .

விசாரணை  தொடங்கப் போகிறது என்று புரிந்து கொண்டாள் .

வெளியே வா ! குழந்தை தூங்குறான் .

அவன் பின்னால் சென்றாள் 

சோஃபாவில் அமர்ந்தவன் அருகில் அமருமாறு அவளுக்கு கை காட்டினான் .

பயத்துடன் அமர்ந்தாள் .

சொல்லு வந்தது  யாரு ?

நிஷா அண்ணியும் அவங்க வீட்டுக்காரரும் .

அந்த  பொறுக்கி கம்மனாட்டி எதுக்குடி  இங்கே வந்தான் ….பல்லை கடித்தான் .

அவன் கர்ஜனையில் ஒடுங்கிவிட்டாள் .

என்ன சொன்னாங்க ?

ஒன்னும் சொல்லல !

ஒன்னும் சொல்லாமலா அழுது அரட்டி  இருக்க ?

இல்லை அவங்க ஒன்னும் சொல்லலை  ….எச்சில் விழுங்கினாள் .

பொய் பேசினா செருப்பு பிஞ்சுடும் !   சீறினான் .

பயத்தில் கண் மூடிக் கொண்டாள் . அடித்து விடுவானோ என்ற பயம் …. அவன் குரல் கேட்கவே  நடுங்கியது அவளுக்கு  .

உண்மையை சொல்லுடி ! ஏறத்தாழ மிரட்டல் தான் !

அவள் வாயை திறப்பேனா என்று அடமாய் அமர்ந்திருந்தாள் .

சரி விடு ! நான் நிஷாக்கே கால் பண்ணி கேட்கிறேன் ….மொபைலை கையில் எடுத்தான் . உண்மையில் அவனிடம் நிஷா நம்பர் இல்லை . சும்மா போட்டு வாங்கினான்.

இல்லை வேண்டாம் … ப்ளீஸ் …விடுங்களேன்! அவங்க ஏதோ கோபத்தில் பேசிட்டாங்க . பயந்துவிட்டாள் . பிரச்சனை பெரிதாகிவிடுமோ என்ற பயம் .

என்ன பேசினாங்க சொல்லு !

அது …அவள்  தடுமாறினாள் .

ஏன்டி என்ன ஜென்மம் நீ ! என் தம்பியை கரெக்ட் பண்ணி தாலி கட்டிகிட்டேன்னு பார்த்தா எங்கண்ணன் அஸ்வினையும் கரெக்ட் பண்ணிட்டியா ?

கல்யாணத்துக்கு முன்னாடியே அஸ்வினை பிடுச்சுட்டியா ?இந்த குழந்தை  உண்மையிலே என் தம்பிக்கு தான் பிறந்துச்சா ? ஏன் கேட்கிறேன்னா எவனும் கையில் குழந்தையோட இருக்கிறவளை ஏத்துக்க மாட்டானே …?

அஸ்வின் அவனா வந்து தலையை கொடுக்கிறான்னா என்ன  சங்கதி ? எங்கேயோ இடிக்குதே … குரூரமாய் பேசிய நிஷாவை வலியுடன் பார்த்தாள் .

என்னடி பதிவிரதை லுக் விடற …. உன் வண்டவாளம் வெளியில் தெரிஞ்சுடுச்சுன்னு சீன்  போடறீயா ?

மரியாதையா பேசுங்க ! இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினா நாக்கை இழுத்து வச்சு அறுத்துடுவேன் , பொங்கி விட்டாள் கீர்த்தி .

நீயும் கருப்பா இருக்க ,உன் புருஷனும் கருப்பா இருக்கார் . உன் பொண்ணு மட்டும் எப்படி செக்க செவேல்னு இருக்கு ? நீ உன் புருஷனுக்கு தான் பெத்தியா ?

கீர்த்தியின் பதிலடியில்  ஆவேசம் கொண்ட நிஷா ஏய் யாரை பார்த்து என்னடி பேசற ? உன்னை கொன்னுட்டு ஜெயிலுக்கு போக. கூட தயங்கமாட்டேன் கண்கள் சிவக்க குடலை உறுவி எடுக்க காத்திருந்தாள்.

வலிக்குதுல்ல …உனக்கு வலிக்குதுல்ல …எனக்கும்  அப்படிதான் இருக்கு.

பேசுவடி பேசுவ …பத்தினி தெய்வமே …என் தம்பி எப்போ சாவான்னு காத்துகிட்டு இருந்து எங்க பெரியப்பன் மகனை மடக்கி இருக்கேன்னா நீ எப்படிப்பட்ட கைக்காரி ? கருந்தேள் நாவால் விஷத்தை கக்கினாள் நிஷா .

சீ …நாயே வெளியில் போ !  சாது மிரண்டது .

ஏய் …யார்கிட்ட பேசற ? பிரகாஷ் எகிறினான் .

அடச்சீ வாயை மூடு ! என் புருஷன் எப்போ சாவாருன்னு ICU வாசலில் நாக்கைத் தொங்கப்போட்டு  தவங்கிடந்த எச்ச பொறுக்கி  நீ … நீ எல்லாம் பேச வந்துட்ட …

உக்கிரமான அவள் பேச்சில் பிரகாஷ் மிரண்டு விட்டான் .

அஸ்வின் வரதுக்குள்ள போயிடுங்க ! இல்லைனா செருப்படி வாங்கிட்டு தான் போய் சேருவீங்க.  உன் மேல கொலை வெறியில் இருக்கார் . உயிர் மேல் ஆசை இருந்தா ஒடி போயிடு !அஞ்சாமல் அசராமல் தான் பேசினாள் .

என் தம்பிக்காரனை கொன்னு வாயில் போட்டுக்கிட்ட… அடுத்து அஸ்வினா ?எகத்தாளமாய் சிரித்தாள் நிஷா .

இதுவரை சரிக்கு சரி பேசிய கீர்த்தனா உடைந்து நின்றுவிட்டாள் .

அடங்கி நின்ற கீர்த்தியின்  நிலையை புரிந்துகொண்ட நிஷா மேலும் வார்த்தைகளால் குத்தி கிழித்தாள்.

எந்த குடும்ப பொண்ணாவது புருஷன் செத்த நாலாவது மாசம் அடுத்த கல்யாணம் பண்ணிக்குவாளா ? நீ என்னடி என்  தம்பியை லவ் பண்னணி கிழிச்ச ? அவன் மேல உண்மையான லவ் இருந்திருந்தா உனக்கு இன்னொருத்தன் மேல ஆசை வருமா ?என்னடி உன் கேடுகெட்ட  வளர்ப்பு? 

அதற்கு மேல் அவள் பேசியதெல்லாம் இரக்கமின்றி  உயிரை குதறி  கிழிக்கும் வார்த்தைகள் .

இனி உன் புள்ளையை காட்டி எங்க வீட்டு வாரிசுன்னு எங்கப்பாவை ஏய்க்க நினைக்காதே ….

கொடுமொழியை உதிர்த்து தன்  குமுறலை தீர்த்துக் கொண்டு கிளம்பினாள் நிஷா .

அவள் சொத்துக்கு உரிமை கொண்டாடி வந்துவிடக்கூடாது என்று தான்   நிஷாவை தூண்டிவிட்டு அழைத்து  வந்திருந்தான் பிரகாஷ்.

“…………”

கரகரவென்று கண்ணில் நீர்வழிய நின்றவளின்  கரம் பற்றினான் அஸ்வின் .

அவன் கழுத்தை கட்டிக் கொண்ட கீர்த்தி கதறி அழுதாள் .

அஸ்வினுக்கு மனம் கொதித்தது . என்ன மாதிரி வார்த்தைகளை கொட்டி ரணமாக்கிவிட்டு சென்றிருக்கிறாள் . எங்கிருந்து வந்தது இந்த குரூரம் ?  இப்போது மட்டும்  நிஷா கண்ணுக்கு எட்டும் இடத்தில இருந்தால் அடித்தே கொன்றுவிடுவான் அஸ்வின் .

அழுது கரைந்தவளின் முகம் பற்றி நிமிர்த்தியவன் மென்மையாய் அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.

கீர்த்தி சரியான பதிலடி கொடுத்திருக்க … அப்புறம் ஏன் இப்படி அழுது மாற ? அவன் கண்ணிலும் நீர் துளிர்த்தது .  

என் ராசி உங்களுக்கும் ஏதாவது ஆகிட்டா ….

ச்சீ ….என்னடி பேச்சு இது ? அவள் வாய் பொத்தினான் .

 

  

 

   

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!