Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பூவிடைப் பனித்துளிகள்

poovidai panithuligal 23 by Aruna Kathir

பூவிடைப் பனித்துளிகள் 23

அத்தியாயம் 23

நாபி காலை உணவு உண்ண கூட கீழே வரவில்லை. பரணி தான் மனம் கேட்காமல், தட்டைத் தூக்கிக் கொண்டு அவள் அறைக்குச் சென்று கதவைத் தட்டிப் பார்த்தான். அவள் திறக்கவில்லை. இரண்டொரு முறை கைப்பேசியில் அழைத்துப் பார்த்தான். அதற்கும் பதிலில்லாமல் போக, உணவை அறையின் வாயிலில் வைத்துவிட்டு வந்திருந்தான்.

ஏற்கனவே மந்தமாக, உற்சாகமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த அவர்கள் நாட்கள் வீட்டிலும் நிம்மதியில்லாமல் தான் சென்றது. நாபி-ஜூன் அன்றைக்குப் பிறகு அவர்களுடன் பேசுவதே கிடையாது. அவர்களுடன் உணவு உண்பது கிடையாது. காலையில் இவர்கள் எழுந்து வரும் முன்னரே அன்றைக்கான தனக்கான சமையலை முடித்து அதை தன் அறைக்கு எடுத்துச் சென்றிருப்பாள். சமையல் செய்ததற்கான அறிகுறிகள் மட்டுமே இருக்கும்.



Advertisement

எப்போது எழுந்து கொள்கிறாள், ஜாகிங் செல்கிறாளா என்று கண்டுகொள்ள இயலவில்லை. அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே தான் வேலை செய்வது என்பதால் முன் போல ஏழு மணிக்கு தயாராகி எட்டு முப்பதிற்கு அலுவலகம் செல்ல வேண்டிய நிர்பந்தம் இல்லை. அதனால் சாவகாசமாக எட்டு மணிக்கு மேல் தான் அனைவரும் எழுந்து கொள்வதே.

“இவ ஜாகிங் போறதில்லையா இல்ல காலையில நாம எந்திரிக்கறதுக்கு முன்னாடி எந்திரிச்சு போயிடறாளா?” என்று ஒரு நாள் வருண் வினவினான். பதில் தெரியாமல் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டனர்.

“நாளைக்கு காலையில மூணு மணிக்கு அலாரம் வச்சு எந்திரிச்சு கண்டு பிடிக்கறேன்” என்று சூலுரைத்த யஷ்வந்த் குளிரின் காரணமாக திவ்யமாக எட்டு மணி வரையிலும் உறங்கிவிட்டிருந்தான். ஆனால் அடுத்த சில தினங்களில் நாபி-ஜூன் எப்போது எழுந்து ஓடச் செல்கிறாள் என்று யஷ்வந்த் துப்பறிந்திருந்தான். நாபி இவர்கள் திட்டியதால் ஜாகிங் செல்லாமல் இருக்கவில்லை. காலை ஐந்து மணிக்கு சற்றே வெளிச்சம் பரவத் துவங்கியதுமே வெளியே சென்றுவிடுகிறாள். வழக்கமாக இவர்கள் எட்டு மணிக்கு எழுந்து கொள்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு ஏழு மணிக்கே வீட்டிற்கு திரும்ப வந்துவிடுகிறாள் என்று அறிந்ததும் யஷ்வந்த் கொதித்துப் போனான்.

Advertisement

அவன் கோபத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகளவில் இருக்க, கொரோனா தாக்கப் பெற்று மூச்சு விட சிரமப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவனது தாத்தா, சில தினங்கள் முன்பு உயிரை விட்டிருந்தார். தாத்தாவின் இறுதி காரியத்திற்குச் செல்ல இயலாமல் யஷ்வந்த அனுபவித்த துன்பம் அருகிருந்து பார்த்தவருக்குத் தான் புரியும். நெருக்கமான உறவுகளால் பின்னிப் பிணைந்திருந்த கூட்டுக் குடும்பம் யஷ்வந்தினது. அதில் அதிமுக்கிய வேரான அவன் தாத்தா தவறிப் போனது பெரும் இழப்பே அக்குடும்பத்திற்கு.

Advertisement

“தாதாஜி… மேரா தாதாஜி” என்று தாங்கமுடியாமல் அழுது தீர்த்தான் யஷ்வந்த். அதிலும் அவன் தாத்தா வெகு கம்பீரமான மனிதராக காணப்பாட்டார். முறுக்கு மீசையும், ஆஜானுபாகுவான உடல்வாகும், நேர்கொண்ட திமிரான பார்வையும் என திடமான மனிதரான அவரையே கொரோனா காவு வாங்கிவிட, மற்றவர்கள் எம்மாத்திரம் என்ற பயம் அவனை வெகுவாகப் பிடித்துக் கொண்டது.

அதனாலேயே, மறுதினம் இரவு முழுக்க உறங்காமல் விழித்திருந்து நாபி-ஜூன் ஜாகிங் செல்கிறாளா, இல்லையா என்று கண்டு கொண்டிருந்தான். அந்த தினம் வழக்கம் போல நாபி காலை ஜாகிங் சென்றுவிட்டு வீட்டிற்கு வரும் சமயம், வீட்டின் மற்ற நபர்களை எழுப்பி, கிட்சனில் ஆஜர் படுத்தியிருந்தான்.

அனைவரும் தூங்கிக் கொண்டிருப்பர் என்று எப்போதும் போல சாவகாசமாக உள்ளே வந்த நாபி, கிட்சனில் அமர்ந்திருந்த அனைவரையும் கண்டு சில நொடி திடுக்கிட்டாள். பின்பு, எதுவும் நடவாதது போல மாடிப்படி நோக்கி நகரத் துவங்க, “ருகோ!” என்று சற்றே அதிகாரக் குரலில் தடுத்திருந்தான் யஷ்வந்த். அவன் முகம் கோபத்தில் சிவந்து டர்பன் வைத்த தக்காளி பழம் போல் இருந்தது.

Advertisement

“அவ்வளோ தூரம் சொல்லியும் கேட்காம, எங்களையும் சேர்த்து டேஞ்சர் சோனுக்கு தள்ளிட்டு இருக்க நீ! யு ஹேவ் டு ஸ்டாப் திஸ்” என்று காட்டமான குரலில் சொல்லியிருந்தான்.

யஷ்வந்த் 6.5 அடி உயரம் கொண்டவன். உடல் மொழியும் ஆஜானபாகுவாக இருக்கும். அவன் அருகில் ஆண்கள் நின்றாலே அவர்கள் குள்ளமாகத் தான் தெரிவர். இதில் 5.5 அடி உயரமும், நாற்பத்தைந்து கிலோ எடையும் மட்டுமே கொண்ட நாபி-ஜூன் பள்ளி சிறுமி போலத் தான் தெரிந்தாள். யஷ்வந்தின் கோபம் மற்றவருக்கு அச்சம் கொடுத்தது.

“யஷ்! பொறுமையா பேசு. ப்ளீஸ்” என்று சற்றே கெஞ்சலாய் திவ்யா கூறத் துவங்க, யஷ்வந்த் யார் சொல்வதையும் கேட்கும் மனநிலையில் இல்லை. நாபி-ஜூனை மட்டுமே கண்களில் சிவப்பேறப் பார்த்தவன், “திஸ் இஸ் த லிமிட் ஃபார் யூ. ஜாகிங் போய் கொரோனா வைரஸ் தொத்திகிட்டு வராதன்னு அவ்வளோ சொல்லியும் நீ கேட்கலை தானே! ஐம் கோயிங் டு த போலீஸ். ஐ வில் ரெயிஸ் கம்பிளைண்ட் டு த கம்பெனி. ஐம் காலிங் 911 நவ்” என்று ஆத்திரமாகச் சொல்லிவிட்டு கைப்பேசியை எடுக்கப் போக, பரணி அவன் கைப்பேசியை சட்டென பிடுங்கியிருந்தான்.

நாபி-ஜூனின் வெளிரிப்போன முகமும், யஷ்வந்தின் கோபம் கண்டு நடுங்கிய விரல்களும் அவனை அவ்வாறு செய்ய வைத்திருந்தன. திவ்யாவிற்குமே யஷ்வந்தின் அதீத கோபம் பயத்தைக் கொடுத்திருக்க, தன்னிச்சையாக நகர்ந்து பரணியின் பக்கமாய் சென்றிருந்தாள்.

“ரிலாக்ஸ், ரிலாக்ஸ் யஷ். நான் பேசறேன். ப்ளீஸ் காம் டவுன். ஐ வில் டாக்” என்று சொன்னவன், வருணை ஏறிட, வருண் யஷ்வந்தின் தோள் தொட்டு அவனை சற்றே சாந்தப்படுத்த முயன்றான்.

யஷ்வந்த் எதுவும் பேசாமல் கோபம் குறையாமல் நாபியை பார்த்தவண்ணம் தான் நின்றிருந்தான். பரணி நாபியிடம் திரும்பி, “சீ, வீ ஆல் ஆர் அஃப்ரெயிட். எங்க ஊர்ல நிறைய பேர் கொரோனா வந்து இறந்துட்டு இருக்காங்க. உனக்கு இதோட சீரியஸ்னஸ் தெரியாம எங்க உயிரையும் டேஞ்சராக்கற. யு ஹேவ் டு ஸ்டாப் திஸ் நாபி.” என்று சாந்தமான குரலில், ஆனால் திடமாகவே பேசினான்.

“பட், ஐ ஃபீல் ட்ராப்டட் இன் திஸ் ஹவுஸ்.” என்று கண்களில் நீர் திரண்டு போய் நாபி கூற, பரணிக்குமே கஷ்டமாகிப் போனது.

“சீ, எல்லாருமே அப்படி தான் ஃபீல் பண்ணறோம். பட், சிட்யுவேஷனை அண்டர்ஸ்டாண்ட் பண்ணனும். இட் இஸ் டேஞ்சரஸ் ஃபார் ஆல்.”

“நோ பரணி. நான் ஜாகிங் போக ஆரம்பிச்ச இவ்வளோ நாள் ஆகிடுச்சே. உங்களுக்கு என்னால எந்த டிசீஸும் வரலையே” என்று தன் பேச்சையே திரும்ப பேச, யஷ்வந்த் நாபியை உறுத்து நோக்கிக் கொண்டு அருகே வர, திவ்யா இடை புகுந்து தடுத்திருந்தாள்.

“நாபி, உன்ன மாதிரி நாங்க அத்லடிக் கிடையாது. உனக்கு இருக்க ஸ்டாமினா அண்ட் எதிர்ப்பு சக்தி எங்களுக்கு இருக்காது. நீ அஃபெக்ட் ஆகாம இருக்கலாம். பட் யு கேன் பி எ கேரியர் ஏஜெண்ட்” என்று திவ்யா நாபியிடம் கூறினாள்.

“பட் திவ்யா…” என்று நாபி–ஜூன் சொல்லத் துவங்கும் முன், “யு ஹேவ் டு லீவ் திஸ் ஹவுஸ்” என்று திட்டமாக மொழிந்தான் பரணி. அவனுக்கும் நாபியின் பேச்சு எரிச்சலை வரவழைத்திருந்தது.

“திரும்பத் திரும்ப போகாத, உனக்கும் சேஃப் இல்லைன்னு சொல்லறேன். அதை கொஞ்சம் கூட மதிக்காம, உன் பக்க நியாயத்தையே பேசினா எப்படி. இந்த வீட்டில நீ இருக்கணும்னா கண்டிப்பா நாங்க சொல்லறபடி யாருக்கும் தொந்தரவு இல்லாம தான் இருக்கணும். எல்ஸ், மூவ் சம்வேர்” என்று காட்டமாக பரணி கூறிட, நாபியின் கண்களில் நீர் திரண்டு கொண்டது.

மற்றவர்கள் அவளுக்கு சாதகமாகப் பேசுவர் என்று எண்ணி அனைவரையும் பார்க்க, அங்கே இறுகிய முகங்களே காட்சியளித்தன.

“நீ இன்னொரு தடவை வெளிய ஜாகிங் போனா கண்டிப்பா நான் போலீஸ்க்கு கால் பண்ணிடுவேன்.” என்று சற்றே மிரட்டலாகத் தான் இம்முறை கூறினான் பரணி.

ஒரு முடிவுக்கு வந்தவளாக, “ஐ வில் மூவ் அவுட்” என்று கண்ணீரைக் கட்டுப்படுத்தி சொல்லிவிட்டு, தன் அறைக்குள் சென்றுவிட்டிருந்தாள்.

அவள் சென்று நீண்ட நேரமாகியும் அங்கேயே மற்ற நால்வரும் அமர்ந்திருந்தனர். யஷ்வந்தும், வருணும் சற்று நேரம் கழித்து மேலே சென்றுவிட, பரணியுடன் சோஃபாவில் திவ்யா மட்டுமே இருந்தாள்.

ஒரு பெண்ணை, அதுவும் கொரோனா காலத்தில் வீட்டை விட்டு வெளியேறு என்று சொன்னது தவறோ என்று பரணிக்கு குற்ற உணர்வாக இருந்தது. அவன் முகத்தில் கவலை கோடுகள் தென்பட, இரண்டடி தள்ளி அமர்ந்திருந்தவனை பக்கவாட்டில் பார்த்துக் கொண்டே மெளனமாய் இருந்தாள் திவ்யா. பரணியின் தவிப்பு அவளை இம்சை செய்தது. அவன் கைகளைப் பற்றி தன் கைக்குள் வைத்துக் கொண்டு ஆறுதல் சொல்ல வேண்டும் போல் இருந்த உந்துதலைக் கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தாள். நீண்ட நேரம் இருவரும் பேசிக் கொள்ளாமலேயே ஒரு மெளனமான புரிதலுடன் அமர்ந்திருந்தனர்.

“தப்பு பண்ணிட்டனா திவி?” என்று அவளைப் பார்க்காமல் வினவியிருந்தான் பரணி. இங்கே வந்திருந்த இத்தனை மாதங்களில் திவ்யா என்று மட்டிலுமாகவே அழைப்பான். அதுவும் சிற்சில சமயங்களில் தான். பெரும்பாலும், பெயர் சொல்லாமல் பொதுப்படையில் தான் பேசுவான். இன்று அவனையும் அறியாமல் திவி என்ற அவன் அழைப்பு அவளுக்கு தித்திப்பாக இருந்தது.

இவன் ஆழ்மனதில் இன்னமும் தான் அன்றைய கல்லூரி திவியாகத் தான் தெரிகிறோம் என்று திடமாக நம்பினாள். அவன், ‘திவி’ என்று தான் அழைத்ததையும் அதைக் கேட்டு திவ்யா அவனையே உற்று பார்த்துக் கொண்டு உதட்டின் ஓரத்தில் சிரிப்புடன் அமர்ந்திருந்ததையும் அவன் சட்டை செய்யவில்லை. தன் சிந்தனையிலேயே ஆட்பட்டிருந்தான்.

“வீட்டை விட்டு போன்னு சொல்லியிருக்க கூடாதுல்ல. பாவம் அந்த பொண்ணு. இவ்வளோ நாளும் இது நம்ம வீடு, நம்ம ஃப்ரெண்ட்ஸ்னு தானே நினைச்சிருக்கும். அப்படி சொல்லியிருக்க கூடாது திவி. அதும் நம்மள மாதிரி தானே ஊரு, சொந்த பந்தம்னு எல்லாரையும் விட்டுட்டு வேலைக்காக இங்க இருக்கு” என்று மீண்டுமாய் கேட்டவன், இம்முறை தலையைத் திருப்பி திவ்யாவை ஏறிட, அவள் அவன் பக்கமாக சற்றே ஒட்டி நகர்ந்து அமர்ந்து கொண்டாள்.

“நீ சொன்னது தப்பில்ல பரணி. அந்த பொண்ணுக்கு அப்படி சொல்லலைன்னா புரிஞ்சிருக்காது. நாம ஏதோ சும்மா பயப்படறோம்னு நினைச்சுட்டு இப்படி வெளிய போயிட்டு வந்துட்டு தான் இருக்கும்” என்று சொன்னாள்.

“இருந்தாலும் வீட்டை விட்டு போன்னு சொன்னது தப்பு தான். எங்க போகும் அந்த பொண்ணு?” என்று வருத்தம் தோய்ந்த குரலில் அவன் கேட்க,

“ஏ, அதெல்லாம் எங்கையும் போகாது பரணி. சும்மா நீ போன்னு சொன்னா போயிடுமா. அப்படி ஏதும் ஆகாது. சரியா!” என்று அவனை சமாதானம் செய்யும் தொனியிலேயே கூறினாள்.

இருந்தாலும் அவன் மனம் அமைதி கொள்ளவில்லை என்பது அவன் முகத்திலிருந்தே தெரிந்தது அவளுக்கு. அவன் பதட்டமும், நாபி ஜூனிடம் அவன் பேசிய வார்த்தைகளை எண்ணி அவன் மனம் தவிப்பதும் அப்பட்டமாய் புரிந்தது திவ்யாவிற்கு. அவனது நேர்மையான பேச்சும், கோபத்தில் மற்றவரை திட்டிவிட்ட போதும், அதை நினைத்து நிஜமாகவே வருத்தம் கொள்ளும் பாங்கும் அவளை வெகுவாகக் கவர்ந்தது.

‘அன்னைக்கும் என்னை கிளாஸ் ரூம்ல திட்டிட்டு சாயந்தரமே எங்கிட்ட நேர்ல மன்னிப்பு கேட்க வந்தானே! பாவம் தான்ல்ல’ என்ற நினைப்பு எழ, அவள் மனம் நெகிழ்ந்து போய் சின்ன சிரிப்பை சிந்தியது.

அந்த நேரத்தில் அவள் சிரிப்பு அவனுக்கு வித்தியாசமாக தோன்ற, “என்ன?” என்று கேள்வியாய் புருவத்தை நெளித்தான். புன்னகை சிந்தும் உதடுகளை இன்னமுமாய் விரித்தவள், “ஒண்ணும் இல்ல” என்று சொல்லிவிட்டு சோஃபாவிலிருந்து எழுந்துகொள்ள இருந்தவளின் கை பற்றி நிறுத்தினான்.

“ஏன் திவி, நான் வேணா நாபிகிட்ட சாரி கேட்கவா?” என்று அவளிடம் வினவினான். அவளிடம் அவன் கேட்ட விதம் திவ்யாவிற்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அவன் முடிவுகளில் அவளையும் உள்ளடக்கி கேட்டது ரொம்பவும் உரிமைப்பட்டவளிடம் கேட்ட நிறைவை அளித்திருக்க,

“கேட்டா தான் உன் மனசு நிம்மதி ஆகும்னா சாரி கேட்கறது தப்பில்ல பரணி. நீ சொன்ன விஷயம் தப்பில்லைன்னாலும், நாபி மனசு கண்டிப்பா கஷ்டப்பட்டிருக்கும். அதுக்காகவாது சாரி கேட்கணும்” என்று தன்மையான பாங்குடன் கூறியவள் கொஞ்சமும் யோசிக்காமல், அவன் தலையின் மேல் கைவைத்து செல்லமாக ஆட்டிட, கண்கள் சற்றே விரிந்த போதும் மிக மெல்லிய புன்னகையுடன் ஆமோதிப்பாய் தலையசைத்தான்.

அவள் தலையை ஆட்டும் சமயம் பற்றியிருந்த அவள் வலதுகையை மெல்லமாய் இறுக்கி பின் விடுவித்திருந்தான். புன்னகை மாறாமல் திவ்யா அவள் அறைக்கு வந்திருந்தாள். இருவரின் இந்த உரையாடலும் திவ்யாவின் மனதினுள் நிம்மதியைப் படரச் செய்தது. வீட்டில் ஒரு முடிவெடுக்கும் போது இருவருமாய் இப்படி பேசி ஆராய்ந்து ஒருவர் மனம் மற்றவர் புரிந்து கொண்டு, உறுதுணையாய் பக்கபலமாய் மனமொத்து முடிவுகள் எடுப்பது எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தது.

ஏனென்றால் அவள் வீட்டில், அவள் அன்னையும் தந்தையும் சின்ன சின்ன விஷயங்களுக்கும் இப்படி வாக்குவாதம் செய்வதைக் கண்டிருக்கிறாள். “இன்னைக்கு என்ன சமைக்கட்டும்? தட்டைபயிறு குழம்பு வைக்கவா? இல்ல புளிக்குழம்பா?” என்று அவள் அன்னை மஞ்சுளா கேட்டால், வழக்கமான கணவர்கள் சொல்லுவது போல, ‘ஏதோ ஒண்ணு செய்’ என்று பதிலளிக்க மாட்டார் அவள் தந்தை.

“முந்தா நாள் தானே புளிக்குழம்பு வச்ச. பயிறு குழம்பே வை. அது கூட சேனைகிழங்கு சாப்ஸ் பண்ணா நல்லா இருக்கும் சுருக்குன்னு” என்று கூறுவார். அதற்கு அன்னை மஞ்சுளா ஏதாவது சொல்லப் போக, ஒரு சின்ன விவாதம் நடந்தேறும்.

இதுபோல, அடுத்த தின சமையல், காய்கறி, மளிகை வாங்குவது துவங்கி, மகளின் திருமணம், வீட்டு கடன், வெளியில் கைமாற்று வாங்குவது, நண்பனுக்கு அவசரத் தேவைக்கு அம்மாவிடம் சொல்லிவிட்டு பணம் கொடுப்பது என வீட்டின் பெரிய முடிவுகள் வரையிலும் அன்னையும் தந்தையும் பேசிக்கொண்ட பின்னர் தான் முடிவெடுப்பர். சிலசமயம் அவர்கள் பேச்சு சிறுபிள்ளைத் தனமாகத் தோன்றியதுண்டு திவ்யாவிற்கு.

“இந்த விஷமெல்லாம் கூடவா கேட்டு கேட்டு முடிவெடுக்கணும். ஏதாவது ஒரு சமையல் செய்மா. அப்பா சாப்பிடுவாரு” என்று சடைந்து கொள்வாள்.

“அதெல்லாம் எனக்கும் தெரியும்டீ. என்ன செஞ்சாலும் உங்க அப்பா சாப்பிட்டுக்குவார்னு. ஆனா மனசுகுள்ள, நம்ம பொண்டாட்டி நம்மளை கேட்காம எதுவும் செய்யமாட்டாங்கற எண்ணம் அவருக்கு ஒரு திருப்தி கொடுக்கும். அதே மாதிரி தான் எனக்கும். இதெல்லாம் உனக்கு சொன்னா புரியாது. உனக்குன்னு ஒரு வாழ்க்கை வரப்போ தானா தெரிஞ்சுக்குவ.” என்று விளக்கமளிப்பாள் மஞ்சுளா.

இப்போது வளர்ந்த பிறகு, தாய் தந்தை என்ற கண்ணோட்டத்தில் இருவரையும் பாராமல், அவர்களை ஒரு தம்பதியாகப் பார்க்கும் போது, அவர்களது அந்நியோன்யம் நன்றாகப் புரியத் துவங்கியது திவ்யாவிற்கு.

அதுவே அக்கா, செளமியாவின் வீட்டிலோ கதையே வேறு மாதிரி இருக்கும். “நாளைக்கு ஏதோ நிலம் ரெஜிஸ்டர் பண்ண போறாங்களாம்மா. காலையில ரெடியா இருன்னு இப்போ வந்து சொல்லறாரும்மா. இவர் நிலம் வாங்கற ஐடியால இருந்ததோ, போய் நிலம் பார்த்துட்டு வந்ததோ எதுவுமே எனக்கு சொல்லலம்மா.”

“ஏன் சொல்லலைன்னு கேட்க வேண்டியது தான டீ” என்று மஞ்சுளா கேட்க,

“கேட்டேன்மா, அதான் இப்போ சொல்லிட்டேன்லன்னு சொன்னாரும்மா. என்ன பண்ண சொல்லற? ஏதோ மூணாவது மனுஷி மாதிரியே நடத்தறாங்கம்மா. என் வீடுன்னு ஒரு உரிமையே வரமாட்டேங்குது எனக்கு” என்று புலம்புவாள் செளமியா.

“கொஞ்ச கொஞ்சமா மாறும்டீ. உன் மாமியார் மாப்பிள்ளைக்கு சொல்லிக் குடுக்கணும் இதெல்லாம். வீட்டுக்கு வந்த பொண்ணுகிட்ட கலந்துகிட்டு முடிவெடுடான்னு அவங்க தான் பக்குவமா சொல்லணும்.”

“ம்க்கும், அவங்க சொல்லிட்டாலும். அவகிட்ட எதுக்குடா எல்லாம் சொல்லிட்டு திரியறன்னு தான் கேட்பாங்க. அவங்களாவது எங்கிட்ட சொல்லிட்டு செய்னு மகன்கிட்ட சொல்லறதாவது” என்று பலத்த அங்கலாய்ப்புடன் சொல்லுவாள் செளமியா.

செளமியா அக்காவின் வீட்டில் அத்தான் அப்படித்தான் நடந்து கொண்டு பார்த்திருக்கிறாள். மகனின் காதுகுத்திற்கு கூட எந்த நாள் தோதுபடும் என்று அக்காவிடம் கூட வினவவில்லை. அவர்களாக நாள் பார்த்துவிட்டு, “அடுத்த திங்கள் காதுகுத்து” என்று கூறினர்.

தன் தாய் தந்தை, அக்கா அத்தான் என இரு தம்பதிகளையும் இப்போது மனதிற்குள் ஒப்பு நோக்கிக் கொண்டவளுக்கு, பரணி தன்னிடம் நாபியிடம் மன்னிப்பு கோரட்டுமா என்று கேட்டது, இவன் தன்னைக் கேட்காமல் எதையும் செய்ய மாட்டான் என்ற எண்ணத்தை மனதில் விதைத்திருந்தது. அவனுடனான கற்பனை வாழ்க்கையில் அந்த ஒரு நொடி அவள் மனதில் தோன்றி மறைந்த பிம்பம் மனதினுள் ஒரு நிறைவைக் கொண்டு வந்ததில் ஆச்சர்யமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!