Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

லயம் மாறா காதல்

Layam Maaraa Kaathal 8 1

꧁☆☬  லயம் – 8 ☬☆꧂



Advertisement

மாலாவின் வீட்டிலிருந்து கிளம்பி காலையில் எப்போதும் போல் அலுவலகம் வந்தவன் நேராக தாயின் அறைக்கு சென்றான். ” குட் மார்னிங் மேம், டுடே சேம்பர் மீட்டிங், ஜஸ்ட் உங்களுக்கு ரிமைன் பண்ண வந்தேன். ” முகத்தை பார்த்து கொண்டே சொன்னவன் அவரது பதிலை கூட எதிர்பார்க்காமல் வெளி சென்று விட்டான்.

Advertisement

மகனின் செயலில் சிரிப்பு வர ” ரெண்டு நாளா என்னை பார்க்கலையாம், காலு நேரா இங்கே வந்து தான் நிற்கும். அப்புறம் தான் துரைக்கு வேலை ஓடும். ” முனங்கியவர் மனத்திலோ காதலை பற்றி, கல்யாணம் பற்றி மகன் பேசி சிரித்த பொழுதுகள் நினைவில் வந்தன. இரு நாட்களாக அவனை பற்றி தான் நினைத்து கொண்டிருந்தார்.

Advertisement

“மொட்டை மாடியில படுத்துட்டு நிலவை பார்க்குறது எவ்ளோ சுகம்.” அங்கிருந்த திண்டில் கால் நீட்டி படுத்து கொண்டு வானத்தை பார்த்து அழகை ரசித்து கொண்டு இருந்தனர். சினிமா போய் விட்டு வந்து, வீட்டுக்கும் போகாமல் இளாவோடு வந்து விட்டான் ராஜா. வீட்டில் அனைவரும் இணைந்து இருக்கும் பொழுதுகளில் மொட்டை மாடி காற்றில் குடும்பமாக அமர்ந்து சாப்பிடுவது அவர்கள் வழக்கம். பல சமயம் ராஜாவும் அவர்களோடு இணைந்து கொள்வான். இரவு தூக்கம் கூட இளாவோடு தான் சில சமயங்களில்.  இனி ராஜா இன்டர்ன்ஷிப் படிப்பிற்காக வேறு ஊருக்கு செல்ல போவதால் நீண்ட நாட்கள் கழித்து இன்று மட்டும் இருவரும் தனியாய் சுற்றினர். படத்தில் வரும் காட்சியை பற்றி இவர்கள் பேசி கொண்டிருக்க தமயந்தி, மாலா சமைத்த உணவுகளை எடுத்து கொண்டு  மேலே  வந்தனர்.

Advertisement

” ஒரு பொண்ணை பார்த்தா மனசுல ஃபயர் வரனும்டா.” இளா கேள்விக்கு ,

” அதுக்காக அவ கையில்  லைட்டரை வச்சிட்டு சுத்திட்டு இருக்க முடியுமா?, போடா.,  ” ராஜாவின் பதில்.

”  மின்னல் மாதிரி அவ நினைப்பு டக்கு டக்குனு மின்னிட்டே இருக்கனும்.”

“பியூஸ் போக போற பல்பு மாதிரியா? ஓகே…,  மை லார்ட், முறைக்காதே, வாயை மூடுறேன்…,”

” டேய் ஒருத்தனுக்கு எப்போ, எப்படி, எங்க, ஏன் லவ் வந்ததுன்னு யாராலயும் சொல்ல முடியாது. வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வரும். அது வரை வெயிட் பண்ணு . உனக்கானவ உன்னை தேடி வருவா.”

” இல்லைனா நீயே அவளை தேடி போ.”

“எல்லாருக்கும் காதல் வருதே, நமக்கு மட்டும் ஏன் வரமாட்டேங்குது? “

” அதுக்கெல்லாம் நீங்க சரிப்பட மாட்டிங்கன்னு அதுக்கே தெரியும். அதுவா உங்கட்ட பக்கத்துல கூட வரவே வராது…. ” இட்லியை தட்டில் வைத்தபடி மாலா நக்கல் செய்ய,

”  அப்படிலாம் சொல்ல கூடாது…நாங்க….” ராஜா இழுக்க

” ஓய் யாரை சொல்ற, என அதட்டியவன் ” நீ வேணா பாரு மால்ஸ், சூர்யா மாதிரி நானும் ரிஜிஸ்டர் ஆபீஸ்ல பொண்ணை இழுத்துட்டு போய் கல்யாணம் பண்றேன். பார்க்குறியா… பாக்குறியா… ” என ஏலம் போட.

“ஜோ மாதிரி லொட லொடன்னு பேசிட்டே இருக்குற பொண்ணை நான் கல்யாணம் பண்ணி உன் முன்னாடி கூட்டி வரேன். இது எங்கம்மா மங்கம்மா மேல சத்தியம். ” ராஜா சூலூரைக்க.

” அது யாருடா மங்கம்மா புதுசா “

” யாருக்கு தெரியும், வாயில வந்திச்சு சொன்னேன். “

” டேய் மொத லவ் பண்ணுங்கடா.. பொண்ணையே பார்க்கலயாம்… இதுல இழுத்துட்டு போய் கட்டிப்பாராம்… போடாங்க … ” மாலா இன்னுமே நக்கல் செய்ய.

” பெருத்த அவமானம்… ஏண்டி இப்படி நக்கல் பண்ற மால்ஸ் ” அவளின் தலையில் கொட்ட..

” பேரை சொல்லி கூப்பிடாதே, அக்கானு சொல்லுன்னு எத்தனை தரம் சொல்றேன். இதுல அவளை கொட்டுற…. ” மகனை தமயந்தி அதட்ட.

“தமிமா…, ரெண்டு வருஷம் பெரியவளை எல்லாம் அக்கா, நொக்கானு கூப்பிட முடியாது. மாமா வந்தா மரியாதையா தானா பேசுறேன். அதே பெருசு.. போம்மா… ” மகனின் சுணங்களில் ஒன்றும் சொல்லாமல் இருக்க, விட்ட இடத்தில் இருந்து மீண்டும் பேச்சை ஆரம்பித்தனர்.

” நமக்கும் இந்த மாதிரி பெல் எல்லாம் எப்போ அடிக்கும் மச்சான்? ” இளாவின் அதி முக்கிய கேள்விக்கு,

“அதுவா எல்லாம் நமக்கு அடிக்காது, நம்ம வேணா பைக் சைடுல பெல் ஒன்னு மாட்டிக்குவோம் மச்சி, அழகான பிகர் வந்தா நம்மளே அடிச்சிக்குவோம்” ராஜாவின் கிண்டலில் சிரிக்க ஆரம்பித்தவளுக்கோ சுரிரென வயிற்றில் பிள்ளைகளும் உதைக்க ஆரம்பித்து விட்டன.

“ஆஅ.., அம்மா…,” என வயிற்றை பிடித்து கொண்டு மெதுவே மாலா முணங்க ” கொஞ்ச நேரம் அந்த வாயை மூடுங்கடா. பாரு பாப்பாக்கு வலிக்குது. ” மாணிக்கம் அதட்டல் போட்டதும் தான் கொஞ்சம் அடங்கி அமர்ந்தனர். மாலாவிற்கு ஏழாம் மாதம் வளைகாப்பு முடித்து வீட்டிற்கும் கூட்டி வந்து விட்டனர். அவளோடு பேச தான் ராஜாவும் அன்று அங்கு வந்து இருந்ததும் . காதலை பற்றி அவர்கள் பேசி சிரித்த பொழுதுகள் சிரிப்பு கடலில் நீந்த வைக்கும் கேட்பவர்களை. சுற்றி உள்ளோர் பேசுவதை கூட கேட்க முடியாது. அரட்டை கச்சேரி களை காட்டும். இன்றோ ஒரு வார்த்தை பேச கூட யோசித்து பேசுகிறான்.

தமயந்தியின் செல்லம் தான் மகனை விளையாட்டு பிள்ளையாக்கி அவனை முட்டு கட்டை போட்டு முடக்கி வைத்துள்ளது என மாணிக்கம் திட்டியதால் தான் பேசாமல் அவனிடம் மௌனம் காப்பது.

அம்மா மகனுக்கும் இடையே அன்பே பிரதானம். தன் மகன் தனக்காக திருமணத்தைக்கூட மறுத்து விட்டான் என்றதில் தாயாய் அவன் செய்த தவறுகளை மன்னித்து ஏற்று கொள்ள மனம் தவித்தது. அவன் வாழ்வின் சந்தோசமே தனக்கு முக்கியத்துவம் என்பதில் வெறுப்புகள் பின் சென்று விருப்புக்கள் முன் வந்தது. இன்றோ ஊரார் முன் தலை குனிய செய்த மகன், தவறுக்கு பிராயசித்தமாய் தன்னை திருத்தி கொண்டு உயர்ந்து நின்றதில் பிடிவாதம் என்றோ வலுவிழந்து விட்டது. கோபம் கூட குட் பாய் சொல்லி ஓடி விட்டது. நீரடித்து நீர் விலகுமா, இழுத்தணைத்து கொண்டு ஓட தானே செய்யும். மகனிடம் இன்று பேசி விட வேண்டும் என காலை முதலே அவர் காத்திருக்கிறார்.

இளாவோ வேலையை பார்க்க நேரம் ரெக்கை கட்டி கொண்டு பறந்தது. வாரத்தின் முதல் நாள் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சுழற்றி அடிக்க, பிற்பகலை நெருங்கி விட்டது. நேரமாவதை உணர்ந்து  தன் உதவியாளரிடம் ” மேடம் கிளம்பி போய்ட்டாங்களா ” என விசாரிக்க,

” உங்க கார்ல தான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க சார், அத சொல்ல தான் வந்தேன்..,”  என்றவுடன் புருவ மத்தியில் யோசனை படர, நெற்றியின் நடுவே விரலால் தேய்த்தவன், தன் லேப்டாப் பேக்கை எடுத்து கொண்டே, தோளை குலுக்கி என்னவோ என எண்ணியப்படியே படி இறங்கி வந்து காரில் ஏற, முன் பக்கமே தமயந்தி அமர்ந்து இருந்தார்.

அவன் முகம் பார்த்தவுடன் புன்சிரிப்புடன் கிளம்ப சொல்லி சைகை காட்ட ” எப்பவுமில்லாம புதுசா என் கூட ஏன் வராங்க” என மனதில் கேள்வி எழும்பினாலும் கேட்கவா முடியும் ?  இல்லை பதில் தான் கூற போகிறாரா?

சிறிது தூரம் கடக்க ” சாரிடா  ” என்றார் மெதுவே அவன் புறம் திரும்பி.

” எதுக்காக மேடம் ” கைகள் ஸ்டிரியங்கை இறுக்கி பிடிக்க வார்த்தையிலும் அழுத்தம்.

” சாரி, அன்னைக்கு நடந்தது என்னனு முழுசா தெரிஞ்சிக்காம உன்னை திட்டி, கோபத்துல இவ்வளவு நாள் பேசாம இருந்துட்டேன். அதுக்கும் நீ கல்யாணம் பண்ணாம இருக்குறதுக்கும் என்ன சம்பந்தம்? மாமாட்ட பண்ண மாட்டேன்னு சொன்னியாம்.,” இரவில் மகள் கோபத்தில் அவரை காய்ச்சி எடுத்திரிக்க முதன் முறையாக மகனிடம் தாயாய் பேச ஆரம்பித்தார்.

” ஓ,  இப்போ கூட என் கல்யாணம் பத்தி தான் உங்களுக்கு கவலை. அன்னைக்கு பேசுனது தப்பா தெரியல? அப்படித்தானே மேடம்…” என மேடம் என்ற வார்த்தையை அழுத்தி உச்சரிக்க தாய் உள்ளம் என்றும் போல் அழுதது.

மா… என ஆரம்பித்தவரை கைகாட்டி தடுத்தவன் ” இதுக்கும் மேல நான் எதுவும் இப்போ பேச விரும்பல மேடம்… மீட்டிங் போகணும், பிளீஸ் ” அவர் மீதுள்ள அவன் கோபத்தை வண்டியில் காட்ட ஜெட் வேகத்தில் பறந்தது. அவன் வேகத்தில் பதறியவர் கரம் பற்றி அழுத்திட, ஆழ்ந்த மூச்சினை வெளியிட்டு தன்னை கட்டுப்படுத்தி நிதானத்திற்கு வந்தான்.

அன்றோரு நாள் தங்கள் வாழ்வில் வராமலே இருந்திருக்கலாமே என இருவரும் எண்ணாத நாள் இல்லையே. நான்கு வருடங்கள் கடந்தும் அதன் எச்சங்கள் மனதில் வடுவாய் தங்கி , சுட்டெரித்து கொண்டு தானே இருக்கிறது.

அவன் கூறியதை நம்பி இருந்தால் சிரிப்பும், கும்மாளமாய், சந்தோசமாய் சிறகடித்து பறந்தவன் இன்று மௌனத்தை ஆட்சியாக்கி, அதில் இறுக்கத்தை சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்க மாட்டானே. தன் கண் பார்வையை கொண்டு மனதை படிக்கும் மகன், தன் முகம் பார்த்து தாயாய் பேச மறுக்கும் அவலம் நடந்தேறி இருக்காதே.

எண்ணத்தில் நிறைந்த அன்பால் மட்டுமே பேசாமலும் பேச முடியும். உணர முடியும். தாயின் மீது கொண்ட கோபம், அழுத்தமாக மாறி மனதை போட்டு இறுக்கினாலும், அவர் மேல் அவன் வைத்த பிரியத்தின் சுவடுகள் அவை அத்தனையையும் தவிடு பொடியாக்கி விடும். கோபம் தான். பேச மாட்டான் தான். ஆனால் உணர்வுகளால் பேசுவான். உணர வைப்பான். உணர்த்தவும் செய்வான்.

தமயந்தியும் அவனிடம் பேசுவார் ஆனால் அதில் தன் மகன் என்ற உரிமை பாசம் இல்லாமல் தன்னிடம் பயிலும் மாணவனாய், அவனுக்கு அத்தனை உதவியும் செய்வார். இருவருக்கும் இடையே இருக்கும் அந்த ஒற்றை மெல்லிய திரையை எங்ஙனம் யார் உடைப்பதோ என தான் தவித்து நிற்கின்றனர் இருவரும்.

ஆடிட்டாராய், தன் குருவாய்  மதித்து பேசுபவன் இத்தனை நாளில் அம்மா என்று கூட அழைப்பதில்லையே. இரு மனங்களும் ரணங்களாய் தகிக்க இறங்கும் இடம் வந்ததும் முகத்தில் பொய்யாய் ஒரு மலர்ச்சியை ஒட்ட வைத்து கொண்டு இருவரும் உள் நுழைந்தனர்.

அனைவரிடமும் பேசி கொண்டு இருந்தாலும் பார்வை தாயிடமே இருந்தது. மீட்டிங் ஆரம்பிக்க தாய் அருகே சென்று அமர்ந்தவன் முடியும் வரை எழுந்தானில்லை. GST பற்றிய கலந்தாய்வு முடிந்து, ராஜா குரூப் ஆப் கம்பெனியின் தலைமை ஆடிட்டராக இளா பெயரை சொன்னதும் முகம் மலர மகனை பார்த்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!