Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதோ இதோ என் பல்லவி

Itho Itho En Pallavi 14 1



Advertisement

  இதோ.. இதோ.. என்  பல்லவி

Advertisement

அத்தியாயம் – 14

Advertisement

Advertisement

   விக்ரமும், முபாரக்கும்  இருவரும் சண்டை போடுவது  போல்  நிற்பதை  பார்த்த  ஆபிதா பானு

( பல்லவி)   ”  வேண்டாம் ”    என்று முபாரக்கிடம்  சொன்னவள்..

விக்ரமை பார்த்து ” சாரி சார், நீங்க என்னை தப்பா, யாரோன்னு  நெனச்சு  பேசுறீங்க. நீங்க சொல்லுற பல்லவி  நான் இல்ல”  என்றாள்.

” பல்லவி”  என்று பல்லை கடித்த விக்ரம், ”  உனக்கெல்லாம் மறந்து  போச்சும்மா, நீ என்  பல்லவி தான், நம்ம  பொண்ணு  சிவகாமி”  என்றான் விக்ரம்..

”  இல்ல சார் நீங்க  யாருன்னே  எனக்கு  தெரியாது, என்  ஹஸ்பண்ட் இறந்துட்டாங்க ”  என்றாள்..

”  இல்ல ”  என்று விக்ரம் சொல்வதற்குள்..

” ஆபிதா  இவன்கிட்ட எதுக்கு நீ விளக்கம் சொல்லிட்டு இருக்க, வாயை மூடு”  என்று  முபாரக் ஆபிதாவை  சத்தம்  போட்டவன்..

விக்ரமை பார்த்து ” இவ  நீ சொல்லுற  பொண்ணு  இல்ல, இவ என்  தங்கச்சி, சிவகாமி என் தங்கச்சி பொண்ணு, நீ  இனிமே என் தங்கை ஆபிதாகிட்ட  பேச கூடாது” என்றவன் ஆபிதாவை  கைபிடித்து  இழுத்து  சென்றான்…

விக்ரம் ”  இவ  என்  பல்லவி  என்று ஆபிதா பானுவின்  கை பிடித்து  இழுக்க” பார்க்க..

” ஏய்”  என்ற  முபாரக் விக்ரமனின்  சட்டையை பிடிக்க.

விக்ரமும் முபாரக்கின் சட்டையை பிடித்து  இருந்தான்..

 இருவரும்  ஒருவரை, ஒருவர்  தாக்கிக்  கொள்ள   இருவரின்  நடுவில் வந்து  தடுத்த ஆபிதா, விக்ரமை  பார்த்து ”  சார் பிலிஸ் சார்  பிரச்சனை பண்ணாதீங்க ”  என்று கை எடுத்து கும்பிட..

”  பல்லவி”  என்றான்  விக்ரம்..

”  வேண்டாம், ஒன்னும்  வேண்டாம் விட்டுடுங்க, பிரச்சனை வேண்டாம் என்றவள். முபாரக்கை  கைபிடித்து ”  சண்டை வேண்டாம் அண்ணா, நான்  உன்  ஆபிதா தான், வா போலாம்”  என்று  ஆபிதா அழைத்து செல்ல…

விக்ரம் இருவர் செல்வதை  பார்த்து நின்றான். முபாரக்கிடம்  சொல்லி புரியவைக்க முடியாது. வேற எப்படி புரிய வைக்க, யாரிடம் சொல்ல  என்று நினைத்து இருந்தான்..

பல்லவி இருக்கும் வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று, விக்ரம் அவன் நண்பன் மூலம் விசாரிக்க சொன்னான்..

ஆபிதாபானுவும்  முபாரக்கும்  வீடு வந்து சேர்ந்தார்கள்..

“உடனே நீ மலேசியா கிளம்பு, நான் பிள்ளைகளை போய் கீரிச்சில் இருந்து கூப்பிட்டு வருகிறேன்” என்று முபாரக் கீரிச் சென்று சிவகாமியும், ஆஷிக்கையும்   அழைத்து கொண்டு “இனி பிள்ளைகள் கீரிச்சுக்கு வரமாட்டார்கள்” என்று சொல்லி அழைத்து வந்தான்…

ஆபிதாபானு  மலேசியா செல்ல கிளம்பி இருக்க, முபாரக்கின்  தனி விமானத்தில் அனைவரும் மலேசியா சென்றனர்…

விக்ரம் என்ன செய்ய என்று குழப்பமான  மன நிலையில் வீடு வந்து சேர்ந்தான்…

சூர்யா  அமைதியாக  அமர்ந்து இருக்க.. விக்ரம் மகனை பார்த்து  “என்னடா  முகம் டல்லா இருக்கு “, என்று கேட்க…

”  போங்க  டாடி  நான் கோபமா இருக்கேன்”..

”  ஏன்டா  சூர்யா என்னாச்சு ”   என்றான் விக்ரம்…

”  என் பிரண்டு  சிவாக்குட்டி  இனிமே  கீரிச்  வர  மாட்டாளாம், அப்படியின்னு சொல்லி அவங்க மாமா  கூட்டிட்டு போயிட்டார்”  என்று வருத்தப்பட்டவனை..

”  உன்  சிவகாமி  குட்டி நாளைக்கே  நம்ம  வீட்டுக்கு வருவா, அப்பறம் அந்த குட்டி பையனும்  வருவான்,   இனிமே உன் கூட இருக்க இன்னும் இரண்டு பேர் வருவாங்க,  கூடவே ஒரு அம்மாவும்  வருவாங்க. நம்ம எல்லாம் ஒன்னா இருக்க போறோம் என்று கூற..

” ஹேய்  டாடி சூப்பர், தாங்யூ டாடி”  என்று விக்ரமை கட்டி அணைத்து கொண்டான்.

”  என்  கூட  மலேசியா வர்ரீயா உன் சிவாக்குட்டியை பார்க்க”.

”  இல்ல டாடி , நீங்க  போய்  எல்லாரையும்  நாளைக்கு  கூட்டிட்டு வாங்க, நான் சுந்தர் தாத்தா  கூட இருக்கேன்” என்றான்..

” சரிடா தங்கம்”  என்று மகனுக்கு முத்தமிட்டவன்..

மலேசியா புறப்பட்டான்  ஆபிதாபானுவின்  வீட்டை  கண்டு பிடித்தவன், அவர்கள் வீட்டின் கேட்  முன்நின்று  வாச்மேன்னிடம் ” ஆபிதா மேம்மை  பார்க்க வேண்டும் என்று சொல்ல”.

”  சரி  சார் ”  என்ற காவலாளி போனில் வீட்டில் உள்ளவர்களிடம் அனுமதி கேட்க.. முபாரக் ஆபிதா மேமை யாரும்  பார்க்க முடியாது, இவன் மட்டும் இல்ல,  வேற யார் வந்தாலும் நீ என்கிட்ட கேட்டு தான் வீட்டுக்குள்ளே அனுப்பனும்” என்று  வாச்மேனிடம் சொல்ல,,

“சரி   சார்..  ஓகே சார்  என்றவன்.. விக்ரம்மை பார்த்து, “உங்கள உள்ள விடகூடாதுன்னு முபாரக் சார் சொல்லிட்டார்” என்றான்..

விக்ரம் வீட்டிற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட, என்ன செய்ய என்று  விக்ரம் தனது காரில்  சாய்ந்து நின்று  யோசித்துக் கொண்டு இருந்தான்..

மஹாமுது காலை வாக்கிங் சென்று விட்டு வீட்டுக்கு வரும்போது தன் வீட்டு வாசலில், ஒருவர் காரின் மீது சாயந்து  நின்று  இருப்பதை பார்த்தவர், யார் என்று  பார்த்து கொண்டே வந்தார், காவலாளியிடம்  ”  இவர் யார் ”  என்று கேட்க..

”  சார் அவர் ஆபிதா மேமை பார்க்கனுமுன்னு, வந்து கேட்டார் சார்,  ஆனா முபாரக் சார் உள்ளே யாரையும் விட கூடாதுன்னு  சொல்லிட்டார்” என்று வாச்மேன் சொல்ல..

விக்ரம் தன்னை  பத்தி  ஒருவர்  பல்லவியின்  வீட்டு வாசல்  முன்  விசாரிப்பதை  பார்த்தவன், அவரின் அருகில் வர..

மஹாமுது விக்ரம் தன் பக்கத்தில் வந்து நிற்பதை பார்த்தவர் ”  நீங்க யாரு?  ஏன்?என்   பொண்ணை பார்க்கணும்”  என்றார்..

”  நான் விக்ரம் சார், பி. டெக் கம்பெனியோட  ஓனர்” என்றவன் அவனின் கார்டை   மஹாமுதிடம் கொடுத்தவன், உங்க பொண்ணா  இப்போ உங்க வீட்டுல இருக்குறது ஆபிதா பானு இல்ல அவ என் பல்லவி என் பொண்டாட்டி என்றவன், அவனின்  அடையாள அட்டையை காண்பித்தான் அதில் விக்ரம் மதர் என்ற இடத்தில் சிவகாமி என்று  பெயர் இருப்பதை காண்பித்து, சிவகாமி என் பொண்ணு, உங்க பொண்ணா இங்கே இருக்குற ஆபிதா, என் பல்லவி”  என்றான்..

”  உள்ளே வாங்க  பேசிக்கலாம் ”  என்ற மஹாமுது  விக்ரமை  கேட்டை  தாண்டி அழைத்து செல்ல..

அந்த வீடு பெரிய அரண்மனை போல் இருந்தது, விக்ரமுக்கு கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது, தன்னவள்  இந்த  வீட்டில்  நன்றாக இருந்திருப்பாள்,என்று மனம் நிறைந்திருந்தது..

மஹாமுது  விக்ரமனை  வீட்டினுள் அழைத்து வந்து  சோபாவில் அமர சொல்ல, விக்ரம் பல்லவியை தேடிக்கொண்டே அமர்ந்து தான்..

முபாரக்  மஹாமுதின்  சத்தம்  கேட்டு வெளியில் வர. விக்ரம் சோபாவில்  அமர்ந்திருப்பதை பார்த்தவன்,, ”  உன்னை  யாரு  உள்ளே விட்டது” என்று சத்தம் போட்டுக்கொண்டே  விக்ரமின்  அருகில் வர..

“முபாரக்”! என்று மஹாமுது  சத்தம் கொடுக்க…

”  வாப்பா  இவன்  ஆபிதாவை  பல்லவியின்னு  சொல்லுறான், ஏதோ  தோ… பேசுறான். எனக்கு  இவன் மேல் நம்பிக்கையில்லை  அவனை  வெளியில்  போக  சொல்லுங்க ”  என்று  கத்த..

” முபாரக்  அஞ்சு  நிமிஷம்  அமைதியா உக்காரு, இல்ல உள்ள போ, சும்மா  கத்தாத  அவர்  என்ன  சொல்லுறாருன்னு  கேட்போம்”  என்று மஹாமுது சொல்ல…

”  இல்ல வாப்பா  இவன்  சொல்லுறத  நான் நம்ப  மாட்டேன், அவன  வீட்ட  விட்டு போக சொல்லுங்க ”  என்று கத்திகொண்டே இருக்க…

 மஹாமுது எழுந்து  நின்று “முபாரக்”  என்று கத்த…

மஹாமுதின் கோப பார்வையும், முபாரக் என்று கத்தியதை  கேட்டவன் அமைதியாக சோபாவில் சென்று அமர்ந்து கொள்ள..

மஹாமுது  விக்ரமனின் அருகில் வந்தவர். “என்  பொண்ண  பல்லவியின்னு  சொன்னீங்களே  அதுக்கு என்ன  ஆதாரம்  வச்சு  இருக்கீங்க” என்று கேட்க…

 விக்ரமும்  பல்லவியும் லண்டனின்  காதலித்த  போது  எடுத்த  கொண்ட புகைப்படங்களை  காண்பித்தவன்,, பல்லவியின் வீட்டில் இருந்து வரும் பொழுது அவள்  தந்தை  தாயுடன்  சேர்ந்து இருக்கும் புகைபடங்களை எடுத்து வந்தவன், மஹாமுதுவிடம்  காண்பிக்க..

இது மட்டும் போதாதே என்றார் மஹாமுது..

பல்லவி தண்ணீல விழுந்த  நாள், மாதம், வருஷம் சொல்லியவன்,

”  நீங்க  அவ  தண்ணீல  விழுந்த  நாள் அல்லது மறுநாள் பல்லவியை நீங்க  பார்த்து இருப்பீங்க “என்று சொல்ல..

 முபாரக்  அதிர்ச்சியாகி  அமர்ந்து இருந்தான், விக்ரம்   பல்லவி தங்களுக்கு கிடைத்த  நாளை சரியாக  சொல்ல, மஹாமுது ஆபிதாவை இவன் கூட அனுப்பி வைத்து விடுவாரோ  என்று  நினைத்தவன், என்ன செய்ய என்று யோசித்தவன்..

எழுந்து ஆபிதாவின் அறைக்கு சென்றான்.. ஆபிதாவுக்கு  விக்ரம் வந்து இருப்பது தெரிய, அவன்  என்ன  வாப்பாவிடம் பேசுகிறான் என்று  தெரியவில்லை..

ஆபிதாவை  பார்த்த முபாரக்  “ஆபிதா”  என்றான் , அவளோ அவனை நிமிர்ந்து  பார்க்க..

”  உன்பத்தி ஏற்கனவே உன்கிட்டசொல்லி  இருக்கேன், உனக்கு ஏதோ பிரச்சனையாகி , அதுல நீ சாக துணிஞ்சுதான் தண்ணீல குதிச்ச..

ஆஷிக் உன்ன பார்த்ததால நீ பொலச்ச, ஆஷிக்  மட்டும் அந்த பாறை மேல இருந்த  உன்ன பார்க்காம இருந்திருந்தா  இன்னைக்கு நீ இல்ல, உன் நகையை திருடுனவங்க  உன்ன என்னவேனா பண்ணி இருக்கலாம்.. யோசிச்சு பாரு, இப்போ  வந்து இருக்கானே  அவன்  உன் புருஷனா  இருக்குமுன்னு நினைக்குறேன்.

உன்ன என்ன கொடுமை பண்ணுனானோ தெரியல, நீ சாக போயிருக்க, அதுவும் வயித்துல குழந்தையோடு, புரிஞ்சுக்கோ,.

அவன் நல்லவன் இல்ல, வாப்பா  உன்க்கிட்ட வந்து அவன் உன் ஹஸ்பண்ட் உன்ன  தேடி வந்து இருக்காருன்னு அப்படியின்னு சொல்லி  உன்ன அவன் கூட அனுப்பி வைப்பாரு. நீ அவன் கூட போக கூடாது.

வாப்பா என்ன சொன்னாலும், இவன் யாருன்னே  எனக்கு தெரியல, நான் போக மாட்டேன்னு  நீ சொல்லுற சரியா,, அப்படி  இல்ல  வாப்பா  அவன் கூட போன்னு  சொல்லிட்டாரு  நான்  போக  போறேன்னு சொன்னேன் வையி.. நீயும் சிவகாமி மட்டும் போங்க..

ஆஷிக்கை நீ கூட்டிட்டு போக முடியாது, அத ஞாபகத்துல வச்சுக்கிட்டு முடிவை எடு”  என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே,, அந்த வீட்டின் வேலையாள்  வந்து கதவை தட்டி ஆபிதாமா கீழே   மஹாமுது  வாப்பா  கூப்பிடுறாங்க என்று  கூறிவிட்டு செல்ல..

முபாரக் தங்கையை  பார்த்து  “ஆஷிக்கை   நெனச்சு  முடிவை எடு, ஆஷிக்கை உன் கூட அனுப்ப மாட்டேன்”  என்று  சொல்லி   அவளை கீழே அழைத்து வந்தவன்..

விக்ரம் எதிரில்  வந்த முபாரக்  சோபாவில் மீது  கால்   மேல் கால் போட்டு  விக்ரமை பார்த்து  நக்கல் சிரிப்பு சிரித்து  தெனாவெட்டாக அமர்ந்து கொள்ள…

விக்ரமுக்கு முபாரகின் திமிரான முக, பாவனையை பார்த்தவன். பல்லவியை  என்னவோ  சொல்லி மிரட்டி  கூப்பிட்டு  வந்துள்ளான் என்று புரிந்தது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!